Jump to content

தமிழரசு

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    33749
  • Joined

  • Days Won

    29

Everything posted by தமிழரசு

  1. எல்லாளன் தாக்குதல் 4 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் முக்கியத்துவமுடிய தாக்குதல்களின் பட்டியலில் இடம் பிடித்த எல்லாளன் தாக்குதல் நடவடிக்கை 22.10.2007 அன்று தலைவர் அவர்களின் இரகசிய திட்டத்திற்கிணங்க நடத்தப்பட்டு பெரும் வெற்றியும் ஈட்டப்பட்டது. எல்லாளன் நடவடிக்கை என்பது இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புக் கரும்புலி அணியினர், 2007 அக்டோபர் 22 முன்காலையில் நடத்திய தாக்குதலாகும். இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளால் தரை மற்றும் வான் வழித் தாக்குதல்கள் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் 21 பேரும் இலங்கை வான்படையினர் 13 பேரும் இராணுவத்தினரில் ஒருவரும் இதில் கொல்லப்பட்டனர். மேலதிகமாக தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல வானூர்திகளும் அழிக்கப்பட்டன. ஈழப் போர் தொடங்கியதிலிருந்து கரும்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட பெரிய தாக்குதல் இதுவாகும் 22.10.2007 அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் சிறீலங்கா வான்படைத்தளத்தை தாக்கி அழித்த நாள். அனுராதபுரம் வான்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட “எல்லாளன்” நடவடிக்கையில் வீரகாவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 4 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். இந்த மாவீரர்களுக்கு ஈழதேசம் இணையமும் எமது வாசகர்களும் வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.http://www.eeladhesa..._1315390405.jpg http://youtu.be/I5mdJv6d4Lc http://www.eeladhesa...ndex.php?option தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த இந்த சந்தன பேழைகளுக்கு எனது வீர வணக்கம்.
  2. இன்று பல நேரடி சமரின் போது வீரகாவியமான ஏழு மாவீரர்களின் வீரவணக்க நாள் 21.10.1987 அன்று யாழ். கோண்டாவில் பகுதியில் இந்தியப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் திருகோணமலை மாவட்டச் சிறப்புத் தளபதியுமான லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர் அவர்களின் 24ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 21.10.2001 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வழங்கல் பணியை மேற்கொண்டிருந்தகடற்புலிகளின் கலங்களிற்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில்ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத்தழுவிக் கொண்ட கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் மற்றும் இதேநாள் சுற்றுக்காவல்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா கடற்கலங்களை முல்லைக்கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் றோசா, கடற்புலிகள் லெப்.கேணல் கலாத்தன், மேஜர் சிவா,கப்டன் செல்லப்பன், கப்டன் செந்தளிர், லெப். விநோதன் ஆகியோரின் 10ம் ஆண்டுநினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலை என்ற உயரிய இலட்சியததை அடைவதற்காக தம்மை ஆகுதியாக்கிய இம்மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். http://www.eeladhesa...ndex.php?option தமிழீழ தாயக விடுதலை என்ற உயரிய இலட்சியததை அடைவதற்காக தம்மை ஆகுதியாக்கிய இம்மாவீரர்களிற்கு எனது வீரவணக்கங்கள்.
