Nathamuni

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  7,414
 • Joined

 • Last visited

 • Days Won

  17

Nathamuni last won the day on May 20 2019

Nathamuni had the most liked content!

Community Reputation

2,139 நட்சத்திரம்

1 Follower

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

The recent visitors block is disabled and is not being shown to other users.

 1. சொல்லு கேளாமல், வெளிய போய் வருத்தம் வந்தால், அவர்களது மருந்து செலவு, அவர்களே பொறுப்பு, அவர்களின் சம்பளத்தில் இருந்து மாதாமாதம் அரசு கழித்துக் கொள்ளும் என்று சொன்னால், வீட்டுக்குள் இருப்பார்கள்.
 2. இதை முந்தி எப்பவோ, எங்கண்ட குமாரசாமியார், கூப்பன் தோசை மாவிலை, பிளேன் சோடா ஊத்தி பிசைந்து, செய்யிறதெண்டு ஓர் செய்முறை போட்டதை நினைவு.... வெள்ளை மா தோசை, குழாய் தோசை எண்டு செய்வினம் வீட்டில... குழாய் தோசை எண்டு, சுட்ட தோசை நடுவில தேங்கைப்பூ, சீனி அல்லது சர்க்கரை கலந்து வைச்சு தோசையை மசாலா தோசை உருட்டுற மாதிரி வைச்சு தருவினம்.
 3. வணக்கம் வாருங்கள். காளியம்மாவா, காளியப்பாவா?
 4. மோல்கா - spy Camera தென் கொரியாவின் அசுர தொழில் நுட்ப வளர்ச்சி புதிய பிரச்சனையினை கிளப்பி விட்டுள்ளது. அதுவும் பெண்களுக்கு. மோல்கா - (ஸ்பை கேமரா) எனப்படும் இந்த கிரிமினல் வேலையினால், பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். இந்த வகை காமெராவின் அளவு சிறிதாகி, குண்டூசியின் தலை அளவுக்கு வந்து விட்டதால், இது எங்கே வைக்கப்பட்டுள்ளது என்று அவசரத்தில், பப்ளிக் வாஷ்ரூம் போகும் பெண்களும், சிலவேளை ஆண்களும், பாதிக்கப்படுகின்றார்கள். மேலும், மணித்தியால கணக்கில் அறைகளை வாடகைக்கு விடும் மோட்டல்களில் பாலியல் நோக்கத்துடன் ஜோடிகள் வரும் போது அவர்களுக்கு, இந்த வகை கமெராக்கள் இருப்பது தெரிவதில்லை. அவர்களது நடவடிக்கைகள் லைவ்வாக, உலகின் வேறு பகுதியில் பணம் கொடுக்கும் வாடிக்கையாளர்கள் பார்த்துக் கொள்கின்றனராம். சில பெண்கள், பழிவாங்கபப்டும் நோக்கத்துக்காக, அவர்களது கழட்டி விடப்படட முன்னாள் காதலர்களால் ரகசியமாக எடுக்கப்படும் ஸ்பை கேமரா படங்கள் கூட அந்தவகை தளங்களில் பணத்துக்காக காட்டப்படுகின்றன. சில பெண்கள் தற்கொலை வரை போன பின்னர், தென் கொரியா, விசேட போலீஸ் படை அமைத்து நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது. எனினும் இத்தகைய வேளைகளில் கிரிமினல் குழுக்கள் ஈடுபட்டாலும், கைதாகுபவர்கள், மனோநோய் கொண்ட, சிகிச்சை வழங்கப் படவேண்டியவர்கள் என்ற ரீதியில், தொடர்ந்து நான்காவது முறை