Jump to content

உடையார்

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  22081
 • Joined

 • Last visited

 • Days Won

  109

Everything posted by உடையார்

 1. வளம்கொழிக்கும் டென்மார்க்கில் வாழ்வினிக்குது ...! பாடல் வரிகள் l எழுத்தாளர் இணுவையூர் சக்திதாசன்
 2. நானும் ஒரு கிழமைதான் வரவில்லை ஆனா என்னையும் தடை செய்து போட்டீர்களே
 3. ஒரு நாடு, ஒரு சட்டமல்ல, ஒரு ஆளுக்கு ஒரு சட்டம் -மனோ கணேசன் அமைச்சர் அலி சப்றியை பதவி விலக சொல்லும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு, இந்த ஜனாதிபதிதான் நியமித்தார். அமைச்சர் அலி சப்றியையும், கேபினட் அமைச்சராக இந்த ஜனாதிபதிதான் நியமித்தார் எனத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், இந்நிலையில், ஜனாதிபதியின் ஞானசாரர், ஜனாதிபதியின் அமைச்சரை பதவி விலக சொல்கிறார். இதென்ன கூத்து? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பில் முகநுாலில் தனது கருத்தை பதிவு செய்துள்ள மனோ கணேசன், “எதிர்கட்சி அரசியல்வாதிகள் இப்படி சொன்னால் அதில் ஒரு அரசியல் தர்க்கமாவது இருக்கும். அப்படியும் நான் அதை சொல்ல மாட்டேன். அரசை நாம் கடுமையாக எதிர்ப்பது என்பது வேறு.ஆனால் இந்த அரசுக்குக்கு உள்ளே சிறுபான்மை கேபினட் அமைச்சர்கள் இருப்பது நல்லது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இதுதான் இலங்கை அரசு. அமைச்சர்கள் அலி சப்றி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அங்கே இருப்பதால் தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச பிரச்சினைகளையாவது அரசாங்க தலைமையின் கவனத்திற்கு கொண்டு வர முடிகிறது. இந்த குறைந்தபட்ச அவகாசத்தையும் கூட தட்டி பறிக்க இந்த காவி பயங்கரவாதி ஆள் முயல்கிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக இந்த ஆள் பேசுகிறார். இவர் மீது சட்டம் பாயாது. ஆனால், முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ் பையன்களை தேடி வீட்டுக்கு பொலிஸ் வருகிறது. இந்த ஆளுக்கு விசேட சட்ட விலக்கு இருக்கிறது.ஆகவே, இவரது செயலணியின் பெயரை “ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்” என நான் பிரேரிக்கிறேன். அதேபோல், இவரது இந்த வாயில் வருவதை எல்லாம் பேசும் நடத்தையை ஆட்சேபித்து, இந்த செயலணியில் இருக்கும் தமிழ், முஸ்லிம்கள் உடன் பதவி விலக கோருகிறேன். இல்லா விட்டால் இந்த பாவம் இவர்களையும் சேரும் எனவும் கூறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். https://www.ilakku.org/one-country-not-one-law-one-law-for-one-person/
 4. இது தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்’… முதல்வர் ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவிப்பு தமிழகம்: நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது பற்றி ஓய்வு பெற்ற நீதிபதி ஆதிநாதன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டுள்ளார். மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் இது தொடர்பாகத் தற்போது நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் விதிகளின் அடிப்படையில் இவர்களின் நிகழ்வுகளை ஆராய்ந்தும், அவர்களின் முன்விடுதலைக்கு உரியப் பரிந்துரை வழங்க ஏதுவாக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் என். ஆதிநாதன் தலைமையின் கீழ் ஆறு பேர் அடங்கிய ஒரு குழு