Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  13,304
 • Joined

 • Days Won

  73

Posts posted by புங்கையூரன்

 1. 4 hours ago, தமிழ் சிறி said:

  அல்ஜீரியாவில் வரலாறு காணாத காட்டுத்தீக்கு இதுவரை 65பேர் தீக்கிரை!

  அல்ஜீரியாவில்... வரலாறு காணாத காட்டுத்தீக்கு இதுவரை 65பேர் தீக்கிரை!

  வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான அல்ஜீரியாவில் தீவிரமாக பரவிவரும் காட்டுத்தீயில், இதுவரை 65பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  வடக்கு அல்ஜீரியாவின் வனப்பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக எரிந்துவரும் காட்டுத்தீயானது நாட்டின் வரலாற்றில் மிகவும் அழிவுகரமான காட்டுத்தீயாகும். இதில் உயிரிழந்தவர்களில் 28 இராணுவ வீரர்களும் அடக்கம்.

  கைபல் பிராந்தியத்தில் பற்றி ஏரியும் காட்டுத்தீயில் மேலும் 12 இராணுவ வீரர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  தீப்பிடித்த பகுதிகளில் 48 டிகிரி செல்சியஸ் (118 பாரன்ஹீட்டை விட) கடுமையான வெப்ப அலை பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் கிட்டத்தட்ட 1000 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் தீயை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

  மலைப்பகுதியான கபிலி பகுதியில் மிகக் கடுமையாக எரிந்த தீயை எதிர்த்துப் போராட, அரசாங்கம் இராணுவத்தை நியமித்துள்ளது.

  இந்த மிக மோசமான காட்டுத்தீயை தொடர்ந்து ஜனாதிபதி அப்தெல்மட்ஜித் டெபோஃன் மூன்று நாட்கள் தேசிய துக்கமாக அறிவித்தார்.

  பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இரண்டு தண்ணீர் வீச்சு விமானங்களை அனுப்புவதாகக் கூறினார். அத்துடன் டுவிட்டரில் ‘அல்ஜீரிய குடிமக்களுக்கு எங்கள் அனைத்து ஆதரவையும் தருவதாக’ உறுதியளித்தார்.

  அல்ஜீரியாவின் அரசாங்கம் பின்னர் இரண்டு தீயணைப்பு விமானங்களை வாடகைக்கு எடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டியதாகக் கூறியது.

  இன்று (வியாழக்கிழமை) முதல் செயற்படும் இந்த விமானங்கள் கிரேக்கத்தில் தீப்பிழம்புகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

  https://athavannews.com/2021/1233878

  அல்ஜீரியா எப்ப தொடக்கம் வட அமெரிக்காவுக்கு நகர்ந்து போனது?

  கடைசியாக வட ஆபிரிக்காவில் இருந்ததாக நினைவு…!

  • Haha 3
 2. இதே போலவே….பௌத்தமா அல்லது நாடா முக்கியம் என்ற கேள்வியும் விரைவில் வரும்..!

  இறைமையா அல்லது கடனா முக்கியம்?

  இது எப்படியிருக்கு சிறியர்?

 3. நல்ல பகிர்வு, சிவரதன்..!

  நானும் இந்தப் பழத்தைப் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன். தொடர்ந்தும் புதியவைகளை அறியத் தாருங்கள்..! நன்றி..!

  • Like 1
 4. 3 minutes ago, தமிழ் சிறி said:

  May be an image of 1 person

  அரசனாகவே இருந்தாலும்.... எதை யாரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று தெரியாவிட்டால்,
  அங்கு அவனொரு கோமாளி தான்.

  ஒரு சுண்டெலி படம் கீறியிருந்தால், படம் எப்படி வந்திருக்கும் எண்டு நினைச்சுப் பார்த்தேன்..!

 5. 2 hours ago, பெருமாள் said:

  மட்டுக்களுக்கு  கோபம் வரும் உண்மையை சொன்னால் .

