Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13647
  • Joined

  • Days Won

    25

Everything posted by Nathamuni

  1. சீமான் விசயத்தில், டீம்கா முதல் சங்கீ ஊடகங்கள் அனைத்துமே, பொய் தானே அடித்து விடுக்கின்றன. இப்போது கூட, சீமான் கைதாகிறார் என்று அடித்து விட்டார்களே... உண்மையா என்று அறிய, பொறுமை வேண்டும். அவசரப்படக்கூடாது, சான்…கோஷான் 🤣
  2. லட்சுமிகள் சண்டை ஆரம்பம். வீரலட்சுமி வீட்டிலிருந்து வெளீல போக மறுக்கும் விஜயலட்சுமி! கடுப்பில் வீரலட்சுமி கணவர். 😂
  3. இந்த விசர் பெண்ணின் விசர்கதையில படித்தவர்கள் என்று சொல்பவர்கள் கூட கடந்து செல்லாமல், சிந்திக்காமல் பதிவுகள் செய்வது வியப்பை தருகிறது. அம்மணி, அடுத்தவர்களை மட்டுமல்ல, ஈழத்தமிழர்களையும் அடி முட்டாள்கள் என்று கதை அடித்து சிக்குகிறா. 2010ல மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில மாலை மாத்த போனார்களாம். (அப்போ சீமான் பகுததறிவு, பெரியார் ஆள்). நான் கிறிஸ்தவர். இப்ப வேணாம். ஊரறிய, உலகறிய தேசியத் தலைவர் பிரபாகரன் தலைமைல கல்யாணத்தை வைச்சிரலாம் எண்டாராம். தான் ஒத்துக்கிட்டு புருசன் பெண்டாட்டியா வாழ்ந்து 7 முறை கருக்கழைப்பு செய்தார்களாம். தலைவர் வீரமரணம் 2009ல தாயி!!
  4. மேல கோசனின் பொறுப்புத் திறப்பையும், வெட்டி, ஒட்டிவிடுங்கோ!! 😂 அப்படி பொறுப்பை திறந்தால், பல்லடம் ஆஸ்பத்திரீல நெஞ்சைப் பிடித்தபடி படுத்திருந்தார் என்ற பொய் செய்தியையும் ஒட்டிப் போட்டு சிரிச்சுக் கொண்டே நிக்கலாம். 😂
  5. இவர் பங்கெடுக்கும் அரசோ, சீனாக்காரன் பெஸ்ட் எண்டுதே....
  6. இது போன வருச கர்நாடகா பஞ்சாயத்து. அப்பாவி முகத்தை வைத்திருக்கும் பெண் இப்ப, தமிழகத்தில் டோரா போட்டுள்ளார். அநேகமாக, இதுவே கடைசி முயல்வாக இருக்கும். A comment @sharathsharma6879 1 year ago This woman is an opportunist. Mr Yogesh, we are with you. You literally won my heart with your sincere and honest answers . I have been following this lady online for quite some time and as you said on Mirrorview channel she definitely needs immediate professional help. She has some serious mental issues. As soon as I saw that you were getting involved to help her, right away I knew that you are getting yourself into trouble. But the way you handled the situation without getting upset and making every thing clear with right proof in front of the film chamber shows that you are a gentleman. Keep up with your good work! You parents must feel proud for raising such a wonderful human being. Sharath USA சில்லறைய ரொம்ப கொட்டாதீங்க, சிரிக்கும் மக்கா... மாஜிஸ்திரேட், இவரை மனநல மதீப்பீட்டுக்கு அனுப்ப உத்தரவு இடக்கூடும் என்கிறார்கள்.
