• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Vaanampaadi

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    347
  • Joined

  • Last visited

Everything posted by Vaanampaadi

  1. உங்களின் பதில் சரியானது. பெயரில் சிறு திருத்தம் .... மோகன்லால் அல்ல மோகன்தாஸ் என்பதே சரி
  2. தந்தை செல்வா S.J.V.Selvanayakam போல் தெரிகிறது
  3. A man makes an opportunity An opportunity makes a man ஒரு மனிதன் தான் சந்தர்ப்பசூழ்நிலையை உருவாக்குகிறான்.. ஒரு சந்தர்ப்பசூழ்நிலைதான் ஒரு மனிதனை உருவாக்குகிறது..
  4. ஒரு பெண், தன் குழந்தையுடன் பஸ்சில் ஏறினாள். அந்த குழந்தையை பார்த்த பஸ் கண்டக்டர், "நான் பார்த்த குழந்தைகளிலேயே மிக அசிங்கமான குழந்தை இதுதான்" என்றார். இதனால் கொதித்துப்போன அந்தப் பெண், கோபத்துடன் போய் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டாள். அப்போது அவள் அருகில் வந்து அமர்ந்த ஒருவர், "ஏன் இவ்வளவு கோபமாக இருக் கிறீர்கள்" என்று அந்த பெண்ணிடம் கேட்டார். "இந்த பஸ் கண்டக்டர் என்னை அவமானமாக பேசி விட்டார். இருங்கள் அவருக்கு பாடம் கற்பித்து விட்டு வருகிறேன்" என்று கூறியபடி அந்தப்பெண் எழுந்தார். "அரசு ஊழியர் ஒருவர் உங்களை எப்படி கேவலமாக பேசலாம். போய் இரண்டில் ஒன்று பார்த்து வாருங்கள். அதற்கு முன் உங்கள் கையில் உள்ள அந்த குரங்கு குட்டியை இங்கே விட்டுச் செல்லுங்கள்" என்றார், அந்த வாலிபர்.
  5. நீண்ட நாள் பழகிய வயதான விதவையிடம் ஒரு முதியவர், "என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா?" என்று கேட்டார். உடனே, "சரி" என்றாள் அந்த விதவை. மறுநாள் தூங்கி எழுந்த அந்த முதியவருக்கு அந்தப் பெண்மணி என்ன பதில் சொன்னார் என்பது மறந்து போயிற்று. உடனே அந்த பெண்மணியை போனில் தொடர்பு கொண்டு, தாங்கள் நம் கல்யாண விஷயமாக என்ன பதில் சொன்னீர்கள் என்பது எனக்கு மறந்து போயிற்று என்றார். சம்மதம் என்று ஒருவரிடம் சொன்னேன். ஆனால் அது யாரென்றுதான் எனக்கு நினைவில்லை என்றாள் வயதான பெண்மணி.
  6. ரெயிலில் ஒரு பாகிஸ்தான்காரன், வங்காளதேச வாலிபன் ஒருவன் மற்றும் ஒரு இளம் பெண் அமர்ந்து பயணம் செய்தனர். அந்த ரெயில் சுரங்கப்பாதை வழியாக சென்றபோது `கும்' இருட்டு ஏற்பட்டது. அப்போது முத்தம் கொடுக்கும் சத்தமும், அதைத்தொடர்ந்து கன்னத்தில் அறையும் சத்தமும் கேட்டது. ரெயில், சுரங்கப்பாதையை விட்டு வெளியே வந்தபோது பாகிஸ்தான் காரன் கன்னத்தில் கை வைத்தபடி உட்கார்ந்து இருந்தான். மற்ற இரண்டு பேரும் எதுவுமே நடக்காதது போல இருந்தனர். அப்போது பாகிஸ்தான்காரன், "இந்த பெண்ணை வங்காளதேசக் காரன் முத்தமிட்டு இருக்கவேண்டும். அவள் அவனை அறைவதற்கு பதில் நம்மை அறைந்துவிட்டாள் போல இருக்கிறது" என்று நினைத்துக்கொண்டான். ஆனால் அந்த இளம் பெண், "பாகிஸ்தான்காரன் நம்மை முத்தமிடுவதற்கு பதில் வங்காளதேசத்துக்காரனை முத்தமிட்டு அறை வாங்கி இருக்கவேண்டும்" என்று நினைத்தாள். வங்காளதேசக்காரனோ, "ரெயில் மறுபடியும் ஒரு சுரங்கப்பாதை வழியாக போகும்போது முத்தம் கொடுப்பது போல சத்தத்தை எழுப்பி, பாகிஸ்தான்காரனை ஓங்கி அறைய வேண்டும்" என்று நினைத்துக்கொண்டான்.