Jump to content

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    23357
  • Joined

  • Last visited

  • Days Won

    109

Everything posted by உடையார்

  1. இந்திய மத்திய அரசிடமிருந்து அனுமதி இப்பதான் கிடைத்துள்ளது. ஆனா தமிழ்நாட்டு அரசுக்கு இதில் மகிழ்ச்சியில்லை🤣
  2. நன்றி குமாரசாமி நன்றி தமிழ் சிறி நன்றி ஈழப்பிரியன் நன்றி நிழலி, என் மகளுக்கும் இந்த பாட்டு நல்ல விருப்பம், கருத்தறிந்து பாடுவார், பல தமிழ் பாட்டுக்கள் என்னை விட மகளுக்கு மனப்பாடம்
  3. புலிகளை ஏழுவதைவிட நாம் இதுவரை என்ன செய்தோம் மக்களுக்கு 2009 ற்க்கு பின் ? துரோகிகள் சூறையாடியது நிலையற்றது, அதை அவர்கள் விரைவில் உணர்வார்கள், நிம்மதியின்றி இவ்வுலகைவிட்டு விலகுவார்கள்😎
  4. இதில் எனது மகளும் ஆடுகின்றார் ஆண்கள் : காணீரோ நீர் காண்… சோழ வெற்றி வாள் ஒன்றைக் காணீரோ… ஓ அழகிய பூவே செல்லடியோ… மலரிடு போ சகி… ஆண்கள் : வீரா ராஜ வீர… சூரா தீர சூர… வீழா சோழ வீர… சீரார் ஞாலம் வாழ… வாராய் வாகை சூட… ஆண் & பெண்கள் : தொடுவோர் பகைப்போரை நடுகல் சேர்க்கும் வீர… மாறா காதல் மாற… பூவோர் ஏங்கும் தீர… பாவோர் போற்றும் வீர… ஆண்கள் & பெண்கள் : உடைவாள் அதைத் தாங்க… பருதோல் புவி தாங்க… வளமாய் எமை ஆழ… வருவாய் தனம் ஏற… ஆயிரம் வேளம் போல… போர்க்களம் சேரும் சோழ… ஆண் & பெண்கள் : வேந்தா ராஜ ராஜ… வாராய் வாகை சூட… வீரா ராஜ வீர… சூரா தீர சூர… பெண்கள் : விறலியர் கானம் பாட… கணிகையர் நடனம் ஆட… பாவையர் குலவை போட… பரிதியர் சகடம் ஆட… பெண்கள் : அலைமேல் கதிரைப் போல… விளங்கிடும் மரும தேவ… பழையணி பெருமை சாற்ற… புலவர்கள் தமிழும் தீரும்… பெண்கள் : கடல் மேல் புயலைப் போல… களங்கள் விரைந்து பாய… வண்ணொலி சீராட்ட… தென்புலம் ஏங்கும் வீர… ஆண் : வீரா ராஜ வீர… சூரா தீர சூர… பெண் : விறலியர் கானம் பாட… கணிகையர் நடனம் ஆட… பாவையர் குலவை போட… பரிதியர் சகடம் ஆட… பெண் : அலைமேல் கதிரைப் போல… விளங்கிடும் மரும தேவ… பழையணி பெருமை சாற்ற… புலவர்கள் தமிழும் தீற… பெண் : கடல் மேல் புயலைப் போல… களங்கள் விரைந்து பாய… வண்ணொலி சீராட்ட… தென்புலம் ஏங்கும் வீர… ஆண் : வீரா ராஜ வீர… சூரா தீர சூர… பெண்கள் : ஊற்றாகிச் செல்… காற்றாகிச் செல்… ஆண்கள் & பெண்கள் : சர சர சர சரவெனவே… மழை தான் பெய்திட… பர பர பர பரவென… பாயட்டும் பாய்மரம்… பெண்கள் : மறவர்கள் வீரம் காண… சமுத்திரம் பெருகிப் போகும்… உருவிய வாளைக் கண்டு… பிறைமதி நாணிப் போகும்… ஆண் & பெண்கள் : எதிரிகள் உதிரம் சேர்ந்து… குதிகளம் வண்ணம் மாறும்… உதிர்ந்திடும் பகைவர் தேகம்… கடலுக்கு அன்னமாகும்… ஆண் & பெண்கள் : புலிமகன் வீரம் கண்டு… பகைப்புறம் சிதறி