  7. அது ஸ்ரீ லங்கன் அரசு அமைத்த நீதிமன்றும், பதிவியில் அமர்த்தி சம்பளம் கொடுக்கும் நீதிபதியும் எல்லோ... தமிழ் ஈழ நீதிமன்று அல்ல. 😤
  8. இரண்டு தமிழ் பெண்கள். றோட்டிலை திரிஞ்சு, இரண்டு நிமிடம் இருக்குமா என்று கேட்டு, சிக்கினால் போதும்.... கர்த்தர் வருகிறார்.... என்று தொடங்கி, கையில் எதையாவது திணித்து விட்டு தான் நகர்வார்கள். விசயம் தெரிந்தவர்கள், அல்லாட காவல் என்றால், போதும்.... தலைதெறிக்க நகர்வார்கள். இந்த வேதாள வெங்காயங்கள், சவுத்ஹால் பக்கம் தமிழர்களை தேடி போயிருக்கிறார்கள். போனதுகளுக்கு, சீக்கிய குருத்துவாரா என்று தெரியாமல், நல்ல சனம் உள்ள போகுதே என்று, தாம் கொண்டு வந்த கர்த்தர் அலைக்கும் காட்டுகளை வாசலில் வைத்துவிட்டு கிளம்ப, சீக்கியர்கள் இருவர், தேடி, பிடித்து, வாருங்கோ என்று அழைத்து வர... அட நம்ம பிரசங்கத்தினை கேட்க என்று திரும்பி வர, லெப்ட் அண்ட் ரைட் வாங்கி, விட்டார்கள். வீடியோ எடுத்தும் போட்டு விட்டார்கள். நல்ல காலம், தமிழர் என்று சொல்லாமல் எஸ்கேப். ஆனால்... இந்த கார்டினை வைத்து, அனுப்பிய சர்ச் எது என்று பார்த்து போலீசில் புகார் செய்வோம் என்று சொல்கிறார் சீக்கர் ஒருவர். பணம் கொடுத்து அனுப்புகிறார்கள் என்று, மூளையினை யோசிக்காமல் திரிந்தால் இம்மாதிரி சிக்கல் தான் வரும். ****** இதனிடையே, வால்சிங்கம் என்னுமிடத்தில் இருக்கும் ஒரு கிறிஸ்தவ ஆலயத்துக்கு, வருடம் தோறும், பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் யாத்திரையாக செல்வார்கள். தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வருகிறார்கள் ஆகவே இந்த பாதையினை தவிருங்கள் என்று போலீசார், லோக்கல் ரேடியோ மூலமாக அறிவிக்கும் அளவுக்கு இருக்கும் நிலைமை. இந்த முறை, வீதி ஓரமாக சமையல் செய்து சாப்பிடும் போது, சில தமிழருடன், கிழக்கு ஐரோப்பியர்கள் கொழுவி, அடிபிடியில் முடிந்ததாக ஒரு தகவல், வீடியோ பரவுகிறது.
  9. இதென்ன தீர்ப்பு? ஒன்று, பணிப்பாளரை கூப்பிட்டு காரணம் கேட்டு, நீதிமன்ற அவமதிப்புக்கு பதிலளிக்க சொல்லியிருக்க வேண்டும். அடுத்தது, தொல்பொருள் நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையை சீல் வைத்து, பிக்குவை வெளியேற்ற உத்தரவு போட்டிருக்கவேண்டும். ஏன் இது நடக்கவில்லை?
  10. இப்ப கொஞ்ச நாளா, நான் குழப்புகிறேனா அல்லது குழப்பப் படுகிறேனா எண்டு பயங்கர டவுட் வருகுது. 🤣 உந்த கோதாரி திராவிட கொள்கையை விளக்க, பிரிட்டிஷ் அரசியலா கிடைச்சது. சரி, பிரிட்டிஷ் அரசியலுக்கு வருவோம். எனக்கும் கான்செர்ட்டிவ் மேலே செல்ல கோபம் தான். ஆனாலும் அடுத்த தேர்தலில் அதுக்கு தான் வாக்கு. காரணம், இரண்டு. 1. லேபர் தயாரில்லை. 🙄 2. ரிஷியரின் அடுத்த தேர்தல் துருப்பு சீட்டு: inheritance tax இல்லாமல் செய்தல். 👍 ஆட்டு இறைச்சியும், வெந்தயமும்... செய்யிற கூத்திலே, 20 வருச கதை... கொஞ்சம் too much... பாஸ்... 🤣 வாக்கு இருக்கும், கோசன் இருக்கணுமே.... take care !!!