  3. 21.10.1987 அன்று யாழ். கோண்டாவில் பகுதியில் இந்தியப் படையினருடனான மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரும் முன்னாள் திருகோணமலை மாவட்டச் சிறப்புத் தளபதியுமான லெப்.கேணல் சந்தோசம் மாஸ்ரர் அவர்களின் 23ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.21.10.2001 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வழங்கல் பணியை மேற்கொண்டிருந்தகடற்புலிகளின் கலங்களிற்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில்ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத்தழுவிக் கொண்ட கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் மற்றும் இதேநாள் சுற்றுக்காவல்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா கடற்கலங்களை முல்லைக்கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் றோசா, கடற்புலிகள் லெப்.கேணல் கலாத்தன், மேஜர் சிவா,கப்டன் செல்லப்பன், கப்டன் செந்தளிர், லெப். விநோதன் ஆகியோரின் 9ம் ஆண்டுநினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலை என்ற உயரிய இலட்சியததை அடைவதற்காக தம்மை ஆகுதியாக்கிய இம்மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/news/videos/2011/10/21/ தமிழீழ தாயக விடுதலை என்ற உயரிய இலட்சியததை அடைவதற்காக தம்மை ஆகுதியாக்கிய இம்மாவீரர்களிற்கு எனது வீரவணக்கங்கள். கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் எமது வாகனம் புதுக்குடியிருப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. விசுவமடு றெட்பானாவைத் தாண்டும்போதுதான் அவனைப் பார்த்தேன். எதிர்முனையிலிருந்து சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். வாகனம் ஓரளவு மெதுவாகச் சென்றதால் வடிவாக அவனைப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. என்றாலும் நம்பமுடியவில்லை. பக்கத்திலிருந்த செல்வனைக் கேட்டேன். செல்வன் அவனைக் கவனிக்கவில்லை. அவன் சைக்கிளோட்டிச் செல்வதைச் சொன்னபோது செல்வனும் நம்பவில்லை. ஏனென்றால் அவன் தனது இரண்டு கால்களையுமே சில மாதங்களின் முன்னர் இழந்திருந்தான். இளங்குயிலனின் இயற்பெயர் பற்றிக் எட்மன். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்திருந்தாலும் யாழ்ப்பாணத்தில் தங்கிப் படித்துவந்தான். இடைநிலைப் பள்ளியிலே அவனுடன் ஒன்றாகப் படித்து ஓரிரு நாட்கள் இடைவெளியில் இயக்கத்துக்கு வந்து ஒரே படையணியில் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எட்மன் சிறந்த குறுந்தூர ஓட்டக்காரன். வலிகாமத்தில் விளையாட்டுக்கெனப் பெயர்பெற்ற அக்கல்லூரியில் குறுந்தூர ஓட்டத்தில் முன்னணியில் திகழ்ந்தவர்களுள் எட்மனும் ஒருவன். இராணுவத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் நாங்களும் கல்லூரியும் இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து திரிந்தபோது எட்மன் சிலகாலம் யாழ்ப்பாண நகர்ப்பகுதியில் படித்தான். பிறகு மானிப்பாயில் மீண்டும்வந்து எம்மோடு இணைந்துகொண்டான். அந்தநாட்கள் இனிமையானவை. எட்மன் இப்போது குழப்படிக்காரனாக மாறியிருந்தான். எப்போதும் குறும்புத்தனமாகவே இயங்கிக் கொண்டிருப்பான். முன்புபோல் அவனால் ஓட்டத்தில் முதலாவதாக வரமுடியவில்லையென்றாலும் துடியாட்டமாகவே இருந்தான். சிறிலங்கா அரசுக்கும் இயக்கத்துக்குமிடையில் பேச்சுக்கள் முறிந்து மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கிய கையோடு எமது வகுப்பிலிருந்தும் கல்லூரியிலிருந்தும் நாளுக்குநாள் ஒவ்வொருவராக போராட்டத்திலிணைந்துகொண்டிருந்தனர். எட்மனும் ஒருநாள் போனான்; இளங்குயிலனாக ஆனான். இளங்குயிலன் பயிற்சியெடுத்ததும் இயங்கியதும் இம்ரான் பாண்டியன் படையணியில். சண்டைக் களமுனையோடு தொடர்புபடாத பணியிலிருந்தவன் பொறுப்பாளருக்குத் தொல்லைகொடுத்துச் சண்டைக்குப் போனான். ‘ஜெயசிக்குறு’ என்ற பெயரில் வன்னியை ஊடறுத்துச் செல்லவென சிறிலங்காப் படைகள் தொடங்கிய நடவடிக்கைக்கு எதிரான தொடர்சமரில் இளங்குயிலனும் தனது அணியோடு பங்குபற்றினான். அப்போதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பணியிலீடுபட்டிருந்த இளங்குயிலனின் அணிமீது எதிரி பதுங்கித்தாக்குலொன்றைச் செய்தான். நடந்துகொண்டிருந்த இளங்குயிலனிலிருந்து இரண்டடி தூரத்துக்குள்ளிருந்து கிளைமோர் வெடித்தது. உயிர்தப்பினானாயினும் இரண்டு கால்களையும் முழங்காலோடு இழந்திருந்தான். மருத்துவமனையிலிருந்து மீளவும் முன்பு செய்த பணிக்கே திரும்பியிருந்தான். இதே இளங்குயிலன் சிலநாட்களிலேயே தானாகவே சைக்கிளில் செல்வது எனக்கு வியப்பைத் தந்தது. நம்ப முடியாமலுமிருந்தது. நான் கண்டது