யாழ்வாணன்

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Content Count

  82
 • Joined

 • Last visited

 • Days Won

  1

யாழ்வாணன் last won the day on August 20 2014

யாழ்வாணன் had the most liked content!

Community Reputation

42 Neutral

About யாழ்வாணன்

 • Rank
  புதிய உறுப்பினர்
 • Birthday June 9

Profile Information

 • Gender
  Male
 • Location
  Toronto
 • Interests
  இயல்,இசை,நாடகம்

  இயல்-கதை,கட்டுரை,கவிதை இசை - பாடல்கள் நாடகம் -பரதம், சினிமா,மேடை நாடகம்

Contact Methods

 • Yahoo
  vaanan99@gmail.com
 1. இல்லை ரதி இது ஏறக்குறைய இருபது இருபத்தியொரு ஆண்டுகளாக இங்கு நடைபெறுகிறது. இங்கே தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் 3 ரகம் 1 நன்றாகத் தமிழ் கற்றவர்கள் ஆனால் ஆங்கிலம் அரை குறையிலும் குறைவு 2அரை குறையாகத் தமிழ் கற்றவர்கள் ஆனால் ஆங்கிலம் அறவே பேச வராது 3 தமிழும் அரை குறை ஆங்கிலமும் அரை குறை இந்த ரகத்தினரில் சரியானவர்களைக் கடைந்தெடுப்பது வெள்ளைக்கார நிர்வாகத்தினருக்குப் பெரும்பாடு. அதற்கு மேலாக இவர்கள் கற்பிப்பதை புரிந்து கொண்டு உள்வாங்குவது பிள்ளைகளுக்கு இமாலய சோதனை. இந்த நிலையில் இசையின் ஆதங்கத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எமது மனத்திருப்திக்காக வேண்டுமானால் பிள்ளைகளைத் தமிழ் வகுப்பிற்கு அனுப்பலாம். அவர்கள் எழுத வாசிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாடசாலையில் சொல்லிக் கொடுக்கப்பட்டதை நாம் பிள்ளைகளுக்குத் தொடர்ச்சியாக வீட்டில் வைத்துச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
 2. கொஞ்சிக் கொஞ்சி பேசி வரும் தமிழ் போல பாடல் இடம் பெற்ற திரைப்படம்: வேதம் http://www.youtube.com/watch?v=34sAPAFooao
 3. இரு மனங்கள் ஒத்து உண்மையான புரிந்துணரவுடன் இருவர சேரந்து வாழ்வதில் ஊருக்காகவும் உலகுக்காகவும் சம்பிரதாயத்திற்காகவும் பாரம்பரியத்திற்காகவும் குறை காண விளைதல் தவறான விடயமாகும். ஒரு பெண்ணுக்கு தேவை தான் தன் மனதில் துணை என்று வரித்திருப்பவனின் முழுமையான அன்பு தனக்கு மட்டுமே உரித்தானது என்ற உறுதிப்பாடாகும். அந்த உறுதிப்பாடு கிடைக்கும் பட்சத்தில் எந்த ஒரு பெண்ணும் தன் துணைவனின் இதர குறைகளைப் பெரிது படுத்துவதில்லை. இதுவே தற்கால யதாரத்தமாகவும் உள்ளது.
 4. காதலின் வேதனையும் கண்முன் நிகழ்ந்த அழிவுகளும் கால வோட்டத்தில் இவையிரண்டும் கரைந்தோடும் நிலையிங்கு கவி வரியாய் களை கட்ட கன்னித் தமிழில் அரிஞ்சயனால் பவித்திரமாய் புனையப்பட்டமை பாராட்டுக்குரிய விடயமன்றோ
