-
Posts
13647 -
Joined
-
Days Won
25
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
நான் தான் தெளிவாக சொல்லிவிட்டேனே. அல்லிராஜா, இங்கு அவருக்கு கருத்து மழை பொழியும் அனைவரிலும் பார்க்க, ஒரு படி மேலே. காரணம் அவரது பில்லியன் டாலர் மதிப்புள்ள வியாபாரம். அது குறித்து, நதிமூலம், ரிசிமூலம் பார்ப்பதும் தேவையில்லாதது. அதே பொருளாதார மட்டத்தில் உள்ள நம்மில் யாராவது அறிவுரை சொன்னால் சரியாக இருக்கும் என்பதே எனது கருத்து. அவரது நிறுவனத்தின் CEO போன்ற முக்கிய பதவிகளில் வெள்ளையர்கள். ஆகவே, அவருக்கு தேவையான அறிவுரை தர தேர்ச்சி உள்ள பலர் இருப்பார்கள் என்று கருதலாம். ஆக, சொல்ல வருவது என்னெவென்றால், லண்டனில், அல்லிராஜாவை நேரடியாக சந்தித்து, ரணில் விடுத்த கோரிக்கையினால் தான், போயிருக்கிறார். மிகுதி எல்லாம் பக்கா ட்ராமா. அல்லிராஜா முட்டாள் அல்ல. 👋
-
சீமான் மீது சென்னை காவல் ஆணையரிடம் நடிகை விஜயலட்சுமி புகார்
Nathamuni replied to வைரவன்'s topic in தமிழகச் செய்திகள்
புளித்து நாறும் மாவை இங்க கொண்டு வந்து தோசையாய் போட்டு.... 😰 அந்த நடிகை, இன்றய பத்திரிகையாளர் சந்திப்பில், பத்திரிகையாளரை போடா, வாடா என்று பேசியபின்னரும், இது ஒரு செய்தியா? சை.... 🙄 -
இலங்கையின் சமீபகால அரசியல் நிலைமைகளை கூர்ந்து அவதானித்தால், அங்கே நடக்கும் இலங்கை என்னும் பெண்ணை, யாழ்ப்பாண தமிழில் சொல்வதானால், சுழட்டி (தமிழகத்தில் சைட் அடித்து கரெக்ட் பண்ண) கவர மூவர் சுழன்று கொண்டு இருக்கின்றனர். இந்தியாவினை இதுவரை காலமும் எதிர்த்து வந்த விமல் வீரவன்ஸ, சில வாரங்களாக ஆதரித்து பேசுகிறார். இந்தியா, இனக்கலவரம் வரும் என்று எச்சரித்த நிலையில், அதன் மூல காரணம் என்று சொல்லக்கூடிய பௌத்த விகாரைகளையும், அதனூடாக, சரத் வீரசேகர, கமன்பிள்ள போடும் இனவாத கூச்சல் என்பது மிகையாகாது. அதேவேளை, இதன் பின்னால் இந்தியாவே உள்ளதோ என்ற சந்தேகமும் எழுகின்றது. தமிழர்கள் இந்தியாவினை நம்ப தாயரில்லை. இதனால், பௌத்த விகாரைகள், இனவாதிகள் என்ற பிள்ளையினை கிள்ளி, தமிழருக்கு ஆதரவாக, நிற்பது போல விரைவில் ஒரு நிலைப்பாட்டினை அறிவித்து, தொட்டிலை ஆட்ட கூடுமென்ற சந்தேகமும் எழுவது நியாயமானது. இந்த சந்தேகத்தினை, இந்த பௌத்த விகாரைகளின் விவாகரத்துக்கு பின்னால், இந்திய அரசியல் கட்சி ஒன்று இருக்கிறதோ என்ற அமெரிக்க சந்தேகத்தினை, யாழ்ப்பாணத்தில் நேரடியாகவே அமேரிக்க தூதர் கேட்டார். இதனிடையே, சீனாவின் மூன்றாவது போர் கப்பல், கொழும்பு வரும் அதேவேளை, இந்திய பாதுகாப்பு அமைச்சரும், அவருடன், தேர்ந்து எடுக்கப்பட்ட, முக்கிய ரா அதிகாரிகள் வருகிறார்கள். இவர்கள் திருகோணமலை துறைமுகம் மட்டுமல்லாது, பாலம் அமைப்பது குறித்தும் பேசலாம் என்கிறார்கள். அதேவேளை, கல்லுளி மங்கனாக ரணில், தன்னை சுத்தி சுழட்டும், சைட் அடிக்கும், மூவருக்கும், கண் அடித்துக் கொண்டே, தனது காரியத்தை முடித்துக் கொள்ளும் நரியாக இருக்கிறார். இந்த மூன்று உலக வல்லரசுகளை, இலங்கைப் (என்னும் ஏழை) பெண், எவ்வளவு காலம் தான் சமாளிப்பார். கடைசியில் பிச்சு, பிடுங்கி துவம்சம் செய்ய போகிறார்கள்.
