Jump to content

தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    33749
  • Joined

  • Days Won

    29

Everything posted by தமிழரசு

  1. பூநகரி நாயகர்களின் நினைவு நாள் இன்று! பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தவளை படை நடவடிக்கையில் வீரச்சாவை அணைத்து கொண்ட வேங்கைளின் 18ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 11.11.1993 தொடங்கப்பட்ட படை நடவடிக்கையில் பூநகரி படைத்தளத்தின் பெரும் பகுதி விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு தகர்த்து அழிக்கப்பட்டதுடன் பெருந்தொகையான போராயுதங்களும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இந்த வெற்றிகர சமரில் லெப்.கேணல் குணா, லெப்.கேணல் நவநீதன், லெப்.கேணல் அருணன்(சூட்), லெப்.கேணல் அன்பு, லெப்.கேணல் பாமா, கடற்கரும்புலிகள் மேஜர் கணேஸ்(குயிலன்), மேஜர் கோபி(குமணன்) உட்பட 460 வரையான போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். பலாலி படைத்தளத்திலிருந்து பூநகரியில் தாக்குதலுக்கு இலக்காகும் படையிருக்கான உதவிகள் சென்றடைவதைத் தடுத்து நிறுத்தும் நோக்குடன் பலாலி படைத்தளத்திற்குள் 11.11.1993 அன்று ஊடுருவிய கரும்புலிகளின் சிறப்பு அணி படைத்தளத்தினுள் தாக்குதல்களை நடாத்தி சிறிலங்கா படையினரை நிலையை வைத்து தவளை நடவடிக்கையின் வெற்றிக்கு வழியேற்படுத்தியது. இந்த சிறப்பு நடவடிக்கையில் மேஜர் தொண்டமான், மேஜர் கலையழகன் உட்பட்ட 13 கரும்புலிகள் வீரகாவியமாகினர். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கம் லெப்.கேணல் சிவநேசன் - கடற்கரும்புலிகள் மேஜர் பாரதி - கப்டன் இன்னிசை நினைவு நாள் 11.11.1996 அன்று யாழ். கரைநகர் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகின் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் மேஜர் பாரதி - கப்டன் இன்னிசை ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவு நாளும், யாழ். தச்சன்தோப்புப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினருடனான எதிர்பாராத மோதில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்டினன்ட் கேணல் சிவநேசன், கப்டன் பருதியப்பன், கப்டன் தூயோன் ஆகிய மாவீரர்களின் 10ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். இம் மவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள். http://www.eeladhesa..._1976503703.jpg http://www.eeladhesa..._2088818609.jpg http://www.eeladhesa..._2024101080.jpg http://www.eeladhesa...ndex.php?option தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எனது வீரவணக்கம்.
  2. தவளை நடவடிக்கையிலும் அதற்க்கு வலு சேர்க்கும் வகையில் நடந்த பலாலி பெரும்தளத்தில் உடுருவித்தாக்குதல் போன்ற நடவடிக்கையில் தமது இன்னுயிரை ஈகம் செய்த அந்த சந்தனப்பேளைகளுக்கு எனது வீரவணக்கம்.
  3. தமிழீழ தாயக விடியலுக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எனது வீரவணக்கங்கள்.
  4. முல்லைத்தீவு முள்ளியவளையினை சேர்ந்த வன்னிமாவட்ட முன்னாள் படைத்தளபதி நல்லய்யா அமிர்லிங்கம் என்று அழைக்கப்படும் மேஜர் பசீலனின் 23 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்ககாலத்தில் தன்னை இணைத்துக்கொண்ட பசீலன் தொடக்க பயிற்சியினை இந்தியாவில் பெற்று வன்னியில் ஒர் கெரில்லாபோராளியாக தன்னை மாற்றிக்கொண்டு வன்னியில் பல்வேறு தாக்குதல்களை எதிரிமீது தொடுத்து பலபோராளிகளை உருவாக்கி வன்னியில்சண்டைக்காறர்களில் சிறப்பானவன் எனபெயரெடுத்தான் மேஜர்பசீலனின் வன்னி தாக்குதல் அணியில் பிரிகேடியர் பால்றாஜ் அவர்கள் ஒரு போராளியாக இருந்தகாலகட்டங்களில் எல்லாம் முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்திய அமைதிப்படையினருக்கு எதிராக பல்வேறு தாக்குதல்களை தொடுத்து பலதளபதிகளை வளர்த்த பெருமை மேஜர் பசீலனை சாரும் அந்தவகையில்தான்‘பசீலன் அண்ணைதான் தனக்கு சண்டைபழக்கியவர் என்று பிரிகேடியர் பால்றாஜ் அவர்கள் அடிக்கடி தனது பேச்சுக்களில் சொல்வார்”அந்த அளவிற்கு சிறப்பான சண்டைவீரனாக அன்று பசீலன் காணப்பட்டான். ஒரு கெரில்லா போராளியாக செயற்பட்டுபின்னர் வன்னிமாவட்ட படைத்தளபதியாக திகழ்ந்த பசீலன் வன்னியில்படையினருக்கு எதிரான அனைத்து தாக்குதல்களிலும் சிறப்புற செயற்பட்டான். யாழ்ப்பாணத்தில் கோப்பாய்பகுதியில் இந்திய அமைதிப்படையினருக்கு திரான தாக்குதல் நடத்தி ராங்கிகளை சேதமடைய செய்தான் அதேபொல் ஒட்டிசுட்டான் முதன்மை வீதியில் கூளாமுறிப்பிற்கு அருகில் ஒர் இடத்தில் இந்திய அமைதிப்படையினரின் ராங்கிகள் மீதுதாக்கதல் நடத்தி இழப்பினை ஏற்படுத்தினான் இவ்வாறு பலதாக்கதல்களை தொடுத்தஇவன் தமிழீழ தேசியத்தலைவர்அவர்களை வன்னிக்கு அழைத்துவருவதாற்கான பொறுப்பினை ஏற்று மேஜர் பசீலன்.,பிரிகேடியர் பால்றாஜ்,லெப்ரினன் கேணல் நவம்,உள்ளிட்டவர்கள் வன்னியின் சிறந்த தாக்குதல் வீரர்களாக அன்று காணப்படுகின்றார்கள் அன்று பசீலனின் அணியின் பொறுப்பில்தான் தலைவர் அவர்கள் மணலாற்றுக்காட்டிற்கு கொண்டுசெல்லப்படுகின்றார் இதன்பின்பும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல தாக்குதல்களை தொடுத்த இவன் முல்லைத்தீவு மாவட்டத்தில் பசீலன் என்றால் பயம் வரும் அளவிற்கு இந்திய அமைதிப்படையினருக்கு கலக்கத்ததை ஏற்படுத்தினான் முல்லைத்தீவு பகுதியில் இந்தியப்படையினருடன் சண்டைநடத்திக்கொண்டிருந்த வேளை 08.11.1987 அன்று எறிகணைத்தாக்குதலில் வீரச்சாவைத்தளுவிக்கொண்டுள்ளார். பின்னர் பசீலனின் நினைவாக