அமைக்கத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் இந்த அறிவிப்பையடுத்து முன்னாள் இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டரில், “சிறை என்பது தவறிழைத்த மனிதனை நல்வழிப்படுத்தி சமுகத்தில் கலக்க தகுதியானவனாக மாற்றுவதற்கே என்பது நாகரீக சமூகம் ஏற்கொண்ட கருத்தியல் ஆகும். அதிலும் குற்றமற்றவர்கள் கூட சில நேரங்களில் நீதிப்பிழையால் சிறை தண்டனை அடைந்து விடும் நேர்வுகளை இந்த உலகம் கண்டிருக்கிறது என்பதால் சிறைகள் ஒருபோதும் பழிவாங்கும் இடமாக இருக்க கூடாது என்பதே நியதி. Hate Crimes: Not Criminals” என்பது மகாத்மா காந்தியடிகளின் புகழ்பெற்ற மேற்கோள். ஒரு மனிதனை 8 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைத்திருப்பதே அதிகப்படியானது எனறார் மறைந்த நீதியரசர் வி.ஆர்.கிருட்டிணய்யர். ஒரு நாடு நாகரீகமடைந்து விட்டது என்பதை சிறைவாசிகளை அவ்வரசு எவ்வாறு கையாள்கிறது என்பதில்தான் அடங்கியிருக்கிறது என சொல்லப்படுகிறது. தமிழக வரலாற்றில் மைல்கல் ஆயுள் சிறை என்பது அரசின் தண்டனை குறைப்பு அதிகாரத்துக்கு உட்பட்டதே என்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் தெளிவுபடுத்தி விட்டது. சிறை விதிகளின்படி இவ்வதிகாரத்தை பயன்படுத்தி முன்விடுதலை பெற தகுதி பெற்றும் சிறை சீர்திருத்தங்கள் குறித்து புரிதலற்ற அதிகாரிகள் கடந்த காலங்களில் விடுதலைக்கு தடையாக இருந்தனர். இதனையெல்லாம் உணர்ந்தவராக ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலை தொடர்பில் மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்” என்று பதிவிட்டுள்ளார். https://www.ilakku.org/இது-தமிழக-வரலாற்றிwonderful-thanks-to-chief-minister-stalinல/
 5. இது ஒரு பக்க வாத்திய கருவி அல்லவா? இது சிலருக்கு அலேர்ஜி
 6. தமிழ் மறுமலர்ச்சி முன்னோடி ஆறுமுக நாவலர் பழங்காலத்தில் இலக்கியங்கள் அனைத்தும் ஏட்டுச்சுவடிகளிலேயே இருந்தன. அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டு ஏட்டில் இருந்த இலக்கியங்கள் அச்சுவடிவம் பெற்றது தமிழ் இலக்கிய வரலாற்றின் திருப்புமையம் ஆகும். பதிவு: டிசம்பர் 19, 2019 11:37 AM ஏட்டிலிருந்து அச்சுப் பதிப்பது அப்படி ஒன்றும் எளிய செயல் இல்லை. ஏட்டில் உள்ளவற்றைப் புரிந்துகொண்டு எந்தப் பிழையும் இல்லாமல் அச்சில் பதிக்கும் அரிய பணியை மேற்கொண்ட பெரியவர்களாலேயே இன்றைக்குத் தமிழ் இலக்கணங்களும் இலக்கியங்களும் நமக்குக் கிடைத்துள்ளன. அத்தகைய அரிய பணியை ஆற்றிய முன்னோடிகளுள் முதன்மையானவர் ஆறுமுகநாவலர். ஏட்டுச்சுவடிகளிலிருந்து பழந்தமிழ் நூல்களை மீட்டுக் கொடுத்த பெருமைக்குரியவர்கள் என்று ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம் பிள்ளை, உ.வே.சாமிநாதையர், ச.வையாபுரிப்பிள்ளை எனப் பெரிய பட்டியலையே அடுக்கலாம். “தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த பெரும்பணிக்கு அடித்தளம் அமைத்தவர் ஆறுமுக நாவலர்; சுற்றுச்சுவர் எழுப்பியவர் சி.வை.தாமோதரம் பிள்ளை; கூரை வேய்ந்தவர் உ.வே.சாமிநாதையர்.” என்று திரு.வி.