Jump to content

அபிஷேகா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    32
  • Joined

  • Last visited

About அபிஷேகா

  • Birthday 12/15/1980

Contact Methods

  • Website URL
    http://www.srilankatruth.com

Profile Information

  • Gender
    Female
  • Location
    அவுஸ்திரேலியா

அபிஷேகா's Achievements

Apprentice

Apprentice (3/14)

  • Conversation Starter
  • First Post
  • Collaborator
  • Week One Done
  • One Month Later

Recent Badges

4

Reputation

  1. [size=3]பலவீனமான எம் இனத்தின் பலமான ஆயுதமாக விளங்கிய கரும்புலிகளை, அவர்களது தியாகத்தை நினைவுகூரும் தினம் இன்று. தமிழீழத்தின் புனிதமானதும் வணக்கத்துக்குரியதுமான நாட்களில் உன்னதமானது கரும்புலிகள் நாள். காரணம், உயிரை ஆயுதமாக்கியவர்கள் கரும்புலிகள். விடுதலைப்புலிகளின் பரிணாம எழுச்சிக்கு கரும்புலிகள் படையணியின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது என்பதுடன் விடுதலைப் போராட்டத்தின் முன்நகர்விற்கு வலுவான தளத்தையும் வழங்கியிருந்தது. இலங்கைத்தீவில் ஈழத்தமிழினம் எண்ணிக்கையில் குறைந்த இனமாக இருந்தாலும் தனது சுயபலத்தின் அடித்தளத்தில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தது. எதிரி பல்வேறு தடைகளையும் நெருக்குவாரங்களையும் கொடுத்து, போரியல் ரீதியாகத் தோற்கடிப்பதனூடாக விடுதலைப் போராட்டத்தை அழிக்க முற்பட்டான். அந்த நெருக்குவாரங்களைத் தகர்த்து, அடுத்த கட்டத்திற்கு விடுதலைப்போரை முன்நகர்வதற்காகத் தமது உயிரைத் தற்கொடையாக்கி, வெற்றிக்கான பாதையைத் திறந்து விட்டதன் கதாநாயகர்கள் இந்தக் கரும்புலிகள். எனவேதான் கரும்புலிகள் “எமது இனத்தின் தற்காப்பு கவசங்கள் எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள். எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்” என தலைவர் அவர்கள் கரும்புலிகளைப் பற்றிய தனது எண்ணத்தைப் பதிவு செய்திருந்தார். [/size] [size=3]உலக விடுதலைப் போராட்டங்களில், தற்கொடையாளர்கள் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் விடுதலைப்புலிகள், கரும்புலிகளைத் தாக்குதலிற்குப் பயன்படுத்திய முறை தனித்துவமானதாகவே இருக்கின்றது. தாக்குதல் நடைபெறும் சமயங்களில் எதிரியின் மனோபலத்தை உடைக்க, எதிரியின் உதவிகள், விநியோகங்களைத் தடுக்க, தற்பாதுகாப்பை வழங்க, பாரிய கடல்வழி நகர்வுகளைச் செய்ய, தாக்குதல் அணிகளுக்கான தடைகளை உடைத்து முன்நகர்த்த என பலவழிமுறைகளில் கரும்புலிகள் தமது காத்திரமான பங்கினை வழங்கினர். ஒரு தனிப் படையணியாக அவர்களின் எழுச்சியும் வியாபகமும் எப்போதும் வியப்புக்குரியவை.[/size] [size=3]1987ம் ஆண்டு, யாழ் மாவட்டத்தின் பிரதேசசெயலர் பிரிவுகளில் ஒன்றான வடமராட்சி வடக்கை கைப்பற்றும் நோக்குடன் சிங்களப் படைத்தளபதி கொப்பேக்கடுவ தலைமையில் கடல்வழியாகத் தரையிறங்கிய சிறிலங்கா இராணுவம் |ஒப்பிறேசன் லிபரேசன்| என்ற பெயரில் வடமராட்சியின் பலபகுதிகளைக் கைப்பற்றி நிலைகொண்டது. இதில் ஒரு தொகுதி இராணுவம் நெல்லியடி மகாவித்தியாலயத்தில்; தரிந்திருந்தது. பாடசாலையில் அமைக்கப்பட்ட இராணுவமுகாமைத் தகர்ப்பதற்காகத் தயார்செய்யப்பட்ட தாக்குதல் திட்டத்தில், கப்டன் மில்லர் தன்னையே கொடையாக்கி தாக்குதலை நடாத்தத் தயாரானார். யூலை மாதம் 5ம் திகதி வெடிமருந்து நிரப்பிய வாகனத்தில் பாடசாலை வளாகத்தினுள் புகுந்கு கப்டன் மில்லர் நடாத்திய தற்கொடைத் தாக்குதலில் நாற்பதிற்கும் அதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், எதிர்பாராத இத்தாக்குதலால் இராணுவத்தினரின் உளவுரண் கடுமையாகச் சிதைந்துபோனது. இத்தாக்குதலின் பின் வடமராட்சி படை நடவடிக்கையை சிங்கள இராணுவம் இடைநிறுத்தி வைத்தது. விடுதலைப் போராட்டத்தில் முதன்முறையாக அதிகமான இராணுவத்தினரைப் பலியெடுத்த தாக்குதல் இது. இதுவே விடுதலைப்புலிகளின் முதலாவது கரும்புலித்தாக்குதலாகப் பதிவுசெய்யப்பட்டது.[/size] [size=3] [/size] [size=3]இத்தாக்குதலின் பெறுபேறு ஈழவிடுதலைப் போராட்டத்தில் கரும்புலிகளின் கனதியான வகிபாகத் தன்மையை வெளிப்படுத்தியது. ஏனெனில் அதிகபலத்துடன் வந்து மோதும் ஒடுக்குமுறையாளனின் நாடிகளை ஒடுங்கச்செய்யும் அளவிற்கு எதிர்ப்பலப்பிரயோகம் செய்யவேண்டிய கட்டத்தில் அதி உயர் போர்வடிவமாக தலைவரால் அறிமுகப்படுத்தப்பட்டது| இந்த கரும்புலித்தாக்குதல் உத்தியாகும். ஒரு தாக்குதலில் கடுமையாகப் போரிட்டு, பலபோராளிகளை இழந்து பெறவேண்டிய வெற்றியை, கரும்புலிகளைப் பொருத்தமாகப் பயன்படுத்தி, குறுகிய இழப்புடன் பாரிய வெற்றியைப் பெறும் அதேவேளை, சிங்களப்படையின் மனோபலத்தைப் பலவீனப்படுத்தும் தன்மைகொண்டதாகக் காணப்பட்டது. மேலும் சிங்களத்துடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கையில் குறைந்த இனம் தனது படையின் இழப்புகளின் எண்ணிக்கையைக் குறைவாக வைத்திருப்பது ஈழக் களமுனையில் மிகவும் முக்கியமானதாகவிருந்தது. அத்தகைய உயரிய இலக்கினைக் கொண்ட கரும்புலிகள் போரியல், அரசியல் வெற்றிகள் மற்றும் மாற்றங்களுக்கான முதுகெலும்பாக விளங்கினார்கள்.[/size] [size=3]விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்ட போராளிகள் கரும்புலிகளாக உருவாகுவது என்பது மிகவும் கடினமானது. கடுமையான பயிற்சிகள், பரீட்சைகள், உளவியல் பரிசோதனைகள், நீண்டகாலக் காத்திருப்புக்கள் என பல கடினங்களைக் கடந்தே கரும்புலிகளாக உள்வாங்கப்பட்டனர். ஈழத்தமிழ் மக்கள் மீதான சிங்களத்தின் அடக்குமுறையும் இனவழிப்பும் இளைஞர்களை விடுதலைப் போராட்டத்தில் பங்களிக்கச் செய்தது. தியாக உணர்வுடன் இணைந்த இளைஞர்களின் அப்பழுக்கற்ற, தூய்மையான விடுதலையுணர்வு எத்தகைய தியாகங்களையும் செய்வதற்கான திடத்தைக் கொடுத்தது. விடுதலைக்காக எத்தகைய கடுமைகளைச் சந்தித்தாலும் ”எனது எதிர்காலச் சந்ததி சுபீட்சமாகவும், சுதந்திரமாகவும் வாழும்”; என்பதே அவர்களின் சுவாசமானது. அதுவே அவர்களை தற்கொடையாளர்களாகவும் உருவாக்கியது.[/size] [size=3]கரும்புலியாக வீரச்சாவடைந்த ஒவ்வொரு போராளியினதும் உணர்வுகள் தியாகங்களை சில பக்கங்களில் சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவருக்குப் பின்னாலும் நீண்ட சரிதம் இருக்கும். அதன் ஒவ்வொரு பக்கமும் அவர்களின் தியாகத்தால் எழுதப்பட்டிருக்கின்றது. ஈழம் என்ற இலட்சியம் மட்டுமே அவர்களின் சுவாசமாக இருக்கின்றது. குறிப்பாக கடற்கரும்புலிகளின் செயற்பாடுகளில் நிறைந்திருக்கும் அர்ப்பணிப்புணர்வும் மனஉறுதியும் பெரும் வியப்பிற்குரியவை. மிகமுக்கியமாக பெண்கரும்புலிகளின் பங்களிப்பு என்பது வியப்பானதாகவும் மெய்சிலிர்க்க வைப்பதாகவும் இருக்கும்.[/size] [size=3]முதலாவது பெண்கரும்புலியான அங்கையற்கண்ணி, தாயின் துணையில்லாமல் இரவில் வெளியில் செல்லப் பயப்படும் மனநிலை கொண்டவாராக வாழ்ந்தவர். சிறிலங்காப் படையால் அவரது வாழ்;வியல் சூழலில் ஏற்பட்ட சம்பவங்கள் அவரைப் போராளியாக்கியது. [/size] [size=3] [/size] [size=3]சிறிலங்கா கடற்படையின் அட்டூழியத்தால் நாளுக்கு நாள் துன்பங்களைச் சந்தித்து, கடலுக்குப் போனவர்கள் திரும்பி வருவார்களா? என ஏங்கியபடி வாழ்ந்த குடும்பங்களின் அழுகையையும், கண்ணீரையும் பார்த்த அங்கையற்கண்ணி சிங்களக் கடற்படையின் ஒரு கப்பலை தான் அழிக்கவேண்டும் என்று முடிவிற்கு வந்து அதற்காகத் தயாரானாள். கடுமையான நீரடி நீச்சல் பயிற்சிகளை மேற்கொண்டு கரும்புலியாக உருவெடுத்து நின்ற அவளுக்கு காங்கேசன்துறையில் தரித்திருந்த இராணுவக் கப்பலைத் தகர்ப்பதற்கான இலக்கு வழங்கப்படுகின்றது. [/size] [size=3]தாக்குதலுக்குத் தயாரானபின் வீட்டுக்குச் சென்று தாய், தந்தை சகோதரர்களுடன் பிரியப்போகும் தனது இறுதி மணித்துளிகளைச் கழித்தாள். சகோதரிகளிடம் நீங்கள் “நல்லாப் படிக்க வேணும்” எனக்கூறி விடைபெற்று வந்தாள். [/size] [size=3]இறுதிப் பயிற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தனது தோழிகளிடம் “நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போறவைக்கு அம்மாவால சாப்பாடு குடுக்க ஏலும்” என்று கூறினாள். தனது குடும்பத்தையும் அதற்கு மேலாக தாய்நாட்டையும் நேசித்த அவளின் சில எடுத்துக்காட்டுக்கள் இவை.[/size] [size=3]தாக்குதல் தினத்தன்று கடலுக்குள் குறிப்பிட்ட தூரம் வரை போராளிகள் உடன்சென்று வழியனுப்ப, அவர்களிடம் |இலக்கை அழிக்காமல் திரும்பமாட்டன்| எனக்கூறி பொருத்தியழிக்க வேண்டிய வெடிமருந்துடன் தனியே நீந்திச் சென்று, தனது இலக்கை அழித்து வீரச்சாவெய்தினாள் அந்தப் பெண்கரும்புலி. ஈழத்தின் முதலாவது பெண்கரும்புலி. இதுபோல எத்தனையோ கரும்புலிகள், எத்தனையோ தியாகங்கள். தங்களது குடும்பத்துடன் கழிக்கும் இறுதி நிமிடங்களில்கூட அவர்களிடம் இருக்கும் தெளிவும் உறுதியும் சாமானிய வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. வெற்றிக்காக அவர்கள் பட்ட கடினங்கள் வார்த்தைகளால் உணர்த்த முடியாதவை. [/size] [size=3]தனக்கான இலக்குக் கிடைக்கும்வரை மாதக்கணக்கில் கடற்பரப்பில் காத்திருந்த கரும்புலிகள் எத்தனை பேர். தங்களது இலக்கிற்காக அலைந்து திரிந்து திரும்பிவந்து, மீண்டும் மீண்டும் சென்று தமது இலக்கை அழிக்க உறுதியாகவும் தற்துணிவாகவும் செயற்பட்ட எத்தனையோ கரும்புலிகளின் ஈகங்களை இந்த விடுதலைப் போராட்டம் கொண்டிருக்கின்றது.[/size] [size=3]ஒரு சமயம், மிக முக்கியமான இலக்கு ஒன்றை அழிக்கும் பணியில் கரும்புலிப் போராளியொருவன் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை, சிங்களப் புலனாய்வுப்படையால் சுற்றிவளைக்கப்படுகின்றான். புலனாய்வுப் படையின் கைகளில் மாட்டிவிடக்கூடாது என்பதற்காகத் தப்பித்து ஓடத்தொடங்கினான். என்றாலும் அது கடினமானதாகவிருந்தது. ஒரு கட்டத்தில் தன்னால் தப்பமுடியாது என்பதை உணர்ந்த அக்கரும்புலி, அருகிலிருந்த ஒரு பேக்கரியின் பாண் போரணைக்குள் புகுந்து தன்னைக் கருக்கி அழித்துக் கொண்டான். பிறிதொரு சம்பவத்தில் திருகோணமலைக் கடற்பரப்பில் நடந்த மோதலில் காயத்துடன் கைது செய்யப்பட்டு, வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயம், தன்னிடமிருந்து எதிரி தகவல்களைப் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகக் கட்டிலின் சட்டத்தில் தனது தலையை அடித்து வீரச்சாவடைந்தான் ஒரு கரும்புலிப் போராளி. இப்படியெல்லாம் தியாகத்தின் இலக்கணமாக வாழ்ந்து காட்டிய நாயகர்கள் இவர்கள்.[/size] [size=3] [/size] [size=3]முதலாவது கரும்புலித் தாக்குதலை நடாத்தி விடுதலைப் போராட்டத்தின் புதிய பரிணாமத்திற்கு வித்திட்ட கப்டன் மில்லர் முதல் முள்ளிவாய்க்காலின் ஆரம்பம் வரை முன்னூற்றி இருபத்து இரண்டு கரும்புலிகள் வீரகாவியம் படைத்துள்ளனர். 