-
- 2
-
நன்றி: கூடை, முட்டை..... அப்படியே கருத்தை எடுக்கிறீர்கள் போலுள்ளது. அது முதலீடு செய்பவர்களுக்கு சொல்லப்படும் அறிவுரை உவமானம். அதாவது உங்களிடம் இருக்கும் பணத்தை ஒரே இடத்தில் முதலிடாமல், பல இடங்களில் முதலிட்டால் ஒன்று பிழைத்தாலும் ஏணையவை கைகொடுக்கும். லைக்கா உள்பட சகலரும் இலங்கைக்கு வெளியே பல உறுதியான கூடைகளையும் இலங்கையில் சின்ன கூடையையும் வைத்திருப்பார்கள். இலங்கையில் வங்கிகளில் பணத்தை கடன் வாங்கியே தொழில் செய்வர். காப்புறுதியால், வன்செயல் வந்தால் நட்டம் இலங்கைக்கே. மேலும் இலங்கை BOI எனும் அரசஅமைப்பு வெளிநாட்டவர் முதலீடுகளுக்கு உத்தரவாதம் தருகிறது. ஆக, புலம் பெயர் முதலீட்டாளர்கள், அளந்தே காலை வைப்பார்கள். பணத்தை அங்கே கொட்டி இழக்கும் முட்டாள்களாக நான் கருதவில்லை.
-
யாழ் மக்களுக்கு கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக வழங்க திட்டம்!
Nathamuni replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இப்போது மக்கள் போத்தலில் வாங்கி குடிக்கிறார்களே. அதனை தவிர்த்து, கொஞ்ச காசை கொடுத்து, வாங்கலாம் தானே. இங்கு பிரிட்டனில் தண்ணீருக்கு காசு பிடுங்குகிறார்கள். அதனால், தரமாக, இடையூறின்றி கிடைக்கிறது. -
நீங்கள் சொல்வது புரிந்தாலும், வணிகம் என்பது வேறு வகையாகவே பார்க்கும். இன்று பராத்தா என்ற பெயரில் வரும் எமது ரொட்டி, 5 ரொட்டிகள் பொதியாக ஒரு பெட்டியில். அப்படியே எடுத்து டோஸ்ட்டரில் போட்டு pancake syrup விட்டு சிறுவர்களும், கறியுடன் பெரியவர்களும் சாப்பிடுகிறார்கள். மாதம் பல கொண்டனர்ஸ் கேரளாவில் இருந்து இலங்கை ரொட்டியினை இறக்குமதி செய்யும் வர்த்தகர் ஒருவரிடம் இதே கேள்வியினை கேட்டேன். ஏன் இதனை நமது பகுதியில் இருந்து இறக்குமதி செய்ய முடியாதா என்று? சிரித்துக் கொண்டே, ஆனால் சீரியஸ் ஆக பதில் சொன்னார். இது வியாபாரம். இடையறாத தொடர் சப்ளை (uninterrupted continuous supply) என்பதே, போட்டிகள் நிறைந்த வியாபார உலகில் எந்த வியாபாரியும் பார்ப்பார். இலங்கையில், அரசு இதனை அக்கறையாக கவனிப்பதில்லை. அதிகாரிகள் ஊழல், அதிகாரிகள் தேவையில்லாத எடுப்புகள் அனைத்துக்கும் மேலாக, குருந்தூர் போன்ற, அரசியல் இஸ்திரத்தினை குறைக்கும் அல்லது, முதலீட்டாளர்களை பயமுறுத்தும், முட்டாள்தனமான செயல்பாடுகள் காரணமாக, யாருமே இலங்கை தொழில் முயல்வாளர்களை நம்ப தயாரில்லை. மேலாக எமது அரசியல்வாதிகள் இதனை குறைந்தது பாராளுமன்றத்தில் சொல்வதும் இல்லை. விக்கியர் முதல் அமைச்சராக லண்டன் வந்திருந்த போது, நண்பர்களுடன் சேர்ந்து, அய்யா, free trade zone போன்ற சில சலுகைகளை கிளிநொச்சி பகுதிகளுக்கு, நல்லாட்சி அரசிடம் இருந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றோம். அவர், முதலில் தீர்வு