Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13468
  • Joined

  • Days Won

    74

Posts posted by புங்கையூரன்

  1. சுவியர், இன்று தான் இந்தப் பக்கம் வந்தேன்..!

    கதை நல்ல படியாக நகர்கின்றது..! கதா நாயகன் ஒரு பச்சை சுய நலம் பிடித்தவன் போல உள்ளது..!

    எனது கவலையெல்லாம் நிர்மலா தாலியை மட்டும் வைத்துவிட்டுத் தாலிக்கொடியையும் கொண்டு போயிருக்கலாம் என்பது தான்..!

    தொடருங்கள்…!

    • Like 1
  2. என்னடா...கொஞ்ச நாளா நம்ம நிழலி மரணத்தைப் பற்றிக் கதைக்காமல் இருக்கிறார். ஒரு வேளை ' மரணத்தைப் போலொரு மாமருந்தில்லை' பாடலைக் கேட்டுத் திருந்தியிருப்பாரோ என்று நினைத்தேன்!

    இல்லை நான்...அதே நிழலியே தான் என்று மீண்டும் நிரூபித்து விட்டார்..!

    நீங்கள் சொன்னது போல 'ஒரு ஆயுள் தண்டனையிலிருந்து தப்பி விட்டீர்கள், நிழலி...!

    அருமையான ஒரு அனுபவப் பகிர்வு...!

  3. உங்களைப் போன்ற சிந்தனை என்னிடமும் உள்ளது. ஆனால் இது எவ்வளவு தூரம் சாத்தியப் படும் என்று தெரியவில்லை.அண்மையில் கூடத் தாயகம் சென்ற போது ஒரு அன்னியனாகவே என்னை உணர்ந்தேன். எனது ஊருக்குச் செல்லும் போதும் இராணுவதினருக்கு நான் ஏன் போகின்றேன் என்று காரணம் கூற வேண்டிய நிலை எனக்கு..!மீன் வாங்கப் போனால் எனக்கு வேற விலை. வெறும் சாரத்துடன் போனாலும் அடையாளம் பிடித்து விடுகின்றார்கள். ஓட்டோக் காரனிடம் வேறு விலை எனக்கு..!

  4. ஒரு வித்தியாசமான அனுபவ பகிர்வு..! தொடருங்கள், நிழலி..!

    வயது மனிதர்களில் ஒரு சின்ன மாற்றத்தையாவது ஏற்படுத்துவது இல்லையா?😊

  5. 3 minutes ago, தமிழ் சிறி said:

     

    No photo description available.

     

    INSPIRED TREASURES: 2011

     

    Thal Leave Fence | Jaffna, Crafts, Leaves

     

    INSPIRED TREASURES: 2011

     

    Passion Parade: Lifestyles of Jaffna ~ An Exhibition to Preserve Our  History and Heritage

     

    Jaffna – A Sentimental Journey Home | Sanjiva Wijesinha -writer and  physician

     @விளங்க நினைப்பவன் , @குமாரசாமி@suvy@ஈழப்பிரியன்

    @நிலாமதி, @nilmini, @alvayan@புங்கையூரன்

    முன்பு ஊரில் இருந்த சண்டியர்கள், தங்கள் ஆயுதமான... 
    சைக்கிள் செயின், வாள் போன்றவற்றை வேலியில் தான் மறைத்து வைப்பார்களாம் 
    என ஊரில் இருக்கும் போது கேள்விப் பட்டுள்ளேன். 

    எனது அப்பாவின் அம்மா கூறியது இது... 👇
    ஆங்கிலேயர் காலத்தில்..... வெள்ளிக்கிழமை  போன்ற விசேட நாட்களில், விரதம் இருந்து 
    வாழை இலையில் சாப்பிட்ட பின்... அந்த இலையை வேலியில் செருகி மறைத்து விடுவார்களாம்.

    ஆங்கிலேயர்... மதம்  மாற்றி விடுவார்கள் என்ற பயமோ, 
    அல்லது தண்டனை கொடுப்பார்கள் என்றோ மறைத்திருக்கலாம் என நினைக்கின்றேன். 

    போர்த்துகீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில்...
    விரதம் இருந்து... வாழை இலையை, ஒழிக்கத்  தெரியாத சைவர்கள்தான் 
    ஆங்கிலேயரால் மதம் மாற்றப் பட்டவர்கள் என நினைக்கின்றேன். 😂
     @நிலாமதி அக்கா... கோவிக்காதேங்கோ  பகிடிக்கு எழுதியது. 😂

    👆 மேலே இறுதியாக உள்ள  படத்தில்... வேலி மிக உயரமாக கட்டி உள்ளதை பார்க்க...
    "குமர்ப் பிள்ளைகள்" இருக்கின்ற வீடு போல் தெரிகின்றது. 🤣

    மிகவும் முக்கியமான சாமான் திருக்கை வாலை விட்டிட்டியள் தமிழ் சிறி…! நாய்க்கு எட்டாத உயரத்திலை வைக்க வேணும்…!

