Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  11479
 • Joined

 • Days Won

  21

Everything posted by Nathamuni

 1. அதுதான் சொன்னேனே. நிறுவனங்கள் வேறு, அதனை நடத்துபவர்கள் வேறு. நிறுவனத்தின் கடனுக்காக, அதனை நடத்துபவர்கள் பொறுப்பு இல்லை என்பதே, கடன் வரையறுக்கப்பட்ட நிறுவனம் என்பதன் பொருள். ஆக, வரி செலுத்தவில்லை என்றால், அந்த நிறுவனத்துக்கும், வரி அதிகாரிகளுக்கும் உள்ள பிச்சல் பிடுங்கல். அதில் சட்டம் மீறாத வரையில், நிறுவனத்தின் பின்னால் உள்ளவர்களுக்கு பிரச்சனை இல்லை.
 2. சும்மா பொத்தாம் பொதுவாக, 2010ம் ஆண்டு மோசடிகளை, 2022ல் எழுதுகிறார். இப்ப, சனமும் கவனம்.... மோசடிகளும் இலகுவல்ல.... வங்கி login செய்வது கூட, password போட்டாலும், மொபைலுக்கு வரும் OTP போடாமல் உள்ள போக ஏலாது. பிரகிராசிமார் காசை எடுத்துக்கொண்டு ஓடினால், காப்புறுதி உள்ளதே... பிறகு எப்படி? எங்கை ஓடுறது? அதுவும் இந்த காலத்தில்? அத்தனை தரம் திவாலானது, டொனால்ட் ரம் அல்ல, அவரது நிறுவனங்களே. இந்த ஜெயபாலனுக்கு, நிறுவனங்களிலின் வரையறுக்கப்பட்ட கடன் குறித்த சாதாரண சட்டமே புரியவில்லை, பிறகு எப்படி? திவால் ஆன ஒருவர், சாதாரண வங்கி வேலைக்கே போக ஏலாது. பிறகு எப்படி ஜனாதிபதி ஆகிறது?
 3. உங்களுக்கு தனி நாடு கிடைப்பதில் முடியும். அசைக்க முடியாத பேரரசு என்று மார் தட்டி, எக்காளம் செய்து கொண்டிருந்த பிரிட்டிஷ் பேரரசுக்கு, இடியாக வந்தது ஆஸ்திரியாவில் பிறந்து ஜெர்மனியின் அதிகாரத்துக்கு வந்த ஹிட்லர். அடுத்தவன் சுதந்திரத்தை துப்பாக்கி முனையில் பறிப்பது அறமன்று என்ற போதனை கிடைத்தது, பேரரசுக்கு. அதே போல, புலிகளை ஒழித்த கோத்தாவுக்கு, அரியணை கொடுத்த சிங்களத்துக்கு, பசி என்றால் என்ன என்று போதிக்கும் காலமிது. அடுத்தவன் சுதந்திரத்தை துப்பாக்கி முனையில் பறிப்பது அறமன்று என்ற போதனை கிடைக்கும், சிங்களத்துக்கு.
 4. சர்வதேச நிதியத்தின் முதல் நிபந்தனையே, யுத்தமில்லா நிலையில் பாதுகாப்பு படை எண்ணிக்கை, செலவை குறை.... அதை செய்ய விருப்பம் இல்லை.
 5. இப்போது தான் இந்த கட்டுரை படித்து முடித்தேன். மேலே போல்ட் பண்ணியது, நாம் இங்கே விவாதித்ததே... எப்படி? இந்த டெல்லி கோமாளிகளை ஏதோ பெரிய வல்லரசு நடாத்தும் ஆட்கள் போல.... அடித்துவிட்டு கொண்டு எழுதுகிறார். நன்னி இன்னோரு திரியில் சொன்னது போல.... இவர்கள் இந்தியாவுக்காக எழுதும் ஊடகவியலாளர்கள். எப்படி எழுதினாலும், நாம் நம்பப்போவதில்லை. 13+ குறித்து கடிதம் அனுப்பும் அரசியல் வாதிகள் கூட, அது விழலுக்கு இறைத்த நீர் என்று தெரிந்தே எழுதினார்கள் என்பது வெள்ளிடை மலை. இந்தியா குறித்து, சிங்களவன் பழம் தின்று கொட்டை போட்டு இருக்கிறான். முஸ்லீம் கட்சிகள் கையெழுத்து போடாமல், கடைசி நேரத்தில், எஸ் ஆனதுக்கு காரணம் சிங்கள எச்சரிக்கை. ஆக இந்தியாவிலும் பார்க்க, பொருளாதார, ராணுவ பலமிக்க சீனா, இலங்கையில் முழுமையாக காலூன்றப் போவது உறுதி. கட்டுரையாளர் சொல்வது போல, புலம் பெயர் தமிழர்கள் பலமானது, சிங்களவர்கள் பலத்திலும் பார்க்க அதிகம் என்பதால், சீனா, தமிழர் சார்ந்து இலங்கையில் வேலை செய்வது, அதன் சர்வதேச நலன்களுக்கு முக்கியமானது.
