Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

KULAKADDAN

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  1,643
 • Joined

 • Last visited

 • Days Won

  3

KULAKADDAN last won the day on July 25 2013

KULAKADDAN had the most liked content!

Recent Profile Visitors

3,591 profile views

KULAKADDAN's Achievements

Community Regular

Community Regular (8/14)

 • Week One Done
 • One Month Later
 • One Year In
 • Posting Machine Rare
 • First Post

Recent Badges

74

Reputation

 1. அனைவருடனும் இனிமையகநட்பாக பழகும் சோழியன் அண்ணாவின் இழப்பு கவலையை தருகிறது. அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்
 2. விசுகு அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்.
 3. இன்றுடன், இந்த வாரத்தில் இரண்டு நாட்கள்? யாழ் களத்தினை பார்க்கமுடியாது/ திறக்க முடியாது போய் இருக்கிறது. தமிழ் சிறி சொல்வதை பார்த்தால் இது எனக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சனை போல் தெரியவில்லை. ஓரிரு நாட்களுக்கு முன்னர் பார்க்கமுடியாது போய் பின்னர் யாழுக்கு வந்த பொது அந்த தடங்கல் பற்றி ஏதும் அறிவிப்பு இருக்கும் என பார்த்தேன் எதையும் காணவில்லை. அதானல் எனக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சனை என நினைத்துவிட்டு எதுவும் எழுதவில்லை.
 4. Thank you for your msg. I am back in Canada now

