Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
 • Content Count

  85,545
 • Joined

 • Days Won

  480

Everything posted by நவீனன்

 1. அருமையான வறுத்த மீன் குருமா அ-அ+ சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், இடியாப்பம், இட்லிக்கு தொட்டுக்கொள்ள இந்த வறுத்த மீன் குருமா அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மீன் துண்டுகள் - அரை கிலோ (முள் இல்லாத மீன்) பச்சை மிளகாய் - 3 வெங்காயம் - 1 தக்காளி - 2 கொத்தமல்லி, புதினா,
 2. 131. பூர்ணாஹுதி அற்புதங்கள் அதனதன் இயல்பில், தோற்றத்தில், விதிப்பில், வார்ப்பில் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. ஒரு சூரியன் உதிப்பதைக் காட்டிலும், ஒரு பெருமழையைக் காட்டிலும் அற்புதமென்று இன்னொன்று இருந்துவிட இயலாது. ஆனால் மனித மனத்தின் விசித்திர மூலைகளை இந்த அற்புதங்களின் பக்கம் நாம் திருப்பி வைப்பதேயில்லை. ஒரு விடியலை நின்று அனுபவிப்பவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? நான் ஒரு சமயம் இரவெல்லாம் ஒரு பூச்செடியின் அருகே நாற்காலி போட்டு அமர்ந்து, ஒரு மொட்டு மலரும் கணத்துக்காகக் காத்திருந்தேன். அது மலரத்தான் செய்தது. ஆனால் மலர்
 3. 130. நாயர் கங்காதரன் கிளம்பிப் போனபின் நாங்கள் நெடுநேரம் கடற்கரை மணலில் படுத்துக் கிடந்தோம். பகல் முழுதும் நல்ல வெயில் அடித்திருக்க வேண்டும். கடல் காற்றின் குளுமையை ஊடுருவி மணல் பரப்பின் வெதுவெதுப்பை உணர முடிந்தது. எனக்கு தர்கா வரை போய் வரலாம் என்று தோன்றியது. கோவளத்தில் கால் வைத்தது முதல் எனக்கு அந்தப் பக்கிரியின் நினைவுதான் திரும்பத் திரும்ப வந்துகொண்டிருந்தது. நான் ஓடிப்போவேன் என்று சொன்ன மனிதர். திருவானைக்கா சித்தனுடன் அவருக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. அண்ணாவுடன் தொடர்பு இருந்திருக்கிறது. எல்லோரும் ஏதோ ஒரு கண்ணில் ஒருங்கிணைந்திர
 4. ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்துள்ள காண்டா மிருக குட்டி. தனி அழகு..!: மரக்கிளையில் அமர்ந்து பழத்தை ருசிக்கும் அனிலின் அழகு தனி அழகு தான். இடம்: கோவை,சிஙகாநல்லூர். விந்தை செய்கிறதோ..!: சூரியன் தன் கதிர்களை விரிப்பதை தடுக்க
 5. “வடக்கின் கில்லாடி யார்” இறுதிச்சுற்று மோதல்கள் வெள்ளிக்கிழமை ஆரம்பம் “வடக்கின் கில்லாடி யார்?” உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் நாளை (27) முதல் அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் மின்னொளியில் இடம்பெறவிருக்கின்றது. தொடரின் இறுதிச் சுற்று ஆட்டங்களை முன்னிட்டு ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றைய தினம் அரியாலை உதைப்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றது. ஊடகவியலாளர் சந்திப்பில் சரஸ்வதி சனசமூக நிலைய தலைவர் ஹெரிசாந்த், செயலாளர் கவிந்தன், யாழ்ப்பாண உதைப்பந்தாட்ட லீக்கினுடைய தலைவர் ஆர்னோல்ட், செயலாளர் அஜித்குமார், இலங்கை உதைப்பந்தாட்ட ச
 6. ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டால் ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டால் அவர்கள் தங்களின் ஆயுளில் ஒன்பதரை ஆண்டுகளை இழக்கிறார்கள் என்று அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. தற்போது எம்மில் பலரும் வாழ்க்கை நடைமுறைமாற்றத்தை விரும்பியோ அல்லது விரும்பாமலோ ஏற்றுக்கொண்டிருக்கிறோம். நேரத்திற்கு சாப்பிடாதது, சத்துள்ளவற்றை போதிய அளவிற்கு சாப்பிடாதது. உடற்பயிற்சியோ அல்லது நடைபயிற்சியையோ நாளாந்தம் மேற்கொள்வது கிடையாது. அத்துடன் அதிக கலோரிகளைக் கொண்ட உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம். அளவிற்குமேல் சாப்பிடுகிறோம். இதனால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகி, இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில்
