உடையார்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  5,587
 • Joined

 • Last visited

 • Days Won

  3

உடையார் last won the day on December 30 2014

உடையார் had the most liked content!

Community Reputation

340 ஒளி

About உடையார்

 • Rank
  Advanced Member

Profile Information

 • Gender
  Male
 • Location
  Australia

Recent Profile Visitors

 1. தமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 411 ஆக உயர்வு தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 102 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் சென்னை: கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து 1500 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் 1500 பேரையும் தனிமைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, டெல்லியில் இருந்து வந்தவர்களில் நேற்று 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்தது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 102 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். https://www.maalaimalar.com/news/topnews/2020/04/03165008/1384017/Coronavirus-affected-another-102-persons-in-TN.vpf
 2. கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக சிங்கப்பூரில் 7ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் பிரதமர் சிங்கப்பூர்: உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த, சமூக விலகலை கடைப்பிடிப்பதுதான் ஒரே வழி. இதற்காக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் சிங்கப்பூரில் வரும் 7-ம் தேதி முதல் ஒரு மாதம் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான உத்தரவை பிரதமர் லீ சியங் லூங் வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரில் தற்போது வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும், மக்கள் கண்டிப்பாக சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தி உள்ளார். நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமே மாஸ்க் அணிய வேண்டும் என்ற நிலையை மாற்றுவது குறித்து அரசாங்கம் பரிசீலனை செய்வதாகவும் அவர் கூறினார். சிங்கப்பூரில் கொரோனோ பாதிப்பு எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. இன்றை 65 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பு 1114 ஆக உயர்ந்துள்ளது. 5 பேர் உயிரிழந்துள்ளனர். https://www.maalaimalar.com/news/topnews/2020/04/03150452/1383994/Singapore-Prime-Minister-Lee-Hsien-Loong-announces.vpf
 3. டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் தகுதி பெறுவதற்கான புதிய காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஜப்பானின் டோக்கியோவில் இந்த வருடம் ஜூலை 24-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 9-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்தது. உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று மிகக்பெரிய அளவில் அச்சுறுத்தி வருவதால் அடுத்த வருடம் ஜூலை 23-ந்தேதியில் இருந்து ஆகஸ்ட் 8-ந்தேதி வரை நடைபெறும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த வருடம் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் வகையில் அதற்கான தகுதிச்சுற்றுகள் நடைபெற்று வந்தன. தற்போது அடுத்த வருடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் அதற்கு ஏற்ப புதிய காலக்கெடுவை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜூன் 29-ந்தேதி வரை தகுச்சுற்றுகள் நடத்தி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பட்டியலை அனுப்ப வேண்டும் என அறிவித்துள்ள ஐஓஏ, இந்த காலக்கட்டத்திற்குப் பிறகு தகுதி பெற முடியாது என்று தெரிவித்துள்ளது. https://www.maalaimalar.com/news/sports/2020/04/03162747/1384012/IOC-announces-new-deadline-for-Olympic-qualification.vpf
