Jump to content

கோமகன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    7395
  • Joined

  • Last visited

  • Days Won

    26

Posts posted by கோமகன்

  1. இன்று கருத்துக்களத்தில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கும் தமிழ் சூரியனுக்கு எனது மனங்கனிந்த வாழ்த்துக்கள் :) :) .

    • Like 1
  2.  

    முயற்சிக்குப் பாராட்டுக்கள் தமிழினி
     
    சரியான பதில் 
     
    வாழ்க வளமுடன்

    சோழர் காலத்தில் வெற்றிலை பயிரிட்டோர் செலுத்திய வரியின் பெயர் என்ன?

     

     

    ஊடுபோக்கு வரி .

     

  3. வணக்கம் !! என்னால் நான் கள உறவுகளுக்கு கொடுத்த பச்சையை மீளப் பெறமுடியாதுள்ளது . அதற்கான பெட்டியையும் விருப்பு வாக்கு இடத்திற்கு பக்கத்தில் காணவில்லை . எனது உலவு தளம் நெருப்பு நரி . கருத்துக்கள தீம் : ஐபி போர்ட் ( IP BORD ) . இந்தப் பிரச்சனைக்கு யாரும் வழிசொல்ல முடியுமா ?? இந்த பிரச்சனையால் எனக்கு சில மனச்சங்கடங்கள் நான் மேற்கொள்ளும் போட்டி நிகழ்வுகளில் வருகின்றன . நன்றி .

  4.  

    சரியான பதில் தந்த
     
    நுணாவிலானுக்கும் புங்கையூரானுக்கும்
     
    சிறப்பான பாராட்டுக்கள்
     
    வாழ்க வளமுடன்

    தமிழ் மூவாயிரம் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் நூல் எது?

     

     

    திருமந்திரம்

     

  5.  

    மிகவும் சரியான பதில்
     
    நுணாவிலானுக்குச் சிறப்பான பாராட்டுக்கள் 
     
    வாழ்க வளமுடன்

    அமெரிக்காவில் இரு வேறு காலங்களில் இரு தடவை ஜனாதிபதியாக இருந்தவர் யார்?

     

     

    Franklin De Roosevelt

     

  6. கள உறவு விசரனுடன் முகனூலில் உரையாட சந்தர்பம் கிடைத்தது .தான் கவிஞருடன் உரையாடியதாகக் குறிப்பிட்டு பின்வரும் செய்தியை என்னுடன் பகிர்ந்தார் . " ஜெயபாலன் அண்ணணுடன் பேசக்கிடைத்தது. தற்போது போலீஸ் நிலையத்தில் உள்ளதாகவும் மிக விரைவில் வீடுசெல்ல அனுமதிக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்."

  7. நடுச்சாமத்தில் மலரும் பூ என்ன பூ?

     

    சாமந்திப்பூ

     

    பவழ மல்லிகைப் பூவும் இரவில் பூத்து காலையில் உதிர்வதுதானே ???

     

    இயற்கையின் தோற்றம், காலம் ஆகியவற்றைப் படிக்கும் படிப்பின் அறிவியல் பெயர் என்ன?

     

    கூர்ப்பியல்

     

  8. வழமையாகக் குறிப்பிடப்படும் பெயர் என்ன என்பதைத் தயவுசெய்து தர முடியுமா?

    வாழ்க வளமுடன்

     

    83060916.jpg

     

    இருள்நாறி என வழங்கப்பட்ட பூவைக் குறிஞ்சிப்பாட்டு நள்ளிருள்நாறி என விளக்குகிறது. மாலையில் மலரும் பூக்கள் இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும். அவற்றுள் பெரிதும் மணந்து நாறுவது மரமல்லிகை. இக்காலத்தில் மரமல்லிகை என வழங்கப்படும் பூவைச் சங்க கால மக்கள் “நள்ளிருள்-நாறி” எனக் கொள்வது பொருத்தமானது. ”பீநாறி” என்னும் பெயர் கொண்ட மரம் ஒன்றும் உள்ளது.

    http://www.yarl.com/forum3/index.php?showtopic=97649&page=2

  9. **********


    போர்த்துக்கல் மதகுருவான பிரான்ஸிஸ் சவேரியாரையும் அவரால் மதம் மாற்றப்பட்ட 600 பேரையும் சிரச்சேதம் செய்த தமிழ் மன்னன் யார்?

