Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  13,304
 • Joined

 • Days Won

  73

Posts posted by புங்கையூரன்

 1. On 10/7/2021 at 03:10, Sasi_varnam said:

   

  வணக்கம் புங்கை அண்ணா ,🙏

  இந்த ஜூரிக்களை தெரிவு செய்யும் முறையே 2 நாட்கள் எடுக்கும்.
  முதலில் கடிதம் கிடைத்தவர்கள் எல்லோரும் வருவார்கள் (என்னுடைய அனுபவத்தில் நடந்தது) சுமார் 600 பேர்.
  இதில் 100, 200 காரண காரியம் கூறி அனுமதி பெற்று வெளியேற,  அரைவாசி நேரம் இந்த செயல்முறையில் போய்விடும்.  மிகுதி இருக்கும் 400 பேரை வைத்துக்கொண்டு ஜூரி தேர்வு செய்வார்கள். அனைவரது கையிலும் விசேட இலக்கங்கள், குறியீடுகள் கொண்ட சிறியதொரு பற்றுசீட்டு போல இருக்கும் ஒன்றை தருவார்கள்.
  எல்லோரும் ஒரு பெரிய வழக்காடு மன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கே ஏற்கனவே அமர்ந்திருக்கும் தலைமை நீதிபதி (ஜட்ஜ்), அவரின் உதவியாளர்கள், பதிவாளர்கள், பாதுகாவலர், அரச தரப்பு வக்கீல்,  குற்றவாளிக்கு ஆதரவாக ஆஜராகும் வக்கீல், உதவி வக்கீல்கள் இப்படி பலர் இருக்க எங்களை கூட்டிச்சென்று அமர வைப்பார்கள்.  
  ஜட்ஜ் ஐயா ஜூரி கடமையின் அவசியம், அதன் சிறப்பு, கனேடிய நீதித்துறையின் எதிர்பார்ப்பு இப்படி பல விடயங்கள் குறித்து ஒரு சின்ன உரையாற்றுவார்.
  அதன் பின்னர் குறித்த வழக்கு குறித்து ஒரு சுருக்கமான வாசிப்பு (வழக்கின் பின்னணி). அதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரை அறிமுகம் செய்வார்கள். அவரோடு அவரின் வக்கீல் (Defense Lawyer), அரச தரப்பு வக்கீல்(Crown Lawyer) இந்த இருவரின் உதவியாளர்கள் என அனைவரும் அறிமுகம் செய்யப்பட நமக்கு கை, கால் வெடவெடக்கும். 
  சரி இனி அடுத்த கட்டமாக ஒரு பூட்டிய பெட்டியில் இருக்கும் ரசீது போன்ற சீட்டுக்களை எழுந்தமானமாக (Random) எடுப்பார்கள். அதில் இருக்கும் குறியீட்டு எண், தொழிசார் தகவல் இரண்டையும் இணைத்து அழைப்பார்கள். 
  உதாரணம் 73201 - டீச்சர் , 60442 - தாதி இப்படி இருக்கும்.
  அழைக்கப்பட்டவர் தனது ரசீதுடன் சரி செய்து கொண்டு கூண்டு போல ஊருக்கும் ஒரு மேடையில் பொய் நிற்க வேண்டும், அவரிடம் பைபிள், திருகுர்ஹான், பகவத்கீதை இப்படி ஏதாவது ஒரு புத்தகத்தை நீட்டி ஒரு சத்தியப்பிரமாணம் எடுப்பார்கள். குறிப்பாக சில வரிகள் குற்றம் சாட்டப்பட்டவரின் பின்னணி குறித்த வரிகளாய் இருக்கும் (கொலம்பியா நாடு) அதன் பின்னர் ஜட்ஜ் ஐயா அவரிடம் உங்களால் இந்த ஜூரி கடமையை பக்க சார்பற்று நேர்மையாக அணுக முடியுமா என்று  கேட்பார். 
  அப்போது கூட யாராவது என்னால் இத கடமையை சரிவர செய்ய முடியாது அதற்கான காரணம் இது தான் என்று கூறினால் (உதாரணம் - எனது ஆங்கில அறிவு சட்ட விடயங்களை பற்றி உரையாட போதாது, நான் கொலம்பியா நாட்டை சார்ந்தவன், எனக்கு சின்ன வயதில் குழந்தை இருக்கிறார்கள் இப்படி பல காரணங்கள் கூறி சிலர் விலக, என்னால் இந்த கடமையை செய்ய முடியும் என்று கூறுபவர்கள் அங்கு நிற்க; குற்றம் சாட்டப்பட்டவரும், அவரது வக்கீலும் தங்களுக்குள் பேசி தீர்மானிக்க, அதே போல அரச தரப்பு வக்கீலும் அவரது உதவியாளரும் தங்களுக்குள் ரகசியமாக பேசி முடிக்க இருவரும் சரி என்றால் மட்டுமே உங்களை அவர்கள் ஜூரியாக தெரிவு செய்வார்கள். 
  உதாரணம் ஒரு டீச்சர் போய்  நிற்க அவரை அரச தரப்பு ஏற்க, எதிர் தரப்பு தவிர்க்க அவருக்கான தேவை அங்கே இல்லாது போகும், அந்த டீச்சர் வெளியே அழைத்து செல்லப்பட்டு விடுவார். 
  அதே போல எதிர்தரப்பு ஒருவரை ஏற்க, அரச தரப்பு வக்கீல் அவரை தவிர்க்க இது ஒரு கயிறு இழுக்கும்  போட்டி போல போய்க்கொண்டே இருக்கும். கடைசியில் 14 (13 + 1 எக்ஸ்ட்ரா) பேர் கொண்ட ஜூரியை இவர்கள் சல்லடை போட்டு தேடித் தடவி எடுக்க நமக்கு வயித்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதா அந்த வைரமுத்துவின் உருண்டை ஓடிக்கொண்டே இருக்கும். 😂
  கடைசியில் வந்தவர் எல்லாம் சென்று விட... மாட்டிக்கொண்ட அந்த 14 பெரும் தனியாக அங்கே அமர்ந்திருக்க சில முன் குறிப்புகள், அறிவுரைகள் வழங்கப்பட அடுத்தநாள் , என்ன நேரம், அறை இலக்கம் , நீங்கள் குடிப்பது கோப்பியா, டீயா, உங்களுக்கு பழம் வேணுமா, பால் வேணுமா, சேர்க்கும் சீனி அளவு என்ன இப்படியான குறிப்புகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் வருவதற்கான விசேட அனுமதி பாத்திரமும் தந்து  மிகுதி வெள்ளித்திரையில் காண்க என எம்மை அனுப்பி வைப்பார்கள்.