  11. என்னைப் பொறுத்த வரை, பிரபாகரனின் வேண்டுதலில், (இதனை சூசை உறுதிப்படுத்தினார்) தமிழகத்தில், சில அரசியல் வேலைகளை செய்து, அவரது பெயரை, மக்கள் மறக்காமல் செய்து கொண்டிருப்பதால் தான் சீமானுக்கு ஆதரவு நிலைப்பாடு. அது எப்போது மாறுமோ, அன்றே, எனது நிலைப்பாடும் மாறும். இன்றும் கூட, திமுக, அதிமுக, பிஜேபி அல்லது காங்கிரஸ், பல கோடிகளை கொடுத்து, இவரை கூட்டணி சேர்க்க தயார். அது செய்யாதவரை நம்பலாம். தனிப்பட்ட வாழ்க்கையினை இழுத்து எடைபோட, ஜேசு சொன்னது போலவே, எவ்வித தவறும் செய்யாதவர்கள் கல்லை எறியலாம். பெரியாரின் போலி திராவிடக்கொள்கை நமக்கு எதுக்கு என்பதே எனது நிலைப்பாடு. மன்னிக்க வேண்டும் கோசன், உங்கள் பெரியாரின் திராவிட கொள்கைக்கு ஆதரவு, அதனை எதிர்ப்பவர்களுக்கு எதிர்ப்பு.....திராவிட கட்சிகளுக்கு ஆதரவு இல்லை.... எனக்கு புரியாத அரசியல்... இது குறித்து முன்னர் விவாதித்துள்ளோம். நாம் தமிழரின் உறுதிப்பாட்டினை அசைக்க, திராவிடம் விடும் அஸ்திரங்கள் பல.அதில், இந்த எடுபடும் அம்மணியும் ஒருவர். சீமான் உள்பட, பலரிடம் பணத்தினை வாங்கி செலவழித்து விட்டு, மீண்டும் வாங்க முனைவதால், அனுதாபம் இல்லை. 🙏
  12. அதானே, ஹரி நாடார் அண்ணாச்சி கோவிச்சுக்கப் போறாரே!! 🤩
  13. இந்தம்மா இன்று ஒரு வீடியோ போட்டிருக்குதாமே. சீமானுடனான எனது பிரச்சணையை உங்கள் அரசியலுக்கு பயன்படுத்தாதீங்கலாம்
  14. விடயம் என்னவென்றால் இந்தம்மா முதலில் வரும் போது சீமான் தேர்தல் களத்தில் இல்லை. வந்தபின் படிப்படியாக வளர்ந்து 7.8%. ஆக, இந்தம்மா வருவதால், சீமானுக்கே நன்மை. நீங்கள் இப்படி சொல்கிறீர்கள் நீங்களே உறுதிப்படுத்தியதாக சொல்லி, ஆரம்பம் தமிழ் தேசியம் தான் என்கிறாரே @goshan_che
  15. தமிழ் தேசிய அரசியல் திராவிட எதிர்பரசியலானபோது கழன்று கொண்டார் போலும். ஆனால் வீரத்தமிழர் முன்னனியில் இருக்கவில்லை!
  16. வீரலட்சுமி? உங்கள் தகவலை சரிபாருங்கள். அவர் பெயர் ஆனந்தி நாயுடு, வைக்கோவுடன் பயணித்தவர். திராவிடர் கழகம். அவரெப்படி வீரத்தமிழரில்?
  17. நீங்கள், உங்கள் conclusion க்கு முழு உரித்துடையவர். 🤪 ரவி பிரகாஷ், 100,000 இழந்த பின்னர் தான், முடியாமல், வெளியே வந்தார். 🙄 இவரது பிரச்சனையின் போது, தமிழ் பெண்ணுக்கு பெங்களூரில் நடக்கும் அநியாயம் பாரீர் சீமானே, ரஜனியே என்று வீடியோ விட்டிருந்தார். 😅 அதுசரி, இவரை குறித்து, முழு நீள வீடியோ ஒன்று வந்திருந்தது. தேடினேன் கிடைக்கவில்லை. அதிலேதான் இந்த விபரம் கிடைத்தது. 🤦‍♂️
  18. முக்தார் பேட்டி ஒழுங்கு செய்த அரசியல்வாதிகள் கொடுத்திருப்பார்கள். எனக்கு தெரிந்து, ஸ்டாலின் இப்படி வேலைகளை ரசிக்க மாட்டார். இடையே யாரோ செய்கிறார்கள் போலவே தெரிகிறது.