  6. 1 hour ago, குமாரசாமி said:

    எங்கடை கிணத்தடி வேலியை சூறாவளியாலையும் அசைக்கேலாது.காத்துக்கூட உள்ளுடாது.கருங்கல்லு மதில் மாதிரி இருக்கும். இருந்தாலும் அதையும் எட்டிப்பாக்கிற அளவுக்கு அப்பனுக்கு அப்பனான ஆக்கள் இருக்கினம். :rolling_on_the_floor_laughing:

    காவோலை வேலி தாண்டிய அனுபவமுள்ளவர்கள் மேடைக்கு அழைக்கப்படுகின்றார்கள்!

    பொட்டுக்குள்ளால பூந்து போனவர்களும் மேடைக்கு வரலாம்!😆

  7. ஏக்கங்களைச் சுமந்து வருகின்றது உங்கள் கவிதை...!

    எங்கள் அனைவரது அங்கலாய்ப்பும் இப்போது இது தான்..!

    கவிதைக்கு நன்றிகள்....!

    • Like 1
  8. 3 hours ago, குமாரசாமி said:

    ஊண் என்றால் இறைச்சி.... ஊணம் என்றால் இறந்த உடலிலிருந்து வடியும் திரவத்தை குறிப்பிடுவார்கள் என நினைக்கின்றேன்.  
    ஆணம் என்றால் கறி குழம்பு கறிகளை குறிப்பிடுவார்கள்.

    அண்ணை…!

    அது ஊணமில்லை!

    ஊனம்..!

    ஆணம் என்பதை மொக்கன் கடையிலும், முஸ்லிம் கடைகளிலும் உபயோகிப்பதைக் கண்டிருக்கிறேன்.

     

  9. மடஹாஸ்கார், ஹலப்பாஹஸ், ரஸ்மானியா, அவுஸ்திரேலியா போன்ற தீவுகள் தனித்துவமானவை. அங்கு இயல்வாக்கமடைந்த உயிரினங்களும் வித்தியாசமானவை. அதிசயங்கள் நிறைந்தது எமது பூமிப்பந்து..!

    தொடருங்கள்.  நில்மினி…!

    • Thanks 1
  10. 4 hours ago, விசுகு said:

    வீதிகளில் வாழ்வோரை சந்தித்திருக்கிறோமா??

    அவர்களுடன்  பேசி  இருக்கின்றோமா?  என்றால் இல்லை  என்பது  தானே  எமது  பதில்?

     

    நான் அப்படி யாரும்  அருகில் வந்தால் அல்லது அவர்களின்  பக்கத்தால்  போகவேண்டி வந்தால்

    கடந்து  செல்லும்வரை மூச்சை  நிறுத்துபவன்

    அல்லது  முகத்தை  முழுமையாக  கிடைப்பதால் மூடுபவன் நான்.

     

    ஆனால்  அவர்களும் மனிதர்கள்

    இந்த நிலைக்கு  அவர்கள்  வர ஏதாவது  வலுவான  காரணமுண்டல்லவா?

    நாம்  சிந்தித்துண்டா?

    முதன் முதலில் வீதிக்கு  வரத்தான்  கடினமாக  இருக்கும்

    வந்துவிட்டால்???

     

    இப்படித்தான்  பாரிசின்  வீதிகளில்  பல நூறுபேர்...

    நான்  கண்டு கொண்டதில்லை

    எந்த  உதவியும் செய்ததில்லை

    கண்டால் மூச்சையே நிறுத்துபவனால்  எப்படி  அருகில் சென்று உதவமுடியும்??

     

    அண்மையில் எனது  சின்ன  மகளுடன் நடந்து  சென்று  கொண்டிருந்தேன்

    எனது  கடைக்கு  பக்கத்தில் இவ்வாறு  வீதியில் இருக்கும்  ஒரு  பெண்ணைக்கண்டதும்

    நான் முகத்தை  மூடி அவசரமாக அந்த இடத்தை விட்டு  அகல

    எனது  மகளோ தனது பள்ளிக்கூட பையிலிருந்து எதையோ எடுத்து அவளிடம் கொடுத்து  விட்டு  வந்தாள்

    என்ன  என்று  கேட்க அவருக்காக ஒரு  சாப்பாடு  தான் வாங்கி  வந்ததாக  சொன்னாள்.

