Jump to content

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    85545
  • Joined

  • Last visited

  • Days Won

    480

Posts posted by நவீனன்

  1. நாவூறச் செய்யும் நெல்லிக்காய் சட்னி செய்வது எப்படி?

     

     
    wow

    தேவையான பொருள்கள்:

    முழு நெல்லிக்காய் - 6 
    உளுத்தம்பருப்பு - அரை கிண்ணம்
    காய்ந்த மிளகாய் - 2
    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
    கொத்துமல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு (அலசி ஆய்ந்தது)
    கடுகு - அரை தேக்கரண்டி
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    hqdefault.jpg

    செய்முறை:

    நெல்லிக்காயை கொட்டை நீக்கி, துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடானதும் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும்.

    அதனுடன் நெல்லிக்காய், பெருங்காயத்தூள், உப்பு, கொத்துமல்லித்தழை சேர்த்து வதக்கி இறக்கவும்.

    ஆறியதும் அதனுடன் தண்ணீர்விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்துச் சட்னியுடன் கலக்கவும். சுவையான நெல்லிக்காய் சட்னி ரெடி. இது சத்தானதும் கூட என சொல்லவும் வேண்டுமா!

    குறிப்பு: நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்தும் அரைக்கலாம்.

    http://www.dinamani.com/lifestyle/lifestyle-food/2018/jun/29/nellikkaai-chutney-recipe-2949838.html

  2. சப்பாத்திக்கு அருமையான ஹைதராபாதி சிக்கன் மசாலா

     
     அ-அ+

    புலாவ், தோசை, நாண், சப்பாத்தி, பராத்தாவுக்கு ஏற்ற சைட் டிஷ் இந்த ஹைதராபாதி சிக்கன் மசாலா. இந்த இந்த மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

     
     
     
     
    சப்பாத்திக்கு அருமையான ஹைதராபாதி சிக்கன் மசாலா
     
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் - 1 கிலோ
    துருவிய தேங்காய் - அரை கப்
    ஏலக்காய் - 4
    கிராம்பு - 6
    காய்ந்த மிளகாய் - 15
    சீரகம் - 1 டீஸ்பூன்
    வெந்தயம் - அரை டீஸ்பூன்
    தனியா (மல்லி) - 2 டீஸ்பூன்
    பட்டை - 2
    முந்திரி - 3 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கவும்)
    நெய்/எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
    பெரிய வெங்காயம் - 2
    இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
    சர்க்கரை - 2 டீஸ்பூன்
    ஜாதிக்காய் - கால் டீஸ்பூன்
    எலுமிச்சைச்சாறு - 2 டேபிள்ஸ்பூன்
    டொமேட்டோ பியூரி - 200 மில்லி
    உப்பு - தேவையான அலவு
    தேங்காய்ப்பால் - 200 மில்லி
     
    201808181323085163_1_hyderabadi-chicken-masala._L_styvpf.jpg

    செய்முறை :

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், முந்திரியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸியில் தேங்காய், கிராம்பு, ஏலக்காய், பட்டை, காய்ந்த மிளகாய், சீரகம், வெந்தயம், மல்லி (தனியா), ஜாதிக்காய், முந்திரி சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும்.

    அடுப்பில் கடாயை வைத்து, நெய் விட்டு சூடானதும் வெங்காயத்தைச் சேர்த்து பிரவுன் நிறம் ஆகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி-பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.

    இத்துடன் தேங்காய்ப்பால், டொமேட்டோ பியூரி, ஒரு கப் தண்ணீர் விட்டு வேக விடவும்.

    அடுத்து அதில் சிக்கன், உப்பு, சர்க்கரை சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து மூடி போட்டு சிக்கனை வேக விடவும்.