 4. போதை குறைவாக வேண்டும் என்றால் மது அருந்தலாம், நிறைய வேண்டும் என்றால் இதை செய்யுங்கள் என நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். இந்த சூழலில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் திரைப்பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது ஸ்டைலில் அறிவுரை கூறியுள்ளார். அவர் பதிவிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது: இந்த 21 நாட்களில் ஒரு நல்ல விஷயத்தை முயற்சி செய்தால் அது நம் இயல்பாகவே மாறிவிடும். ஒரு கெட்ட விஷயத்தை விட்டுவிட்டால் அது நம் இயல்பில் இருந்தே போய்விடும். உதாரணத்துக்கு, குடிப்பழக்கத்தை 21 நாட்கள் கைவிட்டுவிட்டால், அதன்பின் இந்த பழக்கம் இல்லாமல் போய்விடும். போதை குறைவாக வேண்டும் என்றால் மது அருந்தலாம், நிறைய வேண்டும் என்றால் தியானம் செய்யலாம். நம் உள்மனம் நோக்கிய ஒரு பயணம் தான் தியானம். மிஷின் போல் நமக்காக உழைக்கும் நமது உடலுக்காக தினமும் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் பயிற்சிகளை இந்த 21 நாட்கள் முயற்சி செய்தால் அது நம் இயல்பாகவே மாறிவிடும். அதேபோல் நல்ல எண்ணங்களை பரப்புவதும் மிக முக்கியம். அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். மக்களாகிய நம் ஒத்துழைப்போடு, விரைவில் இந்தியா இந்த நோயில் இருந்து மட்டுமல்லாமல் எந்த போர் வந்தாலும் அதில் வென்று மிளிர்வது, ஒளிர்வது நிச்சயம். என பார்த்திபன் தெரிவித்துள்ளார். https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/04/03113318/1383962/Parthiban-tips-for-quarantine-days.vpf
 5. அடுப்பு பற்றவைக்கவே வசதியில்லாத மக்கள் விளக்கேற்ற முடியுமா? - மாஸ்டர் பட பிரபலம் டுவிட் அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை பிரதமர் விளக்கை ஏற்ற சொல்வது சற்று பயமாக இருப்பதாக மாஸ்டர் பட பிரபலம் டுவிட் செய்துள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி இன்று வீடியோ மூலம் உரையாற்றினார். அப்போது, ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு , அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றுமாறு மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். .. இந்த நிலையில் ’மேயாத மான்’ ’ஆடை’ ஆகிய படங்களை இயக்கியவரும், விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தில் பணிபுரிந்தவருமான இயக்குனர் ரத்னகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது: "வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம். இப்போது அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக தான் இருக்கிறது’ என்று கூறியுள்ளார். ரத்னகுமாரின் இந்த டுவிட்டுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/04/03132658/1383979/Director-ratnakumar-comment-about-modis-request.vpf
 6. ஊரடங்கிற்கு பிந்தைய திட்டம் என்ன என விஞ்ஞானிகள்-மருத்துவர்கள் அடங்கிய 800 பேர் மத்திய அரசிற்கு கேள்வி விடுத்து உள்ளனர். பதிவு: ஏப்ரல் 02, 2020 17:15 PM புதுடெல்லி 800 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் ஏப்ரல் 1 ம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டனர், கொரோனா தொற்றுநோயின் முக்கிய அம்சங்கள் குறித்து கவனத்தை ஈர்த்ததுடன், இது தொடர்பாக சில