Jump to content

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13556
  • Joined

  • Days Won

    74

Posts posted by புங்கையூரன்

  1. இவ்வளவு தூரம் நீங்கள் வந்ததை ஒரு பெரும் சாதனையாகவே நான் பார்க்கிறேன்! தொடர்ந்தும் கவனமாக இருக்கவும்…!

    • Thanks 1
  2. எனக்குத் தெரிஞ்சிருந்த கொஞ்ச நெஞ்ச சாதக அறிவையும் கதை உடைச்சுப் போட்டுது…! மிகவும் முக்கியமான மனுசன் குரு பகவான்! அவரே ஆறாமிடத்தில மறைஞ்சு போனால் சாதகி எங்கே போய் மறைவதாம்?

    சரி…தொடருங்கள், சுவியர்…!

    • Like 1
  3. 15 minutes ago, கிருபன் said:

    அம்பிட்டியே சுமனரட்ன தேரரை நோக்கி துப்பாக்கிச் சூடு!

    மட்டக்களப்பு ஶ்ரீ சுமங்கலாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரட்ன தேரர் நோக்கி இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

    இனந்தெரியாத நபர்கள் அவரின் அறைக்குள் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    இதனால் அவருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
    -(3)

     

    http://www.samakalam.com/அம்பிட்டியே-சுமனரட்ன-தேர/

     

    நாதம், இவர் தானா அவர்?

  4. நம் மாவீரர்களின் உயிர்களின் மதிப்பு தென்னம் பிள்ளையா?

    பிரபா, முதலாவது படத்துக்கு மேல்வரும் தலைப்பைத் தெரிந்து எடுங்கள்…!

    தொடருங்கள்…!

    • Like 1
  5. யூரேக்கா...யூரேக்கா என்று நிர்வாணமாக வீதியில் ஓடிய ஆக்கிமிடிசு, தமிழராக இருந்திருந்தால் நிச்சயம் 134 பஸ்ஸில் ஏற்றி அனுப்பப் பட்டிருப்பார் என்பது மட்டும் உறுதி...!

    சிங்களவராக இருந்தால்...தொவில் சடங்கு நடத்தப்பட்டிருக்கும்!

    இது தான் நமது நாட்டின் நிலை....!

    நல்ல ஒரு சிந்தனையைத் தூண்டும் பதிவு, விசுகர்.....!

     

    • Like 1
    • Thanks 1
  6. நல்ல ஒரு எழுத்து நடை உங்களுக்குக் கை வந்துள்ளது...!

    ஒரு வேளை தமிழ்க்கடை வடையாக இருக்குமோ?

    அல்லது காகம் கொஞ்சம் இரக்கப் பட்ட சீவனாக இருக்கலாம்...!

    தொடர்ந்தும் எழுதுங்கள்....!

  7. அருமை, சுவியர்...!

    ஏதோ முக்கியமான விசயம் சொல்ல வாறியள் எண்டு மட்டும் விளங்குது..!😄

    அது என்ன எண்டு மட்டும் பிடிபடுகுது இல்லை...! தொடரட்டும் உங்கள் களப்பணி....!

    • Like 1
  8. அருமையான ஒரு பதிவு, தமிழ்சிறி...!

    சொந்தக் காரரிட்டை அபிப்பிராயம் கேட்டால், அது ஒரு பக்கச் சார்பானதாகவே இருப்பது வழமை..!

    ஒரு மூன்றாம் பேர் வழி சொல்லும்போது அது நடுனிலையானதாக இருக்கும்!

    மிகவும் ரசித்து வாசித்தேன்! தொடருங்கள்...!

     

    • Like 1
    • Thanks 1
  9. 1 hour ago, குமாரசாமி said:

     ஊரில்  முன்னெரெல்லாம் சிலர்   கீறல் காயங்கள் ஏற்பட்டால் எச்சிலை மருந்தாக தடவுவர்.

    நான் இப்பவும் தடவிறன்…!