    சிக்கன் வெந்து கலவை க்ரீம் பதத்துக்கு வந்ததும், எலுமிச்சைச் சாறு ஊற்றி இறக்கவும்.

    https://www.maalaimalar.com

  3. வில்லேஜ் விருந்து

     

     

    ``இயற்கையோடு ஒன்றிவாழும் கிராமத்து மக்களின் ஆரோக்கிய ரகசியம் அவர்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவிலும் ஒளிந்திருக்கிறது. அவசர யுகத்தில் கண்ணில் தென்படும் உணவுகளையெல்லாம் உள்ளே தள்ளிவரும் பலர், கிராமத்துச் சமையலின் ருசியை அறிந்ததே இல்லை. 

    p121a_1533039593.jpg

    p121aa_1533039601.jpg

    இங்கே, கரூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் சரஸ்வதி அசோகன் அளித்திருக்கும் கிராமத்து உணவுகளைச் செய்து அளித்தால், நகரத்துக் குழந்தைகளும்கூட விரும்பிச் சாப்பிடுவார்கள். சிற்றுண்டி வகைகளில்கூடச் சுவையான பல உணவுகள் கிராமத்து விருந்தில் உண்டு. ஓட்டல்களில் கிடைக்கும் உருளைக்கிழங்கு, மைசூர் போண்டாக்களுக்கு நல்லதொரு மாற்று, கலவை பருப்பு போண்டா. சாக்லேட்டுகளுக்குப் பதிலாக ஸ்நாக்ஸ் பாக்ஸில் கொடுத்தனுப்ப ஏற்றது சத்தும் சுவையும் கொண்ட பச்சைப்பயறு இனிப்பு உருண்டை. இப்படி ஒவ்வொன்றுமே சிறப்புமிக்கதாகத் திகழ்கிறது.மண் மணக்கட்டும்!

     - சரஸ்வதி அசோகன்,  படங்கள்: நா.ராஜமுருகன்


    p121aaa_1533039613.jpg

    தினை - தட்டப்பருப்பு பொங்கல்

    தேவையானவை:

     தினை - 250 கிராம்
     தட்டப்பருப்பு -  75 கிராம்
     சீரகம், மிளகு - தலா 2 டீஸ்பூன்
     தோல் சீவி, துருவிய இஞ்சி - சிறிதளவு
     பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
     கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
     எண்ணெய், நெய் கலவை - ஒரு டேபிள்ஸ்பூன்
     மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
     உப்பு - தேவையான அளவு
     நெய் - சிறிதளவு

    செய்முறை:

    தினையுடன் தட்டப்பருப்பைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் - நெய்விட்டு சூடாக்கி சீரகம், மிளகு, கறிவேப்பிலை தாளிக்கவும். இதில் இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், உப்பு  சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும். இதனுடன் ஊறவைத்த தினை - பருப்பு கலவையைச் சேர்த்து மூடி 3 விசில்விடவும். பிறகு அடுப்பை சிறு தீயில் வைத்து, ஒரு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து சிறிதளவு நெய்விட்டு கொத்தமல்லித்தழை தூவிக் கிளறி பரிமாறவும்.

    வரகு, பனி வரகிலும் இதேபோல் பொங்கல் செய்யலாம்.


    p121b_1533039625.jpg

    கலவை பருப்பு போண்டா

    தேவையானவை:

     துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, தட்டப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சரிசி - தலா ஒரு கைப்பிடியளவு
     வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கவும்)
     பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்)
     நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
     சீரகம் - ஒரு டீஸ்பூன்
     எண்ணெய், உப்பு  - தேவையான அளவு

    செய்முறை:

    துவரம்பருப்புடன் பாசிப்பருப்பு, தட்டப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சரிசி சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து லேசாக தண்ணீர் தெளித்து மிக்ஸியில் கெட்டியாக அரைத்தெடுக்கவும். அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, சீரகம் சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவை போண்டாக்களாகக் கிள்ளிப் போட்டு, வேகவைத்துச் சிவந்ததும் எடுக்கவும்.

