Jump to content

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13561
  • Joined

  • Days Won

    74

Posts posted by புங்கையூரன்

  1. மறக்கப்பட்ட, மறைக்கப் பட்ட வரலாறுகள் தெளிவாக எழுதப் பட வேண்டும். ஆவணப் படுத்தப் பட வேண்டும். எழுதுங்கள்….!

    • Like 1
  2. 15 hours ago, குமாரசாமி said:

    இன்னுமொரு விசயத்த தவற விட்டுட்டியள் 🤣

    கதவடியில் சப்பாத்து, செருப்புக்கள்???

    • Haha 3
  3. 30 minutes ago, Kandiah57 said:

    இலங்கையில் டொலர் பாவனையில்  உண்டா?.   இல்லையே     ரூபாய் அல்லவா?. பவுண்டுகள் மாற்றும் போது அதிகமான ரூபாய்களை பெற முடியும்    வர வர    அதிகம் ரூபாய்களை பெறுவது கூடி செல்லும்  ஆகவே   லண்டன்காரர்  இலங்கை போவது கூடும்’ 😂

    கந்தையர் மாறி நடக்கும்..! பயணச் சீட்டுக்களின் விலை அதிகரிக்கும். இலங்கையில் பெறப்படும் ரூபாய்கள் குறையும். அதனால் இவர்கள் ஊர் போய்ப் படம் காட்டுவதும் குறையும். ஏனெனில் அவர்களின் சேமிப்புக் குறையும்…!

    • Like 2
  4. 19 hours ago, தமிழ் சிறி said:

    நிலத்தை… நல்லாய் தோண்டி, ராமர் பாலத்தின் அத்திவாரம் பாதித்தால்…
    பக்கத்து நாட்டுக்காரனின்…. புதைபொருள் ஆராய்ச்சிக்காரன், சண்டைக்கு வருவானே…  🤣

    நயீனா தீவுக்கு வாற வழியில் கச்சதீவில் புத்தர் தேத்தண்ணி குடித்த மூக்கு பேணியொன்று துருப் பிடித்த நிலையில் அண்மையில் இராமேஸ்வர மீனவர்களால் கண்டெடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது…!

  5. 5 hours ago, குமாரசாமி said:

    நைஜீரியன்ஸ்  இண்டியன் பிலிம் பாப்பாங்களோ? 😁

    ஹேம மாலினி காலத்தில், நைஜீரியர்கள் இந்திப் படம் பார்க்க வரிசையில் முண்டியடிப்பார்கள். கலியாணம் கட்டிய நம்மவரையும் பார்க்கில் போய் பாடி ஆடும் படு சொல்வார்கள். இந்திய வாழ்க்கை, இந்திப் படம் மாதிரித் தான் மகிழ்ச்சிகளால் எப்போதும் நிறைந்தது என்று அவர்கள் நம்புவது தான் காரணம்.

  6. 1 hour ago, goshan_che said:

    அந்தம் கூட ஒரே மெட்டில் என்றால் ஆதியிலேயே கோளாறு இருந்திருக்கு😎.

    ஆனால் பள்ளி தொடங்கினது 1886 லாம். ஜனகன மண முதலில் சபை ஏறியது 1921லாம். 

    ஆதியில் பள்ளிக்கு அந்தம் இல்லாமல் இருந்து பின் இடையில் வந்திருக்குமோ?

     

    கோசான், உங்கள் கருத்துப்படி பார்த்தால், யாழ் இந்து அந்தத்தில் இருந்து தான், இந்திய தேசீய கீதம் வந்திருக்கும் போல…!😊

     

     

     

  7. 11 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

    இலங்கையில் தற்போது எல்லாப் பொருட்களுமே விலை அதிகம், அவை எல்லாவற்றையும் இறக்குமதி செய்ய முடியுமா? இல்லைத்தானே!