  அருமையான விளக்கத்துக்கு நன்றி..சசி!

   

 2. On 7/7/2021 at 20:45, விசுகு said:

  சில  வருடங்களுக்கு முன்னர் எனக்கும் பிரெஞ்சு  அரசிடமிருந்து இவ்வாறு ஒரு  கடிதம் வந்தது?

  ஆலோசனைகளை  கேட்டு (முன் அனுபவம்  எம்மவர்களுக்கு இல்லை)😪

  நான் பதில்  போட தாமதமாகி விட்டது

  இன்னும் பதில் வரவில்லை (வந்திருந்தால் இதை வெளியில் சொல்வது  குற்றமும்  கூட)

  அவுஸில்  ஜுரர் கடமைக்குக் கூப்பிடும் போது, கட்டாயம் நீதி மன்றுக்குப் போய்.....எதற்காக கடமை ஆற்ற இயலாது என்பதை நீதிபதிக்குத் தெரிவிக்க வேண்டும்! அவர் அதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அடுத்த முறை அழைப்பு வரும் வரையும் கொண்டாட்டம் தான்!
  அழைப்பு வரும்போது நீதி மன்று போகா விட்டால், வீட்டுக்குத் தண்டக் கடிதம் வரும்!

  அவுஸில் வாக்களிக்கா விட்டாலும்...தண்டக் கடிதம் வீடு தேடி வரும்...!

 3. நல்ல ஒரு பயணக்கதை பிரபா...!
  மிகவும் அழகிய கண்டமொன்றில் வசிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கின்றது!

  அனேகமாக வீட்டில் எல்லோரும் வேலை செய்வதால்..ஈஸ்டர் மற்றும் கிறிஸ்துமஸ் காலங்ககளிலேயே இப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கின்றது!

  அப்போதெல்லாம் கடற்கரை ஏரியாக்களில் தங்குமிடம் கிடைக்காது! அதனால் மானிலக் காட்டுப் பகுதிகளுக்குத் தான் போகக் கிடைக்கும்! அதுவும் காம்பிங் ஏரியாக்களில் தங்கி நாயுடன்  புஸ் வாக்கிங் போவது தான் மிகவும் விருப்பமானதாக உள்ளது! இதனால் நிறைய உள்ளூர் அவுசிகளுடனும், அபோரிஜினல் இனத்தவருடனும் பழகும் சந்தர்ப்பங்கள் நிறையக் கிடைக்கின்றன!