    குறிப்பு:

    பச்சரிசி சேர்ப்பதால் மொறுமொறுவென இருக்கும்.


    p121bb_1533039639.jpg

    முடக்கத்தான் கீரை அடை

    தேவையானவை:

     புழுங்கல் அரிசி - 100 கிராம்
     பச்சரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கைப்பிடியளவு
     சோம்பு - ஒரு டீஸ்பூன்
     காய்ந்த மிளகாய் - தேவையான அளவு
     முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடியளவு
     பூண்டு - 3 பல்
     எண்ணெய், உப்பு – தேவையான அளவு

    தாளிக்க:

     கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
     வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
     தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்
     கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு

    செய்முறை:

    புழுங்கல் அரிசியுடன் பச்சரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து, அதனுடன் சோம்பு, காய்ந்த மிளகாய், பூண்டு, முடக்கத்தான் கீரை, உப்பு சேர்த்து, தண்ணீர் தெளித்து மிக்ஸியில் அடை மாவு பதத்துக்கு அரைத்தெடுக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து... வெங்காயம், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி, தேங்காய்த் துருவல் சேர்த்து, அடை மாவுடன் கலக்கவும் (தேவையானால் சிறிதளவு தண்ணீர்விட்டு கரைக்கலாம்). தோசைக்கல்லைக் காயவைத்து மாவை அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

    குறிப்பு:

    மூட்டுவலிக்கு முடக்கத்தான் கீரை மிகச்சிறந்த நிவாரணி.


    p121bbb_1533039652.jpg

    அரிசி பருப்பு கார தோசை

    தேவையானவை:

     பச்சரிசி - 200 கிராம்
     துவரம்பருப்பு - 75 கிராம்
     சீரகம் - ஒரு டீஸ்பூன்
     கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு
     காய்ந்த மிளகாய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    அரிசியுடன் துவரம்பருப்பு சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அதனுடன் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொரகொரவென அரைத்தெடுக்கவும். அதனுடன் உப்பு சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர்விட்டு தோசை மாவுப் பதத்துக்குக் கரைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவைத் தோசைகளாக ஊற்றிச் சுற்றிலும் எண்ணெய்விட்டு, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

    குறிப்பு:

    மாவு புளிக்கத் தேவையில்லை.


    p121c_1533039664.jpg

    பூசணிவிதைப் பொடி

    தேவையானவை:

     மஞ்சள் பூசணிவிதை - 100 கிராம்
     தனியா (மல்லி) - ஒரு டேபிள்ஸ்பூன்
     சீரகம் - 2 டீஸ்பூன்
     கறுப்பு எள் - ஒரு டேபிள்ஸ்பூன்
     காய்ந்த மிளகாய் - தேவையான அளவு
     வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன்
     பெருங்காயத்தூள் - சிறிதளவு
     கறிவேப்பிலை - ஒரு கைப்பிடியளவு
     உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    மஞ்சள் பூசணிவிதையை வெயிலில் நன்கு காயவைத்து எடுக்கவும். கறிவேப்பிலையைக் கழுவி நிழலில் உலர்த்தி எடுக்கவும். வாணலியில் தனியா, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து வறுத்தெடுக்கவும். பிறகு பூசணி விதை, கறுப்பு எள்ளைத் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். கறிவேப்பிலையுடன் உப்பு சேர்த்து வாணலியில் போட்டுச் சூடாக்கி பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும். வறுத்த பொருள்களை ஒன்றாகக் கலந்து ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து அரைத்து, இறுதியாக வறுத்த வேர்க்கடலை சேர்த்து அரைத்தெடுத்தால்... கமகம பூசணிவிதைப் பொடி ரெடி.
    இதை சாதத்துடன் சேர்த்து, நெய்விட்டு பிசைந்து சாப்பிட, சுவை அள்ளும். இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.


    p121cc_1533039675.jpg

    கறுப்பு உளுந்து கறிவேப்பிலைத் துவையல்

    தேவையானவை:

     உடைத்த கறுப்பு உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடியளவு
     தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
     பூண்டு - 5 பல்
     காய்ந்த மிளகாய் - தேவையான அளவு
     புளி - சிறிதளவு
     பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
     உப்பு - தேவையான அளவு
     நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்

    செய்முறை:

