• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

sudalai maadan

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  277
 • Joined

 • Last visited

 • Days Won

  2

Everything posted by sudalai maadan

 1. பீத்தோவன் உலக புகழ் பெற்ற இசைமேதை . அவருக்கு பிறவியிலே காது கேளாது . இப்படியான விடயங்களில் எமக்கு சந்தேகம் ஏற்படாது .ஆனால் மரணத்துக்கு பின்னதான நிலை என்பதை யார் வந்து சொன்னாலும் நாம் ஏற்று கொள்வது சற்று கடினம்தான் . ஒவ்வொருவரினதும் மரணத்தின் பின்னதான் அனுபவங்கள் NDE இல் ஆயிரக்கணக்கில் இருக்கிறது . வெவ்வேறு நாடுகளில் இருந்தும் , வெவ்வேறு மொழிகளில் இருந்தும் அவர்கள் பெற்ற அனுபவங்கள் 70% ஒரே மாதிரியானவை . புலன்களை கொண்டு அதை அளக்க முடியாது . அது புலன்களை தாண்டிய நிலை . மரணத்தின் பின்தான் அந்த பேரொளியை பார்க்க முடியும் என்றில்லை . தியானத்தில் சித்தர்களும் , ரிஷிகளும் கண்டது அந்த ஒளியைத்தான் .
 2. இங்கு பிறவியிலே கண் தெரியாத பெண்ணும் விபரிக்கிறார் தனது இறப்பு அனுபவத்தை .... http://youtu.be/5HbtoX3Q5OI
 3. [size=5]இன்று நினைத்தாலும் நேற்று நடந்தது போல் தான் உள்ளது .வீர மறவர்களுக்கு வீர வணக்கங்கள் .[/size]
 4. [size=6]கரும்புலி கப்டன் மில்லருக்கு வீர வணக்கங்கள். [/size]
 5. மோகன் அண்ணா எனது பெயரை சுடலை என்று மட்டும் தயவு செய்து மாத்தி விடுங்கோ .
 6. தயவு செய்து நாடுக்காக இறந்த ஒருவரை , அவரை நினைவு படுத்தி போற்றும் களத்திலே நின்று கொண்டு , தவறான விமர்சனகள் எழுதுவதை தவிருங்கள் . அவரின் சிறந்த நிதி சம்பத்தமான திடங்களால தான் இயக்கம் பாரிய வளர்ச்சி கண்டது . அவர் அந்த பொறுப்பில் இருந்த படியால்தான் திருமணத்தையே தவிர்த்திருந்தார் . பேகரையும் , பீட்சாவையும் சாப்பிட்டு கொண்டு எழுதுவது சுலபம். தமிழீழம் என்னும் புனித இலட்சியத்துக்காக தமது இனிய உயிரை அற்பணித்த பிரிகேடியர் தமிழேந்தி அப்பா (ரஞ்சித் அப்பா) உட்பட இந்நாளில் வீர காவியமான வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்
 7. ஆனந்தகீதம் அப்பால்...ஒரு உலகம் இது A World Beyond என்ற ஆங்கிலப்புத்தத்தின் மொழிபெயர்ப்பு. இந்தப் புத்தகத்தின் எழுதுனர் ரூத்மோன்ட்கோமேரி (Ruth Montgomery) எனும் பெண்மணி. மனிதருக்குள் மேலுலக ஆத்மாக்கள் அல்லது தெய்வங்கள்வந்து (கலை வந்து) கதைப்பதைப் போல மேற்கத்தைய உலகில் Automatic Writing என்று அழைக்கப்படும்ஆத்மாக்கள் எங்கள் மூலம் வந்து சில விடயங்களை எம்மைக் கொண்டு எழுதப் பண்ணுவது என்ற ஒரு விடயம்உள்ளது. இப்புத்தகம் அப்படியாகத்தான் எழுதப்பட்டது. ஆர்தர் போர்ட் என்று இந்த எழுதுனருக்கு (Ruth Montgomeryக்கு) தகப்பனை போல இருந்த ஒருவர் மேலுலகம் சென்ற பிற்பாடு அவர் மூலமாக எழுதப்பட்ட புத்தகம் இது. THURSDAY, APRIL 16, 2009 ஆர்தர் போர்ட் அமெரிக்காவில் அனைவருக்கும் தெரிந்த ஒரு ஆவியூடகவியலாராக இருக்கையில் அவருக்குக் கடுமையான இருதய நோய் வந்து தாக்கியது.அவர் நன்கு படித்தவர். பல நூல் கற்றவர். பண்புள்ளவர். பகிடி விட்டுக் கதைப்பார். நல்ல புத்திசாலித்தனமான பகிடிகள் விட்டு அவர் கதைக்கும் போது அருகிலிருப்பவர்கள் மிக்க மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர் சுய அறிவுடனிருக்கும்போதும், அவருக்குள் கலை வந்து கதைக்கும் போதும் அனைவரையும் கவர்வார். அவரது 50 வருட ஆவியூடகவியலில் அவர் வலுவுள்ள சக்தி வாய்ந்த ஆத்மாக்கள், வலுக்குறைந்த சாதாரண ஆத்மாக்கள் எல்லாவற்றுக்கும் ஒரேவிதமாக, வேறுபாடின்றி ஊடகமாகச் செயற்பட்டிருக்கிறார். அவர் இன வேறுபாடு பார்ப்பவரல்ல. மார்ச் மாதம் முதலாம் திகதி மார்டின் லூதர் கிங் வாஷிக்டனில் ஒழுங்கு