Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

கோமகன்

புதிய உறுப்பினர்கள்
 • Posts

  7,395
 • Joined

 • Last visited

 • Days Won

  26

Everything posted by கோமகன்

 1. யாழில் ஒரு காதல் 15 பொதுவாகவே " காதல் " என்ற வார்த்தை பலவித அர்த்தங்களை கொண்டிருக்கும். அம்மா குழந்தையிடம் வைக்கும் அன்பும் காதல்தான். அப்பா மகனிடம் வைக்கும் அக்கறை என்பதும் காதல்தான்.ஐந்தறிவு உடைய விலங்குகளும் ஒருவர்மேல் ஒருவர் வைக்கும் அரவணைப்பும் காதல்தான் .ஆனால் பதின்ம வயதுகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படுகின்ற காம ஈர்ப்பை காதல் என்ற வகையினுள் அடக்குவதுதான் இன்றுவரை புரியாத புதிராக இருக்கின்றது . புகையிரதம் கொழும்பை நோக்கி விரைந்தது .சுன்னாகம் தூரத்தில் சிறு புள்ளியாக மறைந்து கொண்டு இருந்தது .சுரேசும் மதுரனும் ஆளுக்கொரு யன்னல் இடத்தை பிடித்துக்கொண்டு காற்று வாங்கினார்கள் .அவர்கள் எதிரே நண்பர்கள் பிடித்துக்கொடுத்த இருக்கைகள் வெறுமையாகவே இருந்தன . அவர்களது எண்ண ஓட்டங்கள் யார் கோண்டாவிலில் தங்களுடன் பயணிக்கப் போகின்றார்கள் என்பதிலேயே இருந்ததை அவர்களது முகங்கள் காட்டி கொடுத்தன . வாழைத் தோட்டங்கள் புகையிலை தோட்டங்கள் என்பவற்றை கோடு கிழித்து விரைந்த புகையிரதம் கோண்டாவிலில் நிற்பதற்காக அதன் வேகத்தை" கிறீச் " என்ற ஒலியுடன் குறைத்துக் கொண்டிருந்தது. மதுரனுக்கு கோண்டாவில் புகையிரத நிலையத்தில் ஓர் இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அங்கே குயின்சி இவர்களது புகையிரதப் பெட்டியில் ஏறிக்கொண்டிருப்பது மதுரனின் கண்களில் பட்டது . அவனது மனம் "உனக்கு மச்சம்டா " என்று உவகையில் குதியாட்டம் போட்டது . மதுரன் சுரேசிடம் இடம் மாறி இருக்கச் சொல்லிவிட்டு குயின்சியிடம் போய் அவளது பயணப்பொதிகளை வாங்கி கொண்டு மீண்டும் அவனது இருக்கை நோக்கி நகர்ந்தான் . குயின்சி இந்த முறை கறுத்த மினி ஜூப் அணிந்திருந்தாள் . மேலே வெள்ளை நிற தொளதொளத்த ரீ சேர்ட் அணிந்திருந்தாள். வெள்ளை நிறமான அவளுக்கு அவள் அணிந்திருந்த உடைகள் எடுப்பாகவும், அவளை கவர்ச்சியாகவும் காட்டிகொண்டிருந்தன. அவளுடன் கூட யாருமே வந்திருக்கவில்லை . மதுரன் குயின்சியை பின்பு சந்திக்காததால் அவளையிட்டு அவனால் அதிகம் அறியமுடியவில்லை . குயின்சியின் தம்பியின் நிலைமையும் அறிய ஆவல் கொண்டவனாய் தன் குரலை செருமியவாறு குயின்சியிடம் பேச்சை ஆரம்பித்தான். "அப்ப குயின்சி சொல்லுங்கோ இப்ப என்ன செய்யிறியள்? தம்பி என்ன செய்யிறார் ? இப்பவும் மித்திரனோடை தொடர்புகள் இருக்கோ ? என்று சரமாரியாக விழுந்த கேள்விகளை குயின்சியின் கலகல என்று பூ போல சிரித்த சிரிப்பு இடைவெட்டியது. "நான் நல்ல சந்தோசமாய் இருக்கிறன். கொழும்பிலை அந்த பாங்கிலை தான் வேலை. மித்திரனும் கொழும்புக்கு