ஓடும்… சரமழை பெய்தல் கண்டு… கடலலை கரைத்து ஓடும்… ஆண் & பெண்கள் : அடடா பெரும் வீரா… எடடா துடி வாளை… தொடடா சரமாலை… அடடா பகை ஓட… ஆண் : வீரா ராஜ வீர… சூரா தீர சூர… வீழா சோழ வீர… சீரார் ஞாலம் வாழ… வாராய் வாகை சூட… பெண்கள் : தொடுவோர் பகைப்போரை நடுகல் சேர்க்கும் வீர… மாறா காதல் மாற… பூவோர் ஏங்கும் தீர… பெண்கள் : ஆயிரம் வேளம் போல… போர்க்களம் சேரும் சோழ… ஆண்கள் & பெண்கள் : வேந்தா ராஜ ராஜ… வாராய் வாகை சூட… பெண்கள் : எம்தமிழ் வாழ்க வாழ்க… வீர சோழம் வாழ்க… நற்றமிழ் வாழ்க வாழ்க… நல்லோர் தேசம் வாழ்க… பெண்கள் : எம்தமிழ் வாழ்க வாழ்க… வீர சோழம் வாழ்க… நற்றமிழ் வாழ்க வாழ்க… நல்லோர் தேசம் வாழ்க… ஆண்கள் : எம்தமிழ் வாழ்க வாழ்க… வீர சோழம் வாழ்க… நற்றமிழ் வாழ்க வாழ்க… நல்லோர் தேசம் வாழ்க… ஆண் : வீரா…
  5. இந்தியா வென்றால் உலகம் முழுக்க இவர்களின் அலப்பறை தாங்க முடியாது சாமீ😎, சிலவேளை அமெரிக்காவில் டொலர்கள் கூட வீசுவார்கள் வீதியில் 🤣
  6. சதாம் பயங்கரமான ஆயுதங்களை வைத்துள்ளார் என்று சொன்ன நீங்கள் இதையும் சொல்வீர்கள், நீங்கள் சொல்வதுதானே பலருக்கு வேதவாக்கு☠️
  7. நல்ல ஏதிர்பாக்காத திருப்பமுள்ள கதை👍 இதை சர்வசாதரணமாக தாய்லாந்து இந்தோனேசியா பெண்கள் செய்கின்றார்கள் 😎
  8. ஜயர்மார் வேட்டி கட்டுவதும், பாதிரியார்கள் வெள்ளை அங்கி அணிவதும், பிக்குகள் காவி அணிவதும், எப்படி அவர் அவர்கள் சுதந்திரமோ, அதே மாதிரி உடை அணிவது அவர் அவர்கள் விருப்பமே, அதில் தலையிட நாம் யார்
  9. இறுகப்பற்று’ விமர்சனம் ”கணவன் மனைவிக்குள் சண்டை வருவதற்க்கு காரணம் |தேவையில்லை கணவன் மனைவியாக இருப்பதே ஒரு காரணம்தான் "என்ற யதார்த்தமான டயலாக்குடன் தொடங்குகிறது யுவராஜ் தயாளன் இயக்கியுள்ள இறுகப்பற்று திரைப்படம். பொடன்ஷியல் ஸ்டூடியோ சார்பில் SR. பிரகாஷ் பாபு, SR பிரபு இந்த படத்தை தயாரித்துள்ளார்கள்.விவாகரத்து செய்ய முன் வரும் தம்பதிகளுக்கு தனது அலுவலகத்திலும், நீதிமன்றத்திலும் முறையான ஆலோசனைகள் வழங்கி சேர்த்து வைக்கும் பணியை செய்து வருகிறார் மித்ரா மனோகர். மித்ராவிடம், தனது மனைவி குண்டாக இருப்பதால் விவாகரத்து கேட்க வருகிறார் ஒருவர். தனது மனைவி தன்னை ஏன் வெறுக்கிறார் என்று காரணம் தெரியவில்லை என குழப்பதுடன் வருகிறார் மற்றொருவர். இவர்களின் பிரச்சனைகளை தீர்க்க பல்வேறு மனநல ஆலோசனைகளை தருகிறார் மித்ரா. ஒரு கட்டத்தில் மித்ரா தனது கணவர் மனோகருடன் கருத்து மாறுபாடு ஏற்பட்டு பேசாமல் இருக்கிறார். இந்த மூன்று தம்பதிகளின் பிரச்சனை தீர்ந்ததா என்பதை கதையாக இல்லாமல் வாழ்வியலாக சொல்லி இருக்கிறார் டைரக்டர். கணவன் மனைவிக்கு மன நல