வர வேண்டும் என்றார். அரசியல் உறுதிப்பாடு இல்லாமை, இலங்கை இன்றைய பொருளாதார தேக்க நிலைமைக்கு காரணம். ஆக, உங்கள் கேள்விக்கு பதில்: எமது பொருளாதார பலம் காரணமாக, கொள்பிட்டி முதல், கல்கிசை தாண்டி பாணந்துறை வரை கடற்க்கரை பகுதி வீடுகள், காணிகள் தமிழர் வசம். இதோ லைக்கா போய் இறங்கி விட்டார். யாழ்ப்பாணத்தில், ஐபிசி பாஸ்கரன், கனடா இந்திரன் முதலே புகுந்து விட்டார்கள். அட, நம்ம லண்டன் Tilco ரியல் எஸ்டேட் போஸ் அங்கே எப்போவோ போய் விட்டார். அது மட்டுமல்ல, தென் பகுதியில், பல ஹாலிடே இடங்களிலும், ஹோட்டல் களிலும் நம்மவர்கள் புகுந்து விட்டார்கள். அதுமட்டுமல்ல, எமக்கு தெரியாத பல முத(லை)லாளிகள் அங்கே போய் இருக்கிறார்கள். இந்தியாவில் இருந்து மிளகாய்த்தூள் பெருமளவில் வந்தாலும் கூட, சந்தையில் முதலிடம், அவுஸ்திரேலியாவில் வசிக்கும் ரஞ்சன் என்பவரின், கொழும்பில் இருந்து இயங்கும், Kings தான். நமது கள உறவுகள், கோசன், சுவைப்பிரியன் எல்லோரும் அங்கே ஏதோ செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். நானும் கூட ஒரு முயல்வில் இருக்கிறேன். அவர்களை போலவே, இப்போது சொல்ல முடியாது. இப்படி தான், புகுந்து கொண்ட யூதர்களினால் இஸ்ரேல் நாடு உருவாகியது.
-
இது புலம் பெயர் தமிழர்களின் பொருளாதார பலம் என்ன என்பதை சிங்களத்துக்கு, குறிப்பாக இலங்கைக்கு புரிய வைக்கும். இலங்கைத்தீவு முழுவதும் கட்டுமான துறையில் (வீடமைப்பு) புலம்பெயர் தமிழர்கள் முதலிட்டு, நாட்டில் பலருக்கு வேலை கொடுத்துள்ளார்கள். லைக்கா, இந்திய சந்தையில் பெரும் முதலீடுகளை செய்துள்ளது. குறிப்பாக, பொன்னியின் செல்வன் படம், லைக்காவின் பொருளாதார நோக்குக்கும், வெற்றிக்கும் ஒரு எடுத்துக்காட்டு. பணத்தினை போடும்போது, டைரக்டர், தனது குழுவுடன் இலங்கையில் படம் பிடிக்க வேண்டும் என்று சொல்ல முடியும், அதன் பிரகாரம் பலருக்கு தொழில் கொடுக்க முடியும். ஆகவே, இது இருபக்கமும் பொருளாதார பயன் மிக்கது. லைக்கா முட்டாள் அல்ல. சிங்களம் குறித்த எச்சரிக்கையுடன் தான் காலை வைப்பார். இன்று, தமிழக ஊழல் அரசியல்வாதி, ஜெகதரட்ஷகன் இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிலில் முதலிட முயல்கிறார். ஆனாலும் கறுப்பு பணம் என்பதால் சிக்கலை எதிர்நோக்கிறார். அது அவரின் தொழிலும் அல்ல. சாராயம் பாக்டரி நடத்துவது தான் அவரது தொழில். அதேவேளை, இலங்கையினை சேர்ந்த, கணவன், மனைவி பிரிட்டனில் நடாத்தும், எண்ணெய் சுத்திகரிப்பு தொழில் £10 பில்லியன் மதிப்புள்ளது. ஆக, லைக்கா போன்ற முதலாளிகளை நன்றாக நடத்தினால் தான், வேறு புலம் பெயர் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை வரும். இல்லாவிடில், கடனில் நாடு மூழ்கி நாசமாவதை தவிர வேறு வழியில்லை.