வந்து படிப்பிகிறார். அவரும் நானும் ஒண்டா தான் இருக்கிறம். இன்னம் கலியாணம் கட்டேலை. ஆறுதலாய் வீட்டை சொல்லுவம் எண்டு இருக்கிறம். தம்பி டேவிட் இயக்கத்துக்கு போய் ஒரு வருசம் கழிச்சு எங்களை பாக்க வந்தவன். இப்ப ஆள் நல்லாய் வளந்திட்டான். ஜீசஸ் இந்த வேலையாலை எனக்கு நல்ல ஒரு கதவை திறந்து விட்டிருக்கின்றார்." என்று மடை திறந்த வெள்ளம் போல பேசிய குயின்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் மதுரன். இவர்களது உரையாடலினால் சலிப்புற்ற சுரேஸ் நித்திரையாகி விட்டிருந்தான். அவர்களது கதை பல இடங்களையும் தொட்டுச் சென்றது. இடையில் வவுனியாவில் குயின்சிக்காக தேநீரும் வடையும், தனக்கு கோல்ட் லீப் சிகரட்டும் வாங்கிகொண்டான் மதுரன். இந்த நேரத்தில் நித்திரையில் இருந்த சுரேசை ஏனோ மதுரனுக்கு எழுப்ப மனமில்லாது இருந்தது. தனக்கும் குயின்சிக்கும் இடையிலான இன்பகரமான பேச்சை கலைத்து விடுமோ என்பதும் ஒரு காரணமாக இருந்தது. வவுனியாவில் இருந்து புகையிரதம் கொழும்பை நோக்கி நாலு கால் பாய்ச்சலில் விரைந்தது. இருவரும் தேநீரை பருகி முடித்தவுடன் சிகரட் பத்துவதற்காக வாயில் பக்கம் வந்து நின்றான் மதுரன். குயின்சியும் அவனுடன் வந்து நின்று கொண்டாள். வெக்கைக்கு வீசிய காற்று அவளின் தொளதொளத்த ரீ சேர்ட்டை உடலுடன் ஒட்டியபடி அவளின் முன்னழகை எடுப்பாகக் காட்டியது. அவளின் ரீ செர்ட்டிலிருந்து லேசான பெர்பியூம் அவனது நாசித்துவாரங்களை அடைத்தது. சிகரட் புகையும் குயின்சியினது அருகாமையும் மதுரனை கிறுங்கடித்தன. இந்த வேளையில் நிலாவினது நினைவுகள் மதுரனுக்கு வானத்தில் ஒளிரும் நிலாவாகவே தெரிந்ததில் வியப்பேதும் இல்லை. ஏனெனில் காமம் என்ற காதலின் நிலையே அப்படிதான். இருக்கிறதை விட்டுவிட்டு இல்லாதை எப்பொழுதும் தேடிகொண்டிருக்கும் .இதற்கு மதுரன் மட்டும் விதிவிலக்கா என்ன ?இருவரும் பல கதைகளை பேசிக்கொண்டிருக்கும் பொழுதே யாழ் தேவி கோட்டே புகையிரத நிலையத்தினுள் ஆடிப்பாடி நுழைந்து கொண்டிருந்தது. குயின்சி தனது வீட்டிற்கும், மதுரன் தனது உறவினர் வீட்டிற்கும் பிரிந்தார்கள். சுரேஸ் பொல்காவலையில் இறங்கிக்கொண்டான். பிரிட்டிஷ் தூதரகத்தில் விசா வழங்கும் அதிகாரி முன்பு மதுரன் பவ்வியமாக அமர்ந்திருந்தான். அவனது பணச் செழிப்பும், அவனது தமையனது தெளிவான ஸ்பொன்சரரும் அந்த அதிகாரிக்கு மதுரனுக்கு விசா குடுப்பதில் தடை ஒன்றையும் வைக்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே ஒரு மாத விசாவை அவனது கடவுசீட்டில் பதிந்து விட்டார் . அன்று மாலையே மதுரனது அண்ணையினதும், அண்ணியினதும் தொலைபேசி அழைப்பு மதுரனை கிடுக்கிப் பிடியினுள் கொண்டு வந்தது. இறுதியில் மதுரன் யாழ்ப்பாணம் திரும்பி போகாமலேயே லண்டன் செல்வது என்று அண்ணியிடம் இருந்து கண்டிப்பான உத்தரவு அவனுக்கு கிடைத்தது. மதுரனால் அண்ணியின் கண்டிப்பான உத்தரவை மீற முடியவில்லை. இறுதியில் ஆடு திருடிய கள்ளன் போல மறு நாள் மாலை மதுரனை சுமந்து கொண்டு பிரிட்டிஷ் எயார் வேஸ் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி மேலே எழுந்தது . அதே வேளையில் தமிழகத்தின் தென்கோடி வேதாரணியத்தில் இருந்து ஆனந்தி தலமையில் நான்கு படகுகள் மாலைதீவை நோக்கிப் புறப்பட்டன. தொடரும்