அவனைத்தானா என்பதை உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. வேறிடத்தில் கேட்டு இளங்குயிலன் சைக்கிள் ஓடுகிறான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். அவனது விடாமுயற்சியும் ஓர்மமும் கடின உழைப்பும் அவனை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும். காயம் மாறி, இரண்டு மரக்கால்களைப் பொருத்தி சில நாட்களிலேயே தனியாகவே சைக்கிள் ஓடிப் பணியாற்றப் புறப்பட்டதிலிருந்து அவனைப் புரிந்து கொள்ளலாம். களமுனைக்கு வெளியிலே இளங்குயிலன் இயக்கத்திலாற்றிய பணிகள் தொடர்பாகப் பேச முடியாது. இம்ரான் பாண்டியன் படையணியின் மிக முக்கிய பிரிவொன்றில் கடமையாற்றினான். கால்களை இழந்தபின்னும் மீளவும் அதே பிரிவில் சில ஆண்டுகள் பணியாற்றிக் கொண்டிருந்தான். இந்நிலையில்தான் அவனது நீண்டநாள் விண்ணப்பம் ஏற்கப்பட்டு கடற்கரும்புலி அணியிலே இணைக்கப்படுவதற்கான அனுமதி வந்திருந்தது. மிக மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கடற்கரும்புலிகள் அணியிலே இணைந்து தனது பணிகளை முன்னெடுத்தான். கரும்புலிகள் அவரவர்களுக்கான சந்தர்ப்பம் வரும்வரைக்கும் தமக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைச் செய்துகொண்டிருப்பார்கள். அதன்படி இளங்குயிலனும் தனக்கிடப்பட்ட பணிகளைச் செய்துகொண்டிருந்தான். அவன் கடற்கரும்புலிகள் அணியில் இணைந்தபின்னர் அவனை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கரைச்சிக் குடியிருப்பில் நானும் சிலாவத்தையில் இளங்குயிலனும் பணியாற்றியதால் இடையிடையே எங்காவது சந்திக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஊர்க்கதைகள், பள்ளிக்கூடக் கதைகள் என்று எமது உரையாடல் விரியும். பழைய நண்பர்களைப் பற்றி விசாரித்துக் கொள்வோம். ஆன்பொலின் ரீச்சரைப் பற்றி ஒவ்வொருமுறையும் கேட்பான். என்னைப் போலவே அவனும் ரீச்சரை அடிக்கடி கண்டிருந்தாலும் ஒருமுறைகூட ஆறுதலாகக் கதைத்ததில்லை. அவன் வீரச்சாவடைவதற்கு மூன்றுநாட்களின் முன்னர் சந்தித்துக் கதைத்தேன். வழமைபோலவே செந்தழிப்பாக வந்திருந்தான். வழமையை விட அதிகநேரம் கதைத்துக் கொண்டிருந்தான். பழைய கூட்டாளிகள், பொறுப்பாளர்களைப் பற்றி விசாரித்தான். வழமைபோலவே எல்லோரையும் கேட்டதாகச் சொல்லச் சொன்னான். வழமைபோலவே புன்னகையோடு விடைபெற்றுச் சென்றான். 21.10.2001 அன்று தமிழீழக் கடற்பரப்பில் எமது இயக்கத்தின் வினியோக நடவடிக்கைக்குப் பாதுகாப்பளிக்கும் பணியிலீடுபட்டிருந்தபோது எதிரியுடன் ஏற்பட்ட மோதலில் கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான். விடாமுயற்சி, ஓர்மம், பிடிவாதம், குறும்புத்தனம் என கலந்துகட்டிய ஓர் அருமையான தோழன் இளங்குயிலன் என்ற பற்றிக் எட்மன். – அன்பரசன் http://meenakam.com/historical/2011/10/21/
  4. 18.10.2006 அன்று சிறிலங்காவின் காலித்துறை முகத்தில் வைத்து பல கடற்படைக் கலங்களை அழித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் தில்லைச்செல்வி, லெப்.கேணல் அரவிந்தா உட்பட்ட கடற்கரும்புலிகளின் 4ம் ஆண்டு நினைவு நாளும் 18.10.1997 அன்று புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேகப் பீரங்கிப் படகினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் திருமாறன், கப்டன் சின்னவன் ஆகியோரின் 13ம் ஆண்டு நினைவு நாளும் 18.10.1995 அன்று யாழ். வலிகாமம் பகுதியில் சிறிலங்கா படையினரின் சூரியக்கதிர் படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நாவண்ணனின் 15ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள் http://meenakam.com/news/flashnews/2011/10 தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
  5. உங்கள் கருத்துடன் முரண்பாடு கிடையாது, சிந்திக்க வைத்தமைக்கு நன்றி நிழலி
  6. இன்று பிறந்த நாள் கொண்டாடும் வோயகேர் மற்றும் கஜீவன் ஆகியோருக்கு தமிழ் அரசின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  7. 17.10.1995 அன்று திருகோணமலை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துருப்புக்காவி கலத்தினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் சிவசுந்தர், கப்டன் ரூபன், கப்டன் சிவகாமி ஆகியோரின் 15ம் ஆண்டு வீரவணக்க இன்றாகும். தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம்மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/news/flashnews/2011/10/17/ தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம்மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
  8. தாயக்கனவுடன் சாவினை தழுவிய இந்த சந்தன பேழைக்கு எனது வீரவணக்கம்.
