Jump to content

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13556
  • Joined

  • Days Won

    74

Posts posted by புங்கையூரன்

  1. 4 hours ago, விசுகு said:

    வீதிகளில் வாழ்வோரை சந்தித்திருக்கிறோமா??

    அவர்களுடன்  பேசி  இருக்கின்றோமா?  என்றால் இல்லை  என்பது  தானே  எமது  பதில்?

     

    நான் அப்படி யாரும்  அருகில் வந்தால் அல்லது அவர்களின்  பக்கத்தால்  போகவேண்டி வந்தால்

    கடந்து  செல்லும்வரை மூச்சை  நிறுத்துபவன்

    அல்லது  முகத்தை  முழுமையாக  கிடைப்பதால் மூடுபவன் நான்.

     

    ஆனால்  அவர்களும் மனிதர்கள்

    இந்த நிலைக்கு  அவர்கள்  வர ஏதாவது  வலுவான  காரணமுண்டல்லவா?

    நாம்  சிந்தித்துண்டா?

    முதன் முதலில் வீதிக்கு  வரத்தான்  கடினமாக  இருக்கும்

    வந்துவிட்டால்???

     

    இப்படித்தான்  பாரிசின்  வீதிகளில்  பல நூறுபேர்...

    நான்  கண்டு கொண்டதில்லை

    எந்த  உதவியும் செய்ததில்லை

    கண்டால் மூச்சையே நிறுத்துபவனால்  எப்படி  அருகில் சென்று உதவமுடியும்??

     

    அண்மையில் எனது  சின்ன  மகளுடன் நடந்து  சென்று  கொண்டிருந்தேன்

    எனது  கடைக்கு  பக்கத்தில் இவ்வாறு  வீதியில் இருக்கும்  ஒரு  பெண்ணைக்கண்டதும்

    நான் முகத்தை  மூடி அவசரமாக அந்த இடத்தை விட்டு  அகல

    எனது  மகளோ தனது பள்ளிக்கூட பையிலிருந்து எதையோ எடுத்து அவளிடம் கொடுத்து  விட்டு  வந்தாள்

    என்ன  என்று  கேட்க அவருக்காக ஒரு  சாப்பாடு  தான் வாங்கி  வந்ததாக  சொன்னாள்.

     

    இப்படி பலரும்  அவளுக்கு சாப்பாடும்  தண்ணீரும் உடுப்புக்களும்  கொடுப்பதை  பலமுறை  நானும் கண்டிருக்கின்றேன்

    ஆனாலும் இவர்களுக்கு அரசு ஏதாவது  செய்து  கொண்டே  இருக்கிறது என்பதும்

    இவர்கள் தங்க பல இடங்களை  அரசு  ஒதுக்கி  இருக்கிறது 

    ஆனால் இவர்கள் அதை  பயன்படுத்துவதில்லை என்பதுமே எனது பார்வையாக இதுவரை  இருந்தது

     

    நேற்று எனது இத்தாலி வாடிக்கையாளர் (நண்பர்) ஒருவர்   வந்தார்

    அந்த  பெண்ணுடன்  இவர் கதைப்பதை கண்டிருக்கின்றேன்

    அவருடன்  பேசிக்கொண்டிருந்தபோது இது பற்றிய பேச்சு  வந்தது

    அதனால் இவரிடம் எனது  மகளும் சாப்பாடு  கொடுத்ததை  சொல்லி

    இவர்கள் பற்றிய அவரது  கருத்தைக்கேட்டேன்

     

    அவர்  சொன்னார்  ஏன்  இவர்கள் அரசு ஒதுக்கியிருக்கும் இடங்களில் தங்குவதில்லை தெரியுமா?

    அரச  ஒதுக்கும் இடங்களில் வீதிகளில்  நிற்பவர்களே முழுமையாக வருகிறார்கள்

    அங்கே  ஆண்களே வல்லுறவுக்கு  தப்பமுடியாதபோது  பெண்களின்  நிலை என்ன??? என்றார்

     தூக்கிவாரிப்போட்டது  எனக்கு...

    உலகில் எவ்வளவு  விடயங்களை அறியாமல் 

    விமர்சனமும்  வியாக்கியானமும் கேலிகளும்  செய்தபடி வாழ்கிறோம்????

     

    யாழுக்காக  விசுகு...............