செய்த அனைத்து சமயத் தலைவர்களின் மகாநாட்டிற்குச் சென்று பங்குபற்றினார் (அந்த நேரம் அவர் கடும் இருதய நோயிலிருந்து - heart attack- மீண்டு கொண்டு இருத்த போதும்). ஏனென்றால் அவருக்கு மனித உரிமைகளில் நம்பிக்கை இருந்ததால். அவர் ஒரு உண்மையான தீர்கதரிசி. அத்துடன் நினைத்த காரியம் சொல்லக்கூடியவர். ஆனால் அவர் நேரடி ஆவியூடகமாகத் தொழிற்படவில்லை. அதாவது இறந்தவர்களிடமிருந்து விஷயங்களை அறியும் ஆற்றல் அவருக்கிருந்ததுடன் (முழு விழிப்பு நிலையில்), ஒருவர் உபயோகித்த பொருளை வைத்து அவரைப் பற்றிய முழு விபரங்களையும் சொல்லக்கூடியவர். அவருக்குள் கலை வந்து இறந்த ஆத்மாகளைத் தொடர்பு கொள்ளும் போது அவருக்குள் பிளெச்சர் (Fletcher) என்ற ஆத்மாவே வந்து அவர் மூலம் கதைக்கும். இறந்த ஆத்மாக்கள் நேரடியாகக் குழல் கருவி மூலம் (trumpet) கதைப்பது போல் கதைப்பதில்லை. எனவே அவர் முழு வெளிச்சத்திலும் ஒரு கறுப்புத் துணியைத் தன் கண்களைச் சுற்றிக் கட்டிவிட்டு அரைத் தூக்க நிலையில் (trance sleep) போய்ப் பலன் சொல்லுவார். நேரடி ஆவியூடகமாகத் தொழிற்படுபவர்கள் முழு இருட்டில் தான் இயங்க முடியுமென்பார்கள். வெளிச்சத்தில் ஆவிகளின் குழல் கருவிகள் (trumpet) இயங்காது என்பார்கள். அவர்கள் சொல்வது சரியாகவுமிருக்கலாம். என்றாலும் அப்படிச் செய்வது துரதிஷ்டவசமாக நம்பகத்தன்மையைக் குறைக்கும். ஆனால் போர்ட் (Ford) ஊடகமாகத் தொழிற்படும் போது எப்போதும் நாம் குறிப்புகள் எடுக்கலாம் அல்லது டேப்ரிகார்டரில் பதிவு செய்தும் கொள்ளலாம். போர்ட் அடக்கமானார். அமரிக்கையானவர். மறு உலகுக்கும், இவ்வுலகுக்கும் இடையிலான ஊடகமாகத் தொழிற்படும் வல்லமையான அவருக்குக் கிடைத்த அந்த வரப்பிரசாதத்தையே பெரிய பாரமாகக் கருதுபவர். ஆனால் அவர் இப்பிறவியை எடுத்ததற்கான காரணமே இப்படி ஊடகமாகச் செயற்படுவதற்கென்று நம்புபவர். எனவே அவர் கவலைப் பட்டு நான் ஒரு நாளும் கேட்டதில்லை. அவரது சொந்த இடமான ப்ளோரிடா (Florida) மாநிலத்தைச் சேர்ந்த ரிட்டுச்வில் (Titusville) என்ற இடத்தில் அவர் சிறுவனாயிருக்கும் போது, அவரது குடும்பத்தின் போது உலகத் தொடர்பெல்லாம் கிறிஸ்தவக் கோயிலைச் சுற்றியே இருந்தது. அவரது தாயாரின் பக்கம் தலைமுறை தலைமுறையாக சதேர்ன் பப்திஸ்த் (Southern Baptist) என்ற கிறீஸ்தவ சமயத்தின் ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆர்தர் காலை மாலைப் பூசைகளுக்குத் தவறாமல் பக்தியுடன் செல்வதாலும், அங்கேயிருந்த சிறுவர்களுக்கான சங்கத்தில் முழுமையாக ஈடுபட்டதாலும், அவரது தாயார் ஆர்தர் ஒரு பாதிரியாராக வருவாரென நம்பினார். ஆர்தரின் தாயார் பப்திஸ்த் (Baptist) சமயத்திலேயே இறுதிவரைக்கும் இருந்தார். ஆனால் ஆர்தர் யூனிடேரியன் சர்ச் (Unitarian Church) என்கிற சபையினால் வெளியிடப்பட்ட புத்தகங்களைப் படித்துப் புரட்சிகரமாக அவரது சமயக் கொள்கைகளுக்கு மாறான கருத்துகளைக் கொண்டதனால் அவரது சர்ச்சிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். ட்ரான்ச்லவேனியாப் பல்கலைக்கழகத்துக்கு (Transylvania University) அவருக்கு ஸ்கொலர்சிப் (scholarship) கிடைத்தது. முதலாம் உலகமகா யுத்தம் முடிந்ததும் டிசைப்பில்ஸ் ஒவ் க்ரைஸ்ட் சர்ச் (Disciples of Christ Church) என்ற சபையில் பாதிரியாரானார். அதே சமயம் அவர் தனக்கு மறு உலகத்துடன் தொடர்பு கொள்ள முடியுமென்பதைக் கண்டு பிடித்தார். பிறகு அந்தத் தன்மையைப் பொது நலனுக்குப் பாவித்தார். அவருடன் கூட இருந்த பாதிரிமார்களுக்கு மறு உலக வாழ்வைப் பற்றி விளக்கி அவர்களின் அறியாமையைப் போக்க முனைந்தார். ஆர்தர் போர்ட் கென்டக்கி, லேக்சிங்க்டனில் (Kentucky, Lexington) இருக்கும் ட்ரான்ச்லவேனியா (Transylvania) பல்கலைக்கழகத்தில் பாதிரியாருக்குப் படித்துக் கொண்டிருக்கையில் முதலாம் உலகப் போர் துவங்கியதால், 90 நாட்கள் பயிற்சி தந்து இரண்டாம் லெப்டினன்ட் (lieutenant) ஆக ஆமிக்காம்ப்புக்கு அனுப்பப்பட்டார். அவர் தன்னம்பிக்கை கொண்ட இளம் ஆபீசராக வேலை செய்து கொண்டிருக்கையில் ஒரு நாள் கனவில் அவருக்குக் கீழேயிருந்த படை வீரர்களில் சிலரின் பெயர்கள் இன்புளூயன்சா (influenza) என்ற நோயால் இரவு இறந்தவர்களின் பட்டியலில் இருந்ததாகக் கண்டு பதறி எழுந்தார். அவர் உண்மையான பட்டியலைப் பார்த்தால் நிம்மதியாக இருக்குமெனப் பட்டியலைப் பார்த்தால், அதில் அதே பெயர்கள் கனவில் கண்டமாதிரியே அதே வரிசையில் இருந்ததைக் கண்டார். அடுத்து வந்த இரண்டு நாட்களும் இதே மாதிரித் தொடர்ந்து வந்தது. சிலர் அவரைச் சந்தேகித்ததால் அவர் எழுந்த உடனேயே கனவைச் சொல்வார். அதன்படியே நடந்திருக்கும். அதன் பின்னர் கடல் கடந்து போரிட்டுக் கொண்டிருந்த ரெயின்போ (Rainbow) பிரிவில் இறந்தவர்களின் பெயர்களும் கனவில் வந்த மாதிரியே தினம் பத்திரிகைகளிலும் அதே வரிசையில் வந்து கொண்டிருந்தது. உலகப் போர் முடிந்ததும் அவர் ட்ரான்ச்லவேனியாவுக்குத் திரும்பினார். அவரைக் குழப்பிய கனவுகளும் அத்துடன் நின்று விட்டன. அந்தக் கனவுகளால் அவர் தனக்கு மூளை சரியில்லையோ எனவும் பயந்தார். பேராசிரியரும், உளவியல் பயிட்சியாளருமான 'எல்மர் ஸ்நொடி' ஆர்தருக்குப் பொது அறிவுக்கப்பாட்பட்ட விடயங்கள் பற்றிய புத்தகங்களை அறிமுகம் செய்து வைத்தார். அந்தப் புத்தகங்களில் இருந்து தான் தன்னை விட எத்தனையோ பேருக்கு இதே மாதிரி அனுபவங்கள் ஏற்பட்டதனை அறிந்தார். அவர்களுள் ஜோன் வெஸ்லி, மார்ட்டின் லூதர், இமானுவேல் ஸ்வீடன் போர்க், டுலைட் மோடி, பல கத்தோலிக்கத் துறவிகள் என்போரும் அடங்குவர். இந்தச் செய்திகள் அவருக்கு ஆறுதலளிப்பதாக இருந்தது. அவர் சில பேராசிரியர்களுடனும், சில துரவிகளுடனும் சேர்ந்து இந்தத்துறையில் (ஆவியுலக ஆராய்ச்சி போன்றன) சில ஆராய்ச்சிகளைச் செய்தார். இந்தத் துறையில் இவர் சரியான ஆர்வமுடையவராக இருந்தமையினால் நியூயோக்கில் இத்துறையிலான ஆராய்ச்சிகள் செய்யும் சங்கத்தின் (American Society for Psychical Research) விடயங்களைப் பார்வையிடச் சென்றார். அவர் கென்டக்கி, பார்போர்வில் (Barbourville, Kentucky) இலிருக்கும் சர்ச்சில் பாதிரியாராக முழுநேரமாகத் தொழிற்பட்டுக் கொண்டிருக்கையிலும் இந்தத் துறையில் ஆய்வுகளை மேற்கொண்டார். இரண்டாம் வருடப் பாதிரியார் சேவையின் போது டாக்டர் போல் பியர்சன் என்ற ஸ்வாத்மொர் ஷாத்தகுவா (Swarthmore Chautauqua) சங்கத்தின் ஸ்தாபகரும், தலைவருமானவரைச் சந்தித்தார். அவர் ஆர்தர் போர்டைப் போது அறிவுக்கப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றிப் பேசும் பேச்சாளராகத் தனது சங்கத்தின் விரிவுரை வட்டத்துள் சேரத்தூண்டினார். அவர் இலையுதிர் காலத்தில் மீண்டும் பாதிரிச் சேவைக்குத் திரும்புவதாக இருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. அவர் அந்த நேரம் இந்தியாவிலிருந்து அமரிக்காவிற்கு வந்து பேருரைகள் நடத்திக் கொண்டிருந்த சுவாமி யோகானந்தா என்கிற துறவிக்குக்கீழே சிஷ்யராகக் கொஞ்ச நாட்கள் பயின்று கொண்டிருந்தார். அந்த நேரம் சுவாமி யோகானந்தாவின் சித்திகளால் அவர் நியூயோர்க்கிலும், லண்டனிலும் பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம். 