Jump to content

KULAKADDAN

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    1643
  • Joined

  • Last visited

  • Days Won

    3

Posts posted by KULAKADDAN

  1. இன்றுடன், இந்த வாரத்தில் இரண்டு நாட்கள்? யாழ் களத்தினை  பார்க்கமுடியாது/ திறக்க முடியாது போய்  இருக்கிறது. தமிழ் சிறி சொல்வதை பார்த்தால் இது எனக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சனை போல் தெரியவில்லை. ஓரிரு நாட்களுக்கு முன்னர் பார்க்கமுடியாது போய் பின்னர் யாழுக்கு வந்த பொது அந்த தடங்கல் பற்றி ஏதும் அறிவிப்பு இருக்கும் என பார்த்தேன் எதையும் காணவில்லை. அதானல் எனக்கு மட்டும் ஏற்பட்ட பிரச்சனை என நினைத்துவிட்டு எதுவும் எழுதவில்லை.

  2. குட்டி, பலா இலையில் கூழ் குடிப்பது..... கூழுக்கு தனிச்சுவையை தரும் என்பது முற்றிலும் உண்மை.

    நீங்கள் குறிப்பிடும் பலா இலையில் செய்த பிளாவை குளக்காட்டான் தனது படத்தில் காட்டியுள்ளார், அதனை பனுவல் என்று குறிப்பிடுகின்றார்.

    இல்லை தமிழ் சிறி, அவர் பனை ஓலை பிழாவை குறிப்பிடுகிறார் என நினைக்கிறேன். கள்ளுத்தவறணைக்களில் இருப்பதை போன்றது. நான் படத்தில் காட்டிய பலா இலை பனுவல்?? ஐ குறிப்பிடவில்லை.

  3. ஏன் இப்படிக் கூழ் யாழ்ப்பாணத்தில மட்டும் தானா சமைக்கிறவை. எதற்கு யாழ்ப்பாணக் கூழ் என்றீனம். :lol:

    இது மச்சக் கூழ். எப்படி சைவக் கூழ் சமைக்கிறது...?????! :rolleyes:

    இந்த செய்முறை 2005 இல் பழைய யாழ் களத்திலை எழுதினது.

    ஒடியற் கூழ் செய்முறை (சைவ கூழ்)

    image29bw.jpg

    தேவையான பொருட்கள்

    ஒடியல் மா 250 கிராம்

    150 கிராம் புழுங்கல் அரிசி

    பலாக்காய் சுளை+பலா கொட்டை 250 கிராம்

    பயற்றங்காய் 250 கிராம்

    மரவள்ளி கிழங்கு 250 கிராம்

    முருக்கம் காய் பிஞ்சு 2

    முருக்கம் இலை, +முசுட்டை இலை,+ முல்லை இலை 250 கிராம்

    மாங்காய் பெரிசா 1

    செத்தல் மிளகாய் 250 கிராம் இடித்து தூள் ஆக்கியது

    உப்பு அளவுக்கு

    செய் முறை

    புது ஒடியல் மா என்றால் கூழ் வைக்க 2 மணி நேரம் ஊற வைத்து நீரை 2 அல்லது 3 முறை மாற்றவும்

    பழைய மா என்றால் 4 மணி நெரம் முதல் வைத்து பல முறை நீரை மாற்றவும்

    இது மாவின் காறல் தன்மை போக உதவும்

    பானையில் அரிசியை கழுவி அவிய வைக்கவும். அரிசி பதி அவிந்து வரும் போது எல்ல மரக்கறிகளையும் போட்டு அவிய விடவும்

    மரக்கறிகள் அவிந்ததும் செத்தல் மிளகாய் தூள், உப்பு என்பவற்றை உங்கள் சுவை அளவுக்கு சேர்க்கவும்

    நன்கு கலக்கி சிறிது நேரத்தின் பின் ஊற வைத்த ஒடியல் மாவை நீர் விட்டு கரைத்து சேர்க்கவும்

    நன்கு கலக்கி கொதித்ததும் இறக்கவும்

    கூழை அளவான பாத்திரத்தில ஊத்தி பலா இலையில் பனுவல் செய்து குடியுங்க :-))

    http://www.yarl.com/forum/index.php?&showtopic=3345&st=20

  4. எனக்கு தெரிந்தவரைக்கும்

    ஆடிக்கூழ் இனிப்பாக இருக்கும்

    ஒடியல்கூழ் காரசாரமாக இருக்கும்

    சிறித்தம்பி!!!!

    என்ரை ஊரிலை ஆடிக்கூளெண்டால் பச்சையரிசிமாவிலை அதுவும் அரிசிமாவை குறுணிகுறுணியாய் உருட்டி பயறு பனங்கட்டி எல்லாம் இனிப்பாய் செய்வினம்

    இருந்தாலும் ஊருக்கு ஊர் வித்தியாசம்

    குமாரசாமி அண்ணா, இதுவரை நான் கூழ்குடிச்சதே ஒரு பத்து தரம் தான்,

    எல்லாம் காரசரமான கூழ் தான். அதில் இனிப்பு கூழ் என்று நீங்கள் சொல்ல வாய் ஊறூது.