     

    விசுகர், இதில் வெட்கப் பட எதுவுமில்லை. சிவனே மகனிடம் வாய் பொத்தி நின்று, பிரணவத்தின் விளக்கம் கேட்டான். நானும் பல விசயங்கள் இவ்வாறு தான் அறிந்து கொண்டேன்.

    புங்குடுதீவு ஆலடிச் சந்தியில் ‘நீதவான்’ என்று ஒரு மனநிலை சரியில்லாதவர் இருந்தது நினைவிருக்கிறதா? உங்கள் அப்பா கட்டாயம் கண்டிருப்பார். மனநிலை யாருக்கு எப்போது தளம்பும் என்று யாராலும் சொல்ல முடியாது. தளம்பலுக்கும், தளம்பா நிலைக்கும் இடையில் இருப்பது ஒரு மெல்லிய கோடு மட்டுமே..!

    • Like 2
    • Thanks 1
  2. 10 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

    C634-A9-AA-DCFB-4-D91-8567-164-C04741-C0
    முல்லைத்தீவு - ஒரு காட்டுப் பாதையில்..

    488-F10-FD-A2-A7-4958-9-BB2-82-FBBD980-D

    கன்பரா - ஒரு கட்டிடத்தில்

    இந்த இரு மலர்களையும் பார்க்கும் பொழுது உங்கள் மனதில் தோன்றுவதென்ன.. 

    எனக்கு இன்னமும் பழம் றோட் எது என்றது கூட குழப்பமாக உள்ளது.. 

    கண்ணீர்ப் பூக்களும், காகிதப் பூக்களும்…!

    என்பது மிகவும் பொருந்தும் என நினைக்கிறேன்…!

    • Like 1
  3.  எனக்கென்னவோ நீதிபதிகள், தங்கள் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்வது பிழை போல உள்ளது. நிர்வாக முடிவுகளில் நீதித் துறை தலையிடுவது தவறு..!சுய நலம் மிக்க நீதிபதிகளும் அரசியல் வாதிகளும் நிரம்பிய தேசம் சிங்களம்…!

  4. நன்று, நில்மினி…!

    மிக அரிய விசயங்களை அறிந்து கொண்டேன்…!

    லெமூர்களைப் போலத் தான் டோடோ பறவையும் மனித்ர்களை ஒரு காலத்தில் நம்பியது. விளைவு?

    உலகில் மிகவும் சுயனலம் கொண்ட இனமே மனித குலம்…!

    இயற்கை எதையும் மாற்ற எப்போதுமே தயங்கியதில்லை..!

    அது பிரளயமாகவும் இருக்கலாம்…!

  5. நில்மினி உங்கள் தோட்டத்தில் நிற்கும் பொன்னொச்சி மரம் சிட்னியில் ஒரு ஆற்றங்கரையில் வரிசையாக வளர்ந்துள்ளது. மிகவும் அழகாக இருக்கும். ஊரின் நினைவுகள மீட்டுத் தருவதால், அங்கு அடிக்கடி செல்வதுண்டு..! 

    பி.ஈ; இன்னும் கோவில் காரருக்குத் தெரியாது..!😅

    • Like 1
  6. தமிழ் சிறி என்னைப் பொறுத்த வரையில் ஒரு கேள்வியின் நாயகன்...!

    ஏன் சொல்லுகின்றேன் என்றால், இவரைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஒரு குறு குறுப்பு எப்போதும் இருந்து கொண்டேயிருக்கின்றது..!

    இவர் எழுதும் விடயங்கள் மிகவும் பரிச்சயமானதாக உள்ளது தான் காரணம்..!

    எனது ஆசிரியர்களின் பெயர்கள், நண்பர்களின் பெயர்கள், சம காலத்தில் இருந்தவர்களுக்கே தெரிந்த ஊர்கள் (நாவாந்துறை, கோணாந்தோட்டம், சோடாப் போத்தல்) எல்லாம் இவருக்கும் தெரிந்திருக்கின்றது. அது மட்டுமல்ல...கவிஞர் ஜெயபாலன் பற்றி..பல்கலைக் கழக சுற்று வட்டாரத்திலிருந்த அபிப்ப்பிராயம் அனைத்தும் இவருக்குத் தெரிந்திருக்கின்றது. இது வெறும் கேள்வி ஞானத்தால் மட்டும் வந்ததென்று நான் நம்பவில்லை!

