ஆரதி

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    3,406
  • Joined

  • Last visited

  • Days Won

    1

ஆரதி last won the day on February 27 2014

ஆரதி had the most liked content!

Community Reputation

336 ஒளி

About ஆரதி

  • Rank
    Advanced Member

Profile Information

  • Gender
    Female

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

  1. கோழி ரசம்! தேவையானவை: எலும்புடன் சேர்ந்த கோழி இறைச்சி - 350 கிராம் பெரிய வெங்காயம் - ஒன்று தக்காளி - ஒன்று கறிவேப்பிலை - சிறிதளவு மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு வதக்கி அரைக்க: எண்ணெய் - ஒரு தேக்கரண்டி சின்ன வெங்காயம் - ஒன்றரை கைப்பிடி அளவு தக்காளி - ஒன்று இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு வரமிளகாய் - 3 மல்லித் தூள் - 2 தேக்கரண்டி ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி இடிக்க: மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி சின்ன வெங்காயம் - 5 பூண்டு - 4 பல் தாளிக்க: எண்ணெய் - ஒரு தேக்கரண்டி சீரகம், சோம்பு - தலா அரை தேக்கரண்டி செய்முறை: கோழியைச் சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வதக்கி அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் உள்ள வரமிளகாயைப் போட்டு வறுக்கவும். மிளகாய் வறுபட்டதும் சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கி எடுத்து ஆறவிடவும். நன்கு ஆறியதும் அதனுடன் மல்லித் தூள் மற்றும் ரசப்பொடி சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெறும் கடாயில் இடிக்கக் கொடுத்துள்ள மிளகு மற்றும் சீரகத்தை வறுத்து, ஆறவிட்டு பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து இடித்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம் தாளித்து, நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதனுடன் கோழி, நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வதக்கியவற்றை ப்ரஷர் குக்கருக்கு மாற்றி, அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து, நான்கு கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும். ப்ரஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து ரசத்தை கொதிக்கவிடவும். கொதித்ததும் இடித்து வைத்துள்ள மிளகு, சீரகக் கலவையைத் தூவி இறக்கவும். சுவையான கோழி ரசம் தயார். சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும், சூப் போல பருகவும் அருமையாக இருக்கும். http://www.arusuvai.com/tamil/node/28799 I don't guarantee the correctness of the recipe. Try at your own risk! - ஆரதி
  2. தேவையானவை க்ரீம் செய்ய: பால் - அரை லிட்டர் கஸ்டர்ட் பவுடர் - 3 மேசைக்கரண்டி (வெனிலா ஃப்ளேவர்) மைதா - 2 தேக்கரண்டி ஃப்ரஷ் க்ரீம் - 2 தேக்கரண்டி சீனி - 50 கிராம் வெனிலா எசன்ஸ் - கால் தேக்கரண்டி வெண்ணெய் - 2 தேக்கரண்டி கடல்பாசி செய்ய: கடல்பாசி - சிறிய கைப்பிடி அளவு (5 கிராம்) சீனி - 4 மேசைக்கரண்டி ஃபுட் கலர் - சில துளிகள் வெனிலா எசன்ஸ் - ஒரு துளி கிவி பழம் - ஒன்று செய்முறை க்ரீம் செய்ய கொடுத்துள்ளவற்றில் வெண்ணெய் தவிர மற்ற அனைத்தையும் பாலில் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து க்ரீம் பதத்திற்கு காய்ச்சவும். மற்றொரு பாத்திரத்தில் இரண்டு கப் கொதிக்கும் தண்ணீரில் கடல்பாசியைப் போட்டு கரைந்ததும் சீனி மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்ததும் இறக்கி வைத்து 10 நிமிடங்கள் ஆறவிடவும். காய்ச்சி வைத்துள்ள க்ரீமுடன் வெண்ணெயைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறிவிட்டு இறக்கி வைக்கவும். தயார் செய்த க்ரீமை சிறு கோப்பைகளில் ஊற்றி, செட் ஆகும் வரை (5 நிமிடங்கள்) வைத்திருக்கவும். அதன்மீது வட்டமாக நறுக்கிய கிவி பழத்தை வைக்கவும். பிறகு அதன் மேல் ஆற வைத்துள்ள கடல்பாசியை ஊற்றவும். க்ரீமீ கஸ்டர்ட் கப்ஸ் ரெடி. ஃப்ரிஜில் வைத்தெடுத்துப் பரிமாறவும். கிவி பழம் கிடைக்கவில்லையெனில் ஆப்பிள், வாழைப்பழம், செர்ரி, ஸ்ட்ராபெர்ரி என ஏதேனும் ஒரு வகைப் பழத்தைச் சேர்த்துச் செய்யலாம். ஃபுட் கலர் ஒரு சில துளியே விட வேண்டும், அடர் நிறத்தில் இருந்தால் உள்ளிருக்கும் பழம் கண்ணுக்கு தெரியாமல் போகும். http://www.arusuvai.com/tamil/node/28020 I don't guarantee the correctness of the recipe. Try at your own risk! - ஆரதி