Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

jdlivi

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Posts

  936
 • Joined

 • Last visited

Profile Information

 • Gender
  Male

Recent Profile Visitors

4,344 profile views

jdlivi's Achievements

Community Regular

Community Regular (8/14)

 • Conversation Starter
 • First Post
 • Collaborator
 • Posting Machine Rare
 • Week One Done

Recent Badges

50

Reputation

 1. இல்லாத மதத்தின் பெயர் இந்து! ========================== குமரிக் கண்டம், ஆதித்தநல்லூர், சிந்துவெளி, சங்ககாலம், பிற்காலச் சோழர் காலம் ஆகிய பல்லாயிரம் ஆண்டுகால தமிழர் வரலாற்றில், தமிழர்கள் தமது சமயத்தை ‘இந்து மதம்’ என ஒருபோதும் அழைத்ததே இல்லை. பிரபஞ்சத் தோற்றத்தைப் படிப்படியான வளர்ச்சிகளுடன் தெளிவாக உரைத்த பரிபாடல் ‘மாயோன்’, ‘முருகவேள்’ ஆகியோரைத்தான் வழிபட்டது. தொல்காப்பியம் ‘நிலமும் பொழுதுமே’ (time and space) முதற்பொருள் என்றது. ஐந்திணைகளுக்கும் ஐந்து கடவுளர்களைத் தொல்காப்பியம் பதிவு செய்தது. சங்க இலக்கியத்தில் எண்ணற்ற பாடல்கள் ‘ஆலமர் செல்வன்’ என சிவ வழிபாட்டு பதிவாகியுள்ளது. சிவன், திருமால், முருகவேள், வேலன், கொற்றவை, காளி, இந்திரன் உள்ளிட்ட தெய்வங்கள் தமிழர் வரலாற்றில் தொன்று தொட்டு வணங்கப்பட்டு வருகின்றன. பல்லவர், களப்பிரர் காலத்தில் ஆரியச் சமயங்களான சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் திணிக்கப்பட்டபோது, சிவனியமும், மாலியமும் பரவித் தழைத்தன. பிற்காலச் சோழர்கள் சிவனியத்தை வளர்த்தெடுத்தனர். பிற்காலச் சோழர் காலம் வரைக்கும், தமிழகத்தில் எந்தக் கல்வெட்டிலும், ஓலைச் சுவடியிலும், மட்பாண்டங்களிலும், இன்னபிற சான்றுகளிலும் ‘இந்து’ எனும் சொல்லே இல்லை. தமிழர்கள் தம்மை, ஒருகாலத்திலும் இந்துக்களாக எண்ணியதே இல்லை. ஏனெனில், இந்து என்று ஒரு மதம் உண்மையில் இல்லை. அது, ஆரியர்களின், குறிப்பாக ஆரிய பிராமணர்களின் கற்பனைக் கோட்டை. கணிதக் கணக்கீடுகளால் பிரபஞ்சத்தை விளக்கிய மெய்யியல் எண்ணியம் (சாங்கியம்) என்பதாகும். கபிலர் எனும் தமிழ் அந்தணர் வழியாக உரைக்கப்பட்ட வேதம் இது. கபிலை நிறம் என்பதே சாம்பல் வண்ணம்தான். ஆனால், கொஞ்சமும் சங்கடம் இன்றி, ’ரிஷி கபிலர் அருளிய ஸாங்க்ய தத்வம்’ என்று கபிலரின் சாங்கியத்தை நூலாக வெளியிடுகின்றன ஆரிய பிராமண அமைப்புகள். கீதையும் இவ்வாறே இவர்களால் திரிக்கப்பட்டது. கீதையில் கண்ணன் அர்ஜுனனிடம், ‘கபில முனிவரின் சாங்கியத்தை உனக்கு உரைக்கிறேன்’ என்கிறார். கபிலரின் சாங்கியத்தோடு, தமது ஆரிய பிராமணிய இடைச் செருகல்களை இணைத்து, கீதையின் உண்மையான வடிவத்தைச் சீரழித்துவிட்டன இவ்வமைப்புகள். கண்ணன் எனும் சொல் சிந்துவெளி எழுத்துகளில் பல்வேறு இடங்களில் உள்ளது. கண்ணன் கருப்புத் தமிழரே அன்றி, சிவப்பு ஆரியர் அல்ல. இராமனும் கருப்புதான். இன்றைக்கு வழக்கில் உள்ள இராமாயணமும், பாரதமும் வெகு பிற்காலத்தில்தான் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டவை என்பதை மறந்துவிடக் கூடாது. அதற்கு முன், அவை தமிழில் இருந்திருக்க வேண்டும். சான்றாக, முதற் சங்கப் புலவர்களில் ஒருவர் ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’ என்பதாகும். இவரே பாரதத்தைத் தமிழில் பாடிய புலவர். சங்ககால சேர மன்னர்களில் ஒருவர் பெயர், ‘பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்’ என்பது. பாரதப் போர் நடந்தபோது, படையினர் அனைவருக்குமே இம்மன்னர் உணவு வழங்கினார் என்பதால், இப்பெயர் வந்தது. தமிழில் பாடப்பட்ட மூல பாரத, இராமாயண நூல்கள் தற்போது கிடைக்கவில்லை. ஆகவே, ஆரிய பிராமணர்கள் தமக்கு வசதியாக மொழிமாற்றம் செய்த நூல்களை மட்டும் வைத்துக் கொண்டு வரலாற்றைத் தவறாகக் காணும் நிலையில் உள்ளது தமிழ் இனம். பிற்காலத்தில் தோன்றிய பிராமணிய - வைதீக மெய்யியலாளரான ஆதி சங்கரர் தமது ’சௌந்தர்ய லஹரி’யில், பாடியவை அனைத்துமே, சிவன் – சக்தி ஆகிய தமிழர் மூலக் கடவுளரைப் போற்றிய பாடல்களே. ஆதிசங்கரர் உமையம்மை மீது ஆழமான பற்று கொண்டவர். ’சௌந்தர்ய லஹரி’ சிவனைக் காட்டிலும் அம்மையின் மீது அதிக ஈடுபாட்டுடன் பாடப்பட்டது. இப்பாடல்கள், திருமூலரது திருமந்திரத்தை ஒட்டி இயற்றப்பட்டவை என்பதை, இரு நூல்களையும் படிக்கும் எவரும் எளிதில் விளங்கிக் கொள்ள இயலும். இன்றைக்கும் இந்திய நிலப்பரப்பெங்கும், வழிபடப்படும் தெய்வங்கள் தமிழர் தெய்வங்களே! சிவன், திருமால், முருகன், காளி, கண்ணன், இராமன் ஆகிய தெய்வங்களை விட்டால், ஆரியர்களுக்கு வணங்குவதற்கு கடவுளே இல்லை. விநாயகர், தெய்வானை போன்ற வடக்கிந்திய கடவுளரும் கூட, சிவன் குடும்பத்துடன் இணைந்துதான் தெய்வநிலை அடைய இயலும் நிலை உள்ளது. ஆரியரது ஆதி தெய்வங்களான, பிரம்மன், அக்னி, வாயு ஆகியோருக்குக் கோயில்களே இல்லை. விதிவிலக்காக அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கலாம். இந்த நிலையில், ’இந்து’ எனும் சொல்லால் தமிழர்களை அழைப்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதைப் புரிந்துகொள்ளலாம். இன்றைக்கு இந்தியச் சட்டத்தின்படி, ‘எவரெல்லாம் கிறித்தவர் இல்லையோ, இஸ்லாமியர் இல்லையோ அவரெல்லாம் இந்து’ ஆவர். ’எதுவெல்லாம் சாம்பார் இல்லையோ, சட்னி இல்லையோ அதுவெல்லாம் கருவாட்டுக் குழம்பு’ என்பதுபோல. புத்தம், சமணம் ஆகிய வைதீக எதிர்ப்புச் சமயங்களும் கூட இந்துசமயத்தின் பிரிவுகள்தான் என்பதே சட்டம். சித்தர்களும், அந்தணர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், எண்ணற்ற மெய்யறிவாளர்களும் தவத்தால், வாழ்வியலால், ஆய்வுகளால் உணர்ந்து உரைத்த சிவனிய, மாலிய சமயங்களும் இந்து மதத்தின் பிரிவுகளே என்பது சட்டம். வைணவக் கோயில்களில் அர்ச்சகராவதற்கு சாதி ஒரு நிபந்தனையே இல்லை என்பதே வைணவ ஆகமத்தின் விதி. வைணவ ஆகமத்தின்படி சாதி கேட்பதே பாவம். சிவனிய ஆகம விதிகளும் பிராமணர் மட்டுமே அர்ச்சகர் ஆகலாம் என்று கூறவே இல்லை. ஆனால், ’இந்து’ என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, பிராமணர்கள் இந்த இரு கோயில்களையும் வசப்படுத்திக் கொண்டனர். உண்மையில், இக்கோயில்களைக் கட்டிய மன்னர்களும் இந்துக்கள் இல்லை, உள்ளே இருக்கும் கடவுளரும் இந்துக்கள் இல்லை, கோயிலை வடிவமைத்த சிற்பிகளும் இந்துக்கள் இல்லை. தமிழர்களுக்கென பல்லாயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு. அவ்வராலாற்றில் பிரபஞ்சத் தோற்றம், வாழ்வியல் குறித்த தத்துவங்கள் உண்டு. பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி உரைக்காத சமயமே தமிழர்களிடம் இருந்ததில்லை. நம்மைப் பொறுத்தவரை சமயம் என்றால், அதன் மெய்யியல் அணுவையும் அண்டத்தையும் பற்றிய அறிவியல் வழிப்பட்ட விளக்கம் தருவதாக இருக்க வேண்டும். தலையில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்ரியன் என்ற சுய நல வெறி பிடித்த கட்டுக் கதைகள் தமிழர்களால் எழுதப்பட்டவை அல்ல. இவற்றுக்கும் தமிழர்களுக்கும் வரலாற்று வழித் தொடர்புகள் ஏதும் இல்லை. சுருங்கச் சொன்னால், தமிழர்கள் இந்துக்கள் அல்லர்! ஆகவே, கோவிலுக்குச் செல்வது, சித்தர்களைப் போற்றுவது, ஓக முறையில் உடலை, மனதைப் பேணுவது, தவம் இயற்றுவது ஆகிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்போர், இவை அனைத்தும் தமிழர் மரபுப் பங்களிப்புகளே என்பதை உணர வேண்டும். இச் செயல்கள் அனைத்தும் இந்துத்துவ நடைமுறைகள் எனக் கூறுதலும் பழித்தலும், வரலாற்றுக்குச் சற்றும் பொருத்தமற்ற, அடிப்படையற்ற அவதூறு ஆகும். நாத்திகராக இருக்கலாம். ஆனால், தமிழர் சமயங்களின் பெருமிதங்களையும், வழிபாட்டு உரிமைகளையும் ’இந்து’ எனும் பிராமணிய அமைப்புக்குத் தாரை வார்த்துவிட வேண்டாம். ஏனெனில், இதைத்தான் கடந்த சில நூற்றாண்டுகளாக பிராமண அமைப்புகளும் செய்து வருகின்றன.ம.செந்தமிழன் — with Rajkumar Palaniswamy and 8 others.