செய்தால் மட்டுமே சிறை என்கிற நிலைமை இருக்கும் வரை இது தீராது என்கிறார்கள் அங்குள்ள அமைப்புகள். கைதானவர்களில், நீதிபதி, பேராசிரியர் என பலரும் உள்ளனர் என்பதே கவலைப்படும் விடயம். பிபிசி இது தொடர்பான டாக்குமெண்டரி இங்கே பிபிசி ஐ ப்ளயரில். UK க்கு வெளியே இது தெரியும் என்று நினைக்கவில்லை. https://www.bbc.co.uk/iplayer/episode/p0872g59/stacey-dooley-investigates-spycam-sex-criminals?xtor=CS8-1000-[Discovery_Cards]-[Multi_Site]-[SL02]-[PS_IPLAYER~N~~P_StaceyDooley_SpyCam]
 5. சொல்லத் தேவையில்லை. சாடை அறியாதவர்கள் சர்வ முட்டாள்கள். சீரகம் எண்டு டில் சீடீனை வாங்கிக் கொண்டு வந்த மனுசனை அந்த மாதிரி திட்டினா, ஆள் விடுமே... எழுதிப்பாரு பார்ப்பம் எண்டு வந்து முன்னால இருக்கிறார் எண்டு கவிதையால சொல்லுறியள். சமாதானம்... ப்ளீஸ்... சரி இன்னோரு விசயம் இப்ப தான் கண்டு பிடிச்சன் வேலை செய்யுது. பச்சை விசயமா குய்யோ, முறையோ எண்டு குளறுவியல் தானே. எனக்கு பச்சை முடிஞ்சுதாம். உங்கள் பதிலுக்கு பக்கத்தில் இருந்த பச்சையினை செலக்ட் பண்ணி, எனது பதிலுக்கு பக்கத்தில் இழுத்து விட, வேலை செய்யுது. எப்படி எண்டு தெரியாது. ஆனால் உங்கள் பதிலின் பக்கத்தில் இருந்தது தான், இப்ப எனது பதில் பக்கத்தில் இருக்குது.
 6. தாரு..... நீங்களா, பயப்பிடுற ஆளு? சும்மா சுத்தவேண்டாம்.... அத்தார்... பாவம் அப்பிராணி... அவர் இப்படி எழுதினால் நியாயம் இருக்கும்....
 7. உங்கள் கருத்துகள் சிறந்ததாக எனக்கு படுகின்றது. ஒரு ஆலோசனை. முதலில், உங்களை அறிமுகப்படுத்தி, யாழ் களம் குறித்து நன்கு பரிசியமாகிய பின்னர், உங்களை புரிந்துகொள்ளக் கூடிய ஒரு வட்டத்தினை உருவாக்கிய பின்னர் உங்கள் நம்பிக்கையுடன் கூடிய கருத்துக்களை வையுங்கள். அதுவரை ஏனைய திரிகளில் பங்கு கொண்டு உங்கள் கருத்துக்களை வையுங்கள். முக்கியமாக உங்கள் பெயரை தமிழில் எப்படி உச்சரிப்பது என்று சொல்லுங்கள். இங்கே பிரபலமாக, நகைசுவை உணர்வு முக்கியம் என்பதை மறவாதீர்கள்.
 8. ஆச்சி சொன்னதை விடுங்கோ... உங்கண்ட பிரச்னையை சொல்லுங்கோ, கிருபன்... ஆறுதல் சொல்ல நாங்கள் இருக்கிறோம்..
 9. பணமிருப்பவன் வாங்கிக் குவிப்பதையும், இல்லாதவன் அடிவயிற்றுப் பசியுடன் இருப்பதையும் தவிர்க்க, உணவினை பங்கீட்டு அடிப்படையில் சகலருக்கும் கிடைக்க கூடியதாக அரசு செய்யவேண்டும் என்கிறார்.
 10. எதனை சொல்கிறீர்கள்? மணம், மரக்கறியிலா? வெந்தயத்திலா? றால், மாசியிலா? மரக்கறியில் என்றால், நான் சொன்ன விதத்தில் செய்யுங்கள். வெந்தயத்தில் என்றால், வெந்தயத்தின் மகிமையினை சொல்லி வையுங்கள். றால், மாசி ஆயின் தவிர்த்து விடுங்கள்.