1924 ஆம் ஆண்டில் பிளெச்சர் (Fletcher) என்கிற ஆத்மா ஆர்தருக்குள் வந்து அவர் மூலமாகக் கதைத்து இறந்தவர்களுக்கும், இருப்பவர்களுக்குமிடையில் தொடர்பு ஏற்படுத்தினார். சேர் ஆர்தர் கோனான் டொயில் என்பவர் ஆர்தர் போர்டை இறந்தவர்களுக்கும், உயிரோடிருப்பவர்களுக்கும் இடையில் ஊடகமாகத் தொழிற்படத் தூண்டினார். ஷேர்லொக் ஹோம்ஸ் புத்தகங்களின் ஆசிரியருக்குப் பாதிரிமார்களும், ஆவியூடகவியலாளர்களும் (mediums) கடவுளின் விருப்பத்தையே நிறைவேற்றுவதாக நம்பிக்கை. அத்துடன் மீடியமாகச் செயற்படுபவர்கள் குறைவென்பதால் ஆர்தரை இந்தத் தொழிலையே செய்யும்படி தூண்டினார். 1928 ஆம் ஆண்டில் ஹௌடினி (Houdini) என்ற இறந்த பிரபலம் மிக்க மந்திரவாதியின் இரகசியச் சொல்லை (code) ஆர்தர் கண்டு பிடித்தார். இறந்து போன மந்திரவாதி ஆர்தருக்குள் வந்து தனது மனைவி பியட்ரிஸ் ஹௌடினிக்கு அந்த இரகசியச் சொல்லைச் சொன்னார். பலர் ஆர்தர் பொய் சொல்வதாகச் சொன்னார்கள். ஆனால் மந்திரவாதியின் மனைவி ஆர்தர் சொன்ன அந்த இரகசியச் சொல்லைப் பற்றித் தனக்கும், இறந்து போன கணவருக்கும் மட்டுமே தெரியுமென எழுத்தில் கொடுத்தார். ஆர்தரின் ஆவியூடகச் செயற்பாட்டை அந்த நாட்களில் பிரபலாமாகவிருந்த பலர் மீண்டும் மீண்டும் பரிசோதித்து அதன் நம்பகத்தன்மையை நிரூபித்தனர். அவர்களுள் பிரபல ஆங்கில வைத்தியர் சேர் ஒலிவர் லொட்ஜ்; ஹார்வோட் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறைப் பேராசிரியர் வில்லியம் மக்டௌகால்; ஜாக் லண்டன் என்கிற உப்ரன் செயின் கிளையர் நாவலாசிரியர்; ஜெரால்ட் ஹெர்ட், ஹியூ வால்போல், அத்துடன் சேர் ஆர்தர் கோனான் டொயில் என்கிற நாவலாசிரியர்கள், டாக்டர் ஷேர்வூட் எடி (இவர் YMCA உலகக் காரியதரிசி), அத்துடன் பலப்பல எழுத்தாளர்கள், கலைஞர்கள், செனட்டர்கள், காங்கிரஸ் உறுப்பினர்கள், வெள்ளை மாளிகையில் உள்ளவர்களும், அத்துடன் ஐரோப்பியாவின் அறிஞர்களும் அடங்குவர். மூன்று கண்டங்களில் அவரின் விரிவுரைகள் நடந்து கொண்டிருந்தன. அவரது புகழ் உச்சக்கட்டத்தில் இருக்கும் போதுதான் அவருக்கு ஒரு விபத்து ஏற்றப்பட்டது. சௌத் கரோலைனாவிலிருந்து நியூயோர்க்குக்குக் காரில் வந்து கொண்டிருக்கும் போது நோர்த் கரோலைனா லைனுக்குக் கிட்டே அவரது கார் ட்ரக்வண்டியுடன் மோதியதில் கூட இருந்த அவரது சகோதரியும், சிநேகிதனும் கொல்லப்பட்டார்கள். ஆர்தரும் பலத்த காயங்கள், உட்காயங்களுடன் இருக்கும் தறுவாயில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லபட்டார். காயங்களினால் ஏற்பட்ட நோவிலிருந்து விடுவிக்கும் முகமாக டாக்டர் அவருக்கு வல்லமை வாய்ந்த மயக்க மருந்துகளைத் தந்து அவரது இறுதி நாட்களை அமைதியாகக் கழிக்கும்படி செய்தார். துரதிஷ்ட வசமாக அவருக்கு வைத்தியம் பார்த்த டாக்டர் அவரின் நலனிலும் பார்க்க அவரது அதீதமான சக்திகளான மறு உலகத் தொடர்புகள் போன்ற வல்லமைகளில் ஆர்வமாக இருந்தார். அரை மயக்க நிலையிலிருந்த ஆர்தர் அந்த சிறிய ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகளின் வருத்தங்களை இலகுவில் கண்டுபிடித்தார். இதனைக் கண்ட அந்த டாக்டர் ஆர்தருக்குத் தொடர்ந்து மயக்க மருந்துகளை (Morphine) கொடுத்து அவரை எந்த நேரமும் மயக்க நிலையிலேயே வைத்திருந்தார். அவரது காயங்களெல்லாம் மாறியும் கூட இந்த நிலை தொடர்ந்தது. ஆர்தருக்கு மயக்க மருந்துப் பழக்கம் தவிர்க்க இயலாததாக இருந்ததையும் (Drug addiction), அந்த டாக்டரின் செயலையும் அறிந்த வேறொரு டாக்டர் ஆர்தரை அந்த ஆஸ்பத்திரியிலிருந்து விலத்தி நியூயோக்குக்கு அனுப்பி வைத்தார். இருப்பினும் ஆர்தரால் அந்த மருந்துப் பழக்கம் விட முடியாததாகவும் மருந்து எடுக்காவிட்டால் பயித்தியம் பிடிக்கும் போல (withdrawal phase) வும் அவதிப்பட்டார். இதிலிருந்து விடுபட அவரது டாக்டர் நண்பன் ஒருவரின் ஆலோசனையின்படி குடிவகையை நாடினார். அவரது நாடி நரம்புகளை நேராக்கி நித்திரை வரச் செய்யும் என்பது அந்த டாக்டர் நண்பனின் ஆலோசனை. ஆர்தர் அதற்கு முன் ஒரு