    • Like 1
  10. 18 minutes ago, vasee said:

     

    தெரியவில்லை,

    ஆனால் அவுசில் இருக்கும் எம்மவர்களிடம் ஒரு விதமான மனநிலை உண்டு, எனது உறவினர் ஒருவர் நகரிற்கு வெளியே மருத்துவராக பணிபுரிகிறார், அவருக்கு அந்த இடம் பிடித்த்மையால குறிப்பிட்ட காலத்தின் பின்  விரும்பிய இடத்திற்கு செல்ல முடியுமாக இருந்த போதும் தொடர்ந்து அந்த இடத்திலேயே தங்கிவிட்டார்.

    அங்கு சென்ற இன்னொரு உறவினர் அவரது மனைவி மருத்துவராக மெல்பேர்னில் பணிபுரிகிறார், அவரும் ஒரு பட்டதாரி (MSC என நினைக்கிறேன்) சொன்னாராம்  தற்போது கண்ட கண்ட ஆள்கள் வந்ததால் நகரத்தில் உள்ள தங்களை போன்றோருக்கு (பாடித்தவர்களுக்கு) மரியாதை இல்லை, அதனால் அவரும் கிராமத்திற்கு செல்ல்ப்போவதாக கூறினாராம்.

    இப்படியானவர்களை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கும், தேவையற்ற கற்பனையில் மனதை குழப்பிக்கொண்டிருப்பார்கள்.

     

    இங்கிலாந்திலும் பல வருடங்கள் வசித்தவன் என்ற வகையில், இந்தக் குணம் பொதுவாக எம்மவர்களிடமும், இந்தியர்களிடமும் உள்லது. மருத்துவர்கள், பொறியியலார்களிடம் இந்தக் குணம் அதிகம் காணப்படும். பொதுவாகக் கோவில்களில் இவர்கள் முன்னால் நிற்பார்கள். எதோ தங்களால் தான் தமிழர்களுக்கு புலத்தில் ஒரு கௌரவம் உருவாக்கப் பட்டுள்ளதாகவும், இப்போது வருபவர்கள் அந்தக் கௌரவத்தைக் காப்பாற்றத் தவறுவதாகவும் கருதுபவர்கள்.இத்தகையவரில் சில நல்லவர்களும் உண்டு.ஆனாலும் பலர் தாழ்வு மனப்பான்மையும், தங்கள் எதிர்காலம் பற்றிய பயமும் கொண்டவர்கள்! இது எனது தனிப்பட்ட அவதானம் மட்டுமே!

  11. இந்தியர்கள் வீடு ஒன்றை வாங்கும் வரையும் இப்படி வசிப்பார்கள்…! எம்மவர்கள் மிகவும் குறைவு….!

  12. மறக்கப்பட்ட, மறைக்கப் பட்ட வரலாறுகள் தெளிவாக எழுதப் பட வேண்டும். ஆவணப் படுத்தப் பட வேண்டும். எழுதுங்கள்….!

    • Like 1
  13. 15 hours ago, குமாரசாமி said:

    இன்னுமொரு விசயத்த தவற விட்டுட்டியள் 🤣

    கதவடியில் சப்பாத்து, செருப்புக்கள்???

    • Haha 3
  14. 30 minutes ago, Kandiah57 said:

    இலங்கையில் டொலர் பாவனையில்  உண்டா?.   இல்லையே     ரூபாய் அல்லவா?. பவுண்டுகள் மாற்றும் போது அதிகமான ரூபாய்களை பெற முடியும்    வர வர    அதிகம் ரூபாய்களை பெறுவது கூடி செல்லும்  ஆகவே   லண்டன்காரர்  இலங்கை போவது கூடும்’ 😂

    கந்தையர் மாறி நடக்கும்..! பயணச் சீட்டுக்களின் விலை அதிகரிக்கும். இலங்கையில் பெறப்படும் ரூபாய்கள் குறையும். அதனால் இவர்கள் ஊர் போய்ப் படம் காட்டுவதும் குறையும். ஏனெனில் அவர்களின் சேமிப்புக் குறையும்…!

    • Like 2
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.