     

    சங்கிலியன் .
     

  10. ஏறத்தாள 47 வருடங்களுக்கு முன்பு ஓர் அதிகாலைப் பொழுதில் எனது முதல்மொழி என்னை இந்தப் பூமிக்கு அறிமுகம் செய்துவைத்தாள் . இறைவன் வகுத்த சிருஷ்ட்டியில் எல்லாவற்றுக்குமே ஒருகாரணம் உண்டு என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருந்தாலும் , இன்று வரை எனது தேடல்கள் அதை நோக்கியே எனது ஆழ் மனதில் இருந்ததுண்டு . நான் கடந்து வந்த பாதைகள் பல ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டு இருந்த போதிலும் , எனது பிறப்பின் காரணதுக்கான தேடல்கள் இன்றுவரை தொடர்கின்றன . எனது பிறப்பை நினைவில் வைத்து வாழ்த்திய  எனது அனைத்துக் கள உறவுகளுக்கும் , எனது தலை " நன்றி " என்று சொல்லிச் சாய்கின்றது .

     

    நண்பர் கிருபன்ஜிக்கும் எனது மனங்கனிந்த பிறந்தநாள் வாழ்துக்கள் இன்று போல் என்றும் வாழ்க :) :) .

  11. கதையில் மயங்கிவிட்டேன் . கதை சொன்ன செய்தியில் பல மயக்கங்கள் உண்டு .  பலர் மறந்த கிராமிய சொல்லாடல்களை நினைவுக்கு கொண்டு வந்திருக்கின்றீர்கள் . வாழ்த்துக்கள் படைப்பிற்கு புங்ஸ் .

  12. இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி அலைவது தான் மனிதகுணம் . அதில் சுடலைஞானமும் ஒன்று . கடுகில் துவாரம் போட்ட நீதிமதிக்கு எனது மனங்கனிந்த பாராட்டுக்கள்  :) :) . தொடர்ந்து எழுதுங்கள் .

  13. வணக்கம் கள உறவுகளே !!!!

     

    கடந்த சில நாட்களாக எனது கவனம் வேறு பதிவுகளில் சென்றதால் உடனடியாக இதற்குப் பதில் தரமுடியாமைக்கு வருந்துகின்றேன் . நீங்கள் எல்லோரும் நான் 600 விருப்பு வாக்குகளை எடுத்தமைக்கு மனதார என்னைப் பாராட்டியுள்ளீர்கள் . நான் இந்த வேளையில் எனது மனதில் தோன்றிய சில எண்ணவலைகளை உங்களிடம் பகிரலாம் என நினைக்கின்றேன் .

     

    இந்த வாழ்த்துக்களைப்பற்றி ஏற்கனவே எனது நிலைப்பாடுகளை நாற்சந்திப்பகுதியில் உங்களுடன் பகிர்ந்துள்ளேன் .  கோமகன் என்றால் தலைக்கனம் படித்தவர் . நாகரீகம் தெரியாதவர் என்ற எண்ணப்பாடு கருத்துகளத்தில் ஒரு சிலரிடையே இருப்பதை நான் அவதானித்துள்ளேன் . நான் நல்ல கல்வியறிவையும் அதனால் வந்த நாகரீக சொல்லாட்சியையும் கைவரப்பெற்றவன் . கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனது அருமை நண்பன் நல்ல நோக்கத்திற்காக ஆரம்பித்த வாழ்த்துப் பகுதியில் , வாழ்த்து என்ற போர்வையில் நான் நிர்வாணப்படுத்தப்பட்டு  அவமதிக்கப்பட்டேன் . அந்த நிலையானது மறைமுகமாக எனது ஆக்குதிறனை உசுப்பிக் கொச்சைப்படுத்தப்பட்டது . அப்பொழுது நான் நன்றி சொல்லவேண்டும் என்ற வேண்டுகோள்கள் பலரால் வைக்கப்பட்டன . ஒருவரை நிர்வாணப்படுத்தி அசிங்கப்படுத்திவிட்டு அவர் வந்து மண்டியிட்டு நன்றி சொல்லவேண்டும் என்று வைக்கப்பட்ட கோரிக்கையினை அருவருப்பின் உச்சக்கட்டமாகப் பார்த்தேன் .