நாளும் குடித்ததில்லை. நண்பனின் ஆலோசனையின்படி இந்த மருந்து (drug) ப் பழக்கத்தைப் போக்கடிப்பதற்காகக் குடிக்கத் தொடங்கினார். அவர் முன்னர் எப்போதும் குடிக்காமலிருந்தும் கூட குடிப்பழக்கம் தொடங்கியதும் பழைய குடிகாரர் போல எவ்வளவு குடித்தாலும் தாங்கும் வல்லமையிருந்தது. ஒரு போத்தலிலும் கூட ஸ்காச் (scotch) குடித்தால் தான் அவருக்கு அதன் விளைவு தெரியும். நித்திரையும் அதன் பின் தான் வரும். அடுத்து வந்த இருபது வருடங்களுக்கு அவர் குடிபழக்கத்துடன் போராடினார். அவர் உலகெங்கும் பற்பல நாடுகளுக்குச் சென்று பல மேடைகளில் பேருரைகள் நிகழ்த்திக் கொடிருக்கையில் குடிப்பழக்கத்துடனும் போராடிக் கொண்டிருந்தார். அவர் இப்போ மோர்பைன் (Morphine) என்ற மருந்துப் பழக்கத்திலிருந்து குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டார். அவர் இந்தப் பழக்கத்திலிருந்து விடுபடப் பலபல வழிகளைக் கையாண்டார். ஆனால் விடுபட முடியவில்லை. அல்கஹொலிக்ஸ் அனோனிமஸ் என்ற குடிப்பழக்கத்திலிருந்து விடுபட உதவும் சங்கத்தில் சேர்ந்து தன்னை ஒருவாறு இப்பழக்கத்திலிருந்து விடுவித்துக் கொண்டார். அவர் என்னதான் குடிபோதையிலிருந்தாலும் மறு உலகத்தொடர்பு கொள்ளும் தன்மைகளும் அதுபோன்ற வேறு சித்திகளும் அப்படியே இருந்தன. இங்கும் வெளிநாடுகளிலும் பலரைத் தனது சித்திகளால் ஆச்சரியத்திலாழ்த்தினார். அவர் இவ்வளவு உலகப் புகழ் பெற்றிருந்தும் 1956 ஆம் ஆண்டு வரையிலும் ஆர்தர் போர்டைப் பற்றி நான் (ருத் மோன்ட்கோமேரி) கேள்விப்படவில்லை. இண்டர்நேஷனல் நியூஸ் சர்வீஸ் (International News Service) என்ற பத்திரிகைக்குப் பொது அறிவுக்கப்பட்பட்ட சித்திகளைப் பற்றி (psychic phenomena) நான் அப்போது எழுதவிருந்த தொடருக்காக அங்கேயிருந்த நூலகத்துக்குச் சென்று ஆராய்ந்து கொண்டிருந்தேன். அநேகமாக அங்கிருந்த இது சம்பந்தமான எல்லாப் புத்தகங்களும் ஆர்தர் போர்டை மேற்கோள் காட்டியிருந்தன. அவரது நிரூபிக்கப்பட்ட ஆவியுலகத் தொடர்புகளைப் பற்றிப் பல எழுத்தாளர்கள் நேரடி அனுபவங்களை விபரித்திருந்தனர். நான் அப்போது ஆவியுலகத் தொடர்பு பற்றிய நம்பிக்கையில்லாதவளாயிருந்தும் கூட எனக்கு இவை ஆவலைத் தூண்டின. சில வருடங்களின் பின் வாஷிங்க்டனிலிருக்கும் சுவீடன்போர்ஜியன் சர்ச்சுக்கு (Swedenborgian church) அவர் உரையாற்ற வருவதாகக் கேள்விப்பட்டு அங்கு சென்று அவரின் உரையைச் செவிமடுத்தேன். பின் அவரை நேரே சந்தித்துப் பேட்டி கண்டேன். நான் அப்போது எழுதிக்கொண்டிருந்த தொடருக்கு அது தேவையாகவிருந்தது. எங்களது பேட்டியின் போது முக்கியமாகப் பேசப்பட்ட விஷயம் என்னவென்றால் ஆர்தராலும் வேறு சிலராலும் சேர்ந்து புதிதாகத் தொடங்கப்பட்ட ஒரு ஆத்மீக ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தைப் (Spiritual Frontiers Fellowship) பற்றியதாகும். அதைத் தொடங்கியவர்களுள் சமயத் துறவிகள், காலேஜ் பேராசிரியர்கள், பெரிய பதவிகள் வகிப்பவர்களும் அடங்குவர். அங்கேயிருந்த சர்ச்சுகளின் ஆதரவுடன் எமது அறிவுக்கப்பட்பட்ட விஷயங்களை (psychic phenomena) ஆராய்வதற்காக உண்டாக்கப்பட்ட சங்கம் அது. அவர் வாஷிடனை விட்டுப் புறப்படுவற்கு முன் நான் ஒரு பத்திரிகையில் மீடியம் என்று சொல்லப்படுகின்ற, 'ஆவிகளுக்கும் மனிதருக்குமிடையில் ஊடகமாகத் தொழிற்படுபவர்களைப் பற்றித் தாக்கி எழுதியிருந்ததை ஒத்துக்கொண்டேன். அவர் எனக்காக அங்கேயே கலையில் போய் (trance) ஆவிகளுடன் கதைக்க ஒத்துக்கொண்டார். அப்போது நடந்த ஆச்சரியப்படத்தக்க விஷயங்களை நான் எனது "உண்மையைத் தேடி" (A Search for the Truth) என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். நான் ஆர்தரின் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் பற்றிப் பத்திரிகையில் எழுதியிருந்தேன். அதன் பின் எப்பொழுது