    இவரின் நகைச்சுவை உணர்வு ஒருவரை நினைவூட்டுகின்றது. அவரா இவர்..! பதிலைக் காலத்திடம் விட்டு விடுகின்றேன்!

    எனது ஆரம்ப காலங்களில் யாழில்..எனது பதிவுகளுக்கு ...ஊக்கமும்..ஒத்துழைப்பும் வழங்கிய ஒரு கள உறவு..!

    ஒரு முறை வெள்ளிக்கிழமை விலையாட்டு ஒன்று விபரீதமாக முடிந்து விட்ட போது..மூன்று நாளைக்கு யாழ் பக்கம் தலை காட்ட மாட்டேன் என்று விட்டு மருத்துவ மனையில் போய்ப் படுத்து விட்ட உறவு..!

    ஒரு தடவை யாழில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று எழுதும் உறவு ஒன்று என்னைப் பற்றி ஏதோ எழுதி விட்டது என்பதற்காக, ஆறுமுக நாவலர் மட்டும் தான் அந்த உறவிடம் பேச்சு வாங்கவில்லை என்று ஆறுதல் படுத்திய ஒரு ஊறவு..!

    வெளி நாடு வந்ததும்..மரத்திலிருந்து நேரே மகிழுந்துக்குள் விழுந்தவர்கள் போல அல்லது எமது மக்களின் விடிவுக்காக ஏங்கும் ஒருவர் என்ற வகையில்...தமிழ் சிறி மிகவும் உன்னதமானவர்..!

    ஒரு முறை வேலையிலிருக்கும் போது..யாழை எட்டிப் பார்த்த வேளையில்..தமிழ் சிறி துருக்கியில் ஒரு மஸ்ஸாஜ் பாலருக்குப் போன கதையை வாசிக்க நேர்ந்தது!

    இளமையான அழகிய பெண்கள் வாசலில் நின்று உள்ளே அழைத்துச் சென்றனர்..!

    ஒரு ஆண்மகனின் என்னவாக இருந்திருக்கும் என்று நான் இங்கே எழுதத் தேவையில்லை!

    ஆனால் நடந்தது என்னவோ..ஒரு தடியன் ஒருவன் உள்ளே வந்து ..நெளிவெடுத்து விட்டான் என்று எழுதியிருந்தார்.

    அன்று சிரித்த சிரிப்புக்கான விளக்கம் இன்னும் ஒருவருக்கும் கொடுக்கவில்லை. தலையில் ஏதும் பிழையோ என்று நினைத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்...!

    உறவு தொடரும்...!

     

     

     

     

     

     

     

     

     

     

     

    • Like 1
    • Haha 3
  7. சீட்டும் கூட ஒரு போதை தான் போல் உள்ளது. கதை கடைசி வரையும் தொய்வே இல்லாமல் சென்றது…! இந்தச் சுடச் சுட பிரியாணி இல்லாவிட்டால், உலகமே இயங்காது போல…!

    அவனின்றி ஒரு அணுவும் அசையாது…!

    அவளின்றி ஒரு அவனும் அசையாது..!

    நன்றி, சுவியர்…!

     

    • Like 1
  8. 26 minutes ago, nilmini said:

    Aaladi2.jpgAaladi.jpg

     

    Aaladi1.jpg

    இந்த படங்களை மாமா இரண்டு வருடங்களுக்கு முன்பு " சிவபெருமான் ஆலடியில் இரவோடிரவாக எழுந்தருளினார்" என்று அனுப்பியிருந்தார். பின்னுக்கு தெரியும் வீடு.

    சரிவந்துவிட்டது. நன்றி அண்ணா and சிறி.

    இந்தச் சிலை சிவனின் சிலை இல்லை. இது அர்த்தனாரீஸ்வரர் என்னும் சிவனின் இன்னொரு வடிவமாகும். சிவனும், உமையும் சேர்ந்த வடிவமாகும்.

    சிறியர், எனது ஊரிலும் ஒரு அழகிய ஆல மரத்துக்கு, யாரோ சேவெடுத்துக் கேவலமாக்கியிருக்கிறார்கள். எமது அடையாளங்களும் சிதைக்கப் படுகின்றன.

    • Like 2
  9. 21 minutes ago, suvy said:

    தச்சுக் கிழிக்கும் தையல்கள் .........(9).

     

    --- உன்னுடைய பெயர் என்ன.