பசீலன் பயிற்சிபாசறை பசீலன்- 2000 என்று விடுதலைப்புலிகளினால் உருவாக்கப்பட்ட பீரங்கி என்பன பசீலனின் வரலாற்றை சொல்லி நிக்கின்றன. மேஜர் பசீலன் தொடர்பாக எரிமலை பத்திரிக்கையில், துணிச்சலின் சிகரமாய் மேஜர் பசீலன். நல்லையா அமிர்தலிங்கம் முல்லைத்தீவு வீரமரணம் 11-8-1987 சொந்த மண்ணிலேயே அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுகின்ற தமிழ் மக்கள், தம் உரிமையைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தமிழ் மிதவாதிகளுக்கு வாக்குகளை அள்ளி வழங்கினார்கள். சிங்களப் பேரினவாத அரசு மாநில சுயாட்சி, மாவட்டசபை, சமஸ்டி ஆட்சி என்று, உரிமைகளற்ற திட்டங்களைத் தீட்டி இதே மிதவாதிகள் மூலம் ஏமாற்றிய போதும் சாத்வீக முறையிலேயே தம் உரிமைகளைக் கேட்டு நம்பிக்கையுடன் போராடினார்கள் தமிழர்கள். ஆனால் இன ஒழிப்பின் உச்சத்தில், பாரம்பரியப் பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் ஆக்கப்படுவதையும் சொந்தக்கிராமங்களிலிருந்து கட்டிய துணியுடன் அடித்து விரட்டப்பட்டு, உணவின்றி, தங்க இடமின்றி அநாதைகளாக்கப்டுவதையும் காரணமின்றி ࠯க்காகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது தமிழ் இளைய சமுதாயம். சிறீலங்கா அரசு மக்களை இம்சிப்பதையும் வெலிக்கடைச் சிறைச்சாலையினுள் கைதிகளாக்கப்பட்டிருந்த அப்பாவித் தமிழர்களைச் சிங்களக் கைதிகளும், சிங்கள இராணுவமும் இணைந்து, திட்டமிட்டு மிருகத்தனமான முறையில் கொலை செய்ததையும் கண்டு ஈழ விடுதலையே இறுதித் தீர்வு என்ற உறுதியான முடிவிற்கு வந்தான் முள்ளியவளையைச் சேர்ந்த ஓர் இளைஞன். உறுதியான கொள்கையையும், தளம்பாத தலைமையையும், தமிழீழ விடுதலைக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் கெரில்லாப் படையையும் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளினாலேயே இது சாத்தியம் என்பதை உணர்ந்து அவர்களுடன் தன்னை இணைத்துக் கொண்ட அமிர்தலிங்கம் என்ற இளைஞன்தான் விடுதலைப் புலிகளைச் சேர்ந்த பசிலன். தமிழர்க்கெதிரான இன அழிப்பில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் சிறீலங்கா கூலிப்படை மீது பசிலன் மேற்கொண்ட தாக்குதல்கள் எண்ணிலடங்காதவை. வன்னியின் சண்டைக்காரர்களில் முதன்மையானவர்களில் ஒருவர். பசீலன் அண்ணரின் சண்டைகள் வித்தியாசமானவை துணிகரமானவை. எதிரிகளின் கணிப்பீடுகளிற்கு அப்பாற்பட்டவை. இராணுவ வழமைகளுக்கு மாறாகச் சண்டைகளைச் செய்து எதிரியின் உச்சந்தலையில் குட்டிவிடுவதில் வல்லவன். வன்னியில் பசீலன் அண்ணனின் தலைமையில் புலிவீரர்கள் எதிரியின் கண்களுக்குள் நீந்தி விளையாடினார்கள். மேஜர் பசீலன் அண்ணனின் அணியில் தளபதி பால்ராஜ் ஒரு போராளியாக இருந்த அக்காலம். முல்லைத்தீவில் நகர்ந்து வந்த இராணுவத்தினர் மீது ஒரு பதுங்கித்தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டது. இடம்பார்த்து வேவு பார்த்து தாக்குதலுக்கு நாள் குறிக்கப்பட்டு அணி ஒழுங்கு படுத்தப்பட்டது. மேஜர் பசீலன் தாக்குதல் திட்டத்தை விளங்கப்படுத்த விபரங்களை உள்வாங்கியபடி அணி உரிய இடத்திற்கு நகரத் தொடங்கியது. எதிரி நகரும் வழிபார்த்து கிளைமோரைப் பொருத்தி விட்டு போராளிகள் நிலையெடுக்கும் வேளை பசீலன் அண்ணர் தாக்குதல் திட்டத்தை மாற்றினார். போராளிகள் மீள் ஒழுங்குபடுத்தப்பட்டனர் திருத்தம் செய்யப்பட்ட தாக்குதல் திட்டத்தை பசீலண்ணை விளங்கப்படுத்தத் தொடங்கினார். எதிரி நகரும் பாதையை நோக்கி கிளைமோரைப் பொருத்தும் அதேவேளை வெடிக்கும் கிளைமோரின் குண்டுச் சிதறல்கள் எந்தத் திசை நோக்கி தாக்குமோ அதே நேர்த்திசையில் போராளிகள் நிலையெடுக்க வேண்டும். ஒரு திகிலூட்டும் திட்டத்தை மேஜர் பசீலன் விளங்கப்படுத்தினார். கிளைமோரின் பின்புறமாக் அல்லது அதன் இடது மற்றும் வலது புறங்களில்; போராளிகளை நிலையெடுக்கச் செய்வதே எப்போதும் கைக்கொள்ளும் இராணுவ வழமை. ஆனால்; இந்த இராணுவ வழமையை மாற்றியமைத்து; எதிரிமீது ஒரு அச்சமூட்டும் தாக்குதலைத் தொடுக்க் பசீலன் அண்ணர் விரும்பினார். கிளைமோரின் தாக்குதலிருந்து தப்பும் எதிரிகள் கிளைமோர் வெடிக்கும் திசைக்கு எதிர்ப்புறம் போராளிகள் இல்லாத் தமக்கான பாதுகாப்பான பகுதியென எண்ணி நிலையெடுப்பர் அந்தப் பகுதியை தாக்குதல் வலயமாக்குவதே மேஜர் பசீலனின் நோக்கமாக இருந்தது. எதிரி எதை நினைப்பானோ அதற்குமாறான ஒரு தாக்குதல் திட்டம் தயாரானது. கரணம் தப்பினால் மரணம் என்கிற மரண திட்டம் அது. திட்டத்தில் ஏற்படும் சிறு சறுகல் கூட தாக்குதலுக்குள்ளாக வேண்டிய எதிரிகளுக்குப் பதிலாக தாக்குதலை மேற்கொள்ளும் எமது போராளிகளே தாக்கப்படக்கூடிய ஆபத்து நிறைந்த திட்டம். துணிந்தவன் வெல்வான் என்பது பசீலன் அண்ணரின் கணிப்பு.