• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Nirupans

கருத்துக்கள உறவுகள்
  • Content Count

    49
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Nirupans last won the day on September 8 2011

Nirupans had the most liked content!

Community Reputation

1 Neutral

About Nirupans

  • Rank
    புதிய உறுப்பினர்
  • Birthday 02/29/1984

Contact Methods

  • Website URL
    http://www.thamilnattu.com/

Profile Information

  • Gender
    Male
  • Location
    நட்டாங்கண்டல், மல்லாவி, தற்போது யாழ்ப்பாணம்
  1. வணக்கம் எம் வேர்களே, எங்களின் மூலாதாரங்களே – எம் அன்பிற்குரிய தாய்த் தமிழக உறவுகளே! உங்கள் ஈகத்தை, நீங்கள் எமக்காய் ஆற்றி வரும் விடுதலைப் பணியை போற்றி மகிழ்கிறோம். பெருமையோடு பேசுகிறோம் – ஆனால் உங்களுக்கு கைம்மாறாய் ஏதும் செய்ய இயலாது வெட்கித் தலை குனிகிறோம்! தமிழனாய் பிறந்தோம் என்று ஓர் காலத்தில் பெருமை கொண்டிருந்தோம்! இன்று எம்மை வழி நடத்த தலைமை ஏதும் அற்ற நிலையில் தனித்துப் போய் திசைக்கு ஒன்றாய் சிதறிக் கிடந்து மனதுள் வெதும்பி அழுகின்றோம். என் செய்வோம் நாம்? நீங்கள் இருக்கிறீர்கள் எனும் துணிவில் வாழ்கிறோம்! எம் நிலையை எண்ணியெண்ணி கண்ணீர் வடிக்கின்றோம்! ஒட்டு மொத்த தமிழகமே மாணவர் சக்தியின் வடிவாய் எழுச்சி கொண்டிருக்கிறது. நாமோ எமக்குள் பல கதைகள் பேசி திசைக்கு ஒன்றாய் பிரிந்து கிடக்கிறோம்! அன்னைத் தமிழகமே! உந்தன் அன்புக் கரம் கொண்டு எம்மையும் ஒன்றாக்கு! எம்மையும் ஓரணியில் திரளச் செய்! எமக்குள்ளும் உனக்குள் இருக்கும் அதே ஒற்றுமையை ஊற்றி விடு!! மன்னியுங்கள் தமிழக உறவுகளே! நன்றி என்றோர் வார்த்தையைத் தவிர ஏதும் செய்ய இயலாத ஈனப் பிறவிகள் நாங்கள்! ஏன் என்றால் நாம் ஈழத் தமிழர்கள்! நாங்கள் சுய நலவாதிகள்! நாங்கள் சுறணையற்றவர்கள்! ****************************************************************************************************************************** இப்பொழுது உங்கள் பேரபிமானத்திற்குரிய இசையருவி வானொலி – இசையருவி எப்.எம் , புரட்சி எப்.எம் இல் அறிவிப்பாளினி மது தொகுத்து வளங்கும் “தமிழகத்தின் உணர்வெழுச்சி தொடர்பான” மாணவர் போராட்டம் தொடர்பான ஒரு சிறப்பு நிகழ்ச்சி! கேளுங்க! இந் நிகழ்ச்சி பற்றி உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள்! நடிகர் சிலம்பரசன், இயக்குனர் அமீர், இயக்குனர் உங்கள் கே.பாக்கியராஜ், காதல் சுகுமார், திரு.திருமதி ஆர்த்தி கணேஷ், பாடகர்கள், திப்பு, ஹரினி, கார்த்திக், T.L. மகாராஜான், கார்த்திக், ஹரிஷ்ராகவேந்திரா, திரு.திருமதி புஷ்பவனம் குப்புசாமி, அனித்தாகுப்புசாமி, கவிஞர்களான, உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், சினேகன், கவிதாயினி தாமரை, மற்றும் இசையமைப்பாளர் டி.இமான், தேனிசை செல்லப்பா உள்ளிட்ட பல திரையுலகப் பிரமுகர்கள் நேரடியாக இணைந்து உங்கள் புரட்சியில் பகிர்ந்து கொள்ளும் தமிழகத்தின் தற்போதைய உண்ணாவிரதப் போராட்டம் – மாணவர் சக்தியின் மான்பு மிகு போராட்டம் பற்றிய கருத்துப் பகிர்வு, மற்றும் தமிழகத்தின் முக்கிய ஊடகவியலாளர்களின் நேரடிச் செய்தித் தொகுப்புக்கள் உள்ளிட்ட பல திரையுலகப் பிரமுகர்கள் உங்கள் புரட்சியில் நேரடியாக இணைந்து பகிர்ந்து கொள்ளும் கருத்துப் பகிர்வு, இவர்களுடன் புலம் பெயர் தேச இளையோர்களின் உணர்வும் பகிர்வும்… இன்று மாலை இலங்கை – இந்திய நேரம் 05.00 மணிக்கு Rj மதுவின் சிறப்பு Evening Request நிகழ்ச்சியில் இச் செய்தியை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!! இச் செய்தியை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!! http://www.puradsifm.com/tamilians/
  2. யோக்கர்...நிகழ்ச்சி செய்தவரிடம் உங்கள் கருத்துக்களை சொல்லி வைக்கிறேன். நன்றி நண்பா
  3. வணக்கம் நண்பர்களே.. யாழ் குழுமத்தின் புதிய வடிவம் அருமையாக இருக்கிறது. தொடர்ந்தும் தனித்துவமான பாணியில் யாழ் தன் பணியை தொடர்ந்து இன்னும் அதிகளவான வாசகர்களின் உள்ளங்களில் இடம் பிடிக்கட்டும். தொடரட்டும் யாழின் பணி!
  4. நேரடி ஒலிபரப்பு: அன்பிற்குரிய வலையுலக உறவுகளே, வணக்கம் நலமா? நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் ஓர் பதிவின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பதிவுலக வரலாற்றில் ப்ளாக்கர் எப். எம் என்றோர் நேரடி ஒலிபரப்பினை காமெடி பதிவாக எழுதி மகிழ்ச்சி கொண்டாடிய நாம், இப்போது நாற்று பேஸ்புக் குழுமத்தினருடன் இணைந்து புரட்சி எப்.எம் எனும் இணையத் தள வானொலியினை ஆரம்பித்திருக்கின்றோம். (ப்ளாக்கர் எப்.எம் பதிவினை படிக்க விரும்புவோர் இங்கே கிளிக் செய்க) இணையத்தில் இசைப் புரட்சி செய்து, இதயங்களை இசையால் ஒன்றிணைக்கும் முயற்சியில் எம் புரட்சி எப்.எம் தற்போது தன்னுடைய பரீட்சார்த்த ஒலிபரப்பினை ஆரம்பித்திருக்கின்றது. உங்களுக்குப் பிடித்த பாடல்களை கேட்டு மகிழ, விவாத மேடையில் சொற்போர் புரிந்து கருத்துக்களை கருத்துக்களால் மோதிட, உலக நடப்பு விடயங்களை, நாட்டு நடப்புக்களை, திரை விமர்சனங்களை அறிந்து கொள்ள விரும்பின் நீங்கள் இணைந்திருக்க வேண்டிய இணைய வானொலி : புரட்சி எப்.எம். இணையத்தினூடாக மின்னூல் வெளியீடு, மற்றும் விவாத மேடை எனப் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் நாற்று பேஸ்புக் குழுமத்தினர் எங்கள் புரட்சி இணைய வானொலிக்கும் தமது ஆதரவினை நல்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு இந் நேரத்தில் உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தற்போது புரட்சி எப்.எம் இன் நிகழ்ச்சிகளுக்கு பிரதான அணுசரணை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் “உலகின் எப் பாகத்தில் நீங்கள் இருந்தாலும் உடனுக்குடன் உங்களின் கணினி பற்றிய சந்தேகங்களை அறிந்திட, புதிய கணினி தகவல் தொழில்நுட்பத் தகவல்களைப் பெற்றுக் கொள்ள உதவி புரியும் <a href="http://thamilsoft.com/" style="text-decoration: none; color: rgb(170, 12, 95); " target="_blank">"thamilsoft.com இணையத் தளத்தினர். அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இணையத் தளத்தில் மாத்திரமன்றி உங்களின் Apple, Android, Blackberry மொபைல்களில் புரட்சி இணைய வானொலியினைக் கேட்டு மகிழக முடியும் சொந்தங்களே. நிச்சயமா இந்தப் புதிய முயற்சிக்கு நீங்கள் அனைவரும் வழமை போலவே பேராதரவினை நல்குவீர்கள் எனும் நம்பிக்கையில் உங்களிடம் இந்த வானொலியினை அறிமுகப்படுத்துகின்றோம். புரட்சி இணைய வானொலியினைக் கேட்டு மகிழ இங்கே கிளிக் செய்யுங்கள்: ஸ்கைப் ஊடாக புரட்சி இணைய வானொலியுடன் இணைந்து கொள்ள: puradsifm பேஸ்புக்கின் ஊடாக பாடல் விரும்பி கேட்க இங்கே கிளிக் செய்யுங்கள்: உங்கள் வலைப் பதிவுகளில் புரட்சி இணைய வானொலியினை இணைத்து எமக்கு ஆதரவு நல்க விரும்பின் கீழே உள்ள கோடிங்கை உங்கள் ப்ளாக்கின் Side bar இல் இணையுங்கள் நண்பர்களே.. வானொலி Auto Play முறையில் தானியங்கியாகப் பாடிக் கொண்டிருக்க இந்த கோடிங்கை இணையுங்கள். <!-- BEGINS: AUTO-GENERATED Museter unlimited SHOUTcast Hosting Museter.com plans start at $6.95 CODE visit http://www.museter.com --> <object width="494" height="35" classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=6,0,40,0" bgcolor="#FFFFFF"><param name="flashvars" value="url=http://stardust.wavestreamer.com:3101/;&amp;lang=en&amp;codec=mp3&amp;volume=80&amp;introurl=&amp;autoplay=true&amp;traking=false&amp;jsevents=false&amp;buffering=1&amp;skin=http://www.museter.com/skins/greyslim/ffmp3-greyslim.xml&amp;title=Puradsifm&amp;welcome=WELCOME%20TO PURADSI" /><param name="wmode" value="window" /><param name="allowscriptaccess" value="always" /><param name="scale" value="noscale" /><param name="src" value="http://www.museter.com/ffmp3-config.swf" /><embed width="494" height="35" type="application/x-shockwave-flash" src="http://www.museter.com/ffmp3-config.swf" flashvars="url=http://stardust.wavestreamer.com:3101/;&amp;lang=en&amp;codec=mp3&amp;volume=80&amp;introurl=&amp;autoplay=true&amp;traking=false&amp;jsevents=false&amp;buffering=1&amp;skin=http://www.museter.com/skins/greyslim/ffmp3-greyslim.xml&amp;title=Puradsifm&amp;welcome=WELCOME%20TO PURADSI" wmode="window" allowscriptaccess="always" scale="noscale" bgcolor="#FFFFFF" /></object> <!