    வாணலியில் எண்ணெய்விட்டு கறுப்பு உளுத்தம்பருப்பு சேர்த்துச் சிவக்க வறுக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து மீண்டும் 2 நிமிடங்கள் வறுக்கவும். அதனுடன் இறுதியாக தேங்காய்த் துருவல் சேர்த்துப் புரட்டி இறக்கவும். நன்கு ஆறிய பிறகு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து  துவையலாக அரைத்தெடுக்கவும்.
    இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சிறிதளவு தண்ணீர்விட்டுக் கரைத்து இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ளலாம்.


    p121ccc_1533039686.jpg

    கம்பு இனிப்பு அப்பம்

    தேவையானவை:

     கம்பு - 200 கிராம்
     பச்சரிசி, உளுத்தம்பருப்பு - தலா 50 கிராம்
     பொடித்த வெல்லம் - தேவையான அளவு
     ஏலக்காய் - 3
     தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்
     எண்ணெய் -  பொரிக்கத் தேவையான அளவு

    செய்முறை:

    கம்புடன் அரிசி, உளுத்தம்பருப்பு சேர்த்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை நன்கு வடித்துவிட்டு, கம்புக் கலவையை மிக்ஸியில் சேர்த்து வெல்லம், ஏலக்காய், சிறிதளவு தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து அப்பம் மாவுப் பதத்துக்குக் கரைக்கவும் (இட்லி மாவு பதத்தைவிட சற்றுக் கெட்டியாக இருக்க வேண்டும்). வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, மாவைக் குழிவான கரண்டியால் எடுத்து அப்பமாக ஊற்றி, அடுப்பை சிறு தீயில் வைத்து, வேகவிட்டு எடுக்கவும்.

    குறிப்பு:

    மாவை ஒவ்வோர் அப்பமாக ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.


    p121d_1533039697.jpg

    மொச்சை கெட்டி பருப்பு

    தேவையானவை:

     காய்ந்த மொச்சை - 200 கிராம்
     தோலுரித்து, நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப்
     காய்ந்த மிளகாய் - ஒன்று
     சாம்பார் பொடி - தேவையான அளவு
     கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்
     தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
     மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்
     சீரகம் - ஒரு டீஸ்பூன்
     பூண்டு - 6 பல் (தட்டவும்)
     கறிவேப்பிலை - சிறிதளவு
     எண்ணெய் - 4 டீஸ்பூன்
     உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    காய்ந்த மொச்சையை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலை மொச்சையின் தோலை நீக்கி, உள்ளே இருக்கும் பருப்பைத் தனியாக எடுக்கவும். குக்கரில் மொச்சையுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து எடுத்து ஒன்றிரண்டாகக் கடையவும். வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய்விட்டு சீரகம், வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் சாம்பார் பொடி, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு மொச்சை, உப்பு சேர்த்துக் கொதிக்கவைத்து இறக்கவும். மற்றொரு வாணலியில் ஒரு  டீஸ்பூன் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து மொச்சைக் கலவையுடன் கலந்து பரிமாறவும்.

    இதைச் சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.


    p121dd_1533039709.jpg

    சோளம்  தக்காளி பணியாரம்

    தேவையானவை:

     சோளம் - 100 கிராம்
     இட்லி மாவு - ஒரு கப்
     தக்காளி - 3 (நறுக்கவும்)
     சீரகம் - 2 சிட்டிகை
     எண்ணெய், உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    சோளத்தை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அதனுடன் தக்காளி, சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். உப்பு, இட்லி மாவு சேர்த்து நன்கு கலக்கவும். பணியாரக்கல்லை காயவைத்துக் குழிகளில் எண்ணெய்விட்டு, மாவைக் குழிகளில் ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். 