 2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன் இன்றுபோல் என்றும் வாழ்க !!!!
 3. இன்று கருத்துக்களத்தில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கும் தமிழ் சூரியனுக்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் :) .
 4. சுதரிசனத்தான்றுணைத்தாள்சூழ்சிலம்புள்ளீடாய் வதரிவரிதரியாமாம். இதனுள் வதரியென்பது திருப்பதி மேலும் , செய்யுள்களில் உள்ள கடகபெந்தம் , அக்கரச்சுதகத்தி லோர்பேதம் ,சதுரங்கபெந்தம் , மாத்திரைப்பெருக்கம் , ஒற்றுப்பெயர்த்தல் , மாத்திரைச்சுருக்கம், போன்றவற்ரையும் பிறையானார் விபரித்தால் நன்று .
 5. வணக்கம் !! என்னால் நான் கள உறவுகளுக்கு கொடுத்த பச்சையை மீளப் பெறமுடியாதுள்ளது . அதற்கான பெட்டியையும் விருப்பு வாக்கு இடத்திற்கு பக்கத்தில் காணவில்லை . எனது உலவு தளம் நெருப்பு நரி . கருத்துக்கள தீம் : ஐபி போர்ட் ( IP BORD ) . இந்தப் பிரச்சனைக்கு யாரும் வழிசொல்ல முடியுமா ?? இந்த பிரச்சனையால் எனக்கு சில மனச்சங்கடங்கள் நான் மேற்கொள்ளும் போட்டி நிகழ்வுகளில் வருகின்றன . நன்றி .
 6. கள உறவு விசரனுடன் முகனூலில் உரையாட சந்தர்பம் கிடைத்தது .தான் கவிஞருடன் உரையாடியதாகக் குறிப்பிட்டு பின்வரும் செய்தியை என்னுடன் பகிர்ந்தார் . " ஜெயபாலன் அண்ணணுடன் பேசக்கிடைத்தது. தற்போது போலீஸ் நிலையத்தில் உள்ளதாகவும் மிக விரைவில் வீடுசெல்ல அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்."
 7. பவழ மல்லிகைப் பூவும் இரவில் பூத்து காலையில் உதிர்வதுதானே ??? கூர்ப்பியல்
 8. கவிஞரின் கைது எனக்கு மிகவும் கவலையைத் தருகின்றது .அவர் நலமாக மீண்டும் வரவேண்டும் என்பதே எனது பிரார்தனை .
 9. இருள்நாறி என வழங்கப்பட்ட பூவைக் குறிஞ்சிப்பாட்டு நள்ளிருள்நாறி என விளக்குகிறது. மாலையில் மலரும் பூக்கள் இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும். அவற்றுள் பெரிதும் மணந்து நாறுவது மரமல்லிகை. இக்காலத்தில் மரமல்லிகை என வழங்கப்படும் பூவைச் சங்க கால மக்கள் “நள்ளிருள்-நாறி” எனக் கொள்வது பொருத்தமானது. ”பீநாறி” என்னும் பெயர் கொண்ட மரம் ஒன்றும் உள்ளது. http://www.yarl.com/forum3/index.php?showtopic=97649&page=2
 10. நீ வெற்றி பெற்றால், நீ பிறருக்கு நின்றுகொண்டு விளக்கத் தேவையில்லை. நீ தோற்றால் நீ அங்கு நின்று உன் தோல்விற்கான காரணங்களை விளக்கிக் கொண்டிருக்கக் கூடாது.