1990ம் ஆண்டு அபித்தா, எடித்தாரா என்ற கட்டளைக் கப்பல்களைத் தகர்த்து முதலாவது கடற்கரும்புலித் தாக்குதலை நடாத்திய மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோருடன் கரும்புலிகள் அணியின் ஆளுகை கடற்பரப்பிலும் ஆரம்பித்தது. பரந்த கடல்வெளியில் நவீன கட்டளைக் கப்பல்களுடன் தனது ஆக்கிரமிப்பை விரித்திருந்த சிறிலங்கா கடற்படையை துரத்தி அடித்தவர்கள் கடற்கரும்புலிகள். விடுதலைப்புலிகளுக்கான விநியோகங்களுக்கும், தமிழ் மீனவர்களின் சுதந்திரமான மீன்பிடிக்கும் காப்பரணாக விளங்கியது கடற்புலி. அந்தக் கடற்புலியின் வளர்ச்சிப் படிக்கட்டாக விளங்கியவர்கள் கடற்கரும்புலிகள். எத்தனையோ கட்டளைக் கப்பல்கள், நீருந்து விசைப்படகுகள், பீரங்கிக் கப்பல்களைத் தகர்த்து, சிறிலங்கா கடற்படையை ஈழக்கடல் எல்லைக்குள் நுழையவிடாமல் தடுத்து வைத்திருந்தார்கள். வித்தாகிப்போன கரும்புலிகளில் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் கடற்கரும்புலிகள். [/size] [size=3]படிப்படியாகப் பரிணாமம் அடைந்த கரும்புலிகளின் அணி, விமானப்படைத் தளங்களை இலக்கு வைத்தது. கண்மூடித்தனமாகக் குண்டுகளை வீசி, கொத்துக்கொத்தாக மக்களைக் கொன்றுகுவித்த விமானங்களை அதன் இருப்பிடத்திலேயே அழிக்கத் தீர்மானித்து 1994ம் ஆண்டு பலாலி விமானத்தளத்திற்குள் நுழைந்த ஐந்து கரும்புலிகள் பெல்-212 உலங்கு வானூர்தியையும் பவள் கவச வாகனத்தையும் அழித்து புதிய அத்தியாயத்தைத் தொடக்கி வைத்தனர். இருபத்தியோரம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், கட்டுநாயக்கா விமானப்படைத் தளத்தின் மீது நடாத்தப்பட்ட கரும்புலித் தாக்குதலில் 28 வான்கலங்கள் அழிக்கப்பட்டன. கரும்புலிகளின் உச்சகட்டச் சாதனையாக நடைபெற்ற இத்தாக்குதலில் சிறிலங்காவின் பொருண்மியவளம் ஏறத்தாழ முழுமையாகச் சிதைக்கப்பட்டது.[/size] [size=3]வெடிமருந்து நிரப்பிய வாகனத்துடன் இலக்கை அழிக்கப் புறப்பட கரும்புலிகளின் பயணம், படிப்படியாக கடலிலும், விமானப்படைத் தளங்களிலும் வியாபித்து, தாக்குதல் அணிகளாக உருவாக்கம் பெறுமளவிற்கு அவர்களின் பங்களிப்பு வளர்ந்து கொண்டே சென்றது. ஆட்லறிகள், ஆயுதக்களஞ்சியம், கட்டளைப்பீடம் என எல்லா இலக்கிலும் தமது உயிரை ஆயுதமாக்கினார்கள். ஒவ்வொரு தாக்குதலும் கரும்புலிகளின் அர்ப்பணிப்பில்தான் ஆரம்பிக்கும். தனித்தனியாகவும் குழுக்களாகவும் தமது இலக்கைத் தேடிச் சென்றார்கள். [/size] [size=3]உலகில் எந்த ஆயுதத்தாலும் வெற்றிகொள்ளப்பட முடியாததும் எத்தகைய தொழில்நுட்பத்தாலும் தடுக்கப்பட முடியாததுமான கரும்புலிகளின் மனோதிடம்தான் எமது மக்களின் வலிமையான ஆயுதபலமாக இருந்து போராட்டத்தினை திடமாக முன்நகர்த்திச் செல்ல வழிவகுத்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை தங்களது ஒவ்வொரு வெடிப்பினூடும் முன்நகர்த்திச் சென்ற கரும்புலிகளின் ஆன்மபலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அசைக்க முடியாத பலமாகத் திகழ்ந்தது.[/size] [size=3]போராளிகள்கூட பல தருணங்களில், தமது தியாகம் கள முனையில் பாரிய மாற்றத்தை கொண்டுவரும் என்று எண்ணிய சந்தர்ப்பங்களில், தற்கொடையாளர்களாகச் செயற்படத் தவறுவதில்லை. உதாரணமாக ஓயாத அலைகள்-02 தாக்குதல் நடவடிக்கையின்போது பரந்தனில் இருந்து கிடைக்கும் உதவியைத் தடுக்கும் நோக்குடன், தளபதி பால்ராஜ் தலைமையில் உருவாக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியைத் தலைமைதாங்கிய லெப்.கேணல் செல்வி மற்றும் லெப்.கேணல் ஞானி ஆகியோரின் இடங்களில் தீவிர சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்தது. முன்னேறிய இராணுவம் அவர்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்த நிலைகளைச் சுற்றி வளைத்துவிட்டது. எதிரிக்குள் இருந்த அவர்கள் நிலைமையை உணர்ந்து ”நாங்கள் நிற்கும் அப்பகுதிக்கு ஷெல்லை அடியுங்கோ எங்களைப்பற்றி ஒன்றும் யோசிக்க வேண்டாம். அப்படிச் செய்தால்தான் எதிரியை அழிக்கமுடியும்” எனக் கூறினர். அவர்கள் எதிரிக்குள் நின்று தமது தாக்குதலை நடாத்திக்கொண்டிருக்க அப்பகுதிக்குள் செறிவாக மேற்கொண்ட ஷெல் தாக்குதலில் எதிரி அழிக்கப்பட்டான். அதேவேளை அவர்களும் வீரச்சவைத் தழுவிக்கொண்டனர். [/size] [size=3]பிறிதொரு சம்பவத்தில் மாங்குளம் ஒலுமடுவில் எமது நிலைகளை அழிக்க ராங்கிகளை மட்டும் பயன்படுத்திக் கொண்டு இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்தது. அதில் ஒரு ராங்கி எமது நிலைக்கருகில் வந்துவிட அந்த நிலையில் இருந்த கப்டன் அன்பழகன் தன்னுடன் நின்ற சகபோராளிகளை காப்புச்சூடு வழங்குமாறு கூறிவிட்டு, கைக்குண்டுடன் பாய்ந்து சென்று ராங்கியில் ஏறி குண்டைப்போட்டு ராங்கியை அழித்து தானும் வீரச்சாவடைந்தான். இப்படி பல சண்டைகளில் படையணிப் போராளிகள் கூட சந்தர்ப்பத்திற்கேற்றவாறு கரும்புலிகளைப் போன்று செயற்பட்டு தாக்குதலின் பிரதான வெற்றிக்காகத் தங்களை ஆகுதியாக்கினார்கள்.[/size] [size=3]ஈழவிடுதலைப் போராட்டம் இவ்வாறு பல தியாகங்களின் அடித்தளத்தில் உருவாக்கப்பட்டது. இந்த இளைஞர்கள் தமது சுகங்களை துறந்து புனித இலட்சியப் பிரவாகத்திற்கு வித்திட்டார்கள். கரும்புலிப் போராளிகள்தான் இந்த இலக்கை அழிக்கவேண்டும் என்று பிடிவாதம் பிடித்து அதைச் செய்து வீரச்சாவடைந்த சந்தர்ப்பங்கள் பல. அவர்கள் தங்களது சந்தோசமான வாழ்க்கையைப் பற்றி சிந்திக்கவில்லை. இன விடுதலைக்கு என்ன தேவையோ அதற்காக எந்த ஈகத்தைச் செய்யவேண்டுமோ அதை எந்த வடிவில் செய்ய வேண்டுமோ, அதைச் செய்ததன் வெளிப்பாடாக இந்தப் போராட்டம் உயர்ந்து நின்றது. இன்றுவரை முகம் தெரியாமல் தம்மை தற்கொடையாக்கிய எத்தனை கரும்புலிகளின் தியாகம் பேசப்படாமல் இருக்கின்றது. போராளி என்பதற்கான எந்தவித பதிவும் இன்றி, கல்லறையோ, நினைவிடமோ இல்லாமல், இறந்துபோன செய்திகூட தெரிவிக்கப்;படாத மறைமுகக் கரும்புலிகளின் அர்ப்பணிப்பு மானிட நியதிகளுக்கு அப்பாற்பட்டது. அவர்கள் விளம்பரத்திற்காக ஈகம் புரியவில்லை. விடுதலைக்காக தமது அடையாளங்களைக்கூட மறைத்த உன்னத சீலர்கள்.[/size] [size=3]இலக்குடன் சேர்ந்து தம்மையும் சிதறவைத்து ஆகுதியான அந்த ஆத்மாக்களின் வித்துடல்கள் எமக்கு வருவதில்லை. ஆனால் அவர்களின் குருதி ஈழமண்ணோடு கலந்திருக்கின்றது. ஈழக்காற்றில் அவர்களின் சுவாசம் நிறைந்திருக்கின்றது. அவை எப்போதும் பிரித்தெடுக்க முடியாதவை. வணக்கத்துக்குரிய அவர்களின் தியாகம் இன்றைக்கு மட்டுமல்ல ஒவ்வொரு நாளும் நினைவுகூரப்பட வேண்டியது[/size] [size=3]அபிஷேகா[/size] [size=3]abishaka@gmail.com[/size]
  2. விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் மகுடம் சேர்த்த, உலகப் போரியல் வரலாற்றில் தனியிடம் பெற்ற, தென்னாசியாவின் சிறந்த தரையிறக்கச் சண்டையாகப் பதியப்படக்கூடிய வகையில் தனித்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் இத்தாவில் பெட்டிச்சமரை வழிநடாத்திய தலைமைத் தளபதி பால்ராஜ் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுதினம் இன்று. தளபதி பால்ராஜ் அவர்களின் போராற்றலை எடுத்தியம்புவதற்கு பல தாக்குதல்கள், சண்டைகள், சமர்கள் இருந்தாலும் சிறப்பு வாய்ந்ததாக அமைவது இத்தாவில் பெட்டிச்சமர். சிங்களப்படைகளின் முதன்மைத் தளபதிகள் வகுத்த திட்டங்கள், தந்திரோபாயங்கள் மட்டுமன்றி சர்வதேச இராணுவ வல்லுனர்களின் ஆலோசனைகளையும் தவிடுபொடியாக்கிய சண்டை. புலிகளின் இராணுவ வல்லமையை உலகறிய வைத்த அந்த வரலாற்றுச் சமரின் நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நான்காம் ஆண்டில் இத்தாவில் சமர் பற்றிய சில விடயங்களை நினைவு மீட்பது பொருத்தமானது. ஓயாத அலைகள் எனப் பெயரிட்டு முன்னெடுக்கப்பட்ட வலிந்த தாக்குதலின் கட்டம் ஒன்று, இரண்டு நடவடிக்கைகளில் வன்னிப்பகுதியின்; பிரதேசங்கள் மீட்கப்பட்டன. அதன் அடுத்த கட்டமான ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை யாழ்குடாநாட்டை மீட்பதற்கான நடவடிக்கையாக முன்னெடுக்கப்பட்டது. ஏறத்தாழ குடாநாட்டின் மொத்த சனத்தொகையின் பத்திலொரு பங்களவிலான இராணுவம், பல இராணுவத்தளங்கள், கட்டம் கட்டமான பாதுகாப்பு வேலிகள், கடற்படைத்தளங்கள்,விமானப்படைத்தளம் என முழுமையாக இராணுவமயப்படுத்தப்பட்ட பிரதேசமாகவே யாழ்குடாநாடு இருந்தது. குடாநாட்டின் பாதுகாப்பு அரணாக, இரும்புக்கோட்டையாக இருந்தது ஆனையிறவுத்தளம். ஏனைய மாவட்டங்களுடன் யாழ் மாவட்டத்தை இணைத்து நின்ற ஒரே தரைவழிப்பாதையான ஏ-9 வீதியை உள்ளடக்கி அமைக்கப்பட்டிருந்த ஆனையிறவுத் தளம் வன்னி பெருநிலப்பரப்பின் உப்பளப் பகுதியையும் உள்ளடக்கியிருந்தது. ஆனையிறவின் பௌதீக அமைப்பு, நேரடி முற்றுகைத் தாக்குதலுக்கு முற்றிலும் சாதகமற்ற தன்மையைக் கொண்டது. பரந்த வெட்டை,கடல் நீரேரி, சதுப்பு நிலம் என சிங்களப்படைக்கு வாய்ப்பான களமுனையாக அமைந்திருந்தது. 1991ம் ஆண்டு ஆ.க.வெ எனப் பெயரிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கை தோல்வியில் முடிந்தமைக்கு பிரதான காரணம் ஆனையிறவின் பௌதீக அமைப்புத்தான். யாழ்குடாநாட்டுக்கான தாக்குதலின் காத்திரத்தன்மை ஆனையிறவுத் தளத்தின் வீழச்சியில்தான் தங்கியிருந்தது என்பதால், அதன் பௌதீக அமைப்பில் உள்ள சிக்கல்களை உணர்ந்த தலைவர் ஆனையிறவுத் தளத்தின் மீது நேரடியாகத் தாக்குதலை தொடுக்காமல், தனிமைப்படுத்துவதன் மூலம் வெற்றி கொள்ளலாம் என்பதனடிப்படையில் மூலோபாயங்களை வகுத்தார். ஏனெனில்;,பதினான்காயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தைக் கொண்ட பலமான தளமாக இருந்தாலும், அதற்கான விநியோகம் சாவகச்சேரி, பலாலி பிரதான தளங்களில்தான் தங்கியிருந்தது. எனவே அந்த உயிர்நாடியை இறுக்கி, இராணுவத்தின் விநியோகத்தை தடுப்பதுதான் தாக்குதலுக்கான பிரதான தந்திரோபாயமாகக் கண்டறிந்தார் தலைவர். இந்தச் சூழலில், விநியோகத்தை தடுத்தி நிறுத்தி சண்டையிடக்கூடிய பொருத்தமான இடம் எது என்பதை ஆய்வு செய்த தலைவரும் தளபதியும் ஆரம்பத்தில் பளைக்கும் புதுக்காட்டுச் சந்திக்கும் இடையில் உள்ள பகுதியில் பொருத்தமான இடத்தை தெரிவு செய்வதற்கு திட்டமிட்டனர். இதற்கான சாத்தியப்பாடுகளை மதிப்பிடுவதற்கான வேவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. என்றாலும் வேவு அணிகளின் தகவல்கள் திட்டத்தின் சாத்தியமின்மையை வெளிப்படுத்தியதால் அந்த இடம் கைவிடப்பட்டது. எந்தவொரு பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கவே செய்யும். அதைச் சரியாக கண்டறிந்து திட்டமிட்டுத் தாக்குவதில்தான் வெற்றியின் ரகசியம் தங்கியிருக்கின்றது என்ற கொள்கையுடைய தலைவர், தளபதியுடன் அதற்கான அடுத்த சாத்தியப்பாட்டை ஆராய்ந்தார். அதன்படி பளைக்கும் எழுதுமட்டுவாளுக்கும் இடையில் இருந்த பிரதேசம் பொருத்தமாக இருந்ததால், விநியோகத்தை தடுக்கும் களமாக இத்தாவில் தெரிவாகியது. அதற்கு ஏற்றவகையில், வடமராட்சி கிழக்கின் குடாரப்பு – மாமுனைக் கரையோரம் தாக்குலுக்கான தரையிறக்கத்தைச் செய்வதற்குப் பொருத்தமான இடமாகத் தேர்வு செய்யப்பட்டது. எமது கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து 5 கிலோ மீற்றர் கடலால் நகர்ந்து இரண்டு இராணுவ முகாம்களிற்கு நடுவில் இருந்த குடாரப்பு மாமுனையில் தரையிறங்கி,வடமராட்சி கிழக்கையும் தென்மராட்சியையும் பிரித்து நிற்கும் சதுப்புக் கடல் நீரேரியைக் கடந்து பத்துக் கிலோ மீற்றர் தூரம் நகர்ந்து கண்டி வீதியை மறித்து நிற்கவேண்டும். அங்கு ஒரு கிலோ மீற்றர் நீளம் அகலத்தைக் கொண்ட பெட்டியமைத்து விநியோகத்தை தடுப்பதன் மூலம் ஆனையிறவை வெற்றிகொள்வதற்கு முடிவெடுக்கப்பட்டது. மிகவும் சவாலானதும் ஆபத்தானதுமான இக்களத்தை தளபதி பால்ராஜ் அவர்களிடம் பொறுப்புக் கொடுத்த தலைவர், 'ஆனையிறவிற்கான சண்டையை நீதான் நடத்தப்போறாய், நீ பெரிய வீரன், எத்தனையோ சோதனைகளை உனக்கு நான் தந்திருக்கிறன், நான் உனக்கு வைக்கிற முக்கியமான சோதனையிது, உன்னுடன் 1200பேரையும் குடாரப்பில் சூசை தரையிறக்கி விடுவான்;. சிக்கலென்றால் உங்களை உடன காப்பாற்றி வர ஏலாது, ஆனால் நீ ஏ-09 நெடுஞ்சாலையை இடைமறிச்சு யாழ்ப்பாணத்திலிருந்து ஆனையிறவிற்கு வரும் விநியோகத்தை நிறுத்தவேணும். அதைச் செய்தால் ஆனையிறவு தானா வீழும்;, நான் குடாரப்பில தரையிறக்கி விடுவன், நீ ஏ-09 றோட்டாலதான் வரவேண்டும்' எனக்கூறி தனது திட்டத்தை விளக்கினார். குடாரப்பு - இத்தாவில் பகுதியின் தரைத்தோற்றமானது சண்டையிடுவதற்கு சாதகமான இடமாக கருதமுடியாது. தரையிறங்கும் குடாரப்பு மணற்பரப்புக்களுடன் பனை, சிறுபற்றைக் காடுகளைக் கொண்ட பிரதேசம். குடாரப்பிலிருந்து இத்தாவிலுக்கு இடைப்பட்ட பகுதி சதுப்பு நிலத்துடன் கூடிய கண்டல் மரங்கள் வளர்ந்திருக்கும் நீரேரியைக் கொண்ட பிரதேசம். இந்த நீரேரியைத் தாண்டித்தான் இத்தாவிலுக்குள் கனரக ஆயுதங்கள், வெடிபொருட்கள் சகிதம் நகரவேண்டும். அது மட்டுமன்றி, காயம், வீரமரணங்களை அப்புறப்படுத்தல் உட்பட அனைத்து விநியோகங்களும் இந்த நீரேரிக்குள்ளால்த்தான் செய்யமுடியும். அப்பகுதிக்கான விநியோகங்களோ, காயப்பட்டவர்களை வெளியில் எடுப்பதோ, படையணிகளை நகர்த்துவதோ உடனடிச் சாத்தியமில்லாத தரையமைப்பு. அத்துடன் தளபதி தீபன் அவர்கள் தாளையடி முகாமைத் தகர்த்து, விநியோகத்திற்கான தரைவழிப்பாதையை ஏற்படுத்தும் வரை அணிகள் கொண்டு செல்லும் வெடிபொருட்கள், உணவு போன்றவற்றை வைத்தே தாக்குதலில் ஈடுபடவேண்டியிருந்தது. இப்படியான சாதகமில்லாத தரையமைப்பு, சூழலை சாத்தியமான களமாக மாற்றி வெல்லவேண்டும் என்பது மட்டுமல்ல குடாரப்பில் தரையிறங்கி, கவசவாகனங்கள்,நவீன விமானப்படை மற்றும் கடற்படை உள்ளிட்ட அதிவல்லமை பொருந்திய படைகள், சிறப்புப்படைகளின் நடுவே, அவர்களின் பிடரிக்குப் பின்னால் நின்று மோதுவது என்பது கற்பனை செய்து பார்க்கமுடியாத செயல். சிறிலங்கா அரசபடையின் பலத்துடனும் ஒப்பிடும்போது குறைந்தளவு போராளிகளுடன் எதிர்கொள்வது என்பது சாதாரணமானதல்ல என்று கருதினாலும் ஆன்மபலம்மிக்க,போரிடும் தன்மைகொண்ட வீரப்பரம்பரையின் வித்துக்களை வைத்து உறுதியாக சண்டை பிடிக்கலாம், வெல்லலாம் என்பதில் திடமான நம்பிக்கை கொண்டவர்கள் புலிகள். மேலும் 'இந்த ஊடறுப்பு மறிப்புத் தாக்குதலைச் செய்வதற்கு தரப்பட்ட போராளிகளை வைத்து உனக்குத் தந்த பொறுப்பை நிறைவேற்றவேண்டும். மேலதிக உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்காதே' எனவும் தலைவர் கூறியிருந்தார். எனவே போராளிகளைப் பாதுகாத்து சண்டையிட்டு ஆனையிறவின் வீழ்ச்சிவரை விநியோகத்தை தடுத்து நிற்கவேண்டும் என்பதில் உள்ள கடினம் தளபதிக்குத் தெரியும். தாக்குதலுக்கான பயிற்சியின்போது தனது போர் அனுபவங்கள், சிங்களப்படைகளின் பலவீனங்கள், கிளிநொச்சியில் ஊடறுத்து நின்றபோது ஏற்பட்ட அனுபவங்கள், அங்கு இராணுவத்தை எதிர்கொண்ட முறைகள் போன்றவற்றை பகிர்ந்து போராளிகளின் மனவுறுதியையும், மனோபலத்தையும் மேலும் மேம்படுத்தினார். ஆனையிறவின் வெற்றி கைகூடுவதின் பிரதான தாக்குதல் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்து தலைவரின் எண்ணத்தை நிறைவேற்றுவற்காக கடுமையாக உழைத்தார். தாக்குதலுக்கான திட்டத்தை போராளிகளுக்கு விளங்கப்படுத்தியதுடன் சிங்கள இராணுவம் எப்படிப்பட்ட உத்திகளைப் பயன்படுத்துவான்,அப்பிரதேசத்தில் எதிரி எப்படிப்பட்ட நகர்வுகளைச் செய்யமுடியும்,குறிப்பாக 'ராங்கிகளின் உதவியுடன் எதிரி நகரும்போது ராங்கியைப்பற்றி கவலைப்படாமல், அதை விட்டிட்டு வரும்படையினரைக் கொல்லுங்கள்,ராங்கியால தனிய வந்து ஒன்றும் செய்ய ஏலாது. அது ஒரு குருட்டுச்சாமான்,கிட்டப்போனால் என்ன நடக்கென்று ராங்கியில் உள்ளவர்களுக்குத் தெரியாது,ராங்கியை விட்டிட்டு பின்னால ஏறி குண்டை கழற்றிப்போட்டு ராங்கியை அழிக்கலாம்' என நம்பிக்கையுடன் நகைச்சுவையாக கதைக்கும் அவரது பாணி எந்த புதிய போராளியையும் சிலிர்த்தெழச்செய்யும். தன்னம்பிக்கையுடன் உத்வேகமாகப் போராடச்செய்யும் தன்மை கொண்டது. போராளிகளுக்கு சண்டையின் தன்மைபற்றியும் அதில் வரும் ஆபத்துக்களை எதிர்கொள்ளும் முறைபற்றியும் தெளிவுபடுத்தி சரியான விளக்கத்துடன் தயார்ப்படுத்தினால் இலகுவாகவும் விளையாட்டாகவும் சண்டை பிடிக்கக்கூடிய மனோநிலை அவர்களுக்கு உருவாகும் என்பது அவரது நம்பிக்கை. அது இத்தாக்குதலுக்கு மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து அணிகளை தயார்ப்படுத்துவதற்காக உழைத்தார். பயிற்சியின்போது ஒவ்வொரு சிறிய விடயங்களையும் உன்னிப்பாகப் பார்த்து, உலக வரலாறு ஒருகணம் ஸ்தம்பித்துப் பார்க்கப்போகின்ற யுத்தத்திற்காக தலைவரின் வழிகாட்டலுடன் ஒவ்வொரு விடயமாக செருக்கிச் செருக்கித் தயார்ப்படுத்தினார். 26.03.2000 அன்று, இருட்டுப் பரவத் தொடங்கிய நேரம் ஊடறுப்புத் தாக்குதல் படையணிகள் சுண்டிக்குளக் கடற்கரையில் தயாராகிக்கொண்டிருந்தன. பல களமுனை கட்டளைத் தளபதிகளும் வழியனுப்புவதற்காக ஒன்றாகக் கூடியிருந்தார்கள். எல்லோரது முகத்திலும் ஏதோ ஒரு பரபரப்பு. தரையிறக்குவதற்கு தயாராகிப் புறப்படுவதற்குமுன் போராளிகளுடன் கதைத்த தளபதி பால்ராஜ் அவர்கள் 'எதிரி ஆக்கிரமித்துள்ள எங்களுடைய யாழ் மண்ணில் மீண்டும் நாம் காலடி எடுத்து வைக்கப்போகின்றோம். நாங்கள் வெல்லப்பட முடியாதவர்கள் என்பதை எதிரிக்கு சொல்லிவைக்கப் போகின்றோம். புலிகள் யார் என்பதை எதிரிக்கு காட்டப் போகின்றோம்' என்று கூறினார். தளபதியின் ஆக்ரோசமான வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டு போராளிகள் மிகுந்த சந்தேசத்துடனும் தெம்புடனும் படகுகளில் ஏறி தாக்குதலுக்கு தயாரானார்கள். இத்தாக்குதலில் பங்குகொண்ட தளபதிகளான துர்க்கா, விதுஷா, ராஜசிங்கம் உட்பல பல தளபதிகளும் தங்களது அணிகளுடன் புறப்படத் தயாராகினர். சமநேரத்தில், ஊடறுத்து நிற்கும் தாக்குதல் அணிகளுக்கான தரைவழித் தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கும் பொறுப்பை, முக்கியமாக ஊடறுப்புத் தாக்குதலின் தொடர் இருப்பை தீர்மானிக்கும் பிரதான களமுனையைப் பொறுப்பெடுத்த தளபதி தீபன் தலைமையிலான அணி தாளையடி இராணுவ முகாம் மீது தாக்குதல் நடாத்துவதற்கு தயாராகினர். ஏனெனில் தாளையடியை ஊடறுத்து கரையோரப்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தாலே ஊடறுப்பு அணிக்கான விநியோகங்களை செய்யலாம் என்பது இந்நடவடிக்கையின் வெற்றியில் பிரதான பங்கை வகித்தது. ஆனையிறவு வெற்றியைத் தீர்மானிக்கும் வரலாற்றுச் சமருக்கான அணிகள் தரையிறங்க வேண்டிய இடத்தின் பாதுகாப்பை உறுதி செய்த வேவு அணிகள் குடாரப்புக் கரையில் முன்மறிப்புப் போட்டுத் தயாராக இருந்தன. தாக்குதல் அணிகள் சிறிய படகுகளில் தரையிறங்கும் குடாரப்பு பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. படகுகளில் அணிகள்; நகர்வதை தாளையடி முகாமிலிருந்த இராணுவம் ராடரில் அவதானித்து கடற்படைக்குத் தகவல் வழங்கியது. தரையிறக்க அணிகளின் படகுகளை தாக்குவதற்கு கடற்படையின் டோறா படகுகள் முயற்சியெடுக்க, கடற்புலிகளின் சண்டைப்படகுகள் தளபதி சூசை தலைமையில் கடற்தாக்குதலை ஆரம்பித்தனர். இதனால் தரையிறக்கச்சண்டை நடுக்கடலிலேயே ஆரம்பமானது. கடற்புலிகள் தாக்குதலை மேற்கொண்டு டோறாக்களை தடுத்து வைத்திருக்க, முதலாவது தரையிறக்க அணி தளபதி பால்ராஜ் அவர்களுடன் தரையிறங்கியது. முதலில் தரையிறங்கியவர்கள் அங்கிருந்த மினிமுகாம் ஒன்றையும் தகர்த்து, தங்களது இலக்கு இடங்களை நோக்கி முன்னேறினர். தரையிறங்கிய இடத்தில் கடுமையான எறிகணைத் தாக்குதல்களை எதிரி நடாத்திய போதும் விநியோகப்பாதையை தடுக்கும் மூலோபாய நகர்வை சரியாக மேற்கொண்டு, இத்தாவிலில் கண்டிவீதியை மறித்து கிட்டத்தட்ட ஒரு சதுரக்கிலோ மீற்றர் பரப்பளவை உள்ளடக்கி நிலையமைத்திருந்தனர். பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்து அணிகளையும் ஆயுதங்களையும் நிலைப்படுத்தினர். போராளிகள் சண்டையில் நிற்கின்றோம் என்பதை விட தயார்ப்படுத்தல் பயிற்சி செய்வதைப்போல தங்களை தயார்ப்படுத்தினர். பால்ராஜ் தலைமையில் படையணிகள் கண்டி வீதியை ஊடறுத்து நிற்கின்றன என்பது சிங்களப் படைத்தலைமைக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் கனரகப்பீரங்கி, ஆட்லறி, பல்குழல் பீரங்கி, விமானப்படை, ராங்கிகள், துருப்புக்காவிகள்,பல்லாயிரக்கணக்கான இராணுவத்தினர் மூன்றுபக்கமும் சுற்றி நிற்க அதற்கு நடுவே,சாகமில்லாத தரையமைப்பிற்குள் முக்கியமாக, நீரேரியால் பிரிக்கப்படும் ஒரு சிறு நிலப்பரப்பிற்குள் புலியணிகள் நிலை கொண்டதும் அதற்;குள் பால்ராஜ் நிற்கின்றார் என்பதும் சிங்களப்படைக்கு அதிர்ச்சிக்குரிய விடயமாகவும் மனோதிடத்தை பலவீனப்படுத்தும் விடயமாகவும் இருந்தது. 1998ம் ஆண்டு கிளிநொச்சியில் ஊடறுத்து நின்ற பால்ராஜ் அவர்களின் மறிப்பை உடைக்க முடியாததன் விளைவே கிளிநொச்சி முகாமின் வீழ்ச்சிக்கான அடிப்படை என்பதை நன்கு உணர்ந்திருந்தார்கள். அதனால் பால்ராஜின் அணிகள் முழுமையாக நிலைபெறுவதற்கு முன் அவர்களை அழித்தொழிக்க வேண்டும் அல்லது அப்புறப்படுத்த வேண்டும் என்பது அவர்களிற்கு பிரதான விடயமாகியது. சிங்களத்தலைமை ஆச்சரியத்துடன் பார்க்க, இரண்டில் ஒன்று பார்த்துவிடுவம் என்று புலியணிகள் தயாராகி நிற்க, இத்தாவில் சண்டைக்களத்தில் புதிய வீர வரலாற்றைப் பதிய ஆயத்தமாகினர். இத்தாவில் பெட்டிச்சமரை ஸ்ராலின்கிராட் சண்டையுடன் ஒப்பிடலாமா? அல்லது நோமன்டித் தரையிறக்கத்துடன் ஒப்பிடலாமா? என்றால் அந்த களச்சூழல்களைத் தாண்டி இத்தாவில் பெட்டிச்சமர் தனித்துவமாகவே தெரியும். சாத்தியமில்லாத தரையமைப்பில் குறைந்தளவிலான வளங்களுடன்; குறிப்பிட்டளவு போராளிகளையும் வைத்துக்கொண்டு 40000 சிங்களப்படைகளின் நடுவே, அதி நவீன ஆயுதங்கள், முப்படைகளின் தாராளமான உதவிகள், சர்வதேச இராணுவ வல்லுனர்களின் ஆலோசனைகள், தொழில்நுட்ப உதவிகள் போன்றவற்றை தன்னகத்தே கொண்ட படையினரை ஊடறுத்து நிற்பது என்பது புலிகளுக்கு மட்டுமே இருந்த அல்லது தமிழர்களுக்கு இருக்கும் மனோபலத்தின் வெளிப்பாடு. பால்ராஜ் அவர்களிடம் பலவருடங்களாகத் தோல்வியைச் சந்தித்த சிங்களத் தளபதிகள் பலரும் அந்த களமுனையின் தளபதிகளாக இருந்ததால், பால்ராஜ் அவர்களை வெற்றிகொண்டு பழிதீர்க்க கிடைத்த ஒரு சந்தர்ப்பம் என்ற மன உணர்விலும்; சிங்களப் படைத்தலைமை தீவிரமான எதிர்த்தாக்குதலை முன்னெடுக்கத் திட்டமிட்டது. தனது தளபதிகளிடம் கதைக்கும் போது |என்னட்ட அடிவாங்கி ஓடினவைதான் இப்ப ஒன்றாய்ச் சேர்ந்து வந்திருக்கினம், இவையள் இந்தமுறையும் வெல்லிறதைப் பார்ப்பம்| என்று