  ஊருக்கும், இங்கையும் ஒரு சின்ன வித்தியாசம் தான்...!


  அங்கே சேவல் கூவிப் பொழுது விடிகின்றது!
  இங்கே கூக்குப்புரா கூவிப் பொழுது விடிகின்றது..!😄

  • Thanks 1
 4. மனதை மிகவும் நெருடிய கதை....!

  சிலரது இயல்பே....எல்லாப் பொறுப்புக்களையும் தனது தலையில் தூக்கிச் சுமந்து கொள்வது...!

  உங்கள் நண்பி...அனேகமாகக் குடும்பத்தில் முதலாவது பிள்ளையாகப் பிறந்திருப்பார் என்பது எனது அனுமானம்!

  அவளது குழந்தைகள், அவள் பட்ட கஷ்டங்களை...நிச்சயம் அவதானித்திருப்பார்கள்!

  அவர்கள் தந்தைக்கு ஒரு நாள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.

  நன்றி தமிழினி....!

  • Like 2
 5. 5 hours ago, putthan said:

  நம்ம நயன்தார இடுப்பில பச்சை குத்தி வைத்திருக்கிறா பார்க்கவில்லையே அது அவருக்கு கொஞ்சம் வடிவா தான் இருக்கு ...

  நரிக்குரவர்கள்,ஆதிவாசி மக்கள் இந்த பச்சை குத்துவதை காணலாம்....ஒருகாலத்தில் சினிமா ரசிகர்கள் ஊரில் எம்.ஜி.ஆர்....சிவாஜி ஆகியோரின் முகங்களை பச்சை குத்தியிருப்பார்கள் 50 வருடங்களுக்கு முன்பு பார்த்துள்ளேன்.நம்மவ்ர்களில் கடற்தொழிலில் ஈடுபடுபவர்கள் அதிகம் பச்சை குத்து வழ்க்கம் உடையவர்கள்.

  வெளிநாடுகளில் வெள்ளைகள் பிரபலத்துக்கும் அதிகம் பச்சையை குத்துவினம்....அதிலும் போட்டி போட்டு குத்துகிற‌ சனமும் இருக்கு....

  நீங்கள் எழுதிய செய்தியை வாசிக்கும் பொழுதே எவ்வளவு கிளுகிளுப்பா இருக்கு .....ச்சா ச்சா அந்த மனேஜர் வரவில்லையென்றால் நீங்கள் பார்த்ததை எங்களுடன் பகிர்ந்திருப்பியள் நாங்களும் ஹப்பியா சனிக்கிழமி இரவை கழித்திருக்கலாம்😘

  குமாரசாமியண்ணை நிச்சயம் எந்த இடமென்று சொல்ல மாட்டார்! ஏனெனில் அவர் ஒரு மனிதர்! இந்த முதலாளிக் கதையை நீங்கள் நம்புகிறீர்களா, புத்தன்?

 6. காலம் தின்று விட்ட எமது வரலாற்றைப் போல…,

  வரலாற்றின் எழுதுகோல்களும்,

  மௌனத்துடன் விடை பெறுகின்றன!

  இயலாமை மீண்டும்…மீண்டும்,

  ஏளனத்துடன் எக்காளமிடுகின்றது!

  இதயம் கனத்த அஞ்சலிகள்..!

  சாந்தி மீண்டும் நேசக்கரத்துக்கு உயிர் கொடுங்கள்…!

   

   

  • Like 1
 7. 8 hours ago, விசுகு said:

  தொழில் உபகரணங்களை இழந்த கடற்றொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்களை வழங்குவதாக  சொல்லிக்கொண்டு

  அரிசி மா கொடுப்பது  போல்  கொடுக்கிறார்கள்???

  அது....புது நைலோன் வலையை....மடிப்புக் குலையாமல்.....பக்கட் பண்ணியிருக்குப் போல கிடக்குது...!😃

  • Haha 1
 8. சில வேளைகளில் வாழ்க்கை எந்தத் திசையில் பயணிக்கின்றது என்ற சந்தேகம்  எனக்கு வருவதுண்டு! இருப்பினும் அது செல்லும் திசையை மாற்றும் வல்லமை எனக்கு இல்லையே என்னும் ஆதங்கமும் வந்து போகும்!

  இப்போதெல்லாம்....அந்த வல்லமை எனக்கு இருந்திருந்தால்....மனித வாழ்க்கை ஒரு கூட்டில் வாழுகின்ற கோழியின் வாழ்க்கை போலத் தான் அமைந்திருக்கும் என்று புரிந்து கொள்ளுமளவுக்குப் பக்குவம் வந்திருக்கின்றது!