 5. இவரகளது வாழ்க்கையில் யதாரத்தம் இருக்கிறது உள்ளதை உள்ளபடி ஏற்றுக் கொண்டுள்ளாரகள். என்னைப் பொறுத்தவரை தவறு கற்பிக்கும் உரிமை இன்னொருவருக்கு இல்லை அவரகளுக்குப் பிடித்த வாழ்வை அவரகள் வாழ்கிறாரகள். மேலும் அதே மாதிரி மற்றவரகளை வாழும்படி அவரகள் கேட்கவுமில்லை வற்புறுத்தவுமில்லை. எம்மால் முடிந்தால் ஏற்றுக் கொள்வோம் முடியாவிட்டால் விமரசிக்காமல் விலத்தி நிற்பது தான் நாகரீகம். உண்மையைப் பேசுவோமானால் நெடுக்ஸ் கூறியது போல், It is their car and their petrol. மொத்தத்தில் அது அவரகளது தேரவும் அவரகளது தனி மனித உரிமையும் சுதந்திரமும் ஆகும்
 6. வணக்கம் உங்கள் வரவு நல்வரவாகட்டும் கவிதை நன்றாக இருக்கிறது தொடரந்து எழுதுங்கள்
 7. அருமையாக இருக்கிறது சுமோ கவிதை, தொடர்ந்து எழுதுங்கள்
 8. பாராட்டுக்கு நன்றி நெடுக்ஸ், நான் யாழில் படைத்த கன்னிக் கவிதை காதல் கவிதையல்ல, கீழே இருக்கும் இணைப்பு என் கன்னிக் கவிதையுடையது. http://www.yarl.com/forum3/index.php?showtopic=94786&hl=%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D#entry708226
 9. கவிதைகளால் மலர் தொடுத்துன் கழுத்தினிலே மாலையிட்டேன் கனிவான வார்த்தைகளாலுன் காதுகளில் இசை படித்தேன் காதல் மேவ காரிகையுன் கனியிதழில் இதழ் பதித்தேன் காலமெல்லாம் நீயே என்றுன் கரம் பற்றி நான் இருந்தேன் செந்தமிழில் செல்லமா யுனை செல்லக் கண்ணம்மா என்றேன் உந்தன் செல்லக் குறும் பையெல்லாம் உயிரோ டணைத்து உவகை கொண்டேன் உந்தன் தூக்க சந்தம் கேட்டு எந்தன் தூக்கம் நா னடைந்தேன் ஜென்ம மெத்தனை யெடுத்தாலுமினி உன் னோடு தான் வாழ்ந்திடுவேன்
 10. //பொப் ரேயினுடைய திறமை காரணமாகத்தான் 2009ல் சமஷ்டி லிபரல் கட்சி(Federal Liberal Party) அவரை இணைத்துக் கொண்டத// சரித்திரத்தை சரியாக அறிந்து கொண்டு ஒருவரைப் பற்றி எழுதுவது நல்லதல்லவா? மேலும் நாட்டின் நலன் கருதி ஒரு கட்சியில் இணைவது உங்கள் பார்வையில் மதிப்பை கீழே இறக்கும் என்றால் நான் குறிப்பிட்ட அந்தத் தமிழப் பெருந்தகை மற்றும் அவரோடு நிற்கும் இன்னும் பலர், மற்றும் 2000ம் ஆண்டு வைகாசியில் லிபரல் கடசியின் நிதி அமைச்சர் போல் மார்டினுக்கு தட்டுக்கு 600 டொலர் படி விருந்தளித்து விட்டு 2005 வரை தங்கள் ஜம்பம் பலிக்கவில்லை என்றவுடன, 2005ல் லிபரல் கட்சிக்கு எதிராக தமிழ் மக்களை தூண்டியது மட்டுமல்லாமல் 2006 தேர்தல் முதல் 2011 தேர்தல்வரை கொன்சவேர்டிவ் கட்சிக்கும் 2011முதல் என்டிபிக்கும் ஆதரவை வழங்கிய வழங்கிக் கொண்டிருக்கும் கனடாவின் முடி சூடாத் தமிழ் அமைப்பு, அதன் புது வடிவ அமைப்புகள், அது சார்ந்த மற்றைய தமிழ் அமைப்புகள், அதன் தலைவர்கள் பற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்? “தமிழர் செய்தால் மதிப்பு இறங்காது பொப் ரே செய்தால் மட்டும் இறங்குமோ?” “சுட்டும் விரலால் எதிரியைக் காட்டி