ஆலோசனை என்ற விஷயம் படம் முழுக்க இருந்தாலும் பிரச்சாரமாக இல்லாமல் கதை மாந்தார்கள் வழியே நகர்கிறது. ஒரு ஆலோசகராக, மனைவியாக அழகான நடிப்பை தந்துள்ளார் ஷரத்தா ஸ்ரீநாத். இப்படி ஒரு ரோலில் விக்ரம் பிரபுவை முதல் முறையாக பார்க்கிறோம் என எண்ணும் அளவுக்கு அவரின் நடிப்பு உள்ளது. மனைவி எதை செய்தாலும் ஏற்று கொள்ளும் கணவனாக, வாழ்க்கையையும், தொழிலையும் பிரித்து பார்க்க தெரியாத மனைவியை பார்த்து தவிக்கும் போது ஒரு சரா சரி ஆணாகவும் தரமான நடிப்பை வழங்கி உள்ளார் விக்ரம் பிரபு. தனது ஈகோ உடைந்து அழும் போது விதார்த் ஒரு சிறந்த நடிகர் என்பதை உணர்த்துகிறார். தனது கணவனால் வெறுக்கப்படும் போது ஒரு சராசரி பெண்ணாக வாழ்ந்து காட்டியிருக்கிறார் அபர்நதி. ஸ்ரீ, சானியா இருவரும் சிறந்த நடிப்பை தந்துள்ளார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் உணர்வுகளை கடத்துகிறது. உங்கள் வாழ்க்கை துணையை வெறுக்க ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். இருந்தாலும் பிடிக்க ஒரு காரணம் கண்டிப்பாக இருக்கும் இதை மனதில் வைத்து துணையின் கையை இறுக பற்றிக்கொள்ளுங்கள் என்கிறது இப்படம். விவாகரத்து செய்ய நினைக்கும் தம்பதிகள் இப்படத்தை பார்த்தால் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ள வாய்ப்புள்ளது. தமிழ் சினிமாவில் தம்பதிகளின் அன்பின் தேவையை உணர்த்தும் படமாக வந்துள்ளது இறுகப்பற்று. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய படமாக இறுகப்பற்று இருக்கும் என்பது உறுதி. https://kalkionline.com/cinema/review/movie-review-irugapatru-directed-by-justin-prabhakaran
  10. இறுகப்பற்று விமர்சனம்: `திகட்ட திகட்ட காதலித்தவரை ஏன் வெறுக்கிறோம்?'- படம் சொல்வதென்ன? கணவன் - மனைவிக்கு இடையே வரும் வழக்கமான பிரச்னைகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பாடம் எடுக்காமல், தோளில் கைபோட்டு நம்முடன் உரையாடிப் புரிய வைக்கிறது இந்த 'இறுகப்பற்று' திரைப்படம். Pause Unmute Loaded: 19.99% Remaining Time -9:17 Close Player இறுகப்பற்று சிறு பிரச்னைகள் முரண்பாடுகளுக்குக் கூட கப்புல் கவுன்சிலிங் (Couple Counselling), சைக்காலஜிக்கள் தெரபி, அவை தொடர்பான புத்தகங்கள் மற்றும் மொபைல் ஆப்-கள், விவாகரத்து என வேகவேகமாக நவீன தலைமுறை எடுக்கும் 'அவசர முடிவுகளை' விமர்சிக்கிறது படம். அதேநேரம், மொத்தமாகவும் அவற்றைப் புறந்தள்ளாது, அவற்றின் 'சிறிய' தேவையும் பலனையும் சுட்டிக்காட்டுகிறது. தம்பதிகளுக்கு இடையிலான அன்பு, விட்டுக்கொடுத்தல், இணையரின் சுயமரியாதையைப் பேண வேண்டிய பொறுப்பு, சிறு சண்டைகளையும் ஊடல்களையும் அணுகும் முறை