 2. யார் இந்த கிழவன்...? +++++++++++++++++++++++ தள்ளாத வயதில் தமிழினத்தின் ஒட்டுமொத்த சுமைகளையும் தன் தோளில் சுமந்துகொண்டு தாங்குவாரில்லாமல் தடுமாறும் இந்த கிழவன் யார்? தான் நினைத்திருந்தால் தன் மக்கள் ..தன் குடும்பம்....தனது தொழில்...தனது பாரம்பரிய அரசியல் என தனக்கான பாதையை வகுத்து பயணித்திருக்கலாம் ... ஆனால் யார் இந்த கிழவன் ?...தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ...அனாதையாய் அதிகாலை பொழுதில் தாங்குவாரில்லாமல் தனியாளாய் ...தமிழக காவல்துறை கைக்கூலிகள் முன் களமாடுகின்றார் ... இப்படி நடக்கும் என்பது இக்கிழவனுக்கு எம் மாவீரர்கள் உணர்த்தி இருப்பார்களோ?... என் கடைசி துளி இரத்தம் என் உடம்பில் இருக்கும்வரை "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை " இடிக்க அனுமதிக்க மாட்டேன் என்று...... அதனால் தான் என்றும் எக்காலத்திலும் பேசாத கோபக்கனல் பேச்சு இக்கிழவன் வாயிலிருந்து எறிகனைஎன முற்றம் நினைவு நிகழ்ச்சியில் வெளிப்பட்டதோ.... மாறி மாறி மாற்றினத்தலைமைகள் எம்மினத்தை வேடிக்கைப்பொருள் என விளையாடிவரும் காலக்கட்டத்தில் எம்மின விடுதலைக்கு தோள்கொடுத்த ....துணைநின்ற ...தோல்விக்கு பிறகும் ...துணிந்து களமாட எம்மிளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் இந்த கிழவன் யார்?.. "இட்ட சாபம் முட்டும் "-என ஒரு கிழவன் வயிறு எரிய "அறம் " பாடினான்....விளைவு-உலகறியும்...... இந்த கிழவன் சாபம் விட்டால் ......யார் யாரை முட்டும் என்று ..... யாருக்கு தெரியும்?.................................. விஜயராகவன் தமிழன் and ஈழம் நோக்கி shared Kaandhan Malai Saami's photo.
 3. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச்சுவர் இடிக்கப்பட்டது கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 13 நவம்பர், 2013 - 08:49 ஜிஎம்டி Facebook Twitter Google+ பகிர்க நண்பருக்கு அனுப்ப பக்கத்தை அச்சிடுக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்-- சுற்றுச்சுவர் இடிப்பு இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான மோதல்களின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக தஞ்சாவூரில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் இன்று புதன் அதிகாலை மாவட்ட நிர்வாகத்தால் இடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசாருக்கும் அப்பகுதி மக்களுக்குமிடையே நிகழ்ந்த மோதலின் பின்னணியில் நினைவுச் சின்னத்தை அமைத்த உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ நெடுமாறன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். முள்ளிவாய்க்கால் முற்றத்தின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா அரசு நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாகக் கூறி மாநில வருவாய்த் துறை அதிகாரிகள் பெரும் இயந்திரங்களை வைத்து சுற்றுச் சுவரைத் தகர்த்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் மூண்டது, முற்றத்தை ஒட்டிய நெடுஞ்சாலையில் ஆர்வலர்கள் குவிந்தனர். சுவர் தகர்க்கப்பட்ட பின் அங்கே நிறுவப்பட்ட, இது அரசுக்குச் சொந்தமான இடம் என்று கூறும், இரு அறிவிப்பு பலகைகளை ஆர்வலர்கள் அப்புறப்படுத்தினர். அதிகாரிகள் அங்கே அமைத்த கம்பிவேலியையும் அவர்கள் பிய்த்தெறிந்தனர். அந்நிலையில் போலீசாருக்கும் ஆர்வலர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஓரிருவர் காயமடைந்தனர். பின்னர் நெடுமாறன் உட்பட இருபது பேர் தஞ்சையில் ஒரு மண்டபத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளனர். உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது இன்றைய நிகழ்வுகள் குறித்து எதுவும் பேச இயலாது, ஆனால் மாலைக்குள் அடுத்த கட்ட நடவடிக்கை தெளிவாகிவிடும் என்று நம்மிடம் கூறினார். நெடுமாறன் தரப்பினர் உரிய அனுமதி பெற்றபிறகே முற்ற வளாகம் அமைக்கப்பட்டது. ஏதோ உள்நோக்கங்களுக்காக இவ்வாறு அரசு நடந்துகொள்கிறது, இதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம் என்கின்றனர். முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் முற்றத்தை நிறுவுவதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். ஜெயலலிதா அரசியலில் நுழைந்தபோது அவருக்கு மிக நெருக்கமானவராகக் கருதப்பட்டவர் நடராஜன். ஆனால் பின்னர் இருவருக்குமிடையே பெரும் பிணக்கு உருவானது, நடராஜனைக் கடுமையாகத் தாக்கி அறிக்கைகளெல்லாம் வெளியிட்டார் ஜெயலலிதா. முள்ளிவாய்க்கால் முற்றம் தொடக்கத்திலிருந்தே பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியது, உயர்நீதிமன்ற ஆணையைப் பெற்றே கடந்த வாரம்தான் அதனைத் திறக்க முடிந்தது. இப் பின்னணியிலேயே இன்றைய நிகழ்வுகள் என்கின்றனர் நோக்கர்கள். http://www.bbc.co.uk/tamil/india/2013/11/131113_mullivaykkal.shtml
 4. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவர் இடிப்பு கண்டிக்கத் தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடந்த இனப்படுகொலையின் நினைவாகவும், போரில் கொல்லப்பட்ட போராளிகள் மற்றும் தமிழ் சொந்தங்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையிலும் தஞ்சாவூரை அடுத்த விளாரில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவரை தமிழக அரசு இடித்துத் தள்ளியிருக்கிறது. தமிழக அரசின் இந்த செயல் தமிழ் உணர்வாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருந்த இடம் நெடுஞ்சாலைக்கு சொந்தமானது என்பதால் அது இடிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையின் அடையாளமாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அப்போது முற்றத்தின் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமானது என்பதால் தமிழக அரசை அணுகி, அவ்விடத்தை பயன்படுத்தி கொள்ள அனுமதி பெறப்பட்டது. சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் பூங்கா அமைத்து அதை உலகத் தமிழர் பேரமைப்பே பராமரிப்பது என்றும், நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தை பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதியை ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்வது என்றும் தமிழக அரசுடன் உடன்பாடு செய்து கொள்ளப் பட்டது. அதன்படி கடந்த சில ஆண்டுகளாக அனுமதி புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது. நடப்பாண்டிற்கு அனுமதியை புதுப்பிக்கக் கோரி பல மாதங்களுக்கு முன்பே மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அனுமதி முடிவடைந்ததும், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகக் கூறி முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்திருக்கிறது. உலகத் தமிழர் பேரமைப்பால் அமைக்கப்பட்ட பூங்காவும் சிதைக்கப் பட்டிருக்கிறது. சுற்றுச்சுவரை இடித்த அதிகாரிகள் நினைவு முற்றத்திற்கு செல்வதற்கான முதன்மை வாயிலை கம்பி வேலி அமைத்துத் தடுத்திருக்கின்றனர். முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பிறகு ஈழத்தமிழர்கள் எப்படி முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டார்களோ, அதேபோல் இப்போது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமும் கம்பி வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கிறது. நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டதால் தான் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டதாக கூறப்படுவதை ஏற்கமுடியாது. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டியுள்ள நிலங்கள் பல்வேறு தரப்பினராலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றையெல்லாம் அகற்றுவதில் அவசரம் காட்டாத தமிழக அரசு, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவரை மட்டும் அதிகாலையில், 500க்கும் மேற்பட்ட காவல்துறையினரின் பாதுகாப்புடன் இடித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதும் கண்டனத்திற்குரியது. தமிழர்களுக்கான நினைவுச் சின்னங்கள் எதுவுமே தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்ற முதல்வரது எண்ணத்தின் வெளிப்பாடு தான் இந்த நடவடிக்கை ஆகும். கடந்த ஆட்சியில் கண்ணகி சிலையை அகற்றிய முதலமைச்சர், இப்போது முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவரை அகற்றியிருக்கிறார். இலங்கையில் தமிழர்களின் அடையாளங்களை இராஜபக்சே அழிப்பதைப் போலவே, தமிழகத்தில் ஜெயலலிதா செய்து வருகிறார். தமிழர்களின் எதிரிகள் யார், யார்? என்பதை இப்போதாவது தமிழக மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். http://dinamani.com/latest_news/2013/11/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81/article1888476.ece
 5. தஞ்சையில் கட்டப்பட்டுள்ள முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு FILE இலங்கையில் நடந்த போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்டது. உலக தமிழ் பேரமைப்பு சார்பில் கடந்த 8 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறக்கப்பட்டது. தஞ்சை விளார் சாலையில் 2 ஏக்கர் பரப்பளவில் முள்ளி வாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா கடந்த 8 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு முன்பே 6 ஆம் தேதி முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தை உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் திறந்து வைத்தார். ஆனாலும் திட்டமிட்டபடி திறப்பு விழா நிகழ்ச்சி 8 ஆம் தேதி தொடங்கி 10 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்படைத்துறையினர், தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர். இந்த முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1311/13/1131113010_1.htm
 6. புதன்கிழமை, 13 நவம்பர் 2013 08:57 முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் பகுதியில் உரிய அனுமதி பெற்று சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டிருந்த இந்தப் பூங்கா இன்று (13-11-2013) அதிகாலை 5.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த காவல்துறையினரால் சட்டவிரோதமாக இடித்துத் தகர்க்கப்பட்டது. முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அரை சுற்றுச் சுவரும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பெயர்ப்பலகையும் தரைமட்டமாகத் தகர்க்கப்பட்டது. இப்படத்தில் காணப்படும் நீரூற்று வரை வந்து அதையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்ட காவல்துறையினர் அதற்குள் தோழர்கள் கூடியதால் தற்காலிகமாக இடிப்பதை நிறுத்தியுள்ளனர். ஆனால் முற்றத்திற்குள் செல்லும் பாதையை வேலி போட்டு அடைத்துள்ளனர். “சட்டவிரோதமான முறையில் முற்றத்தில் எதுவும் அமைக்கப்படவில்லை. சட்ட ரீதியாகவே எதிர்கொள்வோம். அனைத்துத் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக் கட்ட நடவடிக்கைக் குறித்து முடிவெடுக்கப்படும்” என பழ. நெடுமாறன் அறிவிப்பு. http://tamil.thenseide.com/seide/index.php?option=com_content&view=article&id=614%3A2013-11-13-03-41-04&catid=28%3Aspecialnews&Itemid=2 நினைவு முற்றம் இடிப்பு: ஹைகோர்ட்டில் வழக்கு தொடரும் பழ.நெடுமாறன்! சென்னை:தஞ்சையில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடித்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக பழ.நெடுமாறன் கூறியுள்ளார். சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: ''இலங்கையில் நடந்த போரின்போது, உயிரிழந்த தமிழர்களின் நினைவாக தஞ்சை, விளார் சாலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. இந்த நினைவு முற்றத்தை அமைப்பதற்காக சட்டவிரோதமாக எதையும் செய்யவில்லை. முறையாக அனுமதி பெற்றே நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. ஆனால், எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல், தமிழக அரசு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிக்கப்பட்டது குறித்து மற்ற கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும்'' என்றார். -தற்ஸ் தமிழ்- 2009 ஈழத்தில் நடந்த இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களின் நினைவாகவும் இனப்படுகொலையை நினைவு கூறும் வகையிலும் தஞ்சை விளார் சாலையில் இரண்டரை ஏக்கர் நிலத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டு 8 -ம் தேதி திறக்கப்பட்டது. கற்சிற்பங்கள், ஓவியங்கள் என காண்போர் மனதை நெருடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த இந்த முற்றத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா விரும்பவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 500 -ம் அதிகமான போலீசாரின் மேற்பார்வையில் முற்றம் இடிக்கப்பட்டு வருகிறது. இதனால் தஞ்சையில் பதட்டம் எழுந்துள்ளது. "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் பகுதியில் உரிய அனுமதி பெற்று சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டிருந்த இந்தப் பூங்கா இன்று அதிகாலை 5.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த காவல்துறையினரால் சட்டவிரோதமாக இடித்துத் தகர்க்கப்பட்டது. முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அரை சுற்றுச் சுவரும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பெயர்ப்பலகையும் தரைமட்டமாகத் தகர்க்கப்பட்டது. இப்படத்தில் காணப்படும் நீரூற்று வரை வந்து விட்ட காவல்துறையினர் அதற்குள் தோழர்கள் கூடியதால் தற்காலிகமாக இடிப்பதை நிறுத்தியுள்ளனர். ஆனால் முற்றத்திற்குள் செல்லும் பாதையை வேலி போட்டு அடைத்துள்ளனர். அனைத்துத் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அடுத்தக் கட்ட நடவடிக்கைக் குறித்து முடிவெடுக்கப்படும் என பழ. நெடுமாறன் அறிவிப்பு." என்ற தகவலைத் தருகிறார் நெடுமாறன் அவர்களின் புதல்வியான பூங்குழலி இவர்கள் முற்றத்தினுள்ளேயே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://tamilworldtoday.com/home முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவர் இடிப்பு!... தமிழ் ஆர்வலர்கள் அதிர்ச்சி!! தஞ்சாவூர்: தஞ்சை, விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு வருகிறது. இலங்கையில் நடந்த போரின்போது உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக தஞ்சை, விளார் சாலையில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் கடந்த 8 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து 3 நாட்கள் நிகழ்ச்சி நடைபெற்று, கடந்த 10ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவடைந்தது. விழாவில் பேசிய பழ.நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆகியோர் நினைவு முற்றத்தை அகற்ற நினைத்தால் போராட்டம் வெடிக்கும் என்று பேசினார்கள். இந்நிலையில், இன்று காலை முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை, சுமார் 300க்கும் மேற்பட்ட போலீசார் முன்னிலையில் இடிக்கும் பணி நடந்து வருகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்கா நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருப்பதால் அதை இடிப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. -தற்ஸ் தமிழ்- தமிழகத்தில்.... பல‌ அரசியல் வாதிகள், பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான... காணிகளைத் தானே... ஆக்கிரமித்து கட்டிடங்கள் எழுப்பியுள்ளார்கள். அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா... உலகத் தமிழனுக்கு பொதுவான இடத்தை, இடித்து.... உங்கள் கரங்களில்.... கரியை பூசிக் கொண்டுள்ளீர்களே.... உங்களுக்கே... இது நியாயமாகப் படுகின்றதா