அந்த தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றுபவர்களுக்கு அசாத்திய துணிச்சலும் அதிக தன்னம்பிக்கையும்- பிசகாது செய்துமுடிக்கும் இராணுவ ஆற்றலும் வேண்டும். யாரைத் தேர்ந்தெடுக்கலாம்? பசீலன் அண்ணர் அந்தத் தாக்குதலை நிறைவேற்றும் பொறுப்புக்கு ஒருவரைத் தேர்ந்தெடுத்தார் அது வேறுயாருமல்ல எங்கள் தளபதி பால்ராஜ். தாக்குதல் வலயத்திற்குள்ளிருந்த சிறுபள்ளத்தைத் தமக்குக் காப்பாகப் பயன்படுத்தி பசீலன் அண்ணர் நினைத்தது போலவே எதிரிகள் மீதான அந்தத் தாக்குதலை தளபதி பால்ராஜ் தலைமையிலான போராளிகள் வெற்றிகரமாகச் செய்து முடித்தனர்; அந்தக் கொலை வலயத்தில். அசாத்திய துணிச்சலுடன். இன்னொரு முறை , முந்திரிகைக்குளத்தில் சிறீலங்கா இராணுவத்தை எதிர்கொண்டு பன்னிரு கூலிப்படையினரைக் கொன்றதுடன் தமிழினத்தை அழிக்க பயன்படும் 12 துப்பாக்கிகளை எடுத்ததன் மூலம் மக்களுக்கு ஓர் நம்பிக்கையை தோற்றுவித்தான் வவுனியா மாவட்ட தாக்குதற் பிரிவின் தலைவன் மேஜர் பசிலன். கொக்கிளாய் இராணுவ முகாம் தாக்குதலின் போது காயமடைந்த பசிலன் கிளிநொச்சியைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து இனப் படுகொலைகளை நிறுத்த விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கெரில்லாப் போரிலும் முக்கிய பங்கு வகித்தான். ஒரு கெரில்லா போராளியின் திறமைகளைத் தன்னகத்தே முழுமையாகக் கொண்டிருந்த பசிலன் ஒரு சிறந்த விகடகவியும், நடிகனுமாவான். தமிழீழத்தின் மரபு நாடகங்கள் இவன் நடிப்பினால் மெருகூட்டப்பட்டது என்பது மிகையாகாது. தன்னுடைய நகைச்சுவைப் பேச்சால் களைப்புற்ற சக தோழர்களைச் சிரிக்க வைத்துவிடுபவன் இவன். மக்களுக்குப் போராட்ட உத்வேகத்தைத் தூண்டிவிடும் நாடகங்களிலும் ஆர்வத்துடன் பங்கேற்று திறமையாக நடிக்கும் பசிலன் தன்னுடைய கலகலப்பான சுபாவத்தால் மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஓர் போராளியாவான். தமிழீழமெங்கும் சிறீலங்கா அரசானது தமிழீழ மக்கள் மீது ஓர் பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தைக் கட்டவிழ்த்து இன வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கையில், அடக்குமுறையாளர்களுக்கு எதிரான ஆயுதப் போர் ஓர் புதிய சகாப்பத்தைப் படைத்துக் கொண்டிருந்தது. இந்நேரத்தில், தமது சொந்த நலன்களுக்காக, அந்நிய நாட்டிலிருந்து மனித விரோதிகளை அமைதிப்படை என்ற பெயரில் அழைத்து வந்து மக்களைப் பலி கொள்ளும் தேச விரோதிகளின் செயல் கண்டு குமுறினான் பசிலன். கோப்பாய்யில் இந்திய அழிவுப் படையை எதிர்த்து தரைப் படை டாங்கிகள் ஐந்தை நிர்மூலமாக்கி, விடுதலைப் புலி கெரில்லாக்கள் பற்றி இந்திய இராணுவத்திற்கு ஓர் பீதியைத் தோற்றுவித்த பசிலன் முல்லைத்தீவில் நேரடி மோதலின் போது இந்தியப்படையின் எறிகணைத் தாக்குதலால் 08.11.87 அன்று வீரமரணத்தைத் தழுவிக்கொண்டான். தமிழீழ மண்ணிலிருந்து மறைந்தாலும் ஈழ விடுதலை வரலாற்றில் ஒரு நிலையான இடத்தில்….. மேஜர் பசிலன் அண்ணன் . பசீலன் 2000 டாங்கி 08.11.1994 அன்று யாழ். வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலமான பபதா கலத்தின் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி மேஜர் வித்தி(வேதமணி) அவர்களின் 16ம் ஆண்டு வீரவணக்க நாளும்,08.11.1999 அன்று மன்னார் பூநகரி கடற்பரப்பில் தவறுதலாக இடம்பெற்ற படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட யாழ். மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் தூயவன் அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாளும், 08.11.2006 அன்று மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட திருகோணமலை மாவட்ட துணைத் தளபதி லெப்.கேணல் அறிவு அவர்களின் 4ம் ஆண்டு வீரவணக்க நாளும் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/...news/2011/11/08 வீரச்சாவை தழுவிய வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
  5. சாத்திரியாருடைய மகள் மீராவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
  6. 05.11.1999 அன்று ஓயாத அலைகள் – 3 படை நடவடிக்கையில் மணலாற்றில் அமைந்திருந்த பராக்கிரமபுர படைத்தளத்தினைத் தாக்கியழிப்பதற்காக நகர்ந்து கொண்டிருந்தவேளை நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் அருளன், மேஜர் சசி ஆகியோரின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://meenakam.com/...ews/2011/11/05/ இன்றைய நாளில் வீரச்சாவை தழுவிய இவ் வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
  7. சபேசன் இன்று போல் என்றும் வாழ வாழ்த்துகின்றேன். பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  8. 04.11.1999 அன்று ஓயாத அலைகள் 3 படைநடவடிக்கையில் ஒதியமலை பகுதி மீட்பின் போதான சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் மணிவண்ணனின் 11ம் ஆண்டு வீரவணக்க நாளும், கிளாலிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் நடைபெற்ற மோதல் ஒன்றில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் தர்சனின் 10ம் ஆண்டு நினைவு நாளும், 04.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அசோக்குமாரின் 3ம் ஆண்டு வீரவணக்க நாளும் இன்றாகும். ஓயாத அலைகள் – 3 படைநடவடிக்கையில் 04.11.1999 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி படையணியைச் சேர்ந்த மேஜர் இராசநாயம், லெப். ஆருரான், 2ம். லெப். திருக்குமரன் 2ம் லெப். வல்லவன், 2ம் லெப். சுபாசன், வீரவேங்கை தீபன் உட்பட்ட மாவீரர்களின் 11 ம் ஆண்டு வீரவணக்க நாளும் இன்று தமிழீழ தாய் மண்ணின் விடிவிற்காய் தம்மை ஆகுதியாக்கிய இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். 04.11.2000 அன்று திருகோணைமலைத் துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிக் கலத்தினைச் சேதமாக்கி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ், மேஜர் சுடர்மணி(செங்கதிர்) ஆகியோரின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமாமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/news/flashnews/2011/11/04 இன் நாளில் வீரசாவைத்தழுவிய அனைத்து வீர வேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
  9. வாத்தியாருக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் .