 5. இல்லை தமிழ் சிறி, அவர் பனை ஓலை பிழாவை குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன். கள்ளுத்தவறணைக்களில் இருப்பதை போன்றது. நான் படத்தில் காட்டிய பலா இலை பனுவல்?? ஐ குறிப்பிடவில்லை.
 6. இந்த செய்முறை 2005 இல் பழைய யாழ் களத்திலை எழுதினது. ஒடியற் கூழ் செய்முறை (சைவ கூழ்) தேவையான பொருட்கள் ஒடியல் மா 250 கிராம் 150 கிராம் புழுங்கல் அரிசி பலாக்காய் சுளை+பலா கொட்டை 250 கிராம் பயற்றங்காய் 250 கிராம் மரவள்ளி கிழங்கு 250 கிராம் முருக்கம் காய் பிஞ்சு 2 முருக்கம் இலை, +முசுட்டை இலை,+ முல்லை இலை 250 கிராம் மாங்காய் பெரிசா 1 செத்தல் மிளகாய் 250 கிராம் இடித்து தூள் ஆக்கியது உப்பு அளவுக்கு செய் முறை புது ஒடியல் மா என்றால் கூழ் வைக்க 2 மணி நேரம் ஊற வைத்து நீரை 2 அல்லது 3 முறை மாற்றவும் பழைய மா என்றால் 4 மணி நெரம் முதல் வைத்து பல முறை நீரை மாற்றவும் இது மாவின் காறல் தன்மை போக உதவும் பானையில் அரிசியை கழுவி அவிய வைக்கவும். அரிசி பதி அவிந்து வரும் போது எல்ல மரக்கறிகளையும் போட்டு அவிய விடவும் மரக்கறிகள் அவிந்ததும் செத்தல் மிளகாய் தூள், உப்பு என்பவற்றை உங்கள் சுவை அளவுக்கு சேர்க்கவும் நன்கு கலக்கி சிறிது நேரத்தின் பின் ஊற வைத்த ஒடியல் மாவை நீர் விட்டு கரைத்து சேர்க்கவும் நன்கு கலக்கி கொதித்ததும் இறக்கவும் கூழை அளவான பாத்திரத்தில ஊத்தி பலா இலையில் பனுவல் செய்து குடியுங்க :-)) http://www.yarl.com/forum/index.php?&showtopic=3345&st=20
 7. ஆடிக்கூழ் செய்முறைக்கு http://www.yarl.com/forum3/index.php?showtopic=26210&st=0 http://www.yarl.com/forum3/index.php?showtopic=41646
 8. கூழ் மறக்க முடியாத ஒரு உணவு. http://www.yarl.com/forum3/index.php?showtopic=10828&st=0 http://www.yarl.com/forum/index.php?showtopic=3345
 9. நான் இங்கு எழுதிய கருத்தை தனியே ஒரு தலைப்பில் வைக்கலாமா என எண்ணினேன். பின்னர் தனியே ஒரு தலைப்பை தொடங்கி அது கவனிப்பார் அற்று முடங்கி போவதை தவிர்க்கவே இந்த பகுதியில் எழுதினேன். தலைவர் வீரச்சாவடைந்து விட்டாரா? இல்லை சூழ் நிலைகாரணமாக தலை மறைவாக இருக்கிறாரா என்ற விடயத்தை பற்றி நான் எந்த ஒரு கருத்தையும் சொல்லவும் இல்லை. சொல்ல போவதுமில்லை. அதே போல தலைவருக்கு வீர வணக்கம் செய்வதா? இல்லை அவர் உயிருடன் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் விர வணக்கம் செய்யாது இருப்பதா என்பது அவரவர் நம்பிக்கையின் பாற்பட்டது. அதை நான் விமர்சனம் என்று கருதவும் இல்லை. அதை தான் விமர்சனம் என்று கருதி மேலே சொன்ன கருத்துக்களை எழுதவும் இல்லை. நீங்கள் சொல்வது போலவே தலைவர் இருக்கிறாரா இல்லையா என்று ஆராய்வதை 2 வருடம் தள்ளி வைத்து விட்டு இப்போது எது தேவையோ அதை செய்ய ஒன்று பட வேண்டும் என்பதே நல்லதாக இருக்கும் என கருதுகிறேன். என் கருத்தின் அடி நாதமே எதை வேறு. அதை புரிந்தவர்கள் எடுத்துகொள்ளலாம் இல்லாதவர்களுக்கு எனக்கு என சொல்வது என்று தெரியவில்லை. யாருக்கும் துரோகி பட்டம் கொடுப்பதை தவிருங்கள்...... சொல்லும் கருத்தை உள்வாங்கி நல்லதா? கெட்டதா என ஆராய முற்படுங்கள். இன்றைய தேவை எமது போராட்டத்தை மாறும் உலக சமன் பாடுகளுக்கு ஏற்ப உலகினை ஆட்டி படைக்கும் சக்திகளுடன் முட்டி மோதாத வகையில் எவ்வாறு எடுத்து செல்வது என்பதே.....