    --- கதீஜா மேடம். நீ போட்டிருக்கிற ஆடைகளும் அணிகலன்களும் அழகாய் இருக்கு. உனது ஊர் எங்கு இருக்கிறது.

    --- நன்றி மேடம், எனது பெற்றோர் நைஜீரியாவை சேர்ந்தவர்கள்.ஆனால் நானிங்குதான் பிறந்து வளர்ந்தேன்.

    --- அட இந்தச் சிறுமியும் அழகாக தலையலங்காரம் (தலையில் சின்னன் சின்னனாய் நிறைய பின்னல்கள் பின்னி அவற்றில் அழகழகான ரிப்பன் கட்டியிருந்தாள்). செய்திருக்கிறாள். யார் செய்தது. சிறுமியை கேட்க அவளும் இவளைக் கை காட்டுகிறாள்.

    --- நல்லது இனி நீ என்ன செய்யப் போகிறாய்.

    --- வேலை ஒன்று எடுக்கும்வரை மீண்டும் வகுப்புக்கு போக வேண்டும். இல்லையென்றால் pole emploi இரண்டு மாதம் காசை வெட்டி விடுவார்கள். வேலையொன்று கிடைத்தால் அங்கு போகத் தேவையில்லை, அவர்களுக்கு அறிவித்து விட்டு வேலைக்குப் போகலாம்.

    --- எதுவரை படித்திருக்கிறாய்.

    --- அவள் தனது பையில் இருந்து c .v  யை எடுத்துக் கொடுக்கிறாள். அதில் அவளது படிப்பு, இதுவரை அவள் செய்த வேலைகள் + வேலையிடங்கள் எல்லாம் விபரமாக இருக்கிறது.

    --- ஓ....பேஷன் & மாடலிங் எல்லாம் படித்திருக்கிறாய்.

    --- ஓம் ....மேடம்.

    --- சரி....அப்படியெனில் நீ ஒன்று செய், வாற செய்வாய் கிழமை காலை 08:30 க்கு முன் இந்த இடத்துக்கு வந்து என்னைப் பார், நான் உனக்கேற்ற தகுதியான வேலை தருகிறேன் என்று சொல்லி தனது கடை விலாச அட்டையைக் கொடுக்கிறாள். பின் உதவியாளர் அங்கு வர அவரிடம் "arret de travail" சான்றிதழை வாங்கிக் கொண்டு நன்றி சொல்லிவிட்டு இருவரும் போகிறார்கள்.

                                                      அவர்கள் சென்றதும் சுமதி தனது உதவியாளரிடம் அவளின் வேலை மற்றும் ஒழுங்கு பற்றிக் கேட்க அவர் சொன்னதும் அவளுக்குத் திருப்தியாய் இருக்கு.

                                                                               பின் அந்த உதவியாளர் சுமதியிடம் மேடம் அந்த இருவரின் இடத்துக்கு இன்னும் ஆட்கள் போகவில்லை அதனால் அவர்களை அங்கு அனுப்பி இருக்கலாம் என்று சொல்ல அவளும் அது எனக்குத் தெரியும், அந்த ஹோட்டல் வேலைதானே அதை நாமிருவரும் போய் செய்து விட்டு வரலாம். அவர்களது விடுமுறை நாளில் அவர்களுக்கு வேலை ஒன்றைக் குடுத்து இந்த லீவு நாளை சரிசெய்து விடுங்கள் என்கிறாள்.

    "கல்லுக்குள் ஈரம்" போல் இருக்கும் அவளது உள்ளத்தைப் பார்த்து அவர் புன்முறுவல் செய்கிறார்.

    --- என்ன சிரிக்கிறீர்கள், இந்தக் கம்பெனி நன்றாக இருக்க வேண்டும். அதுக்கு நாமெல்லாம் விசுவாசமாக வேலை செய்ய வேண்டும். அதே நேரம் தொழிலாளிகளும் பாதிக்கப் படக் கூடாது புரியுதா.

    --- புரியுது மேடம்.

                                                            வேலை முடிந்து காரில் வரும்போது நினைக்கிறாள், என்னுடைய வேலைத்தளத்தில் முப்பது பேருக்கு மேலாக ஆட்களை வைத்து கையாளுகிறேன்.ஆனால் எனது கடையில் மூன்று நான்கு பேரை வைத்துக் கொண்டு தடுமாறுகின்றேன். அன்றைய நாளை நினைத்துப் பார்க்கும்போது தான் விடும் தவறுகள் புலப்படத் தொடங்குகிறது. அத்துடன் மனதில் ஒரு தெளிவும் ஏற்படுகிறது.