    குறிப்பு:

    இட்லி மாவில் உப்பு இருப்பதால், உப்பு சேர்க்கும்போது பார்த்துச் சேர்க்கவும். இட்லி மாவு புளித்திருப்பதால், சோளம், தக்காளியை அரைத்த உடனே சேர்த்துச் செய்யலாம். வெங்காயம், பச்சை மிளகாய் தாளித்தும் செய்யலாம்.

    https://www.vikatan.com

  4. அருமையான நெல்லூர் சிக்கன் வறுவல்

     
    அ-அ+

    சப்பாத்தி, புலாவ், சாதம், நாண், தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த நெல்லூர் சிக்கன் வறுவல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

     
     
     
     
    அருமையான நெல்லூர் சிக்கன் வறுவல்
     
    தேவையான பொருட்கள் :

    சிக்கன் லெக் பீஸ் - 5 துண்டுகள்
    மிளகாய்த்தூள் - 10 கிராம்
    சீரகத்தூள் - 5 கிராம்
    மிளகுத்தூள் - 5 கிராம்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    எலுமிச்சைப்பழம் - அரை பழம்
    இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 10 கிராம்
    இஞ்சி-பூண்டு பொடியாக நறுக்கவும் - 10 கிராம்
    கடலைமாவு - 10 கிராம்
    அரிசிமாவு - 5 கிராம்
    கார்ன்ஃப்ளார் - 10 கிராம்
    வெள்ளை எள் - 5 கிராம்
    பெரிய வெங்காயம் - 50 கிராம்
    பச்சை மிளகாய் - 5 கிராம்
    குடைமிளகாய் - 50 கிராம்
    வெங்காயத்தாள் - சிறிதளவு
    காய்ந்தமிளகாய் பேஸ்ட் - 2 டீஸ்பூன்
    சோயா சாஸ் - 3 டீஸ்பூன்
    தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
     
    201808141507143791_1_nerlor-chicken-1._L_styvpf.jpg

    செய்முறை :

    கறிவேப்பிலை, வெங்காயம், ப.மிளகாய், குடை மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு எடுத்து வைக்கவும்.

    சிக்கனை நன்றாக கழுவி வைக்கவும்.

    சிக்கன் துண்டுகளை நன்றாகக் கழுவி அவற்றுடன் இஞ்சி-பூண்டு பேஸ்ட், எலுமிச்சைச்சாறு, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு, கடலைமாவு, அரிசிமாவு, கார்ன்ஃப்ளார் சேர்த்துப் பிசைந்து 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

    கடாயில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானம் ஊற வைத்த சிக்கனை போட்டு பொரித்தெடுக்கவும் (மிதமான சூட்டில் பொரித்தெடுத்தால் போதுமானது).

    மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் குடைமிளகாய், வெங்காயத்தாளைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

    இதில் சிறிது தண்ணீர்விட்டு தக்காளி சாஸ், சோயா சாஸ், காய்ந்த மிளகாய் பேஸ்ட், மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும்.

    இத்துடன் பொரித்த சிக்கன் துண்டுகளையும் சேர்த்து மிதமான சூட்டில் நன்றாகக் கிளறவும்.

    அனைத்து மசாலாக்களும் ஒன்றாகச் சேர்ந்து வரும் போது எள் தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான நெல்லூர் சிக்கன் வறுவல் ரெடி.

    https://www.maalaimalar.com

  5. கத்திரிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

     
    அ-அ+

    அனைவருக்கும் ஊறுகாய் பிடிக்கும். இன்று கத்தரிக்காய் வைத்து எளிய முறையில் சூப்பரான காரசாரமான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

     
     
     
     
    கத்திரிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி?
     
    தேவையான பொருட்கள் :

    கத்திரிக்காய் - 500 கிராம்,
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    புளி - எலுமிச்சம் பழ அளவு,
    மிளகாய்தூள் - 50 கிராம்,
    வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    எண்ணெய் - 100 கிராம்,
    உப்பு - தேவையான அளவு.

    தாளிக்க :

    வெந்தயம் - அரை டீஸ்பூன்,
    கடுகு - ஒரு டீஸ்பூன்,
    பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 2,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

    201808111423489095_1_brinjal-pickle._L_styvpf.jpg

    செய்முறை :

    கத்திரிக்காயை சுத்தம் செய்து, துடைத்து எடுத்து, துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    புளியைக் கரைத்து வடிகட்டி, உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள் சேர்த்து கலக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கலந்து வைத்துள்ள புளிக்கரைசலுடன் கத்திரிக்காயையும் சேர்த்து கலந்து அப்படியே இரவு முழுவதும் ஊற வைக்கவும்.