 10. இதுவரை எமது மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடி வீரமரணமடைந்த போராளிகள் அனைவருக்கும் வீர வணக்கத்தை தெரிவித்து கொண்டு...... கருத்து எழுதுவதா? வேண்டாமா? எதை எழுதுவது எதை விடுவது? களத்தை நாளாந்தம் அவதானித்தாலும் கருத்து எழுதுவதில் நாட்டம் இல்லாத காரணத்தால் தவிர்த்து வந்தேன். பல சந்தர்பத்தில் நாம் கருத்து சொல்வதால் என்ன மாற்றம் வந்து விடப்போகிறது? எனும் எண்ணமே எதையும் எழுத விடாது தடுத்துவிடுகிறது. அத்துடன் எதையாவது சொல்ல போய் நான் துரோகி பட்டம் வாங்கிவிடுவேனோ எனும் ஒரு பயம். இதே போன்ற பயமே பலரை மௌனிக்க செய்திருக்கிறது. விமர்சனங்கள் அற்று, கடந்த கால தவறுகளை படித்து சரி செய்யாது...... உலகை ஆட்டி படைக்கும் சில சக்திகளுடன் நமது நலனுக்காகவேனும் அனுசரித்து போகாது எமது நலனை வென்றெடுப்பது என்பது இலகுவான காரியமல்ல. நாம் மோட்டு சிங்களவன் மோட்டு சிங்களவன் என்று சொல்லி சொல்லி நாம் மூட்டாளாகி நிற்கும் நிலமை. சிங்களவனொ/ சிறி லங்கா அரசோ தமது காரியம் ஆக வேண்டுமா? இந்தியாவோடு கூட்டு, பாக்கிஸ்தானோடு கூட்டு, சீனாவோடு கூட்டு, ரஸ்யாவோடு கூட்டு, அமெரிக்காவோடு கூட்டு, இங்கிலாந்தோடு கூட்டு......... இன்னும் யார் யாருடன் தனது காரியம் ஆக கூட்டு சேரவேண்டுமோ கூட்டு சேர்ந்து தனது காரியத்தை சாதித்து கொண்டது மட்டுமில்லாமல், கூட்டு சேர்ந்தவர்கள் யாராவது தமக்கெதிர்காக ஏதும் செய்ய வெளிக்கிட்டால் அவர்களின் எதிரிகளுடன் கூட்டு சேர்ந்து அதையும் தந்திரமாக முறியடிக்க தெரிந்து வைத்திருக்கிறது என்பதற்கு அண்மைய ஐ நா சபை மனித உரிமைகள் பிரேரணை தோற்று போனது நல்ல உதாரணம். நாம் என்னடா என்றால் இன்றைய உலகின் போக்கை சரியாக எடை போட்டு அதற்கேற்ற வகையில் இனியாகிலும் சரியான வழியில் செயற்பட்டு ஈழத்தில் முகாம்களில் அல்லலுறும் மக்களின் அவலத்தை போக்கவும், சிறி லங்கா அரசுக்கு நாம் இருக்கும் நாடுகளின் அரசுகள் மூலம் ஏதாவது அழுத்தம் கொடுக்க செய்ய முடியுமா ? அதற்கான வழி வகைகள் எவை? என பார்ப்பதை விட்டு விட்டு யாருக்கு இன்னும் துரோகிபட்டம் குத்தலாம்? என்று தேடி அலைகிறோம். இதுவரை எமது மக்களுக்காக போராடியவர்ளுக்கும், போராடி இப்போது அரசின் கைகளில் சிக்கி தவிக்கும் போராளிகள், போராளிகளுடனே இணை பிரியாது கடைசி வரை இருந்த மக்களின் நலனையும் காக்க முற்படாது இப்போதும் தேவையற்ற புடுங்கு பாடுகளில் ஈடு படுவதும் ஆயுதம் ஏந்தி போராட வேணும் என்று புலம் பெயர் நாடுகளில் இருந்து கருத்து எழுதி தீர்ப்பதும் அங்கு எஞ்சி இருக்கும் மக்களையும், போராளிகளையும் கொல்வதற்கு சமன். தொடர்ந்தும் நாம் விமர்சனங்களை எதிர் கோள்ளும் சக்தியற்றவர்களாக? விமர்சிப்பவர்கள துரோகி என அனைவரையும் மௌனிக்க செய்வதை தவிர்து, அந்த விமர்சனங்களை சீர்த்தூக்கி எமக்கு தேவையானதை எடுத்து, தேவையற்றதை தவிர்த்து......... எமது உரிமையை வெற்றெடுப்பது தான் முக்கியமானது.... அதுவே இதுவரை உயிர் நீத்த மாவீரர்களுக்கு தகுந்த அஞ்சலியாகவும் இருக்கும்.
 11. அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும், நேற்றைய தினம் பிறந்த நாள் கொண்டாடிய தயாவிற்கும் வாழ்த்துக்கள்
 12. இப்போ சுடச்சுட செய்த ஆடி கூழ் Shot at 2007-07-17
 13. வெண்ணிலாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 14. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சினேகிதி
 15. சுபித்திரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மே மாதம் 2 ஆம் திகதி பிறந்த நாளை கொண்டாடும் தூயவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.