  10. கடற்கரும்புலி மேஜர் முத்துமணி வீரவணக்க நாள் இன்றாகும் 03.11.1999 அன்று முல்லைக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகுவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் முத்துமணியின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://meenakam.com/...ews/2011/11/03 தமிழ் ஈழ விடுதலைக்காக தன் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரருக்கு வீரவணக்கம் மற்றும் இன் நாளில் வீரகாவியமான வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கம்.
  11. நாகர்கோவில் கடற்பரப்பில் கடற்படையின் கூகர், டோறா பீரங்கிப் படகு மூழ்கடிப்பில் ஏழு கடற்கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்றாகும் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் 01-11-2008 அன்று சிறீலங்கா கடற்படையினருக்கும், கடற்புலிகளுக்கும் இடையோ ஏற்பட்ட கடற்சமரின் போது காலை 5.45 மணியளவில் நடைபெற்ற சமரின்போது கூகர் படகு ஒன்றும் டோறாப்படகு ஒன்றும் கடற்புலிகளின் கரம்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் நீரூந்து விசைப்படகு ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளதோடு ,இருபது கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர் ‘ வடமராட்சி கிழக்கில் உள்ள மணற்காட்டுக்கு நேரான கடற்பரப்பில் 01-11-2008 சனிக்கிழமை அதிகாலை 4:00 மணியளவில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்புலிகள் அணியை சிறிலங்கா கடற்படையின் கூகர்-நீருந்து விசைப் படகுகள் மற்றும் விசைப்படகுகள் வழிமறித்து தாக்குதலை நடத்தின. சுமார் 15 நிமிட நேரம் கடற்புலிகள் அணிக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றது. கடற்புலிகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத சிறிலங்கா கடற்படையினர் பின்வாங்கிச் சென்றனர். இதன் பின்னர், 01-11-2008 அதிகாலை 5:20 நிமிடமளவில் கடற்புலிகளின் படகுகள் நாகர்கோவில் கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த போது, பருத்தித்துறையிலிருந்து ஆழ்கடல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு டோறா பீரங்கிப் படகுகள், நீருந்து விசைப்படகுகள், கடற்படையின் கொமாண்டோக்களுக்காக வடிவமைக்கப்பட்ட கூகர் படகு உள்ளிட்ட 20 படகுகளுடன் கடற்புலிகளினதும் கடற் கரும்புலிகளினதும் படகுகளை தாக்கியழிக்க சிறிலங்கா கடற்படையினர் வியூகம் அமைத்து காத்திருந்தனர். இந்த வியூகத்தை கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் இணைந்து தீவிர தாக்குதல் மூலம் உடைத்தெறிந்தனர். இதில் டோறா பீரங்கிப்படகு ஒன்றும் கூகர் கலம் ஒன்றும் கடற்புலிகளாலும் கடற்கரும்புலிகளாலும் அந்த இடத்திலேயே தாக்கி மூழ்கடிக்கப்பட்டன. அத்துடன் கரையோர நீருந்து விசைப்படகு ஒன்று கடுமையாக சேதமாக்கப்பட்டது. ஏனைய பல படகுகள் சேதங்களுக்குள்ளாகின. அதேவேளை, சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகளும் கடற்படையினருடன் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளதுடன் தரையிலிருந்து பல்குழல் வெடிகணைத் தாக்குதலை சிறிலங்கா தரைப்படையினர் நடத்தினர். கடற்புலிகளின் தீவிரமான தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாது சிறிலங்கா கடற்படையினர் காங்கேசன்துறைக்கு பின்வாங்கி ஓடினர். இத்தாக்குதலில் சிறிலங்கா கடற்டையைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். கடற்படையினருக்கு அழிவை ஏற்படுத்திய இம்மோதலில் கடற்கரும்புலிகள் ஏழு பேர் வீரச்சாவடைந்துள்ளனர். கடற்கரும்புலி லெப். கேணல் பதுமன் கடற்கரும்புலி லெப். கேணல் புலிக்குட்டி கடற்கரும்புலி லெப். கேணல் கண்ணன் கடற்கரும்புலி மேஜர் செந்தூரன் கடற்கரும்புலி மேஜர் கலைமதி கடற்கரும்புலி கப்டன் கொள்கைக்கோன் கடற்கரும்புலி கப்டன் அகச்சேரன் ஆகிய கரும்புலிகள் சிறிலங்கா கடற்படையினருக்கு அழிவை ஏற்படுத்தி வீரவரலாறாகினர் http://www.eeladhesa...ndex.php?option தமிழ் ஈழ விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம்
  12. பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 6 போராளிகளின் வீரவணக்க நாள் கடந்த 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு மாவீரர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று. சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 நவம்பர் 2 ஆம் திகதி‌ வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம் : * பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் என்று அழைக்கப்படும் பரமு தமிழ்ச்செல்வன். (சொந்த முகவரி: யாழ். மாவட்டம், தற்காலிக முகவரி: கிளிநொச்சி மாவட்டம்) * லெப். கேணல் அன்புமணி அல்லது அலெக்ஸ் என்று அழைக்கப்படும் முத்துக்குமாரு சௌந்தரகிருஸ்ணன் (சொந்த முகவரி யாழ். மாவட்டம்) * மேஜர் மிகுந்தன் என்று அழைக்கப்படுமம் தர்மராசா விஜயகுமார் (சொந்த முகவரி: யாழ். மாவட்டம்) * மேஜர் கலையரசன் அல்லது நேதாஜி என்று அழைக்கப்படும் கருணாநிதி வசந்தகுமார் (நிலையான முகவரி: யாழ். மாவட்டம், தற்காலிக முகவரி: ஜெயந்திநகர், கிளிநொச்சி) * லெப். ஆட்சிவேல் என்று அழைக்கப்படும் பஞ்சாட்சரம் கஜீபன் (யாழ். மாவட்டம்) * லெப். மாவைக்குமரன் என்று அழைக்கப்படும் முத்துக்குமாருக்குருக்கள் சிறீகாயத்திரிநாத சர்மா * மேஜர் செல்வம். தமிழ்மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக இருபத்து மூன்று