  9. மயூரேசன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  10. 14.10.1999 முல்லை மாவட்டம் கொக்குளாய்க் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் மோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளை எதிர்பாராத விதமாக ஏற்பட்ட படகு விபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அருந்தவம், லெப்.கேணல் புவனேஸ் உட்பட்ட ஆறு கடற்கரும்புலி மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். கொக்குளாய் கடற்பரப்பில் கடற்படையினரின் டோறா கடற்கலங்கள் கடற்புலிகளால் வழி மறிக்கப்பட்டு தாக்கப்பட்டுக் கொண்டிருந்தவேளை டோறா கலங்களை இலக்கு வைத்து நகர்ந்து கொண்டிருந்த இரு கடற்கரும்புலிப் படகுகள் எதிர்பாராத விதமாக ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதினால் ஏற்பட்ட விபத்தில் லெப்.கேணல் அருந்தவம், லெப்.கேணல் புவனேஸ், மேஜர் கலைமகள், மேஜர் சூரியப்பிரபா, மேஜர் பரணி, கப்டன் சுதாகரன் ஆகிய கடற்கரும்புலிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற மோதலின்போது கடற்படையின் நான்கு டோறா படகுகள் கடற்புலிகளால் சேதமாகக்கப்பட்டன. இதன்போது கடற்புலி மேஜர் துவாகரன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். http://www.eeladhesa...ndex.php?option தாயக விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈகம் செய்த இந்த வீர வேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
  11. 13.10.1997 அன்று வவுனியா மாவட்டம் பெரியமடுப்பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சந்திரகாந்தன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். 13.10.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் அன்பரசன் அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தனது இன்னுயிரை ஈகம் செய்த இந்த மானமாவீரனுக்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/news/flashnews/2011/10/13/13 தாயக விடுதலைக்காக தம்மையே அர்ப்பணித்த இம்மாவீரர்களுக்கு வீரவணக்கம்.
  12. சிறுத்தைபுலி, அளவையூர் கவிகுமரன், கவிக்குமரன் ஆகியோருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  13. 12.10.1986 அன்று மன்னார் மாவட்டம் அடம்பன் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிககொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://www.eeladhesa...ndex.php?option மண்ணின் விடியலுக்காக தம்மையே ஆகுதியாக்கிய இந்த மாவீரருக்கு எனது வீரவணக்கம்
  14. நிதர்ஷன் உங்களிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  15. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சப்த89
  16. வன்னி 01 , அந்நியன்,செழியன், கெவின் ருடோல்ப், ஆகியோருக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  17. பெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதி “..பெண் அடிமைத்தனத்தின்விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூக விடுதலையைப் பெற்றதாக கூறமுடியாது…” -தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்- தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விழுதுகளுள் ஒன்றாக உருவாகி தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி………… அன்று பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள், அடக்குமுறைகள் என்பன மேலோங்கியிருந்தன. எமது சமூகமோ சாதி, சமய கட்டமைப்புக்களால் இறுக்கமாக பின்னிப் பிணைந்திருந்தது. அவை எமது சிந்தனைகளுக்கும் தடைக்கல்லாகவே அமைந்தன. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவை அன்று பெண்களுக்கான வரைவிலக்கணமாக எழுதப்பட்டன. அன்றைய சமூக அமைப்புக்களில் பெண்ணானவள் பலவீனமுடையவளாகவும், பயந்தவளாகவும், பணிவு மிக்கவளாகவும், வீட்டின் கடமைகளைச் செய்பவளாகவுமே கருதப்பட்டாள். உறுதியானவனாகவும் உயர்ந்தவளாகவும் ஆண் சமூகத்தில் போற்றப்பட்டாள். வீட்டின் ஆஸ்தான நாயகியாக விளங்கிய பெண்ணுக்கு அடுப்பங்கரைதான் அவளின் உறைவிடமானது. கரிப்பு…. அவளுடைய சுவாசத்தோடு ஊறிப் போனது. கல்வி கற்பதிலும், தொழில் புரிவதிலும் அவளுக்கு வேற்றுமை காட்டப் பட்டது.; அடக்கம் என்ற கட்டமைப்புக்குள் அலங்காரப் பதுமையாக மிளிர்ந்த பெண்ணின் ஆளுமைகள் எல்லாம் சமூக சம்பிரதாயங்களின் முன் நசுங்கிப் புதையுண்டு போயின. தனது விதியை எண்ணி நொந்து கொள்பவளாகவே அவள் வாழ்ந்தாள். விடுதலைப் போராட்டத்தின் “விழுதுகளுள் ஒன்றாக” உருவாகி; தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி………… இப்படியானதோர் சமூகக் கட்டுமானங்களில் இருந்து தான் அந்தப் போர் புரட்சி நோக்கி புறப்பட்டது. அதற்குரிய ஆவணமாக மாறி தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தனக்கென ஒரு முத்திரையை தடம் பதித்துக் கொண்டாள் 2 ஆம் லெப். மாலதி அவர்கள். எமது தேசம் இந்திய இராணுவத்தின் கைகளில் சிக்குண்டு தவித்த போது ஆத்ம வேகம் கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உட்படுவதைப் பார்த்துப் பொங்கியெழுந்தாள். அவளுக்குள் வல்லமை பிறந்தது வானத்தை வளைக்கவும், மலைகளைக் குடையவும் சக்தி வளர்ந்தது. சமூகத்தை சீரமைக்கவும் தேசத்தை மீட்டெடுக்கவும் அவள் நிமிர்ந்தாள். அவள் கரங்கள் உறுதியோடு எழுந்தன. எம் தமிழர் தேச விடுதலையையும் பெண்களினது விடுதலையையும் காப்பாற்றுவற்காக தன் விதியைத் தானெ எழுதும் பெருமைக்குரியவளாக்கி தலைவர் பிரபாகரனின் பிள்ளைகளில் ஒருத்தியாகி ஆயுதம் ஏந்தினாள். அமைதிப்படையின் போர்வையில் தமிழீழமெங்கும் அகலக்கால் பரப்பி எம்மண்மீது யுத்தமொன்றைத் திணித்தனர் இந்தியப் படையினர். 