முக்கியமான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியது. அதில் கையொப்பமிட்டவர்களில் டிஐஎஃப்ஆர், மும்பை, என்சிபிஎஸ், பெங்களூரு, ஐஐடி, ஐஐஎஸ்இஆர், ஐஐஎஸ்சி, பெங்களூரு, மற்றும் அமைதி மற்றும் மேம்பாட்டுக்கான இந்திய மருத்துவர்கள் சங்க உறுப்பினர்கள் அதில் அடங்குவர். கொரோனா பாதிப்பின் பல நிகழ்வுகளை உண்மையில் அடையாளம் காண இந்த விலைமதிப்பற்ற இடைவெளியை அரசாங்கம் பயன்படுத்தவில்லை என்ற கவலையை வெளிப்படுத்திய இந்த அறிக்கை, சாத்தியமான விளைவுகளுக்கு கவனத்தை ஈர்த்து உள்ளது. குறிப்பாக, தற்போதைய தடைசெய்யப்பட்ட காலத்தில் ஏராளமான லேசான அறிகுறி அல்லது அறிகுறியற்ற பாதிப்புகள் - பெரும்பாலான நோய்த்தொற்றுகளைக் கொண்டவை - ஊரடங்கு காலத்தின் முடிவில் கூட கண்டறியப்படாமல் இருக்கும். ஊரடங்கிற்கு பிறகு தொற்றுநோய் மீண்டும் மிகவேகமாக பரவும் கருவாக எளிதில் செயல்படக்கூடும். எனவே, இந்தியாவின் சோதனை முறையை விரிவுபடுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஐ.சி.எம்.ஆர் மற்றும் இந்திய அரசை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். என அதில் கூறி உள்ளனர் பெங்களூருவின் ஐ.சி.டி.எஸ்ஸைச் சேர்ந்தவரும் இந்த முயற்சியை ஒருங்கிணைக்கும் நபர்களில் ஒருவருமான சுவ்ரத் ராஜு கூறியதாவது:- ஊரடங்கு ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே. சுகாதார முறையைத் தயாரிக்க இந்த காலகட்டம் பயன்படுத்தப்படாவிட்டால், நாடு நீண்டகால தொற்றுநோயியல் விழும். ஊரடங்கு ஒரு சிகிச்சையல்ல என்பதை வலியுறுத்துகையில், மற்ற காரணிகள் இல்லாத நிலையில்,ஊரடங்கு அகற்றப்பட்டவுடன் தொற்றுநோய் மீண்டும் பரவக்கூடும். இந்தியாவின் ஊரடங்கு முடிவில் இது நடந்தால், தொற்றுநோய் ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ஒரு சமூகத்தை பாதிக்கும், பேரழிவு தரக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தும். ஊரடங்கு முடிவடையும் போது புதிய தொற்றுநோய்களின் வீதம் நிலையான முறையில் குறைவாக வைக்கப்படுவதை உறுதி செய்யும் ஒருஊரடங்கு திட்டத்தை வெளியிடுமாறு விஞ்ஞானிகள் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர். "சமூக விலகல் மற்றும் சிறந்த சுகாதாரம் உதவும் என்றாலும், இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன், தொற்றுநோயை எவ்வாறு சமாளிக்க திட்டமிட்டுள்ளது என்பதை விவரிக்கும் ஒரு வரைபடத்தை இந்திய அரசு வெளியிடவில்லை என்று நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். இது அரசாங்கத்தின் நீண்டகால மூலோபாயத்தில் மக்களின் நம்பிக்கையையும் அதிகரிக்கும் என்று அவர் கூறினார். https://www.dailythanthi.com/News/India/2020/04/02171521/Over-800-scientists-doctors-call-upon-government-to.vpf?utm_source=vuukle&utm_medium=talk_of_town
 7. தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் - விஞ்ஞானிகள் தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பதிவு: ஏப்ரல் 01, 2020 13:43 PM புதுடெல்லி தும்மும் போது இரும்பும் போது கொரோனா வைரஸ் நீர்த்துளிகள் 27 அடி வரை பயணிக்கக்கூடும் என்று எச்சரித்ததாக மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (எம்ஐடி) ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளார். ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷனில் (ஜமா) வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கட்டுரையில் எம்ஐடியின் இணை பேராசிரியரும் திரவ இயக்கவியலில் நிபுணருமான லிடியா பவுரவுபியாவால் கூறி உள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஆறு அடி (2 மீட்டர்) சமூக தூரமாக சுகாதார நிபுணர்கள் திருத்த வேண்டும் என்று லிடியா பவுரவுபியா கூறினார். மேலும் நீங்கள் அணியும் முகமூடியின் செயல்திறன் உயர்-வேக வாயு மேக உமிழ்வைப் பொறுத்தது. உச்ச வெளிவிடும் வேகம் வினாடிக்கு 33 முதல் 100 அடி வரை (10-30 மீ / வி) அடையலாம். , சுமார் 23 முதல் 27 அடி (7-8 மீ) வரை பரவக்கூடிய இடத்தை உருவாக்குகிறது. கொரோனா வைரஸிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள குடிமக்கள் சுமார் 1 மீட்டர் அல்லது மூன்று அடி தூரத்தை பராமரிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எம்ஐடி ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, வாயிலிருந்துவெளிப்படும் உமிழ்நீர் அந்த பகுதியின் ஈரப்பதமான மற்றும் சூடான வளிமண்டலம் தனிமைப்படுத்தப்பட்ட நீர்த்துளிகளை நீண்ட காலத்திற்கு ஆவியாதலை தவிர்க்க உதவுகிறது. "இந்த நிலைமைகளின் கீழ், ஒரு துளியின் ஆயுட்காலம் 1000 வரை கணிசமாக நீட்டிக்கப்படலாம், இது ஒரு நொடியிலிருந்து நிமிடங்கள் வரை ஆகும் என கூறுகிறது. இதற்கிடையில், எம்ஐடி ஆய்வு எச்சரிக்கையுடன் எடுக்கப்பட வேண்டும்.இது உண்மையிலேயே மிகவும் தவறாக வழிநடத்தும் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் மிகவும் வலுவான தும்மல் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அமெரிக்காவை தளமாகக் கொண்ட தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் அந்தோனி ஃபாசி கூறி உள்ளார். https://www.dailythanthi.com/News/India/2020/04/01134306/Coronavirus-COVID19-droplets-could-travel-up-to-27.vpf
 8. இந்தியாவில், கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இனிதான் நாடு கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது மற்ற நாடுகள். பதிவு: ஏப்ரல் 03, 2020 13:30 PM புதுடெல்லி அமெரிக்காவை போல் தற்போது இந்தியாவிலும் கொரோனா தொற்று வேகம் எடுக்க தொடங்கியுள்ளது. அமெரிக்கா, இத்தாலி ஆகிய நாடுகளில் இரண்டு வாரங்களுக்கு பின்தான் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியது. அதே போல் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தொற்றுநோயின் மோசமான நிலையைக் கையாளும் பல நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பாதிப்பு விகிதம் மெதுவாக உள்ளது. மார்ச் 8 அன்று, அமெரிக்காவில் இரண்டு நாட்களில் 541 வழக்குகள் பதிவாகியுள்ளன, மேலும் இந்த எண்ணிக்கை 994 பாதிப்புகள் என இரு மடங்காக அதிகரித்தது. இருப்பினும், கடந்த வாரத்தில், இது 75 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் இந்தியாவில் கொரோனாபாதிப்புகள் இந்தியாவில் இரட்டிப்பாகிவிட்டன, கடந்த ஏப்ரல் 2ந்தேதி 328 பாதிப்புகள் மற்றும் 12 இறப்புகள் பதிவாகி இருந்தன . மத்திய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இப்போது 2,069 வழக்குகள் உள்ளன, 53 இறப்புகள் மற்றும் 156 குணப்படுத்தப்பட்டுள்ளன .மாநிலங்களின் அதிகாரிகள் தகவ்ல் படி 2,500 க்கும் அதிகமான பாதிப்புகளும் எண்ணிக்கையையும், உயிரிழப்பு எண்ணிக்கை 56 ஆகவும் உள்ளது. மராட்டியத்தில் 335 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் 286 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 309 மற்றும் டெல்லியில் 219, கர்நாடகாவில் 124, உத்தரபிரதேசத்தில் 113, தெலுங்கானாவில் 107, ராஜஸ்தானில் 133, மத்திய பிரதேசத்தில் 99, குஜராத்தில் 87, ஆந்திராவில் 132க்ஷ்`க்ஷ்`, ஜம்மு காஷ்மீரில் 62, பஞ்சாபில் 46,அரியானாவில் 47, மேற்கு வங்கத்தில் 53, பீகாரில் 24, சண்டிகரில் 16, லடாக்கில் 13 வழக்குகள் பதிவாகியுள்ளன. அசாமில் 5, சத்தீஸ்காரில் 9, கோவாவில் 5, இமாச்சல பிரதேசத்தில் 3, ஜார்க்கண்டில் 1, மணிப்பூர் மற்றும் மிசோரத்தில் 1, ஒடிசாவில் 4, புதுச்சேரியில் 3, உத்தரகாண்டில் 7 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. உலகளவில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது, 