 6. தமிழ் சிறியரோடை ஒரு பிளான் போட்டு, ஊரிலை திரியிற கட்டா காலி நாயலுக்கு ஒரு அலுவல் பார்க்க எண்டு.... இப்ப மண்டரின் படிக்கிறேன்..... உங்களுக்கும் ஐடியா இருந்தால் சொல்லுங்கோ... பிறகு.... சீனத்து கவிதை எல்லாம் எழுதலாம்.
 7. ரயில் தரம் எப்படி இருந்தாலும், ரயில் பாதை தரம் சரியில்லையே.... தூக்கி, தூக்கி எறிவதால், கொழும்பு முதல், வவுனியா வரை.... slow வா தான் போகுது. 25mph. வவுனியாவுக்கு பிறகு 40 - 45 mph
 8. வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றிய தவிகூ, தமிழர் மத்தியில் மிக பிரபல்யம் மிக்க ஒரு கட்சி தான். ஆனாலும், தந்தை செல்வா மரணத்தின் பின்னர், வந்த தலைவர் அமிர், சிவசிதம்பரம் போன்றோர், தம்மை கவிட்டு விடலாம் என, தலைமைப்பதவி தொடர்பில் ஒரு விதி மாறுதலை செய்வித்தார். அதாவது தலைவர் ராஜினாமா அல்லது மரணித்தால் மட்டுமே, பதவி வெற்றிடம் ஆகும். அமிர் பின்னர், சிவசிதம்பரம் மரணிக்கும் வரை தலைவர். பின்னர் வந்தவர், சங்கரியார். மனிசன், தானும் தின்னார், தள்ளியும் இரார் நிலையில் கட்சியை தனது பாக்கெட்டில் போட்டு விட்டார். ஆக, அவர் விரும்பினால் அன்றி பொதுக்குழு கூடாது. கூடாத படியால், தலைமைப்பதவி தொடர்பான விதி மாறாது. இவரது காலத்துக்கு பின்னர், பொதுக்குழு புதிய தலைவரை தேடும் போது, விதியும் மாறலாம். ஆனாலும், கவுண்டமணி ஜோக் மாதிரி, அதுக்குபுறம, மாத்தினால் என்ன, மாத்தா விட்டால் என்ன?
 9. மகிந்தா, கோத்தாவை தூக்கி ஜனாதிபதி கதிரையில் வைத்ததும் அவர் ஞான சேரரை தூக்கி வைத்து கொண்டாடுவதும், அந்த தேரருக்கும், உலகப் புகழ் பர்மா கில்லர் மொட்டயருக்கும் உள்ள தொடர்பும், இருநாடுகளுக்கிடையே, சீனாவின் தொடர்பும் நீங்கள் சொல்வது தான் நடக்கப்போகிறது என கட்டியம் கூறி நிக்கிறது. நான், முன்னரே சொல்லவிட்டேன்.... இந்த டெல்லி கோமாளிகளும், டெல்லிக்கு 13+ என்று காவடி தூக்கும் கோமாளிகளும் ஒன்றுமே உருப்படியாக செய்யப்போவதில்லை. கையெழுத்து போட இருந்த இஸ்லாமிய கட்சிகளுக்கு பயமுறுத்தல்கள்வந்ததாக சொல்கிறார்கள். அதனாலேயே தவிர்த்தர்களாம்.
 10. Taken for a fine ride என்று ஆங்கிலத்தில் ஒரு சொல்லாடல் உண்டு. தமிழர்களை இப்படிதான் இந்தியா நடத்துகின்றது. இன்று நேற்று அல்ல, 1977ல் ஜேஆர், சிறப்பான, திறந்த பொருளாதார கொள்கையுடன் ஆட்சிக்கு வந்தபின்னர், இனவெறி, கண்ணை மறைத்ததால், இந்தியாவுக்கு ஒரு சந்தர்ப்பத்தினை கொடுத்து, தமிழர்களை மிக நீண்டகாலமாகவே Taken for a fine ride செய்து கொண்டு இருக்கிறது. சம்பந்தனுக்கும், மாவைக்கும், செல்வத்துக்கும் மேலும் பல அரசியவாதிகளுக்கும், சென்னையில் குடும்பமும், வியாபார தொடர்புகளும் உள்ளது. ஆகவே, அவர்களும், தமக்கு வாக்களித்த தமிழர்களை இழுத்துக் கொண்டு இந்தியா என்று ஓடிப் போய் நிக்கிறார்கள். இவர்களுக்கு பட்டறிவு இன்னும் வரவில்லை. பேரம் பேசும் திறனும் இல்லை. நல்ல வேலையாக, இவர்களுக்கு முழு எம்பிக்கள் ஆசனமும் கிடைக்கவில்லை. இந்தியாவை நம்புவதிலும் பார்க்க, சீனன் நம்பக்கூடியவன் என்பதை, இந்தியாவே உறுதி செய்கிறது.
 11. நீங்க படுக்கையில இருந்து வாரிச் சுருட்டி எழும்பி, என்னத்தை சொல்லி, கத்தினாலும், நாளைக்கு சீனாவில் இருந்து அவரெல்லே வாறார்.... அவர்.... நிறைய இனிப்பு கொண்டருவார்....