அவர் வாஷிங்க்டன் வந்தாலும் எங்களது வீட்டிற்கு வருவார். அந்த நேரங்களில் ஆர்தருக்கு முன் பின் தெரியாதவர்களை அழைத்து வந்தாலும் அவர்களின் இறந்த உறவினர்களைத் தொடர்பு கொண்டு அவர்களைப் பற்றிய உண்மைகளைச் சொல்வார். பிளெச்சர் என்கிற ஆத்மாவின் உதவியுடனேயே இது நடக்கும். இறந்த உறவினர்களின் பெயர்களையெல்லாம் சொல்வார். தொடர்ந்து வந்த வருடங்களில் ஆர்தர் எங்களது எங்களது வாஷிங்க்டன் வீட்டிலும், வேர்ஜீனியா பீச் வீட்டிலும் அடிக்கடி வந்து தங்குவார். அடிக்கடி பகிடிகள் விட்டுக் கடிதங்கள் எழுதுவார். தொலைபேசியிலும் அடிக்கடி பல மணி நேரம் கதைத்துக் கொண்டிருப்போம். மேடைப் பேச்சுகளின் போதும் சந்தித்து இருக்கிறோம். தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று கிழமைக்கு கிழமைக்கு மேல் தொடர்பில்லாமல் இருந்ததில்லை. ஆனால் அவர் மறு உலகை அடைந்த பின் தான் ஒழுங்காகத் தொடர்பு கொள்கிறோம். ஏனென்றால் ஒவ்வொரு நாட் காலையிலும் ஒரே நேரத்துக்குச் சந்தித்து மகிழ்கிறோம்.
 8. மரணத்தின் பின் மனிதர் நிலை? "தியானம்". இது மரணத்தைக் கடந்து அதற்குப் பிறகான மற்ற உலகங்களைப் பற்றியும், ஆத்மாவாகிய உயிர் இறுதியாக இறைவனிடத்தில் கொண்டு சேர்க்கப்படுகிற வழித்தடங்களையும் மனிதனுக்கு காட்டக்கூடிய ஒரு உலகமாக இருக்கிறது. "நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கிற கடமைகள், செயல்களினால் சிக்கியிருக்கும் மனம் தியானத்தின் பொழுது அதிலிருந்து விலகி மெல்ல... மெல்ல... ஒன்றுமற்ற ஒரே புள்ளியில் குவிகிற போது இந்த உண்மைகள் புலப்படும்" என்கிறார்கள் ஞானிகள். மரண பயத்திற்கு உட்படாத மனிதர்கள் உலகில் ஒருவர் கூட இருக்க முடியாது. என்றைக்கு நிகழும் என்று நிச்சயிக்கப்படாத முடிவுகள் நிழல் போல் பின் தொடர்ந்த வண்ணம் மனிதனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன. எல்லாம் தெரிந்தும் எல்லாவற்றின் மீதும் தீர்க்க முடியாத ஆசைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். மனம் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் பயமும், வெறுப்பும் கொள்கிற போது சிலர் மரணத்தைத் தாங்களாகவே தீர்மானிக்கின்றனர். எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் வாழ்வது ஒன்றே மகிழ்ச்சியானது என்று மனிதர்கள் நம்புகிறார்கள். ஆனால் மரணம் தான் மகிழ்ச்சியானது என்பதாக தங்களின் உயிருள்ள போதே ஜீவ சமாதியடைந்த ஞானிகள் உணர்த்திவிட்டுப் போயிருக்கிறார்கள்(செத்தால்தான் நிம்மதி என்பது அவர்களின் நம்பிக்கை). மரணத்தின் பின் மனிதர் நிலை என்ன? சொர்க்கமா, நரகமா? மறு பிறப்பு உண்டா? விவாதங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் இமையமலைக் குரு, பாபாஜியின் சீடர்களில் ஒருவரான பரமஹம்ஸ யோகானந்தர் 1936-ம் ஆண்டு ஜூன் 10-ம் தேதி மும்பை ரீஜென்ட் ஓட்டல் அறையில் கட்டிலின் மீது அமர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கிறார். அப்பொழுது விவரிக்க முடியாத ஒரு ஒளிக்கீற்று தியானத்திலிருந்து அவரை எழுப்புகிறது. மூன்று மாதங்களுக்கு முன்பு இதே 10-ம் தேதி மார்ச் மாதம், பூரி ஆசிரமத்தில் புதைக்கப்பட்ட அவரது குரு ஸ்ரீ யுக்தேஸ்வரர் ரத்தமும், சதையுமாக எதிரில் நின்று கொண்டிருப்பதைக் காண்கிறார். நம்பமுடியாத அதிசயம் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தது. "இது நீங்களா?" என்று திகைத்துப்போன யோகானந்தர், பூரியின் கொடிய மணலில் புதையுண்ட அதே சரீரமா இது? என்று கேட்டபடியே சென்று யுக்தேஸ்வரரைக் கட்டியனைத்துக் கொள்கிறார். "ஆம். எந்த உடலை நீ புதைத்தாயோ! அதே ஸ்தூல