-- ENDS: AUTO-GENERATED Museter unlimited SHOUTcast Hosting Museter.com plans start at $6.95 CODE visit http://www.museter.com--> வானொலியினை விரும்பிய நேரத்தில் மாத்திரம் கேட்டு மகிழ இந்த கோடிங்கை இணையுங்கள். <!-- BEGINS: AUTO-GENERATED Museter unlimited SHOUTcast Hosting Museter.com plans start at $6.95 CODE visit http://www.museter.com --> <object classid="clsid:D27CDB6E-AE6D-11cf-96B8-444553540000" width="180" height="60" bgcolor="#FFFFFF"> <param name="movie" value="http://www.museter.com/ffmp3-config.swf" /> <param name="flashvars" value="url=http://stardust.wavestreamer.com:3101/;&lang=en&codec=mp3&volume=65&introurl=&traking=true&jsevents=false&buffering=5&skin=http://www.museter.com/skins/mcclean/ffmp3-mcclean.xml&title=Puradsifm&welcome=WELCOME%20TO..." /> <param name="wmode" value="window" /> <param name="allowscriptaccess" value="always" /> <param name="scale" value="noscale" /> <embed src="http://www.museter.com/ffmp3-config.swf" flashvars="url=http://stardust.wavestreamer.com:3101/;&lang=en&codec=mp3&volume=65&introurl=&traking=true&jsevents=false&buffering=5&skin=http://www.museter.com/skins/mcclean/ffmp3-mcclean.xml&title=Puradsifm&welcome=WELCOME%20TO..." width="180" scale="noscale" height="60" wmode="window" bgcolor="#FFFFFF" allowscriptaccess="always" type="application/x-shockwave-flash" /> </object> <!-- ENDS: AUTO-GENERATED Museter unlimited SHOUTcast Hosting Museter.com plans start at $6.95 CODE visit http://www.museter.com--> iPhone, iTunes, Ipad ஆகிய Smart தொழில்நுட்ப சாதனங்களில் எமது வானொலியினை கேட்க விரும்பின் இந்த Application ஐ தரவிறக்கிக் Tamil Radio வரிசையில் Puradsifm எனத் தேடுங்கள்.... மறந்து விடாதீர்கள்.. இவ் வானொலியினை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். நன்றியுடன், தங்கள் ஆதரவை எதிர்பார்த்து நிற்கின்றோம் உறவுகளே.. இங்கனம், நாற்று குழுமத்தினர். http://www.thamilnattu.com/2012/07/blog-post.html
  5. இலங்கைத் தமிழிசை பற்றி அறியலாம் வாருங்கள்! [size=2] [/size][size=3] இணைய வலையூடே இவ் இடம் வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் தூயவனின் இந் நேர வணக்கங்கள்..நிகழ்ச்சியினை ஒலி வடிவில் கேட்க.... Thayaka Kattu 01 என்னைப் பெற்றெடுத்த பெற்றோருக்கும், எனக்கு கல்வி கற்பித்த ஆசான்களுக்கும், என்னை ஓர் அறிவிப்பாளராக்கும் வண்ணம் பத்திரிகைகளை வாசிக்கச் செய்த்து, உரத்துப் பத்திரிகை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி என் திறமைகளில் லயித்திருந்த, தற்போது இறைவனடி சேர்ந்திருக்கும் என் பாட்டனார் "திரு.வே.முத்துத்தம்பி" அவர்களுக்கும், எனது வானொலி நிகழ்ச்சிக்கு களம் அமைத்து கொடுத்த அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் மெல்பேண் கலையக பணிப்பாளர் "திருமதி சாந்தினி புவனேந்திரராஜா" அவர்களுக்கும், எனக்குச் சந்தர்ப்பம் அளித்த அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத் தாபனத்தின் நிலைய முகாமையாளர் & நிகழ்ச்சி முகாமையாளர் "திரு.ரோனி செபரட்ணம் அவர்களுக்கும்", ஏனைய அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபன உறுப்பினர்களுக்கும்என்னுடன் தோளோடு தோள் நின்று பங்களிப்புச் செய்யும் சக தோழமைகள் நாற்று நிரூபன் செல்வராஜா, சிவநேசன் தியாகாராஜா மாத்தியோசி வலைப்பதிவு மணி, மதுரன் ரவீந்திரன், நிகழ்வுகள் கந்தசாமி, காட்டான், மற்றும் தொடர்ந்தும் பங்களிப்பு நல்கும் அனைத்து உள்ளங்களுக்கும் இந் நேரத்தில் அடியேனின் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த வாரத்தின் திங்கட் கிழமை முதல் அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தினூடாகவும், இவ் இணையத்தளத்தினூடாகவும், iTunes ஊடாகவும் நீங்கள் "ஈழத்து மண் வாசனையினை, தாயகத்து உணர்வுகளை” தாங்கி வரும் தாயக காற்று நிகழ்ச்சியினைக் கேட்டு மகிழ முடியும். நிகழ்ச்சியினை நேரடியாக வாரந் தோறும் திங்கட் கிழமைகளில் அவுஸ்ரேலிய நேரம் காலை 9.00am இற்கு அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினூடாகவும், <a href="http://www.atbc.net.au/"'>http://www.atbc.net.au/" style="text-decoration: none; color: rgb(153, 0, 0); ">http://www.atbc.net.au/ எனும் இணையத் தளத்தின் வாயிலாகவும், உங்கள் கைகளில் தவழும் Smart Phone இல் உள்ள தமிழ் இணைய வானொலிகள் வரிசையில் Atbc (Australian Tamil Broadcastin Corporation வானொலி ஊடாகவும் கேட்டு மகிழ முடியும். இந் நிகழ்ச்சியின் மறு ஒலிபரப்பினை வாரந் தோறும் வெள்ளிக் கிழமைகளில் காலை 11.00am (அவுஸ்திரேலிய நேரம்) கேட்டு மகிழலாம் வாசக, நேய நெஞ்சங்களே. இந் நிகழ்ச்சியினை வானொலி ஊடாக கேட்க முடியாதவர்கள் இவ் இணையத் தளத்தினூடாக வாரந் தோறும் உங்களுக்கு வசதியான நேரத்தில் கேட்டு மகிழ முடியும். இல்லையே iTunes கீழ் வரும் இணைப்பினூடாக கேட்டு மகிழ முடியும். http://itunes.apple.com/au/podcast/thooyavan-thumpis-podcast/id529702575 ஒரு முறை iTunes இல் நீங்கள் Subscribe செய்தால் மறு முறை தானியங்கி முறையில் இந் நிகழ்ச்சியின் ஒலிப் பதிவினை உங்கள் iTunes Podcast பெட்டியினுள் பெற்றுக் கொள்ள முடியும். இந் நிகழ்ச்சியினைக் கேட்டவாறே.. நிகழ்ச்சி பற்றிய கருத்துக்களைப் பதிவு செய்திட மறந்து விடாதீர்கள்.. மீண்டும் இணைய வலையூடாகச் சந்திப்போம்.. அது வரை.. தோழமையுடன், தூயவன் தும்பிக்கையான். http://www.aussietamilpodcast.com/2012/06/blog-post_25.html[/size] இணையத்தில் படித்த பதிவினை உங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்
  6. ஆஸித் தமிழ் - அறிமுக தொகுப்பு! இந் நிகழ்ச்சியை ஒலி வடிவில் கேட்க... ஆஸித் தமிழ் நிகழ்ச்சியினை கேட்பதற்காய் வானொலியை நேசித்தபடி செவிப் புலனை வானொலியில் இணைத்து செயற் திறனை வருவாயீட்டலில் கொண்டிருக்கும் அனைத்து உறவுகளுக்கும் அன்பு கலந்த வணக்கம், நான் தூயவன், தும்பிக்கையான், இன்றைய தினம், காற்றலையின் வழியே, உங்கள் காதுகளை வந்தடைந்து கொண்டிருக்கும் முதல் நிகழ்ச்சியின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, உங்கள் ஆதரவும், ஆக்கபூர்வமான எண்ணக் கருத்துக்களும் துணையிருந்தால் என்றும் தொடரும் இந் நிகழ்ச்சி! ஆஸித் தமிழ் ; இது என்ன புது நிகழ்சியாக இருக்கிறதே என நீங்கள் நினைக்கலாம். ஆம் தாய் நிலத்தை விட்டுப் பறந்து வந்த புலத்து இளைஞனின் உள்ளத்து உணர்வுகளை தாங்கியதாக இந் நிகழ்ச்சி அமையவிருக்கின்றது. கொஞ்சம் வித்தியாசமான வடிவில் கொஞ்சும் தமிழ் கலந்து, ஒரு உரைச் சித்திரமாக, சினிமா விமர்சன மேடையாக, நம்மவர் படைப்புக்களை ஞானி நிலத்தே கொண்டு வரும் தேடல் முயற்சியாக இந் நிகழ்ச்சி அமையும் என்பதில் ஐயமில்லை. இந் நிகழ்ச்சிக்கு உங்களின் ஆக்கங்களையும், எண்ணக் கருத்துக்களையும், விமர்சனங்களையும் நீங்கள் மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கலாம். அனுப்பி வைக்க வேண்டிய முகவரிthooyavan.thumpi@gmail.com. ITunes, I pod, Ipad, மற்றும் இணையத் தளத்தில் கூகிள் தேடு பொறியில் Aussie Tamil Podcast எனத் தேடுவதனூடாகவும் வாரந் தோறும் இந் நிகழ்ச்சியினை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். இலகுவாக ஐ ரியூன்ஸில் இந் நிகழ்ச்சியினை Subscribe செய்வதனூடாக, வாரந் தோறும் தானியங்கி / Automatic முறையில் Update செய்தும் கொள்ளலாம். இணையத்தில் www.aussietamilpodcast.comஎனும் முகவரியூடாகவும் இந் நிகழ்ச்சியினை கேட்டு மகிழலாம். வாருங்கள் இனி நிகழ்ச்சிக்குள் போவோம்! இந்த வார நிகழ்ச்சியில் நாம் பார்க்கவிருப்பது, ஈழத்து இசை பற்றிய பார்வை. நீண்ட வழி நடந்து, உலகில் நிமிர்ந்த புராதன கலாச்சாரங்களுள் ஒன்றாக இருக்கும் எம் தமிழர்களின் இசை பற்றி இலகுவில் ஒரு மணி நேர நிகழ்ச்சியினுள் சொல்லி முடிக்க முடியாது. ஆனாலும் ஈழத்து இசை பற்றி சுருக்கமாக, உங்கள் விருப்புக்கேற்றவாறு என்னால் இயன்றவற்றை தொகுத்து ஓர் உரைச் சித்திரமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஈழத்து இசை எனும் அடை மொழியினுள் நாட்டார் பாடல்கள், பொப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், ஈழப் பாடல்கள் எனச் சிறப்பிக்கப்படும் புரட்சிப் பாடல்கள், திருத்தலங்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மீது பாடப்பட்ட ஆன்மிகப் பாசுரங்கள், இன்றைய இளம் சந்ததியினரால் முன்னெடுக்கப்படும் Hip pop, Rap இசை வடிவங்கள் வந்து கொள்ளும். ஈழத்தில் மீன்பாடும் தேன் நாடாம் மட்டு நகரில் இசையோடு கூடிய இனிமையான நாட்டார் பாடல்கள் வெளிவந்ததாக கூறுவார்கள். இது பற்றி தனியான ஓர் உரையாடலினையே நிகழ்த்தலாம். அவ்வளவிற்கு சந்தச் செறிவும். சங்கீதச் சுரமும் கலந்து சிந்தைக்கு விருந்து கொடுக்கும் வண்ணம் சிறப்பு மிக்க பாடல்கள் அவை. ஈழத்து மெல்லிசையில் என் சிற்றறிவிற்கு எட்டிய வரை, ஆரம்ப காலப் பாடல்களால எஸ்.