அருவி

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  1,051
 • Joined

 • Last visited

Community Reputation

0 Neutral

About அருவி

 • Rank
  Advanced Member

Contact Methods

 • MSN
  aruvi8@msn.com
 • ICQ
  0

Profile Information

 • Gender
  Male
 • Location
  Toronto

Recent Profile Visitors

1,240 profile views
 1. தனது கருத்துக்களைத் தெளிவாகவும் உறுதியாகவும் எடுத்து வைத்த யாழ்கள உறவு வசம்பு அவர்களிற்கு ஆழ்ந்த கவலையுடன் கூடிய வணக்கங்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில் வேறு வேறு கருத்து நிலையில் இருந்து நாம் கருத்துக்களைத் தெரிவித்தாலும் நாகரீகமாகவும் பண்பாகவும் பதிலளிக்கும் ஓர் நல்ல பண்பாளன். அவரின் குடும்பத்தினரிற்கும் ஆழ்ந்த கவலைகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
 2. மற்றவர்கள் அதிசயித்துப் போவதிலிருந்தே அம் மொழியின் சிறப்பினை அவர்கள் உணருகிறார்கள் என்பது தெரிகிறது. ஏன் அச்சிறப்பினை நீங்கள் அழிக்கிறீர்கள். ஒவ்வொரு மொழியும் ஒவ்வொரு சிறப்புத் தன்மை கொண்டது.
 3. நாடகங்களும் தொடர்களும் சன் குழுமத்தாலயோ அன்றி கலைஞர் தொலைக்காட்சியினாலேயோ தனியே தயாரிக்கப்படுவதில்லை. அவை பல்வேறு நிறுவனங்களினால் தயாரிக்கப்பட்டு இத் தொலைக்காட்சி நிறுவனங்களினால் வாங்கப்படுகின்றன. சில நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி நிலையங்களானால் தயாரிக்கப்படுகின்றன.
 4. விற்றல் வாங்கலில் பொருளை வாங்குபவர்தானே பணம் கொடுப்பார். அப்படியானால் ஆண்கள் தானே இங்கே வியாபாரப் பொருட்களாகிறார்கள். அதை ஏன் எவரும் புரிந்துகொள்கிறார்களில்லை. கொள்வனவு செய்த பொருள் ஒன்று கொள்வனவு செய்தவரை அதிகாரம் செய்வது என்பது புதுமையானது இங்கு பெண்களின் மனதுக்கல்ல ஆண்களிற்கே விலை நிர்ணயிக்கப்படுகிறது அக்கா.
 5. அனுபவிச்சவனுக்குத்தான் எப்படி அதில் இருந்து தப்பலாம் என்பதும் புரியும். அதனால்தான் எந்த வேலைக்குப் போனாலும் அனுபவம் கேக்கிறார்கள்
 6. நடமாடும் மலசலகூடம் என்றால் எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம்
 7. சகோதரரின் இழப்பில் துயருறும் இளங்கவி மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் துன்பத்தில் பங்கெடுத்துக்கொள்கின்றோம்.
 8. பெற்றோர் செய்த தவறு... அவர்களது காதலால் குழந்தை பெற்றது... :)
 9. மனிதனிற்கும் இருக்கும் தாழ்வு மனப்பான்மை வெளித்தெரியும் நேரங்களில் சில இப்படியானவை. இவ்வாறு கூறுவதன் மூலம் பரணியின் உணர்வுகளைக் களங்கப்படுத்துவதாக நினைக்கக்கூடாது. பரணிக்கு நேர்ந்த அனுபவம் என்பது வருத்தத்திற்கு உரியதுதான். ஆயினும் ஓர் தென்னாசியாவைச் சேர்ந்தவன் என்பதற்காகத்தான் அவ்வாறு நடைபெற்றது என்று எண்ணுவது அவ்வாறான தாழ்வு மனப்பான்மையின் இன்னொரு வடிவம். சிலவேளைகளில் அதுவே காரணமாகவும் இருக்கலாம் என்பது மறுப்பதற்கில்லை. குற்றவாளியைப் பிடிக்கும் போது முதலில் சந்தேகத்துடன்தான் பிடிக்கிறார்கள், பின்னர் அது தொடர்பாக விசாரித்து அதன் பின்னர் அது தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்படும். மற்றும் ஓர் குறிப்பிட்ட சுற்றாடலில் செய்யப்பட்ட குற்றங்கள் யாரால் செய்யப்படுகின்றன, அதற்கான காரணங்கள் என்ன என்பனவும் ஒருவரைச் சந்தேக் கண்கொண்டு பார்ப்பதற்கு உறுதுணையாகின்றன. சிலது வேண்டுமென்றே மேற்கொள்ளப்படுகின்றன என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே!
 10. அடடா டவுண்ரவுண் பகுதிக்கு இரவில போகக்கூடாதெண்டதெல்லாம் இருக்கிறதா? இரவு வேளையில் டவுண்ரவுண் வீதிகளில் காலற நடைபோவது மிகவும் இனிமையானது... :P Yonge-Carlton/college Intersection... சரியான இடம். வேலையில இருந்து 13:30 மணியளவில் வீடு திரும்பியது உண்மை, ஆயினும் வீடு வந்து சேர 15:30 மணியாகிவிட்டது . அதன் பிறகெல்லாம் நித்திரைகொள்ளவில்லை (வரும்போதே நித்திரை கொண்டாச்சு >_> )
 11. உலகின் மிக நீளமான சாலையான யங் வீதியின் ஒரு பகுதி பனிப்புயலின் பின்னர் இரவு 11 மணியளவில்....
 12. கனடாவில் என்று பொதுவாக அனைத்துப் பிரதேசங்களையும் உள்ளடக்கி சொல்லமுடியாது. சில மாநிலங்களில் அதி குறைவான (ஒப்பீட்டளவில்) நேரத்தில் வைத்தியர்களை அணுகக்கூடியவாறு உள்ளது. மற்றும் ஒன்ராரியோ மாநிலத்தின் ரொறன்ரோ பகுதியில் தற்சமயம் காத்திருக்கும் நேரம் கணிசமாகக் குறைந்துள்ளது. முன்பு குறைந்தது 6 மணித்தியாலத்திற்கு மேலாக இருந்த நேரம் தற்போது ரொறன்ரோவின் சில பகுதிகளில் 30 நிமிடம் என்னும் அளவிற்குக் குறைந்துள்ளது. ரொறன்ரோ நகரின் மத்திய பகுதியில் அவசர சிகிச்சைப் பகுதியில் அண்மையில் 20 நிமிடங்களில் வைத்தியரை அணுகக்கூடியவாறு உள்ளது.
 13. முன்னர் பதிவிட்ட சில பாடல்கள்... http://www.yarl.com/forum/index.php?showtopic=5444
 14. அரியண்டம் - அருவருப்பு மச்சம் - அசைவ உணவுவகை வந்தவ/வந்தவை - வந்திருந்தனர்