 7. நன்றி. ஒரு திருத்தம். சைவ சமயத்தை வளப்படுத்தும் உங்கள் எதிர்மறை முயற்சிக்கு நன்றிகள். என இருந்தால் நலம். இந்து என்பது - ஏமாற்றுக்காரர்களின் வித்தை. உங்கள் புரிதலுக்கு நன்றி.
 8. மௌனத்தின் குரல். பகுத்தறிவுவாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் நண்பர் ஒருவர் நேற்று என்னை சந்திக்கையில் ஒரு கேள்வியைக் கேட்டார். எந்தக் கேள்வியைக் கேட்டாலும் ஏதாவது சாக்கு போக்குச் சொல்லி சமாளிக்கிறீர்களே ? இந்தக் கேள்விக்கு சரியான பதில் தர முடியுமா ? நான் சொன்னேன் ஐயா சாக்கு போக்கெல்லாம் நான் சொல்வதில்லை. உண்மையைத்தான் சொல்கிறேன். உங்களுக்குக் கற்றுத்தரப்படாததாலோ அல்லது உங்களால் இயாலதது என்பதாலோ அதை நீங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள். சரி கேள்வி என்ன ? ஐயா, ஜீவ சமாதி என்று சொல்கிறீர்களே, அது தற்கொலை அல்லவா ? அதற்கு உடந்தையாக, சாட்சியாக இருந்தவர்கள் கொலைகாரர்கள் தானே ? உயிரோடு ஒருவரைப் புதைப்பது கொலைதானே ? என்று கேட்டு விட்டு ஒரு நமட்டுச் சிரிப்பு வேறு சிரித்துக் கொண்டார். அவரைச் சொல்லி குற்றமில்லை. இன்றைய நடைமுறை சட்ட திட்டங்களின்படி அது தற்கொலை என்றே கொள்ளப்படும். உயிரோடு புதைப்பவர்கள் கொலைகாரர்களே என்று தீர்ப்பு சொல்லி விடுவார்கள். ஆனால் யோகிகள், சித்தர்கள், ஞானிகள் நிலை வேறு. நதியானது கடலில் போய் சேர்வது போன்றது யோகிகள் தன் ஜீவாத்மாவை பரமாத்மாவோடு ஐக்கிப்படுத்திக் கொள்வது. ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு நீரில் குதித்தாலோ, தூக்கு போட்டுக் கொண்டாலோ அல்லது வேறு ஏதாவது உபாயத்தில் தன் உயிரை துன்புறுத்தி உடலில் இருந்து வெளியேற்றுவது தற்கொலைதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒரு யோகியோ, சித்தரோ அவ்வாறு ஸமாதி ஆவதில்லை. ஜீவன் நீங்கிய பிறகும் அவர்கள் உடல் எப்படி அமர்ந்திருந்தார்களோ அப்படியே அமர்ந்திருந்தபடி இருக்கும். மேலும் உடலானது அழுகிப் போகாமல் அப்படியே வற்றி, சுருங்கிப் போய் இருக்கும். இது பல சந்தர்பங்களில் நிரூபணம் ஆகியுள்ளது. ஆனால் உங்களாலோ, என்னாலோ எந்த வேதனையும் இல்லாமல், அசைவும் இல்லாமல் உயிரை உடலில் இருந்து பிரித்தெடுக்க முடியாது. மூச்சை அடக்கி சிறிது நேரம் கூட அமர முடியாது. நம் உடல் நம்மையும் மீறி மூச்சு விட்டுவிடும். அப்படியே கஷ்டப்பட்டு அடக்கினாலும் அசையாமல் இருக்க முடியாது. இது மட்டுமல்ல உடலை பஞ்ச பூதங்களோடு கரைந்து போகச் செய்யவும் அவர்களால் முடியும். சாதாரணமாக மனிதர்கள் அவஸ்தைப்பட்டு, மலஜலம் கழிந்து வாய் வழியாகவோ, மூக்கு வழியாகவோ பிராணன் போய் மரணிப்பார்கள். ஆனால் ஜீவ ஸமாதி ஆகும் யோகியின் உடல் வாழ்க்கை முற்றுப் பெறுவது வேறு விதத்தில். நதியானது கடலில் கலப்பது போல யோகியின் ஜீவபோதமானது பரபோதமாக மாறி அமைகிறது. உடல் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட அவரின் உணர்ச்சியானது எல்லை கடந்த பேருணர்ச்சியாக விரிவடைகிறது. பொறிகளாகிய கண், மூக்கு, செவி, போன்றவற்றில் புலனாகும் உணர்ச்சிகள் ஏதும் யோகிக்கு இருக்காது. தூங்கப் போவது போல ஒவ்வொன்றாக அவைகள் தாமே ஒடுங்கிவிடுகின்றன.அந்தி வேளை வரும் போது, தன் வீட்டுக்கு பறந்து வரும் பறவை போல யோகியின் மனமானது இறுதி கட்டத்தில் ஹிருதயத்தில் அடங்கிவிடுகிறது. உடலெங்கும் சீதம் பரவுகிறது. அதாவது பிராணன் ஒவ்வொரு அவயத்தை விட்டும் மெதுவாக விலகுகிறது. பிராயாணி ஒருவன் வண்டி நிலையத்துக்கு வந்து சேருவது போல யோகியின் பிராணன் உச்சந்தலைக்கு வந்து சேருகிறது. அதனால் உச்சந்தலையில் மட்டும் நெடுநேரம் கதகதப்பு நீங்காதிருக்கும். அப்போது ஓம் என்ற பிரணவ ஓசை மட்டும் உள்ளே ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆதிநாதத்தை கேட்டபடி அதிலேயே ஒடுங்கி ஓம் என்ற ஓசையின் வடிவினனாகிய பரமாத்மாவின் திவ்ய சொரூபம், அலகிலா ஜோதி, பேரின்பம், சித் அம்பரம் என்ற நிலையை யோகி அடைவார் மேலைத்துவாரம் வழியாக ஜீவனை பரமனோடு இணைத்துக் கொள்வரர். இதுவே பிறப்பறுக்கும் மரணமிலாத பெரு வாழ்வு நிலை. இது மரணமல்ல இது ஜீவ ஐக்கியம். சரீரம் விழுந்து போகாமல் சரீரத்தின் துணை கொண்டே வீடு பேறு அடையும் நிலை. அதல்லாமல் மரணமிலாப் பெரு வாழ்வு என்பது ஆயுளை நீட்டித்துக் கொள்வதல்ல. இந்த மரணமிலாப் பெருவாழ்வு நிலையை அடையவே சித்தர்கள் தேகத்தை வலிமையாக்கி, ஆயுளை நீட்டித்துக் கொண்டார்கள். எனவே நண்பரே ஜீவ ஸமாதி என்பது தற்கொலையோ, கொலையோ அல்ல. அது ஜீவ ஐக்கியம். இவ்வாறு ஐக்கியமானவர்கள் நினைத்த போது வரவும் முடியும் என்று சொல்லப்படுவதுணடு. அப்படி வந்து அருள்பாலித்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். இதைப் பற்றி இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், சித்தர்கள் உறையும் ஜீவஸமாதியில் போய் உண்மையான மனதோடு வேண்டுங்கள், ஏதாவது ஒரு ரூபத்தில் அவர்கள் இதை உங்களுக்கு செம்மமைக விளக்கி அருளுவார்கள்.
 9. “உள்ளம் பெருங்கோவில் ஊன் உடம்பே ஆலயம்" என்பது சித்தர் பெருமகனார், ஆசான் திருமூலர் வாக்கு. ஆலயமான உடம்பை தூய்மையாக வைத்திருந்தாலே நோயற்ற வாழ வாழ்வு முடியும். தினந்தோறும் வயிறு புடைக்க உண்டு இயந்திரங்களுக்கு வேளை கொடுத்துக்கொண்டே இருக்கின்றோம். பட்டினியால் வாடி ஒருவன் இறப்பதற்கு முன்பாக பசியின்றி உண்டே பலபேர் இறந்து போகின்றனர். இதனை கருத்தில் கொண்டுதான் நம்முன்னோர்கள் ஒருநாள் பட்டினி இருந்து விரதங்களை கடைபிடித்தனர். மனித ஆரோக்கியத்திற்கு விரதம் ஒரு தலைசிறந்த மருந்தாகும். ஆம். தினமும் வயிறு நிறைய உண்டு நம் உடலை நோய்களின் கூடாரமாக மாற்றிக் கொள்வதற்கு பதிலாக விரதம் இருந்து ஆயுளை நீட்டிக்கச் செய்வது சிறந்தது. நோன்பை அறிவுறுத்தும் மதங்கள் அனைத்து மதக் கோட்பாடுகளிலும் விரதம் அனுஷ்டிப்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்து மதத்தில் பிரதோஷம், பௌர்ணமி, சஷ்டி,கார்த்திகை ஏகாதசி நாட்களில் மேற்கொள்கின்றனர். நம் முன்னோர்களை நினைத்து அமாவாசை நோன்பு கொள்வது இன்றும் நாம் காணலாம். மேலும் செவ்வாய் வெள்ளி கிழமைகளிலும் அதிக பெண்கள் வரலட்சுமி விரதமும் இருக்கின்றனர். சனிக் கிழமைகளில் விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு. இதேபோல், இஸ்லாம் மதத்தில் ரம்ஜான் நோன்பு பிரசித்தி பெற்றது. இக்காலத்தில் உமிழ் நீரைக்கூட உள்ளிறக்க மாட்டார்கள். மாலை 6 மணிக்கு மேல் நோன்பு திறந்து நோன்புக் கஞ்சி அருந்துவார்கள். இது உடலுக்கும் மனதிற்கும் உற்சாகத்தைக் கொடுக்கும் நோன்பாகும். இதுபோல், ஒவ்வொரு மதத்திலும் நோன்பை முன்னிறுத்தியே சொல்லப்பட்டுள்ளன. விரதத்தின் பலன்கள் விரதம் இருப்பதை சித்தர்கள் உயிரைக் காக்கும் விருந்து என்றே கூறுகின்றனர். இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை கொண்ட பலர் சீரான முறையில் விரதம் கடைப் பிடித்து, நோயின் தாக்குதலின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருப்பது உண்மை. உடல் உறுப்புக்கள் தூய்மை நோன்பு மிகவும் எளிய, ஆனால் சிறப்பான ஊட்டச் செயலாக அமைந்து உடலைக் காக்கிறது. நோன்பின் போது உடலின் ஒவ்வொரு