50,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. டெல்லி நிஜாமுதீன் சம்பவத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவிலும்,தமிழகத்திலும் அதிகரித்து உள்ளது. கடந்த 2 நாட்களில் தமிழகத்தில் 200 கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இந்த வேகத்தில் அதிகரித்தால், ஊரடங்கு 21 நாட்கள் முடிவில் பத்தாயிரத்தை கடக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளன. அவற்றின் கூற்றுப்படி கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. மேலும், தொற்றின் வேகம் இப்போது குறையுமா என்று இப்போது கண்ணிக்க இயலாது என்று சுட்டிக்காட்டியுள்ளது. பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆற்றிய உரையில் கொரோனாவுக்கு எதிரான போர் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. இதில் இருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கிவிடக்கூடாது; எந்த தவறும் நடந்துவிடக்கூடாது. கொரோனாவுக்கு எதிரான போர் சுகாதார பணியாளர் கள், போலீசார், அரசாங்கத்துக்கு மட்டுமானது என்று யாரும் கருதிவிடக்கூடாது. ஒவ்வொருவரும் இதை தனக்கு எதிரான போராக கருதவேண்டும் என மக்களை கேட்டு கொண்டார். மார்ச் 24 மாலை, கொரோனா வைரஸின் "சமூக பரவலை" தடுக்க பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கை அறிவித்தார். மார்ச் 24 மற்றும் ஏப்ரல் 1 க்கு இடையில், கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது - மார்ச் 25 அன்று 606 பாதிப்பாக இருந்தது. முதல் ஏப்ரல் 1 அன்று 1,637 ஆக அதிகரித்தது. இந்தியாவில் முதல் 200 நோயாளிகளுக்கு கொரோனா ஏற்பட மிக அதிக நாட்கள் எடுத்தது. பிப்ரவரி 15 ஆம் தேதி இந்தியாவில் முதல் நபருக்கு கேரளாவில் கொரோனா ஏற்பட்டது. அதன்பின் மார்ச் 20ஆம் தேதிதான் 200வது நபருக்கு கொரோனா ஏற்பட்டது. அதாவது 200 பேருக்கு கொரோனா ஏற்பட 35 நாட்கள் ஆனது. ஆனால் திடீர் என்று வேகம் எடுத்து இருக்கும் கொரோனா, நேற்று ஒரே நாளில் மட்டும் 237 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி 15ல் இருந்து இந்தியா ஆயிரம் நோயாளிகளை தொட எடுத்துக் கொண்ட காலம் சரியாக 45 நாட்கள். மார்ச் 29ம் தேதி தான் இந்தியா ஆயிரம் நோயாளிகளை தொட்டது. மற்ற உலக உலக நாடுகளை விட இது மெதுவானது என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் உலகம் முழுக்க இதே நிலைதான். முதலில் கொரோனா வைரஸ் மிகவும் மெதுவாக பரவும், அதன்பின் திடீர் என்று வேகம் எடுத்து, வரிசையாக பலரை தாக்கும். கொத்து கொத்தாக பலர் மருத்துவமனையில் சேர்வார்கள். அதேபோல் தான் அமெரிக்காவில் முதல் நபருக்கு கொரோனா ஏற்பட்டது பிப்ரவரி 15. மார்ச் 15ம் திகதி சரியாக ஒரு மாதத்தில் அங்கு ஆயிரம் பேருக்கு கொரோனா வந்தது.அதன்பின் வேகம் எடுத்த தொற்று கொத்து கொத்தாக மக்களை மருத்துவமனைகளில் சேர வைத்தது. அதில், 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டதில் இருந்து 85 ஆயிரத்தை தொட எடுத்துக் கொண்ட நாட்கள் வெறும் 6 நாட்கள்தான். சரியாக ஒரு மாதம் கழித்து அங்கு கொரோனா வேகம் எடுத்தது. இதுபோன்றுதான் இத்தலியிலும் நிகழ்ந்தது. கொரோனா என்பது ஒருவர் மூலம் இன்னொருவருக்கு தொடுதல் மூலம் பரவ கூடியது. அதேபோல் இந்த வைரஸ் அறிகுறி இல்லாமலே பரவ கூடியது. இதுதான் இந்த வைரஸ் தாக்குதல் குறிப்பிட்ட காலத்தில் வேகம் எடுக்க காரணம். உதாரணமாக ஏ என்ற நபருக்கு கொரோனா வைரஸ் இருந்தும் அறிகுறி இல்லை. அவர் பல இடங்களுக்கு செல்கிறார். பலரை சந்திக்கிறார். அவருக்கு தெரியாமல் அவர் பலருக்கு கொரோனாவை பரப்புவார்.இவர் மூலம் ஒரே நாளில் பலருக்கு கொரோனா ஏற்பட வாய்ப்புள்ளது. இதுதான் ஒரே நாளில் வேகமாக உயர காரணம் ஆகும். எனவே இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இதுதான் என்பதை மற்ற நாடுகள் உணர்த்துகின்றன. https://www.dailythanthi.com/News/TopNews/2020/04/03133041/Covid19-statewise-tally-Maharashtra-Tamilnadu-on-top.vpf