     

    இப்படி பலரும்  அவளுக்கு சாப்பாடும்  தண்ணீரும் உடுப்புக்களும்  கொடுப்பதை  பலமுறை  நானும் கண்டிருக்கின்றேன்

    ஆனாலும் இவர்களுக்கு அரசு ஏதாவது  செய்து  கொண்டே  இருக்கிறது என்பதும்

    இவர்கள் தங்க பல இடங்களை  அரசு  ஒதுக்கி  இருக்கிறது 

    ஆனால் இவர்கள் அதை  பயன்படுத்துவதில்லை என்பதுமே எனது பார்வையாக இதுவரை  இருந்தது

     

    நேற்று எனது இத்தாலி வாடிக்கையாளர் (நண்பர்) ஒருவர்   வந்தார்

    அந்த  பெண்ணுடன்  இவர் கதைப்பதை கண்டிருக்கின்றேன்

    அவருடன்  பேசிக்கொண்டிருந்தபோது இது பற்றிய பேச்சு  வந்தது

    அதனால் இவரிடம் எனது  மகளும் சாப்பாடு  கொடுத்ததை  சொல்லி

    இவர்கள் பற்றிய அவரது  கருத்தைக்கேட்டேன்

     

    அவர்  சொன்னார்  ஏன்  இவர்கள் அரசு ஒதுக்கியிருக்கும் இடங்களில் தங்குவதில்லை தெரியுமா?

    அரச  ஒதுக்கும் இடங்களில் வீதிகளில்  நிற்பவர்களே முழுமையாக வருகிறார்கள்

    அங்கே  ஆண்களே வல்லுறவுக்கு  தப்பமுடியாதபோது  பெண்களின்  நிலை என்ன??? என்றார்

     தூக்கிவாரிப்போட்டது  எனக்கு...

    உலகில் எவ்வளவு  விடயங்களை அறியாமல் 

    விமர்சனமும்  வியாக்கியானமும் கேலிகளும்  செய்தபடி வாழ்கிறோம்????

     

    யாழுக்காக  விசுகு...............

     

    விசுகர், இதில் வெட்கப் பட எதுவுமில்லை. சிவனே மகனிடம் வாய் பொத்தி நின்று, பிரணவத்தின் விளக்கம் கேட்டான். நானும் பல விசயங்கள் இவ்வாறு தான் அறிந்து கொண்டேன்.

    புங்குடுதீவு ஆலடிச் சந்தியில் ‘நீதவான்’ என்று ஒரு மனநிலை சரியில்லாதவர் இருந்தது நினைவிருக்கிறதா? உங்கள் அப்பா கட்டாயம் கண்டிருப்பார். மனநிலை யாருக்கு எப்போது தளம்பும் என்று யாராலும் சொல்ல முடியாது. தளம்பலுக்கும், தளம்பா நிலைக்கும் இடையில் இருப்பது ஒரு மெல்லிய கோடு மட்டுமே..!

    • Like 1
    • Thanks 1
  11. 10 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

    C634-A9-AA-DCFB-4-D91-8567-164-C04741-C0
    முல்லைத்தீவு - ஒரு காட்டுப் பாதையில்..

    488-F10-FD-A2-A7-4958-9-BB2-82-FBBD980-D

    கன்பரா - ஒரு கட்டிடத்தில்

    இந்த இரு மலர்களையும் பார்க்கும் பொழுது உங்கள் மனதில் தோன்றுவதென்ன.. 

    எனக்கு இன்னமும் பழம் றோட் எது என்றது கூட குழப்பமாக உள்ளது.. 

    கண்ணீர்ப் பூக்களும், காகிதப் பூக்களும்…!

    என்பது மிகவும் பொருந்தும் என நினைக்கிறேன்…!

    • Like 1
  12.  எனக்கென்னவோ நீதிபதிகள், தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வது பிழை போல உள்ளது. நிர்வாக முடிவுகளில் நீதித் துறை தலையிடுவது தவறு..!சுய நலம் மிக்க நீதிபதிகளும் அரசியல் வாதிகளும் நிரம்பிய தேசம் சிங்களம்…!

  13. நன்று, நில்மினி…!

    மிக அரிய விசயங்களை அறிந்து கொண்டேன்…!

    லெமூர்களைப் போலத் தான் டோடோ பறவையும் மனித்ர்களை ஒரு காலத்தில் நம்பியது. விளைவு?

    உலகில் மிகவும் சுயனலம் கொண்ட இனமே மனித குலம்…!

    இயற்கை எதையும் மாற்ற எப்போதுமே தயங்கியதில்லை..!

    அது பிரளயமாகவும் இருக்கலாம்…!