கே. பரராஜசிங்கம் பாடிய காடு தழுவி வரும் கங்கையாளே எங்கும் ஓடி… எனும் பாடலும், உனக்கு தெரியுமா? நான் உன்னை நினைப்பது எனும் பாடலும் விளங்குகின்றது.. இதன் பின்னர் பி.முத்தழகு, கலாவதி, திருமலை பத்மநாதன், ரகுநாதன் போன்றோர் ஈழத்து மெல்லிசையின் இனிமையான அக் காலப் பயணத்திற்கு தூண்டு கோலாக விளங்கினார்கள். இரட்டையர்கள் திருமலைச் சந்திரன், ஆர். முத்துசாமி. ஆகியோருடன் பரா அவர்களும் இணைந்து ஈழத்து மெல்லிசை வளர்ச்சிக்கு அயராது உழைத்தார்கள். ஈழத்து மெல்லிசையின் தோற்றுவாய் என்பது மலையக நாட்டார் இலக்கியம், மலையக நாட்டார் பாடல்கள் ஊடாக பிறந்து கொள்கின்றது. முத்துசாமியும், ரொக்சாமியும் வந்தபின்னர் தான் எஸ்.கே பரராஜசிங்கத்தின் ஆர்வம் ஈழத்து மெல்லிசையின் மீது மையல் கொண்டது. ஈழத்து பொப் இசைக்கு பங்களிப்பு நல்கியது போலவே, ஈழத்து மெல்லிசைக்கு சகோதர மொழிக் கலைஞர்களின் பங்களிப்பு ஆரம்ப காலத்தில் கிடைக்கப்பெற்றது. இவர்களுடன் ராஜமனோகரி புலேந்திரன், மனோகரி சதாசிவம், நிலாமதி பிச்சையப்பா, சிறீதர் பிச்சையப்பா, வர்ண ராமேஸ்வரன், போன்றோரும் ஈழத்து மெல்லிசைக்கு பங்களிப்பு நல்கியவர்களாக விளங்குகின்றார்கள். இனி ஈழத்து பொப்பிசை பற்றிப் பார்ப்போமா? பொப் எனும் இசை வடிவம் இலங்கையில் போத்துக்கேயர்களினால் 15 ஆம், 16ஆம் நூற்றாண்டில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுபிரபலப்படுத்தப்பட்டதாக அறியமுடிகின்றது. இந்த வகையில் இலங்கை 1505ம்ஆண்டு போத்துக்கேயர்களால் கைப்பற்றப்பட்டு 1658ம் ஆண்டு வரைபோர்த்துக்கேயர்களால் ஆளப்பட்டது. அந்தக் காலங்களில் இலங்கையில் வாழ்ந்தஇந்து, பௌத்த சமயங்களைச் சேர்ந்த மக்களை கட்டாயமாக கிறிஸ்தவமதத்திற்கு மாறவேண்டும் எனப் போர்த்துக்கேயர் ஆணை பிறப்பித்திருந்தனர்.இதன் காரணமாக கோவில்கள், விகாரைகள் என்பன இடிக்கப்பட்டு, இவர்கள்கிறிஸ்தவ துதிகளைப்பாடவேண்டும் என வற்புறுத்தப்பட்டனர். மேற் கூறிய காரணங்களால் இடிக்கப்பட்ட ஆலயங்கள், விகாரைகள் இருந்தஇடங்களில் தேவாலயங்கள் கட்டியெழுப்பப் பட்டது. அப்போதைய இலங்கைமக்களை உடனயடியாக முழு கிறிஸ்தவர்களாக மாற்றுவது சிரமம் என உணர்ந்தபோத்துக்கேயர், தேவ ஆராதனைகளுக்கு தமது வழக்கத்தில் இருந்த பொப்இசையினை பயன்படுத்த தொடங்கினர். இங்கு போத்துக்கேயர்களால் 16ஆம்நூற்றாண்டில் விதைக்கப்பட்ட பொப் இசை அத்திவாரத்தின் சாயலே இன்றும்இலங்கையின் பொப் இசையில் பாரிய தாக்கத்ததை ஏற்படுத்திவருகின்றது.அன்றில் இருந்து ஊர்ப்பாடகர்கள், அண்ணாவியர்கள் வாயிலாக, சிலதமிழ் பொப் இசைப் பாடல்கள் செவிமடுக்கப்பட்டு வந்துள்ளன. அந்தக்காலங்களில்பெரும்பாலும், திருமண வீடுகளில் சில பாடகர்கள் இப்படியான பொப் பாடல்களைபாடிவந்திருந்தனர். “சின்னத்தம்பி சீமானாம் சிப்பிலி சந்தைக்கு போனானாம்” அங்கே ஒருத்தியை கண்டானாம் கும்மட்டம் தம்பட்டம் போட்டானாம்” என்று ஆரம்பிக்கும் பாடலும், அன்றைய போத்துக்கேய ஆட்சியாளர்களையே எதிர்ப்பது போன்று அமையும்பாடலான “என்ன பிடிக்கிறாய் அந்தோனி? எலி பிடிக்கிறன் சிஞ்சோரே! பொத்தி பொத்தி பிடி அந்தோனி!! பூறிக் கொண்டோடுது சிஞ்சோரே” போன்ற பாடல்கள் நாம் அறிந்த வகையில் போத்துக்கேயர் காலங்களிலேயேதமிழில் உருவாகிய பிரபலமான பொப்பிசைப் பாடல்கள். இவ்வாறான பல பாடல்கள், தமிழர்களின் சோம்பேறிக் குணத்தால் ஆவணப்படுத்தல் ஏதுமின்றி கால மாற்றங்களால் அழிந்துபோய்விட்டன. அதன்பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் (1815 -1948), மேலைத் தேச நாகரிகங்கள்அறிமுகப்படுத்தப் பட்டதும், ஒரு முழுமையான நிர்வாக அமைப்பு முறைவந்ததும், இசை வடிவத்தில் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தின.ஆங்கிலேயர்களின் பாண்ட், மொங்கட் ட்ரம், டிஸ், ட்டம்பற் ட்ரம்,போன்றவாத்தியங்கள்,இந்த இசையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தின. ஆங்கிலேயர்காலத்தில் இலங்கையில் பொப் இசை ஒரு புது வேகத்துடன் அரங்கேறஆரம்பித்தது. குறிப்பாக அந்த காலங்களில் பல கார்னிவேல்களில் (விசேடநிகழ்வுகள்), விசேட சிறப்பு நிகழ்சிகள், பீஸ்ட் வைபவங்கள் போன்றநிகழ்வுகளிலும், அப்போது இலங்கையில் பரபல்யம் பெற்ற “ருவிஸ்ட்” என்றஆட்டத்தின் போதும் இந்த பொப் இசை மேற்கத்தய இசைக் கருவிகளின்பக்கவாத்தியத்துடன் புது உத்வேகம் பெற்று அரங்கேறத் தொடங்கியது. அதன் பின்னர் மீண்டும் பல விழாகளிலும், திருமணம் போன்ற வீட்டுவிசேடங்களுக்கும் இந்த பாடல்கள் இசைக்கப்பட்டன. இலங்கையில் சுதந்திரத்தின் (1948) பின்னரான காலப் பகுதியில், யாழ்ப்பாணத்தில் பல புதியஇசைக் குழுக்கள் ஆரம்பமாகி மேற்படி பொப் இசையினை, வழங்கி மிகப்பிரபலமாகின. இதில் குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒருவர் கண்ணன் நேசன் அவர்கள்.இவ்வாறு 1950 களின் கடைசி பகுதிகளில் தமிழ் பொப் இசை இசைக் குழுக்களால்இசைக்கப்பட்டு மக்கள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கியது. இருப்பினும்தென்னிந்திய திரை இசைக்கு பலரும் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துகாரணத்தால் ஈழத்தில் தமிழ் திரையிசையின் தாக்கம் ஏற்றபட்ட காரணத்தினால்1960 களில் பொப் இசையினை மட்டுப்படுத்தப்பட்ட அளவே கேட்ககக் கூடியதாகஇருந்தது. அதன் பின்னர் இலங்கையில் நிகழ்ந்த பல அரசியற் குழப்பங்கள், 1958ம் ஆண்டுகலவரம், ஸ்ரீமா ஆட்சியில் ஏற்பட்ட பஞ்சம் என்பனவற்றால் மேற்படி தமிழ்ப் பொப்இசைக்கும் பஞ்சம் ஏற்படலாகிற்று. 1977 ஆம் அண்டு ஐக்கிய தேசியக் கட்சிஇலங்கையின் ஆட்சியை கைப்பற்றி இலங்கையில் திறந்த பொருளாதாரக்கொள்கையினை கொண்டு வந்து;அனைத்தையும் நவநாகரிகப்படுத்தி,மேலைநாட்டு கலாச்சாரங்கள், அப்படியே கொழும்புக்கு வந்து சேர்ந்த போது, தமிழ்பொப் இசை மட்டும் இன்றி சிங்கள பொப் இசையும் வீறு கொண்டெழுந்து என்றும்இல்லாத சிகரத்தை அடைந்தது. ஆம் இன்றும் நீங்கள் முணுமுணுக்கும். “சுராங்கனி சுராங்கனி” என்ற ஏ.ஈ.மனோகரனின் பாடல், “கள்ளுக்கடை பக்கம் போகாதே” என்ற நித்தி கனகரத்தினத்தின் பாடல், “குடத்தனையில குடியிருக்கிறது” என்ற நித்தியின் பாடல் போல் பல பாடல்கள்வெளியாகி மிகப் பெரும் வெற்றி பெற்றன. அவை இலங்கையில் மட்டுமன்றிஇலங்கை வானொலியில் ஒலிபரப்பட்டு இந்தியாவிலும் பெரும் தாக்கத்தைஎற்படுத்தி இந்தியாவிலும் வெற்றிக்கொடி நாட்டின. நித்தி கனகரத்தினைத்தொடர்ந்து ஏ.ஈ.மனோகரன்; அமுதன் அண்ணாமலை, எஸ். இராமச்சந்திரன்.வி.முத்தழகு, ஸ்டெனிஸ் சிவாநந்தன், அன்சார், என்.இமானுவேல் போன்றோர்ஈழத்து பொப்பிசைச் துறைக்கு வந்து சேர பொப்பிசை வளரத் தொடங்கியது. பல இசைக் குழுக்களும் காலப் போக்கில் பொப் இசையினுள் தடம் பதிக்க பலபாடல்கள் வெளிவரத் தொடங்கின. இக் காலம் ஈழத்து பொப்பிசையின் பொற்காலம் என்று கூட சொல்லலாம். அன்றைய காலங்களில் இலங்கையில்பொப்பிசை, நகைச்சுவை, மற்றும் சில கலைகள் இலங்கை மண்ணியற் பண்பு,இலங்கை மொழி வழக்கு, என்பவற்றை மட்டுமன்றி சமுதாயசீர்திருத்தங்களையும் முன்னிறுத்துவதாக இருந்தன என்றால் மிகையாகாது.இதற்கு "நித்தி கனகரத்தினத்தின் கள்ளுக்கடை பக்கம் பொகாதே!" என்ற பாடலைஉதாரணமாகச் சொல்லலாம். அந்தக் காலங்களில் இலங்கையில் குறிப்பாகயாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் பெரியவர்கள், படித்தவர்கள், பாமரர்கள் என்றபேதங்கள் இன்றி அனைவரும் கள்ளு அருந்துபவர்களாக இருந்தனர்.குறிப்பாகமாணவர்கள் பாடசாலைகளில் உயர்கல்வி கற்கும்போதும்,பல்கலைக் கழகங்களில்இருந்தும் கள்ளுக்கு தவறணைகளுக்கே நேரடியாக போபவர்களாகஇருந்தனர்.