உடல் தான். அதே போன்ற ஒரு சரீரத்தை இந்தப் பிரபஞ்சத்தின் அணுக்களிலிருந்து படைத்தேன். இப்பொழுது நான் மீண்டும் உயிர்த்தெழுந்திருக்கிறேன். ஆனால் இந்தப் பூவுலகில் அல்லாமல் ஒளி வடிவிலான சூட்சும உலகத்தில்" என்கிறார் ஸ்ரீ யுக்தேஸ்வரர். மெல்ல யோகானந்தரின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு சொல்கிறார், "இந்த மண்ணுலகில் உள்ளவர்களுக்கு உதவும் பொருட்டு எப்படி மகான்கள் பிறப்பெடுக்கிறார்களோ! அப்படியே சூட்சும உலகில் உள்ளவர்கள் தங்கள் கர்ம வினைகளிலிருந்து முக்தியடைந்து, அடுத்தபடியாக "ஹிரண்ய லோகம்' அடைய உதவும் பொருட்டு நான் அனுப்பப்பட்டிருக்கிறேன். ஹிரண்ய லோகத்தில் உள்ளவர்கள் அனைவரும் பூமியில் மரண காலத்தின் போது தங்கள் உடலை உணர்வுடனேயே விட்டுவிட்டவர்கள். சூட்சும உலகம் என்பது பூமியில் உள்ளவர்கள் இறந்த பின்பு வந்தடையும் ஒரு பிரதேசம். கடவுள் மனித ஆத்மாவை மூன்று சரீரங்களுக்குள் அடைத்து வைத்துள்ளார். இதில் எண்ணங்களால் ஆன 'காரண சரீரம்' முதன்மையானது. இரண்டாவது மனம் மற்றும் உணர்ச்சிகளால் ஆன 'சூட்சும சரீரம்'. மூன்றாவதாக புலன்களால் உணரக்கூடிய‌ சாதாரண 'ஸ்தூல சரீரம்' ஆகும். சமீபத்தில் உடலைவிட்டு பிரிந்த மனிதன், அதே போன்ற மனோபாவம் மற்றும் ஆன்மீகத் தன்மை உடைய ஒரு சூட்சும குடும்பத்தால் ஈர்க்கப்படுகிறான். சூட்சும உலகின் சராசரி ஆயுட்காலம் ஐநூறு முதல் ஆயிரம் ஆண்டுகள். மனிதனுடைய ஆத்மாவானது இறைவனின் முப்பத்தைந்து எண்ணங்களின் சேர்க்கை ஆகும். இதிலிருந்து பத்தொன்பது மூலப்பொருட்கள் அடங்கிய சூட்சும உடலையும், பதினாறு மூலப்பொருட்களை உள்ளடக்கிய ஸ்தூல உடலையும் உருவாக்கினான். ஸ்தூல உடலானது புலன்களின் மூலம் மகிழ்ச்சி கொள்கிறது. ஆனால் சூட்சும உடலோ ஒளிவடிவிலான அதிர்வலைகள் மூலம் தங்களின் ஆசைகளை, அனுபவங்களை நிறைவேற்றிக் கொள்கிறது. இது ஒரு கனவு நிலைக்கு ஒப்பானது ஆகும். மேற்கூறிய இன்ப நிலைகளைக் கடந்த ஆத்மாவானது அடுத்ததாக காரண சரீரத்தில் வந்து நிற்கும். காரண உலகில் நினைத்த மாத்திரத்தில் எல்லா இன்பங்களையும் அடைய முடியும். ஒரு மனிதன் கற்பனையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் காரணவாசி நிஜத்திலும் செய்ய முடியும். ஸ்தூல உடல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு பயணிப்பது போல் மனதால் நினைத்தால் காரண உடலானது நிஜத்தில் பயணிக்கும். நிறைவேற்றிக் கொள்ள முடியாத ஆசைகள் என்பதே காரண உலகில் இல்லை. நான் சொல்வதைப் புரிந்து கொள்வதற்கு ஒருவன் தன் மனதை ஒருமுகப்படுத்தும் பேராற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவன் மண்ணுலகம், சூட்சும உலகம் ஆகிய இரண்டு உலகங்களின் முழுமையான பரப்பளவையும் 'ஒளிரும் பந்து வடிவிலான நிலையில்' வெளியிலிருந்து பார்க்கிறான்.அவற்றை தன் எண்ணங்களாகவும் மாற்றிக் காண்கிறான். ஒருவன் கண்ணை மூடிக்கொண்ட பின்னரும் இடங்களைப், பொருட்களை காட்சிகளை எப்படி எண்ணத்தினால் உணர்கிறானோ அப்படியே இது சாத்தியமாகும். சூட்சும் உலகில் நீடித்து வாழ்வதற்கு மனிதன் தன் மண்ணுலகக் கடமைகள், இச்சைகளை முழுவதுமாக தீர்த்துவிட்டிருக்க வேண்டும். ஏனென்றால், தங்கள் வினைக் கடன்களைத் தீர்க்க வேண்டியவர்கள் மீண்டும் ஸ்தூல உடலில் பிறப்பெடுக்கிறவர்களாகவே இருக்கிறார்கள். மண்ணுலக கர்மாக்களை தீர்க்காதவன் சூட்சும உலகில் வந்து மரணமெய்தும் போதும் எண்ணங்களால் ஆன காரண உலகில் அனுமதிக்கப்படுவதில்லை. மீண்டும், மீண்டும் இவர்கள் ஸ்தூல மற்றும் சூட்சும உலகிலேயே அலைந்து கொண்டு இருப்பார்கள். பக்குவமடையாத மனித ஆத்மா இப்படியான மூன்று சரீர பந்தங்களிலிருந்தும் விடுபடுவதற்கு எண்ணற்ற பிறவிகளை எடுக்க வேண்டியுள்ளது. இச்சைகளிலிருந்து