-
அதேவேளை, லைக்கா பொஸ், பக்கா யாவாரி. வெள்ளைக்காரனுக்கே அல்வா கொடுக்கிற ஆள் பாருங்கோ... ஆள், கொழும்பில சில அரச நிறுவனங்களை வாங்கி போடப்போறார். அதுக்கு இந்த வாய்க்கரிசி போடப்பட்ட மொட்டை கோஸ்ட்டி ஆதரவா இருக்கும். சோழியன் குடுமி சும்மா ஆடுமே? போரிஸ் ஜோன்சன் லண்டன் மேயர் ஆக இருந்த போது, வாய்க்கரிசி போட்ட ஆள்.
-
யாழ் மக்களுக்கு கடல் நீரை சுத்திகரித்து குடிநீராக வழங்க திட்டம்!
Nathamuni replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
நேற்று ஒரு wild life program பார்த்தேன். மத்திய கிழக்கில், தண்ணியில்லாத பாலைவனப்பகுதியில் ஒரு வகை மான்கள் கூர்படைந்து கடல்நீரை குடிக்கின்றன. -
தெலுங்கு படங்களில் நடித்தார். இப்ப மகனை சினிமாவில் உறக்க முயல்கிறார்.
-
Steve Harvey ஒரு கறுப்பு அமெரிக்கர். டிவியில் நிகழ்ச்சி நடத்துபவர். டிவி நேரடி நிகழ்வில் ஒரு பிராங் செய்கிறார். அவருக்கு தேவையான விபரத்தை கொடுத்தவர், பிராங் செய்யப்படப் போகிறவரின் ஜந்து மாத கர்ப்பணி மணைவி. கணவருக்கு போன் பண்ணுகிறார் Steve. நீங்கள்... தானே பேசுகிறீர்கள்.... ஆம்.... நீங்கள்... Fertility Treatment தரும், அந்த டாக்டரிடம் நானும் எனது மணைவியும் போய் வருகிறோம். நீங்களும், உங்கள் மணைவியும் அங்கே போவதும், உங்கள் மணைவி ஐந்து மாத கர்பணி என்பதும் சரிதானே? கணவர், குழப்பத்துடன், ஆனால் இவை பிரத்தியேக தகவல்கள், எப்படி உமக்கு கிடைத்தது. Steave: அது தான் விடயம், அவசரமாக, இன்று ஞாயிறு என்றும் பாராமல்... டாக்டர் அலுவலகத்தில் இருந்து, red flag ரெயிஸ் பண்ணி விடயத்தை சொன்னார்கள். அதிர்ந்து போய் விட்டேன். அவர்கள் தந்த உமது விபரத்துடன் தான் பேசுகிறேன். விசயம் என்னவென்றேல், அங்கே நடந்த மெகா தவறினால், உமது மணைவியின் வயிற்றில் எனது குழந்தை.... கணவர் முதலில் சிரிக்கிறார். பிறகு மெதுவாக கோபமடைகிறார். குரலை வைத்து, நீ ஒரு கறுப்பர் என்று நிணைக்கிறேன் சரியா? அ.... ஆ...ஆமாம். அவ்வளவு தான். எனது மணைவியின் வயிற்றில் f******* g கறுப்புப்பிள்ளையா? என்ன வேடிக்கை இது.... நான் child support கொடுக்கப்போவதில்லை அந்த f….g கறுப்புப்பிள்ளைக்கு.... பிராங் செய்வதால், Steve தீறமையாக கையாள்கிறார். child support எல்லாம் எனக்கு பிரச்சணை இல்லை ஐயா, நீங்கள் எனது பிள்ளைக்கு God Father ஆக இருப்பீர்கள் தானே. கோபத்தின் உச்சிக்கு போகிறார் கணவர். மிக மோசமாக திட்டுகிறார்... இனவெறியுடன். Steve உங்களுக்கு Anger Management help தேவையா? தேவையில்லை.... திட்டுகிறார். இதோ பாருங்கள், நீங்கள் மூன்றாம் பார்ட்டி. எனது பிள்ளை, உமது மணைவி. நாம் பேசிக் கொள்கிறோம். கணவருக்கு கிறுக்கு ஏறி.... டாக்டர் ஆபீஸ் போய் அடித்து துவைக்கப் போகிறேன் என்றவாறு கறுப்பு பிள்ளையா எனது வீட்டீலா என கத்துகிறார். அந்த நிலையில் Steave இது மணைவி ஏற்பாட்டில் நடந்த பிராங் என்கிறார். கணவர் மன்னிப்பு கேட்கிறார். ஆனால், சாதீயத்துக்கு எவ்வகையிலும் குறையாத இனதுவேசம் அமேரிக்காவில் டிவி ஊடாக அப்பட்டமாக தெரிந்தது.
-
காலம் உருண்டோடி.... கோலங்கள் மாறி?