பால்ராஜ் கூறினார். இத்தாவிலில் உருவாக்கப்பட்ட போர்வியூகத்தை உடைப்பதற்காகவும் கண்டிவீதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவும் கடுமையாகப் போரிட்டது சிங்களப்படை. உக்கிரமான சமர். எதிரி புலிகளின் நிலைகளை உடைப்பதும், அதை புலிகள் மீளக் கைப்பற்றுவதுமாக, நீண்ட நேரமாக தக்கவைப்பதற்காகவும் கைப்பற்றுவதற்கானதுமான சண்டைகள் நடைபெற்றன. அர்ப்பணிப்பும் உறுதியும் நிறைந்த போராளிகளின் செயல்வீரம், அவர்களின் தீவிரமான போரிடும் ஆற்றல்,மெய்சிலிர்க்க வைக்கும் தியாகங்கள், நிலைகளை விடாமல் தனித்து நின்று சமரிட்ட பண்பு, அவர்கள் வெளிப்படுத்திய துணிச்சலான செயற்பாடுகள் இத்தாவில் பெட்டியை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. கிட்டத்தட்ட பத்திற்கு மேற்பட்ட பெரியளவிலான படையெடுப்புக்கள், பதினைந்திற்கும் மேற்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் என முப்பத்துநான்கு நாட்களாகக் கடுமையான பல சண்டைகளை எதிர்கொண்டது புலிகள் சேனை. பொதுவாகவே இராணுவம் காலைவேளைகளில்தான் தனது தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடங்கும். ஒரு தடவை, காலை இராணுவம் தனது நகர்வை செய்யவில்லை. எனவே களமுனைத்தளபதிகளுடன் சண்டை தொடர்பாகக் கதைக்கத் தீர்மானித்த தளபதி மதியமளவில் களமுனைத் தளபதிகளை தனது கட்டளைமையத்திற்கு அழைத்திருந்தார். அவர்களுடன் கதைத்துக்கொண்டிருந்தவேளை (தொலைத்தொடர்பு கண்காணிப்பின் மூலம் எல்லோரும் கட்டளைமையத்தில் இருக்கின்றனர் என அறிந்து), சிங்களப்படை நீரேரிக்கரையால் திடீர் ஊடறுப்புத் தாக்குதலை மேற்கொண்டு பால்ராஜ்; அவர்களின் கட்டளைமையத்திற்கு அருகில், கிட்டத்தட்ட 25 மீற்றரில் அமைந்திருந்த கட்டளை மையத்திற்கான பாதுகாப்பு நிலையில் சண்டையைத் தொடங்கினான். அதிலிருந்து 75மீற்றரில் ராங்கிகள், பவள் கவசவாகனங்கள், துருப்புக்காவிகள் கட்டளை மையத்தைத் தாண்டி சென்று கொண்டிருந்தன. இராணுவத்தால் |வெலிகதற| எனப் பெயரிடப்பட்ட இத்தாக்குதல் நடவடிக்கையானது இத்தாவில் பக்க கண்டல் நீரேரிக்கரையால் ஊடறுத்து ஒட்டுமொத்த தரைத்தொடர்பையும் துண்டித்து, நிலைகொண்டிருக்கும் அணிகளை அழிக்கும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். கட்டளைமையத்தில் பாதுகாப்பிற்கு நின்றவர்கள் இராணுவத்தைக் கண்டு சண்டையைத் தொடங்க, நிலமையை புரிந்து சுதாகரித்த தளபதி, நிதானமாக களமுனைத் தளபதிகளை அவரவர் இடங்களுக்குச் செல்லுமாறு கூறிவிட்டு,தனக்கருகில் சண்டை நடக்கின்றது என்பதைப்பற்றி அலட்டிக்கொள்ளாமல், அங்கு நடந்த சண்டையையும், எதிரி ஊடறுத்து வந்த இடங்களை மீளக்கைப்பற்றுவதற்கான கட்டளைகளையும் எந்தவித பதட்டமும் இல்லாமல் வழங்கிக் கொண்டிருந்தார். இராணுவம் ஊடறுத்து வந்த பகுதியில் விடுபட்ட நிலைகளைத் தவிர ஏனைய நிலைகளைத் தக்கவைத்து அங்கிருந்து தொடர்ச்சியாக தாக்குதலை மேற்கொண்டனர். ஆர்.பி.ஜி கொமாண்டோஸ் அணிகள் சிங்களப்படையின் துருப்புக்காவிகள்,ராங்கிகள் மீது தாக்குதலை நடாத்தினர். ஒரு ராங்கி அழிக்கப்பட்டதுடன் பல ராங்கிகள் சேதமாக்கப்பட்டன. இரண்டு பவள் கவசவாகனங்கள் கைப்பற்றப்பட்டன. உள்நகர்ந்த எதிரியை அழிக்க வகுத்த உடனடித் திட்டத்தில் எதிரி நகர்ந்த இடங்களிலெல்லாம் தாக்குதலுக்குள்ளானதால் திணறிய எதிரி செய்வதறியாது,திரும்பியும் போகமுடியாமல் திண்டாடினான். இதில் நடந்த தற்துணிவான சம்பவங்கள் பல, உதாரணமாக சண்டையிட்டுக்கொண்டிருந்தபோது ரவை முடிந்துபோய் இருந்த பெண் போராளியின்; நிலைக்குள் பாய்ந்து கொண்டான் ஒரு சிப்பாய். அவனது துவக்கையே பறித்து அவனை சுட்டுவீழ்த்தினார். அதுபோல ரவை முடிந்ததும் செல்லால் அடித்து ஒரு எதிரியை வீழ்த்தினார் இன்னுமொரு பெண்போராளி. இதுபோல பல சம்பவங்கள் இந்த சண்டைக்களத்தில் நடைபெற்றன. பிறிதொரு சம்பவத்தில், ராங்கிகள் வந்தபோது அவற்றின் மீது குண்டு வீசி அழித்த பெண்புலிகளின் வீரம் என்பது புறநானுறுக்குப் பின் தமிழ்ப்பெண்களின் வீரத்திற்கான எடுத்துக்காட்டு. இறுதியாக இருட்டு வேளையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி பாரிய இழப்புடன் பின்வாங்கியது இராணுவம். எப்போதும்; போராளிகளின் உளவுரணை தனது உறுதியான கட்டளை மூலம் தெம்பாக வைத்திருப்பது பால்ராஜ் அவர்களின் குண இயல்பு. ஒரு பெண்போராளி ஒரு பகுதிக்கான தாக்குதலை வழிநடாத்திக் கொண்டிருந்தார். நீண்ட நேரமாக இறுக்கமாக சண்டை தொடர்ந்து கொண்டிருந்தபோது தொடர்பு கொண்ட தளபதி'எங்கட கடைசி மூச்சு இருக்கும் வரைக்கும் எதிரி நினைக்கிறதை அடைய விடக்கூடாது. வந்த எதிரிகளுக்கு நாங்கள் யார் எண்டதைக் காட்டிப்போட்டு விடவேணும்' என்று கூறினார். அப்போராளிகளும் கடுமையாகச் சண்டையிட்டு இராணுவத்தை பலத்த இழப்புகளுடன் பின்வாங்கச் செய்தனர். மற்றும் சண்டைக்கான கட்டளையை வழங்கும் சமநேரத்தில் விநியோகம் சரியாக செல்கின்றதா? காயம், வீரச்சாவடைந்தவர்களை அனுப்புதல் உட்பட களத்தின் சகல ஒழுங்குபடுத்தல்களையும் கவனித்துக்கொண்டிருப்பார். சிறிலங்காவின் முப்படைத்தளபதிகளும் பலாலியில் இருந்து இத்தாவில் முற்றுகைச் சின்னாபின்னமாக்க நினைத்தபோதும் அது அவர்களால் முடியாத காரியமாகவே இருந்தது. இந்நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவத்தின் பெருமைமிக்க தளபதிகளான பிரிகேடியர் காமினி கொட்டியாராச்சி, வான்நகர்வு பிரிகேட் கட்டளைத்தளபதி கேணல் றொசான் சில்வா, மேஜர் ஜெனரல் சிசிற விஜயசூரியா உட்பட பல தளபதிகளின் சண்டைத்திட்டங்கள், தந்திரோபாயங்கள் எல்லாம் தவிடுபொடியாக்கப்பட்டன. இறுதியாக ஒரு தடவை பாரிய நடவடிக்கை ஒன்றை திட்டமிட்டு, பால்ராஜ் அவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவே கைப்பற்றுவோம் எனக் கங்கணங்கட்டி மேற்கொள்ளப்பட்ட பாரிய நடவடிக்கை கூட தோல்வியில் முடிந்தது. வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியின் பிரதான பங்கை வகித்த பால்ராஜ் அவர்களின் சேனையை வெற்றி கொள்ள சிறிலங்கா இராணுவத்தின் அனைத்து சிறப்புப் படையணிகளும் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அச்சேனையை அவர்கள் வெல்லமுடியாததால் ஆனையிறவுத்தளம் பெரும் சிக்கலுக்குள்ளாகியது. தொடர்ந்து சண்டையை கொண்டு நடாத்த முடியாத நிலைமை ஏற்பட்டதுடன் மறுபக்கம் தளபதி தீபன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட நகர்வையும் தடுக்கமுடியாததால் நெருக்கடிக்குள்ளான இராணுவத்திற்குப் பின்வாங்கி ஓடுவதைத்தவிர வேறுவழி இருக்கவில்லை. இத்தாக்குதல் நடவடிக்கையின் கடினத்தை தளபதி பால்ராஜ் விபரிக்கும் போது 'சண்டையென்றால் இதுதான் சண்டை, குளிக்க ஏலாது,சப்ளை இல்லை, வெட்டி நிற்கும் பங்கருக்குள்தான் சாப்பாடு, தூக்கம் எல்லாமே, வீரச்சாவடைந்தவர்களை வீரவணக்கம் செலுத்தி விதைக்க வேண்டும், காயப்பட்ட போராளிகளை அதே பங்கருக்குள் பராமரிக்கவேண்டும், விமானம், ராங்கி,எறிகணை என அப்பிரதேசத்தை துடைச்சு எடுப்பான், அந்தப்பகுதிக்குள்ளிருந்த சிறு மரங்கூட காயமில்லாமல் இருக்காது அந்தளவிற்கு கடுமையான செல்லடி,சண்டையும் அப்படித்தான். இன்று 400 மீற்றர் அவன் பிடிச்சா, நாளைக்கு 600 மீற்றர நாங்கள் பிடிப்பம், 10, 20 ராங்கிகளை இறுமிக்கொண்டு நகர்ந்து சண்டை நிலைகளுக்குள்ளேயே புதைக்கலாமென்று வருவான். நாங்கள் ஆர்.பி.ஜியால அடிப்பம். சில இடங்கள்ல ராங்கை வரவிட்டு நாங்கள் பாய்ந்து குண்டு போட்டு அழிப்பம், சப்ளை துப்பரவாக இல்லாத சமயங்களில ஆமியின்ர ஆயுதங்களை எடுத்து சண்டையிடுவம். மேலதிக படையணிகள் கிடைக்காத தருணங்களில் 100மீற்றர், 200 மீற்றர், சில இடங்களில் 500 மீற்றருக்கு விடக்கூடிய அளவு போராளிகளே இருந்தனர். இவ்வாறு விட்டு விட்டு தொடர் ரோந்துகளை விட்டே எதிரியை உள்ள விடாம பாப்பம், சிலநேரங்களில ரோந்து அணியுடன் சண்டை தொடங்கும். உடன பக்கத்திலிருக்கின்ற அணிகளை எடுத்து உடனடித்தாக்குதலை மேற்கொண்டு துரத்திவிடுவம். எதிரிக்கு நாங்கள் பலர் இருப்பது போன்ற பிரம்மையை ஏற்படுத்தியதால் எங்களின் படைபலத்தை மிகையாகக் கணிப்பிட்டு நகர்வதற்குப் பயப்பட்டான்' என்று கூறுவார். பால்ராஜ் அவர்களிற்கு நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற நோய்களின் தாக்கம் கடுமையாக இருந்தபோதும் அதை அக்கறைப்படுத்தாமல் அந்த நோயின் வலியையும் சமாளித்துக் கொண்டே இத்தாவில் சண்டையை 34 நாட்கள் வெற்றிகரமாக நடாத்திக் காட்டினார். அவருடன் நின்ற போராளிகள் 'அவர் தூங்கிப் பார்த்ததில்லை, இரவில் கூட ஒவ்வொரு பகுதிக்கும் தொடர்பு கொண்டு நிலைமைகளை அறிந்துகொண்டிருப்பார். சிறிய வெடிச்சத்தம் கேட்டாலும் உடனே துள்ளியெழுந்து நிலைமைகளை கேட்டறிந்து உறுதிப்படுத்திய பின்னரே அமைதியாக இருப்பார். சண்டை முடிந்தபின் கூட முகாமில் படுத்திருக்கும் போது சண்டையைப்பற்றி நித்திரையில் புலம்புவார்' அந்தளவிற்கு தீவிரமான மனநிலையில் இதன் வெற்றிக்காக உழைத்தார். இத்தாவில் சண்டை தொடர்பில் பதிவு செய்த உரையாடல் ஒன்றில் தளபதி காமினி கெட்டியாராட்சியைத் தொடர்பு கொண்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் '40.000 பேரைக் கொண்ட படையைக் கொண்டு, சப்ளை இல்லாமல் சண்டையிடும்1500 போரை சமாளிக்க முடியாத நீங்களெல்லாம் ஒரு இராணுவமா? என்று கடுமையாக பேச அதற்கு பதிலளிதத கெட்டியாராச்சி 'பிரபாகரன் நேரா வந்து சண்டையிட்டாக்கூட சமாளிச்சிடுவன். வந்திருப்பது பால்ராஜ். நிலைகொண்டு விட்டால் அவரை அப்புறப்படுத்துவது கடினம்' அத்துடன் 'நீங்கள் பலாலியில இருந்து கேள்வி கேட்கிறதை விட்டிட்டு, இந்த இடத்திற்கு வந்து பார்த்தால்தான் நிலவரம் புரியும்'என்றார். ஆனையிறவை வீழ்த்திய வெற்றியுடன் தளபதியைச் சந்தித்த தலைவர்,இந்த உரையாடல் பதிவை போட்டுக்காட்டினார். தலைவர் தனது அறையில்,தரையிறங்கி நீரேரிக்குள்ளால் நகரும் பால்ராஜ் அவர்களின் படத்தை அட்டைப்படுத்தி மாட்டி வைத்திருந்தார். அவரது அறையை அலங்கரித்த படம் அதுவாகத்தானிருக்கும். இத்தகைய பெருமை வாய்ந்த தளபதியை நாம் இழந்திருக்கின்றோம். அவர் தமிழினத்தின் போரியல் ஏடு, தமிழர்களின் வீரத்தின் குறியீடு, அவருடைய தலைமைத்துவமும் சண்டைகளும் எப்போதும் ஒரு வழிகாட்டலைக் கொடுக்கும். ஈடில்லாத தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு சிரம் தாழ்த்திய வீரவணங்கங்களைச் செலுத்துவோம். 21ம் நூற்றாண்டின் தன்னிகரில்லா போர் வீரன் பால்ராஜ் abishaka@gmail.com http://eelampakkam.b...-post_2372.html