  19. அப்படி இல்லை. நீங்கள் அம்மணியின் மறுபக்கத்தினை புரிந்தால் இப்படி சொல்லமாட்டீர்கள். சீமான் காதலித்ததும், இவரை கலியாணம் செய்ய நினைத்து இருந்ததும் உண்மை. ஆனால், கையில செலவுக்கு காசில்லாத ஒருவரை நம்பி போகப்போறியா என்று சொல்லப்பட்ட அறிவுரையினை கேட்டு, பெங்களூரு போய் கன்னட படங்களில் நடிக்க போய் விட்டார். அங்கே பசை பார்ட்டியுடன் புதிய காதல், கலியாணம் வரை போனது. உண்மையில் சீமான் தான் கைவிடப்பட்டவர். (Dumped). அந்த பெங்களூரு கலியாணம் கடைசி நேரத்தில் சரிவராமல் போகவே, வேறு ஒரு காதல். அதுவும் முறிவு. திரும்பி பார்த்தால், சீமான், உலகத்தமிழர் அனுப்பும் பணத்தில் அமோகமாக இருப்பதாக யாரோ காதில் போட, வந்தார். கேட்டார், காசு பெயரவில்லை. போலீசில் முறைப்பாடு, என்று பீலா விட்டார். பணம் கிடைக்கவில்லை. கடைசியில், ரஜினி அரசியல் எதிர்ப்பு காரணமாக, ரஜனி ரசிகர்கள், (ராகவா லாரன்ஸ்) பணம் கொடுக்க, வீடியோ எல்லாம் போட்டு திட்டினார். சீமான் கண்டுக்கவில்லை. ராகவா, கொடுத்த ஒரு லட்ச்சம் காசோலை திரும்பி விட்டது, பணத்தினை அனுப்பி, காசோலை எடுத்துக்கொள்ளுங்க என்று வீடியோ போட, விசயம் ரஜனி காதுக்கு போக, இப்படி அரசியல் தேவையில்லை என்று லெப்ட் அண்ட் ரைட் திட்டி விட்டார். அத்துடன் அந்த வியாபாரம் படுத்து விட்டது. பின்னர், மகன், நல்லா இருக்க மாட்டான் என்று வீடியோவில் திட்டியதால், முக்கியமாக மகன் 5 வயதாகியும் பேச்சு வரவில்லை என்பதால், சீமான் தரப்பு ஆடிப்போனது. ஆகவே கொஞ்சம் பணத்தினை கொடுத்து செட்டில் பண்ணுவம் என்று பார்த்து, கொடுத்தும் இருக்கிறார்கள். ஆனால், அம்மணிக்கு ஆசையும், சிலரின் அரசியல் நோக்கமும், மீண்டும், பழைய குருடி கதவை திறடி என்று, போலிஸ் முறைப்பாடு என்று கிளம்பி விட்டார். இங்கே சீமான் சொல்ல எதுவுமே இல்லை என்றே தோன்றுகிறது. இந்த பெண்ணின் வேலையே, அடுத்தவர்களிடம் பணத்தினை பறித்து வாழ்வினை ஓட்டுவது. பாவம் போல தோன்றினாலும், இவருக்கு உதவ வந்த, நடிகை காயத்திரி, இப்ப வீரலட்சுமி எல்லோரும் அலறிக்கொண்டே ஓடி விட்டனர். காயத்திரி, பிஜேபி சார்பில், 50,000 கொடுத்தார். இப்ப, வீரலட்சுமி யார் சார்பில், எவ்வளவு கொடுத்தார் என்று தெரியவில்லை. அதேவேளை, முக்தார் பேட்டிக்கு 10 லட்ச்சம் வாங்கியதாக தகவல். அதேவேளை, சீமானை பொலிஸார் விசாரிக்க வந்தால், அம்மணிக்கே, black mail சிக்கல் வரும். சீமானுக்கும் ரூட் கிளியர் ஆகும். அதுவே எல்லோருக்கும் நல்லது போலவே தெரிகிறது. இங்கே, கன்னட, ரவி பிரகாஷ், வெளியே வந்து சுஜ விளக்கம் கொடுத்து, போலீசில் பிளாக் மெயில் complain கொடுப்பேன் என்றவுடன், அம்மணி அமைதியானார். அதேபோல, சீமான் செய்யாதது, அம்மணிக்கு வசதியாகிவிட்டது. சீமான் தயங்குவதன் காரணம் அரசியல் என்று நினைக்கிறேன். இல்லை, சும்மா தானே இருக்கிறா... குறிப்பை வாங்குவம் எண்டு தான்.... 🤪 🤣