இந்த காலங்களிலேயே நித்தி கனகரத்தினத்தின் “ கள்ளுக்கடை பக்கம்போகாதே, காலைப்பிடித்து கெஞ்சுகின்றேன்” என்ற பாடல் வெளியானது. இதில் இன்னும் ஒரு சிறப்பு என்னவென்றால் இந்தப்பாடல் இலங்கை வானொலிமூலம் தமிழ் நாட்டிலும் பரவி, அப்போது முதலைமைச்சராக இருந்தஎம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால், தமிழக மதுவிலக்கு பிரச்சாரத்திற்காக தெரிவுசெய்யப்பட்டிருந்தமையாகும். பின்னர் இலங்கை பொப் இசைப் பாடல்கள்தென்னிந்திய தமிழ் திரைகளிலும் இடம்பெறலாயிற்று. 1977 அம் அண்டு, என்ற பாடலைஇளையராஜா உட்புகுத்தினார், இதனோடு நின்றுவிடாது. இந்த இலங்கை பொப்இசையை ஒட்டியதாக,http://www.youtube.com/watch?v=igd3BH45x6Y, “உப்புமா கிண்டிவையடி”, பட்டண்ணா சொன்னாரண்ணா, போன்ற பாடல்கள் ஒலிக்கத்தொடங்கின. இன்றும் கூட சுராங்கனி போன்ற பொப் பாடல்கள் மீள் கலவைஇசை வடிவில் (ரீமிக்ஸ்) சில திரைப்படங்களில் வருவதை நீங்கள் பார்த்தும், கேட்டுமிருக்க கூடும். எனினும், 1983 களின் பின்னதான இலங்கையின் இனப் பிரச்சினைகாரணமாக, கலைஞர்கள். பாடகர்களின் வெளியேற்றம், தென்னிந்தியசினிமா பாடல் மோகம் போன்ற பல காரங்களினால் இன்று இந்த இலங்கைபொப் பாடல்களின் வருகையானது குறைவடைந்து செல்கின்றது. இதற்குஉயிர் கொடுத்து அதை ஒலிபரப்பி தமது பாரம்பரியங்களை பேணிப்பாதுகாத்து அடுத்த தலை முறையிடம் கொண்டு செல்லும் நல்லமுயற்சினைச் செய்ய முடியாதவர்களாக இலங்கையிலுள்ள அரச, தனியார்வானொலிகள் விளங்குகின்றன. எனினும், மேற்படி பொப் இசையில்சிங்களவர்கள் இன்று சிகரத்தை அடைந்துள்ளனர். இலங்கை வானொலி அன்றைய காலத்தில் சந்தன மேடை என்றோர் சரித்திரப் புகழ் பெற்ற நிகழ்ச்சியினை நம்மவர் படைப்புக்களுக்காக ஒதுக்கியிருந்தது. ஆனால் இன்றோ தமிழ் ஊடகங்கள் வணிக நோக்கத்தினை அதிகம் எதிர்பார்த்து தமது பணியினைச் செய்யும் காரணத்தினால் தமிழிசை வளர்ச்சிக்கு அதிகளவில் பங்களிப்பு நல்கவில்லை என்றே கூறலாம். சக்தி எப்.எம் மாத்திரம் 2005-2006ம் ஆண்டு காலப் பகுதியில் நம்ம ஹிட்ஸ் என்றோர் நிகழ்ச்சியினை ஒலிபரப்பி வந்ததோடு, உள்ளூர் கலைஞர்களின் பேட்டிகளை ஞாயிறு தோறும் ஒலிபரப்பி, உள்ளூர் கலைஞர்களின் இசை வளர்ச்சிக்கு பங்களிப்பு நல்கியது. ஆனால் அந்த அரிய முயற்சி சிறிது காலத்திற்கே நிலைத்திருந்தது. சிங்கள ஊடகங்களும், பத்திரிகைகளும் அதற்குரிய கௌரவங்களைகொடுத்து அவர்களின் இசையினை ஊக்குவிக்கின்றன. எது எப்படியோ, இன்று புலத்தில் புலம்பெயர்ந்து வாழும் மேற்படி பொப்பிசைதிலகங்களை தொடர்பு கொண்டு வெளிநாடுகளில் வாழும் தமிழர்களாவதுதமது இலங்கைத் தமிழர்களின் தனிச் சிறப்பான பொப் இசையினை மீண்டும்துளிர்விக்க முயற்சி எடுக்க வேண்டும்! நிகழ்ச்சியில் அடுத்து நாம் கேட்கவிருப்பது ஈழப் பாடல்கள் பற்றிய அலசலாகும். ஒரு போராட்டத்திற்கு உந்து சக்தியாக இருப்பது, பிரச்சாரமாகும். போராட்டத்தின் வெற்றி தோல்விக்கு மனோதத்துவ ரீதியில் மக்களைத் தயார்படுத்துவதும் பிரச்சாரங்களாகும். ஈழப் போராட்டத்தின் முக்கியத்துவத்தினை மக்கள் மத்தியில் உணர்த்த விரும்பிய புலிகள் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் தமிழக கலைஞர்களின் உதவியோடு போருக்கு ஆட்சேர்க்கும் நோக்கிலும், போராட்டம் தொடர்பான கருத்துக்களை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நோக்கிலும் பாடல்களை ஒலி நாடாக்களில் வெளியிட ஆரம்பித்தார்கள். ஈழத்துப் புரட்சிப் பாடல்களின் கவித்துவ வெளிப்பாடு கவிஞர் புதுவை இரத்தினதுரை, உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தனின் பங்களிப்போடு ஆரம்பமாகின்றது. ஆரம்ப காலத்தில் T.M சௌந்தர்ராஜன், வாணிஜெயராம், பி.சுசீலா, மனோ, எம்.எஸ்.ராஜேஸ்வரி, வாணிஜெயராம், மலேசியாவாசுதேவன், ஆகியோரின் பங்களிப்புடன் ஆரம்ப கால ஈழப் பாடல்கள் உருவாக்கம் பெற்றன. ஈழப் போருக்குரிய ஆதரவு மக்கள் மத்தியில் பரவ, ஈழத்தில் இசைவாணர் கண்ணன், எஸ்,பி. ஈஸ்வரதாசன் ஆகிய இசை ஜாம்பவான்களின் பங்களிப்பு ஈழத்து இசையில் ஓர் இசைப் புரட்சியினை ஏற்படுத்தியது. பங்களிப்போடு எஸ்.ஜி.சாந்தன், போராளி கலைஞன் சிட்டு, ஜெயா சுகுமார், திருமலைச் சந்திரன், நிரோஜன், மணிமொழி, குட்டிக் கண்ணன், முதலிய பாடகர்கள் 1990களின் பின்னர் தோற்றம் பெற்று ஒரு தசாப்த காலத்திற்கு ஈழத்து இசையில் தம் திறமையினை வெளிப்படுத்தி வந்தார்கள். பின்னர் இசைப்பிரியன், இசையரசன், வசீகரன் போன்ற போராளிக் கலைஞர்களின் பங்களிப்பானது ஈழத்து இசையில் டிஜிற்றல் தொழில்நுட்ப இசைப் பாய்ச்சலுக்கு வித்திட்டது எனலாம். இசைக் குடும்பத்தின் வழி வந்த போராளி கலைஞன் இசைப்பிரியன் அவர்கள் ஈழத்து இசையில் பல புதிய பரிணாமங்களை, புதிய முறை ஒலிப் பதிவு நுட்பங்களை இசைக் கோர்வைகளை அறிமுகப்படுத்தினார். இக் காலத்தில் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம், செம்பருத்தி, ஆகியோருடன் பல போராளி கலைஞர்களும் பாடல் உருவாக்கத்திலும், பாடல் இசையமைப்பிற்கும் பங்களிப்பு நல்கினார்கள். சம காலத்தில் கவிஞர் காசி ஆனந்தனனுடன், தேனிசை செல்லப்பாவும் அவர் குடும்பத்தினரும் இணைந்து ஈழப் புரட்சிப் பாடல்களின் வளர்சிக்கு பங்களிப்பு நல்கினார்கள். எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஹரிகரன், சித்ரா, கார்த்திகை 27 பாடல் புகழ் ஓ.எஸ்.அருண், நித்தியஸ்ரீ மகாதேவன், திப்பு, சைந்தவி, கார்த்திக், மன்மதராசா புகழ் மாலதி, ரி.எல்.மகாராஜன், கோவை கமலா, கிருஷ்ணராஜ், ஜேசுதாஸ், சிறீராம், ஹரினி, நிவேதா, மகதி, புஷ்பவனம் குப்புசாமி, உன்னி கிருஷ்ணன், உன்னிமேனன், ஆகிய தாய்த் தமிழக கலைஞர்களும், இசையமைப்பாளர் இனியவன், கவிஞர் புலமை பித்தன், கவிஞர் அறிவுமதி, கவிஞர் வைரமுத்து போன்ற கவிஞர்களும் ஈழத்து இசைக்கு பங்களிப்பு நல்கினார்கள். 1990ம் ஆண்டில் மாற்றுக் கருத்தாளர்களின் எண்ணிக்கை பெருக, புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் தமக்கென்று தனித்துவமான வானொலிச் சேவையினையும், பாடல்கள் சிலவற்றையும் உருவாக்கினார்கள். அவற்றில் சிலவற்றினை ஆவணப்படுத்திட முடியவில்லை. 1985ம் ஆண்டு குடாநாட்டில் பிரபல்யம் பெற்றிருந்த சேரனின் கவி வரிகளில் உருவான, கண்ணனின் இசையில் அமைந்த மண் சுமந்த மேனியர் எனும் பல்கலைக் கழக மாணவர்களின் நாடகத்தில் இடம் பெற்ற “அதிகாலையில் யாழ் நகர் மீது பனி படர்கின்றது. பனை மர உயரமும், பண்ணை வெளியும் கண் தொடுமிடமெல்லாம் மறைகின்றது. தெருநிலமெங்கும் துவக்கொடு வாகனம் திரிகின்றது… எனும் பாடல் பிற்காலத்தில் ஈபிடிபி கட்சியினரின் பிரச்சாரப் பாடலாகவும் பயன்படுத்தப்பட்டது. ஈழத்தின் இளைய தலைமுறைக் கலைஞர்களால் மேற்கத்தைய இசையின் தாக்கத்தின் வெளிப்பாடாக Rap இசை, கானா பாடல்கள் 2000ம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து வெளிவரத் தொடங்கியது. இந்த அருமையான முயற்சிக்கு தளகர்த்தர்களாக நவகம்புர கணேஷ், கருப்பையா பிள்ளை பிரபகாரன் முதலியோரும், லைசியம் இசைக் குழுவினரும் துணை நின்றார்கள். பின்னர் டினேஷ் கனகரத்தினம், டிலுக்ஸன் ராஜேந்திரன், கந்தப்பு ஜெயந்தன், பேடி ஜே, ஆகிய கலைஞர்களும் ஈழத்து நவீன இசை வளர்ச்சிக்கு துணை புரிந்தார்கள். சிங்கள கலைஞர்களின் ஊக்கப்படுத்தலுடனும், ஆதரவுடனும் இலங்கையில் சமாதான காலம் எனச் சுட்டப்படும் 2002ம் ஆண்டின் பின்னர் கிருஷான், இன்பாஸ், பாத்யா சந்தோஷ், இராஜ், ரணிந்து ஆகியோரின் தயவில் ஒரு சில தமிழ்ப் பாடல்கள் தலை காட்டின. இந்த சிறு தொகுப்பிற்குரிய தகவல்களில் சில தவறுகள் இருக்கலாம். தயக்கமின்றி சுட்டிக் காட்டுங்கள். நீங்கள் மின்னஞ்சல் ஊடாக உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய முகவரி: thooyavan.thumpi@gmail.com இந் நிகழ்ச்சியினைப் படைப்பதற்கு துணை நின்ற வலைப் பதிவு எழுத்தாளர்கள் திரு.ஜனார்த்தனன் கந்தையா, சிவநேசன் தியாகராஜா, தனிமரம் நேசன் ஆகிய அன்பு உள்ளங்களுக்கு உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு, உங்களிடமிருந்து தற்காலிகமாக விடை பெற்றுக் கொள்கின்றேன். மீண்டும் மற்றுமோர் நிகழ்ச்சியின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை, இந் நிகழ்ச்சியினை இதுவரை நேரமும் கேட்ட உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடை பெற்றுக் கொள்வது, தோழமையுடன் தூயவன் தும்பிக்கையான். நன்றி, வணக்கம் நேயர்களே! மற்றுமோர் பொழுதில் வானலை வழியே சந்திப்போம்!! இந் நிகழ்ச்சியை ஒலி வடிவில் கேட்க... http://www.aussietamilpodcast.com/2012/05/blog-post.html நான் படித்து, கேட்டு ரசித்த விடயத்தை உங்களோடும் பகிர்ந்திருக்கிறேன்.