  3. தளபதி தீபன்,ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பல வெற்றிக்களங்களின் நாயகனாக,தாக்குதல் ஒருங்கிணைப்பாளனாக,எதிரிக்குச் சவாலாக விளங்கிய தளபதி. அந்த வீரத்தளபதியை எதிரியின் கோழைத்தனமான, வஞ்சகத் தாக்குதலில் இழந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. புளியங்குளம்,தீச்சுவாலை, ஓயாத அலைகள் எனப் பல சமர்களில் தளபதி தீபன் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தடுமாறிய சிங்களப்படைக்கு தீபன் எப்போதுமே ஒரு வெல்ல முடியாத சவால். எனவே நயவஞ்சமாகத் தளபதியை வெல்லத் திட்டம் தீட்டிய சிங்களப்படை, 2009 ம் ஆண்டு சமர்க்களத்தில், ஆனந்தபுரம் பெட்டிச்சமர் தாக்குதலைத் தலைமை தாங்கிய தளபதி தீபனின் வலிமைக்கு ஈடுகொடுக்க முடியாமல், அவரையும் அவரது படையணியையும் போரில் தடைசெய்யப்பட்ட நச்சுவாயு ஆயுதங்களைக் கொண்டு அழித்தது. போரியல் விதிகளுக்கு எதிராக, மானுடதர்மத்திற்கு முரணாக அமைந்த சிங்களப்படையின் இச்செயற்பாடானது, அவர்களின் இயலாத்தன்மையையே வெளிப்படுத்தி நிற்கின்றது. தளபதி பிரிகேடியர் தீபன், ஈழப்போரின் பல இமாலய வெற்றிகளின் நாயகர்களாகப் பரிணமித்த தளபதிகளில் தனியிடம் பதித்த தளபதி. ஆர்ப்பாட்டமில்லாத ஆளுமையின் வடிவமாக விளங்கிய அவரின் பன்முகப்பட்ட தலைமைத்துவம் விடுதலைப் போராட்டத்தில் காத்திரமான வகிபாகத்தைக் கொண்டிருந்தது. முக்கியமானதும்,கடுமையானதுமான சமர்க்களங்களில் தனது ஆளுமையையும் சிறந்த திட்டமிடலையும் வெளிப்படுத்தி, சவாலான களமுனைகளில் தனிமுத்திரை பதித்து,அதனூடாக தன்னை வெளிப்படுத்தி சிறந்த நம்பிக்கையான தளபதியாக பரிணமித்தவர். தளபதி தீபன் அவர்களின் தாக்குதல்களையும் அவரின் செயற்பாடுகளையும் சொல்ல விளையும்போது, தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களையும் சேர்த்தே சொல்லிக் கொண்டு போகமுடியும். ஏனெனில்,சமர்க்களச் செயற்பாடுகளினூடாக தனக்கென ஒரு தனித்துவத்தை நிலைநிறுத்திய தளபதியாக மிளிர்ந்த தீபன், தளபதி பால்ராஜ் அவர்களினால் அடையாளம் காணப்பட்டு, அவரது பாசறையில் இருந்து வெளிவந்தவர். தளபதி தீபன் அவர்களின் ஆளுமை என்பது தளபதி பால்ராஜ் அவர்களின் தலைமைத்துவப் பாங்கிலிருந்தும் திட்டமிடும் தன்மையிலிருந்தும் சிறிது மாறுபட்டிருக்கும். ஆனால் இந்த தன்மைகளே இவர்களிருவரும் இணைந்து பல வெற்றிகளை பதிவு செய்வதற்கான தளத்தைக் கொடுத்திருந்தது. அத்துடன் தளபதி தீபன் அவர்கள் தனித்துவமாக பல போரியல் வெற்றிகளைப் பெற்றதனூடாக தனது தனித்துவத்தை பல இடங்களில் பதிவுசெய்துள்ளார். கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையைப் பிறப்பிடமாக கொண்ட தீபன் அவர்களின் பூர்வீகம் யாழ்மாவட்டம், தென்மராட்சியின் வரணியாகும். சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் விஞ்ஞானப்பிரிவில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், விடுதலைக்காக கல்வியை இடைநிறுத்திவிட்டு, 1985 வருடம் மேஜர் கேடில்ஸ் அவர்களிடத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து தனது விடுதலைக்கான பயணத்தை ஆரம்பித்தார். கிளிநொச்சியில் தனது ஆரம்பகாலப் பணிகளை தொடங்கினார். இலங்கை இராணுவத்திற்கெதிராக கிளிநொச்சியில் நடைபெற்ற தாக்குதல்களில் பங்குகொண்டதுடன் இந்திய இராணுவத்தினருக்கு எதிராக கிளிநொச்சியில் நடத்தப்பட்ட பல தாக்குதல்களில் தளபதி தீபன் அவர்கள் காட்டிய தீவிரத்தன்மையும் செயற்பாடும் அவரை வன்னி மாவட்ட துணைத் தளபதியாக்கியது. 1990 ம் ஆண்டு, தீவிரமடைந்த ஈழப்போர் இரண்டு காலப்பகுதியில், மிகவும் காத்திரமான போரியல் பங்கை வகித்து, முன்னுதாரணமாக விளங்கிய வன்னிக் களமுனையில், மைல் கற்களாக விளங்கிய பல சண்டைகளில் தளபதி பால்ராஜ் அவர்களிற்கு உறுதுணையாக தலைமைதாங்கிய பெருமை தளபதி தீபன் அவர்களையே சாரும். குறிப்பாக, தாக்குதல்கள் நடைபெறும் சமயங்களில் சில முனைகளில் சண்டை நிலைமை இறுக்கமடையும். அப்போது, தளபதி பால்ராஜ் களமுனைக்கு சென்று நிலைமையை சீர்செய்வார். அச்சமயங்களில், தலைமைக் கட்டளைப் பொறுப்பை தளபதி தீபன் அவர்களிடமே கொடுத்துவிட்டு செல்வார். அந்தளவிற்கு தளபதி தீபன் அவர்களின் தலைமைத்துவத்தில், ஒழுங்குபடுத்தலில் நம்பிக்கையுடையவராகவும், பால்ராஜ் அவர்கள் வழிநடாத்திய தாக்குதல்களில் பலவற்றில் முதுகெலும்பாகவும் செயற்பட்டவர். 1990ம் ஆண்டு, வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட கொக்காவில் இராணுவ முகாம் தாக்குதலை களத்தில் நேரடியாக நின்று வழிநடாத்தினார். இந்த தாக்குதலில், பெரல்களில் மண்ணை நிரப்பி அதனை உருட்டிக்கொண்டு காப்பாகப் பயன்படுத்தி முன்நகர்ந்தே சண்டைசெய்யப்பட்டது. இதன்போது தீபன் அவர்கள் களத்திற்கான தலைமைக்கட்டளையை வழங்கியது மட்டுமல்லாமல், தானும் ஒரு பெரலை உருட்டிக் கொண்டு முன்னேறி சண்டையிட்டார். அவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருந்தபோதே கையில் காயமடைந்தார். உடனேயே களத்திற்கு விரைந்த தளபதி பால்ராஜ் அவர்கள் சண்டையை தொடர்ந்து நடாத்தி கொக்காவில் முகாமை வெற்றி கொண்டார். பின்னர் மாங்குளம் முகாம் தாக்குதல், வன்னிவிக்கிரம தடுப்புச்சமர் போன்றவற்றிலும் தனது தலைமைத்துவத்தை சிறப்பாக வழங்கியவர் தளபதி தீபன் அவர்கள். 1991 ம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் சிறப்புத்தளபதியாக பால்ராஜ் அவர்கள் பொறுப்பை எடுக்கும் போது, வன்னி மாவட்டத் தளபதியாக தீபன் அவர்கள் நியமிக்கப்பட்டார். வன்னி பெருநிலப்பரப்பின் சிறப்புத் தளபதியாக செயற்பாடுகளைத் தொடங்கிய தீபன் அவர்கள், வண்ணாக்குளம், கெப்பிட்டிக்கொல்லாவையில் எல்.3 எடுத்த சமர்,முல்லைத்தீவு முகாமின் காவலரண்களைத் தகர்த்து 50 கலிபர் துப்பாக்கி உட்பட பல ஆயுதங்களைக் கைப்பற்றியது போன்ற பல தாக்குதல்களை தனித்துச் செய்தார். மேலும் மின்னல், ஆ.க.வே தாக்குதல், இதயபூமி ஒன்று, தவளைப்பாய்ச்சல், யாழ்தேவி என பல பாரிய சமர்களில் வன்னி மாவட்ட படையணிகளுக்குத் தலைமை தாங்கினார். இவற்றில், நான்குமணி நேரத்தில் நடத்தி முடித்த மாபெரும் சமரான யாழ்தேவிச் சமரானது எமது போராட்ட வரலாற்றில், மரபுவழிச் சண்டை முறையில் முக்கியத்துவமானதாக அமைந்த தாக்குதல். இதில் தளபதி தீபன் அவர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. யாழ் குடாநாட்டுக்கு ஏற்படவிருந்த பேரழிவைத் தற்காலிகமாக தடுத்து நிறுத்திய இந்த வரலாற்றுச் சமரில் தளபதி பால்ராஜ் அவர்கள் காயப்பட்ட வேளையிலும், அவரது களமுனையை வழிநடாத்தி வெற்றியை எமதாக்கிய பெருமையில் தீபன் அவர்களிற்கு பெரும் பங்குண்டு. இத்தாக்குதல் பற்றி தீபன் அவர்கள் தெரிவிக்கையில் 'ஒரு திடீர்த் தாக்குதலைத் தொடுத்து எதிரிப்படையைச் சிதைக்கும் நோக்குடன் இரவோடிரவாக தகுந்த இடத்தைத் தேர்வு செய்ய முயன்றோம். மணற்பாங்கான நில அமைப்புடன் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுசிறு பற்றைகளையும், புற்கள் அற்ற வரப்புகளையும் தவிர துப்பாக்கிச் சண்டைக்குத் தேவையான அரண்களோ அல்லது உருமறைப்புச் செய்வதற்குரிய பொருட்களோ கிடைக்கவில்லை. நேரமும் விடிந்து கொண்டிருந்தது. எனவே, வரப்போரங்களிலும் பற்றைக் கரைகளிலும் கைகளாலும் தடிகளாலும் உடலை மறைக்கக்கூடிய பள்ளங்கள் தோண்டி, எதிரியின் விமானங்களுக்குப் புலப்படாமலும் நகர்ந்து வரும் படையினரின் கண்களுக்குத் தெரியாமலும் உருமறைப்புச் செய்தோம். விடிந்தபின்பும் எதிரி எமக்கருகில் வரும்வரை நாம் பொறுமையுடன் காத்திருந்து சண்டையிட்டோம்' என்றார். பாரிய இழப்புகளுடன் சிங்களப்படைகள் பின்வாங்கிய இச்சமரில் ராங்கிகள், கவசவாகனங்கள் அழிக்கப்பட்டதுடன் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து பூநகரி தவளை நடவடிக்கையில் பிரதான கட்டளை முகாம் தாக்குதலுக்கான தலைமையைப் பொறுப்பெடுத்து தாக்குதலை வழிநடாத்தினார். பல அடுக்குப் பாதுகாப்பு வியூகத்தைக் கொண்டமைந்த பிரதான முகாமைக் கைப்பற்றும் தாக்குதல் மிகவும் சவாலாக இருந்தது. எதிரி கட்டளை மையத்தை தக்கவைக்க கடுமையாகப் போராடினான். முகாமின் பலபகுதி கைப்பற்றப்பட்டபோதும், இறுதியாக ஒரு பகுதியைக் கைப்பற்றுவதற்காக தொடர்ந்த கடும் சண்டை மறுநாள் விடியும் வரை தொடர்ந்தது. பகல்வேளையில் அங்கு சிதறியிருந்த இராணுவத்தினரும் ஒன்றுசேர, முகாமின் எதிர்ப்பும் மிகவும் வலுப்பெற்றது. என்றாலும் அணிகளை மீள்ஒழுங்குபடுத்தி தாக்குதலை தீவிரப்படுத்தினார். இறுதியில் முகாமிலிருந்து மோட்டார்களை கைப்பற்றவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நவநீதன் தலைமையில் அணிகளை ஒழுங்கமைத்து மோட்டார்களை கைப்பற்றினார். இச்சம்பவத்தில் லெப் கேணல் நவநீதன் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார். 1993 ம் ஆண்டு தவளைப்பாய்ச்சல் நடவடிக்கை முடிந்த பின்னர், சிறப்பு வேவுப்பிரிவு தளபதியாக பொறுப்பேற்று யாழ் தீவுப்பகுதித் தாக்குதலுக்கான முழு வேவுப்பணியையும் நிறைவு செய்தார். ஆயினும் அத்தாக்குதல் செயற்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் கொக்குத்தொடுவாய்ப் பகுதி முகாம் வேவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். தொடர்ந்து, 1995 ம் ஆண்டு சூரியகதிர் பாதுகாப்புச் சமரில் பல களமுனைகளைத் தலைமை தாங்கினார். இதன்போது தனது கையில் காயமடைந்த நிலையிலும் தொடர்ந்து களமுனைத் தளபதியாக தனது பங்கை வழங்கினார். வலிகாமத்திலிருந்து பின்நகர்ந்ததைத் தொடர்ந்து தளபதி தீபன் அவர்கள் முல்லைத்தீவு முகாம் தாக்குதலுக்கான வேவுப்பணியை செய்வதற்காக தலைவரால் பணிக்கப்பட்டார்;. முல்லைத்தீவு முகாம் வேவு சவாலான விடயமாகவே இருந்தது. இங்கு சிங்களப்படையினர் முகாமின் காவல்நிலைகளை மிகவும் நெருக்கமாக அமைத்து உச்ச அவதானிப்பில் வைத்திருந்தனர். தாக்குதலுக்கான வெளிப்பகுதி வேவுகள் முடிந்திருந்தாலும், சண்டையைத் தீர்மானிக்க முகாமிற்குள் நுழைந்து வேவு பார்க்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வேவுப்பிரிவினர் கடுமையாக முயற்சி செய்தும் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இதற்கு மாற்றுவழி ஒன்றைச் சொன்னார் தளபதி தீபன் அவர்கள். எதிரியின் 'டம்மிக் காவலரணை' இனம் கண்டு,எதிரியின் ரோந்து செல்லும் நேரத்தைக் கணிப்பிட்டு, அந்த நேர இடைவெளிக்குள் காவரணின் சுடும் ஓட்டைக்குள்ளால் காவலரணுக்குள் உட்புகுந்து, இராணுவத்தின் ரோந்தை அவதானித்துவிட்டு முகாமிற்குள் செல்லுமாறு திட்டம் வகுத்தார். அவ்வாறே உள்முகாம் வேவுகளை துல்லியமாகச் செய்து முடித்தனர். முல்லைத்தீவுத் தாக்குதல் நடவடிக்கையின் போது, முகாமின் மேற்குப்பகுதியைக் கைப்பற்றி, முகாமின் மையப்பகுதியைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பொறுப்பு தளபதி தீபன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. லெப் கேணல் தனம், லெப் கேணல் பாக்கியராஜ், லெப்கேணல் ராகவன் தலைமையிலான சாள்ஸ் அன்ரனி படையணியுடன் களமிறங்கினார் தீபன். தாக்குதல் ஆரம்பித்து முன்னணிக் காவலரண் கைப்பற்றப்பட்டவுடன், உட்தாக்குதல் அணியுடன் சென்று மிகவேகமாக முகாமின் மையப்பகுதியில் தாக்குதலை ஆரம்பித்தார். ஏனெனில் எதிரியின் இரண்டாவது காவலரண் தொகுதியானது நீரேரியின் கரையில் அமைந்திருந்தது. கடற்கரைப்பக்கத்தால் உள்ள சிறிய தரைப்பாதையாலேயே படையணிகள் உள்நுழைய வேண்டும். அதில் பலமான காவலரண்களை எதிரி அமைந்திருந்தான். அந்தப்பகுதியில் வெடிமருந்து நிரப்பப்பட்ட கரும்புலிப்படகால் வேகமாக வந்து பாய்ந்து வெடிக்கவைப்பதனூடாக எதிரியை அழித்து படையணியை நகர்த்துவதாக திட்டமிருந்தாலும், அந்த நடவடிக்கை சாத்தியமில்லாமல் போகும் நிலையேற்பட்டால் மாற்று வழி படையணிகளிடமே கொடுக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவின் வெற்றியைத் தீர்மானிக்கும் பிரதான களத்தில் தான் நிற்கவேண்டும் என்பதை கருத்தில் வைத்து, முன்னணிக் காவலரண்கள் சரியாக பிடிபடாத நிலையிலும், 2கிலோ மீற்றர் பின்னால் உள்ள தாக்குதல் முனைக்கு படையணிகளுடன் வேகமாக நகர்ந்து தாக்குதலில ஈடுபட்டார். மையப்பகுதி தாக்கப்பட்டதால் நிலைகுலைந்த சிங்களப்படை, ஆட்லறிகளையும் மையப்பகுதியையும் பாதுகாக்க முடியாமல் விட்டுவிட்டுப் பின்நகர்ந்தது. இராணுத்தினரின் மையக் கட்டளைப்பகுதி ஆட்டங்காணத் தொடங்கியதுடன் இராணுவத்தின் ஒழுங்கமைப்புத்திறன் பாதிக்கப்பட்டது. இதுவே முல்லைத்தீவு முகாமின் தாக்குதல் வெற்றியில் பிரதான பங்கை வகித்தது. சத்ஜெய – 03 நடவடிக்கையில் பாதுகாப்புச் சண்டையை வழிநடாத்திய போது,குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியமான சண்டையாக உருத்திரபுரம் 8ம் வாய்க்கால் எள்ளுக்காட்டுப் பகுதியைக் கைப்பற்றி நிலைகொண்ட சிறப்புப் படையணி மீது நடாத்தப்பட்ட உடனடி ஊடறுப்புத் தாக்குதல் அமைந்தது. உருத்திரபுரம் பகுதியை சிறிலங்கா சிறப்புப்படைகள் கைப்பற்றியபோது அதனால் ஏற்படக்கூடிய பாதக நிலையை உணர்ந்து, உடனடி ஊடறுப்புத்தாக்குதல் ஒன்றை நடாத்த திட்டமிட்டார். சிறிலங்காவின் சிறப்புப்படைகள் வாய்க்கால் வரம்பை தமக்கு சாதமாக்கி நிலையெடுத்திருந்தது. எதிரியின் முன்பகுதி வயல் வெட்டை என்பதுடன் அக்காலப்பகுதி நிலவுகாலம். நிலவு கிட்டத்தட்ட அதிகாலை 4.30 மணிக்கு மறையும். 