                                                                                                                       லா சப்பலுக்கு வந்த சுமதி பார்க்கிங்கில் காரை விட்டுட்டு தனது போன் மூலம் காருக்கு டிக்கட் கட்டனம் செலுத்திவிட்டு சுற்று முற்றும் பார்க்கிறாள்.17:00 மணிக்கு இன்னும் முப்பது நிமிடங்கள் இருக்கின்றன. எதிரே "கபே பரத் " தை பார்த்ததும் இரண்டு பாலப்பம் சாப்பிட வேண்டும் போல் இருந்தது. உள்ளே சென்று இரண்டு அப்பத்துக்கும் இஞ்சி போட்ட பாலதேனீருக்கும் சொல்லிவிட்டு ஆயாசமாய் கதிரையில் சாய்ந்து கொள்கிறாள். பின் தனது" comptabilité " க்கு (கணக்காய்வாளர்) போன்செய்து தனது வேலையாட்களின் வேலை ஒப்பந்தங்கள் பற்றி கேட்டு அவற்றில் சில திருத்தங்கள் செய்ய சொல்லி விட்டு கொண்டுவந்து தரும்படி சொல்கிறாள்.

                                                                                                            உபசரிப்பாளர் சுட சுட கொண்டுவந்த அப்பத்தை ரெண்டு கடி கடித்து இஞ்சித் துருவல் போட்ட அந்த டீ  தொண்டைக்குள் இறங்கும்போது ரொம்ப சுகமாக இருக்கின்றது.இஞ்சித் துருவல் பல்லிடுக்கில் சிக்குவதும் நாக்கு அதை தேடிச்சென்று ருசித்து இழுத்து வருவதும் அருமையாக இருக்கிறது. அவள் 17:00 மணிக்கு கடைக்குள் வந்ததும் மிருதுளா அவளிடம் கணக்கு வழக்குகளை ஒப்படைத்து விட்டு போய் வருகிறேன் என்று இருவரிடமும் சொல்லிவிட்டு கிளம்புகிறாள். கபிரியேல் கொப்பியில் அளவுகள் பார்த்து துணிகளை வெட்டிக் கொண்டிருக்கிறான். அங்கு வரும் ஓடர் சாரங்களை அளவுகள் பார்க்காமலே அதன் கோடுகளை நேர்ப்படுத்தி அழகாக தைத்து வைக்கிறான். இந்த மூன்று மாதத்துக்குள் அவன் சுமதியிடமும் மிருதுளாவிடமும் பார்த்துப் பார்த்து துணிகளை நன்றாக வெட்டித் தைக்கப் பழகியிருந்தான். பிரேமாவும் ரோகிணியும் அங்கில்லை. கதவின் மணியொலி கேட்டு நிமிர்ந்த கபிரியேல் சுமதியைப் பார்த்து சிநேகபூர்வமான ஒரு புண்ணகை செய்து விட்டு மீண்டும் தனது வேலையில் கவனத்தை செலுத்துகிறான். சுமதியும் ஏற்கனவே மிருதுளா தைத்து வைத்த கட்டிங்ஸ்சை எடுத்து சிரத்தையுடன் தைக்கிறாள்.சிலர் வந்து தைத்த ஆடைகளை வாங்கிக் கொண்டு பணம் குடுத்துவிட்டு செல்கின்றனர். வேறு சிலர் காசோலைகள் குடுத்த போது அதை மறுத்து பணமாகவோ அன்றி விசாகாட் மூலமாக பணத்தைப் பெற்றுக் கொள்கிறாள்.