ஆண்டுகள் களத்திலும் அரசியல் தளத்திலும் பணி செய்தவர் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன். நாற்பது வயதை எட்டிய சுப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டு தனது இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்மிக்க விடுதலை இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற பொறுப்பை ஏற்றதிலிருந்து அவர் மரணிக்கும் வரையான பதினான்கு ஆண்டுகளாகத் தனது பணியை செவ்வனே நிறைவேற்றியுள்ளார். அத்தோடு அவர் யாழ். மாவட்டத் தளபதியாக பணியாற்றிய அக்காலப் பகுதியில் வட போர்முனையின் கட்டளைப்பீடமாகத் திகழும் பலாலி முக்கூட்டுப் படைத்தளத்தின் அச்சுறுத்தலிலிருந்து போராட்டத்தின் மையத்தளமாக திகழ்ந்த யாழ்ப்பாணத்தை பாதுகாப்பதற்கான ஒரு தற்காப்புச் சமருக்கு முகங்கொடுத்த அதேவேளை இவரது தலைமையில் பல வலிந்த தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக * மன்னார் சிலாவத்துறை சிறிலங்கா படை முகாம் மீதான தாக்குதல். * ஆகாயக் கடல் வெளிச்சமரில் கடல் வழியிலான படை இறக்கத்துக்கு எதிரான சமர். என்பன பிரிகேடியரின் படைத்துறை ரீதியிலான செயற்பாட்டை வெளிப்படுத்தக் கூடியன. ஆகாயக்கடல் வெளிச்சமரைப் பொறுத்த வரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னெடுத்த முதலாவது மிகப்பெரும் மரபுவழிச் சமராக அது அமைந்ததோடு அனைத்துலக ஊடகங்களினதும், படை ஆய்வாளர்களினதும் கவனத்தை ஈர்த்த ஒரு சமராகவும் அது திகழ்ந்தது. இந்தச் சமரில் கடல் வழியிலான படை இறக்கத்துக்கு எதிரான சமருக்கு பிரிகேடியரே பொறுப்பாகச் செயற்பட்டார். இந்தச் சமரில் விழுப்புண்ணடையும் வரை அவர் களத்தை வழிநடத்தினார். இக்காலப் பகுதியில் கடற்புலிகளின் உருவாக்கமோ அல்லது கிட்டுப் பீரங்கிப் படையணி மற்றும் குட்டிசிறி மோட்டார் படைப்பிரிவின் உருவாக்கமோ ஏதும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் 1993ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளார்ந்த ரீதியாக ஒரு மிகப்பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்த நிலையில் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளராக பிரிகேடியர் நியமிக்கப்பட்டார். படைத்துறை ரீதியாக களங்களை வழிநடத்திய ஒருவர் ஒரு விடுதலை இயக்கத்தின் கடினம் மிக்க அரசியற் பணியை ஆற்றும் பொறுப்பையேற்றார். இவரது அரசியற்பணியானது இவர் அரசியல் துறைப் பொறுப்பாளராக பொறுப்பேற்ற 1993ஆம் ஆண்டிலிருந்து 2007ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி பல்வேறு வகையிலும் முதன்மை பெற்றதாகவுள்ளது. ஏனெனில் உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமும் சந்தித்திராத மிகப்பெரும் நெருக்கடிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முகங்கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் அரசியற்பணியை முன்னெடுக்க வேண்டிய சூழமைவு அவருக்குக் காணப்பட்டது. இந்த நிலையிலும் அவர் நெருக்கடிமிக்க பல செயற்றிட்டங்களைச் சீர்செய்யும் வகையிலான வேலைத்திட்டங்களுக்கு தலைமை தாங்க வேண்டியிருந்ததுடன் அதனை வெற்றிகரமாகவும் செயற்படுத்தினார். இப்பணியை நாம் இரண்டு வகையில் நோக்கலாம். * இராஜதந்திரத்தளத்தில் * மக்களின் தளத்தில் ஒரு விடுதலை இயக்கத்தின் இலட்சியம், கொள்கை என்பவற்றை செவ்வனே மக்கள் மத்தியில் கொண்டு சென்று மக்கள் ஆதரவுத் தளத்தைக் கட்டியெழுப்பும் பணியை ஆற்றுவது மிகக் கடினமான ஒரு பணியாகும். தொடர்ச்சியான போர் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் மக்களிடையே இப் பணியை ஆற்றுவதென்பது மிகப் பெரும் சிரமத்தைக் கொண்டது. ஆயினும் இப்பணியை பல்வேறு நெருக்குவாரங்களுக்குமிடையே அவர் முன்கொண்டு சென்றார். விடுதலை அமைப்பின் கொள்கையை முன்னெடுப்பது, மக்களை அணிதிரட்டுவது, விடுதலை இயக்கத்திற்கு எதிரான அனைத் துலகத்தின் இராஜதந்திர சமர்களுக்கு முகம் கொடுக்கின்ற அதேவேளை இலட்சியத்தின் மீது மக்களைத் தொடர்ந்து உறுதி கொள்ளச் செய்வது என்பவற்றோடு ஒரு நடைமுறை அரசிற்கான கட்டுமானங்களை உருவாக்கும் தலைமையின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பது எனப் பரந்துபட்ட வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுக்க வேண்டியிருந்தது. ஆயினும் இக்காலப்பகுதியில் இவர் ஒரு மிகப் பெரும் போர் இடப்பெயர்வு நெருக்கடிக்கும், இயற்கை அழிவுகளுக்கும் முகம் கொடுத்த மக்களின் புனர்வாழ்வு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்ற வாழ்வியல் நெருக்கடிகளையும் வெற்றிகரமாகக் கையாண்டார். * யாழ்ப்பாணஇடப்பெயர்வு * சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம் யாழ்ப்பாண இடப்பெயர்வைப் பொறுத்த வரையில் சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இரவில் இடம்பெயர்ந்த சூழ்நிலையில் அதற்கு முகம் கொடுத்து வன்னியை நோக்கி இடம்பெயர்ந்த மக்களின் இருப்புக்கு வழிகோலியது அவரது அரசியற்பணிக் காலத்தில் ஈட்டிய மிகப்பெரும் சாதனையாக நோக்கத்தக்கது. இத்தகையதொரு நிலையிலும் அரசியல்துறைக்கான சிவில் கட்டமைப்புக்கள் குலையாது அவற்றின் மீள் எழுச்சிக்கு பாடுபட்டமையானது முதன்மை மிக்க செயற்பாடாகும். இதேபோன்றுதான் 2004ஆம் ஆண்டு தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தோனேசியாவின் சுமாத்திரா ஜாவா கடற்பரப்பில் ஏற்பட்ட நிலவதிர்வு காரணமாக கரையோரப் பிரதேசங்களில் ஏற்பட்ட ஆழிப்பேரலை அழிவிலிருந்து மக்களை துரிதகதியில் மீள்நிலைக்குக் கொண்டுவரும் செயற்றிட்டம் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டபோது