1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி நள்ளிரவு 1.15 மணியளவில் தமிழ் பெண்களுக்கு அநீதி விளைவித்த வல்லாதிக்க இந்திய இராணுவத்துக்கு எதிராக கோப்பாய் கிறேசர் வீதியில் மகளிர் அணிப்பிரிவினர் தாக்குதலொன்றைச் செய்வதற்காக தம்மைத் தயார்படுத்தி நிற்கின்றார். மாலதியின் கண்கள் எந்நேரமும் வீதிகளை அவதானித்தபடியே தான் இருந்தன. இந்திய இராணுவச் சக்திகளை அழிக்க வேண்டுமென்ற ஆதங்கம் அவள் மனதில் குடிகொண்டேயிருந்தது. அவ்வேளை கோப்பாய்ச் சந்தி கடந்து வாகனத்தில் வந்த இராணுவத்தினர் மீது தாக்குதலைத் தொடுத்தனர். பெண் அணியினர் இங்கு மாலதியின் துப்பாக்கியிலிருந்த குண்டுகள் முதலில் இந்திய இராணுவத்தைப் பதம் பார்த்தன. துப்பாக்கிகளின் சூட்டுச் சத்தங்களும் அவற்றின் அதிர்வலைகளும் சண்டை கடுமையாக நடந்து கொண்டிருந்ததை எடுத்தியம்பின. மாலதி இராணுவத்துக்கு மிகவும் அண்மையில் நின்று தாக்குதலை முறியடித்துக் கொண்டிருந்த தருணம் திடீரென்று காலில் காயமுற்றாள். மாலதியின் குரல் சீறிப் பாயும் ரவைகளின் ஒலிகளுக்கு மத்தியிலும் ஏனைய போராளிகளின் செவிகளுக்கு கேட்கத்தான் செய்தது. ‘நான் காயப்பட்டிட்டன் என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயுதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ.” தான் வீரமரணம் எய்தாலும் உயிரைவிட மேலாக நேசித்த ஆயுதம் அந்நியரின் கைகளுக்குப் போய்விடக் கூடாது என்ற உறுதியான எண்ணத்தில் தன்னைப் பார்க்க வேண்டாம். ஆயுதத்தை எடுத்துச் செல்லும்படி கூறிக் கொண்டிருந்தார். அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் எனச் சென்ற சக போராளி ஒருவரிடம். ‘என்ர ஆயுதம் பத்திரம் என்னை விட்டடிட்டு ஆயுதத்தைக் கொண்டு போ.” எனச் சொல்லிக் கொடுத்து தனது கழுத்தியிலிருந்த நஞ்சையருந்தி தனது இலட்சியக் கனவோடு தாய் மண்ணை முத்தமிட்டு தமிழீழ வரலாற்றில் புதிய சரித்திரம் ஒன்றைப் படைத்து தமிழீழத்தின் முதலாவது பெண் வித்தாய் புதைந்தாள். அவளின் வேண்டுகோளுங்கிணங்க அவரது ஆயுதம் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு இன்னொரு போராளியின் கரங்களில் ஒப்படைக்கப் பட்டது. ஒவ்வொரு ஆயுதத்தின் பெறுமதிமிக்க மதிப்பையும் வெற்றி இலக்கு நோக்கிய பயணத்திலே அவற்றின் முக்கிய தன்மையையும் மாலதி அவர்கள் நன்கு உணர்ந்திருந்தமையை இது வெளிக்காட்டி நிற்கின்றது. இன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு ஆயதத்தின் பெறுமதியையும் அதன் முக்கியத்துவத்தையும் ஒவ்வொரு போராளியும் உணர்ந்து அவற்றை நேசிக்கும் மனப்பாங்கையும் ஈழத் தமிழருக்கான விடுதலைப் போராட்டம் எமக்கு சித்தரித்துக் காட்டுகின்றது. எமது சமூக அமைப்பில் புரையோடிப் போயிருந்த பிற்போக்குத் தனமான பழமைவாத சிந்தனைகளை உடைத்துக் கொண்டு போராடப் புறப்பட்ட மாலதி ஆணைவிடப் பெண்ணுக்கு ஆளுமைத் தன்மை குறைவு என்னும் கருத்தியல் வாதங்களை 21 வருடங்களுக்கு முன் எமது சமூகத்தின் முன் பொய்மைப் படுத்தினர். அவர் புதுமைப் பெண்ணாகவல்ல புரட்சிப் பெண்ணாக அவதாரமெடுத்தார். அவரின் நிமிர்வு ஆயிரமாயிரம் தலைகளை உருவாக்கியது. அவரின் பாதங்கள் ஆயிரமாயிரம் பாதங்களுக்கு வழிகாட்டின. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் விழுதுகளுள் ஒன்றாக உருவாக்கி இன்று அதைத் தாங்கும் வேராகவும் பரிணாமம் பெற்றுவிட்ட மகளிர் படையணிகளின் தோற்றம், வளர்ச்சி, எழுகை என்பவற்றுக்கு வித்திட்டவர் 2 ஆம் லெப். மாலதி அவர்கள். இவரின் வழிகாட்டல் மகளிர் பிரிவினருக்கு புதியதொரு அத்தியாயப் படிக்கல்லாகவும் அமைந்தது. மாலதியின் நினைவாக அவருடைய பெயரைத் தாங்கிய மாலதி படைப்பிரிவினர் தமிழீழ போரியல் வரலாற்றில் பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றமை இங்கு சுட்டிக் காட்டத்தக்கது. 2 ஆம் லெப். மாலதி விதைத்த விடுதலை மூச்சு என்னும் விதை தமிழீழப் பெண்களிடத்தில் பெரு விருட்சமாக வளர்ந்தும் பரந்தும் வியாபித்தும் அவர்களின் எழுச்சிக்கு கைகோர்த்தன.