  20. அதெல்லாம் இருக்கட்டும். அந்த விஜயலட்சுமி இலங்கைப் பொண்ணு என்று அடிச்சு விடுது. தாய் அங்கை இருந்து வந்தவவாம். எந்த ஊரு எண்டு விசாரிச்சனியிலே? 🤣
  21. இவர் விடுற புளுடாக்களுக்கு அளவே இல்லை. கலைஞர் இருந்த காலத்தில் பெரியகறுப்பன் என்னும் அரசியல்வாதியின் விவகார வீடீயோ வந்தது. யோவ் இப்படி மாட்டுற மாதிரியா பண்ணுவாய் என்றார் கலைஞர். ஆனால் அந்த தேர்தலில், முன்னொரு போதுமில்லாத அதிக வாக்குகள், குறிப்பாக பெண்கள், விழுந்தது, பெரீய..... கறுப்பனுக்கு. விஜயலட்சுமி புதுசல்ல. பழசு. அப்பப்ப ரீல் ஓடும். இங்க முடிஞ்சா பங்களூரில கன்னட டப்பிங். இனி முக்காடு எதுக்கு என்று கிளம்பிவிட்ட அம்மணி காட்டில மழையோ, மழை. தமிழக அரசியலில், இதெல்லாம் இல்லாவிடில், என்ன அரசியல்வாதி?
  22. ஓமோம் வாருங்கோ, வாருங்கோ... அடுத்த ஈஸ்டர்க்கு சனம் ரெடியாக வேணுமெல்லோ!! 😡
  23. இது பற்றி முன்னரும் எழுதியிருக்கிறேன். கெண்டன் பகுதியில் டைம்ஸ் ரவல் வைத்திருந்தவர் சுதா. பக்கா யாபாரி. இவர் தென் இலண்டலில், Sri Lankan GSA வைத்திருந்த நிறுவனத்துடன் போட்டியிட்டு GSA எடுக்கும் முணைவில் போய் நின்ற இடம் (புனித) வத்தைகளில் ஒன்று. காலில் விழுந்தாரோ, கையில் விழுந்தாரோ கிடைத்தது GSA! இலண்டணில் இலங்கையர் விளையாட்டு போட்டி தமிழ், சிங்களமாக பிரிந்த போது, இவரை சிங்கள பகுதியில் காணமுடியும். அங்கே கேட்பவர்களுக்கு, இங்க தான் அருமை, அங்க மனிசன் போவானா பாணி கதை. அவரது வீட்டுக்கு நான் வேறு விடயமாக போயிருந்த போது, காற்சட்டை, ரீசேட் போட்டிருந்த, ஒரு வத்தையின் கெற் மொட்டை பியர் உறிஞ்சிக் கொண்ருடிந்தார். புன்சிரிப்பில் அருளாசி தந்தார் 🙏 இலண்டண் வந்திருந்த அவரை, இலங்கை தூதரக காரில் கொண்டு வந்து விட்டுப் போயிருந்தார்கள் - காவியுடன் தான், ஈழபதீஸ்வர ஆலய விவகாரத்தில், புலிகள் சார்பில், சமாதான பேச்சுக்கு கோயில் நிர்வாகியுடன் பேசப்போன குழுவில்சுதா இருந்தார் என கொழும்புப்பத்திரிகையில் DBS Jeyaraj எழுதப் போகிறார் என்று தெரிந்ததும், Sri Lankans கான்சல் ஆகும் என்று தெரிந்து, அதற்கு கொடுக்க வேண்டிய தொகையை இழுத்தடித்து, வேறு பகுதிக்கு மாத்தி, இறுதியில் bankruptcy அடித்து பல மில்லியன் தேத்திக் கொண்டார். அதனால் தான் சொல்கிறேன், இவர்கள், யாழ் தமிழில் சொல்வதானால், எமனை பச்சடி போட்டு தின்பவர்கள். 😁
  24. தனி ட்ராக்கில் போனாலும், அவோ, குழம்புறாவோ, குழப்புறாவோ என்று ஒரே குழப்பமா இருக்குது பாஸ் 🤪 🤣 பேசாம, மெயின் ட்ராக்க்கு வந்து சோதில கலந்திடலாமோ எண்டு குழம்பிக்கொண்டிருக்கிறேன் 🤪 🤣
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.