குற்றும் கூறுகையில் மற்றும் மூன்று விரல்கள் உந்தன் மா்்பினைக் காட்டுதடா” என்று இதைத்தான் கண்ணதாசன் பாடி வைத்தார். தமிழில் பற்று வையுங்கள், தேசியத்திற்காக குரல் கொடுங்கள் ஆனால் தேசியப் பற்றுக் காரணமாக சரியாக விபரம் தெரியாமல் இன்னொருவர் மீது அவதூறு பாடாதீர்கள். ”ஆகவே யாரும் கட்சி மாறலாம்..! ஆனால் அவ்வாறு செய்யும்போது அவர்களின் மதிப்பு கீழ் இறங்குவதை தவிர்க்க முடியாது..!” என்ற உங்கள் கூற்றுப்படியே சொல்கிறேன் பொப் ரேயின் மதிப்பு கீழ் இறங்கியுள்ளது என்றால் நான் குறிப்பிட்ட தமிழ் அமைப்பு, அதன் புது வடிவ அமைப்புகள், அது சார்ந்த மற்றைய அமைப்புகள் அதிலிருந்தவர்கள் இன்னும் இருப்பவர்கள் எல்லோருடைய மதிப்பும் தமிழ் மக்கள் மத்தியிலும் கனடிய அரசியில் வட்டாரங்களிலும் கீழ் இறங்கியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் “குருக்கள் குழந்தை கோயிலில்............குற்றமில்லை” என்பதை நிரூபிக்க விளைவது தவறு இசை, இனியும் இப்படிக் கண்மூடித் தனமாகத் தொடர நினைத்தீர்களானால் “முள்ளிவாய்க்கால் 2” என்று இன்னொரு சம்பவமும் வரலாற்றில் பதிவாகும் அதற்கு உடந்தையாகாதீர்கள். குற்றம் செய்தவனை விட அதற்கு உடந்தையாக இருந்தவனே பெரும் குற்றவாளி என்பதை நிரூபித்து விடாதீர்கள்.
 11. காலம் கடந்த புரட்சி என்று சரியாகக் கூறியிருந்தீர்கள் தமிழச்சி. எம்மவருடைய புரட்சி ஆரம்பத்திலேயே காலம் கடந்துதான் தோற்றம் பெற்றது. மகாத்மா காந்தியின் அஹிம்சைப் போராட்டங்கள் உதாசீனப்படுத்தப்பட்டு உலகம் பூராவும் உரிமைகளுக்காகவும் வேறு பல காரணங்களுக்காகவும் ஆயுதங்களை நாடிய காலத்தில் எம்மவர்கள், தந்தை செல்வா போன்றவர்களின் தலைமையில் அஹிம்சையாகப் போராடினார்கள். புரட்சி செய்தார்கள். எழுபதுகளின் நடுப்பகுதியில் உலக நாடுகள் அனைத்தும் ஆயுதங்கள் தவிர்க்கப்படவேண்டுமென்ற நோக்கில் பேச ஆரம்பித்து எழுபதுகளின் இறுதிப் பகுதியில் முற்றுமுழுதாக ஆயுதங்களை நிராகரித்தபோது, தமிழர்களாகிய நாங்கள் ஆயுதங்களை ஏந்த ஆரம்பித்தோம். இரண்டாவது தடவையாக, காலம் கடந்தே எமது புரட்சியை ஆரம்பித்தோம். ஆகவே, நீங்கள கூறியது போல, நாம்காலம் கடந்துதான் எமது புரட்சிகளைச் செய்திருக்கிறோம். இதை நான் எழுதிய காரணத்தால் இதற்குப் பின், ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் ஆயுதங்கள் பாவிக்கப்படவில்லையா என்றுகூட ஒரு சிலர் நினைக்கலாம். ஆனால், நான் குறிப்பிட்டது என்னவென்றால், இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பிற்பாடு ஆங்காங்கே நடைபெற்ற போர்களிலும், குறிப்பாக வியட்நாமில் நடைபெற்ற போர்களிலும் ஏற்பட்ட மனித உயிர்ச் சேதத்தின் எண்ணிக்கை அதிக அளவாக இருந்தது. இந்த மனித