6மணிக்கு விடிந்துவிடும். அந்த இடையில் கிடைக்கும் 1.30 மணிநேர இடைவெளிக்குள் நகர்ந்து தாக்குதலை நடாத்த வேண்டிய நிலைமை. என்றாலும் தளபதி லெப் கேணல் தனம் தலைமையில் அணிகளை ஒழுங்குபடுத்தி, நிலவிற்குள் நகரக்கூடியளவிற்கு படையணிகளை நகர்த்தி, காப்புச் சூடுகளை ஒழுங்குபடுத்தி, நிலவு மறையும் அத்தருணத்திற்குள் திடீர் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்றை நடாத்தினார். வேகமான இத்தாக்குதலில் 150 இராணுவத்திற்கு மேல் கொல்லப்பட்டதுடன் இராணுவத்தின் நகர்வு சில காலம் முடக்கப்பட்டது. தளபதி தீபன் அவர்களின் தொடர்ச்சியான தாக்குதல் பங்கேற்புகளும் அவருடைய தலைமைத்துவமும், ஒருங்கிணைக்கும் தன்மையும், தாக்குதல்களை திட்டமிடும் இலாவகமும் இன்னுமொரு பரிணாமத்தையடைந்தது. களமுனைகளில் நிலைமைக்கேற்றவாறு தாக்குதல் வியூகங்களை வகுப்பது, களங்களில் நேரடியாகச் சென்று வழிநடாத்தும் தன்மை, தனது பொறுப்பை நிறைவேற்றும் பாங்கு,ஒருங்கிணைத்து வழிநடாத்தும் பாங்கு என தளபதியின் ஆளுமை போராளிகளிடத்தில் நல்ல அபிப்பிராயத்தைக் கொடுத்ததுடன் அவருடைய தலைமைத்துவத்தையும் வலுப்படுத்தியது. 1997 ம் ஆண்டு சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத் தளபதியாக தீபன் அவர்கள் பொறுப்பேற்றார். சாள்ஸ் அன்ரனி படையணியுடன் தீபன் அவர்களின் போர் நடவடிக்கைகள் இன்னுமொரு கட்டத்திற்குள் நகர்ந்தது. இந்தநேரத்தில்தான் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை ஆரம்பமானது. இந்த இராணுவ நடவடிக்கையைத் தடுக்கும், வவுனியா களமுனையை வழிநடாத்தும் பொறுப்பை தளபதி தீபன் அவர்கள் ஏற்றுக் கொண்டார். ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கையின் பிரதான போர்முனையான ஏ-09 பாதையால் முன்னேறும் எதிரியைத் தடுக்கும் சண்டையென்பது அந்த எதிர்ச்சமரின் பிரதான பகுதியாக இருந்தது. ஓமந்தையில் தொடங்கிய மறிப்புத்தாக்குதலை வெற்றிகரமாக எதிர்கொண்ட பெருமை நிச்சயமாக தீபன் அவர்களையே சாரும். இப்பாரிய படைநகர்வை எதிர்கொண்டபோது ஓமந்தை,இரம்பைக்குளம், பன்றிக்கெய்தகுளம், பனிக்கநீராவி போன்ற இடங்களில் பல ராங்கிகளை அழித்து சிங்களப்படைக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தினார். இதில் புளியங்குளம் சண்டை என்பது ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு பலத்த இழப்பைக் கொடுத்த சண்டையாகும். புளியங்குளம் சந்தியை மையப்படுத்தி முகாம் ஒன்றை அமைத்து எல்லாத் திசைகளிலும் இராணுவத்தை எதிர்கொள்ளக்கூடியவாறு படையணிகள் தயார்படுத்தப்பட்டன. இராணுவம் பல திசைகளிலும் மாறிமாறி புளியங்குளத்தில் விடுதலைப்புலிகளின் படையணியைப் பின் நகர்த்த கடும்பிரயத்தனப்பட்டது. இலகுவில் வன்னியை ஊடறுக்கலாம் என கங்கணம் கட்டிய சிங்களப்படைக்கு புளியங்குளத்தில் தளபதி தீபன் தலைமையில் வீழ்ந்த அடியானது,ஒட்டுமொத்த ஜெயசிக்குறு இராணுவத் தலைமையினதும் சிங்களச் சிப்பாய்களினதும் மனோதிடத்தை பலவீனமாக்கியது. மிகவும் கடுமையான சண்டையாக வர்ணிக்கப்பட்ட இச்சண்டை ஜெயசிக்குறுவின் தலைவிதியை மாற்றியமைத்தது. இந்த கடுமையான போர்க்களத்தை கடும் உறுதியுடன் புலிகள் எதிர்கொண்டனர். தளபதி தீபன் அவர்கள் புளியங்குளம் 'பொக்ஸ்' பகுதிக்குள் தனது கட்டளை மையத்தை நிறுவி அங்கிருந்தே தடுப்புத்தாக்குதலை ஒழுங்கமைத்து தெளிவான, நிதானமான,உறுதியான கட்டளையை வழங்கினார். ஒரு பாரிய படைவலுவைக் கொண்ட சிங்களப்படையை நிர்மூலமாக்கியதுடன் மூன்று மாதங்களிற்கு மேல் எதிரியின் நகர்வை தடுத்து நிறுத்தி பாரிய பின்னடைவுக்குள்ளாக்கினார். ஒருதடவை விடுதலைப்புலிகளின் நிலையை ஊடறுத்துவந்த துருப்புக்காவியையும் கைப்பற்றினர். இது சராசரி 60 பேருக்கு மேல் தினசரி காயமடையும் களமுனையாக இருந்தது. அங்கு3 அல்லது 4 தடவைகளிற்கு மேல் மாறிமாறி காயப்பட்டாலும் தொடர்ந்து'புளியங்குளத்திற்கு தீபண்ணையிட்ட போகப் போறம், எங்களுக்கு மருத்துவ ஓய்வு தேவையில்லை' என தீவிரமாக போராளிகள் செயற்பட்டு புளியங்குளத்தை புலிகளின் குளமாக மாற்றினர். இதன் நாயகனாக விளங்கியவர் தளபதி தீபன் அவர்களே! ஒரு வருடங்களுக்கு மேல் நடந்த ஜெயசிக்குறுச் சமரில் புளியங்குள மறிப்பு என்பது விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் முதலாவது வெற்றிகரமான தடுப்புச் சமர் என்பது மட்டுமல்ல, சிங்களத்தின் மனோதிடத்தை பாரியளவில் பலவீனப்படுத்திய, எதிரிகளாலும் வியந்து பார்க்கப்பட்ட சமராகும். பின்னர், கிளிநொச்சியை மீளக்கைப்பற்ற நடாந்த சமரில் டிப்போச் சந்திவரை கைப்பற்றிய தாக்குதலை தலைமை தாங்கியதுடன், அதைத் தொடர்ந்து ஓயாத அலைகள்-02 எனப் பெயரிடப்பட்ட தாக்குதலில் எதிரியை ஓடவிடாமல் தடுத்து,வரவிடாமலும் மறிக்கும் பொறுப்பை தளபதி பால்ராஜ் அவர்கள் வழிநடாத்த,முற்றுகைக்குள் வைக்கப்பட்ட கிளிநொச்சி முகாம்களைத் தகர்த்தழிக்கும் பொறுப்பை தளபதி தீபன் அவர்கள் வழிநடாத்தினார். கிளிநொச்சி நகரப்பகுதியை மையப்படுத்தி பல அடுக்கு பாதுகாப்பு வேலிகளை கொண்டமைந்த பாதுகாப்பு அரண்களை உடைத்து தாக்குதல் நடைபெற்றது. சில இடங்களில் காவலரண்களைக் கைப்பற்றுவதும் பின்னர் சிங்களப்படைகள் அதை மீளக் கைப்பற்றுவதும் என கடுமையான சண்டைகள் நடைபெற்றன. தளபதி தீபன் அவர்கள் பூநகரி, முல்லைத்தீவு முகாம் தாக்குதல்களில் ஏற்பட்ட சிரமங்கள், சாதகங்கள் போன்றவற்றிலிருந்து பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் அணிகளை வழிநடாத்தினார். இறுதியாக பிரதான மைய பாதுகாப்பு காவலரண் பகுதியில் கடுமையான எதிர்பை எதிர் கொண்டார். ஏற்கனவே பூநகரி சண்டையில் பிரதான முகாமை கைவிட வேண்டி புலியணிகளுக்கு ஏற்பட்டதன் காரணங்களைப் புரிந்த அவர், இதுபோன்ற ஒரு தோல்வி மீள ஏற்படக்கூடாது என்ற எண்ணப்பாட்டில் இறுதியான ஒரு முயற்சியை செய்யத் தீர்மானித்தார். தளபதி லெப் கேணல் சேகர் தலைமையில், தளபதி லெப் கேணல் வீரமணியின் நேரடி வழிகாட்டலில் எதிரி எதிர்பார்க்காத வண்ணம் பகல் நேர உடைப்புத் தாக்குதல் ஒன்றை ஒழுங்குபடுத்தினார். 'கரணம் தப்பினால் மரணம்' என்ற நிலை இருந்தும் கூட, பகல் நேர உடைப்பை வெற்றிகரமாக செய்யலாம் என திடமாக நம்பி, சாள்ஸ் அன்ரனி படையணியை களமிறக்கி அதில் வெற்றியடைந்தார். ஆனையிறவிலிருந்து உதவியணியும் வரவில்லை என்பதுடன் தங்களது இறுதிப் பாதுகாப்பு அரணும் உடைக்கப்பட்டதை உணர்ந்த இராணுவம் பின்வாங்கலைச் செய்தது. இதில் பெறப்பட்ட வெற்றியானது அவரது தலைமையின் காத்திரத்தன்மையை வெளிப்படுத்தியது. சமநேரத்தில் கிளிநொச்சியின் வெற்றியை கொண்டாட முடியாத வகையில் சிங்களப்படைகள் கருப்பட்டமுறிப்பு, மாங்குளம் பகுதியைக் கைப்பற்றியது. தலைவரின் திட்டத்திற்கமைவாக, தளபதி பிரிகேடியர் சொர்ணம் தலைமையில் ஓயாத அலைகள் -03 தாக்குதல் நடவடிக்கையின் ஒருபகுதிக் களமுனை ஒட்டிசுட்டானில் திறக்கப்பட்டது. அதன் இன்னுமொரு முனை, தளபதி தீபன் தலைமையில் மாங்குளம் பகுதியில் திறக்கப்பட்டது. பல மாதங்களாக முன்னேறிய ஜெயசிக்குறு படையணி சில நாட்களுக்குள் மீள வவுனியாவிற்கே பின்நகர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஓயாத அலைகள்-03 இன் தாக்குதல் முனைகள் பரந்தனிலும் சுண்டிக்குளப் பகுதியிலும் தனங்கிளப்புப் பகுதியிலும் ஆரம்பிக்கப்பட்டன. இதில் பரந்தன் பகுதியிலிருந்து ஆனையிறவை நோக்கிய படைநகர்வு தளபதி தீபன் அவர்களால் தலைமை தாங்கப்பட்டது. பரந்தனில் பகல் பொழுதில் தாக்குதலைத் தொடங்கி, பரந்தன் காவலரண்களைத் தகர்த்து முன்னேறி புலியணிகள் நிலைகொண்டனர். மறுநாள் தாக்குதலுக்கான நகர்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுக் கொண்டிருந்தவேளை, எதிரி பின்னால் உள்ள வீதியில் புதிய அரண்களை அமைத்து நிலையெடுத்தான். தன் பலத்தில் அதிக நம்பிக்கை கொண்டு, தளபதி தீபன் அவர்கள் வோக்கியில் குறுக்கிட்டு 'உன்ர தளபதி 5.2ஜ (லெப் கேணல் ராகவனின் சங்கேதப்பெயர்) ஒட்டிசுட்டானில் போட்டிட்டம், இனி என்ன செய்யப் போகிறாய்' என்று கேட்டான். 'அதுக்குத்தான் இப்ப உன்னட்ட வந்திருக்கிறம், எங்களையென்ன ஒட்டிசுட்டான் ஆமியெண்டு நினைச்சியே, நடக்கப்போறத பொறுத்திருந்து பார், என்று நிதானமாகவும் சவாலாகவும் சொன்ன தளபதி தீபன், மறுநாள் அதை செய்தும் காட்டினார். அதைத்தொடர்ந்து ஓயாத அலைகள்-04நடவடிக்கையில் குடாரப்பில் தளபதி பால்ராஜ் அவர்கள் தரையிறங்கி எதிரியை ஊடறுத்து நிலையமைத்து நிற்கும் மூலோபாய நகர்வின் வெற்றியானது, அச்சமருக்காக தரைவழியாக ஏற்படுத்தப்போகும் விநியோகப் பாதையில் தங்கியிருந்தது. அதற்கான உடனடி வெற்றியை பெறவேண்டிய முக்கியமான களமுனையை தளபதி தீபன் வழிநடத்தினார். ஆனையிறவு வீழ்ச்சியின் அடிப்படைக்கு மிகவும் முக்கியமான களத்தை செயற்படுத்துவது சாதாரணமானதாக இருக்கவில்லை. ஆரம்பத் தாக்குதலில் சில பிரதேசங்களை கைப்பற்றி தக்கவைக்க முடிந்தது. மறுநாள் தாக்குதலுக்கான உத்திகளை வகுத்து தீர்க்கமான முடிவுடன் இருந்த தளபதி தீபன் அவர்கள், தளபதி பால்ராஜ் அவர்களிடம்'நாளைக்கு விடிய பாதையை திறந்து உங்களுக்கு விநியோகம் அனுப்பி வைப்போம்'என உறுதியுடன் தெரிவித்து அதை செய்து முடித்தார். பின்னர் ஆனையிறவுத் தளத்தை தடுக்கும் நோக்குடன் செய்யப்பட்ட ஊடறுப்புத் தாக்குதல் முயற்சிகள் பல செய்தாலும் அவை வெற்றியைத் தரவில்லை. இறுதியில் மருதங்கேணிப் பாலத்தை அண்மித்த பகுதியில் தளபதி தீபன் அவர்களின் நேரடிக் கண்காணிப்பில் ஒழுங்குபடுத்திய ஒரு ஊடறுப்பு முயற்சி வெற்றியைக் கொடுக்க,நகர்ந்த புலியணிகள் புதுக்காட்டுச் சந்தியை சென்றடைந்தன. தாம் சுற்றிவளைக்கப்படுகின்றோம் என்பதை உணர்ந்த படையினர் ஆனையிறவுத் தளத்தை விட்டுப் பின்வாங்கினர். இச்சமரின் வெற்றிக்கு கணிசமான பங்கை தளபதி தீபன் அவர்கள் வழங்கியிருந்தார். விடுதலைப்புலிகளினால் ஓயாத அலைகள் என்று பெயரிட்டு நடாத்தப்பட்ட தாக்குதல் அனைத்திலும் பங்கு கொண்டவர் என்ற பெருமை பெற்ற ஒரே தளபதி தீபன் அவர்கள் மட்டுந்தான். 