                                                

                                                 அன்று சுமதி காலை 08:30 க்கு வேலைக்கு வருகிறாள். முன்பே அங்கு கதீஜா வந்து நிக்கிறாள். பெரிய பெரிய வயலட் கலரில் பூக்கள் போட்ட ட்ரவுசரும் அதே துணியில் மேலே கொலர் வைத்த கோட்டும், ட்ரவுஸர் தொடைகளையும் பின்னழகையும் இறுக்கமாய் பிடித்திருக்க முழங்காலின் கீழே அது பெல்பாட்டமாய் விரிந்து இறங்குகிறது. கால்களில் அகலமான குதியுள்ள வெள்ளைநிற  உயரமான சாண்டில்ஸ் அவளது பின் அழகை மேலும் மெருகூட்டுகிறது. மேலே அணிந்திருக்கும் கோட்டினுள்ளே நீளமான வெள்ளை பெனியன் அணிந்திருக்கிறாள். அவள் நடக்கும் போது மார்புகள் இரண்டும் உள்ளாடை அணியாததால் தென்றலில் அசையும் சன்பிளவர்ஸ் போல் மென்மையாக அசைகின்றன. கழுத்தை சுற்றி இருக்கும் வெள்ளிசெயினில் இருந்து ஒரு செயின் இழை மட்டும் நேராக நெஞ்சுக்குள் ஒற்றை மின்னல்போல் இறங்கி  மோட்ஷமடைகிறது. காதுகளில் இருந்து தோளைத் தொடுவதுபோல் பெரிய வெள்ளி வளையங்கள், தேனில் மிதக்கும் குலோப்ஜாமூன் போல் கண்ணக் கதுப்புகள், துரு துறுவென அங்குமிங்கும் அலையும் விழிகள், இமைகளின் மேல் முடியை முற்றாக மழித்துவிட்டு வில்போன்று நீளமாக கண் மை பூசி இமையின் மேற்புறத்தில் மயில் கழுத்து வர்ணத்தில் வர்ணம் பூசி இருந்தாள். சற்றே பெருத்த உதடுகளில் கடுஞ் சிகப்பு கலரில் உதட்டுச்சாயம் போட்டிருந்தாள். பெண்களையே கிறங்கடித்து விடும் அவள் அழகின் முன் ஆண்கள் எம்மாத்திரம்.

                                                                                                          இருவரும் பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொள்கிறார்கள். பின் சுமதி கடையைத் திறந்து அலாரங்களை நிறுத்தி விட்டு அவளையும் அழைத்துக் கொண்டு உள்ளே வருகிறாள். அப்போது அங்கு வந்த கணக்காய்வாளர் ஒரு பைலை அவளிடம் குடுத்து விட்டு போகிறார். அவள் அதை தனது மேசை லாட்சியில் வைத்து விட்டு மேலே வருகிறாள். பின் சுமதி கதீஜாவுக்கு கடையையும் கீழே இருக்கும் ட்ரெஸிங் அறையையும் சுற்றி காட்டிக்கொண்டிருக்கும் பொழுது மிருதுளாவும் ரோகிணியும்  உள்ளே வருகின்றார்கள். இவர்கள் இருவரையும் பார்த்து அவர்கள் இருவரும் வணக்கம் சொல்லிவிட்டு தத்தமது வேலைகளை செய்கின்றனர். சுமதி இவர்களுடன் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுது, கதீஜா அங்கிருந்த நவீனமான மெஷின்களையும் ஆபிரிக்கன் திருமண ஆடைகளையும் நீளநீளமான தலைமுடிகள் பக்கட்டுகளையும் பார்த்து வியந்து நிக்கிறாள். அப்போது தன்னருகே வந்த சுமதியிடம் மேடம் எனக்கு நீங்கள் என்ன வேலை தரப்போகிண்றீர்கள், தையல் வேலையா, தலை பின்னுகிற வேலையா. நீ மட்டும் இங்கு எனக்கு பிடித்த மாதிரி வேலை செய்தால் அவற்றுடன் அதை விட பெரிய வேலையொன்றும் உனக்குத் தருகிறேன் என்கிறாள்.  வழக்கம்போல் பிரேமாவும் 09:30 க்கு வருகின்றாள். அங்கு சுமதியைப் பார்த்ததும் ஒரு அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்து விட்டு தனது மெஷினில் சென்று அமர்கிறாள்.மறக்காமல் தான் கொண்டுவந்த பெரிய பையை தனது காலுக்கருகில் வைத்துக் கொள்கிறாள்......!

    இன்னும் தைப்பார்கள்..........!   🎀

    அண்ணலும் நோக்கினார்,

    அவளும் நோக்கினாள்…!

    அற நெறியறிந்த முனிவரும் நோக்கினார்…!

    கம்பன் தோற்றான் போங்கள்…!

    சுபியர்…!😅

    Just now, புங்கையூரன் said:

    அண்ணலும் நோக்கினார்,

    அவளும் நோக்கினாள்…!