  7. எல்லோருக்கும் வணக்கமுங்க, எல்லோரும் நல்லா இருக்கீங்களா? நம்மில் பலருக்கு ஓர் தீராத மன அழுத்தம் இருந்துக்கிட்டே இருக்குமுங்க. அது தான் உடல் எடை பற்றிய பிரச்சினையாகும். நம்ம ஆன்றோர்கள் "கண்டதைக் கற்றவன் பண்டிதனாவான்" அப்படீன்னு ஓர் நன் மொழி சொல்லியிருக்காங்க. ஆனால் இன்றளவில் "கண்டதை தின்பவன் வண்டியனாவான் (தொப்பையனாவான்)" அப்படீன்னு நம்ம பசங்க அந்த வசனத்தையே மாத்திப்புட்டாங்க. இளைஞர்களில் கட்டிளம் பருவத்தை அடைந்ததும், நம் அழகை நாமே கண்ணாடியில் பார்த்து ரசிக்க ஆரம்பிப்போம். நான் அழகாக இருக்கிறேனா? என் உடல் ஸ்லிம்மாக இருக்கிறதா? உடற் கட்டமைப்பு சிக்ஸ்பேக் போல இருக்கா என்றெல்லாம் அடிக்கடி செக் பண்ணிக் கொள்வோம். ஆனால் இடை விடாது வாய்க்கு வஞ்சகம் பண்ணாத வம்சமாக எதையாச்சும் வாயினுள் போட்டு சப்பிக்கிட்டே இருப்போமுங்க. அட என் உடல் எடை அதிகரிக்குதே என ஆதங்கப்படும் சிலர் என்னா பண்ணுவாங்க என்றால் தினமும் தம் எடையை குறைக்கலாமே எனும் நம்பிக்கையில் பல எக்ஸசைஸ் எல்லாம் பண்ணுவாங்கோ. ஆனால் உடல் எடை கம்மியாகாதுங்க. ஏன்னா ஒவ்வோர் நாளும் செய்யும் உடற் பயிற்சியை விட ரெண்டு மடங்கு அதிகமா "அட நாம உடற் பயிற்சி பண்றோம் தானே! உடல் மெலிந்திடும்!" அப்படீன்னு மில்லில் அரிசி அரைப்பது போன்று வாயினுள் எதையாச்சும் போட்டு அரைச்சுக்கிட்டே இருப்போமுங்க. பொண்ணுங்க பதின்ம வயதினை அடைந்ததும் என்னா பண்ணுவாங்க என்றால்; சிம்ரன் மாதிரி சிக்கென்று இருக்கனும்! இலியானா போல என் இடுப்பு இசைவாக இருக்கனும்! அப்படீன்னு நெனைச்சு உணவினைக் குறைச்சுக்க ஆரம்பிப்பாங்க. பொண்ணுங்களில் அதிகமானவங்க பண்ற வேலை தம் அழகு மெருகேறனும்! உடல் எடை கம்மியாகனும் என நினைத்து உணவினை குறைச்சுப்பாங்களே அன்றி, எந்த மாதிரியான உணவினை உண்டா உடல் எடை கம்மியாகும் என்று நெனைச்சுக் கூடப் பார்க்க மாட்டாங்க. இந்தப் பதிவோட முக்கிய நோக்கம், உடல் எடையினை சீரான வகையில் மெயின்டேன் பண்ணிக்க உண்ண வேண்டிய உணவு வகைகளைப் பற்றி ஆராய்வது தானுங்க. மூன்று வேளை சாப்பிடுவதோ, ஐஞ்சு வேளை சாப்பிடுவதோ ஒரு பிரச்சினையே கிடையாதுங்க. ஆனால் எத்தனை கலோரி உணவினை உண்ணுகிறோம் எனும் விடயம் தான் எம் எடையினைத் தீர்மானிக்கும் முக்கிய விடயமாகும். ஆதலால் ஒவ்வோர் வேளையும் சம அளவிலான உணவினை தினந் தோறும் எடுப்பது தான் நமது எடையினைப் பராமரிக்க ஏற்ற செயலாகும். இப்போதெல்லாம் நம்ம ஊர்களில Oats எனப்படும் வாற்கோதுமை தானியப் பொருட்கள் கிடைக்குதுங்க. ஸோ...அதை வாங்கி, காலையில கொஞ்சப் பாலும் சேர்த்து கொஞ்சூண்டு சீனியும் போட்டு உண்டா காலை உணவுடன் நல்ல ஊட்டச் சத்து கிடைக்கும். ஓட்ஸ் வாங்க முடியாதவங்க காலை உணவாக, ஆரேஞ்ச் யூசும், ஆப்பிள் பழமும் எடுத்துக்கலாம். இல்லே வாழைப் பழமும் பாணும் சாப்பிடுக்கலாம். ஆனால் ஒரு முக்கியமான கண்டிசன் என்னா தெரியுமா? ஒவ்வோர் நாளும் நேரந் தவறாது சம நேரத்திற்கு நம்ம உணவினை எடுக்கும் பழக்கத்தினை நாம கைக் கொள்ளப் பழகிக்கனும். நேரந் தவறி உணவினை உண்ணுவோராக நாம் இருந்தால் கண்டிப்பாக நமக்கு அதிகமாக பசியெடுக்கும். இதனால் பசிக்குது அப்படீன்னு நெனைச்சு அளவு கணக்கின்றி சாப்பிடுவோமுங்க. மதிய உணவாக தமிழர்களின் பிரதான உணவான சோறுனை நீங்க எடுத்துக்கலாம். சோறுடன் முடிந்த வரை ஒரு கீரை வகை உணவினைக் கண்டிப்பாகச் சேர்க்கப் பழகிக்கனுமுங்க. கீரை வகையுடன், புரோட்டீன் சத்து நிரம்பிய உணவினையும், பச்சை காய்கறி வகைகளில் ஏதாச்சும் ஒண்ணையும் கண்டிப்பாக எடுத்துக்கனுமுங்க. இரவு உணவாக ரொட்டி அல்லது ஏதாச்சும் மென்மையான உணவினை எடுத்துக்கலாம். ஆனால் மதியமும் சோறு, நைட்டும் சோறும் அப்படீன்னு ஒரு நாளும் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்ணாமுங்க. வெளிநாட்டவர்களில் அதிகம் பேர் எப்பவுமே இளமையுடனும், அழகுடனும் இருப்பாங்க. அவங்க இளமைக்கும் அழகிற்கும் உணவுப் பழக்க வழக்கங்களும் ஒரு வகையில் காரணமாக இருக்குதுங்க. முடிந்த வரை கரட், ஆப்பிள், ஆரேஞ், வெள்ளரிக்காய், மற்றும் பச்சைக் காய்கறிகளை சமைக்காது உண்ணப் பழக்கப்படுத்திக் கொள்ளனுமுங்க. அது தான் நமது உடலில் நிறைவான ஊட்டச் சத்துக்களைப் பெறுவதற்கு துணையாகவும் இருக்குமுங்க. அப்புறமா கீரை வகைகளை பச்சையாக (சமைக்காது) பாணுடன் சாண்ட்விச் போன்று உண்பதையும் மெது மெதுவாக நாம பழக்கப்படுத்திக் கொள்ளலாம். காலையில் அல்லது மாலையில் நாம ஒரு பதினைந்து நிமிடம் நடப்பதையோ அல்லது ஓடுவதனையோ வழக்கப்படுத்திக் கொள்ளனுமுங்க. அப்புறமா, ஒவ்வோர் நாளும் அதிக தண்ணீர் (குடி தண்ணீர்) குடிப்பதனையும் தவறாது கடைப்பிடிக்கனுமுங்க. இந்த முறையினை தவறாது செய்து பாருங்க. கண்டிப்பாக உங்கள் உடல் எடையினைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீங்க. இன்னோர் முக்கியமான மேட்டர் சொல்ல மறந்திட்டேனுங்க. முடிந்த வரைக்கும் இயற்கையான (Organic Or Free Range Foods) உணவுகளையே உண்ணப் பழகிக் கொள்ளனுமுங்க. ஹார்மோன் உணவுகளை உண்ணுவோர் நம்மில் அதிகம் பேர் உள்ளார்கள். ஹார்மோன் உணவுகள் (வைற் லைற்கோர்ன் கோழி மற்றும் சில பழ வகைகள்) உண்ணும் வரைக்கும் உடல் எடையில் மாற்றம் தெரியாதுங்க. ஒரு ரெண்டு வருசத்திற்கு அப்புறமா உங்கள் எடை சிக்கென்று எகிறியிருப்பதை உணருவீங்க. அப்புறமா ஐயோ! நான் குண்டாகிட்டேனே! அப்படீன்னு வருத்தப்படுவதால் எந்த வித பலனுமில்லைங்க. ஆகவே நன்கு திட்டமிட்டு, வருமுன் காப்பதே உங்கள் வளமான உடல் அழகினை நிறைவாகப் பேண உதவும். மாசத்தில் ஒருவாட்டி என்றாலும், உங்கள் உடல் எடையினைச் செக் பண்ணி, எடையில் மாற்றம் இருந்தால் நான் இந்த மாதம் என்னா செஞ்சிருக்கேன் அப்படீன்னு உங்களை நீங்களே சுய பரிசோதனை செஞ்சுக்க மறந்திட வேணாம். சுவீட் அதிகமுள்ள உணவுகளை உட் கொள்ளுவதை மெது மெதுவாக குறைச்சிட்டு வரப் பழகிக்கனுமுங்க. இவை தான் ஊதிப் போன உடம்பை ஊசி போல மாத்த ஏத்த வழிகளாகும். மிகவும் முக்கிய குறிப்பு: ஒவ்வோர் உணவுப் பொருட்களையும், ரெடிமேட் உணவுகளையும் வாங்கும் போது, அந்த உணவுகளில் உள்ள கலோரி அளவினையும், கொழுப்பின் அளவினையும், மற்றும் இதர ஊட்டச் சத்துக்களின் அளவினையும் கவனித்து வாங்குவதை வ(-ப)ழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். http://www.thamilnattu.com/2012/04/blog-post.html
  8. மன்னிக்கனும் நண்பா, நான் இப்போது ஊரில் இல்லை.