  "ஒலிம்பிக் போகும் வீரர்கள்  மாட்டு மூத்திரம் குடித்தால் தங்கப்பதக்கம் வெல்வார்கள்"

  மேல் உள்ள நம்பிக்கையில் முக்கால்வாசி அந்த நாட்டில் இருக்கும்போது அவர்கள் வெண்டால் என்ன தோத்தால் என்ன ? 

  இந்தியா பதக்கம் வெல்ல வேண்டுமெனில் பசை வாளி தூக்குதல், வடகம் காய விடுதல்,சாணி அடித்தல், நோட்டீஸ் ஒட்டுதல் போன்ற போட்டிகளை அறிமுகம் செய்தால் தானுண்டு…!

 6. என்ன சுவியர், பொன்னாலைப் பாலத்திலையும் மீன் வாங்கிறீங்கள். இப்ப பாத்தால் நாவற்குழி பாலத்திலை நிக்கிறியள். கயல் மீனின்ர பிடரிப்பக்கம் ஒரு விதமான கறுப்பு நிறமாயிருக்கும். அந்தக் கறுப்பு விளங்கினால் வாழ்க்கை முழுவதும் சுவை நிரம்பியது தான்..!

 7. On 28/7/2021 at 14:08, தமிழ் சிறி said:

  ஜனாதிபதிக்கு அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை ஸ்தாபிப்பு

  ஜனாதிபதிக்கு... அமெரிக்காவை போன்ற, பிரத்தியேக அறை ஸ்தாபிப்பு

  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊடக சந்திப்பை நடத்துவதற்கு என அமெரிக்காவை போன்ற பிரத்தியேக அறை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

  தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர் கலந்துகொண்டு ஜனாதிபதியை அல்லது அவரது ஊடக பேச்சாளரிடம் கேள்விகளைக் கேட்கும் வகையில் இந்த அறை அமைக்கப்பட்டுள்ளது.

  ஊடகங்களுடன் நேரடியாக தொடர்புகொள்வதற்கும் தவறான தகவல்கள் பரவாமல் தடுக்கவும் இந்த அறை பயன்படுத்தப்படும் என ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

  வாராந்திர ஊடக சந்திப்புகள் அங்கு நடைபெறும் என்றும் அதற்காக அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் கிங்ஸ்லி ரத்நாயக்க குறிப்பிட்டார்.

  https://athavannews.com/2021/1230932

  கேள்விகளையும் தெரிந்த்தெடுத்த ஊடகவியலாளர்களிடம் முதலில் கொடுத்து விட்டால் அலுவல் முடிஞ்சுது. ரம்புவுக்கும் ஒரு அறை கட்டினால் போச்சுது…!

 8. 1 hour ago, அக்னியஷ்த்ரா said:

  இதையெல்லாம் தெரிந்துகொண்டு பதவியிலிருக்கும் போது அம்பிகா அன்ரி என்ன புடுங்கினார் ....?
  இப்போது கடைசிக்காலத்தில் வாகாய் வலம்வர பாரளுமன்ற உறுப்பினர் பதவியொன்று தேவைப்படுகிறது 
  அதற்குத்தானே இந்த பத்தி பத்தியாக எழுத்து, கட்டாயம் அடுத்த கூத்தமைப்பு பாரளுமன்ற உறுப்பினர்களுள் நீங்களும் இருப்பீர்கள் அதற்குரிய சகலதகுதிகளும் உங்களுக்கு இருக்கிறது  

  அப்பிடிப் போடப்பு அரிவாளை…!

 9. 2 minutes ago, சாமானியன் said:

  சாண்டில்யனின் கதையொன்றில் மஞ்சளழகி என்றொரு பாத்திரம் வரும் , , வாசித்திருக்கிறீர்களா..

   அது 100 % கற்பனை என்று நான் ஒரு போதும் நினைத்ததில்லை ....

  வாசித்திருக்கிறேன்… 

  அனுபவங்களிலிருந்து தானே கற்பனைகள் பிறக்கின்றன.

  பாலகுமாரன் அண்ணா ஒருமுறை சொன்னது தான் நினைவுக்கு வருகின்றது.