2001 ம் ஆண்டு சிங்களப்படை ஆனையிறவை மீளக் கைப்பற்ற தீச்சுவாலை என்ற பெயரில் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை திட்டமிட்டிருந்தது. வெற்றிபெற்றேயாக வேண்டும் என்ற நிலையில் இருதரப்பினருக்கும் பலப்பரீட்சையாக அமைந்த தாக்குதல் அது. அதிகாலையில் இரண்டு பக்கத்தால் விடுதலைப்புலிகளின் நிலைகளை ஊடறுத்த படையினர் இரண்டாவது நிலையை அண்மித்து தமது நிலைகளை அமைத்தனர். களத்தின் இறுக்கத்தை உணர்ந்த தளபதி, 'எமது நிலைகளிலில் இருந்து பின்வாங்காமல் அப்படியே இருந்து சண்டையிடுங்கள்' என்ற கட்டளையை வழங்கி அணிகளை ஒழுங்குபடுத்தி கடுமையான சண்டையை மேற்கொண்டார். தளபதி தீபன் அவர்களின் கட்டளை மையத்தைத் தாண்டி இராணுவம் நகர்ந்த போதும் பின்வாங்காமல், எதிரியால் கைப்பற்றப்பட்ட எமது முதலாவது நிலைகளை பக்கவாட்டால் தாக்குதல் செய்து மீளக் கைப்பற்றினார். தாங்கள் உள்நுழைந்த பாதை மூடப்படுகின்றது என்பதை அறிந்த எதிரி, பின்வாங்கி ஓட்டமெடுத்தான். இச்சமரில் பலத்த இழப்பைச் சந்தித்த இராணுவம் நூற்றுக்கு மேற்பட்ட உடல்களை கைவிட்டு பின்வாங்கியது. இத்தாக்குதல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் தளபதி தீபன் அவர்கள் முன்னரங்க நிலைகளிற்குப் பொறுப்பாக இருந்தபோது இதேவகையான நகர்வை எதிரி மேற்கொண்டான். இதன்போது விடுதலைப்புலிகளில் 75 பேரின் உடல்கள் விடுபட்டிருந்தது. இந்தச் சம்பவம் தளபதி தீபன் அவர்களின் மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்தியிருந்தது. இதன்காரணமாக தலைவர் கொடுத்த புதிய கைத்துப்பாக்கியை கழற்றி வைத்துவிட்டு, இராணுவத்தின் 100 உடல்களை எடுக்காமல் அந்தக் கைத்துப்பாக்கியைக் கட்டமாட்டேன் என்ற கொள்கையில் இருந்தார். இந்த சமரில் தனது சபதத்தை நிறைவேற்றினார். மீண்டும் ஆரம்பித்த ஈழப்போர்-04 இல் முகமாலைச் சமரின் கட்டளைத்தளபதியாக பல சண்டைகளைத் தலைமை தாங்கினார். எதிரியின் பல நகர்வுகளை முறியடித்து,முகமாலையிலிருந்து பின்வாங்குவதற்கான கட்டளை கிடைக்கும்வரை அந்தக்களமுனையில் இருந்து ஒரு அடிகூட பின்வாங்காமல் களமுனையை வழிநடாத்தியவர் தளபதி தீபன் அவர்கள். தளபதி தீபன் அவர்கள் காலமாற்றத்திற்கேற்ப தன்னையும் மாற்றிக் கொண்டு செல்லும் தலைமைப்பாங்கு கொண்டவர். தாக்குதல்களின்போது எந்த இக்கட்டுக்குள்ளும் தெளிவான நிதானமான கட்டளை அவரிடமிருந்து கிடைக்கும். நிலமைகள் இறுக்கமடையும் போது நிதானமாக வரும் கட்டளையானது'இடத்தைவிட்டு அரக்காமல் சண்டையிடுங்கள்' என்பதாக இருக்கும். பல சிக்கலான சந்தர்ப்பங்களில் தருணத்திற்கேற்றவாறு திட்டங்களைக் கொடுத்து அந்தச் சூழலை தனதாக்கும் தன்மை அவருடையது. அத்தகைய தளபதியை வெல்லமுடியாது என்பதால்தான் கோழைத்தனமாக நச்சுக்குண்டால் எதிரி அழித்தான். தீபன் அவர்களின் சகோதரனான கில்மன்,ஆரம்பத்தில் பால்ராஜ் அவர்களின் மெய்ப்பாதுகாவலராக இருந்தார். பின்னர் சாள்ஸ் அன்ரனி படையணிக்கு தளபதியாக பால்ராஜ் அண்ணை பொறுப்பெடுக்கும் போது, அவருடன் சாள்ஸ் அன்ரனி படையணிக்குச் சென்று, தனது கடுமையான முயற்சியினாலும் போர்ப் பங்கேற்புகளினாலும் சாள்ஸ் அன்ரனி படையணியின் சிறப்புத் தளபதியானார். 1994 ம் ஆண்டு ஏற்பட்ட சமாதான காலப்பகுதியில் மணலாற்றில் சாள்ஸ் அன்ரனி படையணியுடன் வந்திருந்தார் கில்மன், அச்சமயங்களில் தீபன் அவர்கள் வேட்டைக்குச் சென்று தினசரி மிருகங்களை வேட்டையாடி வருவார். ஆனால் கில்மனும் வேட்டைக்கு போவார், ஆனால் வேட்டையாடுவதில்லை. இதையறிந்த தீபன் அவர்கள், மரையின் படம் ஒன்றை கொடுத்தனுப்பி, 'உண்மையான மரையை சுடமுடியாட்டி இந்த படத்தில இருக்கிற மரையையாவது சுடுமாறு கூறியிருந்தார்'. தமையனின் கிண்டலைப் புரிந்து, எப்படியாவது வேட்டையாடியே ஆக வேண்டும் என முயற்சியெடுத்து இரண்டு மரைகளை வேட்டையாடினார். பின்னர் அம்மரைகளின் 'குரை' களை வெட்டி தீபன் அவர்களிடம் அனுப்பிவைத்தார். பின்னர் கில்மன் திருமலைக்கு படையணிகளுடன் புறப்பட்டபோது தீபன்ணை வழியனுப்பி வைத்தார். அதுவே அவர்களது இறுதிச் சந்திப்பென காலம் தீர்மானித்தது போலும். திருமலையில் பலவெற்றிகரமான தாக்குதல்களை வழிநடாத்திய லெப்.கேணல் கில்மன் திருகோணமலையில் வெடிவிபத்தொன்றில் வீரச்சாவடைந்தார். தளபதி தீபன் அவர்களின் ஆளுமையும் வீரமும் தமிழ் இனத்தின் இரத்தத்தில் எப்போதும் கலந்திருப்பவை. இன்றைக்கு ஈழப்போராட்டத்தின் பின்னடைவு நிலையிலும் தளபதி தீபன் அவர்களின் வீரவரலாற்றை மீட்டுப்பார்ப்பது என்பது தமிழர்களின் வீரப்பண்பை, போரிடும் ஆற்றலை நினைவுபடுத்திக் கொண்டிருப்பதற்காகவும், தாம் கொண்ட கொள்கைக்காக எத்தகைய சவால்களை எதிர்கொண்டார்கள் என்பதை தொடர்ச்சியாக நினைவு கொள்ளப்படவேண்டும் என்பதற்காகவும் தான். எமது வீரம் சிங்களத்திடம் தோற்றுப் போகவில்லை, உலகத்திடம் தான் தோற்றுப்போனது. ஈழத்தமிழினம் தோல்வியடைந்தது என்ற மனப்பான்மை கொள்ளாது, தொடர்ந்து நம்பிக்கையுடன் தீரமாக விடுதலைக்கான வழிமுறைகளை நோக்கி திடசங்கற்பத்துடன் பயணிக்க வேண்டும். இன்றைக்கு எத்தனையோ ஆயிரம் மாவீரர்களை விதைத்த கல்லறைகள்கூட எதிரியினால் அழிக்கப்படுகின்றன. எமக்காக மரணித்த மாவீரர் கல்லறைகளின் அடையாளங்கள் அகற்றப்பட்டாலும் ஈழத்தமிழினத்தின் நெஞ்சங்களில் வாழும் அந்த ஜீவன்களின் தூய்மையான தியாகத்திற்கு கொடுக்கப்போகும் வெகுமதி என்ன? வெறுமனே நினைவுகூறல்களுடன் முடித்துக் கொள்ளப்போகின்றோமா? அல்லது உண்மையான இலட்சிய மைந்தர்களின் கனவுகளிற்காக தொடர்ந்து ஒற்றுமையாகவும் கடுமையாகவும் உழைக்கப் போகின்றோமா என்பதே எம்முன் உள்ள கேள்வி! இத்தினத்தில் இவருடன் வீரச்சாவைத்தழுவிக் கொண்ட பிரிகேடியர் துர்க்கா, பிரிகேடியர் விதுசா, பிரிகேடியர் மணிவண்ணன் ஆகியோரும் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களுக்கும் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வோம் abishaka@gmail.com http://www.eelampakkam.blogspot.com/2012/04/blog-post_9497.html
  4. புனித இலட்சியப் பிரவாகத்தில் பயணித்து, தமிழீழக்கனவுடன் வித்தாகிய ஆயிரமாயிரம் மாவீரர்களின் வரிசையில் துயில்கொள்ளும் ஒருவன் கப்டன் வாணன். தனது கண்முன்னால் தனக்கும் தனது சமூகத்திற்கும் நிகழ்ந்த அவலங்களின் சாட்சியாக, இந்த இழிநிலை வாழ்க்கை எமக்கு வேண்டாம், எமது சந்ததிக்கும் வேண்டாம் என்ற தெளிவில் பரிணமித்தவன். அந்த அவலங்களின் எதிர்வினையாக, விடுதலை ஒன்றுதான் தீர்வு என முடிவெடுத்துப் பயணித்த போராளி, அதற்காக தன்னை உரமாக்கிய அவனது இருபதாவது நினைவுநாள் இன்று. சுதந்திரப் போராட்டத்தின் பங்கெடுப்பு என்பது ஈர்ப்பு, கவர்ச்சியின் சமன்பாடல்ல. அது சமூகம் மீதான அக்கறையின் வெளிப்பாடாக, இனத்தின் மீதான அடக்குமுறைச் சம்பவங்களின் தொடர்வினையாக, பாதிப்பின் வெளிப்பாடாக உருவாகின்றது. அது வாழ்வின் எல்லைவரை தெளிவான பற்றுறுதியையும் கொள்கை ரீதியான உறுதிப்பாட்டையும் வழுவாத்தன்மையையும் கொண்டிருக்கும் என்ற யதார்த்தத்தின் பிரதிபலிப்பாக, நடைமுறை உதாரணமாக அமைகின்றது கப்டன் வாணனின் வாழ்க்கை வரலாறு. வாணன் அசாத்தியமான துணிச்சல்காரனாக இருந்தாலும் மென்மையானவன். எதையாவது செய்து கொண்டிருக்கும் துடிப்பும் குறும்புத்தனமும் அவனிடம் அதிகம். விளையாட்டு, நாடகம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவன். வாணனுடனான இளமைப்பருவத்து நாட்கள் நெஞ்சைவிட்டகலா பதிவுகள் - அம்மாவிற்குத் தெரியாமல் நிகழ்ச்சி பார்க்க சென்று நடு இரவில் திருப்பிவரும்போது, விளாத்திமரத்தைப் பார்த்து அம்மம்மா சொன்ன பேய்க்கதையை நம்பி, உரத்து தேவாரம் பாடிக் கொண்டு வந்தது, வெள்ளத்தில் வாழைக்குத்திகளை ஒன்றாகக் கட்டி |போட்| விட்டு விளையாடியது என அந்த நாட்களின் பசுமையான நினைவுகள் பல. இளமைப்பருவத்து இனிமைகளுடன் பயணித்த காலம். எண்பதுகளின் பிற்பகுதியில் உக்கிரமடைந்த தமிழினத்திற்கு எதிரான அடக்குமுறைகளும் கொலை வெறியாட்டங்களும் நாடு முழுவதும் பரவியதைத் தொடர்ந்து இராணுவ ஆக்கிரமிப்புக்கள், தாக்குதல்கள் என வாழ்க்கை பதட்டமான கால ஓட்டத்தில் பயணிக்கத் தொடங்கியது. ஈழப்போர் ஒன்றின் இறுதிக்காலப்பகுதி, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தில் தனது இருப்பை அமைத்துக் கொண்டிருந்தது. மீண்டும் ஆரம்பித்த போர், விமானக் குண்டு வீச்சு, ஆங்காங்கே நேரம் காலமின்றி விழுந்து வெடிக்கும் செல் என அசாதாரண சூழலை உருவாக்கிக் கொண்டிருந்தது. வாணனுக்கு அப்போது பதின்நான்கு வயது. அன்றைய பதற்றமான சூழ்நிலையில், வைத்தியசாலையில் இருந்த அப்பாவின் விடுதியில் பாதுகாப்பின் நிமித்தம் தங்கியிருந்த போது நிகழ்ந்தது அந்தக் கொடூர சம்பவம். அதிலிருந்து மயிரிழையில், பிணங்களுக்குள் பிணமாக தன்னையும் உருமாற்றி ஒரு நாளுக்கு மேல் மரணத்தின் விளிம்பில் வாழ்ந்து தப்பியவன். 1987ம் வருடம், தீபாவளி தினத்தில், யாழ் நகரைக் கைப்பற்றும் நோக்கில் யாழ் கோட்டையிலிருந்த இந்திய இராணுவம் கடுமையான எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டது. முன்னேறி வந்த இராணுவம், யாழ் வைத்தியசாலை வளாகத்தின் அலுவலகப் பகுதியை நோக்கிச் சரமாரியாகச் சுட்டுக் கொண்டு உள்நுழைந்தது. அப்போது அப்பாவுடன் அலுவலக அறையில் நின்று கொண்டிருந்த வாணன், அந்த சம்பவத்தைப்பற்றி கூறுகையில் “ஆமி சுட்டுக்கொண்டு வந்தபோது நான் வாசல்ல தான் நின்டனான். ஆமி சுட்டதில் எனக்கு முன் நின்றவர்கள் இரண்டு பேரும் வெடிபட்டு எனக்குமேல் விழுந்து விட்டினம். நான் அப்படியே அசைவில்லாமல் அவங்களின் உடலுக்கு கீழ விழுந்து கிடந்தன், ஆமி சுட்டது எனக்குப்படேல, கொஞ்ச நேரத்தில் என்ர காலும் விறைச்சுப் போட்டுது, ஆமி வந்து என்ர காலை தனது சூக்காலால் தட்டிப்பார்த்தான், எனக்கு ஒன்டும் தெரியல, நானும் சத்தம் போடாமல் இருந்திட்டன், அதால நான் இறந்திட்டதா நினைச்சு விட்டுட்டுப் போயிட்டான், எனக்கு மேல இறந்து விழுந்தவர்கள் பயங்கரப் பாரம் ஒன்டும் செய்ய முடியாததால அப்படியே இருந்தன், அவர்களில் இருந்து வடிந்த இரத்தம் என்ட உடம்பையும் இரத்தமாக்கியிட்டுது அதோடு பிணங்களுக்கிடையால் ஆமியைப் பார்ப்பன். கிட்ட வரும்போது மூச்சை அடக்கியிருப்பன், அவன் போன பிறகுதான் மூச்செடுப்பன்|. மறுநாள்வரை இப்படித்தான் கழிந்தது. ‘கடைசித்தம்பி காயப்பட்டு தண்ணீர் கேட்க, அப்பா மேசையிலிருந்த தண்ணீரை எடுத்துக் கொடுக்க முற்பட்டபோது, யன்னல்ப்பக்கமிருந்த ஆமிசுட்டு அப்பா செத்ததை பாத்துக்கொண்டிருந்தனான்’.” என்றான். மேலும் “உங்களை ஆமி கூட்டிக்கொண்டு போனபோது அம்மா எங்கட பெயரைக் கூப்பிட்டு அழுதுகொண்டு போனது கேட்டது அதனால உங்களையும் ஆமி சுடப்போறாங்களோ! என்ட பயத்தில எழுப்பேல்லை, பிறகு அப்பகுதியில் ஆமியைக் காணவில்லை, வைத்தியசாலை ஊழியர் ஓராளும் காயப்பட்டு எழும்பாமல் எங்களோடயிருந்தார். நாங்கள் இங்கயிருந்து ஓடுவம் என்று முடிவெடுத்து, நானும் தம்பியையும் தூக்கிக் கொண்டு மதில் ஏறிப்பாய்ந்து நல்லூர் கோயிலுக்கு ஓடினான். அதோட அப்பாவின் சட்டைப் பையில இருந்த அம்புலன்ஸ் சாவியையும் நல்லூர் கோயிலில் நின்ற வைத்திய பொறுப்பதிகாரி நச்சினியாக்கினியாரிடம் கொண்டு போய்க் கொடுத்து நடந்ததைக் கூறினேன் என்றான்”. (படுகொலைச் சம்பவத்தை வாசிக்க இந்த இணைப்பை அழுத்தவும் - வலிகளுடன் தொடரும் இருபத்திநான்காவது தீபாவளித் திருநாள்) இந்தச்சம்பவம் அவனுக்குள் எழுப்பிய கேள்விகள் பல, ஏதும் அறியாத அப்பாவிகள் மீது நடந்தேறிய கோரக் கொலைத்தாண்டவம் அவனை வெகுவாகப் பாதித்திருந்தது. ஈழத்தமிழர்களின் வரலாற்றைப்பற்றி ஜயாவிடமும் அம்மம்மாவிடமும் கதைப்பான் பல கேள்விகளைக் கேட்பான். எமக்கான விடுதலையின் தேவை, இலங்கைத்தீவின் தமிழர்களின் வரலாறு பற்றி மேலதிகமாக அறிய ஆவல் காட்டினான். தனக்கு ஏற்பட்ட அனுபவம், தமிழர்களின் வரலாறு, அவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் என இளம் பிராயத்தில் அவனுக்குள் ஏற்படுத்திய விடுதலைத்தீ ‘சுதந்திர தமிழீழம்’ என்ற விடையாகக் கிடைத்தது. தனது குறிப்பேட்டில் “எமது இனம் பெற்ற சுதந்திரம் பெறுமதி வாய்ந்தது. அதை எதிரியிடம் விட்டுவிடலாமா? கூடாது எமது இனத்தின் சுதந்திரத்தை மீண்டும் பெற்றுவிட இறுதி மூச்சுவரை போராடுவோம்!”