க. கூறியுள்ளது தமிழ்ப்பதிப்பு வரலாற்றையே சுருக்கமாகக் காட்டுகிறது. யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தப்பிள்ளை, சிவகாமி அம்மையார் தம்பதியருக்குப் புதல்வனாக 1822-ம் ஆண்டு டிசம்பர் 18-ந் தேதி பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் ஆறுமுகம் என்பதாகும். அவருடைய தகப்பனார் கந்தப்பிள்ளை மட்டுமின்றி பாட்டன் பரமநாதர், பூட்டன் இலங்கைக்காவல முதலியார் ஆகிய அனைவருமே தமிழ் அறிஞர்கள். எனவே மூன்று தலைமுறையினர் தமிழ் அறிஞர்களாக விளங்கிய புகழ்மிக்க வழிமரபில் தோன்றிய ஆறுமுகம் கல்வி கேள்விகளில் தலைசிறந்து விளங்கியதில் வியப்பில்லை. எந்த இலக்கியத்தைப் பற்றியும் மடைதிறந்த வெள்ளம்போல் கருத்துகளைப் பொழிந்து தள்ளும் இவருடைய சொல்லாற்றலைப் பாராட்டித் திருவாவடுதுறை ஆதீனம் இவருக்கு “நாவலர்” என்னும் பட்டத்தை வழங்கியது. அதன்பின் இவர் ஆறுமுக நாவலர் என்றே அழைக்கப்பட்டார். சிறப்புமிக்க புலவர்களிடம் படித்து இளமையிலேயே தமிழிலும் வடமொழியிலும் நன்கு புலமைபெற்றார். யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் மத்திய கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றதுடன் தாம் பயின்ற அக்கல்லூரியில் சில காலம் ஆசிரியராகவும் பணியாற்றினார். தமிழையும் ஆங்கிலத்தையும் கற்பிக்கும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவருடைய தமிழறிவையும் ஆங்கிலப் புலமையையும் கண்டு மகிழ்ந்த கல்லூரி அதிபர் பெர்சிவல் பாதிரியார் பைபிளைத் தமிழில் மொழிபெயர்க்கும் தமது பணிக்குத் துணையாகத் தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தார். தமிழும் சைவமும் தமது இரு கண்களாகப் போற்றிய ஆறுமுக நாவலர் தமிழில் பைபிள் மொழிபெயர்ப்புப் பணியாற்றியது அவருடைய பொதுநோக்கிற்கும் பெருந்தன்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. ஏட்டுச்சுவடிகளைக் கண்டறிந்து நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் முனைந்து பாடுபட்டார். இதற்காகச் சொந்தமாக அச்சு இயந்திரம் வாங்கி வித்தியானுபாலனயந்திரசாலை என்னும் பெயரில் அச்சுக்கூடம் நடத்தினார். சொந்த அச்சுக்கூடம் வைத்திருந்ததும் மரபுவழியாகப் பெற்ற தமிழ்ப்புலமையும் ஆங்கிலக் கல்வியும் இவரது பதிப்புப் பணி சிறந்து விளங்கத் துணைபுரிந்தன. தாம் புரிந்த பதவியையும் உதறித் தள்ளினார். திருமணமும் செய்து கொள்ளவில்லை. பதிப்புப் பணியும் சைவசமயத்தைப் பரப்பும் பணியுமே தமது குறிக்கோள்களாகக் கொண்டார். இலக்கணம், சமயநூல்கள், காப்பியங்கள் எனப் பலவகையாக 44 நூல்களைப் பதிப்பித்தார். இலக்கணம் தொடர்பாகவும் சைவசமயத்திற்கு விளக்கமாகவும் 24 நூல்கள் எழுதியுள்ளார். 16 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவர் உரை எழுதிய நூல்களுள் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நல்வழி முதலான சிறுவர் இலக்கியமும் அடங்கும். பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், திருமுருகாற்றுப்படை முதலான இலக்கியங்களுக்கு இவருடைய உரை எளிமையாக மக்கள் புரிந்துகொள்ள வழிவகுத்தது. ஆங்கில நூல்கள் பதிக்கப்படுவதைப் போன்றே உள்ளடக்கம், பொருள் அடைவு, பாடவேறுபாடு, அடிக்குறிப்பு ஆகிய பகுதிகளோடு சிறப்பாகப் பதிப்புச் செய்தார். பதிப்புப்பணியில் இன்று ஈடுபடுவோருக்குக் கூட வழிகாட்டும் வகையில் இவரது பதிப்புகள் அமைந்துள்ளன. தமிழ் உரைநடை இவருக்கு முன் மிகக் கடினமாக எளிதில் புரிந்துகொள்ள இயலாத வகையில் அமைந்திருந்தது. ஆங்கிலத்தைப் போன்றே அரைப்புள்ளி (கமா), முக்கால் புள்ளி, முற்றுப்புள்ளி ஆகிய நிறுத்தற்குறிகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் ஆறுமுகநாவலரே என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக எழுத்தறிவு பெற்றுப் புத்தகவாசிப்பில் ஈடுபடுவோரை முன்னிலைப் படுத்தியே இலக்கணத்தையும் சைவசமயத்தையும் பற்றிய பல விளக்கநூல்களை எழுதிய சிறப்பு இவருக்கே உரியது. எனவே இவரை ‘தமிழ் உரைநடையின் தந்தை’ என்று அறிஞர்கள் பாராட்டினர். ஆறுமுக நாவலரை ‘புதிய தமிழ் உரைநடையின் தந்தை’ என்று தமிழறிஞர் மு.