 9. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளதால் காட்டு விலங்குகள் ஊர்களுக்கு ஜாலியாக விசிட் அடித்து வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும்பாலும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள கிராமம் மற்றும் நகரங்களில் பல காட்டு விலங்குகள் தென்படும் சம்பவங்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இப்படி திடீரென ஊருக்குள் வரும் விலங்குகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் இந்தியாவின் சுற்றுலா பகுதியான டெஹ்ராடூனில் காட்டு யானை ஒன்று அதிகாலை வேலையில் ஊருக்குள் புகுந்து சென்றுள்ளது. எந்த பொருட்களையும் நாசம் செய்யாமல், பதட்டமில்லாமல் காலை வாக்கிங் செல்வது போல ஜாலியாக அது நடந்து செல்லும் வீடியோ சமீபத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 401 people are talking about this https://tamil.webdunia.com/article/national-india-news-intamil/wild-animals-casual-walk-in-people-stay-areas-120040300044_1.html
 10. இத்தாலியில் தனது காதலிக்கு கொரோனா வைரஸ் இருப்பதை அறிந்த காதலன் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதில் கொலை செய்யப்பட்ட பெண் வைத்தியர் என்றும், குறித்த காதலர் ஒரு ஆண் தாதியர் என்றும் குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பில் கொலை செய்த நபர் பொலிஸாரிடம் கூறியதாவது, “என் காதலி பெயர் குவாரண்டினா.. வயது 27... அவள் ஒரு வைத்தியர்.. நானும், அவளும் இத்தாலியில் சிசிலி வைத்தியசாலையில் தான் வேலை பார்க்கிறோம். 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைத்தியசாலையில் வைரஸ் தாக்கி இறந்துவிட்டனர். நாங்கள் எங்கள் வேலையை சேவையாக நினைத்து செய்தோம். ஆனால் குவாரண்டினா, ஒருநாள், தன்னையும் அறியாமல் எனக்கு வைரஸை பரப்பிவிட்டதாக சொன்னாள். இது எனக்கு ஷாக்-ஆக இருந்தது.. ஆத்திரத்தையும் தந்தது.. அதனால்தான் குவாரண்டினாவின் கழுத்தை என் கையாலேயே நெரித்து கொன்றேன். கடைசியில் உயிர் போகும் போது அவள் எதையோ சொல்ல வந்தாள்.. ஆனால் விடவில்லை.. அப்படியே கழுத்தை நெரித்தேன்”என்றார். இவ்வளவையும் வாக்குமூலமாக சொல்லி முடித்தார் அந்தோனியா. இதற்கு பிறகு பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. இதில் அந்தோனி - குவாரண்டினா 2 பேருக்குமே கொரோனா தொற்று இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ரோமில் பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. https://www.ibctamil.com/world/80/140442?ref=home-imp-parsely
 11. கொரோனாவால் திணறும் அமெரிக்கா! தியாகங்களை செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது- பகிரங்கப்படுத்திய ட்ரம்ப் நாம் இப்போது கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம். அடுத்த 4 வாரங்களுக்குதான் நாம் சில தியாகங்களைச் செய்யப் போகிறோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர், “அமெரிக்காவில் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசு அனைத்து வகையிலும் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அதற்கு மக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் அவசியம். நாம் இப்போது கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கிறோம். அடுத்த 30 நாட்களுக்கு ஒவ்வொரு அமெரிக்கரும அரசு வழிகாட்டலின்படி