போன்றவற்றை விவாதிக்கிறது. மேலும், திருமண பந்தத்தை மிகவும் ரொமான்டிசைஸ் செய்யவோ, மிகைப்படுத்தி பயமுறுத்தவோ செய்யாமல், சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள், சமாதானங்கள், அரவணைப்புகள் என ஆனந்தமாக அணுகச் சொல்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன். இறுகப்பற்று கதை..? காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதியான அர்ஜுனுக்கும் (ஶ்ரீ) திவ்யாவிற்கும் (சானியா ஐய்யபன்) இடையே இருந்த காதல் கரைந்து, சண்டைகள் அதிகரிக்கின்றன. ஏற்பாட்டுத் திருமண செய்துகொண்ட தம்பதியான ரங்கேஷிற்கும் (விதார்த்) பவித்ராவிற்கும் (அபர்ணதி) ஒரு குழந்தை உள்ளது. பவித்ரா தனது உடல்பருமனைக் குறைக்காததால், விவாகரத்துப் பெற்று அவரிடமிருந்து விலகும் முடிவை எடுக்கிறார் ரங்கேஷ். சைக்காலஜிஸ்ட்டான மித்ராவும் (ஷ்ரதா ஶ்ரீநாத்), அவரது கணவர் மனோவும் (விக்ரம் பிரபு) சண்டைகளே இல்லாமல் தங்கள் திருமண வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அர்ஜுன்-திவ்யா, ரங்கேஷ்-பவித்ரா தம்பதிகளின் பிரச்னை தன்னிடம் வரவே, அவர்களுடன் உரையாடி அவர்களுக்கு இடையிலான பிரச்னைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார் மித்ரா. பின்னர் அதற்கான ஆலோசனைகளை முன்வைக்கிறார். மித்ராவின் வேலையே மனோ-மித்ரா தம்பதியின் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையில் சங்கடங்கள் நிகழக் காரணமாகிறது. இம்மூன்று தம்பதிகளின் பிரச்னைகள் என்ன என்பதையும் இறுதியில் அவர்கள் அவற்றிலிருந்து மீண்டார்களா என்பதையும் இறுகப் பற்றிப் பேசுகிறது இந்த 'இறுகப்பற்று'. இறுகப்பற்று ஶ்ரீ, சானியா ஐயப்பன், விதார்த், அபர்ணதி, ஷ்ரத்தா ஶ்ரீநாத், விக்ரம் பிரபு என ஆறு பிரதான கதாபாத்திரங்களின் தேர்வும் கச்சிதம். ஒவ்வொருவரும் தங்களின் கதாபாத்திரங்களின் தன்மையை உணர்ந்து, அக்கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும் அக-புற சிக்கல்களையும் அழுத்தமாகப் பதிய வைத்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் விதார்த் தன் வலியை விவரிக்கும் இடத்தில் நடிப்பில் பிரமாதப்படுத்துகிறார். உடைந்து அழும் இடத்திலும், சின்ன சின்ன முகபாவனைகளிலும் விதார்த்- அபர்ணதி ஜோடி மற்றவர்களைவிட 'எக்ஸ்ட்ரா மார்க்ஸ்' வாங்குகிறார்கள். மறைந்த நடிகர் மனோபாலா சில காட்சிகளில் வந்து சிரிக்க வைக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் படம் முழுவதுமே சிறிதும் பெரிதுமாக நிறையப் பாடல்களால் நிரம்பியிருக்கின்றன. கார்த்திக் நேத்தா வரிகளில் கிறிஸ்டோபர் ஸ்டான்லி மற்றும் பத்மபிரியா ராகவன் குரலில் ஒலிக்கும் 'மாயா மாயா' பாடல் ரசிக்க வைத்து ஒரு புத்துணர்ச்சியைத் தருகிறது. முதற்பாதியில் வரும் பாடல்கள் திரைக்கதை ஓட்டத்தோடு தொல்லை தராமல் வந்து போகிறது. பின்னணி இசையில் கதைக்குத் தேவையான Mood Justification செய்திருக்கிறார் ஜஸ்டின். