Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13,304
  • Joined

  • Days Won

    73

Posts posted by புங்கையூரன்

  1. 1 hour ago, பெருமாள் said:

    அதே கார்டியனில் He said:“This is an important victory which recognises there is systematic torture of Tamils going on in Sri Lanka. தமிழர்கள் சிங்கள அரசால் திட்டமிட்ட சித்திரவதைக்கு ஆளாகிறார்கள் என்ற பதம் இங்கு விசா இல்லாமல் இருப்பவர்களுக்கு வரப்பிரசாதம் . ஏனோ வின் கின் போன்ற தளம்கள் இந்த செய்தியை இருட்டடிப்பு செய்கிறது போல் ஒரு பிரமை .

    கிஹானியா Gihaniya என்ற பெயர் சிங்களமா தமிழா அதன் அர்த்தம் யாருக்கும் தெரிந்தால் சொல்லவும்  இந்த நாசமா போன கார்டியன் காரன் அவரின்  மூத்த  மகளின்  பெயரை இப்படி சொல்கிறான் .

    Gighani  என்பது சிங்களப் பெயராகும்.

    • Confused 1
  2. 4 hours ago, விளங்க நினைப்பவன் said:

     

     

     பங்குனி 08 என்றால் அது உலகத்திற்கு மார்ச்  21 தானே அது என்ன சிறப்பு நாள் ?

    பூமத்திய ரேகையில் சூரியன் உச்சம் பெறும் நாள்…!

  3. உடற்பயிற்சி மட்டும் காரணமாக இருக்காது. ஸ்ரிறோயிட் போன்றவை காரணமாக இருக்கலாம். இத்தகைய இரசாயனங்களின் நீண்ட கால பாவனை உடலை அதிகம் பாதிக்கும்..!

    அஞ்சலிகள்…! 

  4. சுற்றுச் சூழல் பற்றிச் சற்றும் கண்ச்க்கிலெடுக்காத ஒரு ஒப்பந்தக் காரர் இவர்.இந்தியாவில் இவர் கொங்கிறீற் கழிவுகளைக் கடலுக்குள் கொட்டுவது வழக்கம். அவுஸில் ஒரு நிலக்கரி அகழ்வுத் திட்டம் ஒன்றைப் பொறுப்பெடுத்திருக்கிறார். இவரது கொம்பனியை ஒரு ட்ரஸ்ற் அமைப்பாக அமைத்துள்ளார். உலகின் மிகப் பெரிய பவளப் பாறைத்தொடர் இவரது கப்பல் கழிவுகளால் பாதிக்கப் பட்டால், இவரது கம்பனியைச் சட்டத்தால் குற்றவாளியாக்க இயலாது.

  5. 3 hours ago, தமிழ் சிறி said:

    அன்புத்தம்பி... ஒவ்வொருவருக்கும்,  ஒவ்வொரு பழங்களின் சுவை பிடிக்கும் தானே. :)
    நீங்கள், "லாவுளு" படத்தை இணைத்த பின்...
    இப்பவே... ஸ்ரீலங்காவுக்கு போய்.. 
    அதை.. சாப்பிட வேணும் போல் இருந்தாலும்...
    கோத்தா... நம்மை, கைது பண்ணி விடுவாரோ... 
    என்று.. பயமாக, உள்ளது. 🤣

    எனக்கும் லாவுளு எண்டால் உசிரு…! 

    • Like 1
  6. 2 hours ago, nochchi said:

    உலகிலே அனைத்துலகக் கடற்பரப்புத் தொடர்பான விதிமுறைகளை இருபகுதியினரும் கடைப்பிடிப்பதோடு, புரிந்துணர்வின் அடிப்படையிற் செயற்படுவதே இருதரப்புக்கும் நன்மை. போராட்டத்தின் பின்தளமாக இருந்து தார்மீக ஆதரவைத்தந்த தமிழக மக்கள்திரளை அரைவேக்காட்டுத்தனமான அரசியலோடு ஒப்பீடு செய்து முடிவுகளை எட்டுதல் சாத்தியமற்றது. இருபகுதினரும், குறிப்பாக மீனவத் தொழிற்றுறையினர் ஒருசேர மேசையில் இருந்து உரையாடி கடலமைப்புமுதல் பாவிக்கவேண்டிய கருவிகள்வரையான வரையறைகளைப் பகிர்ந்து இருபகுதிக்குமானதொரு பொதுப்பிரகடனத்தை உருவாக்கிப் பின்பற்றுவதில் ஏதாவது தடைகள் இருக்கின்றதா? மொழியாலும் பண்பாட்டாலும் ஒன்றாக இருக்கும் நாம் சிங்கள மற்றும் கிந்திய சதிவலைக்குள் வீழ்ந்துவிடாது கடல் பிரித்தாலும் கரைகளால் இணைந்து பயணிக்கச் சிந்தைகொள்வதே சிறப்பாகும்.  முதல்வர்  ஸ்ராலினவர்கள் வெறும் அறிக்கை வீரராக இல்லாமல் ஆக்கபூர்வமாக ஒன்றிய அரசுக்கு அழுத்தம்கொடுத்து செயலாக்க வேண்டாம். கடல் தொடர்பான பிணக்குத் தனியே சட்டங்களால் மட்டும் தீர்த்துவிட முடியாதென்பதற்கான அண்மைய எடுத்துக்காட்டாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய மீன்பிடித்தல் விவகாரம் உள்ளதையும் நாம் காணலாம். 

    தானாடா விட்டாலும் தன் தசையாடும் என்பார்கள். எங்களைப் பொறுத்த வரையில் ஒன்றுமே ஆடவில்லை! ஏன்? வெறும் விரல்கள் கூட ஆடவில்லை!  எந்த் விதமான உடன்பாடும் அவசியமில்லை என்பதே எனது கருத்து! அத்துடன் கஞ்சா அபின் போன்றவையும் மிகவும் அதிகரித்துக் கொண்டு போகின்றது! இருப்பையாவது தக்க வைத்துக் கொள்வோமே.. 

    • Thanks 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.