Jump to content

புங்கையூரன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13561
  • Joined

  • Days Won

    74

Posts posted by புங்கையூரன்

  1. எனக்கென்னவோ ‘அடானி’ வாசம் வருகின்றது…! இந்தியாவிலிருந்து ஒரு நல்லதும் உலகத்துக்குக் கிடைக்காது…!

  2. நன்றி பிரபா...! மூனி மூனி மிகவும் பிடித்த இடம்..! வியட்னாமியர்களும், சீனர்களும் ஒரு சீசனுக்கு சீனத் தொப்பிகளுடன் நின்று றால் பிடிப்பதைக் கண்டுள்ளேன்..! எவ்வளவு இனங்கள் இணக்கமாக வாழும் நாடு என்று அவுஸ்திரேலியா நினைத்துப் பெருமைப்படுவது உண்டு! இந்தத் தீவைப் பற்றி உங்கள் மூலம் தான் அறிந்தேன்! ஒரு முறை போகத்தான் என்னும் ஆவலை, உங்கள் எழுத்துக்களும் படங்களும் ஏற்படுத்தி விட்டன! எனக்கும் தனிமை பிடிக்கும்!

    • Thanks 1
  3. ‘Negativity’ இல்லாமல் ஒரு ஆய்வு போல எழுதியுள்ளீர்கள், கோஷான்..! 

    இலங்கை மீளக் கடன்களைச் செலுத்த ஆரம்பிக்கும் போது, நிலமை மீண்டும் மோசமடையலாம்..!

    மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி…!

    • Like 1
    • Thanks 1
  4. சலிப்பில்லாமல் வாசித்த கதைகளில் ஒன்று…..!

    ஊரில் ஒரு விதானையாக ஆகியிருக்கலாமோ என்ற ஏக்கம் மட்டும் என்னை விட்டு நீண்ட காலத்துக்கு அகலாது என்பது மட்டும் உண்மை…!

    வாழ்த்துக்கள், சுவியர்…!

     

     

    • Like 1
  5. 13 hours ago, விசுகு said:

    எமது சமூகத்தில் நான் இன்ன சாதி என்று சொல்லமுடியாத நிலை எல்லோருக்கும் இன்று இருக்கிறது என்றால் அது பலவீனமானது என்று தானே அர்த்தம். எனவே அதை அப்படியே விட்டு விடுவோம். பலப்படுத்த வேண்டாம். 

    விட்டு விடலாம் தான், விசுகர்..! ஆனால் மு. தளையசிங்கம் மாஸ்ரர் கிணத்தடியில் அடி வாங்கியதை நேரில் கண்டவன் என்ற முறையில், இப்படியானவைகளைக் கடந்து செல்ல மனம் விடுகுது இல்லை…!

    • Like 2
    • Sad 1
  6. இப்படியானவர்களின் நெற்றிகளில் எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கையாக சூடாக்கிய இரும்பினால் ஒரு விசேட குறி சுட்டு விடலாம்..! இது கட்டாயம் எதிர்பார்க்கும் பலனைக் கொடுக்கும்..!

  7. தம்பி பவனீசன், சாதீயம் என்பது கோழைகளினதும், துணிவில்லாத பலவீனமானவர்களினதும் கடைசி ஆயுதமாகும்...!

    நீங்கள் இதனைப் பகிர்ந்து கொண்டதே....உங்கள் தன்னம்பிக்கையைக் காட்டுகின்றது...!

    நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள்..!  நீங்கள் உங்கள் பயணத்தை நிறுத்தினால்...அதுவே சாதீயத்தின் வெற்ற்றியாகும்....!

    • Like 5
  8. 1 hour ago, குமாரசாமி said:

    கிட்டத்தட்ட ஜேர்மனிய செய்தி தளங்களை பார்க்கும் போது எவ்வளவு வேகமோ அதே வேகத்தில் யாழ்களமும் இயங்குவதை இன்று முதல் தடவையாக பார்க்கின்றேன். மகிழ்ச்சி.👍🏼

    மோகன் ஐயாவிற்கு மனமார்ந்த நன்றிகள். 🙏🏼
    தமிழால் இணைவோம்.❤️

    பூமிப்பந்தின் அடிப்பாகத்திலும் நல்ல வேகமாக இன்று யாழ் வேலை செய்கின்ரது…!