 11. ஏறத்தாள 47 வருடங்களுக்கு முன்பு ஓர் அதிகாலைப் பொழுதில் எனது முதல்மொழி என்னை இந்தப் பூமிக்கு அறிமுகம் செய்துவைத்தாள் . இறைவன் வகுத்த சிருஷ்ட்டியில் எல்லாவற்றுக்குமே ஒருகாரணம் உண்டு என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருந்தாலும் , இன்று வரை எனது தேடல்கள் அதை நோக்கியே எனது ஆழ் மனதில் இருந்ததுண்டு . நான் கடந்து வந்த பாதைகள் பல ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டு இருந்த போதிலும் , எனது பிறப்பின் காரணதுக்கான தேடல்கள் இன்றுவரை தொடர்கின்றன . எனது பிறப்பை நினைவில் வைத்து வாழ்த்திய எனது அனைத்துக் கள உறவுகளுக்கும் , எனது தலை " நன்றி " என்று சொல்லிச் சாய்கின்றது . நண்பர் கிருபன்ஜிக்கும் எனது மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்துக்கள் இன்று போல் என்றும் வாழ்க :) .
 12. விசுகு,, கிருபன், குமாரசாமியண்ணை, மற்றும் ரதி, வாழ்க, வளர்க என வாழ்த்துகின்றேன்!
 13. வணக்கம் கள உறவுகளே !!!! கடந்த சில நாட்களாக எனது கவனம் வேறு பதிவுகளில் சென்றதால் உடனடியாக இதற்குப் பதில் தரமுடியாமைக்கு வருந்துகின்றேன் . நீங்கள் எல்லோரும் நான் 600 விருப்பு வாக்குகளை எடுத்தமைக்கு மனதார என்னைப் பாராட்டியுள்ளீர்கள் . நான் இந்த வேளையில் எனது மனதில் தோன்றிய சில எண்ணவலைகளை உங்களிடம் பகிரலாம் என நினைக்கின்றேன் . இந்த வாழ்த்துக்களைப்பற்றி ஏற்கனவே எனது நிலைப்பாடுகளை நாற்சந்திப்பகுதியில் உங்களுடன் பகிர்ந்துள்ளேன் . கோமகன் என்றால் தலைக்கனம் படித்தவர் . நாகரீகம் தெரியாதவர் என்ற எண்ணப்பாடு கருத்துகளத்தில் ஒரு சிலரிடையே இருப்பதை நான் அவதானித்துள்ளேன் . நான் நல்ல கல்வியறிவையும் அதனால் வந்த நாகரீக சொல்லாட்சியையும் கைவரப்பெற்றவன் . கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது அருமை நண்பன் நல்ல நோக்கத்திற்காக ஆரம்பித்த வாழ்த்துப் பகுதியில் , வாழ்த்து என்ற போர்வையில் நான் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டேன் . அந்த நிலையானது மறைமுகமாக எனது ஆக்குதிறனை உசுப்பிக் கொச்சைப்படுத்தப்பட்டது . அப்பொழுது நான் நன்றி சொல்லவேண்டும் என்ற வேண்டுகோள்கள் பலரால் வைக்கப்பட்டன . ஒருவரை நிர்வாணப்படுத்தி அசிங்கப்படுத்திவிட்டு அவர் வந்து மண்டியிட்டு நன்றி சொல்லவேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையினை அருவருப்பின் உச்சக்கட்டமாகப் பார்த்தேன் . இங்கு பொதுவாக விருப்பு வாக்குகள் பல காரணங்களுக்காக உங்களால் அளிக்கப்படுகின்றன . ஒரு சிரிப்பிற்கே பல விருப்பு வாக்குகள் போடப்பட்ட சம்பவங்களும் என் மனதில் வந்து போகின்றன . நான் அடிப்படையில் ஒரு விமர்சகனோ கருத்தாளனோ கிடையாது . எனது சுயபடைப்புகளை நீங்கள் எல்லோருமே வாசித்து , அதனால் கவரப்பட்டே மனமுவந்து எனக்கு இவ்வளவு விருப்புவாக்குகளை