அதனை வெற்றிகரமாக செயற்படுத்தி அனைத்துலக சமூகத்தின் பாராட்டு தலையும், கவனத்தையும் தாயகத்தை நோக்கி ஈர்த்தமையானது இவரது திறனிற்குச் சான்றாகும். அனைத்துலகத்தின் உதவிகள் முழுமையாக தமிழ் மக்களுக்கு வந்தடைவதை சிறிலங்கா அரசு தடுத்துக் கொண்டிருந்த நிலையில் எட்டக்கூடிய அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி சிறிலங்காவை விஞ்சும் அளவுக்கு செயல்பூர்வமாக அதனை எதிர்கொண்டமையானது அனைத் துலக சமூகத்தின் கவனத்தை ஈர்த்தமைக்குக் காரணமாக இருந்தது. இச்செயற்றிட்டமானது பாதிக்கப்பட்ட மக்களை துரிதகதியில் இயல்பு நிலைக்கு கொண்டுவர மிகவும் பயனுடையதாக அமைந்திருந்தது. இது பிரிகேடியரின் அரசியற்பணியில் மக்களின் தளத்தில் அவர் ஆற்றிய மகத்தான பணியாக அமைந்தது என்றால் மிகையாகாது. இதேவேளை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இவரது இராஜதந்திரப் பணி வித்தியாசமானதாகும். அரசுகளுக்கிடையான இறுக்கமான பிணைப்பினூடாக முன்னெடுக்கப்பட்டு வரும் இராஜீக உறவுகளுக்கு நடுவே விடுதலை அமைப்பொன்றின் புரட்சிகர அரசியலை அனைத்துலக நாடுகளின் ஒத்திசைவுப் போக்கின் நடுவே முன்கொண்டு செல்லுதல் என்பது ஒரு கடினமான பணியாகும். விட்டுக் கொடுப்புக்கள் என்ற பேரிலும் இணைந்து செயற்படுதல் என்ற கோதாவிலும் ஒரு விடுதலை அமைப்பை அரசியல் நீரோட்டத்துக்குள் கொண்டுவருதல் என்ற புனிதம் கெட்ட இராஜதந்திர வலைப் பொறிக்குள் வீழ்த்திவிட முயலும் அனைத்துலக இராஜதந்திர முயற்சிகளுக்கு ஈடு கொடுத்து இலட்சியத்தையும், தலைமையின் முடிவுகளையும் பாதுகாக்கின்ற இராஜதந்திரப் பாத்திரத்தை பிரிகேடியர் ஏற்றிருந்தார். இன்றைய அனைத்துலக சமூகமானது அனைத்துலக ரீதியாக குருட்டுத்தனப் பார்வையூடாக எல்லா இனங்களின் போராட்டங்கள் மற்றும் முன்னெடுப்புக்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்த முனைந்து வரும் இன்றைய உலக யதார்த்ததில் ஒரு புரட்சிகர இராஜதந்திரப் பணியை பிரிகேடியர் மேற்கொண்டிருந்தார். சமாதானம் அடிமைகளை உருவாக்குகிறதென்றால் அதற்குச் சுதந்திரத்தை சாகடிக்கும் வல்லமை இருப்பதானாலேயேயாகும். அந்தச் சாகடிக்கும் வல்லமைக்குச் சவாலாக தமிழினத்தின் அரசியல் பணியை முன்னெடுத்து விடுதலைப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியான காப்பை பெறுவதென்பது மிகக் கடினமான பணியாகும். அதிலும் பல்வேறு நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட ஒரு விடுதலை அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவராக நின்று சர்வதேச சமூகத்தின் எதிர் முகத்தை எதிர்கொள்வது இலகுவான காரியமல்ல. பேச்சு என்ற சாக்கில் சர்வதேச சாசனங்களின் பொறிக்குள் வீழ்த்தி தமிழினத்தின் விடுதலைக் கனவை கலைத்துவிட முயலும் சூழ்ச்சிக்கு பலியாகாது சுதந்திர இயக்கத்தின் இலட்சியத்தை முன்கொண்டு செல்வதில் பிரிகேடியர் ஆற்றலோடு பணியாற்றினார். இதன்போது அனைத்துலக சமூகத்தின் அத்தனை இராஜதந்திரப் பிரயோக வடிவங்களுக்கும் அவர் முகங்கொடுக்க வேண்டியேற்பட்டபோதும் அவர் இலட்சியத்தை எந்தவொரு கட்டத்திலும் சிக்கலுக்கோ, சிரமத்துக்கோ உள்ளாக்க நேரிடும் வகையில் செயற்படவில்லை என்பது நோக்கத்தக்கது. பிரிகேடியர் அவர்களின் பதின் மூன்றாண்டு கால அரசியற் செயற்பாடுகளின்போது இரண்டு சமாதான பேச்சுக்களை எதிர்கொண்டுள்ளார். * யாழ்ப்பாணப் பேச்சுவார்த்தை. (முன்னாள் சிறிலங்கா சனாதிபதி சந்திரிகா காலம்) * நோர்வேயின் அனுசரணையுடனான சமாதானப் பேச்சுவார்த்தை. இவ்விரு சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போதும் பலகட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் பிரிகேடியரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன. அனைத்துலக சமூகத்தின் இராஜதந்திர சிக்கல்களுக்குள்ளோ, அனைத்துலக ஊடகங்களின் சிக்கலுக்குள்ளோ அகப்படாது அவர் நேர்த்தியாக முன்கொண்டு சென்றிருந்தார். இதில் நோர்வே அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட அமைதியில் எட்டாவது கட்ட சமாதானப் பேச்சுவார்த்தையானது அதாவது ஜெனீவா பேச்சுவார்த்தை பிரிகேடியர் தலைமையேற்று முன்னெடுத்திருந்த மிகச் சிறந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஒன்றாகும். பிரிகேடியரின் இராஜதந்திரப் பணிக்காலத்தில் அவர் ஆற்றிய மிகச் சிறந்ததும் மிகவும் பாராட்டப்பட்டதுமான ஒரு இராஜதந்திரப் பணியாகவே ஜெனீவா நோக்கப்படுகிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தீர்வுகளோ இணக்கப்பாடுகளோ ஏதுமற்ற நிலையில் ஐந்தாண்டுகளாகப் பேச்சுக்கள் மட்டுமே நீடித்து வந்த நிலையில் தமிழ்மக்களுக்கு ஏற்பட்டிருந்த ஆகக் குறைந்தளவிலான மனிதாபிமான நெருக்கடிகளைக் கூட களையமுனையாத சிறிலங்கா அரசின் போக்கை ஜெனீவா சமாதானப் பேச்சுவார்த்தையில் அனைத்துலக சமூகத்தின் முன்னிலையில் வெளிப்படுத்தி ஜெனீவா சமாதானப் பேச்சுவார்த்தையின் முழுத்தோல்விக்கும் சிறிலங்கா அரசே பொறுப்பென்பதை அந்தச் சமாதானப் பேச்சின் போது அவர் நிரூபித்திருந்தார். அத்தோடு ஜெனீவா- சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தமிழர் தரப்பில் தலைமை தாங்கிய பிரிகேடியர் சிறிலங்கா அரசின் தரப்பில் பேச்சு நாகரிகத்தைக் கூட கடைப்பிடிக்காத அநாகரிகப் போக்கு காணப்பட்ட நிலையிலும் பிரிகேடியர் நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் ஜெனீவா- பேச்சுவார்த்தையை கையாண்டிருந்தமையை இராஜதந்திர வட்டாரங்கள் அன்று