  நாங்கள் உலகெங்கும் விதைக்கப் பட்டிருக்கின்றோம்.

  அறுவடை நெருங்கும் போது, சிங்களவனால் அண்ணார்ந்து பார்க்க மட்டுமே முடியும். 

   

  • Like 6
 10. 1 hour ago, சாமானியன் said:

  நண்பனின் மகன் அண்மையில் ஜேர்மன் நாட்டு பெண்ணொருத்தியை மணம் முடித்திருந்தார். அந்த பெண் அவர்களுடன் பழகும் பாங்கு மிகவும் அன்னியோன்னியமாக எதார்த்தமாக இருந்தது .

  நண்பனின் மகளை கட்டிய Aussie  டாக்டர் பொடியன் மனைவியையும் பிள்ளைகளையும்  கவனிக்கும் பாங்கை பார்க்கஅட, இப்பிடி ஒரு மருமகன் கிடைச்சால் நல்லாயிருக்கும்” என நான் எண்ணுவதுண்டு .

  மகளின் சிங்கள நண்பி முஸ்லீம் இளைஞனை ( இலங்கையன் அல்ல) டேட்டிங் செய்கிறார் , பெற்றோருக்கும் சம்மதம் போல தெரிகிறது .

  பூக்கள் பொதுவாக நிறம் மாறுவதில்லை.. பறவைகள் பறக்காமல் விடுவதில்லை..

   இரண்டுமே இயல்பானவையே .ஒன்று மற்றதிற்கு குறைந்ததுமல்ல கூடியதுமல்ல…

  பண்டைய தமிழன் இதைச் சரியாகப் புரிந்திருந்தான் என்றே நான் கருதுகின்றேன்!

  அதனால் தான்,

  யாதும் ஊரே. யாவரும் கேளிர்.

  அதனால் தான் சிங்களவன் சாமி தூக்கிய போதும், எனக்கும் கோபம் வரவில்லை!

  • Like 2
 11. 10 minutes ago, குமாரசாமி said:

  சோறு மணக்கும் சோ நாடா
  சோழி மணக்க புகழ் மணக்கப்
  பொன்னியனும்
  ஆறு மணக்கும் புனல் நாடா…… 

  சோழ பல நாடு சோறுடைத்து…!

 12. சந்திராயன் முடிஞ்சு  மங்களாயன் வரையும் போயாச்சு...!

  ஆனால் இமாலயனில இன்னும் ஒளிச்சுப் பிடிச்சு விளையாடுது...வல்லரசு...!😁

   

 13. வணக்கம், நொச்சி…!

  மீண்டும் கண்டது மகிழ்ச்சி…!

  இயற்கை என்பவள் எமது தாய்!

  அவள் எம்மைத் தண்டிக்கவில்லை! தனது வழியில்  செல்லமாகக் கண்டிக்கிறாள்!

  அவளது தண்டனையைப் பூவுலகம் தாங்காது!

 14. 28 minutes ago, putthan said:

  இப்ப அப்படியில்லை ,கருணாநிதி மாதிரி மூன்று ,நாலை பகிரங்கமாக வைத்திருக்கிறான்....
  காலில் ஒன்று ,தலையில் ஒன்று ,மடியில் ஒன்று.....மூன்று பேருக்கும் தாலியை கட்டின படியால் கெத்தா நிற்கிறான் ....

  நான் இதை எழுதும்போது இந்தியாவையும், ஜப்பானையும் தான் நினைத்து எழுதினேன்! இப்ப கனக்க வெளியால வருகுது!

  எண்டைக்குச் சிங்களம் பங்களாதேசிட்டைக் கையை நீட்டிச்சுதோ அண்டைக்கே நினைச்சன் இப்படி ஒரு நிலை வருமெண்டு…!

  • Haha 1
 15. 8 minutes ago, தமிழ் சிறி said:

  மத்திய பிரதேசத்தில் கிணற்றுக்குள் விழுந்த 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்!

  மத்திய பிரதேசத்தில்... கிணற்றுக்குள் விழுந்த, 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரம்!