    உள்ளூர் மக்களின் தொழில்கள் குறைந்து வருமானம் குறையும் பொழுது, மக்களால் அதிக பொருட்களை வாங்க முடியாது.. ஏற்றுமதியும் இல்லை.. பிறகு எப்படி இறக்குமதிக்கான கொடுப்பனவுகளை சமாளிப்பது? அதிக வரிகளை விதித்தா? 

    அதைவிட உள்ளூர் மக்களின் உற்பத்திகளை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கலாம்.. 

    எதிர்காலத்தில் நாங்கள் இன்னொரு நாட்டில் எல்லாவற்றிற்கும் தங்கியிருக்கவேண்டியதையும் பொருட்படுத்தாமல், இலகுவான வழியில் பிரச்சனையை தீர்க்க நினைக்கிறார்கள். அவ்வளவுதான்.

    JR திறந்த பொருளாதார கொள்கையை அறிமுகப்படுத்தியிருந்தாலும் கூட நாடு சில உற்பத்திகளில் தன்னிறைவை கொண்டிருந்தது என நினைக்கிறேன். இந்த நிலைக்குப் போனதில்லை. 

    உனண்மை தான்...!

    அவுஸ்திரேலியா சீனாவிலிருந்து வரும் தோடம்பழ விலையுடன் போட்டி போட இயலாமல், இருந்த மரங்களையெல்லாம் வெட்டி விட்டார்கள்...!

    இனிச் சீனாக்காறன் விக்கிற விலைக்கு வாங்க வேண்டியுள்ளது.

    அதை விடவும் இந்தியாக்காரன் சிங்களத்துக்குப் பதினெட்டு ரூபாய் உள்ளூர் விலைக்கு முட்டை விற்க மாட்டான்!

    திரவ  நைதரசனின் விலை இந்திய உள்ளூர் விலையின் பல மடங்கு விலைக்க்குத்தான் இலங்கைக்கு விற்கப் பட்டது!

  8. 8 hours ago, குமாரசாமி said:

    Tripadvisor | Halbtägige private Tour zu Adiyogi Shiva und Dhyanalinga  Tempel zur Verfügung gestellt von TripGO India | Coimbatore, Indien

    யானைகள் உலாவரும்  இடத்தை அழித்து தான் ஈஷா யோகா மையம்  அமைத்தாக கூறுகின்றார்களே?
    அப்படி என்ன முக்கியமோ? இறை பக்தி என்பது ஒன்றை அழித்து இன்னொன்றை உருவாக்குவதல்ல....அந்த இயற்கையே மன்னிக்காது.

    இங்கு தான் யானைகளின் வலசைப் பாதையில் கொன்கிறீற் போட்டு அதன் மீது இரும்பாணிகளை நட்டு இருக்கிறார்கள். சிவன் இந்தப் பக்கம் எட்டியும் பார்க்க மாட்டான்!

    மனிதாபிமானம் மருந்துக்கும் இல்லாத இந்தியர்கள்...!

    • Like 1
  9. 23 minutes ago, suvy said:

    நான் முன்பு கராஜில் வேலை செய்யும்பொழுது அங்கே ஒரு பெரிய மாமரம் இருந்தது.....( யாழ் இந்து மைதானத்துக்கு எதிரில்)......ஒருநாள் நானும் நண்பனும் அதில் ஏறி நிறைய மாங்காய்களை பிடுங்கி பின் அவற்றை ஒரு ஏ. 40 காரின் டிக்கிக்குள் வைத்து விட்டோம்.....அடுத்த நாள் முதலாளி வந்து கீழே மாம்பிஞ்சுகள்  காய்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்து அப்படியே கார் டிக்கியையும் திறந்தார்....அங்கேயும் நிறைய காய்கள்.....எங்களைத் தவிர வேறு யாரும் உந்த வேலை செய்ய மாட்டினம் என்று அவருக்கு தெரியும்.....நாங்கள்தான் இரவு கராஜில் படுப்பது......உடனே எங்களை கூப்பிட்டு...... சீச்சீ ....காதில பிடிச்சு இழுத்து வந்து இண்டைக்கு இவ்வளவு மாங்காயையும் நீங்கள் ரெண்டுபேரும் சாப்பிட்டு விட்டுத்தான் இங்கால வரவேணும் என்று சொல்லி விட்டார் ........!