  9. தங்களின் இனிய கருத்திற்கு நன்றி நண்பரே
  10. மல்லாவி மத்திய கல்லூரியின் மயில்வாகனம் மண்டபம் அரங்கு நிறைந்த பார்வையாளர்களால் நிரம்பியிருந்தது. கண்களில் நீர் சொரிய உணர்ச்சிப் பெருக்கோடு மக்கள் குழுமியிருந்தனர். தன் மன உணர்வுகள் யாவற்றையும் ஒன்று திரட்டி விடுதலை வீரர்களின் பெருமையினையும், தியாகத்தினையும் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான் சுடரவன். "மானத்தின் திருநாள் கார்த்திகையே! மாவீரத்தின் பெரு நாள் கார்த்திகையே! கார்த்திகை மாதம் கறுப்பு. இந்த கார்த்திகை மாதம் நெருப்பு! கண்ணுக்குள்ளே வைத்துக் காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்! அந்த புண்ணியர் நெஞ்சிலே பூத்ததோர் கனவினை எண்ணத்திலே வளர்த்தோம்!" என மாவீரர் பெருமை சொல்லும் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவி வரிகளை தன் சிறப்புரைக்கு வலுச் சேர்க்கும் வகையில் உள்ளடக்கிப் பேசிக் கொண்டிருந்த சுடரவனின் கண்களின் பார்வையானது நெஞ்சிலே கொதித்துக் கொண்டிருந்த தீப்பிளம்பிற்குச் சத்தமிடாது விடை கொடுத்தவாறு ஓரிடத்தில் போய் நிலை கொண்டது. குவியப் புள்ளிகளை ஒன்று திரட்டி கார் மேகக் குழல் வண்ணம் கொண்ட கண் இமைகளின் பார்வைப் புலனிற்கு வேகம் ஊட்டி பிருந்தாவின் மை விழியில் போய் சுடரவனின் மெய் விழிகள் இரண்டும் முட்டி மோதின. தன் ஆசை மச்சாளை இன்றைக்கு இவ் இடத்தில் சந்திப்பேன் என கனவிலும் கூட நினைக்காதவனாகத் தன் பார்வைப் புலன்களினூடே சொற்களைத் தொலைத்துத் தன் பேச்சினை முடித்தான்.மாவீரர்களின் பெற்றோர்களது மதிப்பளிப்பு நிகழ்வு நிறைவு பெற்றதும் ஓடோடிச் சென்று பிருந்தாவின் அருகிலே நிற்கலானான். அவள் உள்ளத்தின் உணர்வைப் புரிந்து கொண்டவனாக; "என்னை மன்னித்துக் கொள்ளும் பிருந்தா!" என அக்கம் பக்கம் யாராச்சும் பார்க்கிறார்களா எனப் பார்த்து விட்டு மெல்லிய ஸ்வரத்தில் மென்மையாய் உரைத்தான். "ஏன் உங்களுக்கு என் மேல அன்பு இல்லாத காரணத்தினால் தானே என்னையும் மதிக்காது, என் காதலையும் நேசிக்காது என்னிடம் ஒரு வார்த்தை கூடச் சொல்லாது இயக்கத்திற்கு ஓடிப் போனனீங்க" எனச் சீழ் படிந்த புண்ணை மொய்த்து இரைச்சல் ஒலியெழுப்பும் கொசுப் போல காதினுள் சிணுங்கினாள். "இன்று மாலை லீவில வீட்டிற்கு வருவேன், கண்டிப்பாக உன்னைச் சந்திக்கனும், நிறைய விடயங்கள் பேசனும். கண்டிப்பாக வந்திடு" எனக் கூறிவிட்டு தற்காலிகமாகப் பிருந்தாவிடமிருந்து பிரிந்தான் சுடரவன். மாலை நேரம். யானைகள் கூட்டமாக வந்து கொத்தம்பியா குளத்தில் நீர் அருந்தி விட்டுச் ஓசைப் படாமல் மெதுவாகச் செல்லும் நேரம். பாலியாற்றுப் பாலப் பக்கம் ஆள் அரவமற்று கூட்டம் குறையத் தொடங்கும் இளம் மாலைப் பொழுது. இளையவர் - காதலர்கள் என தம் மனம் விட்டு மகிழ்ச்சி பொங்கிடப் பேசி மகிழ்வதற்கேற்ற இனிய பொழுதாய் இயற்கைச் சூழல் இசைந்திருக்கும் வேளையில் சுடரவன் பிருந்தாவின் வருகைக்காய் காத்திருந்தான்."நிலவு வந்து பொழியும் நேரம் நீ வரவில்லை.நான் நீண்ட நேரம் காத்திருந்தேன் பதில் தரவில்லை" எனப் பாடிக் கொண்டிருக்கனும் போல அவனுக்குத் தோன்றியது. பாடியவாறு இருந்தான். தன் பார்வைப் புலனுக்குள் எங்காவது ஓர் திசையிலிருந்து பிருந்தா ஒட்டிக் கொள்கிறாளா என ஏக்கம் கொண்டு காத்திருந்தான். லுமாலா சைக்கிளின் பெடலில் மெதுவாக கால்களை ஒட்டி வைத்து இறுக்கி மிதித்து, கூந்தலோ காற்றினில் ஆட்டம் காண அவனை நாடி வந்தாள். அழுகையுடன் பேச்சினை ஆரம்பித்தாள். "பிருந்தா ஏன் அழுறீங்க? நான் என்ன வேணுமென்றே செய்தனான்? காலத்தின் கட்டாயம் இப்படி என்னையும் ஓர் போராளியாக ஆக்கி விட்டது. உங்க கூட முதல் நாள் மாலை பேசி விட்டு உங்களுக்கு சொல்லாது இயக்கத்திற்கு போனது என்னோட தவறு என்று நீங்க நினைச்சால் நான் என்ன செய்ய முடியும்? எனக்கு இப்பவும் உங்கள் மேல காதல் இருக்கு. ஆனாலும் தாயகத்தின் மேலான காதல் குறையவில்லை. என்றைக்கு ஓர் நாள் எங்களின் நிலம் விடிகிறதோ! அப்போது நானும் மகிழ்ச்சிக் கடலில் உங்களைத் தேடி வந்து என்னோட அம்மா அப்பா - அதான் உங்க அத்தை மாமாவிடம் பேசி உன்னைத் திருமணம் செய்வேன் எனச் சிரித்தபடி சொன்னான். அவளோ வேதனையில் துடித்தாள். வன்னியில் வளம் நிறை சோலைகளில் சுடரவனும் தானும் சுக ராகம் பாடி மகிழ்வதாக கண்ட கனவுகள்; அவனுடன் வாழ்ந்து தன் அன்னை மண்ணில் மகிழ்ந்திருப்பதாக கட்டிய கோட்டைகள் யாவும் உடைந்து விடுமோ என அஞ்சினாள். திடீரென ஓர் சொல் அம்பினைத் தொடுத்தாள். "அப்போ நீங்க சண்டைக்கெல்லாம் போக மாட்டீங்க இல்லே?” சுடரவன் மனதுக்குள் ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு "நான் சண்டைக்குப் போற ஆளா? உமக்கு என்னோட மூஞ்சியைப் பார்த்துமா தெரியலை?" எனக் கேலி செய்தான். இருவரும் தம் மீது காதல் எனும் நெருப்பு பற்றிக் கொண்டதைப் பகிர்ந்து கொண்டார்கள் போது இருந்த மன நிலையினை மீட்டிப் பார்த்தார்கள். செஞ்சோலைப் படுகொலைகளும், பச்சிளம் குழந்தைகள் உடல் துடி துடித்து இறந்த நிகழ்வுகளும் தன்னையும் போராட்டக் களத்தில் பங்கெடுக்க வேண்டும் எனும் உணர்விற்கு உந்துதலாய் அமைந்ததாக வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருந்தான் சுடரவன். பொழுது இருட்டிக் கொண்டிருந்தது. மாலைக் கருக்கல் நீங்கி இரவுப் பொழுதினை இயற்கை அன்னை அணைத்துக் கொள்ளும் நேரத்தில் சுடரவனை விட்டுப் பிரிய மனமில்லாதவளாக இறுதியாக ஒரேயொரு கேள்வியினைச் சின்னக் குழந்தை போன்று செல்லமாய் கேட்டாள் பிருந்தா. "அப்போ எப்ப நீங்க மீண்டும் போறீங்க என்று கேட்டாள்?" அவன் மௌனமாய் சில விநாடிகள் தலை தாழ்ந்து விட்டு பதிலுரைத்தான். "இப்போது வன்னிக் களமுனை நிலமை உங்களுக்குத் தெரியும் தானே. அவர்கள் எப்போது அழைத்தாலும் தான் போக வேண்டும்" எனக் கூறி கண்களிலிருந்து நீர் துளிகள் எட்டிப் பார்க்கையில் விடை பெற்று வீடு வந்து சேர்ந்தான். அடுத்த சந்திப்பில் சுடரவனைக் கண்டு சுகம் விசாரிக்க முடியலையே எனும் ஏக்கம் மனதை வாட்ட தவித்துக் கொண்டிருந்தாள் பிருந்தா. சில மாதங்களின் பின்னர் ஒரு நாள் காலை புலிகளின் குரல் வானொலியின் செய்தி அறிக்கையினைத் தொடர்ந்து இடம் பெற்ற வீரச் சாவு அறிவித்தலைக் கேட்டு அதிர்ச்சியுற்றாள். வீட்டுக் கதவினைத் தாழ் போட்டு விட்டு விம்மி அழுதாள். காலத்தின் கட்டளைக்கு அமைவாக களப் பணியில் தன் காதலன் உயிர் துறந்து விட்டானே எனும் சேதி மனதை வாட்ட கொஞ்ச நாள் வாடிப் போயிருந்தாள். சில தினங்களின் பின் அவளது ஊரான யோகபுரத்திற்குப் பரப்புரைக்காகப் போராளிகள் சிலர் வந்திருந்தார்கள். மக்களோடு மக்களாக அவளும் போய் நின்றாள். அப்போது கவிஞர் புதுவை இரத்தினதுரையின் "தாய் நிலத்தை காதலிக்கும் தளிர்கள் இருக்கும் வரை, பாய் விரித்து எம் தேசம் படுக்காது" எனும் கவிதையினைக் கேட்டும் மனம் இரங்காதவளாக, ஆட்சேர்ப்பிற்காக போராளிகள் நிகழ்த்திக் கொண்டிருக்கும் பிரச்சாரத்தினால் கூட ஆட் கொள்ளப்படதாவளாக அவன் நினைவில் மூழ்கியிருந்தாள். சுடரவன் இல்லாத வேளையில் தாய் நிலத்தின் மீது பற்றுக் கொள்ள வேண்டிய காதலோ, நீங்கா இடமாய் நெஞ்சில் நிழலாடும் காதலன் மீது இன்னமும் ஒட்டிக் கொண்டிருந்தது. நாட்கள் நகர்ந்தன. காலவோட்ட மாற்றத்தில் வன்னி மண் தன் வாசலினுள் நுழைந்த பகை வீரர்களை விருப்பமின்றி வெறுப்புடன் உள் வாங்கிக் கொண்டிருந்தது.