    ஆடிக்கூழ் செய்முறைக்கு

    http://www.yarl.com/forum3/index.php?showtopic=26210&st=0

    http://www.yarl.com/forum3/index.php?showtopic=41646

  5. இந்த மாதம் பேத்டே கொண்டு ஆடுறவை

    முகத்தார்- 26.09.----

    ஹரி-30.09.1975

    இருவருக்கும் என்ரை வாழ்த்துக்கள்!

    மன்னர் ஹரி மற்றும் முகத்தார் இருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

  6. .

    தூயவின் முயற்சிக்கு வந்தனம் சொல்லி...........அத்துடன் உற்சாகமாக தலமை தாங்கும் சோழியன் அண்ணா திரைமறைவில் இருக்கும் சண்முகி அக்கா மற்றும் சக பாடிகள்......... எதிரணி சோம்பேறிகள் அனைவருக்கும் வணக்கம்.

    இங்கு சாத்திரி தனது சோம்பேறி சாத்திரி வேலை பறி போகும் அவலத்தில் இறுதியில் சம்பந்தா சம்பந்தமில்லாது புலம்பி சென்றுள்ளர்

    இங்கு தலைப்பு விஞ்ஞானம் மனிதனை உற்காகபடுத்துகிறதா சோம்பேறி ஆக்குகிறதா என்பதே.

    விஞ்ஞானம் தந்த விமானத்திலேறி புலம் வந்து அதன் பயனாக கிடைத்த இணையத்தில் இவ்வளவு உற்சாகமக பட்டி மன்றத்தில் அது சோம்பலை தருகிறது எனும் எதிரணி நண்பர்களை பார்த்தால் அழுவதா சிரிப்பதா தெரியவில்லை.

    இன்று பல அலுவல்களை விரைவில் முடித்து வேறு அலுவல்களில் கவனம் செலுத்த முடிகிறதே. உதாரணத்துக்கு 5 கிலேத மிற்றர் துரத்தில் இருக்கும் ஒருவரிம் அலுவலுக்கு போடி நடையில் போய் கதைத்து முடித்து வர பாதி நாள சென்றுவிடும் அதையே இப்பொது தொலை பேசி மின்னஞ்சல் மெசஞ்சர் என நிமிடத்தில் அந்த அலுவலை முடிக்க முடியும். ஏன் நேரில சந்திக்க வேண்டியிருந்தாலும் வாகனத்தில் போய்சந்தித்து வர 1 மணி நேரம் போதும் இதனால் வினைத்திறன் கூடுகிறது.

    பாட்டன் காலத்தில் சிறு பரப்பில் விவசாயம் செய்தார் அதனால் துலா போதும் .இன்று பல ஏக்கர் கணக்கில் உழவு இயந்திரத்தையும் தண்ணீர் பமபியையும் கொண்டு விவசாயம் செய்ய முடிகிறது . வருமானம் பெருகுகிறது . அது தந்த உற்சாகத்தில் மேலும் அதிக பரப்பில் விவசாயம் செய்ய துண்டுகிறது. ஒரு உழவு இயந்திரம் வைத்திருந்தவர் இன்னுமொன்று வாங்குகிறார். அதற்கு மேலாக அரிசியாலை திறக்கிறர் இப்படி மேலும் மேலும் உற்சாகமாக முன்னேறிய பலர் ஊரிலும் உண்டு உலகத்திலும் உண்டு.

    இன்று புலத்திலுள்ள பலரும் வேண்டிய நேரத்தில் ஊரில உள்ள உறவுகளுடன் கதைத்து அவர்களது முகத்தையும் பார்க்க உதவுவது எது? இதே 10 வருடங்களுக்கு முன் ஊரில் இருந்து எப்போது கடிதம் வரும் என காத்து கிடந்த நாட்களை எண்ணிபாருங்கள். இன்றோ வேலை முடிந்து வரும் களைப்பும் ஊரிலிருக்கும் உறவினரின் குரலை கேட்டதும் காற்றோடு பறக்க செய்து உற்சாகத்தை தருவது எது இன்றைய விஞ்ஞானம்.

    ஆதியில் உயிர் கொல்லி நோய்களான குக்கல் அம்மை போலியோ போன்றவை உலகிலிருந்து நீங்கும் நிலை வந்துள்ளதே. இதையே தெய்வ குற்றம் என்று பல குழந்கைகளை இழந்தொர் எண்ணிய காலம் போய் பிறக்கும் குழந்தைகளின் உயிர் உத்தரவாதப்படுத்தபடுகிறதே.......

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.