பாராட்டிப் பேசியிருந்தமை கவனிக்கத்தக்கது. ஆயினும் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மீண்டுமொரு பேச்சுக்கான திகதியை நிர்ணயிக்கும் ஒரு வலுவிழந்த கோரிக்கையை பிரிகேடியரின் முன்னிலையில் அனுசரணையாளர்கள் முன்வைத்த போது அவர் உறுதியாக அக்கோரிக்கையை நிராகரித்து தமிழர் தரப்பின் உறுதியை நிலை நிறுத்தியிருந்தார். ஒரு கட்டத்தில் மென்போக்கு இராஜதந்திர அணுகுமுறையிலிருந்து சற்றே விலகி அச்சுறுத்தும் இராஜதந்திர அணுகுமுறையை அனைத்துலக சமூகம் கையாண்டபோது கூட பிரிகேடியர் புலிகளுக்கே உரித்தான உறுதியோடு அவற்றை நிராகரித்திருந்தார். அதாவது அடுத்த கட்டப் பேச்சுக்கான திகதி நிர்ணயம் செய்யப்படாது விட்டால் தமிழர் தரப்பு பேச்சுக்குழு கொழும்பினூடாக பயணம் செய்வதில் சிக்கல்கள் ஏற்படும் என்ற தொனியில் மிரட்டல் இராஜதந்திரத்தை பிரயோகித்த போது பிரிகேடியர் ஜெனீவாவில் வைத்து சர்வதேச இராஜதந்திரிகளுக்கு புலிக்குணத்தை வெளிப்படுத்தினார். அந்தச் சம்பவத்தைப் பிரிகேடியரே பின்னர் பின்வருமாறு தெரிவித்திருந்தார். அதாவது அடுத்த பேச்சுக்கான திகதியை நிர்ணயம் செய்யாது போகும் பட்சத்தில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக பிரயாணம் செய்வதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதற்குஸ இதுவொன்றும் எங்களுக்குப் பிரச்சினையில்லை. இந்தியாவினுடைய சமாதான முயற்சியின்போது இந்தியாவின் தவறான செயற்பாடு காரணமாக நாங்கள் அப்போது பன்னிரெண்டு போராளிகளை இழந்தோம். இப்போதும் ஏதேனும் சிக்கலை ஏற்படுத்தினால் மேலும் பதின்மூன்று போராளிகளை எமது விடுதலை இயக்கம் இழக்க நேரிடும். ஆனால் இது நோர்வேயின் சமாதான முயற்சியில் ஒரு புதிய தொடக்கமாக இருக்கும் எனச் சாவிற்கு அஞ்சாத புலிகளின் குண இயல்புநிலையில் மிகக் காட்டமாக அனுசரணையாளர்களுக்கு பதிலளித்தார். இது எந்தவொரு சூழலிலும், எந்தவொரு தளத்திலும் தளம்பாத பிரிகேடியரின் உறுதிமிக்க இராஜதந்திரப் பணிக்கு மிகப்பெரும் சான்றாகும். பின்னர் தமிழர் பேச்சுக் குழுவினர் பாதுகாப்பாகப் பயணம் செய்வது குறித்து அனுசரணையாளர்கள் வழமையைவிட அதிக சிரத்தையை எடுத்திருந்ததுடன் அதில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தியதாக தெரிவித்திருந்தார். இவ்வாறுதான் பிரிகேடியரின் இராஜதந்திரப் பணியும் மிகக் காத்திரமானதாக அமைந்தது. பிரிகேடியர் தனது இருபத்து மூன்று வருடகால விடுதலைப் பயணத்தில் பதின்மூன்றாண்டு காலம் தொடர்ச்சியாக படைத்துறைப் பணியையும் பதினான்காண்டு காலம் அரசியல் தளத்தில் இராஜதந்திரப் பணி, மக்கள் பணியென விடுதலை அமைப்பின் வளர்ச்சிக்கும், மக்களின் மேம்பாட்டுக்குமென அயராது உழைத்த விடுதலை இயக்கத்தின் செயற்பாட்டாளராகத் திகழ்கிறார். பிரிகேடியரின் இறுதிக் காலப்பகுதியானது அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும், படைத்துறை ரீதியாகவும் அவர் புடம் போடப்பட்ட ஒரு இளம் தலைவராக, தேசியத் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அமைவாக உருவாகியிருந்தார் என்றால் மிகையாகாது. http://meenakam.com/news/flashnews/2011/11/02 தாயக கனவுடன் சாவினை தழுவிய அந்த சந்தன பேழைகளுக்கு எனது வீரவணக்கம். ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையில் காவியமானோர் வீரவணக்க நாள் இன்று ஓயாத அலைகள் 3 பாரிய படை நடவடிக்கையில் ஒட்டுசுட்டான் படைத்தளம் மீதான தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராகவன், தளபதி லெப்.கேணல் இளையவன்(நியூட்டன்) உட்பட்ட மாவீரர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 02.11.1999 அன்று தொடங்கப்பட்ட ஓயாத அலைகள் 3 படைநடவடிக்கையின் வெற்றிக்கு அடித்தளமிட்ட ஒட்டுசுட்டான் படைத்தள வீழ்ச்சிக்காக தம்மை ஆகுதியாக்கிய சிறப்புத் தளபதி லெப்.கேணல் ராகவன், தளபதி லெப்.கேணல் நியூட்டன், மேஜர் சாரங்கன்(ஆறுமுகம் கதீபன்), கப்டன் ஜீவராசா(விசுவலிங்கம் சசிக்குமார்), லெப்.இருதயன்(வில்விறட் சுதேசன்), லெப். தரன்(தர்மு செல்வம்), லெப். செல்லத்தேவன்(பழனியாண்டி விமலன்), 2ம் லெப்.வண்ணன் (நல்லையா ரகுசீலன்), 2ம் லெப்.சூசை(சரவணமுத்து சதீஸ்), 2ம் லெப். புரட்சிமதி(கந்தையா அஜந்தன்), 2ம் லெப். நல்கீரன்(லோகநாதன் தவராசா), வீரவேங்கை இசைவேந்தன்(செல்வராசா நிசாந்தன்) ஆகிய சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி வீரர்கள் உட்பட்ட அனைத்து மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/news/flashnews/2011/11/02/ தாயக கனவுடன் சாவினை தழுவிய அந்த சந்தன பேழைகளுக்கு எனது வீரவணக்கம். 02.11.2000 அன்று முல்லைக்கடலில் காவியமான மாவீரர்களின் வீரவணக்க நாள் 02.11.2000 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட வழங்கல் நடவடிக்கையை முறியடிக்க வந்த சிறிலங்கா கடற்படையின் சுற்றுக்காவல் கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள். மாவீரர்கள் விபரம்: லெப்.கேணல் சல்மான்(இரும்பொறை), லெப்.கேணல் கதிர்காமரூபன்(பெத்தா), மேஜர் இலக்கியன், கப்டன் குமாரவேல், கப்டன் சதாசிவம், கப்டன் வல்லவன் ஆகிய கடற்கரும்புலிகளினதும், லெப்.கேணல் சதீஸ்குமார் உட்பட்ட கடற்புலிகளினதும் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாய்மண்ணின் விடியலுக்காய் கடற்தாயின் மடியில் காவியமான இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/historical/2011/11/02/02 தாயக கனவுடன் சாவினை தழுவிய அந்த சந்தன பேழைகளுக்கு எனது வீரவணக்கம்.