பல தடவை புலிகள் ஆட்சேர்ப்பு நிகழ்த்துகையிலும் மௌனமாய் இருந்தவள் தன் பெற்றோரை எறிகணை வீச்சில் பலி கொடுத்த பின்னரும் ஆதரவுக் கரம் நீட்ட யாருமே இல்லாதவளாக தனித்திருந்தாள். போராட்டத்தில் இணைய மனமின்றி இறுமாப்போடு இருந்தாள். புலிகள் வசமிருந்த பிரதேசங்கள் யாவும் இராணுவத்தினர் வசம் வீழ்ச்சியுற்றதைக் கண்ணுற்றுக் கூனிக் குறுகிப் போனாள். மக்களோடு மக்களாக தன்னையும் பாதுகாக்கும் நோக்கில் இராணுவத்தினரின் சொற் கேட்டு இராணுவக் கட்டுப் பாட்டுப் பக்கத்திற்குள் நடந்தாள். அவமானம், வெட்கம், கண் முன்னே நிகழ்ந்த அவலங்கள் யாவும் அவன் நினைப்பிற்குப் பதிலாக மனத் திரையில் நிழலாடிக் கொண்டிருக்கையில் தனக்கு அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதைக் கூட அறியாதவளாக நடக்கத் தொடங்கினாள். இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினுள் உள்ள அகதி முகாமினுள் செல்வதற்காக மக்களோடு மக்களாக நின்றவளின் அருகே இராணுவ வீரன் ஒருவன் வந்து கொச்சைத் தமிழில் சொன்னான் "ஒயா லக்ஸன நங்கி. ( நீங்க ரொம்ப அழகனா தங்கை) எனச் சொல்லி நேரே போகுமாறு சைகை காட்டினான். பிருந்தா சுற்றிவர கறுப்பு நிறத் துணி கொண்டு (படங்கு) கொண்டு அடைக்கப்பட்ட கூடாரத்தினுள் நுழைந்தாள். அவள் மனம் மீண்டும் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் "தாய் நிலத்தை காதலிக்கும் தளிர்கள் இருக்கும் வரை! பாய் விரித்து எம் தேசம் படுக்காது" எனும் வரிகளை அசை போடத் தொடங்கியது. கவிஞர்களும் கவிதைகளும் காலத்தால் அழிவதில்லை! http://www.thamilnat...-post_3619.html
  11. இளகிய மனமுடையோருக்கும், சிறுவர்களுக்கும் இப் பதிவு உகந்தது அல்ல! இணையத்தினூடே, இப் புதிய தொடரைப் படிக்க வந்திருக்கும் அனைவருக்கும் இந் நேர வணக்கம்; உலகில் இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட வெள்ளையின மக்களால் ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூஸிலாந்து எனப் பல தேசங்கள் உருவாக்கப்பட்டன. அங்கிருந்த பூர்வீக குடிகள் பலர் வெள்ளையர்களின் அத்துமீறல்களினால் அழிக்கப்பட்டார்கள். அவர்கள் சில பகுதிகளில் வாழ்ந்ததற்கான எச்சங்களும் அழிக்கப்பட்டன. ஆனாலும் பிற்காலத்தில் ஜனநாயகப் பண்பாட்டிற்குள் தம்மை உட்புகுத்திக் கொண்ட வெள்ளையின மக்கள் திருடப்பட்ட சந்ததியின் வரலாறுகள் வருசக் கணக்கில் அழிவுறாது இருக்க வேண்டும் என்பதனை உணர்ந்து ஆவணப்படுத்தல்களில் ஈடுபட ஆரம்பித்தார்கள். சக மனிதர்களையும் மனித நேயம் கொண்டு மதித்தார்கள்! இலங்கையில் வாழும் ஈனச் சிங்கள இனவெறி ஆட்சியாளர்களைத் தவிர்த்து, உலகில் வாழும் பல்லின மக்களிடம் ஓர் பண்பாடு உண்டு. எதிர் நாட்டுப் போர் வீரனாயினும் (தமக்கு எதிரி என்றாலும்), அவன் களத்தில் உயிர் துறந்தால், இராணுவ மரியாதையுடன் கல்லறையில் புதைக்கப்பட்டு, கல்லறை கட்டப்பட வேண்டும் எனும் உயர்ந்த மனிதாபிமானக் குணம் உலகில் வாழும் பல்லின மக்களிடம் உண்டு. ஆனால் எம் நாட்டில் வீரர்களை நினைவு கூரக் கட்டப்பட்ட கல்லறைகளை வேரோடு அழிக்கும் இனவாத இராணுவத்தின் இரக்கமற்ற பண்பாடு தான் இன்று எஞ்சியிருக்கிறது. போர் வீரர்களின் கல்லறைகள் யாவும் வேரோடு அழிக்கப்பட்டிருக்கும் இடத்தில் போர் நிகழ்ந்த பகுதிகளில் இராணுவத்தால் அரங்கேற்றப்பட்ட மனித உரிமை மீறல்கள் எப்படி ஆவணப்படுத்தப்பட்டிருக்கும்? அவற்றைப் பற்றி வாய் திறந்து பேசத் தான் சிங்கள இராணுவம் அனுமதிக்குமா? உலக நாடுகளில் இடம் பெற்றிருக்காத இணையற்ற சித்திரவதைகள், துன்புறுத்தல்கள், கொடூரங்கள், பாலியல் கொடுமைகள் இலங்கையின் போர் சார்ந்த பிரதேசங்களிலும், தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. ஏன் தென்னிலங்கையின் சிறைக் கூடங்கள் பலவற்றிலும் தமிழன் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக இப்படியான பல கொடூரங்கள் அரங்கேற்றப்பட்டிருக்கின்றன. தமிழன் வாழ்ந்தான், இலங்கையில் வாழ்ந்து வருகின்றான் எனும் வரலாற்றுத் தடயங்களை அழித்து, எம்மை ஓர் இரண்டாந் தரக் குடிமக்களாக பிரகடனப்படுத்தி, சிங்களனின் கால்களைத் தொழுது நாம் அனைவரும் வாழ்வதனைத் தான் சிங்கள தேசம் விரும்புகின்றது. இந் நிலையில் ஈழத்தில் வாழும் மக்களால் போருக்குப் பின்னரான நிலமைகளை, போருக்கு முன்னரான கொடூரங்களை இலகுவில் தொகுத்து ஆவணப்படுத்திட முடியாத நரக நிலை சிங்கள ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சிங்களனின் சிறைக் கூடங்களின் யன்னல் கம்பிகளினுள்ளும், சுவர்களுக்கு இடையேயும், சிறையின் அடித்தளத்திலும் (நிலத்திற்கு கீழும்) எம் சந்ததிகளின் பல வரலாற்று எச்சங்கள் வெளிவராத உண்மைகளாகப் புதைந்து போயிருக்கின்றன. சிங்களனின் சித்திரவதை முகாம்: "ஈழத்திற்காய் உரமான எலும்புகளின் எச்சங்கள்!"தொடரூடாக ஈழத் தமிழர்களின் பூர்வீக வரலாற்றினையும்,"ஈழப் போரியலில் இதுவரை வெளிவராத மர்மங்கள்!" தொடரூடாக இறுதி யுத்தத்தினைத் திசை திருப்ப புலிகள் கையாண்ட தந்திரோபாய நகர்வுகளையும் உங்களோடு என் வலைப் பதிவின் வாயிலாகப் பகிர்ந்திருக்கிறேன். தற்போது கொஞ்சம் வித்தியாசமாக சிங்களனின் சித்திரவதை முகாம் எனும் தொடரினூடாக உங்கள் அனைவரையும் சந்திக்க வருகின்றேன். இத் தொடரில் இடம் பெறும் சம்பவங்கள் யாவும் இதுவரை ஈழத்தில் சிங்களவர்களினால் இருண்ட சித்திரவதைக் கூடங்களிற்குள் தமிழினத் துரோகிகளின் துணையுடன் அரங்கேற்றப்பட்ட கொடூரங்களினை உள்ளடக்கிய உண்மைச் சம்பவங்களாகவே இருக்கும். தற்போது உயிரோடு வாழும் உறவுகளின் பெயர்களும், இச் சம்பவங்களோடு தொடர்புபட்ட உறவுகளின் பெயர்களும் பெயர் மாற்றம் பெற்று உங்களை நாடி வரும். சிங்களனின் சித்திரவதை முகாம் தொடரானது ஒவ்வோர் பகுதியிலும், வெவ்வேறுபட்ட கதைகளையும், சம்பவங்களையும் உள்ளடக்கியிருக்கும். அனைத்துச் சம்பவங்களையும் ஆண்டு ரீதியாகத் தொகுத்து தருவதைத் தவிர்த்து எழுமாற்றாக பல உண்மைச் சம்பவங்களை ஒவ்வோர் பாகங்களிலும் வெவ்வேறு பிரதேசங்களின் நிகழ்வுகளை உள்ளடக்கியதாக வழங்கலாம் எனத் தீர்மானித்துள்ளேன். இச் சம்பவங்கள் ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும், பல்வேறுபட்ட நபர்களிடமிருந்தும், பத்திரிகைச் நிருபர்களிடமிருந்தும் திரட்டப்பட்ட தொகுப்பாக அமைந்து கொள்ளும். இன்றைய இலங்கையின் அரசியற் சூழ் நிலையினைக் கருத்திற் கொண்டு, இச் சம்பவங்களைத் தொகுத்து தருபவர்களின் பெயர்களை வெளியிடுவதனைத் தவிர்க்கின்றேன். ஒவ்வோர் பகுதியும் படிக்கும் வாசகரைக் கவரும் வண்ணம் அமைந்து கொள்ளும் என்பதில் ஐயமில்லை. சில சம்பவங்களைப் படிக்கையில் உங்களால் நம்ப முடியாதிருக்கும். ஏதோ ஆங்கிலப் படத்தினைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் இவை எல்லாவற்றையும் கடந்து தான் ஈழத்தின் ஓர் சந்ததி இன்றும் தன் வாழ்வைச் சிறைக் கூடங்களில் கழித்து வருகின்றது என்பது மட்டும் யதார்த்தம்! இனி எப்போது சிங்களனின் சித்திரவதை முகாம் தொடர் வரும் எனும் ஆவல் உங்களுக்கு இப்போது எழுந்திருக்கும் அல்லவா? இதனைத் தீர்மானிக்கப் போவது வாசகர்களாகிய நீங்கள் தான். அன்பு உறவுகளே! வாரத்தில் எத்தனை நாட்களுக்கு இந்தப் புதிய தொடரைப் பதிவாக எழுதலாம்? என்ன என்ன நாட்களில் இந்தத் தொடரைப் பிரசுரிக்கலாம் என்பதனை நீங்கள் பின்னூட்டங்கள் வாயிலாகத் தெரிவித்தால் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். உங்களின் அன்பு நிறைந்த பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நேசமுடன், செ.நிரூபன். நன்றி, வணக்கம்! இத் தொடருக்கான படங்களைத் தன் கணினி வரைகலைத் திறமையினால் வரைந்து கொடுப்பவர் நிகழ்வுகள் வலைப் பதிவின் சொந்தக்காரர் கந்தசாமி அவர்கள். http://www.thamilnat...-post_9744.html