    மறுநாள் காலையில் புளிக் கரைசலை வடிகட்டி, கத்திரிக்காயை மட்டும் தனியாக எடுத்து பிளாஸ்டிக் ஷீட்டில் ஒரு நாள் முழுக்க வெயிலில் வைத்து எடுக்கவும். இவ்வாறு 3 நாட்கள் செய்யவும்.

    பிறகு, அதில் 100 கிராம் எண்ணெயைக் காய்ச்சி கத்தரிக்காய் கலவையில் ஊற்றிக் கலக்கவும்.
     
    கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து, கத்திரிக்காயில் போட்டுக் கலந்தால். கத்திரிக்காய் ஊறுகாய் தயார்.

    https://www.maalaimalar.com

  6. சூப்பரான ஆந்திரா ஸ்டைல் புளியோதரை

     
    அ-அ+

    ஐயங்கார், கோவில் புளியோதரை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ஆந்திரா ஸ்டைல் புளியோதரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

     
     
     
     
    சூப்பரான ஆந்திரா ஸ்டைல் புளியோதரை
     
    தேவையான பொருள்கள் :

    உதிராக வடித்த சாதம் - 2 கப்
    புளி, உப்பு - தேவையான அளவு
    பச்சை மிளகாய் - 2
    கறிவேப்பிலை - சிறிது
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
    கடுகு - 1 ஸ்பூன்
    உளுந்து, கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்
    காய்ந்த மிளகாய் - 4
    பெருங்காயம் - அரை ஸ்பூன்.
     
    201808091127545973_1_andhra-style-puliyogare._L_styvpf.jpg

    செய்முறை :

    சாதம் சூடாக இருக்கும்போதே அதை குவித்தாற் போல வைத்து நடுவில் குழியாக்குங்கள்.

    புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வையுங்கள்.

    அதில் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஆகியவற்றைப் போட்டு மூடி வையுங்கள்.

    மீதமுள்ள எண்ணெயில் 1 டீஸ்பூன் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, புளி கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து பச்சை வாடை போக கொதிக்க வையுங்கள்.

    சாதத்தில் புளி கலவை, சேர்த்துக் கிளறுங்கள்.
     
    சூப்பரான ஆந்திரா ஸ்டைல் புளியோதரை ரெடி.

    https://www.maalaimalar.com

  7. பூரிக்க வைக்கும் பொரிச்ச கூட்டு!


     

     

    poricha-koottu
     

    எப்பப் பாரு சாம்பாரா? என்று அலுத்துக்கொள்ளும் வீடுகள் எப்போதும் உண்டு. அதற்காக வெறும் மோர் சாதம் சாப்பிட்டுவிடமுடியுமா? சாம்பார், வத்தக்குழம்பு என்று போரடிக்கிறது கணவன்மார்களும் குழந்தைகளும் மட்டுமல்ல, பெண்களே கூட சொல்லி அலுத்து சலித்துக்கொள்வார்கள்.

    சட்டென்று ஒரு மாறுதல் தேவை என்று எல்லோருமே ஆசைப்படுகிறோம். உணவு விஷயத்தில் அப்படியொரு சாம்பாருக்கு இணையாக பொரிச்ச கூட்டைத்தான் சொல்வார்கள். இது இன்றைக்கு நேற்றைக்கு அல்ல... அந்தக் காலத்தில் இருந்தே இருக்கிறது.

     

    பொரிச்ச கூட்டை சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால், சொக்கிப் போய்விடுவீர்கள்.

    சரி... பொரிச்ச கூட்டு இப்படித்தான் செய்யணும்.