உறுப்பும் தூய்மையாகின்றது. முதலில் கொழுப்புப் பொருட்கள் கரைகின்றன. அதன்பின் கிளைக்கோஜனாகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சர்க்கரைப் பொருள்களும், புரதப் பொருள்களும் கரைந்து, உடலில் கலக்கின்றன. உடலில் நோயுற்ற திசுக்களே முதலில் கரைக்கப்படுகின்றன. கொழுத்த உடல் கொண்டவர்கள், உபவாசம் மேற்கொண்டால் உடலின் உள்ளுறுப்புகளை வீணாகச் சுற்றியிருக்கும் பகுதிகள் கரைக்கப்படுகின்றன. இளமை பாதுகாக்கப்படும் வயிற்றில் புளிப்பு, குடலின் செரிப்பு, திசுக்களின் எரிப்பு ஆகியவற்றில் நடுநிலைமை உருவாக்குகிறது. இரத்தமும், நிணநீரும் தூய்மையாக்கப் படுகின்றன. காம உணர்வு தணிகிறது. தூய சிந்தனைகள், நினைவுகள் வளர்கின்றன. மனதின் சக்தி, பகுத்தறிகின்ற ஆய்வு நிலை, நினைவு கூறும் சக்தி அதிகமாகின்றது. நோன்பு மேற்கொள்வதால் முதுமை தடைபடுகிறது. குடலில் ஏற்படும் புளிப்பு, அழுகல் போன்றவை நீக்கப்படுகின்றன. கண்பார்வை சீரடைகிறது. காது நன்றாக கேட்கும் தன்மையைப் பெறுகிறது. கை கால்கள் நல்ல இயக்கம் பெறுகின்றன. மாரடைப்பு தடுக்கப்படும் வாரம் ஒருநாள் விரதம் இருந்தால் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து குறைவு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் விரதம் இருப்பதன் பயன் குறித்து இங்கிலாந்தின் யுடா பல்கலைக்கழக பேராசிரியர் பெஞ்சமின் ஹோர்ன் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் விரதம் இருப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் பேரின் இதயத்தை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததில் மாதம் தோறும் ஒரு நாளாவது விரதம் இருப்பவர்களால் பெரும்பாலானவர்களின் இதய ரத்த குழாய்களில் கொழுப்பால் ஏற்படும் அடைப்புகள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. விரத்தை யார் தவிர்க்க வேண்டும்? நோன்பு அன்று கடினமான வேலைகளை செய்யக்கூடாது. மன இறுக்கமான சூழ்நிலையை தவிர்க்க வேண்டும். இதனால் மனதிலுள்ள மயக்கம், குழப்பங்கள் நீங்கி உடலுக்கும், மனதுக்கும் ஒருசேர புத்துணர்வு கொடுக்கும். உடலில் சக்தியின்றி மெலிந்து ஊட்டச்சத்து தேவையுள்ள நிலையில் இருப்பவர்கள் விரதம் கடைபிடிக்க கூடாது. அதுபோல் குடல்புண் உண்ணவர்களும் விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும். விரத நாளன்று உடலில் நோயின் தாக்குதல் இருக்கக்கூடாது. ஓய்வெடுக்கும் நாளாக இருக்க வேண்டும். விரதம் மேற்கொள்பவர்கள் மற்ற உணவு வேளைகளில் நீர்ச்சத்து நிறைந்த எளிதில் சீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். via Nirosha Naren
 10. மௌனத்தின் குரல். வேதாந்தம் என்பதெல்லாம் வெறும் தத்துவம், தற்போதைய வாழ்க்கை முறைகளுக்கு இதெல்லாம் ஒத்து வராது என்று சொல்பவர்கள் ஒருபகுதி. சித்தர்கள் நெறிமுறைகளெல்லாம் கடினமானவை. அந்த வழியில் சொல்வது என்பது தற்போதைய நடப்பு யுகமான கலியுகத்திற்கு உகந்ததல்ல. அவர்களே கலியுகத்தை வெறுத்து இமயமலையில் எங்கோ சமாதி நிலையில் இருக்கிறார்கள் என்று சித்தர்கள் நெறியையும் குறை கூறி வருபவர்பகள் ஒரு பகுதி. இப்படி பலப்பல கருத்துக்களைச் சொல்லி மக்களை குழப்புபவர்களே பெரும் பகுதி. பொதுவாக மனிதன் உணர்வு மயமானவன். உணர்ச்சிகளுக்கு அடிமைப்படுபவன். இந்த உணர்வு என்பது சாட்சிப் பொருளான ஆன்மாவுக்கு உரியது. இந்த உணர்வு பிரகிருதியான இயற்கைக்கு முற்றிலும் வேறுபட்டது என்றே யோக நூல்கள் கூறுகின்றன. பிரகிருதியை செயல்படுத்தும் சக்தியே பிராணன். அதுவே நம்மையும் இயக்குகிறது. நாம் இந்த உணர்வுகளால் பிராண சக்தியை வெகுவாக இழந்து விடுகிறோம். எனவே இதற்குக் காரணமாக விளங்கும் மனதை செம்மைப்படுத்துவதன் மூலமாக பிராண சக்தியை இழக்காமல், ஆன்மிகத்தில் மேன்மையடையலாம் என்றே யோக சூத்திரம் சொல்கிறது. அதற்கான வழிமுறைகளையே வேதாந்தம், சித்தாந்தம், யோக சூத்திரம் எல்லாம் சொல்கின்றன. இந்த பிராண சக்தியே குண்டலினி சக்தியாக ஒவ்வொருவர் உடலிலும் உறங்குவது போல இருந்து கொண்டு இயக்குவதாகச் சொல்வார்கள். பரந்தாமன் உறங்குவது போல விழித்திருக்கிறார் அல்லவா ? பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரத்தை எடுத்துக் கொண்டால், மனதையும் அதன் செயல்பாடுகளையும் பற்றி விளக்கி, அதை நெறிப்படுத்தி யோகத்தில் மேன்மையடைவதைப் பற்றி சொல்லியிருக்கிறாரே தவிர, ஒரு இடத்தில் கூட குண்டலினியைப் பற்றியோ, நாடிகளைப் பற்றியோ குறிப்பிடவே இல்லை. உபநிடதங்களோ, கீதையோ குண்டலினியைப் பற்றி குறிப்பிடவில்லை. அதனால் குண்டலினி இல்லை என்று அர்த்தமல்ல. அதற்குப் பிறகு வந்த சித்தர்கள் அதைக் குறித்து ஆராய்ந்து, அறிந்து, உணர்ந்து அந்த குண்டலினி யோகப் பயிற்சியைத் தந்திருக்கிறார்கள். ஆக இங்கு நாம் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். குண்டலினி, மூன்று நாடிகள் எல்லாமே நம் மனதை அறிந்து கொள்ள உதவும் எத்தனையோ வழிமுறைகளில் ஒன்று அவ்வளவுதான். மனதின் செயல்பாடுகளை விளங்கிக் கொள்ளவும், அதை நெறிப்படுத்தவும் இன்னும் எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. எதுவும் ஒன்றுக்கொன்று குறைந்தவைகளல்ல. வெவ்வேறாக இருந்தாலும் எல்லாம் ஒரே நோக்கத்தை உடையவை. மனிதர்கள் அனைவருமே ஒருவருக்கொருவர் எவ்வளவோ வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனைவருடைய முன்னேற்றத்திற்கும், சாதனைகளுக்கும் ஒரே வழியாகப் பொதுவாகக் காட்ட முடியாது. வெவ்வேறு இயல்புடையவர்களுக்கும் விதவிதமான வழிபாடும், சாதனைகளும் வேண்டியதிருக்கின்றது. இதைத்தான் ''உத்தமோ ப்ரம்மஸத்பாவோ த்யானபாவஸ்து மத்யம; ஸ்துதிர்ஜபோ அதமோ பாவோ பாஹ்ய பூஜா அதமாதம;'' என்று முன்னோர்கள் சொல்கிறார்கள். அதாவது. எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளான ப்ரம்மத்தை அறிந்து, உணர்ந்து அதனோடு இணைந்து சமாதியில் இருப்பது எல்லாவற்றிலும் மேன்மையானது. அதற்கு அடுத்ததாக உள்ள சாதனையில் நான், இறைவன் என்ற இரண்டே பேர்தான். அதுவே த்யானம். அதிலே ஜபம், தபம் எல்லாம் நின்றுவிடும். குறிப்பிட்ட உருவம் மட்டுமே காணப்படும். இது இடைத்தர சாதனை. அதற்கும் கீழான சாதனை ஜபமும் துதி செய்தலும். ஜபம் செய்து கொண்டே இறைவனின் உருவத்தையோ, லீலைகளையோ சிந்தித்தபடி இருப்பது. அதனினும் கீழான சாதனை புறவழிபாடு. அதாவது விக்ரக வழிபாடு, பூஜைகள் எல்லாம். இதிலே கீழே, மேலே என்று சொல்வதெல்லாம் மனதின் படைப்புகளே. இவைகள் எல்லாமே முறையாக மேன்மையடைய உதவும் படித்தரங்கள். யாருடைய மனம் எந்தத் படியில் இருக்கிறதோ அங்கிருந்து சாதனையை ஆரம்பித்து முன்னேறிச் சொல்லவேண்டும். ஒரு சாதாரண மனிதனிடம் போய் சமாதியைப் பற்றி உபதேஷித்தால் அவனுக்கு ஒன்றும் பிடிபடாது. ஏதோ சொல்கிறாரே என்று முயற்சி செய்து சில நாட்களில் விட்டு விடுவான். ஆனால் அதே மனிதனிடம் வில்வம், பூ இவற்றையெல்லாம் வைத்து பூஜை செய்யச் சொன்னால், அதை திருப்தியாகச் செய்து வருவான். அவன் மனம் கொஞ்ச நேரமாவது நிலைத்து நிற்கும். அவனுக்கு ஒரு விதமான ஆனந்தமும் ஏற்படும். அப்போது அவன் அடுத்த படியைப் பற்றி சிந்திப்பான். அதுதான் மனிதனின் இயல்பு. ஜெபம் செய்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்குமே என்று எண்ணி ஜெபம் செய்ய ஆரம்பிப்பான். பின்னர் தியானம் செய்தால் இன்னும் நன்றாக இருக்குமே என்று மனதில் தோன்றும். அப்போது பார்த்தால் தியானம் செய்வதிலேயே விருப்பம் இருக்கும். இப்படி மனிதன் தன் குறிக்கோளை நோக்கி முன்னேறியபடியே இருக்கிறான். இதைத்தான் முறையான முன்னேற்றம் என்பார்கள். இவ்வழியில் மனம் அடையும் முன்னேற்றம் ஒருபோதும் மறைவதில்லை. அது மனதில் பதிந்து, படிந்துவிடும். எனவே குண்டலினி என்பது மேன்மை அடைந்த அனைவருக்கும் விழித்தெழுவதே. அது தூய பக்தி உள்ளவர்களுக்கும் விழித்தெழும், சற்குருவின் கருணையாலும் விழித்தெழும், தத்துவ ஞான ஆராய்ச்சியாலும் கூட விழிப்படையும். அசாதாரணமான ஆற்றலோ, ஞானமோ ஒருவரிடம் காணப் பெற்றால், அவருக்கு குண்டலினியின் விழிப்பு ஏற்பட்டுள்ளது என்று புரிந்து கொள்ளலாம். சிறிது சக்தி சுழுமுனை வழியாகச் சென்றிருக்கிறது என்று கொள்ளலாம். பெரும்பான்மையான சாதகர்களுக்கோ, யோகிகளுக்கோ, மகான்களுக்கோ குண்டலினி விழித்தெழுதல் என்கிற நிகழ்வு அவர்கள் அறியாமலேயே நடக்கிறது என்கிறார் சுவாமி விவேகானந்தர். எனவே முதல் படியிலிருந்து முறையாகவே செல்பவர்களும் மேன்மையடைவார்கள் என்பதில் சந்தேம் இல்லை. ஆனால், வைராக்யமும், விடாமுயற்சியும், ஆர்வமும் மிகமிக அவசியம்.