  12. அண்ணே அதிர்வு இணையத் தளம் சாந்தன், சுகுமார் பாடல் பாடியதை படமாகப் போட்டு எழுதியதை நீங்கள் கவனிக்கலையா? அண்ணே அதிர்வு இணையத் தளம் சாந்தன், சுகுமார் பாடல் பாடியதை படமாகப் போட்டு எழுதியதை நீங்கள் கவனிக்கலையா? 0
  13. பேரன்பிற்கும் பெரு மதிப்பிற்குமுரிய எம் இனிய உறவுகளே! எங்கள் வலைப் பதிவுகள் வாயிலாக உங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நாங்கள் இன்று முதல் ஓர் குழும வலைப் பதிவினூடாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்!இணைய வலையில் அரட்டைகளை மட்டுமல்ல மனதில் கனிந்திருக்கும் இனிதான விடயங்களையும், இலகுவில் எம் நெஞ்சை விட்டகலாத நினைவுகளையும், இலக்கிய நயம் கொஞ்சும் கலக்கலான படைப்புக்களையும், அதிரடி அரசியல் விடயங்களையும் பகிரலாம் எனும் நிலையினையும் தாண்டி கொஞ்சம் சிக்கலான விடயமொன்றினைக் கையிலெடுத்து உங்கள் உள்ளங்களை நாடி எம் இறக்கைகளை விரித்திருக்கின்றோம்! ஆம் ஈழத்து மொழி, கலை, கலாச்சாரம், பண்பாட்டுவியல் விடயங்களை எம் வலையில் ஆவணப்படுத்தி எம் அடுத்த சந்ததியிடம் கொண்டு சேர்க்கும் விடயத்தினை நாம் அனைவரும் கையிலெடுத்திருக்கின்றோம்!வாழும் காலமதில் தன் வாழ்வை நிலை நிறுத்த முடியாது தமிழன் இன்று தள்ளாடிக் கொண்டிருக்கையிலும், அவன் ஆளுவதற்கும் அனுபவிப்பதற்கும் என்றோர் தனி நாடு இல்லை எனும் ஆதங்களிற்கும் அப்பால்; அழிந்து விடும் சில பொக்கிஷங்களை ஆவணப்படுத்திட நாம் அணி சேர்ந்திருக்கிறோம். இன்று ஈழத்தின் இயல்பு நிலை பற்றி நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். அதற்கு அமைவாக அரசியல் கலப்படமற்று எம் மொழியிற்கான ஓர் பாதையில் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம்! காலப் பெரு வெளியில் கட்டுண்டு எம் வாழ்வு கரைந்துருகிப் போனாலும் இந்த ஞாலத்தில் வாழத் துடிக்கும் எம் சந்ததியிடமிருந்து எம் மொழியானது இன்றைய இலங்கைத் திரு நாட்டின் அரசியற் சூழலினால் அந்நியப்பட்டு விடுமோ எனும் அச்சம் ஈழ மக்கள் அனைவர் மனங்களிலுமிருக்கின்றது. இன்றைய மொழிக் கலப்பால் பண்டைத் தமிழ்ச் சொற்கள், நெஞ்சில் நினைவாய் தவழும் இலக்கிய மரபுகள், சந்தம் விஞ்சி எம் மனதைக் கொஞ்சி மகிழ்விக்க வல்ல ஈழத்து நாட்டார் பாடல்கள்,உலகில் இன்று சிறப்பிக்கப்படும் செம் மொழி எனும் அடை மொழிக்குள் தன்னை உள்ளடக்கியிருக்கும் எம் தமிழ் மொழியில் ஈழத்திற்கான அடையாளமாக இருக்கும் தனித்துவமான பிரதேசச் சொற்கள் எனப் பல விடயங்கள் எம்மை விட்டு அந்நியப்பட்டு விடுமோ எனும் அச்சம் உலகில் பரந்து வாழும் தமிழ் மக்கள் மனங்களில் இருக்கின்றது. இணைய வலையில் ஈழத்துக் கலை, கலாச்சார மொழிப் பண்பாட்டு அம்சங்களை உங்கள் மனதைக் கவரும் வண்ணம் வலையேற்றும் நாங்கள் எமை நாடி வரும் அதிகளவான தமிழ் வாசக நெஞ்சங்கள் பரந்து வாழும் தமிழத்து மொழி வழக்கினைக் கருத்திற் கொண்டு எம் பதிவுகளில் வரும் ஈழத்து அடையாளங்கள் ஒவ்வொன்றினையும் தமிழக உள்ளங்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் இயல்புத் தமிழ் நடையிலும் பகிரவுள்ளோம் எனும் இனிப்பான சேதியினையும் இங்கே சொல்லிக் கொள்வதில் அகம் மகிழ்கின்றோம்! திசைக்கு ஒன்றாய் பிரிந்து வாழ்ந்தாலும் ஈழத்துக் காற்றை இன்றும் சுவாசித்துக் கொண்டிருக்கும் உறவுகள் நாம் இந்த முயற்சியில் இணைந்திருக்கின்றோம்! இங்கே பிரதேசவாதம் எனும் இராப் பாடலுக்கு சிறிதளவேனும் இடமில்லை எனும் மகிழ்ச்சியான செய்தியினையும் இந் நன் நாளில் பகிர்ந்து கொள்கின்றோம். ஈழத்தில் தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்குப் பகுதிகள்,மத்தியமலைநாடு, மற்றும் புத்தளம் - சிலாபம் ஆகிய பிரதேசங்களையும் ஏனைய இஸ்லாமியச் சொந்தங்கள் செறிந்து வாழும் இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள பதிவர்களையும் இவ் அரிய முயற்சியில் அரவணைத்தும் நாம் செயற்படவிருக்கின்றோம் எனும் நற் சேதியினையும் இங்கே பகிர்ந்து கொள்கின்றோம். இணையத்தில் மட்டும் இந்த மொழிக் காப்புப் பண்ணியினை நாம் செய்து விட்டு நின்று விடப் போவதில்லை! ஈழ வயலினூடே உங்கள் இதயங்களை நாடி வரும் ஒவ்வோர் பதிவுகளையும் தொகுத்து நூலுருவிலேற்றி ஈழத்திலும், தமிழகத்திலும், உலகெங்கும் தமிழ் உறவுகள் பரந்து வாழும் பகுதிகளிலும் தவழ விடலாம் எனவும் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். எமது பதிவுகள் தொடர்பான உங்களின் கருத்துக்களையும், ஈழவயல் எனும் வலைப் பதிவினூடாக நாம் முன்னெடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் பற்றிய உங்கள் கருத்துக்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம் அன்பு உள்ளங்களே! வாசகர்களாக நீங்கள் உங்கள் கால்களை இங்கே பதிக்கும் அதே வேளை எம் படைப்புக்கள் தொடர்பான விமர்சகர்களாகவும் உங்களின் தார்மீகப் பங்களிப்புக்களை வழங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா? இணையத்தில் ஈழத்து மண் வாசத்தை சுமந்து வரும் ஈழ வயல்! உங்கள் இதயதங்களைக் கொள்ளையிடப் போகும் தமிழ் இயல்! எங்கள் வண்ணத் தமிழ் அம்சங்களை வார்த்தைகளிலேற்றி உங்கள் எண்ணங்களைப் பெற்று எம் தமிழுக்கான அடுத்த கட்டப் பணியினைச் செய்திட அணி சேந்துள்ளோம்! வரவேற்று கரங் கொடுத்தால் நீங்கள் ஓர் வாசகர்! விரல் கொண்டு எம் படைப்புக்கள் மெருகேறிட மென்மையாக வருடினால் நீங்கள் ஓர் விமர்சகர்! ஈழவயல் எனும் வலைப் பதிவினை உருவாக்குவதற்கான ஆலோசனைகளையும், விவாதங்களையும் முன்னெடுத்த பதிவர்களினையும் இந் நேரத்தில் நினைவு கூருவதில் பெருமையும் பேருவகையும் அடைகின்றோம். ஈழ வயல் எனும் குழும வலைப் பதிவு ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும் எனும் ஆலோசனையினை வழங்கியவர் <a href="http://shayan2613.blogspot.com/" style="text-decoration: none; color: rgb(120, 63, 4); ">அகசியம் வலைப் பதிவின் சொந்தக்காரன் கானா வரோதயன் அவர்கள்! வரோதயன் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக விவாதங்களையும், கலந்துரையாடல்களையும் நடாத்தி இம் முயற்சி சிறப்படைய பங்களிப்பு நல்கியோர் நண்பர்கள் வலைப் பதிவின் சொந்தக்காரர் KSS.Rajh மற்றும்; சிறகுகள் வலைப் பதிவின் சொந்க்காரர் மதுரன் காட்டான் வலைப் பதிவின் சொந்தக்காரர் காட்டான் நிகழ்வுகள் வலைப் பதிவின் சொந்தக்காரர் கந்தசாமி தமிழ் ஆதி வலைப் பதிவின் சொந்தக்காரர் பவுடர் ஸ்டார் ஐடியாமணி அம்பலத்தார் பக்கங்களின் சொந்தக்காரர் அம்பலத்தார் கற்றது தமிழ் வலைப் பதிவின் சொந்தக்காரர் துஸ்யந்தன் மதியோடை வலைப் பதிவின் சொந்தக்காரர் மதிசுதா, ஆகுலன் கனவுகள் வலைப் பதிவின் சொந்தக்காரர் ஆகுலன், நாற்று வலைப் பதிவின் சொந்தக்காரர் நிரூபன் ஆகிய பதிவர்களோடு முக நூலில் எம்மோடு கலந்துரையாடல்களில் பங்களிப்புக்களை நல்கிய பதிவர் மைந்தன் சிவா, சந்துரு குரு, குட்டிப் பையன், விண்ணாணம் விநாசியார், ஈழத்து பூதந்தேவனார், ஆகியோரையும் இந் நேரத்தில் உங்கள் முன் அறிமுகப்படுத்துவதில் அளவற்ற மகிழ்ச்சியடைகின்றோம். தமிழோடு தமிழால் உங்களோடு இணைந்திட வரும் ஈழவயல் குழுவினர்! நன்றி; வணக்கம்!! http://www.eelavayal.com/2011/12/blog-post_12.html
  14. தாயகப் பரணி பாடி தமிழால் தலைவனின் சிந்தனையினை பார் முழுதும் பரப்பிடத் துணையிருந்த தாயக் கவிஞரை நாமும் வாழ்த்துவோம்! நல்ல கவிதை அக்கா!
  15. அன்பிற்குரிய சகோதரம், நீங்கள் இங்கே பகிர்ந்திருக்கும் வீடியோவில் உள்ள குரல் புதுவை அண்ணாவின் குரல் அல்ல. முல்லைச் செல்வனின் குரல்!