விடுபட்டு ஆத்மாவானது மூன்று சரீரக் கூடுகளிலிருந்தும் வெளியேறுகிற போது தான் அதன் தனித் தன்மையை இழக்காமல் பரமாத்மாவுடன் இனைந்து விடுகிற நிலை ஏற்படும். மண்ணுலகில் இருக்கும் போதே இந்த மூன்று நிலைகளையும் மனிதன் உணர்ந்து இருக்கிறான். புலன்கள் வழியாக தொடும் பொழுதோ, ருசிக்கும் பொழுதோ அல்லது கேட்கும் பொழுதோ ஸ்தூல உடலில் செயல்படுகிறான். கற்பனை செய்யும் பொழுதும், கனவுகளில் லயிக்கும் பொழுதும் சூட்சும சரீரத்தில் செயல்படுகிறான். எண்ணங்களால் வாழும் பொழுதும், தியானத்திலும் காரண சரீத்தில் செயல்படுகிறான். சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளில் பதினாறு மணி நேரம் ஸ்தூல உடலில் சஞ்சரிப்பான். எஞ்சியுள்ள நேரத்தை தூக்கத்தில் செலவிடும் பொழுது கனவுகளின் மூலம் சூட்சும சரீரத்தை அடைகிறான்.அங்கே நினைத்ததை நிறைவேற்றிக் கொள்கிறான். அவனுடைய நித்திரை கனவுகளற்று ஆழ்ந்து இருக்கையில் தன் உணர்வை அதாவது 'நான்' எனும் உணர்வைக் கடந்து காரண உலகத்தில் வாழ்கிறான். கனவு காண்பனுடைய நித்திரை களைப்பில் ஆழ்கிறது. மாறாக தன்னை மறந்து காரண சரீர நிலை எய்தும் உடலானது புத்துணர்ச்சி பெறுகிறது. ஸ்ரீ யுக்தேஸ்வரர் கூற்றின்படி மனித ஆத்மாவானது அழிவில்லாத ஒன்று. ஆற்றலை எப்படி ஆக்கவோ, அழிக்கவோ முடியாதோ அதே நீதிப்படி இறைவனது எல்லா படைப்புகளும் உள்ளன. அது ஒன்றிலிருந்து வேறொன்றாக, ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு மாறுவதாக உள்ளது. எல்லாவற்றின் இறுதி நிலையும் அவனிடமே வந்து அடங்குகின்றன. அங்கு இன்பத்தை தவிர வேறெதுவுமில்லை. மனிதனைப் பொறுத்த அளவில் மனம் தான் எல்லாவற்றையும் தீர்மாணிக்கும் சக்தி படைத்ததாக இருக்கிறது. அதை தியான‌த்தின் மூலம் ஒருமுகப்படுத்தி செயல்படுகிற போது பிரபஞ்சத்தின் ரகசியத்தை உணர முடியும். தியானம் என்பது என்ன? தியானம் என்பது ஒரே வரியில் சொல்வதென்றால் பிரபஞ்சத்தோடு நம்மை இனைத்து வைப்பது அல்லது உணர வைப்பது என்று சொல்லலாம். மனதை ஒருமுகப்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகிறது. அடிப்படையில் மேல் மனம், அடிமனம், ஆழ்மனம் என்று மனமானது மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவைத்தல், தொடுதல் ஆகிய ஐம்புலன்களின் வழியே புற விஷயங்களை நாம் உணர்ந்தவாறு இருக்கிறோம். இவை அனைத்தும் மேல் மனத்தினால் உணரப்பட்டு அடிமனத்தினோடு தொடர்புடையதாகவும் இருக்கிறது. ஆனால் ஆழ்மனம் என்பது பெரும்பாலும் சராசரி மனிதர்களால் உணரப்படாமலே இருக்கிறது. எண்ணத்தின் அடிப்படியிலான அத்தனை தகவல்களும் இறுதி மூச்சு உள்ளவரை ஆழ்மனத்தினால் மறைக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது. மறந்து போன தகவல்களைக் கூட மெஸ்மரிசம் மூலம் மருத்துவர் கண்டறிந்து சொல்வதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். மனசாட்சிக்கு விரோதமான காரியங்களில் ஒரு நபர் ஈடுபடும் போது மேல்மனம் அதை மறைக்கப்பட்ட விஷயமாக நம்ப வைத்தாலும் ஆழ்மனம் அதை ஏற்பதில்லை. தவறென்று சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக ஆழ்மனத்தோடு தொடர்புடையவர்கள் தகாத செயல்களில் ஏடுபடுவதற்கான வாய்ப்பையே அளிக்காமல் ஆழ்மனமானது கடிவாளம் போட்டவாறு செயல்பட்டுக் கொண்டிருக்கும். எனவே செயல்கள் நல்வழிபடுத்தப்பட்டு வாழ்க்கை சந்தோஷம் நிறைந்ததாக மாறுகிறது. ஐம்புலன்களின் எந்த தூண்டலுக்கும் உள்ளாகாதவாறு மனதை ஒரே புள்ளியில் குவித்து தியானம் செய்வதால் டென்ஷன், படபடப்பு, கோபம், வெறுப்பு முதலிய வேண்டாத பிரச்சினைகள் தூக்கி எறியப்படுகின்றன. மனம் எப்பொழுதும் சாந்தமாகவும், சந்தோஷமாகவும் அதே சமயம் கூர்மையான நினைவாற்றலுடன் இய‌ங்க‌ ஆர‌ம்பிக்கிற‌து.