-
கோடீஸ்வர பல்வைத்தியர், மனைவியை கொலை செய்தாரா? அமெரிக்காவில், டென்வர் பகுதியில் ஒரு பல் வைத்திய நிலையம் வைத்திருந்தவர் லார்ரி ருடால்ப். இவரது மனைவி பியன்கா ருடால்ப். மனைவிக்கு வாழ்வில் ஒருமுறையாவது சிறுத்தை ஒன்றை வேட்டை யாடவேண்டும் என்பதில் பெரும் வாழ்நாள் கனவாக வைத்திருந்தார். அதேவேளை 67 வயது பல் வைத்தியருக்கு, ஒரு கள்ள பொம்பிளை, லோரி மில்லிரோன். வைத்தியரும், மனைவியும் சாம்பியா நாட்டுக்கு கிளம்பிச் சென்றார்கள். அங்கே, பெருமளவில் சிறுத்தைகள் பெருகும் காலத்தில், வேட்டைக்கு தடை இல்லை. அதிகாரிகளிடம் கை துப்பாக்கியும் வாங்கிக் கொண்டனர். தான் குளியல் அறையில் இருந்த பொது, வெடிச்சத்தம் கேட்டதாகவும், ஓடிவந்து பார்த்த போது, மனைவி, நெஞ்சில் குண்டடி பட்டு, உயிருக்கு போராடி கொண்டிருந்ததாகவும், பின்னர் இறந்து விட்டதாகவும் அவர் சொல்ல, வழக்கினை விசாரித்த சாம்பிய அதிகாரிகள், அது, விபத்து என்று அறிக்கை கொடுக்க, அவரும் டென்வர் திரும்பி விட்டார். மனைவி பெயரில் $5m காப்புறுதி செய்திருந்தார். அந்த பணத்தினை பெற்றுக் கொண்டபோதே, அமெரிக்க அதிகாரிகள் அவர் மேல் சந்தேகம் கொண்டனர். அப்போது அவருக்கு கள்ள தொடர்பு முன்னமே இருந்ததை தெரிந்து கொள்ள, ஆக, இது, காதலியுடன், ஓய்வு வாழ்வினை நன்றாக அனுபவிக்க நடந்த கொலை என்று சந்தேகம் கொண்டனர். அந்த பெண்ணுடன், பார் ஒன்றில் இருந்த போது, உனக்காக, எனது... F*****G மனைவியை கொன்றேன் என்று சொன்னதை பார் டெண்டர் கேட்க, அதனையே முக்கிய சாட்சியாக வைத்து, கொலைக் குற்றம் சுமத்தி, அவருக்கு ஆயுள் தண்டனையும், காதலிக்கு 17 வருட தண்டனையும் கொடுக்கப்படுள்ளது. மேலும் வைத்தியருக்கு, $15m அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இருவருமே மேல் முறையீடு செய்கின்றனர். வைத்தியர் பக்க, வக்கீல்கள் சொல்வது என்னவென்றால், பல்வைத்தியர் காதலிக்கு சொன்ன முழுவார்த்தையில், பாதியினை வைத்தே இந்த வழக்கினை, நடாத்தி, தண்டணையும் வழக்கப்பட்டுள்ளது. சாம்பிய நாட்டு அதிகாரிகள் எவ்வித சந்தேகமும் தெரிவிக்க வில்லை. அதேவேளை அவர் பாரில் சொன்ன வார்த்தை: உனக்காக, எனது... F*****G மனைவியை கொன்றேன் 'என்று அவர்கள் சொல்கிறார்கள்'. இந்த 'என்று அவர்கள் சொல்கிறார்கள்', என்பதே பார் டெண்டர் கேட்காத அல்லது, கேட்டும் சொல்லாத வார்த்தைகள் என்கிறார்கள் அவர்கள். பொதுபுத்தியுடன் நோக்கும் போது, அந்தாள், கொலை செய்ய ஏன் அங்கே போகவேண்டும், துப்பாக்கியினை தூக்க வேண்டும். காட்டிலே, கீழே இறக்கி விட்டு, சிறுத்தை அடித்து இறந்ததாகவே முடித்திருக்கலாமே? ம்...ம்ம் அமெரிக்கன் ஜஸ்டிஸ் பிழையா அல்லது இவர் உண்மையில் கொலையாளியா? மூலம்: independent.co.uk
-
யாழில் இளைஞர் பௌத்த சங்கத்தின் அங்குரார்ப்பணம்!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
https://youtu.be/X8xrbbN0I48?si=HIxiiGXcei9DDSBD