 11. வாழ்வியல்: 1. பொருட்படுத்தாதீர்கள்(Objects do not) உங்களைப் பற்றி அவதூறாகவோ, மிக மட்டமாகவோ யார் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதீர்கள். அதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுங்கள். எதிரிகள் ஏமாந்து விடுவார்கள். 2. எதையும் யாரிடமும் எதிர்பார்க்காதீர்கள்(Do not expect anything to anyone) ஒருவரிடம் நாம் ஒன்றை எதிர்பார்த்து அது கிடைக்கவில்லையென்றால், அவர் மீது கோபம் நமக்கு வருவது இயற்கைதான். எனவே , யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். 3. எதிரிகளை அலட்சியம் செய்யுங்கள்(Please disregard opponents) தனக்குப் பிடிக்காத மனிதர்களைப் பற்றி நினைத்துக்கூடப் பார்க்கக்கூடாது. அதனால் நமக்கு ஆத்திரமும், கோபமும் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்கலாம். தன்னம்பிக்கை உள்ளவனை ஒரு போதும் அவதூறுகளும், ஏச்சு பேச்சுகளும் பாதிப்பதில்லை. 4. தேவையற்ற எண்ணங்களை நிறுத்தி விடுங்கள்(Please stop unwanted thoughts) பிடிக்காத நபர்கள் மற்றும் செயல்களைப் பற்றி எண்ணம் வரும்போது, அந்த எண்ணங்களுக்கு பெரிய பூட்டு போட்டுவிடுங்கள். நமது புராணங்களும் கோபத்தின் தீமைகளைப் பற்றி விபரமாக விளக்குகின்றன. பாருங்கள் இங்கொரு முனிவரின் கோபத்தை.. துர்வாசர் என்றொரு முனிவர் இருந்தார். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர் அடிக்கடி கோபப்படகூடியவர். கோபத்தின் மறு உருவமாகவே அவரை புராணங்கள் சித்தரிக்கின்றன. அவர் அடிக்கடி சாதாரண விசயங்களுக்கெல்லாம் கோபப்பட்டு, தனது தவவலிமைகளை இழந்தவர். மகாமுனிவரையே ஆட்டுவித்த கோபம், சராசரியான மனிதனை பாடாய்படுத்துவதில் என்ன அதிசயம்? எனவே நாம் வாழ்க்கையில் வெற்றி பெற , முதலில் நம்முடைய கோபத்தை ஆட்சி செய்ய வேண்டும். அதாவது தேவைப்படும் இடத்தில் அளவான கோபம் மட்டுமே கொள்ளலாம். அதுவும் நம் சுயமதிப்பை காப்பாற்றிக்கொள்ள கூடிய அளவில் இருந்தாலே போதுமானது. என்ன நண்பர்களே !இனி எடுத்ததற்கெல்லாம் கோபப்படமாட்டீர்கள்தானே..! Visit our Page -► தமிழால் இணைவோம்
 12. தமிழ்மொழி சித்தர் மொழி; தமிழர் நெறி சித்தநெறி. தமிழ் மொழி சித்தர்கள் மொழி. சித்தர்களால் உருவாக்கப்பட்டு இன்றும் அவர்களாலேயே வளர்கப்பட்டு வருகின்றது. முற்றுப்பெற்ற ஞானிகளான சித்தர்களின் உயர்மொழி தமிழ். ஆதாலால், அது ஞானமொழியென்றும், மலங்கள்(கசடு/குறை) நீங்கிய அமுதமொழியென்றும் அழைக்கப்படுகின்றது. இதற்கு திருச்சி, துறையூர் ஓங்காரக் குடில் சான்று பகரும். "கல் தோன்றி மன் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி" “கல் தோன்றி மன் தோன்றாக் கால மூத்தகுடி” இந்தக் கூற்றை பலரும் தவறாக கல்லும் மண்ணும் தோன்றாக் காலமென்கின்றனர். ஆனால், "கல் தோன்றி" அஃதாவது கல்விமுறைகள் தோற்றம் கொண்ட, "மன் தோன்றா" அஃதாவது ஆட்சிமுறைகள்(மன்னராட்சி) தோன்றாக் காலத்தில், "வாளோடு" அஃதாவது வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம். உலகத்தில் தோன்றிய மூத்தமொழி தமிழ் என்பதே இதன் விளக்கம். உலகமொழிகளுக்கே தாய்மொழி. தமிழர்நெறி சித்தநெறியே யன்றி இந்துத்துவமல்ல. உலக அறங்களுக்கு மூத்தது சித்தநெறி. இந்து என்பது சமயமோ மார்க்கமோ மதமோவல்ல. அது ஓர் நாகரீகம். சிந்துவெளி நாகரீகமே காலப்போக்கில் திரிந்து இந்து என்றாகிவிட்டது. நன்றி - tamilcause உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம். அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார். வில்லிப்புத்தூரார் தம்முடைய கையில் நீளமான துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய பதமான வளைந்த கத்தி இருக்கும். அதை எதிராளியின் காதின் மீது வைத்துக்கொண்டு கேள்விகளைக் கேட்பார். பாடல்களைச் சொல்லச் சொல்வார். ஏதும் வழு இருந்தால் உடனடியாக எட்டினமட்டும் காதை அறுத்துவிடுவார். அருணகிரியோ ஒரு புது கண்டிஷனைப் போட்டுவிட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். அருணகிரி ஓர் அந்தாதியைப் பாடுவார். அதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும்வில்லி அர்த்தம் சொல்லிவிட்டால் போதும். அவ்வாறு சொல்லிவிட்டால் வில்லிப்புத்தூரார் வென்றவர் ஆவார். வென்றவர் எட்டினமட்டும் தோற்றவர் காதை அறுத்துவிடலாம். அப்படி வில்லி பொருள் சொல்லவில்லையென்றால் வில்லியின் காதை அருணகிரி அறுக்கலாம். வில்லியும் ஒத்துக்கொண்டார். வாதத்தை வளர்த்துச் செல்லவிரும்பாத அருணகிரி, ஒரு பாடலைத் தாமே சொல்லி, அதன் பொருளைக் கேட்டார். வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போய் அமர்ந்துவிட்டார். ஏனெனில் அந்தப் பாடல் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை. அது ஒரு “தகரவர்க்க”ப் பாடல். முற்றிலும் “த” என்னும் எழுத்தின் வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். தமிழில் ககரவர்க்கம், தகரவர்க்கம் ஆகியவற்றில் பாடல்கள் உண்டு. காளமேகப்புலவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடியிருக்கின்றனர். வில்லிப்புத்தூரார் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, தம் காதை அறுத்துக்கொள்ளுமாறு அருணகிரியிடம் கேட்டுக்கொண்டார். அருணகிரியோ அது தம்முடைய நோக்கமல்ல என்றும் புலவர்களை இவ்வாறு அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை நிறுத்தச் செய்யவேண்டும் என்பதே விருப்பம் என்றும் சொல்லிவிட்டார். வில்லிப்புத்தூரார் அருணகிரியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தாம் இனி தமிழை வளர்க்கப் பாடுபடப் போவதாக வாக்குறுதி கொடுத்தார். பின்னாட்களில் அவர் தமிழில் மகாபாரதத்தைப் பாடினார். அந்த நூல் அவருடைய பெயராலேயே ‘வில்லி பாரதம்’ என்று வழங்குகிறது. பாடலைப் பார்ப்போம்: “திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே” இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார். திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை, திதி – திருநடனத்தால் காக்கின்ற தாதை – பரமசிவனும் தாத – பிரமனும் துத்தி – படப்பொறியினையுடையதத்தி – பாம்பினுடைய தா – இடத்தையும் தித – நிலைபெற்று தத்து – ததும்புகின்ற அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு ததி – தயிரானது தித்தித்ததே – தித்திக்கின்றதென்று து – உண்ட கண்ணனும் துதித்து – துதி செய்து வணங்குகின்ற இதத்து – பேரின்ப சொரூபியான ஆதி – முதல்வனே! தத்தத்து – தந்தத்தையுடைய அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு தாத – தொண்டனே! தீதே – தீமையே துதை – நெருங்கிய தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும் அதத்து – மரணத்தோடும் உதி – ஜனனத்தோடும் தத்தும் – பல தத்துக்களோடும் அத்து – இசைவுற்றதுமான அத்தி – எலும்புகளை மூடிய தித்தி – பையாகிய இவ்வுடல் தீ – அக்கினியினால் தீ – தகிக்கப்படுகின்ற திதி – அந்நாளிலே துதி – உன்னைத் துதிக்கும் தீ – புத்தி தொத்தது – உனக்கே அடிமையாகவேண்டும் இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். இதில் “திதத்தத்தத்” என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்திருப்பி வருகிறது. இதனை “மடக்கு” அல்லது “யமகம்” என்று சொல்வார்கள்.முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை “அந்தாதி” என்று சொல்வார்கள். கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் – தெரிந்துகொள்ளவேண்டியவை இருக்கின்றன. உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம். via தமிழோலை