விதிமுறைகளைக் கடைபிடித்து கொரோனா தொற்றைக் குறைக்க வேண்டும். அடுத்த 4 வாரங்களுக்குதான் நாம் சில தியாகங்களைச் செய்யப் போகிறோம், இதன் மூலம் லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும் நாம் சமூக விலக்கலைக் கடைபிடித்து, அதீதிமான சுத்தத்தை கடைபிடித்து, வீட்டுக்குள்ளே இருப்புதான் கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் நாம் வெல்ல முக்கியமான ஆயுதம், அந்த பெரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்க முடியும். நாம் அடுத்துவரும் வாரங்களில் லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் உயிரைக் காப்பாற்றப் போகிறோம் என்ற சிந்தனையில் இருங்கள் மிகச்சிறந்த மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் ஆகியோருடன் கலந்துபேசி அமெரிக்கா கொரோனா வைரஸுக்கு எதிராகப் பணியாற்றி வருகிறது. கொரோனா வைரஸிலிருந்து நாம் நம்மை தற்காத்துக்கொள்ள தேவையான மருத்துவம், சிகிச்சை, தடுப்பு மருந்துகள் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றத்தை பெற்று வருகிறோம் மருத்துவ ரீதியாக நாம் நல்ல முன்னேற்றத்தை அடைந்து வருகிறோம். உலகில் எந்த நாடும் செய்யாத அளவுக்கு அதிகமான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து வருகிறோம். கொரோனா வைரஸுக்கு எதிராக மருந்து கண்டுபிடித்து அதை பரிசோதிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதித்துள்ளது. மக்களை கொரோனா வைரஸிலிருந்து காப்பாற்ற அமெரிக்கா எடுத்து வரும் முக்கியமான முயற்சிகளில் இது மைல்கல்” என்று குறிப்பிட்டுள்ளார். தற்போதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளாகி பத்து லட்சத்து 15 ஆயிரத்து 877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, பலியானவர்களின் எண்ணிக்கையானது ஐம்பதாயிரத்து 3218 பேராக உயர்ந்துள்ளது. இதில் அமெரிக்காவில் மட்டும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 45 ஆயிரத்து 193 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆராயிரத்து 88 பேர் பலியாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.ibctamil.com/usa/80/140447?ref=home-imp-flag
 12. உணவின்றி தவித்த குரங்குகளுக்கு உணவளித்த நடிகர் ஒருவர், அவை சமூக இடைவெளியை கடைபிடித்ததை பார்த்து நெகிழ்ந்து போனாராம். சிக்பள்ளாப்பூர் அருகே நந்திமலை அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவ்வாறு நந்திமலைக்கு சுற்றுலா வருபவர்கள், அங்கு வசித்து வரும் 500-க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு உணவு வழங்குவார்கள். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நந்திமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, நந்திமலையில் உள்ள குரங்குகள் உணவுகள் கிடைக்காமல் பரிதவித்து வந்தன. இதுபற்றி அறிந்ததும் கன்னட நடிகர் சந்தன்குமார், நந்திமலைக்கு சென்று அங்கு வசித்து வரும் 500-க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு பழங்கள் வழங்கினார். அந்த குரங்குகள் குறிப்பிட்ட இடைவெளி விட்டு பழங்களை வாங்கி சாப்பிட்டன. குரங்குகளுக்கு பழம் வழங்கியதை சந்தன்குமார் படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘சமூக விலகல் குறித்து நான் கற்றுக்கொண்ட பாடம். நாம் எப்போது இந்த சமூக விலகலை கற்றுக்கொள்ள போகிறோம்?. மக்கள் கூட்டமாக வருவதை சமாளிப்பதை விட 500 குரங்குகளுக்கு உணவளிப்பது எளிதானது’ என்று குறிப்பிட்டிருந்தார். அவருடைய செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகின்றன. https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/04/03093016/1383935/Actor-chandan-kumar-feed-food-for-monkeys.vpf