நம் தமிழீழப் பெண் சமூகத்தின் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம். தமிழர் வரலாற்றிலே நடைபெறாத புரட்சியொன்று தமிழீழத்தில் நடைபெறுகின்றது. எனும் தலைவரின் சிந்தனைத் தெளிவோட்டம் இங்கு நினைவுகூறத் தக்கது. தமிழீழ விடுதலை வரலாற்றில் பெண்கள் தமக்கென ஒரு இடத்தினை தட்டிச் சென்றுள்ளனர். பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மகாகவி பாரதியார் சொன்ன பெண்ணியலையும் மிஞ்சி விட்டனர் எமது தேசத்துப் பெண்கள். இன்று பல கட்டுமானத் துறைகளிலும் முன் நிற்பது இவர்கள் தான். தம் தேச விடுதலைக்காகவும் தமிழின விடுதலைக்காகவும் இலங்கை அரசிடம் நீதி கேட்கும் தமிழீழப் பெண்களின் உணர்வு வேட்கைகள் எமக்கொரு இறுதி இலட்சியம் கிடைக்கும் வரை அவர்களின் விடுதலை நோக்கிய பயணங்கள் மேலும் வலுப்பெற்றுக் கொண்டேயிருக்கும். தாய்மண் விடிவுக்காக இன்று புலம்பெயர் வாழ் தாய் நாட்டுப் பெண்களின் புரட்சியானது மாபெரும் எழுச்சிகளைத் தோற்றுவித்து வருகின்றது. ஆனால் ஒவ்வொரு தமிழின பெண்ணின் ஆத்மார்த்த கருத்துக்களின் வெளிப்பாடுகள் இன்னும் உலக மாதாவின் செவிகளுக்கு கேட்கப்படவில்லை. தமிழ்த் தாய் வயிற்றில் பிறந்த ஒவ்வொரு தமிழ்ப் பெண்களாகிய நாம் தமிழ்மண் விடிவுக்காகவும் பெண்ணியலின் சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்து போராடுவோம். http://youtu.be/4ArMoG66unY http://youtu.be/ZPl-XKh3dvE http://youtu.be/0F7rMtZze94 http://www.tamilthai.com/?p=28133 தாயக விடுதலை என்ற உயரிய இலட்சியத்தை அடைவதற்காக தம்மை ஆகுதியாக்கிய இம்மாவீரர்க்கு எனது வீரவணக்கங்கள்.
  18. இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் கஜன் & யோகன் இருவருக்கும் பிறந்நாள் வாழ்த்துக்கள் ...........
  19. வெள்ளி, 7 அக்டோபர், 2011 06.10.1998 மாங்குளம் நோக்கி முன்னேற முயன்ற ஜெயசிக்குறு படையினர் மீதான முறியடிப்புத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் டயஸ் உட்பட்ட மாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாளும், 06.10.2000 அன்று ஓயாத அலைகள் - 4 நடவடிக்கையில் நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முன்னகர்வு முயற்சியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சாந்தகுமாரி உட்பட்ட மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாளும், 06.10.2006 அன்று மட்டு மாவட்டம் வாகரைப் பகுதியில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் புனிதா உட்பட்ட மாவீரர்களின் 5ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தாயக விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிய இம்மாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள் தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
  20. ராஜவன்னியன் சிலருக்கு பச்சை என்றால் கொள்ள ஆசை அவர்களுக்கு குத்த்ங்கோ ...........
  21. தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
  22. எமது எதிரியையும் அவனது நோக்கத்தையும் இனங் கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாடுகிறார்கள், எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகின்றார்கள். தமது சுயநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக்கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான "பிற்போக்கு" சக்திகள் மீது, எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். - தமிழீழ தேசியத் தலைவர்.

  23. தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
  24. 01.10.1999 அன்று தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் அண்ணாச்சி அவர்களின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://www.eeladhesa...ndex.php?option தாயக விடுதலை என்ற உயரிய இலட்சியத்தை அடைவதற்காக தம்மை ஆகுதியாக்கிய இம்மாவீரர்க்கு எனது வீரவணக்கங்கள்.
  25. விசுகுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....... மேலும் பல பெற்று வாழவாழ்த்துகின்றேன். அன்புடன் தமிழரசு.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.