 13. நம் திருமணமான தமிழ்ப்பெண்கள் நெற்றி,தலை வகிட்டில் குங்குமம் இடுகின்றனரே? இதற்கு சமய விளக்கம் ஏதேனும் உண்டா? இந்தப் பழக்கம் ஏதோ அந்நிய வரவாக உணர்கிறேன். விளக்கம் தேவை தெளிவு : முற்காலத்தில் போருக்குச் செல்லும் வீரர்கள் நெற்றியில் அரத்தத்தைக்(இரத்தம்) கொண்டு வீரத்திலகமிடுவது தமிழர்களின் பண்பாடாகும். பிற்காலத்தில் அம்மை வழிபாடு தோன்றியப் பிறகு போருக்குப் போகும் வீரர்கள் வெற்றியை வேண்டி அம்மனை வழிபட்டு போருக்குச் சென்றனர். வீரத்திலகமிடும் மரபு ஏற்கெனவே இருந்துள்ளதால் இப்போது அம்மனை வழிபட்டு அரத்தத்திற்கு(இரத்தம்) பதில் குங்குமத்தால் திலகமிட்டுச் சென்றுள்ளனர். இதுவே, பின்னாளில் சமய மரபாக ஆகிவிட்டிருக்கிறது. ஆனால், நெற்றியில் குங்குமம் இடுவதுதான் தமிழர்களிடம் இருந்துள்ளது. தலை வகிட்டில் இடுவது தமிழர்களிடம் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இல்லை. இந்தப் பண்பாடு வடவர்களுக்கே உரியதாகத் தெரிகிறது. பண்பாடு அறியாத இன்றையப் பெண்கள் நமது பண்பாடு என்று நினைத்து ஆரியப் பண்பாட்டை பின்பற்றுவதும் போற்றி புகழ்வதும் நகைப்பிற்கிடமாக இருக்கிறது. எனக்குத் தெரிந்த மட்டிலும் தலை வகிட்டில் குங்குமம் இடுவது நமது பண்பாடு அல்ல. இதைப் பற்றி மேலும் அறிந்தவர்கள் நமக்குத் தெரிவிக்கலாம். நன்றி
 14. இன்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு நாள்! ======================================= இந்தியா ஒன்றாக இருக்கும் வரை இந்து மதம் இருக்கும், இந்து மதம் இருக்கும் வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும்வரை மதப்பூசல்களும் குலக்கொடுமைகளும் அவர்களை விட்டு விலகவே முடியாது. மதப் பூசல்களும் குலக்கொடுமைகளும் அவர்களை விட்டு விலகாதவரை, ஆரியப் பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும் மேலாளுமையினின்றும் தமிழன் மீளவே முடியாது. அத்தகைய பார்ப்பனீயப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாதவரை தமிழ் மொழி தூய்மையுறாது. தமிழினம் தலைதூக்காது. தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது எனவே இந்து மதத்தினின்றும் மதப்பூசல்களினின்றும் ஆரியப் பார்ப்பனியத்தினின்றும் விடுபட வேண்டுமானால் நாம் இந்திய அரசியல் பிடிப்பினின்றும் விடுபட்டேயாகல் வேண்டும். ஆகவே தமிழக விடுதலை தான் நம் முழுமூச்சு நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும் -பாவலரேறு பெருஞ்சித்திரனார்
 15. செந்தமிழனின் அருமையான வரலாற்று ஆய்வுக் கட்டுரை . தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டியது. இல்லாத மதத்தின் பெயர் இந்து! - ம.செந்தமிழன் ’பொய் உரைப்பது, அதையே கொள்கையாக்குவது, அதையே தத்துவமாக்குவது, அதையே நடைமுறைப்படுத்துவது, ஏற்க மறுப்பவர்களை அச்சுறுத்துவது அல்லது அரவணைத்துக் கொள்வது’ – ’இந்து தர்மம்’ என்றால் என்னவென விளக்கம் கேட்டால், இதுவே எனக்குத் தெரிந்த இந்து தர்மம். இந்துமதம் என ஒன்று இப்பொழுதும் இல்லை, முற்பொழுதும் இருக்கவில்லை. ஆனால், இந்தியாவே ’இந்து தேசம்’ எனப் பொய் உரைத்து, அதையே கொள்கையாக, தத்துவமாக, நடைமுறையாக மாற்றிக் காட்டியிருக்கிறார்களே, இதுவே அவர்களது சிறப்பு. சிந்துவெளியைக் கண்ட கிரேக்கப் பயணிகள் ’சிந்து’ எனும் தமிழ்ச் சொல்லை அவர்கள் மொழி உச்சரிப்பிற்கேற்ப ’இண்டு’ (sindhu – indu) என்றனர். திருச்சியை ஆங்கிலத்தில் trichy எனவும், தஞ்சாவூரை tanjore எனவும் உச்சரிப்பது போல. சந்திரகுப்த மௌரியனது கிரேக்கத் தூதர் மெகஸ்தனிஸ் தமது நூலுக்கு வைத்த பெயர், ‘இண்டிகா’. சிந்துநதி நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு அழைத்தனர். இந்திய நிலப்பரப்பின் கடந்த 5000 ஆண்டுகால வரலாற்றில், சிந்துவெளி நாகரிகத்தை ஒதுக்கி விட்டு எவராலும் இந்திய அரசியலைப் புரிந்துகொள்ள இயலாது. சிந்துவெளியில் வாழ்ந்தோர் தமிழர்களே, என்பதை அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன், இரா.மதிவாணன் உள்ளிட்ட சமகால அறிஞர்கள் நிறுவியுள்ளனர். சிந்துவெளி எழுத்துகள் வாசிக்கப்பட்டு, அவை அனைத்துமே தூய தமிழ்ச் சொற்கள்தாம் என்பதும் தெள்ளத் தெளிவாக உரைக்கப்பட்டுவிட்டது. ‘குயவன், கண்ணன், தச்சன், அந்தனன், அவ்வப்பன், அவ்வன், அட்டன்’ உள்ளிட்ட சொற்கள்தான் சிந்துவெளிச் சித்திர எழுத்துகளில் உள்ளன. (Dravidian Indus valley language – prof. R.Mathivanan / thamizh chanror peravai publication) ஆரியர்கள் பிழைப்பு தேடி சிந்துவெளிப்பகுதிக்கு வந்தவர்கள். வரலாற்றாசிரியர் ராகுல் சாங்கிருத்யாயன் வார்த்தைகளில் கூறுவதானால், ‘ஆரியர்கள் வந்தபோது அவர்களிடம் குதிரைகளைத் தவிர வேறு ஒன்றும் இருக்கவில்லை’. (ரிக்வேத கால ஆரியர்கள் / என்.சி.பி.எச்) சிந்துவெளித் தமிழர்களோ, ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி வாழ்ந்தனர். சிந்து ஆற்றிலிருந்து பெரும் படகுகளில் சரக்குகளை ஏற்றி, இன்றைய அரபிக் கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பல்ளுக்கு மாற்றி, கண்டம் விட்டு கண்டம் வணிகம் செய்தவர்கள். ரிக் வேதம் படித்தால், ஆரியர்களது காட்டுமிராண்டித்தனமான வாழ்வியலை எவராலும் புரிந்துகொள்ள இயலும். அவர்கள் சிந்துவெளிக்கு வந்தபோது, அவர்களுக்கென சமயமும் இல்லை, கடவுளும் இல்லை. அவர்களது வழிபாடுகள் எல்லாம், அக்னி, வாயு, வருணன் போன்ற சிறு தேவதை வழிபாடுகளே. தேவர்கள் / தேவதைகள் எல்லாரும் வானில் இருப்பதாக அவர்கள் நம்பினர். நெருப்பில் பலி பொருட்களைப் போட்டு எரித்தால், புகை வழியாக வானில் உள்ள தேவர்களுக்கு அப்பலிகள் கிடைக்கும் என்று நினைத்துக் கொண்டு வாழ்ந்தவர்களே ஆரியர்களின் முன்னோர்கள். குதிரைகளையும், அவ்வப்போது மனிதர்களையும் இவ்வாறு தீயில் போட்டு எரித்து ’வழிபட்டனர்’. இதுவே ஆதிகால ஆரியரது சமய நடைமுறை. இப்போதும், பிராமணச் சடங்குகளில், தீ வளர்த்து துணிகளைப் போட்டு எரிப்பதைக் காணலாம். இந்தத் துணிகள் வானில் உள்ள தேவதைகளுக்கு புகையாகச் சென்று சேரும் என்பதே பொருள். அவர்களது ஆதி மந்திரங்கள், குறிப்பாக ரிக் வேத மந்திரங்கள், இதைத்தான் உரைக்கின்றன. ஆனால், தமிழர்களது நாகரிகம், ஆதிச்சநல்லூர் ஆய்வுகளின்படி, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. குமரிக்கண்ட ஆய்வுகளின் வழியே தமிழர் வரலாற்றைக் கண்டால், ஏறத்தாழ 20,000 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதைச் சமகால ஆய்வுகள் எடுத்துரைக்கின்றன. குமரிக்கண்டத்தில் வாழ்ந்த மயன் எனும் மாமுனிவர் உரைத்தவையே, ’பிரணவ வேதங்கள்’ எனும் ஆதி நால்வேதங்கள் என்பதை, ஜெஸ்ஸி மெர்கே எனும் அமெரிக்க ஆய்வாளர் நிறுவியுள்ளார். மாமுனி மயனது வேதங்கள், பிரபஞ்சத் தோற்றம் குறித்த வியக்க வைக்கும் தகவல்களைக் கொண்டுள்ளதை, ஜெஸ்ஸியின் கட்டுரைகளை வாசிக்கும்போது உணர முடிகிறது. இந்த மாமுனி மயனைத்தான், தேவதச்சன் மயன் என சமஸ்கிருத இதிகாசங்கள் அழைத்தன. மயன் எனும் சொல்லே தூய தமிழ்ச் சொல்தான். மயன் உரைத்த வேதங்களைப் பிற்காலத்தில் ஆரியர்கள் தமது மொழிகளில் எழுதிக் கொண்டனர். மயனது ஆதிவேதம், ஏறத்தாழ 