     

    இங்கு பொதுவாக விருப்பு வாக்குகள் பல காரணங்களுக்காக உங்களால் அளிக்கப்படுகின்றன . ஒரு சிரிப்பிற்கே பல விருப்பு வாக்குகள் போடப்பட்ட சம்பவங்களும் என் மனதில் வந்து போகின்றன . நான் அடிப்படையில் ஒரு விமர்சகனோ கருத்தாளனோ கிடையாது . எனது சுயபடைப்புகளை நீங்கள் எல்லோருமே வாசித்து , அதனால் கவரப்பட்டே மனமுவந்து எனக்கு இவ்வளவு விருப்புவாக்குகளை தந்திருக்கின்றீர்கள் . இப்பொழுது எனது பொறுப்புகள் மேலும் மேலும் அதிகரிக்கின்றன . உண்மையில் உங்கள் பாராட்டுகள் யாவுமே இந்தக் கருத்துக்களத்திலே கள உறவாக உள்ள திருமதி கோமகனையே போய் சேரவேண்டும் . ஏனெனில் பல சந்தர்பங்களில் நான் மனம் வெறுத்துப்போய் கருத்துகளத்தை விட்டு மறைய முற்பட்டபொழுதெல்லாம் விடாப்பிடியாக நின்று தனது இதமான பேச்சுகளால் எனது ஆக்கு சக்கதியை அதிகரிக்கச் செய்தவர்.  இறுதியாக எனக்குப் பாராட்டுச் சொல்லிய அனைத்து கள உறவுகளுக்கும் நன்றி என்ற வார்த்தையின் அதியுச்ச வலுவுடைய வேறு சொல்லை அகராதியில் தேடியவாறு உங்கள் முன் எனது தலை சாய்கின்றது . அதே வேளையில் என்னுடன் சேர்ந்து பயணிக்கும் தமிழ் சிறியருக்கும் எனது மனங்கனிந்த வாழ்த்துகளை சொல்லிக் கொள்கின்றேன்  :)  :)  . நன்றி வணக்கம் .

     

    நேசமுடன் கோமகன்

  14. இந்த மலர்ந்தும் மலராத மலரில் தங்களது நேரத்தையும் கருத்துக்களையும் பதிந்த கள உறுவுகளான அலைமகள் , ரதி அக்கா , தப்பிலி neethimathi , வந்தியதேவன் , மைத்திரேயி , விசுகு , nunavilan , நேற்கொழு தாசன் , மெசொபொத்தேமியா சுமேரியர் ஆகியோருக்கு எனது தலைசாய்கின்றது  . நேரப்பற்றாக்குறை காரணமாக தனித்தனியாக ஒவ்வொருவருடனும் கருத்தாட முடியாமைக்கு வருந்துகின்றேன் .

  15. கதையும் பாத்திரப்படைப்பும் எழுத்து நடையும் படங்களும் மிகவும் நன்றாக உள்ளன. பாத்திரங்களின் மனஉணர்வுகளை மிகவும் யதார்த்தமாக எடுத்து வந்துள்ளீர்கள். பாராட்டுக்கள் கோமகன்.

     

    உங்கள் வரவிற்கும் கருத்துக்கும்  மிக்க நன்றிகள் காவலூர் கண்மணி அக்கா .

  16. பல இல்லங்களில் நடந்த உண்மைக்கதை இது ....எழுத்துருவில் வடிவமைத்த கோமகனுக்கு என் வாழ்த்துக்கள்.

     

    கதை என்பது வானத்தில் இருந்து குதிப்பவை அல்ல . எம்மைச்சுற்றி அன்றாடம் நடக்கின்ற சம்பவங்களே கதைகளாகின்றன .  உங்கள் நேரத்திற்கும் கருத்துகளிற்கும் மிக்க நன்றிகள் குமாரசாமி அண்ணை .

     

  17. பகிர்வுக்கு நன்றி....மனசுக்கு கொஞ்சம் கவலையைத் தந்தாலும் இப்படியான பிள்ளை தான் பிறக்கப் போகிறது என்று தெரிந்து கொண்டால் அதற்கு உடனடியாகவே அடுத்த கட்ட நடிவடிக்கை எடுப்பதே சிறந்தது...புரிந்துணர்வோடு செயல் பட்ட தந்தையாருக்கு நன்றிகள்...பிள்ளை இல்லையே என்ற ஒரு கவலை தான் அவர்களை உறுத்தும்...அல்லது வைத்தியரின் அறிவுரையினை பின்பற்றி ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக்கொள்ளும் முயற்சியை செய்யலாம்...