  மத்திய பிரதேசத்தில் கிணற்றுக்குள் விழுந்த 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

  மத்திய பிரதேசத்தின் போபால் அருகே உள்ள கிராமம் ஒன்றில் குழந்தையொன்று கிணற்றுக்குள் விழுந்துள்ளது.

  குறித்த குழந்தையை மீட்பதற்காக நடவடிக்கை எடுத்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக கிணற்றின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் கிணற்றை சுற்றி இருந்தவர்கள் கிணற்றுக்குள் விழுந்துள்ளனர்.

  அவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர்  நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், 12 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மீதம் இருப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  https://athavannews.com/2021/1228849

  இதுக்குத் தான்...தூரத்தில நிண்டு விடுப்புப் பாக்க வேணும் எண்டு சொல்லிறது....!😆

  • Like 1
 16. 2 hours ago, Nathamuni said:

   

   

   

  ரொம்ப நாளுக்கு அப்புறமா, மனதுக்கு கொஞ்சம் குளிர்ச்சியா இருக்குது...

  ஊருக்கு காசு அனுப்புற மக்கள், வங்கி ஊடாக அனுப்பினால் அரசுக்கு உதவியா இருக்கும். உண்டியல் காசு அரசுக்கு போகாது.

  அங்குள்ள காசுக்காரர், வெளிநாடுகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு காசு அனுப்ப, உண்டியல் காரர்களை நாடுகிறார்கள்.

  வெகுவிரைவில் பெற்றோல் வாங்க முடியாமல், வாகனம் இல்லா விதிகளை காணமுடியும் என்கிறார்கள்.

  அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லாமல் போகப் போகிறது.

  முக்கியமாக, ராணுவத்தினர் பலர் வேலை இல்லாமல் வீட்டுக்கு அனுப்பப்படக்கூடும். இது பெரும் பிரச்சனைகளை ராஜபக்சேக்களுக்கு தரப்போகிறது.

  சீனாவும், வகை தொகை இல்லாமல் கடன் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. 

  வினை விதைத்தால், வினை அறுக்கத்தான் வேண்டும். 

  சிங்களத்துக்குச் சில கள்ளக் காதலர்களும் உண்டு...!

  அவர்கள் கொடுப்பார்கள் என நினைக்கிறேன்!

  • Like 1
 17. 1 hour ago, goshan_che said:

  இதை flash floods என்று சொல்வார்கள் என நினைகிறேன். மிக குறைந்த நேரத்தில் மிக அதிகமான மழை பெய்யும் போது, வாய்க்கால்கள், வடிகால்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றால் வடிய கூடிய அளவை விட பலமடங்கு வெள்ளம் தேங்கும்.

   

  மிகவும் கவனமாக இருக்க வேண்டும், கோஷான்!

  அனேகமாக விடுமுறை காலங்களில்  காட்டுப் பகுதிகளில் தான் முகாமிடுவது வழக்கம்!

  ஒரு முறை இவ்வாறு சென்ற போது...எனது குடும்பமும்....இரண்டு நாய்களுமாக ஒரு காட்டருவியின் வழித் தடத்தில் நடந்து கொண்டிருந்தோம்! காட்டில் நிறைய மரங்களும் பற்றைகளும் நிறைந்திருப்பதால், அனேகமாக நெருப்பணைக்கும் படையினருக்காக அமைக்கப் பட்ட வழித்தடத்தில் அல்லது  காய்ந்து போய்க் கிடக்கும் காட்டருவியின் வழித்தடத்தில் நடப்பதே அனேகரின் வழக்கம்!

  இவ்வாறு ஒரு முறை செல்கையில்...பாரிய சத்தமொன்று தூரத்தில் கேட்டது!நாங்கள் ஒன்றும் புரியாமல், வழித்தடத்தை விட்டு மேலே ஏறியதும்  வெள்ளம் அதி வேகமாகப் பாறைகளை உருட்டிய படியே பாய்ந்து வந்தது!

  இந்தச் சம்பவத்தின் பின்னர்  வலு கவனம்!

  • Like 1
  • Sad 1
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.