உயிர்ச் சேதம் தவிர்க்கப்படவேண்டுமென்பதற்காகவே ஆயுதக் களைவுக்குள் உலகம் நுழைந்தது. எண்பதுகளின் நடுப்பகுதியிலும் 90களின் ஆரம்பப் பகுதியிலும் இரண்டாயிரங்களின் ஆரம்பப் பகுதியிலும் மத்தியகிழக்குப் பிராந்தியங்களில் நடைபெற்ற போர்களில் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டபோதும், ஏற்பட்ட மனித உயிர்ச் சேதமானது வியட்நாம் போர் போன்ற போர்களில் ஏற்பட்ட மனித உயிர்ச் சேதத்தைவிட மிகமிகக் குறைவானதாகும். இப்போதும் புரட்சி என்ற பெயரில் நாம் தவறான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோம்.
 12. பொப் ரே ஒன்ராரியோ மாகாண என் டி பி கட்சியின் தலைவராகவும், ஒன்ராரியோ மாகாண முதல்வராகவும் இருந்தவர். 1991 வரை நடைபெற்ற இவரது ஆட்சியிலேயே இறுதியாக ஒன்ராரியோ செழிப்பாக இருந்தது. அதன் பின்பு 2003ல் மலர்ந்த மகின்ரியினுடைய காலத்தை குறிப்பிடலாம். பொப் ரேயினுடைய திறமை காரணமாகத்தான் 2009ல் சமஷ்டி லிபரல் கட்சி(Federal Liberal Party) அவரை இணைத்துக் கொண்டது. கட்சிகளின் பெயர் ஒன்றாக இருந்தாலும் , இந்தியா போலல்லாது கனடாவில் ஒரே பெயரைக் கொண்ட மாகாணக் கட்சிக்கும் , சமஷ்டிக் கட்சிக்கும், அவைகளுடைய கொள்கைகளிலும் போக்குகளிலும் நிலைப்பாடுகளிலும் பல அடிப்படை வித்தியாசங்கள் இருக்கின்றன. எனவே இன்றைய என்டிபி கட்சிக்குக் கொள்கை இல்லை என்பதற்காக பொப் ரேக்கு கொள்கை இல்லை என்று நீங்கள் கூற முடியாது. லிபரல் கட்சியில் வேட்பாளராக நிற்க முனைந்து நிராகரிக்கப்பட்ட ஆத்திரத்தில் அதே தேர்தலில் என்டிபியில் போட்டியிட்டு தோல்வி கண்ட பின்னும், குறிப்பிட்ட பிரேரணை எரிக்கப்பட்ட கூட்டத்திலும் கலந்து கெண்டதுடன் தமிழ் தலைவர்கள் மக்களுக்கு செவி சாய்க்க வேண்டும் என அறிவுரை வழங்கிய ஒன்ராரியோ என்டிபி கட்சியின் தலைவரும், எம் இளையோர் அமைப்பின் முன்னாள் பெருந்தகையுமானவரை விட பொப் ரே கொள்கையும் நிலைப்பாடும் கொண்டவர். இவ்வாறானவர்கள் தான் இன்று எமது இளைய சமுதாயத்தை வழி நடத்திச் செல்கிறார்கள். இவர்களின் வழி நடத்தலைப் பின்பற்றுவார்களாயின் இம் இளைய சமுதாயத்தினர் தம்மையும் பாழாக்கி எம் இனத்தையும் பாழாக்குவார்கள் என்பதில் ஐயமில்லை. கடந்த காலத்திலும் இது தான் நடந்தது இப்போதும் இது தான் நடக்கிறது.
 13. கண்டதற்கும் பொருளெழுதும் கோமகனைக் காண வென்று கன்னியரும் வந்துவிட்டால் அண்டமும் அதிர்ந்திடுமோ இல்லை அவர் நிலையும் குலைந்திடுமோ சொல்லுமையா சுண்டலைய்யா நிரந்தரமாய் தீர்வொன்று அவர் கடியை நிறுத்துதற்கு
 14. பட்டி மன்றம் எனும் பெயரில் பைந்தமிழில் பேசிவிட்டால் கெட்டித்தனம் என நினைத்தார் கரு விளங்கா கரும்பு ஒட்டி யாணம் கட்டும் நங்கை குதூகலமாய் கருத்துரைத்தால் பட்டி மன்றம் ஆகிடுமோ பலாப்பழத்தின் பகுப்பாய்வு