 7. இன்றைய நாணய மாற்று விகிதம் - 26.09.2018 குறிப்பீட்டு நாணய மாற்று வீதங்கள் - 2018-09-26 மு.ப 04:55:34 PMஇல் உள்ளவாறு Currency TC's Drafts Telegraphic Transfers Import Bills Exchange Rates Buying Rate Selling Rate Buying Rate Selling Rate Buying Rate Selling Rate Selling Rate US D
 8. 129. மருந்து நள்ளிரவு வரை நாங்கள் செல்லியம்மன் கோயில் வாசலிலேயேதான் கிடந்தோம். எழுந்து வீட்டுக்குப் போகவே தோன்றவில்லை. கோயில் வாசலில் கால் நீட்டி உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருக்கும் மூன்று பரதேசிகள் யார் என்று விசாரிக்க அந்தப் பக்கம் யாரும் வரவும் இல்லை. பூசாரி கோயில் கதவைப் பூட்டிவிட்டுக் கிளம்பும்போது எங்களைப் பார்த்துவிட்டு சிறிது தயங்கினார். என்ன நினைத்தாரோ, அருகே வந்து ஒரு கும்பிடு போட்டுவிட்டுப் போய்விட்டார். வினய் நெடு நேரம் அண்ணாவைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தான். அவன் தன்னை உடன் அழைத்துச் சென்றிருக்கலாம் என்று நினைக்கிறானோ
 9. றேஞ்சர்ஸை வீழ்த்தி “வடக்கின் கில்லாடி யார்?” காலிறுதிக்குள் நுழைந்தது உதயதாரகை அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும் “ வடக்கின் கில்லாடி யார்?” உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இரண்டாவது சுற்றின் இறுதிப் போட்டி இன்றைய தினம் அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. கொற்றாவத்தை றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டுக் கழகம் FA கிண்ண சுற்றுத் தொடரில் இறுதி 32 அணிகளுள் முன்னேறியிருக்கும் றேஞ்சர்ஸ் அணியினை எதிர்த்து கிளிநொச்சியின் முன்னணி அணியான உதயதாரகை அணி மோதியது.
 10. இன்றைய நாணய மாற்று விகிதம் - 25.09.2018 இலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 170.3966 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (25.09.
 11. கிழக்கு லண்டனில் கணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டு – பாக்கியம் ராமதன் விளக்கமறியலில்.. கணவனைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் கிழக்கு லண்டன் நியூஹாமைச் சேர்ந்த 73 வயதான பாக்கியம் ராமதன் என்பவர் மீது லண்டன் தேம்ஸ் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிழக்கு லண்டன் நியூஹாம் பேர்கர் வீதியில் (Burges Road ) உள்ள வீடொன்றில் 75 வயதான கனகசபை ராமதன் என்பவர் தலையில் கடும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். . கடந்த வெள்ளிக்கிழமை (21.09.18) பிற்பகல் 14: 20 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகி
 12. 128. விட்டகுறை பேருந்து கேளம்பாக்கத்தை நெருங்கியபோது இரவு மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது. இதற்குமேல் இன்னொரு வண்டிக்காகக் காத்திருக்க வேண்டாம் என்று வினோத் சொன்னான். திருவிடந்தைவரை நடந்தே போய்விடலாம் என்று முடிவு செய்து, நாங்கள் மன்னார் ஓட்டல் வழியாக இரட்டைக் குளத்தைத் தாண்டிக் கோவளம் சாலையில் நடக்க ஆரம்பித்தோம். குளமெல்லாம் ஒரு காலத்தில் இருந்ததுதான். இப்போது அந்த இடமெல்லாம் கட்டடங்களாகிவிட்டன. உப்பளங்கள் வெகுவாகக் குறைந்து நிறைய அடுக்குமாடி வீடுகள் வரத் தொடங்கியிருந்தன. அழகான சாலையும் சாலை விளக்குகளும் சாலையோர நடைபாத
 13. இனி, மின்மினி - ராஜேஷ்குமார் 16-12-09 இனி, மின்மினி ராஜேஷ்குமார், ஓவியங்கள்: அரஸ், ஸ்யாம் கோவை
 14. இன்றைய நாணய மாற்று விகிதம் குறிப்பீட்டு நாணய மாற்று வீதங்கள் - 2018-09-24மு.ப 11:28:44 PMஇல் உள்ளவாறு Currency TC's Drafts Telegraphic Transfers Import Bills Exchange Rates Buying Rate Selling Rate Buying Rate Selling Rate Buying Rate Selling Rate Selling Rate US Dollar 166.