    அற நெறியறிந்த முனிவரும் நோக்கினார்…!

    கம்பன் தோற்றான் போங்கள்…!

    சுபியர்…!😅

    சுவியர்…!

    • Like 1
  10. 2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

    large.248A52E2-B722-48FF-B76F-BF2533BD4E06.jpeg.e22f6ad49dee1fc15eb0fab764bfe01a.jpeg

    யாழ்ப்பாண townற்கு அருகில் உள்ள பகுதி(நகர்ப்புறம்)
     

    29-DAF843-5961-4600-BFF1-EC09-F0-AA5-EAD

    முல்லைத்தீவில் ஒரு கிராமம்

    இந்தப்படங்களைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு தோன்றுவது என்ன? 

    மதங்களுக்கும் கூட விளம்பரம் அவசியமாகின்றது…!

    பக்குவப் பட்டவனுக்கு இரண்டுமே கற்கள் தான் என்பது புரியும்….!

    • Like 1
  11. 1 hour ago, குமாரசாமி said:

    தைக்கட்டும்.....:thx:

    சுவியருக்கு வாழ்க்கை நிறைய அனுபவங்களை அள்ளி இறைத்திருக்கின்றது போல கிடக்குது..!

    ஏன் சுமதி இவ்வளவு அப்பாவியா இருக்கிறாவோ தெரியாது..!

    நான் மட்டும் தான் ஒரு அப்பாவி என்று இவ்வளவு நாளும் நினைச்சிருந்தன்..! 

     

    தைக்கட்டும்…!

    • Like 1
    • Haha 1
  12. 18 hours ago, தமிழ் சிறி said:

    Thumbs Up.gif | Trouble Free Pool

    நன்றி வசி. நீங்கள் நடந்த சம்பவத்தையும், மனித மனத்தையும்...
    வித்தியாசமான முறையில் ஆழமாக ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். 

    //மனித மனம் வித்தியாசமானது, மனதில் ஏற்படும் வலிகளை உணராதிருக்க முயற்சி செய்யும்

    1.உளப்பூர்வமாக தான் தவறே செய்திருந்தாலும் தவறு தனது பக்கமல்ல  என நினைத்து அதனால் ஏற்படும் வலியினை கடக்க முற்படும்.

    2.சம்பவத்தினை அப்படியே மறந்து விட்டு விடும்.//


    நீங்கள், கூறியற்றவைத்தான்  விபத்தை ஏற்படுத்தியவரும் 
    மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கின்றார் என நினைக்கின்றேன். 🙂

    சென்ற... திங்களிலிருந்து வெள்ளி வரை தினமும் மூன்று மணித்தியாலம் வரை 
    வேலை செய்துள்ளேன். அவன் என்னைத் தேடி வந்து கதைக்க முயற்சிக்கவில்லை என்பது 
    மிகுந்த ஏமாற்றத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்துகின்றது. 🙁

    animiertes-telefon-bild-0002.gif                       animiertes-telefon-bild-0105.gif

    கடந்த 15 மாதத்தில்... வேலையிடத்தில் உள்ள வேலையாட்களும், மனேஜரும் 
    பல தடவைகள் தொடர்பு  கொண்டு நலம் விசாரித்துக் கொண்டிருந்த போதும்... 
    இவன்  ஒரே ஒரு தடவை மட்டும்.. அதுகும் ஒரு நிமிடம் மட்டுமே கதைத்தான்.
    அதிலிருந்தே அவனின் போக்கு எனக்கு பிடிக்கவில்லை. 😎

    animiertes-polizei-bild-0004.gif

    இவ்வளவிற்கும் விபத்து நடந்து நான் வைத்திய சாலையில் இருந்த போதும்,
    Reha´வில் இருந்த போதும்... அந்த விபத்தை கையாண்ட பொலிஸ்காரர் இருவர்  
    நேரே நான் சிகிச்சை பெறும் இடத்திற்கே  வந்து...  

    animiertes-richter-bild-0050.gif   

    அவன் மீது, வழக்கு தொடுக்கப் போகின்றேனா என்று கேட்டு..
    தாங்களே, அரசு சார்பில் வழக்கை கொண்டு நடத்துவதாகவும்... ஆம் என்றால், 
    ஒரு மாதத்துக்குள் பதில் தர வேண்டும் என்றும் சொன்னார்கள்.

    animiertes-richter-bild-0041.gif

    நான்.... வீட்டிலும் மனைவி, பிள்ளைகளிடம், இது பற்றி கதைத்த போது...
    அவன் தவறுதலாக செய்தற்கு... எதற்கு வழக்கு போட்டு தண்டிக்க வேண்டும் என்றும்,
    அத்துடன் அவன் சிறு பிள்ளைகளின் தந்தை என்றும்... 
    ஏன் அவனை சிரமப் படுத்துவான் என்றும் சொன்னார்கள்.