 11. சுரைக்காய் அல்லது முள்ளங்கி வெள்ளைக்கறி (பால் கறி) இந்த செய்முறை எனது உறவினர் வீட்டில் இருந்து சுட்டது. நான் வழமையாக இதனை பெரிதாக விரும்புவதில்லை. ஆனால் எல்லோரும் ஆகா , ஓகோ என்று சொன்னதால் முயன்றேன். உண்மையாகவே நன்றாக இருந்தது. தனது அம்மா, அம்மம்மாவிடம் இருந்து பழகி, தனக்கு சொல்லி தந்ததாக சொன்னார் அந்த உறவினர் மனைவி. சிலர் கீரைக்கு கடலை பருப்பு போடுவது போல இங்கே கறி முழுவதும் வெந்தயம் காணப்பட்டது. வழக்கமாக செய்யும் செய்முறை தான். ஆனால் ஒரு சிறிய வேலை அந்த ருசியினை மாத்துகின்றது. சாதாரணமாக தாளித்ததுக்கு வெந்தயம் ஒரு கரண்டி சேர்ப்போம் அல்லவா. இங்கே, சற்று கூடுதலாக, இரண்டு கரண்டி வரை சட்டியில் போட்டு எண்ணெய் இல்லாமல் வறுக்க வேண்டும். மிக முக்கியமாக கறுக்க விடாமல், நிறம் மாறி, வாசனை வரும் போது, எண்ணெய் சேர்த்து பின்னர் வெங்காயம் முதல் ஏனைய வழக்கமான தாளித பொருட்களை சேர்த்து வதங்கி வரும் போது அசைவகாரர் எனில், றால், மாசி சேர்க்கலாம். இல்லாவிடில் வதங்கி வரும் போது , மிகவும் சிறிய துண்டுகளாக நறுக்கப்பட்ட சுரைக்காய் அல்லது முள்ளங்கி சேர்த்து, சட்டியை மூடி வேக வைக்க வேண்டும். வெந்ததும், பால் சேர்க்கலாம். அந்த பெண்மணி, டபுள் கிரீம் சேர்த்து இருந்தார். வறுத்த வெந்தய வாசனை அந்த பால் கறியினை தூக்கி நிறுத்தி இருந்தது. இன்னோரு விதமாக சொல்வதானால், வழக்கமான தாளித்ததுக்கு வறுத்த வெந்தயம் சேர்த்தல் போல எனலாம். முயன்று பாருங்கள். முள்ளங்கி (Moole or Radish) சுரைக்காய் (Bottle Gourd)
 12. கடலையே கொண்டு வருகினம், நான் கொண்டு வருவது, குளம் இல்லை, குட்டை எனது நண்பர் இலங்கை சென்று வந்தபோது, ஒரு உறவினர், தமது மருமகள் சாமத்திய விழாவுக்கு என ஒரு சோடி தோடு கொடுத்து விட, இவர் nothing to declare பகுதியில் போகாமல், மறுபகுதிக்குள போய் , தோட்டை காட்ட அவர்கள், ஆளை மேல கீழ பார்த்து விட்டு சிரித்துக் கொண்டே, £35 அடித்து விட்டார்கள். அவர் கட்டின காசை ரசீதுடன் கொடுக்க, அவர்கள் தோடும் வேணாம், வரியும் வேணாம் என்று சொல்லி விட்டார்கள். இவர் பார்ட்டிக்கு வந்து, அவனவன், 'நகை கடையே கொண்டு வாறான். ஒத்த சோடி தொங்கட்டானுக்கு வரி கொடுக்கிறானே எண்டு தான் கஸ்டம் காரன் சிரித்திருப்பான்' என்று கடியோ, கடி வாங்கினார்.
 13. இலங்கை போய் வரும்போது, கருவாடு, மாசிகருவாடு, றால் கருவாடு, கூனிக் கருவாடு வாங்கி வருவது. அங்கயே பயங்கர விலை. இங்கே அதன் 5 மடங்கு கூட. லாபம் பார்க்க என்று, மலிவாக தாய்லாந்து பண்ணை றால் கருவாடினை கொண்டு வந்து அநியாயம் பண்ணுகிறார்கள்.