 15. குடும்பநலம் மற்றும் தொற்றுநோய்களுக்கான தீர்வு!!
 16. சூப்பரான ஆட்டு மூளை பொரியல் அ-அ+ ஆட்டு மூளையில் கொழுப்பு மிகவும் குறைவு. அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் பண்ணுவதால் உடலுக்கு மிகவும் நல்லது. தேவையான பொருள்கள்: ஆட்டு மூளை - 2 மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன் ப.மிளகாய் - 1 கொத்தமல்லி - சிறிதளவு வெங்காயம் - 1
 17. “வடக்கின் கில்லாடி யார்?” தொடரின் காலிறுதியில் பாடும்மீன், கலைமதி, இருதயராசா அணிகள் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூறாவது ஆண்டை முன்னிட்டு நடாத்தப்படும் “வடக்கின் கில்லாடி யார்?” உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இடண்டாவது சுற்றின் மூன்று ஆட்டங்கள் நேற்றைய தினம் (23) அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் இடம்பெற்றிருந்தன. வேலணை துறையூர் ஐயனார் விளையாட்டுக் கழகம் எதிர் நவிண்டில் கலைமதி விளையாட்டுக் கழகம் பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஆரம்பமாகிய யாழ் மாவட்டத்தின் இரு முன்னணி அணிகளுக்கிடையிலான மோதலாக அமைந்திருந்த இப்போட்டியில், கலைம
 18. 127. கடத்தல் அந்தப் பெண் அவன் எதிரே அமர்ந்திருந்தாள். அவளது தோழி அவனுக்குப் பக்கத்தில் இருந்தாள். வினய் தன்னெதிரே அமர்ந்திருந்தவளின் கண்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். நான்கு விநாடிகளுக்கு ஒருமுறை அவள் இமைப்பது அவனுக்கு இடைஞ்சலாக இருந்தது. ‘சிறிது நேரம் இமைக்காதிருக்க முயற்சி செய்’ என்று சொல்லவும் செய்தான். ஆனால் அது அவளால் முடியவில்லை. சிரமப்பட்டாள். அவளது தோழி, ‘நான் முயற்சி செய்கிறேன் சுவாமிஜி’ என்று சொன்னாள். எனவே, இமைக்கும் பெண்ணைத் தன்னருகே அமர்த்திக்கொண்டு, இரண்டாமவளை எதிரே வந்து அமரச் சொன்னான். அவளால் ஏழெட்டு விநாடிகள்
 19. “யாழ்ப்பாணத்தான்ரை பொருளாதாரத்தை எதிரியோட சேர்ந்து நாங்களும் எல்லோ அழிக்கிறம்” சனி முழுக்கு – 9 – “பொஸிற்றிவ்” பொன்னம்பலம் உதுக்குத்தான் நல்லவன் பெரியவனோடை பழக வேணும் எண்டு சொல்லுறது. அவங்களோடை போய் பழகினால்தான் நல்லது கெட்டது என்ன எண்டு தெரியும். அவங்களிட்டைப் போய் இன்னது இன்னது எனக்குத் தெரியாது. வகுப்பெடுங்கோ எண்டு சொல்லேலாது. மாறிச் சாறிக் கதைக்கேக்கை கதையோடை கதையாத்தான் உதுகள் வெளியிலை வரும். சும்மா யாழ்ப்பாணத்தின்ரை பொருளாதாரம் எண்ட கதையைத் துவக்கிவிட்டான் அங்கை நிண்ட ஒருத்தன். உடனை அந்தாள் சொல்லிச்சுது “யாழ்ப்பாணத்தா
 20. வேற்றுமையில் ஒற்றுமை என்.கே. அஷோக்பரன் / தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 162) பிரிந்து நின்றவர்கள் நோக்கம் ஒன்று; ஆனால், அதை அடைவதற்காகப் பல பாதைகளில் புறப்பட்ட பல அமைப்புகள் ஒன்றோடொன்றும், தமக்குள்ளும் முரண்பட்டு, எதிரும் புதிருமாகத் திசைமாறிப் பயணிக்க ஆரம்பித்தன. ஈழத் தமிழ் மக்களுக்காகத் தனிநாடொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக, ஆயுதப்போராட்டமே ஒரேவழி எனத் தீர்மானித்த தமிழ் இளைஞர், ஆயுதம் தரித்த அமைப்புகளாக இயங்கினார்கள். இவை ஒவ்வொன்றினதும் உருவாக்கம், செயற்பாடுகள், பின்புலம் என்பன, தனித்து