என்ற அவனது எழுத்தில் தனது திடத்தைப் பதித்திருந்தான். இந்திய இராணுவ காலத்தில் போராளிகளுக்கு உணவு எடுத்துக் கொடுத்தல், இராணுவம் தொடர்பான தகவல்களை வழங்குதல் போன்ற தன்னாலியன்ற பங்களிப்புக்களைச் செய்யத் தொடங்கினான். இவனது செயற்பாடுகளை அறிந்த அம்மா வெளிநாட்டுக்கு அனுப்பும் நோக்கத்துடன் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் அங்கிருந்தவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி மீண்டும் கடலால் நாட்டுக்கு திரும்பி வந்து வீட்டில் நின்றான். ஈழப்போர் இரண்டு தொடங்கியதும் தன்னை விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக் கொண்டான். ஒருநாள் பயிற்சி முகாமில் எதேச்சையாக ‘மெடிசின்’ கொட்டிலில் அவனைக் கண்டேன். முகாம் அமைக்கும் வேலையின் போது காயம் ஏற்பட்டு, அப்போதுதான் குணமடைந்து வந்திருந்தான். ஒரே பயிற்சி முகாமில் இருவரும் பயிற்சியெடுத்தோம். அவனிடம் “நான் இணைந்திருக்கிறன் தானே நீ போய் வீட்டைப் பார்” என்றேன், மறுத்துவிட்டான். பின்னர் பயிற்சி முடித்து, வேலைத்திட்டங்களுக்காக வேறு இடங்களுக்குச் சென்று விட்டோம். தனது பணியினை பலாலி இராணுவமுகாமில் ஆரம்பித்தான், பல சண்டைகளில் பங்குபற்றினான். அவனது சுயமுயற்சியும் சுயதிட்டமிடலும் சிறந்த தலைமைத்துவத்தைக் கொடுத்தது. முக்கியமாக வேவுப்பணிகளில் திறமையாகச் செயற்பட்டான். எதிரிக்குள் வாழ்வதைக்கூட இலகுவான பணியாகச் செய்தான். அவ்வளவு தூரம் அவன் உளரீதியாக உறுதியான மனநிலை உடையவனாக விளங்கினான். 1993 ம் ஆண்டு ’களத்தில்’ பத்திரிகையில் வந்த விழுதுகள் கட்டுரையில் இருந்து வாணனைப்பற்றி ... ”வாணன் காவலரண்களில் கடமை புரிகிற வேளைகளில் எதிரிப்படையினரின் நிலைமைகளைச் சென்று கண்காணிப்பான். ஆனால் கத்தி விளிம்பில் நடக்கிற இச்செயலின் ஆபத்து, அவனுக்குப் பெரிதாய்ப்பட்டதில்லை - மகிழ்ச்சியைக் கொடுத்து, உற்சாக ஊக்கியாய் இருந்தது. 03-11-1990 அன்று நடாத்தப்பட்ட மாவிட்டபுரம் சிறீலங்காப்படை மினிமுகாம் தாக்குதலுக்கு முன் வேவு பார்க்கும் பணியினை இவன் ஏற்றிருந்தான். மிகச் சாதுரியமாகச் சென்று தகவல்களைத் திரட்டி ஒன்றும் மீதியின்றி தளபதியிடம் பகிர்ந்தான். மேலதிக உறுதிப்பாட்டிற்காக தளபதியினால் அனுப்பப்பட்ட போராளிகளினால் கொண்டுவரப்பட்ட தகவல்களும் இவனுடையதை ஒத்து அச்சொட்டாகவே இருந்தது. வேவுக்கடமைகளிலும் இவன் ஆளுமை மிளிர்ந்தது. இத்தாக்குதலுக்காக எதிரியின் நிலைகளை நோக்கி இவன், சகபோராளிகள் ஊர்ந்து முன்னேறி நிலையெடுக்கின்றனர். தளபதியின் கட்டளை பிறக்கின்றது. எதிர்பாராத் தாக்குதலில் எதிர்ப்படையினர் நிலைகுலைந்து போயினர். நிதானிப்பதற்குள்ளாகக் குண்டுபட்டு வீழ்கின்றனர். எறிகணைகள், உலங்குவானூர்திகள் உக்கிரம் கொண்டு எமது நிலைகளைத் தாக்குகின்றன. குண்டு வீச்சு விமானங்கள் எமது முன்னேற்றத்தைத் தடுக்கப் பகீரதப்பிராயத்தனம் செய்கின்றன. ஆயினும் இவர்கள் எதிரிப்படையின் நிலைகளை அழித்தனர். மினிமுகாமைக் கைப்பற்றினர். எதிரிப்படையினர் தமது ஆயுதங்களை வீசிவிட்டு, காயமுற்ற தமது சகாக்களைத் தூக்கிச் சுமந்தவாறு ஓட்டமெடுத்தனர். அவற்றையும் கைப்பற்றி எமது நிலைகளை நோக்கி மீள்கையில், எங்கிருந்தோ வந்ததொரு குண்டு! இவன் உடலைப் பதம்பார்க்கின்றது! குருதியாறு நிலத்தை நனைக்கிறது. இதைப்பற்றி அவனது தினக்குறிப்பு வரிகள் குரலிலேயே நெஞ்சுள் ஒலிக்கிறது! ”தமிழா நீ பிறவி எடுத்தாலும் நீ பிறந்த மண்ணுக்காக ஒரு துளி இரத்தத்தைக் கொடுத்துவிட மறந்திடாதே தமிழா....” மாவிட்டபுரம் மினிமுகாமைத் தகர்த்து வீரசாதனை புரிந்தவர்களில் ஒருவரான இவன், தனது விழுப்புண் ஆறமுன்னே அடுத்த சமர்க்களத்திற் குதித்தான். 19-12-90 அன்று கட்டுவனில் சிறிலங்காப் படையினருடனான கடுஞ்சமர், முன்னேற முயல்கின்றனர் எதிரிப்படையினர், தடுத்து நிறுத்துவதில் இவனது துப்பாக்கியும் சுறுசுறுப்பாய்த் துரிதமாய் இயங்கியது. 05-02-92 அன்று நடந்த தச்சன்காடு மினிமுகாம் தாக்குதலிலும் இவனது பங்கு அளப்பரியது. சகதோழர்கள் மேல் இவன் காட்டுகிற கரிசனை அபாரம். அவர்களை வழிநடத்துகிற ஆற்றலை அவர்களே புகழ்ந்துரைப்பார்கள். இராணுவம் முன்னேறி வந்த ஒரு தடவை, இவனது குழுவைச் சேர்ந்த ஒருவன் அசட்டையாக எழுந்து நின்று அவதானித்தான். இவன் கண்டிப்பும் அன்பும் கலந்த தொனியிற் சொன்னான், ”எவ்வளவு கஸ்டத்திற்கு மத்தியில் ஒவ்வொரு போராளியையும் அண்ணை உருவாக்கி வைச்சிருக்கிறார். நீ என்னெண்டா சும்மா மண்டையைப் போடுகிறன் எண்டு எழும்பி நிக்கிறாய்!” இந்தச் சிறுவயதிலேயே தலைமைத்துவத்திற்கு விசுவாசமிக்கவனாக, ஒவ்வொரு போராளியினதும் பெறுமதி உணர்வாகத் தன்னை நிலைநிறுத்தியிருந்தான். பங்குபற்றிய அனைத்துத் தாக்குதலுமே மிக நிதானத்துடனும், திறமையாகவும் செயற்பட்டு தளபதிகளின், பாராட்டுதலுக்கும், அன்பிற்கும் பாத்திரமாகிவிட்டான்.” சிறிது காலத்தில் பகுதி இராணுவப்பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். பொறுப்பெடுத்தபின் தனது பகுதிக்குள்ளால் இராணுவத்தை நகரவிடக்கூடாது என்பதற்காக கடுமையாகப் பாடுபட்டான். எப்போதும் எந்த வேளையிலும் ஒவ்வொரு நிலைக்கும் சென்று போராளிகளை ஊக்கப்படுத்தி, அவர்களின் மேல் கரிசனையாக வழிநடாத்தும் ஆற்றல் நல்ல உறவை வளர்த்தது. இராணுவத்தை சும்மாயிருக்க விடக்கூடாது தொடர்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருப்பான். ஒருநாள் வாணன் இராணுவத்தி நடமாட்டத்தை அவதானித்துக் கொண்டிருந்தான். அதேசமயம் சினைப்பர் வைத்திருப்பவர் வெளியில் சென்றுவிட, அந்த ஆயுதத்தைக் கொண்டு சென்று தானே ஒரு சினைப்பர் போராளியாக பதுங்கியிருந்து இரண்டு இராணுவத்தைச் சுட்டுக் கொன்றுவிட்டு வந்தான். கூடியளவு தனது செயற்பாடுகளை எதிரிக்கும் தனது காவலரணுக்குமிடையில்தான் வைத்திருந்தான். அநேகமான நேரங்களில் எதிரியை அண்டிய பகுதியிலேயே இவனைச் சந்திக்கலாம் என்பது இராணுவப் பொறுப்பாளர்களின் கருத்து. தனது பகுதிக்குள் இராணுவத்தை நகரவிடாமல் எவ்வாறு தடுக்கலாம் என்பதை சிந்தித்து பதுங்கித்தாக்குதல்களை செய்தல், பொறிவெடிகளை வைத்தல் போன்ற பணிகளை தானே முன்நின்று செய்வான். அப்பகுதியில் கிடைக்கும் பழைய செல்கள் மற்றும் இதர வெடிபொருட்களை தேடியெடுத்து அவற்றை எதிரியின் நகர்விற்குச் சாத்தியமான பகுதிகளில் வைப்பான். ”24-12-91 இது மிகத் தன்நலக்காரத் தினமோ? இத்துணை புகழ் பூத்த எம் வாணனைத் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டதே! பாரிய வெடியோசைகள் வலிகாமம் கிழக்கின் தலையில் வெடிகின்றது. அந்தக் காலை இவ்வாறுதான் தொடங்கிற்று! இப்பிரதேசத்து ஈவினைப் பகுதி மண்ணின் இயல்பான செம்மை எம்மவர் குருதியால் மேலும் சிவப்பேறி... மூவர் விதையாகின்றனர். எதிர்பாராத கந்தக வீச்சில் மாசுற்ற எம்சூழற் காற்று இவர்தம் இறுதி மூச்சால் தூய்மை பெறுகின்றது. இந்த மூவரில் ஒருவன்தான் .. வாணன். ஓ.... கேட்கிறது உனது ஆத்ம ராகம். அதுதான் உனது குறிப்பேடு ”வீரத்திற்கு வித்திட்ட தமிழா , கோழைக்குக் குடை பிடிக்கலாமா? கூடாது, எமது இழப்புக்கள் இழப்பு அல்ல, விடுதலை என்னும் பயிருக்கு இடப்பட்ட உரமே! எமது இலட்சியம் ஒங்குக” உனது குறிப்பேடு, வெறும் கையேடல்ல. பின்தொடர்ந்து வரும் இளைய வீரர்களுக்காய், தாயக மக்களுக்காய் நீ எழுதி வைத்த மரண சாசனம். அது புனிதம் மிக்கது. ஏனெனில் உனது புகழுடம்பின் சட்டைப் பையிலிருந்து அதை நாம் எடுத்தபோது அதுவும் குருதியில் குளிப்பாட்டப்பட்டிருந்தது.” விழுதுகள் வாழ்ககையின் சில கணங்களின் உணர்வுகளை வார்த்தைகளால் சொல்லமுடியாது. அது பாசப்பிரிவின் வேதனை, விடுதலைக்கு உரமான போராளியின் பிரிவின் வேதனை, மனதை பிழந்து விடும் அந்தச் செய்தி வந்தது. அங்கே கிடைத்த பழைய செல்லை எடுத்து பொறிவெடியாக்க முயற்சித்தவேளை வெடித்ததில் வாணனும் அவனுடன் இருவரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர் என்பது. தம்பி வீரச்சாவு, உணர்வை உலுங்கிய அந்த நிமிடங்கள். சிலமாதங்களுக்கு முன் அப்பாவின் திதியில் இருவரும் சந்தித்ததிற்குப் பின் அவனைக் காணவில்லை. வித்துடலும் பார்க்க முடியாதவாறு சீல் வைக்கப்பட்டிருந்தது. இந்தப்போரில் அநியாயமாக அப்பாவையும் விடுதலைக்கு விதையாக தம்பியையும் இழந்திருக்கின்றோம். சுதந்திர தமிழீழத்திற்காகப் புறப்பட்ட அவனது கடமை ஒரு வருடத்தில் நிறைவிற்கு வந்துவிட்டது. விடுதலைக்காக நிறைய சாதிக்கும் கனவுடன் கடுமையாக செயற்பட்ட, சாதிப்பான் என எதிர்பார்க்கப்பட்ட, அவனின் விடுதலைமூச்சு நின்றுவிட்டது. அந்த ஆத்மா தனது கனவின் அடைவுவரை அமைதிகொள்ளாது என்பது நினைவிற்குள் வர மனது கனக்கின்றது இதுபோன்று பல்லாயிரக்கணக்கானோரின் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் சுமந்து வாழும் எத்தனையோ ஈழத்தமிழர்களுக்கு ஆறுதல் என்பது சுதந்திர விடுதலை மட்டுமே. விடுதலையை நெஞ்சில் சுமந்து வித்தாகிப்போன வாணனுக்கும் மற்றைய இருவருக்கும் சிரம் தாழ்த்திய வீரவணக்கம். -அபிஷேகா- http://www.eelampakkam.blogspot.com/2011/12/blog-post_23.html
  5. என்னோடு பிறந்தநாள் காணும் நிழலிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழத்துக்கள்
  6. வாழ்த்தி நிற்கும் உறவுகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
  7. வாழ்த்துக்கள் கூறிய அன்பு உறவுகள் அனைவருக்கும், புங்கையுரான், கறுப்பி, வாத்தியார், வாதவூரான் ,உடையார் நெஞ்சார்ந்த நன்றிகள்
  8. உளமார்ந்த நன்றிகள் தமிழரசு, உங்கள் வாழ்த்துக்களுடன் தொடங்குகின்றது என்னுடைய இன்றைய நாள், அடுத்த ஆண்டை நோக்கி நன்றிகள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.