    இவர்கள் மூன்று பேரையும் பிடித்து அப்படிச்  சாப்பிட விட்டிருக்கலாம் .......!  😂

    சேனாதி மாஸ்றர் வீடோ அல்லது சிவனேசராசா மாஸ்ரர் வீடோ சுவியர்? அல்லது ரத்தின வாசாவோ?

  10. 34 minutes ago, Kadancha said:

    https://www.parliament.lk/files/pdf/constitution.pdf

    வாசித்தல் தெரிகிறது, பதவி விலகும் போது, சனாதிபதி, பிரதமர் இலங்கைத் தீவில் இருக்க வேண்டும் (இது சட்டத்தில் implied என்று சொல்லப்படும்).

    பதவி விலகும் போது இலங்கைத்  தீவில் இருப்பது, Speaker, Deputy Speaker and Deputy Chairman of Committees க்கும் இருக்கும் கடப்பாடு. வேறு முக்கிய பதவிக்கும் இருக்கிறதோ தெரியவில்லை.

    இது என்ன விளையாட்டா? ஓர் இறைமை உள்ள அரசின் தலைமை பாதுகாவலர் (சனாதிபதி), வேற்று இறைமை உள்ள அரசின் நிலப்பரப்பில் இருந்து பதவி விலகுவது.

    அரச இறமைக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும், அப்படி செய்ய முடியும்  என்றால்.

    எப்படி இருந்தாலும், சிங்கள சரத்துகக்களே இறுதியில் நடைமுறைப்படுத்தப்படும். 

    முன்பு இதை வாசித்த நினைவு இருக்கிறது.

    சிங்கள சரத்துக்கள்  இதில் இருந்து சிறிதளவேனும் மாரி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.

    நடைமுறை பிரச்னை, வேறு அரசின் இறைமையின் கீழ் (நிலப் பரப்பு) பதவி விலகுவது செய்யலாம் என்றால்,  சதிப் புரட்சி, ஆட்சி கவுப்புக்கு மிகுந்த சட்ட வசதியை உருவாக்கி விடும். 

    உம். இப்போஇதைய நிலையில், கோத்தாவை விரத முனைபவர்கள், cia போன்றவை மிரட்டி செய்யமுடியும் அல்லவா?  

    ஒரு நாட்டின் தூதுவராலயம் இன்னொரு நாட்டின் நிலப்பரப்பில் இருந்தாலும், அது அந்தத் தூதுவராலயத்தின் நாட்டின் நிலப்பரப்பாகவே கருதப்படும் என்று நினைக்கிறேன்.

  11. யாழ் இந்துக் காலங்களில்… இந்த மர நாய்களுடன் பரிச்சயம் ஏற்பட்டது! ஒரு ஆசிரியரின் பட்டப் பெயரும் மர நாய் என்று இருந்தது! 

    வகுப்பறைகளின் சீலிங்குகள் கிடுகினால் ஆணவ! மர நாய் இரவுகளில் மூத்திரம் பேய்ந்திருக்கும்! மணம் அந்த மாதிரி. சில தடவைகள் இவற்றைக் கண்டுமிருக்கிறேன்.

  12. ஏக்கத்தைப் பிரதி பலிக்கின்றது கவிதை…! விரலுக்கு அதிகமாக வீங்குகிறோம் என்று தெரிந்தே வீங்கியது சிங்களம்…! அனுதாபம் வரவில்லை! ஆத்திரம் தான் வருகின்றது..! மக்கள் தான் பாவம்..! புத்தன் ஏதாவது பார்த்துச் செய்தால் தான் சிங்களத்துக்கு மீட்சி…!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.