வரதராசனார் போற்றியுள்ளார். சிதம்பரத்தில் 1864-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி சைவ வித்தியாசாலையை நிறுவினார். சிதம்பரத்தில் ஆறு ஆண்டுகள் தங்கியிருந்து தமிழையும், சைவத்தையும் கற்பித்தார். இலங்கையில் ஆங்கிலேய அரசு மதுவிற்பனை மூலம் வருவாயைப் பெருக்கிக்கொள்கிறதே என வருந்தினார். ஆறுமுக நாவலர் 1874-ம் ஆண்டு வெளியிட்ட ‘இலங்கைப் பூமி சரித்திரம்’ என்ற நூலில், “வறுமைக்கும் துன்பத்துக்கும் சகல பாவங்களுக்கும் பிறப்பிடம் மதுபானம்” எனக் குறிப்பிட்டுள்ளார். திருக்கேதீஸ்வரம், கீரிமலைச் சிவன் கோவில் ஆகிய கோவில்களின் தொன்மைச் சிறப்புகளை மக்களுக்கு எடுத்துக் கூறிப் பராமரிப்பு இன்றி இருந்த ஆலயங்கள் மீண்டும் அமைய வழிவகுத்தார். இவரது முதல் சொற்பொழிவு வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் 1847-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி நடைபெற்றது. பின்னர் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் சொற்பொழிவு ஆற்றினார். இவரது பொழிவைக் கேட்டு நிறையப் பேர் மது அருந்தும் பழக்கத்தைக் கைவிட்டனர். புதிதாகக் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிச்சென்றிருந்தவர்கள் மீண்டும் சைவ சமயத்திற்கே திரும்பினர். அங்ஙனம் மாறிவந்தவர்களுள் கிங்ஸ்பரி என்னும் பெயரைக் கொன்டவரே பின்னாளில் சி.வை.தாமோதரம்பிள்ளை என்னும் புகழ்வாய்ந்த தமிழறிஞர் ஆனார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரி என்னும் பெருமைக்குரிய இவர் மாநிலக்கல்லூரியின் தமிழ்ப்பேராசியராகப் பணிபுரிந்து பின்னர், நாவலரைப் போல் பதிப்புப்பணியிலும் ஈடுபட்டார். சொற்பொழிவுத்துறையில் முன்னோடிகள் என்று போற்றப்படும் வ.உ.சி., திரு.வி.க., அண்ணா ஆகியோருக்கு நெடுநாட்கள் முன்னதாகவே இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் ஈடு இணையற்ற சொற்பொழிவாளராகத் திகழ்ந்த பெருமை நாவலருக்கே உரியது. ஆறுமுக நாவலரின் நினைவாக இலங்கை அரசு 1971-ம் ஆண்டு அக்டோபர் 29-ல் நினைவு அஞ்சல்தலை ஒன்றை வெளியிட்டது. ஆறுமுக நாவலரை “செந்தமிழைப் பேணி வளர்த்த பெரும்புலவன்” என கவிமணி பாராட்டியுள்ளார். மறைமலை இலக்குவனார், சிறப்பு வருகை பேராசிரியர், கலிபோர்னியா பல்கலைக்கழகம், அமெரிக்கா. https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2019/12/19113732/Arumugam-Navalar-Tamil-Renaissance-predecessor.vpf எமது வராலறுகளை சிதைக்க வேண்டுமென்றே கிளம்பியுருக்கும் சிலரை இனம் காண்பது யாழ்கள வாசகர்களுக்கு நன்று, அவர்கள் சிங்சங் தமிழர்கள்
 7. எது கிடைத்தாலும் நூல் கோர்ப்பவர்கள் இவர்கள் அது இங்கு எகிறி குதிக்கும் சிலருக்கு தெரியுமா
