எமது போராட்டம் தொடர்பான கொள்கை,கருத்து ரீதியாக கவிஞருடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்... நான் மதிக்கும் ஒரு மனிதர்.
அவர் ஒரு தமிழர் என்பதனால்தான் சந்தேகத்தின் அடிப்படையில் சிங்களத்தால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அதுவும் குறிப்பாக இந்த நவம்பர் மாதப்பகுதியில் அவர் இலங்கை சென்றது... சிங்களத்தின் கண்களை உறுத்தியிருக்க வேண்டும்.
எங்களின் சக கள உறவு, ஒரு நல்ல படைப்பாளி, கவிஞர் விடுதலை பெற்று வரவேண்டும்.
அவருக்கு எதுவும் ஆகாமல் விடுதலையாகி வெளிவரும் வல்லமை இருக்கென நம்புகின்றேன்.