     

    உடல்,உள ஆரோக்கியம் இல்லாத ஒரு பிள்ளை பெற்று விட்டு தாங்களும் கஸ்ரப்பட்டு பின்னர் பிள்ளையையும் உடலளவில்,மனதளவில் கஸ்ரப்பட வைக்காமல் இருப்பது சிறந்த வழி.இதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்து கொள்ள வேண்டும்...ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் இப்படியான குறை பாடுகளுடன் பிறப்பவர்கள் அனுபவிக்கும் கஸ்ர,நஸ்ரங்கள் ஏராளம் என்று சொல்லலாம்...

    கூடப்பிறந்தவர்களால்,உறவுகளால் ஊதாசீனப்படுத்தபட்டு வளரும் பிள்ளைகளாகவே இருப்பார்கள்..தங்கள் முயற்சியில் முன்னேறினாலும் அதில் கூட குழப்பத்தை விழைவிப்பார்கள்..ஆகவே இனிவரும் காலத்திலாவது பெற்றோர் (espicially disablity child) விடையத்தில் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொள்ளவேணும்.

     

    உங்கள் கருத்துக்களில் ஒருசிலதுடனே என்னால் உடன்படமுடிகின்றது . இந்தக்கதை எழுதுவதற்கு எனக்கு இரண்டு சம்பவங்கள் உந்து சக்தியாக இருந்தன . ஒன்று தற்செயலாகப் பார்க நேரிட்ட " அஞ்சலி " படம் . இரண்டவாது எனது உயிர் நண்பனுக்கு  திருமணமாகி இரண்டுவருடத்தில்  இது நடந்தது . அவனது மனைவி  நான்பார்க்க ஊரில் வளர்ந்தவள் . இருவருக்கும் பிறென்ஜ் சரளமாக கதைக்கத் தெரியாது . நானே அவளிற்கு மொழிபெயர்புகளுக்கு செல்லவேண்டியதாக இருந்தது  . ஒருகட்டத்தில் டொக்ரர் இதைச் சொன்னபொழுது அவளை என்னால் கட்டுபடுத்த முடியாமல் போய்விட்டது . பின்பு எனது அறிவுரைகளால் அவள் அரைமனதுடன் சம்மதித்தாள் . ஆனால் அந்த சம்பவம் என்னை உறுத்தியபடியே இருந்தது . ஏனெனில் அஞ்சலியில் அந்தக்குழந்தையை அதன் தாயால் வசதிகள் குறைந்த நாட்டில் பார்க்க முடிகின்றது என்றால் ஏன் வசதிவாய்ப்புகள் உள்ள நாட்டில் இப்படியான உயிர்களை காப்பாற்ற தயங்குகின்றோம் ??? வேலைவாய்பிலும் கல்வியிலும் , மற்றும் எல்லாவிடயத்திலும் சரிசமனாக நடத்தும் நாடுகளில் இருந்துகொண்டு எமதுவசதிக்காக இப்படியான கருணைக்கொலையைச் செய்யலாமா ???? முடிவுகளை உங்களைப்போன்ற வாசகர்களதான் சொல்லவேண்டும் . நன்றி .

     

  18. மெருகூட்ட பட்ட எழுத்து நடை ... கதை க்கு பாராட்டுக்கள் ஆ னால் கதை யின் பொருள் எனக்கு சோகத்தை தந்து விட்டது . மீண்டும் அவர்களுக்கு வாரிசு கிடைக்க என் வேண்டுதல் கள்

     

    எல்லோர்கும் விரும்பியது கிடைத்து விட்டால் வாழ்கையில் சுவாரசியம் இல்லாது போய்விடுமே ???  சோகமும் இருந்தால் தானே அந்த வாழ்கை பல தெளிவுகளைப் பெற முடியும் . உங்கள் ஊக்குமும் பாராட்டுதல்களுமே என்னை வழிநடத்தும் . வரவிற்கும் கருத்திற்கும் மிக்கநன்றிகள் நிலாமதியக்கா .

     

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.