13,500 ஆண்டுகாலப் பழமை வாய்ந்தது என்பது ஜெஸ்ஸி மெர்கேவின் கருத்து. மயன் குமரிக் கண்டத்தில் இன்றைய தமிழகத்தின் தென் பகுதியில் வாழ்ந்தவர். ஆலமரத்தடியில் தவம் செய்து, சிவனிடமிருந்து வேதங்களைக் கற்றதாக மயன் உரைக்கிறார். இதிகாசங்களிலும் ஏறத்தாழ இக்கருத்தையே ஆரியர்கள் பதிவு செய்தனர். ஆனால், அவர்களது வழக்கமான கற்பனைக் கோட்டைகளை மயன் மீதும் கட்டி வைத்து, அவர் ’ஆகாயத்தில் கோட்டை கட்டினார்’ என்றெல்லாம் எழுதி வைத்துவிட்டனர். இதனால், இச்செய்திகளே பொய் என்னும் எண்ணம் ஏற்பட்டுவிட்டது. குமரிக் கண்டம், ஆதித்தநல்லூர், சிந்துவெளி, சங்ககாலம், பிற்காலச் சோழர் காலம் ஆகிய பல்லாயிரம் ஆண்டுகால தமிழர் வரலாற்றில், தமிழர்கள் தமது சமயத்தை ‘இந்து மதம்’ என ஒருபோதும் அழைத்ததே இல்லை. பிரபஞ்சத் தோற்றத்தைப் படிப்படியான வளர்ச்சிகளுடன் தெளிவாக உரைத்த பரிபாடல் ‘மாயோன்’, ‘முருகவேள்’ ஆகியோரைத்தான் வழிபட்டது. தொல்காப்பியம் ‘நிலமும் பொழுதுமே’ (time and space) முதற்பொருள் என்றது. ஐந்திணைகளுக்கும் ஐந்து கடவுளர்களைத் தொல்காப்பியம் பதிவு செய்தது. சங்க இலக்கியத்தில் எண்ணற்ற பாடல்கள் ‘ஆலமர் செல்வன்’ என சிவ வழிபாட்டு பதிவாகியுள்ளது. சிவன், திருமால், முருகவேள், வேலன், கொற்றவை, காளி, இந்திரன் உள்ளிட்ட தெய்வங்கள் தமிழர் வரலாற்றில் தொன்று தொட்டு வணங்கப்பட்டு வருகின்றன. பல்லவர், களப்பிரர் காலத்தில் ஆரியச் சமயங்களான சமணமும் பௌத்தமும் தமிழகத்தில் திணிக்கப்பட்டபோது, சிவனியமும், மாலியமும் பரவித் தழைத்தன. பிற்காலச் சோழர்கள் சிவனியத்தை வளர்த்தெடுத்தனர். பிற்காலச் சோழர் காலம் வரைக்கும், தமிழகத்தில் எந்தக் கல்வெட்டிலும், ஓலைச் சுவடியிலும், மட்பாண்டங்களிலும், இன்னபிற சான்றுகளிலும் ‘இந்து’ எனும் சொல்லே இல்லை. தமிழர்கள் தம்மை, ஒருகாலத்திலும் இந்துக்களாக எண்ணியதே இல்லை. ஏனெனில், இந்து என்று ஒரு மதம் உண்மையில் இல்லை. அது, ஆரியர்களின், குறிப்பாக ஆரிய பிராமணர்களின் கற்பனைக் கோட்டை. கணிதக் கணக்கீடுகளால் பிரபஞ்சத்தை விளக்கிய மெய்யியல் எண்ணியம் (சாங்கியம்) என்பதாகும். கபிலர் எனும் தமிழ் அந்தணர் வழியாக உரைக்கப்பட்ட வேதம் இது. கபிலை நிறம் என்பதே சாம்பல் வண்ணம்தான். ஆனால், கொஞ்சமும் சங்கடம் இன்றி, ’ரிஷி கபிலர் அருளிய ஸாங்க்ய தத்வம்’ என்று கபிலரின் சாங்கியத்தை நூலாக வெளியிடுகின்றன ஆரிய பிராமண அமைப்புகள். கீதையும் இவ்வாறே இவர்களால் திரிக்கப்பட்டது. கீதையில் கண்ணன் அர்ஜுனனிடம், ‘கபில முனிவரின் சாங்கியத்தை உனக்கு உரைக்கிறேன்’ என்கிறார். கபிலரின் சாங்கியத்தோடு, தமது ஆரிய பிராமணிய இடைச் செருகல்களை இணைத்து, கீதையின் உண்மையான வடிவத்தைச் சீரழித்துவிட்டன இவ்வமைப்புகள். கண்ணன் எனும் சொல் சிந்துவெளி எழுத்துகளில் பல்வேறு இடங்களில் உள்ளது. கண்ணன் கருப்புத் தமிழரே அன்றி, சிவப்பு ஆரியர் அல்ல. இராமனும் கருப்புதான். இன்றைக்கு வழக்கில் உள்ள இராமாயணமும், பாரதமும் வெகு பிற்காலத்தில்தான் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டவை என்பதை மறந்துவிடக் கூடாது. அதற்கு முன், அவை தமிழில் இருந்திருக்க வேண்டும். சான்றாக, முதற் சங்கப் புலவர்களில் ஒருவர் ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’ என்பதாகும். இவரே பாரதத்தைத் தமிழில் பாடிய புலவர். சங்ககால சேர மன்னர்களில் ஒருவர் பெயர், ‘பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்’ என்பது. பாரதப் போர் நடந்தபோது, படையினர் அனைவருக்குமே இம்மன்னர் உணவு வழங்கினார் என்பதால், இப்பெயர் வந்தது. தமிழில் பாடப்பட்ட மூல பாரத, இராமாயண நூல்கள் தற்போது கிடைக்கவில்லை. ஆகவே, ஆரிய பிராமணர்கள் தமக்கு வசதியாக மொழிமாற்றம் செய்த நூல்களை மட்டும் வைத்துக் கொண்டு வரலாற்றைத் தவறாகக் காணும் நிலையில் உள்ளது தமிழ் இனம். பிற்காலத்தில் தோன்றிய பிராமணிய - வைதீக மெய்யியலாளரான ஆதி சங்கரர் தமது ’சௌந்தர்ய லஹரி’யில், பாடியவை அனைத்துமே, சிவன் – சக்தி ஆகிய தமிழர் மூலக் கடவுளரைப் போற்றிய பாடல்களே. ஆதிசங்கரர் உமையம்மை மீது ஆழமான பற்று கொண்டவர். ’சௌந்தர்ய லஹரி’ சிவனைக் காட்டிலும் அம்மையின் மீது அதிக ஈடுபாட்டுடன் பாடப்பட்டது. இப்பாடல்கள், திருமூலரது திருமந்திரத்தை ஒட்டி இயற்றப்பட்டவை என்பதை, இரு நூல்களையும் படிக்கும் எவரும் எளிதில் விளங்கிக் கொள்ள இயலும். இன்றைக்கும் இந்திய நிலப்பரப்பெங்கும், வழிபடப்படும் தெய்வங்கள் தமிழர் தெய்வங்களே! சிவன், திருமால், முருகன், காளி, கண்ணன், இராமன் ஆகிய தெய்வங்களை விட்டால், ஆரியர்களுக்கு வணங்குவதற்கு கடவுளே இல்லை. விநாயகர், தெய்வானை போன்ற வடக்கிந்திய கடவுளரும் கூட, சிவன் குடும்பத்துடன் இணைந்துதான் தெய்வநிலை அடைய இயலும் நிலை உள்ளது. ஆரியரது ஆதி தெய்வங்களான, பிரம்மன், அக்னி, வாயு ஆகியோருக்குக் கோயில்களே இல்லை. விதிவிலக்காக அங்கொன்றும் இங்கொன்றும் இருக்கலாம். இந்த நிலையில், ’இந்து’ எனும் சொல்லால் தமிழர்களை அழைப்பது எவ்வளவு பெரிய மோசடி என்பதைப் புரிந்துகொள்ளலாம். இன்றைக்கு இந்தியச் சட்டத்தின்படி, ‘எவரெல்லாம் கிறித்தவர் இல்லையோ, இஸ்லாமியர் இல்லையோ அவரெல்லாம் இந்து’ ஆவர். ’எதுவெல்லாம் சாம்பார் இல்லையோ, சட்னி இல்லையோ அதுவெல்லாம் கருவாட்டுக் குழம்பு’ என்பதுபோல. புத்தம், சமணம் ஆகிய வைதீக எதிர்ப்புச் சமயங்களும் கூட இந்துசமயத்தின் பிரிவுகள்தான் என்பதே சட்டம். சித்தர்களும், அந்தணர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், எண்ணற்ற மெய்யறிவாளர்களும் தவத்தால், வாழ்வியலால், ஆய்வுகளால் உணர்ந்து உரைத்த சிவனிய, மாலிய சமயங்களும் இந்து மதத்தின் பிரிவுகளே என்பது சட்டம். வைணவக் கோயில்களில் அர்ச்சகராவதற்கு சாதி ஒரு நிபந்தனையே இல்லை என்பதே வைணவ ஆகமத்தின் விதி. வைணவ ஆகமத்தின்படி சாதி கேட்பதே பாவம். சிவனிய ஆகம விதிகளும் பிராமணர் மட்டுமே அர்ச்சகர் ஆகலாம் என்று கூறவே இல்லை. ஆனால், ’இந்து’ என்ற போர்வையைப் போர்த்திக் கொண்டு, பிராமணர்கள் இந்த இரு கோயில்களையும் வசப்படுத்திக் கொண்டனர். உண்மையில், இக்கோயில்களைக் கட்டிய மன்னர்களும் இந்துக்கள் இல்லை, உள்ளே இருக்கும் கடவுளரும் இந்துக்கள் இல்லை, கோயிலை வடிவமைத்த சிற்பிகளும் இந்துக்கள் இல்லை. தமிழர்களுக்கென பல்லாயிரம் ஆண்டுகால வரலாறு உண்டு. அவ்வராலாற்றில் பிரபஞ்சத் தோற்றம், வாழ்வியல் குறித்த தத்துவங்கள் உண்டு. பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி உரைக்காத சமயமே தமிழர்களிடம் இருந்ததில்லை. நம்மைப் பொறுத்தவரை சமயம் என்றால், அதன் மெய்யியல் அணுவையும் அண்டத்தையும் பற்றிய அறிவியல் வழிப்பட்ட விளக்கம் தருவதாக இருக்க வேண்டும். தலையில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்ரியன் என்ற சுய நல வெறி பிடித்த கட்டுக் கதைகள் தமிழர்களால் எழுதப்பட்டவை அல்ல. இவற்றுக்கும் தமிழர்களுக்கும் வரலாற்று வழித் தொடர்புகள் ஏதும் இல்லை. சுருங்கச் சொன்னால், தமிழர்கள் இந்துக்கள் அல்லர்! ஆகவே, கோவிலுக்குச் செல்வது, சித்தர்களைப் போற்றுவது, ஓக முறையில் உடலை, மனதைப் பேணுவது, தவம் இயற்றுவது ஆகிய நடைமுறைகளைக் கடைப்பிடிப்போர், இவை அனைத்தும் தமிழர் மரபுப் பங்களிப்புகளே என்பதை உணர வேண்டும். இச் செயல்கள் அனைத்தும் இந்துத்துவ நடைமுறைகள் எனக் கூறுதலும் பழித்தலும், வரலாற்றுக்குச் சற்றும் பொருத்தமற்ற, அடிப்படையற்ற அவதூறு ஆகும். நாத்திகராக இருக்கலாம். ஆனால், தமிழர் சமயங்களின் பெருமிதங்களையும், வழிபாட்டு உரிமைகளையும் ’இந்து’ எனும் பிராமணிய அமைப்புக்குத் தாரை வார்த்துவிட வேண்டாம். ஏனெனில், இதைத்தான் கடந்த சில நூற்றாண்டுகளாக பிராமண அமைப்புகளும் செய்து வருகின்றன.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.