    நன்றி மோகன் அண்ணா….!

  9. 23 hours ago, இணையவன் said:

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கையூரன்.

    மிக்க நன்றி, இணையவன்...!

     

    21 hours ago, ஏராளன் said:

    பிறந்தநாள் வாழ்த்துகள் புங்கையூரன் அண்ணா, வாழ்க வளத்துடன்.

    வணக்கம், ஏராளன்..! நன்றி...!

    21 hours ago, தமிழ் சிறி said:

    animiertes-geburtstag-smilies-bild-0027.  animiertes-geburtstag-smilies-bild-0005.

    புங்கையூரானுக்கு உளம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். animiertes-geburtstag-smilies-bild-0033. 
    வாழ்க வளமுடன். animiertes-geburtstag-smilies-bild-0010.

    வாழ்த்துக்களுக்கு நன்றிகல், தமிழ்சிறி...!

    18 hours ago, alvayan said:

    பிறந்தநாள் வாழ்த்துகள் புங்கையூரன்....வாழ்க வளத்துடன்

    மிக்க நன்றி, அல்வாயன்...!

    17 hours ago, Kandiah57 said:

    புங்கையூரனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்  வளம் நலத்துடன் வாழ்க  என்றும் 🤝

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, கந்தையா....!

    17 hours ago, நிழலி said:

    புங்கை அண்ணாவுக்கு என் மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!

    வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி, நிழலி....!

    16 hours ago, நிலாமதி said:

    புங்கையூரனுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    வாழ்க வளத்துடன்.

    மிக்க நன்றி, நிலாக்கா....!

  10. இந்தக் கல்வி விடயத்தில் என்னிடமும் ஒரு கருத்து உண்டு. ஒருவரது தாய் மொழிக்கும், தர்க்க ரீதியான கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கலாம் என நினைக்கிறேன். இதுவே சீனர்களும், தமிழர்களும், ஜப்பானியர்களும் தர்க்க ரீதியான பாடங்களில் அதிகம் பிரகாசிப்பதற்கான காரணம் என நினைக்கிறேன். மூளை அமைப்பில் வித்தியாசங்கள் அதிகம் இல்லை. மற்றது ஒரு தேசத்தின் வளமும், மூளை வளர்வதற்கு உந்துதலளிக்கக் கூடும்…!

    • Like 3
    • Thanks 1
  11. 8 hours ago, நந்தன் said:

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்  புங்கை அண்ணா 

    மிக்க நன்றி, நந்தன்....!

    8 hours ago, suvy said:

    joyeux-anniversaire-bouquet-de-fleurs-de

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை ..........!   💐

    வாழ்த்துக்களுக்கும், பூங்கொத்துக்கும் மிக்க நன்றி, சுவியர்....!

    8 hours ago, பெருமாள் said:

    புங்கையூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

     

    8 hours ago, பெருமாள் said:

    புங்கையூரானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    மிக்க நன்றி, பெருமாள்....!

  12. 1 hour ago, யாயினி said:
     ·
    a birthday candle with the words happy birthday written on it and lit by a single candle
     
     
    புங்கையண்ணா.🖐️ என்ன உங்கள் பிறந்த நாளுக்கு ஒரு சனத்தையும் காணம்...😀இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.✍️
     
     
     
     

    நன்றி, யாயினி…!

    1 hour ago, கிருபன் said:

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் @புங்கையூரன் அண்ணா🎉🎂🎊

    மிக்க நன்றி….கிருபன்…!

    25 minutes ago, putthan said:

    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் புங்கையூரன் அண்ணா

    மிக்க நன்றி…புத்தன்…!

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.