    நானும், அவர்கள் சொல்வேதே சரி என்று... 
    காவல்துறையினரிடம் வழக்குப் போடவில்லை என்று சொல்லி விட்டேன்.
    அவர்களும் எழுதி வாங்கிக் கொண்டு போய் விட்டார்கள்.

    இப்போ... இவனின் செயலைப் பார்க்க, வழக்கு போட்டு 
    "சிப்பிலி"  ஆட்டி விட்டிருக்கலாமோ என யோசிக்கின்றேன். 🙂

    வேண்டாம் தமிழ்சிறி..!

    நாய் கடிக்கிறது..! அது அதன் சுபாவம்! நீங்களும் நாயின் தரத்துக்கு இறங்க வேண்டாம்!

    அவனது மனச் சாட்சியே அவனது தீர்ப்பை எழுதட்டும்..!

    • Thanks 1
  13. ஒரு வியாபாரத்தைத் தொடங்கி நடத்தும் போது வதும் பிரச்சனைகளைத் தெளிவாக அறிந்திருக்கின்றீர்கள். அதுவும் மூளை கூடிய எமது இனத்தவரைக் கொண்டு நடத்துவது இன்னும் கஷ்டம். தொடருங்கள்…!சுமதி நன்றாகக் கையாள்கிறார்..!

    • Like 1
  14. பல வாசிப்புக்களாலும், திரைப் படங்கள் பார்த்ததாலும் தெளிவில்லாமல் அறிந்திருந்த வரலாறு, உங்கள் பதிவுகளை வாசித்த பின்னர் ஒரு தொடுவையாக அமைகின்றது…!

    தொடருங்கள், ஜஸ்ரின்…!

  15. 2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

    90 வயதில் எத்தனை மன உளைச்சல்களுக்கும் அழுத்தங்களுக்கம் இவர் முகம் கொடுக்கவேண்டி இருந்ததோ தெரியவில்லை.

    கூடவே இருந்த வளர்த்தவர்கள்/வளர்ந்தவர்கள் (அதிலும் உடல், உளரீதியாக இளமையானவர்கள், வலிமையானவர்கள்) மற்றவர்களின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து சுயநலவாதிகளாக மாறி செய்த காட்டிக்கொடுப்புகளையும், விடவா இவரது செயல் துரோகமானது?? சரி அப்படி அவர் அறிக்கைவிட்டால் அவர் கூறிய சந்தர்ப்பம், சூழ்நிலையை பார்க்கவேண்டும், இதனை ஏன் இந்த சமயத்தில் வெளியிட்டு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என யோசித்து இதனால் ஏற்படப்போகும் விளைவுகளையும் அவற்றை எப்படி சமாளிப்பது என்பதை கூறுவதை விட்டு இந்த மாதிரி திரும்பத் திரும்ப விலை போய்விட்டார் etc etc என கூறுவது சரியல்ல என நினைக்கிறேன்.. 

    மிகவும் பரிதாபத்துக்குரிய நிலைக்கு அவர் வந்துள்ளார்.. . மதிப்பிற்குரிய ஒருவர், தலைவரில் மிகவும் பாசமுடையவரின் முதுமையையும் இயலாமையையும் பயன்படுத்துகிறார்கள்.. 

    அவ்வளவுதான்.. 

    இது தான் உண்மை நிலையாக இருக்கும் என நான் நினைத்தேன்..!

    எந்த நாட்டின் புலனாய்வுத் துறையும் ஈவிரக்கம் இல்லாதவை.   மகனைக் கொல்வோம், குடும்பத்தையே அழிப்போம், வீட்டை எரிப்போம் என்றெல்லாம் வெருட்டியிருப்பார்கள்..! பி.பி. சி க்கெ நடக்கிறதைப் பாருங்கோவன்…!

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.