  13. 31.10.1987 அன்று இந்தியப் படையினருடனான நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கப்டன் நிசாரின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/news/flashnews/2011/10/31 தாயக விடுதலைக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எனது வீரவணக்கங்கள்.
  14. துன்கிந்த வழங்கல் கப்பல் மூழ்கடிப்பில் காவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்க நாள் 30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கடலரசன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் ஆகியோரின் 9ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிய இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/news/flashnews/2011/10/30/ தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை ஈகம் செய்த இந்த மாவீரர்களுக்கும், மற்றும் இன்றையநாளில் வீரசாவினைத்தளுவிய ஏனைய வீரமறவர்களுக்கும் எனது வீரவணக்கம்.
  15. யாழ். வலிகாமம் பகுதியில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட சூரியக்கதிர் படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் 30.10.1995 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அகிலா, லெப்.கேணல் உருத்திரா(உருத்திரன்) ஆகியோரின் 15ம் ஆண்டு வீரவணக்க நாளும், 30.10.2006 அன்று மட்டு மாவட்டம் வாகரைப் பகுதியில் அரவம் தீண்டியதனால் சாவடைந்த லெப்.கேணல் வரதா(ஆதி) அவர்களின் 4ம் ஆண்டு வீரவணக்க நாளும் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தம்மை அர்ப்பணித்து வீரச்சாவைத் தழுவிய இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கம். http://meenakam.com/...ews/2011/10/30/ தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை ஈகம் செய்த இந்த மாவீரர்களுக்கும், மற்றும் இன்றையநாளில் வீரசாவினைத்தளுவிய ஏனைய வீரமறவர்களுக்கும் எனது வீரவணக்கம்.
  16. 29.10.1999 அன்று முல்லை மாவட்டம் ஒட்டு சுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பௌத்திரன், மணலாற்றுப் பகுதியில் இதே நாள் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் ஆகியோரின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://meenakam.com/...ews/2011/10/29/ தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை ஈகம் செய்த இந்த மாவீரர்களுக்கும், மற்றும் இன்றையநாளில் வீரசாவினைத்தளுவிய ஏனைய வீரமறவர்களுக்கும் எனது வீரவணக்கம்.
  17. 29.10.1995 அன்று அளவெட்டியில் அமைந்திருந்த சிறிலங்கா படை நிலைகளிற்குள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 11 கரும்புலி வீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் தாயக விடுதலைக்காய் தம்மை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/historical/மாவீரர்கள்/2011/10/29 தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக தம் இனிய உயிர்களை ஈகம் செய்த இந்த மாவீரர்களுக்கும், மற்றும் இன்றையநாளில் வீரசாவினைத்தளுவிய ஏனைய வீரமறவர்களுக்கும் எனது வீரவணக்கம்.
  18. இன்று மேஜர் தில்லையன்,கப்டன் கலையரசன் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் திருகோணமலைத் துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிக் கலத்தினை மூழ்கடித்து வீரச்சாவடைந்திருந்தனர். இவர்களுக்கு ஈழதேசம் தனது வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது. http://www.eeladhesa...ndex.php?option தமிழ் ஈழத்தாயகத்தை மீட்க்கும் போராட்டத்தில் தம் இனிய உயிர்களை அர்ப்பணித்த இந்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.
  19. 25 /10 / 1985 இல் வீரசாவை தழுவிக்கொண்ட ஜீவன், சபா, லோரன்ஸ், லலித் நெடுமாறன் ஐயா வன்னிக்கு வந்து தமிழகம் திரும்பும்போது அவருக்கு பாதுகாப்புக்காக ஜீவன், சபா, மற்றும் லோரன்ஸ், லலித் மன்னார் சென்று பாதுகாப்பாக விக்ரர் அண்ணாவிடம் நெடுமாறன் ஐயாவை விட்டு விட்டு திரும்பி வந்தபோது வவுனியா சாஸ்திரி கூளாங்குளம் பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவம் கொப்பேகடுவ தலைமையில் பதுங்கி தாக்குதலின் போது. தமிழ் ஈழத்தாயகத்தை மீட்க்கும் போராட்டத்தில் தம் இனிய உயிர்களை அர்ப்பணித்த இந்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்கின்றோம்.
  20. இன்றுபோல் என்றும் வாழ இளைஞனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  21. தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும், கௌரவத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுரை அர்பணித்துள்ள மாவீர்களான தியாகிகள், காலம் காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்....... தேசியத்தலைவர்.

  22. ஓயாத அலைகள் – 4 படைநடவடிக்கையில் 24.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் சோபிதன், மேஜர் வர்மன் மற்றும் கப்டன் சந்திரபாபு ஆகியோரின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதேநாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/news/flashnews/2011/10/24/ தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதேநாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எனது வீரவணக்கங்கள்.
  23. 18.10.2000 அன்று ஓயாத அலைகள் 4 படை நடவடிக்கையில் நாகர்கோவில் களமுனையில் விழுப்புண்ணடைந்து 23.10.2000 அன்று வீரச்சாவை அணைத்துக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் சேகர் அவர்களினதும், இதே நாள் திருகோணமலைத் துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் மூன்று கடற்கலங்களை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் ரெஜி, மேஜர்கள் திருமாறன், மயூரன், நித்தி, நிதர்சன், றோஸ்மன் ஆகியோரின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீர மறவர்களிற்கும், இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/news/flashnews/2011/10/23 தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீர மறவர்களிற்கும், இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.
  24. தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த இந்த சந்தன பேழைகளுக்கு எனது வீர வணக்கம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.