 8. கடைசீல பிரியாணி விமர்சனம்: சிறுத்தையிடம் முயல் மாட்டினால் பிரியாணி யாருக்கு..? News ழிக்குப்பழி ரத்தத்துக்கு ரத்தம் எனக் கிளம்புகிறார்கள் பாண்டியா சகோதரர்கள். யாரைப் பழி தீர்க்கிறார்கள், என்ன நடக்கிறது என்பதை வித்தியாசமான முறையில் அணுகி, புதிய அனுபவத்தைத் தந்திருக்கிறது படக்குழு. ADVERTISEMENT விரும்பாத இடத்தில் தவறான நேரத்தில் சிக்கிக்கொள்ளும் ஒரு இளைஞன் தப்பிக்க எடுக்கும் முடிவுகளே 'கடைசீல பிரியாணி. ' பாண்டியா சகோதரர்களில் கடைக்குட்டி சிக்குப்பாண்டி. முரட்டுச் சண்டைக்காரர்களும், முன்கோபிகளும் நிறைந்த வீட்டில், சிக்குப்பாண்டியை மட்டுமாவது அப்பாவியாய் வளர்க்க விரும்பி, வீட்டை விட்டு சிக்குவுடன் வெளியேறிவிடுகிறார் தந்தை. சாதாரண வாழ்க்கையை வாழ்வது என்பது அவ்வளவு சாதாரணம் அல்லவே. சோதனைகள் துரத்துகின்றன. பழிக்குப்பழி ரத்தத்துக்கு ரத்தம் எனக் கிளம்புகிறார்கள் பாண்டியா சகோதரர்கள். யாரைப் பழி தீர்க்கிறார்கள், அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதை வித்தியாசமான முறையில் அணுகி, புதிய அனுபவத்தைத் தந்திருக்கிறது படக்குழு. சிக்குப் பாண்டியாக விஜய் ராம். 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் காஜி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர். ஜோன் கரியாவாக ஹக்கிம் ஷாஜஹான். நாயாட்டு, கூடே போன்ற மலையாள படங்களில் நடித்திருப்பவர். இந்த இருவரைத் தவிர படத்தில் பல புதிய முகங்கள். பெரிய பாண்டியாக வரும் வசந்த் செல்வம் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டியிருக்கிறார். தனக்கு இருக்கும் அந்த வெறி‌ ஏன் தம்பிகளிடம் இல்லை என மூர்க்கத்தோடு அணுகும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைக்கிறார். அவர் போடும் ஸ்கெட்சுகளும் வேற லெவல். மிகவும் கேசுவலான வில்லனாக வந்து அசத்துகிறார் ஹக்கிம். இவ்வளவு கூலாக ஒரு எதிர்மறை கதாபாத்திரம் பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டன. அதிலும் சீரியஸான காட்சிகளில் அவரின் குரூர நகைச்சுவை ரசிக்க வைக்கிறது. அதிலும் அந்த டீசர்ட் ஜோக், செம ரகளை! படத்தின் கதை சொல்லும் நாயகனாக வருகிறார் விஜய் சேதுபதி. அந்த ஊரிலிருக்கும் எதிர் கோஷ்டிக்கு வித்தியாசமான (?) பெயர்கள் வைப்பதில் தொடங்கி, டைட்டில் கார்டை ரெட்ரோ 80'ஸ் டிசைனில் கொண்டுவந்தது வரை அறிமுக இயக்குநராக அட சொல்ல வைக்கிறார் நிஷாந்த் களிதிண்டி. ஒரு திரைப்படத்தில் கதையும் கதை சொல்லும் விதமும்தான் பிரதானம். அதன்பின்தான் நடிகர்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது 'கடைசீல பிரியாணி'. எடுத்துக்கொண்ட பழிதீர்க்கும் கதையுடன் டார்க் காமெடியும் நன்றாக வந்திருக்கிறது. ஒரு காடு அதைச் சுற்றி நடக்கும் கதை. எந்தத் துறுத்தலும் இல்லாமல் வரும் அந்தக் காடும் காடு சார்ந்த வீடுமே ஒரு தனிக்கதை சொல்கிறது. அந்தச் சூழலிலிருக்கும் ஒலிகளை வைத்தே பின்னணி இசை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் புதியதொரு அனுபவத்தைத் தந்திருக்கிறார் பின்னணி இசை அமைத்திருக்கும் வினோத் தணிகாசலம். கதை செல்லும் போக்கில் அதை வித்தியாசமான கோணங்களில் படமாக்கியிக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் ஹெஸ்டின் ஜோசபும், அஜீம் மொஹமதும். Kadaseela Biriyani Review படத்தின் பட்ஜெட் போதாமைகள் சில இடங்களில் தெரிகின்றன. அதேபோல், துருத்திக்கொண்டு தெரியும் கடைசி காட்சியும் படத்தை ஒருபடி கீழிறக்கிவிடுகிறது. மற்றபடி எடுத்துக்கொண்ட கதைக்கு, நேர்மையாக ஒரு புதிய குழு அட்டகாசமாக உழைத்திருக்கிறது. அதை சிறந்த திரை அனுபவமாகவும் மாற்றி வெற்றி கண்டிருக்கிறது. https://cinema.vikatan.com/tamil-cinema/kadaseela-biriyani-review-a-must-watch-for-movie-lovers
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.