     கத்தரிக்காய் - 1

    பயத்தம் பருப்பு - 1/4 கப் 

    உப்பு - தேவையான அளவு

     தேங்காய்த் துருவல் - 1/2 மூடி 

    மிளகு - 1/2 டீஸ்பூன் 

    உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன் 

    காய்ந்த மிளகாய் - 2  

    ஜீரகம் - 1/2 டீஸ்பூன் 

    எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 

    தாளிக்க கடுகு - 1/2 டீஸ்பூன் 

    உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் 

    கறிவேப்பிலை - கொஞ்சம் 

    நெய் - 1 டேபிள் ஸ்பூன் 

    காய்ந்த மிளகாய் - 1

    • முதலில், பயத்தம்பருப்பை நன்றாக மலரும் வகையில் வேக வைக்கவும்.
    • நறுக்கிய பெங்களூர் கத்திரிக்காயை சேர்த்து வேக வைக்கவும்.
    • உளுத்தம் பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், மிளகு வறுத்து தேங்காயுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
    • அரைத்ததை வெந்த காயுடன் சேர்த்து சிறிது கொதிக்க விடுங்கள்.
    • சேர்ந்து வந்ததும் இறக்கி, தாளித்துக் கொட்டுங்கள்.
    • அவ்வளவுதான்... பொரிச்ச கூட்டு ரெடி.
    • இதில் அவரைக்காய், புடலங்காய்,  என போட்டும் பண்ணலாம். அத்தனையும் அற்புதம். அபாரம்.

    https://www.kamadenu.in/

  8. செட்டிநாடு நண்டு வறுவல்

     

    sl5269900730.jpg

    என்னென்ன தேவை?

    சுத்தம் செய்த நண்டு - 8.
    இடித்த சின்ன வெங்காயம் - 1.
    பொடியாக நறுக்கிய தக்காளி - 1.
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்.
    கறிவேப்பிலை - 1 கொத்து.
    மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்.
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.
    அரைக்க:
    தேங்காய்த்துருவல் - 1/4 கப்.
    பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்.
    கசகசா - 1 டீஸ்பூன்.
    கரம்மசாலா - 1/2 டீஸ்பூன்.
    காய்ந்த மிளகாய் - 7.

     

    எப்படிச் செய்வது?

    காய்ந்த மிளகாயை சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்து மைய அரைக்கவும். தேங்காய்த்துருவல், கசகசா. பெருஞ்சீரகம், கரம் மசாலாவை அரைத்து  விழுதாக்கவும். கடாயில் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை தாளித்து, நசுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, காய்ந்த மிளகாய் விழுது...  என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள்தூள், உப்பு, நண்டு சேர்த்து வதக்கி, தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும்.  நண்டு வெந்ததும் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி மேலும் 5 நிமிடங்கள் வரை வதக்கி இறக்கவும்.

    http://www.dinakaran.com

  9. அருமையான இறால் முருங்கைக்காய் கிரேவி

     
    அ-அ+

    தோசை, இட்லி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த இறால் முருங்கைக்காய் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

     
     
    அருமையான இறால் முருங்கைக்காய் கிரேவி
     
    தேவையான பொருட்கள் :

    முருங்கைக்காய் - 1
    இறால் - கால் கிலோ
    வெங்காயம் - 2
    தக்காளி - 2
    பொடித்த மிளகு சீரகம் - 2 ஸ்பூன்
    மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
    கரம் மசால் பொடி - அரை ஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்
    எண்ணெய் - 2 ஸ்பூன்
    அரைத்த தேங்காய் விழுது - 2 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு,
    கடுகு - அரை ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    201807301506087484_1_drumstick-prawn-thokku-1._L_styvpf.jpg

    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இறாலை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் கொஞ்சம் வதங்கியவுடன் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பொடித்த மிளகு சீரகம் சேர்த்து வதக்கவும்.

    பின் அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்கு வதங்கியவுடன் முருங்கைக்காய் இறால் சேர்த்து கிளறி விடவும்.

    5 நிமிடம் கழித்து கரம் மசாலா சேர்த்து, தேவைாயன அளவு தண்ணீர், அரைத்த தேங்காய் விழுது சேர்த்து கடாயை மூடிவைத்து 15 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து வேக விடவும்.

    எண்ணெய் ஓரங்களில் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சுவையான இறால் முருங்கைக்காய் கிரேவி ரெடி.

    https://www.maalaimalar.com

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.