 12. அனுராதபுரம், சாவித்திரிபுரத்தில் ஒரு கடை. அங்கே பலர் மளிகை வாங்கிக்கொண்டிருந்தனர். ஒரு வழக்கமான வாடிக்கையாளர் வந்தார்.... கல்லாவில் இருந்த முதலாலியிடம் தயக்கத்துடன் கேட்டார். பிள்ளைகள் மூன்று நாட்களாக சாப்பிடவில்லை. உங்கள் தோட்டத்தில் உள்ள பப்பா மரத்தில் இருந்து, பச்சைக்காய்கள் இரண்டை பறித்துக்கொள்ள அனுமதிப்பீர்களா? அசந்து போன கடைக்காரர், சம்மதித்தார். வேறு பொருட்களை கடனாக கொடுக்கும் நிலையில் அவரும் இல்லை. தென்பகுதியில் ஒரு கிராமம். பெண் ஒருவர் இருந்த 200கிராம் மாவில் ரொட்டி சுட்டார். இரண்டு ரொட்டியில் ஒன்றை பசியில் வாடிய பிள்ளைக்கும், அடுத்ததை பாதியாக பிரித்து, தனக்கும், சிறுநீரக நோயில் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருக்கும் கணவருக்குமாக பகிர்ந்து கொண்டார். கணவர் வேலை செல்ல முடியாததால், உழைப்பு இல்லை, அவருக்கு மருந்து வாங்கும் நிலையிலும் குடும்பம் இல்லை. நாட்டின் மீடியா அனைத்துமே, அடித்தட்டு மக்களுக்கு புரியாத, டாலர் பிரச்சனை, பணம் அச்சடித்தல், உலக வங்கி குறித்து பேசுகின்றன, விவாதிக்கின்றன. ஆனால் மக்கள், படும் பாட்டினை சொல்வதில்லை. மேலே, சொல்லப்பட்டவை, ஒரு சிறு விடயம் மட்டுமே. பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு முன்னர், பணிஸ் வழக்கப்பட்டது. பின்னர் திரிபோசா வழங்கப்பட்டது. இப்போது பாடசாலையே இல்லை. அடித்தட்டு மக்களின் வலி, வேதனைகள், மீடியாக்களுக்கு நல்ல விடயமாக இராது, ஆனாலும், அது சொல்லப்படாவிடில், அவர்களுக்கும் விடிவு இல்லை. கொழும்பு டெலிக்ராப் இல் வந்த பசில் பெர்னாண்டோவில் கட்டுரையின் சுருக்கம்..
 13. தடியை கொடுத்து அடியை வாங்கியிருக்கிறார்.... அலம்பறை பண்ணி வெளியே சொல்லாமல் இருந்த்திருந்தால் விளையாடி இருப்பார்.....
 14. அது வேற கதை.... உங்க பிரித்தானியாவில்.... ஒரு தர்ம ஸ்தாபனத்துக்கு ஒரு பவுண்டு கொடுத்தால், சம்பளம் செலவுகள் போக, எதுக்கு கொடுத்தியளோ, அதுக்கு 0.35 பென்ஸ் தான் போகுதாம். இப்ப உந்த யூரியூப்பர்மாரும் செய்யறது விளங்கும் தானே. கற்றது கையளவு என்ற சமையல் சானல்... தமிழகத்தில், ஒரு கிராமத்தில் சமையல் செய்யும் போது, வாத்து மேய்த்துக்கொண்டு இருந்த சிறு பெண்ணை காட்டி.... பள்ளி போகாமல், வறுமையால் வாத்து மேய்கிறது என்று காட்டினார்கள். அவ்வளவு தான்.... சனம் காசை அனுப்பியது.... யூனிபோர்ம் எல்லாம் வாங்கி தனியார் பள்ளியில் படிக்க வைத்தார்கள்... கடைசியில் பங்காளர் இடையே சண்டை. சானல் இரண்டாகியது. ஒருவர், வந்த காசை மடக்கி விட்டார் என்று இனொருவர் குமுற, கடைசியில், ஒரு லட்ச்சத்து சொச்சம் தான் வந்தது என்று, கிராமத்தலைவர் முன் பணத்தை கொடுத்து, எஸ் ஆகி விட்டார்கள். சிறுமி தொடர்ந்து படித்திருக்க மாட்டார். ஆனால் வந்த காசினை விழுங்குவதில் பிடுங்குப்பாடு. அதுவே.... நமூரிலும் நடக்கும். எவ்வளவு வருகிறது என்று, யூரியூப்காரருக்கு மட்டுமே தெரியும். கணக்கு காட்ட மாட்டார்கள். ஆளாளுக்கு, பங்கு இல்லாமல், தனியே தொடங்கி நடத்துகிறார்கள்.
 15. யார் வராவிட்டாலும், நாங்கள் சீனாவுக்கு ஒண்டை அனுப்புவம் எண்டு இருக்கிறம்...
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.