  உங்கள் கதையும் எனது நம்பிக்கையை உறுதிப் படுத்துகின்றது!

  மிகவும் மனதைப் பாதித்த ஒரு கதை உங்களது....சுனாப்  பானா!

  • Thanks 1
 9. 9 hours ago, நிழலி said:

  கொஞ்ச நாட்களாக நிறைய இஸ்லாமியர்களுடன் பழக வேண்டி வந்துள்ளது. முக்கியமாக ஆப்கன் ஆட்களிடம். அவர்கள் அனேகம் பேரை பிரதர் என்று தான் கூப்பிடுவர். அதன் நீட்சி இந்த பதிலிலும் வந்து விட்டது.

  நிழலி, இஸ்லாமியரின் நட்சத்திர அடையாளத்தில் உள்ள நட்சத்திரத்தில் ஐந்து முனைகள் இருக்கும்! அதில் ஒன்று இந்த பிறதர்ஹூட் என்பதாகும்! அதாவது உலகின் எந்த மூலையில் அவர்கள் இருந்தாலும்....அவர்கள் அனைவரும் பிறதேர்ஸ் தான்...!

 10. 5 minutes ago, putthan said:

  என்ன இந்தியாவை காணவில்லை ....நீ ஒதுங்கி நில் நாங்கள் உந்த  சிங்கங்களுடன் புகுந்து விளையாடுகிறோம் என்று அமெரிக்காவும் ஜப்பானும் சொல்லி போட்டினம் போலும்...

  இந்தியா அனேகமாகத் தேனீர் இடை வேளையில் வந்து போகும் என நினைக்கிறேன்...!

  • Like 1
  • Haha 1
 11. இந்திய பயங்கர வாதிகளால் எமது மண்ணில் நிகழ்த்தப் பட்ட பயங்கர வாதத்தை,
  இதே மனித உரிமைகள் சபையில் திட்டமிட்டு மறைத்த இந்தியாவுக்கு, பாகிஸ்தானிய பயங்கர வாதத்தைப் பற்றி முறையிடுவதற்கு...எந்த விதாமான தார்மீக உரிமையும் கிடையாது!

  • Like 2
 12. ஒவ்வொரு வருடமும், கள்ளரும், காடைகளும் ஜனாதிபதியால் விடுதலை செய்யப் படும் போதும், எமது போராளிகள் விடுதலை செய்யப் படா மாட்டார்களா என்னும் ஆதங்கம் எழுவதுண்டு!

  இப்போது சிலராவது விடுதலை செய்யப் படுவது கண்டு மிக்க மகிழ்ச்சி

 13. ஊரில வாழ்ந்த காலங்களில சில கிழவியள் கதை சொல்லுற போது, கேட்டுக்கொண்டே இருக்க வேணும் போல இருக்கும்!
  அது மாதிரி...அடுத்ததாக என்ன நடக்குமோ என ஆவலைத் தூண்டும் ஒரு எழுத்து நடை..!
  தொடர்ந்தும் எழுதுங்கள்,நாதம்....!

 14. 13 hours ago, goshan_che said:

  கவிதை நன்றாக உள்ளது உதயன். வாழ்துகள்.

  இந்த அனுபவங்களை எழுதலாமே அண்ணா? 

  நேரமும், காலமும் கனிந்து வரும் போது, இந்த அனுபவங்களை நிச்சயம் யாழுடனும், உங்களுடனும் பகிர்ந்து கொள்வேன், கோசான்!

  • Like 2
 15. ஆசிரியர் அந்தப் பத்து ரூபாயை உடனே திருப்பிக் கொடுக்க வேண்டும்!

  பெடி எல்லா வாத்தி மாருக்கும் அவரவர் பாடங்களைப் போட்டுக் கடிதம் எழுதியிருக்கும்!

  பார பட்சம் காட்டக் கூடாது!

 16. கம்யூனிஸ்ற் கார்த்திகேசு ஆசிரியர் காலத்தில் அவருடன் பல விடயஙளைப் பற்றி.நாங்கள் பேசியதுண்டு! மாணவனுக்கும், ஆசிரியனுக்கும் இடை வெளி வைக்காத ஒருவர்! அவர் ஒருமுறை கூறியது இன்னும்.நினைவில் உள்ளது! இலங்கை ஒரு.நாள் வல்லரசுகளின் போர்க்களமாகும்!
  எவ்வளவு தீர்க்க தரிசனம்?
  உங்கள் கவிதையும் அதையே கூறுகின்றது!!

  • Like 1
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.