 21. உலக மசாலா: கொடூரமான சிந்தனை ஆஸ்திரேலியாவின் 6 மாநிலங்களிலிருந்து ஸ்ட்ராபெர்ரி விளைவிக்கப்பட்டு, நாடு முழுவதும் அனுப்பப்படுகின்றன. சமீபத்தில் கடைகளில் வாங்கிய ஸ்ட்ராபெர்ரிகளில் உலோக ஊசி இருப்பதாக ஏராளமானவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். உடனே பழங்களை ஆய்வு செய்திருக்கிறார்கள். பெரும்பாலான பழங்களில் ஊசிகள் வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. முதலில் இந்தப் பிரச்சினை க்வின்ஸ்லாந்தில்தான் ஆரம்பித்திருக்கிறது. விரைவில் நாடு முழுவதும் பரவிவிட்டது. இப்படி ’விவசாயத்தில் தீவிரவாதம்’ யார் செய்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் ஸ்ட்ராபெர்ரிக
 22. அப்படீன்னா லலிதா சொன்னது..?.. பைவ் ஸ்டார் துரோகம் -ராஜேஷ்குமார் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தன் பேச்சைத் தொடர்ந்தார். “குழந்தையோடு போய்க்கொண்டிருந்த அந்தப்பெண்ணை நோக்கி வேகமாய் நான் நடக்க பள்ளியின் பிரின்ஸிபால் தெய்வநாயகி குரல் கொடுத்தாங்க“ “ஒரு நிமிஷம் மிஸ்டர் வேல்முருகன்“ தெய்வநாயகியின் குரலில் இருந்த பதட்டம் என்னை அப்படியே ஆணியடித்த மாதிரி ஸ்தம்பிக்க வெச்சுது. திரும்பிப் பார்த்தேன். அவங்க பதட்டத்தோடு எனக்குப் பக்கமாய் வந்து நின்னாங்க. முகம் வேர்த்திருந்தது. நான் என் விஷயம்ன்னு கேட்டேன். அப்படி கேட்டதும் அவங்க தயக்கத்தோடு “குழந்தையோடு போற அந்தப்பெண்ணை விசாரிக்காதீங
 23. இன்றைய நாணய மாற்று விகிதம் குறிப்பீட்டு நாணய மாற்று வீதங்கள் - 2018-09-23மு.ப 09:34:40 PMஇல் உள்ளவாறு Currency TC's Drafts Telegraphic Transfers Import Bills Exchange Rates Buying Rate Selling Rate Buying Rate Selling Rate Buying Rate Selling Rate Selling Rate US Dollar 166.
 24. இதயநோய்களைத் தடுக்க சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்? சர்க்கரை நோயாளிகள், இதய நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி? இதயம்... உள்ளங்கை அளவுடையது என்றாலும் மனித உடலின் செயல்பாட்டுக்கு இதன் பங்கும் செயலும் அளவிடற்கரியது. நம் உடலில் மிகவும் உறுதியான தசையான இதயத் தசைதான் நம் பிறப்பு முதல் இறப்பு வரை ஓய்வில்லாமல் துடித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் துடிப்புதான், நாம் உயிருடன் இருப்பதற்கான சாட்சியும் ஆதாரமும் என்றால், அது மிகையாகாது. ஒவ்வொரு துடிப்பின்போதும் இதயமானது அதன் சுழற்சிக்காக பிராணவாயு மற்றும் சத்துகள் நிறைந்த ர
 25. செவலைகள் தொலைந்த இடம் - சிறுகதை ஏக்நாத் - ஓவியங்கள்: ரமணன் மூன்று நாள்களாக செவலைப் பசுவைக் காணவில்லை. தேடித் தேடிக் களைத்துப் போய்விட்டார், புனமாலை. `பய மாடு எங்கு போயிருக்கும்?’ பெருங்கவலை தேடி வந்து உட்கார்ந்துகொண்டது அவர் முகத்தில். சோறு தண்ணீர் சரியாக இறங்கவில்லை. எதையோ பறிகொடுத்தவர்போல அல்லாடுகிறார், அங்கும் இங்கும். மனம் ஒரு நிலையில் இல்லை. இப்போதுகூட பாப்பான்குளத்தில் தேடிவிட்டு வந்துகொண்டிருக்கிறார். களைப்போடு கவலையும் சேர்ந்துகொள்ள அவருக்கு அசதியாக இருக்கிறது. செவலையை உடனடியாகப் பார்க்க வேண்டும் என்று துடிதுடிக்கிறது
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.