  14. நில்மினி உங்கள் தோட்டத்தில் நிற்கும் பொன்னொச்சி மரம் சிட்னியில் ஒரு ஆற்றங்கரையில் வரிசையாக வளர்ந்துள்ளது. மிகவும் அழகாக இருக்கும். ஊரின் நினைவுகள மீட்டுத் தருவதால், அங்கு அடிக்கடி செல்வதுண்டு..! 

    பி.ஈ; இன்னும் கோவில் காரருக்குத் தெரியாது..!😅

    • Like 1
  15. தமிழ் சிறி என்னைப் பொறுத்த வரையில் ஒரு கேள்வியின் நாயகன்...!

    ஏன் சொல்லுகின்றேன் என்றால், இவரைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஒரு குறு குறுப்பு எப்போதும் இருந்து கொண்டேயிருக்கின்றது..!

    இவர் எழுதும் விடயங்கள் மிகவும் பரிச்சயமானதாக உள்ளது தான் காரணம்..!

    எனது ஆசிரியர்களின் பெயர்கள், நண்பர்களின் பெயர்கள், சம காலத்தில் இருந்தவர்களுக்கே தெரிந்த ஊர்கள் (நாவாந்துறை, கோணாந்தோட்டம், சோடாப் போத்தல்) எல்லாம் இவருக்கும் தெரிந்திருக்கின்றது. அது மட்டுமல்ல...கவிஞர் ஜெயபாலன் பற்றி..பல்கலைக் கழக சுற்று வட்டாரத்திலிருந்த அபிப்ப்பிராயம் அனைத்தும் இவருக்குத் தெரிந்திருக்கின்றது. இது வெறும் கேள்வி ஞானத்தால் மட்டும் வந்ததென்று நான் நம்பவில்லை!

    இவரின் நகைச்சுவை உணர்வு ஒருவரை நினைவூட்டுகின்றது. அவரா இவர்..! பதிலைக் காலத்திடம் விட்டு விடுகின்றேன்!

    எனது ஆரம்ப காலங்களில் யாழில்..எனது பதிவுகளுக்கு ...ஊக்கமும்..ஒத்துழைப்பும் வழங்கிய ஒரு கள உறவு..!

    ஒரு முறை வெள்ளிக்கிழமை விலையாட்டு ஒன்று விபரீதமாக முடிந்து விட்ட போது..மூன்று நாளைக்கு யாழ் பக்கம் தலை காட்ட மாட்டேன் என்று விட்டு மருத்துவ மனையில் போய்ப் படுத்து விட்ட உறவு..!

    ஒரு தடவை யாழில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று எழுதும் உறவு ஒன்று என்னைப் பற்றி ஏதோ எழுதி விட்டது என்பதற்காக, ஆறுமுக நாவலர் மட்டும் தான் அந்த உறவிடம் பேச்சு வாங்கவில்லை என்று ஆறுதல் படுத்திய ஒரு ஊறவு..!

    வெளி நாடு வந்ததும்..மரத்திலிருந்து நேரே மகிழுந்துக்குள் விழுந்தவர்கள் போல அல்லது எமது மக்களின் விடிவுக்காக ஏங்கும் ஒருவர் என்ற வகையில்...தமிழ் சிறி மிகவும் உன்னதமானவர்..!

    ஒரு முறை வேலையிலிருக்கும் போது..யாழை எட்டிப் பார்த்த வேளையில்..தமிழ் சிறி துருக்கியில் ஒரு மஸ்ஸாஜ் பாலருக்குப் போன கதையை வாசிக்க நேர்ந்தது!

    இளமையான அழகிய பெண்கள் வாசலில் நின்று உள்ளே அழைத்துச் சென்றனர்..!

    ஒரு ஆண்மகனின் என்னவாக இருந்திருக்கும் என்று நான் இங்கே எழுதத் தேவையில்லை!

    ஆனால் நடந்தது என்னவோ..ஒரு தடியன் ஒருவன் உள்ளே வந்து ..நெளிவெடுத்து விட்டான் என்று எழுதியிருந்தார்.

    அன்று சிரித்த சிரிப்புக்கான விளக்கம் இன்னும் ஒருவருக்கும் கொடுக்கவில்லை. தலையில் ஏதும் பிழையோ என்று நினைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்...!

    உறவு தொடரும்...!

     

     

     

     

     

     

     

     

     

     

     

    • Like 1
    • Haha 3
  16. சீட்டும் கூட ஒரு போதை தான் போல் உள்ளது. கதை கடைசி வரையும் தொய்வே இல்லாமல் சென்றது…! இந்தச் சுடச் சுட பிரியாணி இல்லாவிட்டால், உலகமே இயங்காது போல…!

    அவனின்றி ஒரு அணுவும் அசையாது…!

    அவளின்றி ஒரு அவனும் அசையாது..!

    நன்றி, சுவியர்…!

     

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.