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கு பிரத்யேக பின்னணி இசைக் கருவிகளைத் தேர்ந்தெடுத்ததும், அவற்றைக் கதாபாத்திரங்களின் மனக் குரலாய் ஒலிக்க விட்டதும் எனச் சமகால தமிழ் சினிமாவில் தன் இருப்பை அழுத்தமாகப் பதிக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன். இறுகப்பற்று ஆர்ப்பாட்டமில்லாத திரைக்கதையை அச்சு பிசிறில்லாமல் திரையாக்கம் செய்ய கோகுல் பினாயின் ஒளிப்பதிவும் ஜே.வி.மணிகண்ட பாலாஜியின் படத்தொகுப்பும் மிகச் சிறப்பாகவே கைகொடுத்திருக்கிறது. கதாபாத்திரங்களின் அறிமுக காட்சிகளில் வரும் 'கட்'கள் ரசிக்க வைத்து, படத்திற்கான 'மூட்'-ஐ ஆரம்பத்திலேயே செட் செய்ய உதவியிருக்கின்றன. மூன்று தம்பதிகளின் வீடுகளையும் அதன் பொருட்களையும் வேறுபடுத்தி காட்டியதோடு , அவற்றை வைத்து தம்பதிகளின் உறவு நிலையைக் குறியீடாகச் சொல்கிறது சக்தி வெங்கட்ராமனின் கலை இயக்கம். `இங்கே இ.எம்.ஐ கட்டுறதுக்காகவே நான் வாழ்ற மாதிரி இருக்கு', 'நான் உன் மேல கோபமாத்தான் இருக்கேன்...கோபத்தை வெறுப்பா மாத்திடாதே..!', 'மென்டலி டிஸ்டர்ப் தான்...மெண்டலி அஃபக்டட் இல்லை!' என சிம்பிளான வசனங்களில் கொஞ்சம் நாடகத்தன்மை எட்டிப்பார்த்தாலும், மொத்தமாகப் பார்க்கும்போது வசனங்கள் படத்தின் கதையோட்டத்துக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன. இறுகப்பற்று பொருளாதார / சமூக அடுக்கில் வெவ்வேறு நிலைகளில் உள்ள மூன்று தம்பதிகளை எடுத்துக்கொண்டு, அந்நிலைகளுக்கே உரிய பிரச்னைகளையும், தம்பதிகளின் பிரத்யேக குணங்களால் ஏற்படும் பிரச்னைகளையும் விவரிக்கத் தொடங்குகிறது திரைக்கதை. இப்பிரச்சினை 'சைக்காலஜிஸ்ட்டான' மித்ராவின் பார்வையிலேயே அணுகப்பட்டாலும், நமக்குப் பாடம் நடத்துவது போலக் காட்சிகளை வைக்காமல், `ஹானஸ்டி ஏர்', `தேங்க் யூ ஜார்' போன்ற சின்னச்சின்ன டாஸ்க்குகளை வைத்து காமெடியாக சொல்லப்படுவதால் நம்மால் எளிதாக கதைக்குள் ஒன்றிவிட முடிகிறது. மூன்று தம்பதிகளின் தனித்தனி பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாக விளக்கிச் சொல்லப்பட்டு, விவாதிக்கப்பட்டு ஒருகட்டத்தில் இந்த மூன்று தம்பதிகளின் பிரச்னைகளின் மையமும் ஒன்றுதான் என்று வந்து நிற்கிறது. இந்த பரிணாமத்தை எளிமையாகவும் யதார்த்தமாகவும் அழகுபட சொல்கிறது திரைக்கதை. தம்பதிகளுக்கு இடையிலான உறவுச்சிக்களை ஷ்ரத்தா 'தியரிட்டிக்கலாக' மனோதத்துவ ரீதியில் அணுகுவதும், அதை அவரது கணவர் விக்ரம் பிரபு 'ப்ராட்டிக்கலாக' அணுகி, அதற்கு காமெடி கவுண்டர் கொடுப்பதும் என விக்ரம் பிரபு - ஷ்ரத்தா கூட்டணி முதற்பாதியைக் கலகலப்பாக்குகிறது. மறுபுறம், மனைவியை மட்டம் திட்டும் மனோபாவத்தில் இருக்கும் ஶ்ரீயும் விதார்த்தும், அவர்களைச் சமாளிக்க முடியாமல் திண்டாடும் சானியா ஐய்யபன் மற்றும் அபர்ணதி கதாபாத்திரங்களும் என இறுக்கமாகவும் கதையின் மையத்தை விளக்குபவையாகவும் திரைக்கதை பயணிக்கிறது. மூன்று தம்பதியரின் பிரச்னையின் மையமானது நிஜத்தில் பெரும்பாலான தம்பதிகள்/ஜோடிகள் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து எழுதப்பட்டதைப்போல நம்மை உணரச் செய்ததன் மூலம் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர். இறுகப்பற்று உறவு முறிவுக்குக் காரணமாக உள்ள விஷயங்களை அடுக்கும்போது, ஒற்றைச்சார்புநிலையில் பேசாமல், இரு தரப்பின் மீதும் உள்ள குறைகளை சுட்டிக்காட்டப்படுவது சிறப்பு. மேலும், பொருளாதார சூழல், பணிச்சுமை, குடும்பச் சூழல் போன்றவை தம்பதிகளின் உறவுக்குள் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியும் ஆழமாகப் பேசுகிறது. இத்தனையையும் நமக்கு அலுப்பைத் தராமல் சுவாரஸ்யமாகத் தந்த விதத்திற்காகவே பாராட்டலாம். படத்தில் நெகட்டிவ் விஷயங்களே இல்லையா..? இரண்டாம் பாதி முழுக்க தம்பதிகளுக்கிடையேயான பிரச்னைகளைக் காட்டி ஆலோசனைகளையும் தீர்வுகளையும் மையப்படுத்தியே கதை நகர்கிறது. இன்னும் கச்சிதமாகச் செதுக்கியிருக்கலாம். விக்ரம் பிரபு- ஷ்ரத்தா தம்பதியின் பிரச்னையில் இன்னும்கூட அழுத்தம் சேர்த்திருக்கலாம். முதற்பாதியில் தொல்லை தராமல் வந்து போன பாடல்கள் இப்பாதியில் கொஞ்சம் நம்மைச் சோதிக்கிறது. பாடல்களாலும் வசனங்களாலும் நீண்டுகொண்டே செல்லும் இறுதிப்பகுதியில் யூகிக்கும்படியான க்ளைமாக்ஸ் காட்சியில் நாடகத்தன்மையைத் தவிர்த்திருக்கலாம். இறுகப்பற்று திருமண உறவில் காதல் குறைந்து பிரிவு வரை செல்லும் இன்றைய தம்பதிகளுக்கு, `பிரியுறதுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்... சேர்ந்திருக்குறதுக்கு ஒரு காரணம் இருந்தாலும் இறுக்கமா பிடிச்சுக்கங்க!' என்று கியூட் மெஸேஜ் சொல்லி இருக்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன். க்ளைமாக்ஸ் மெஸேஜ் தியேட்டரைவிட்டு வெளியே வந்தும் நம் மண்டைக்குள் சுழல்வதுதான் இப்படத்தின் வெற்றி! https://cinema.vikatan.com/kollywood/review-of-irugapatru-tamil-movie திகட்ட திகட்ட காதலித்த ஒருவரை எப்படி வெறுத்து விட முடியும் இறுகப்பற்று விமர்சனம்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.