தந்திருக்கின்றீர்கள் . இப்பொழுது எனது பொறுப்புகள் மேலும் மேலும் அதிகரிக்கின்றன . உண்மையில் உங்கள் பாராட்டுகள் யாவுமே இந்தக் கருத்துக்களத்திலே கள உறவாக உள்ள திருமதி கோமகனையே போய் சேரவேண்டும் . ஏனெனில் பல சந்தர்பங்களில் நான் மனம் வெறுத்துப்போய் கருத்துகளத்தை விட்டு மறைய முற்பட்டபொழுதெல்லாம் விடாப்பிடியாக நின்று தனது இதமான பேச்சுகளால் எனது ஆக்கு சக்கதியை அதிகரிக்கச் செய்தவர். இறுதியாக எனக்குப் பாராட்டுச் சொல்லிய அனைத்து கள உறவுகளுக்கும் நன்றி என்ற வார்த்தையின் அதியுச்ச வலுவுடைய வேறு சொல்லை அகராதியில் தேடியவாறு உங்கள் முன் எனது தலை சாய்கின்றது . அதே வேளையில் என்னுடன் சேர்ந்து பயணிக்கும் தமிழ் சிறியருக்கும் எனது மனங்கனிந்த வாழ்த்துகளை சொல்லிக் கொள்கின்றேன் . நன்றி வணக்கம் . நேசமுடன் கோமகன்
 14. நுணாவுக்கு, எனதினிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
 15. தொலையாத உரு மாற்றத்திற்கில்லை ஓய்வு. அவ்வப்போது அடுப்புத்தணலாக மூண்டெழுகிறது வயிறு. ஓசைகள் தெறித்ததிரும் காதுச்சவ்வுகள். எவரெவவோ என் கனவுகளைப் பயங்கரங்களாக்கி மறைகின்றனர். நித்திரை தரும் இரவுப் பூதம். அதை நினைப்பதிலோ நடுக்கம் எழுகிறது. தலையைப் பிடித்தாட்டும் கைகள் ஆயிரம் அருகில் வருகின்றன. நாடுமில்லை இருப்பதற்கொரு வீடுமில்லை இது என் பெயருமில்லை அடையாளங்களற்ற நான் அகதியுமில்லையாம். உயரக்கட்டடத்தின் உச்சியிலிருந்து படிகளின்றி இறங்க யாருமற்ற காட்டுக்குள் என்புகளைப் பாம்புகள் நொருக்குகின்றன. முன் குவிந்த ஆடைகளிலிருந்து எதுவொன்றும் அணிய முடியவில்லை. கடிகார முட்களின் வேகம் குரூரத்தைக் குத்துகிறது. அந்தரித்த நித்திரையில் அடிக்கடி ஒரு பொலிஸ் வருகிறான். அதுவல்லாப் போதில் அந்நியம் சுற்றிக் கிடக்கிறது. ‘எதுவும் எதுவும் எனதல்ல. அதுவும் இதுவும் எனதல்ல. இதுவும் அதுவும் எனதல்ல’ நீ அந்நியமானவள் என்கிறது இம்மொழி. தோல்நிறம் நீ எவளோவெனச் சொல்கிறது . இவை உனக்கல்ல என்பதாக அலுவலகங்கள். மிரண்ட கண்களின் குற்றத்தால் அடையாளஅட்டை கேட்கப்படுகிறது. தொலையட்டுமே என்று எறிபட்ட ஏதோ ஒரு உயிரினமாக வீதிகளின் இருள் மறைவில் இன்னும் துலையாது அலைகிறது இவளுரு. தர்மினி http://thoomai.wordpress.com/2013/01/04/%e0%ae%a4%e0%af%86%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b0%e0%af%81/
 16. நீங்களாவது சொல்லுங்கோ பாட்டியிலை பிழையோ எலியிலை பிழையோ ??? வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் சாந்தி :) .
 17. வரவிற்கும் கருத்திற்கும் மிக்கநன்றி வல்வையூரான் .
 18. அடபோங்கோ அர்ஜுன் . எலி எங்கை நேர்வழியாலை போய் சாப்பிட்டது :lol: ???. ஆச்சிதான் பாவம் இருந்த நெல்லையும் குடுத்துப்போட்டு நிக்கிறா .
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.