-
Posts
85545 -
Joined
-
Last visited
-
Days Won
480
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Posts posted by நவீனன்
-
-
சூப்பரான ஆட்டு மூளை பொரியல்
அ-அ+ஆட்டு மூளையில் கொழுப்பு மிகவும் குறைவு. அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் பண்ணுவதால் உடலுக்கு மிகவும் நல்லது.
தேவையான பொருள்கள்:
ஆட்டு மூளை - 2மிளகாய்தூள் - 1 1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
ப.மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
வெங்காயம் - 1
வெங்காயம் - 1/2 கப்
சோம்பு - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - 3 ஸ்பூன்உப்பு - தேவையான அளவு
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் ஊற்றி மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும்.
அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும்.
மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.
வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயம்.ப.மிளகாயை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் வேக வைத்த மூளையை இந்த மசாலாவுடன் சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவேண்டும்.
மசாலா அனைத்து ஒன்றாக சேர்ந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி பறிமாறலாம்.
சூப்பரான ஆட்டு மூளை பொரியல் ரெடி.https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/09/22131331/1193043/Mutton-Brain-Fry.vpf
சத்து நிறைந்த முருங்கைக் கீரை துவையல்
அ-அ+கீரை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கீரையில் சட்னி, துவையல் செய்து கொடுக்கலாம். இன்று முருங்கைக் கீரை துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முருங்கைக்கீரை - 1 கைப்பிடி,காய்ந்த மிளகாய் - 4,
புளி - கொட்டைப்பாக்களவு,
உளுந்தம் பருப்பு - 2 ஸ்பூன்,
கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
கடுகு - தாளிக்க,
எண்ணெய் - சிறிது,உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்
கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்தம் பருப்பு, கடலைபருப்பு, புளி, காய்ந்த மிளகாய் - 3 சேர்த்து நன்றாக வதங்கிய பின்னர் கீரையை சேர்த்து வதக்கவும். கீரை சற்று வதங்கியதும் ஆறவைக்கவும்.
நன்றாக ஆறியதும் உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம், 1 காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து துவையலில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
சூப்பரான முருங்கைக் கீரை துவையல் ரெடி. -
இதயம் காக்கும் இதமான உணவுகள் - 30 வகை
செம்பருத்திப்பூ பானம்
தேவை: சுத்தம் செய்த ஒற்றை நாட்டுச் செம்பருத்திப்பூ இதழ்கள் - 15 பாதாம் பிசின் - ஒரு டீஸ்பூன் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். முதல் நாளே ஊறவைக்கவும்) நாட்டுச் சர்க்கரை (அ) பனங்கற்கண்டு - 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சைப் பழம் - ஒன்று (சாறு பிழியவும்) தண்ணீர் - 500 மில்லி.செய்முறை: செம்பருத்திப்பூ இதழ்களுடன் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கருஞ்சிவப்பு நிறம் வந்ததும் இறக்கவும். அதனுடன் நாட்டுச் சர்க்கரை (அ) பனங்கற்கண்டு, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து மூடி வைக்கவும். ஆறியதும் வடிகட்டவும். அதனுடன் பாதாம் பிசின் சேர்த்துக் கலந்து பருகவும்.
பயன்: ரத்தக் கொதிப்பு, மன அழுத்தம், பதற்றம், அதிக கோபம் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் தருகிறது. கோபத்தைத் தூண்டும் ஹார்மோனைச் சமன் செய்கிறது. இதயத்துடிப்பைச் சீராக்குகிறது. இதில் இரும்புச்சத்து மிகுந்து காணப்படுவதால் இதயத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகிறது.வாயு முறுக்கி பால்
தேவை: பூண்டு - 3 பல் சிறிது தண்ணீர்விட்டுக் காய்ச்சிய பால் - 200 மில்லி பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன் மருதம்பட்டைப் பொடி - கால் டீஸ்பூன்.
செய்முறை: பாலை நன்றாகக் காய்ச்சவும். அதனுடன் பூண்டு, பனங்கற்கண்டு, மருதம்பட்டைப் பொடி சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி இளஞ்சூடாகப் பருகலாம். இதை இரவு படுக்கைக்குச் செல்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு பருகலாம்.
பயன்: இது ஒரு சிறந்த வாயு முறுக்கியாகச் செயல்படும். அதாவது உடலில் உள்ள வாயுக்களை நீக்கும். கபத்தைக் குறைக்கும். பித்தத்தைச் சமன் செய்யும். வாயு பிரச்னையால் வரும் நெஞ்சுவலிக்கு இது ஒரு சிறந்த நிவாரணியாகும்.கொள்ளு சூப்
தேவை: கொள்ளு - 50 கிராம் பூண்டு - 8 பல் தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் சின்ன வெங்காயம் - 5 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா கலவை - ஒரு கைப்பிடி அளவு மிளகு - சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் எலுமிச்சைப்பழம் - பாதியளவு (சாறு பிழியவும்) தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) இந்துப்பு - 2 சிட்டிகை அரிசி கழுவிய நீர் - 3 கப்.
செய்முறை: கொள்ளுப்பயறை 8 மணி நேரம் ஊறவைக்கவும். மறுநாள் குக்கரில் ஊறவைத்த கொள்ளு, பூண்டு, இஞ்சித் துருவல், மஞ்சள்தூள், இந்துப்பு, தோலுரித்த சின்ன வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, மிளகு - சீரகத்தூள், அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து 3 முதல் 5 விசில் வரை விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து மத்தால் நன்கு கடையவும். அதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து சூடாகப் பருகவும்.
பயன்: இந்தச் சூப்பை வாரத்தில் மூன்று நாள்கள் பருகிவர தேவையற்ற கொழுப்பு நீங்கி, ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். கபத்தைக் குறைத்து நுரையீரல் சரிவர இயங்க உதவும். கெட்ட கொழுப்பைக் கரைப்பதன் மூலம் இதயத்துடிப்பு சீராக இயங்கும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்றும்.புரோக்கோலி சூப்
தேவை: நறுக்கிய புரோக்கோலி - ஒரு கப் பூண்டு - 10 பல் தோல் சீவி துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் அரிசி கழுவிய தண்ணீர் - 4 கப் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா கலவை - ஒரு கைப்பிடி அளவு இந்துப்பு, வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன் ஆரிகானோ - ஒரு டீஸ்பூன் அல்லது காய்ந்த துளசி இலை - சிறிதளவு எலுமிச்சைப் பழம் - பாதி அளவு (சாறு பிழியவும்) பட்டை - 2 சிறிய துண்டு சின்ன வெங்காயம் - 5 (தோலுரிக்கவும்) தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்).
செய்முறை: குக்கரில் புரோக்கோலியுடன் தக்காளி, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சித் துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, புதினா, இந்துப்பு, பட்டை, அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து மூடி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மூன்று விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து மத்தால் ஒரு சுற்று கடையவும். அதனுடன் வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள், ஆரிகானோ, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து வடிகட்டாமல் இளம் சூடாகப் பருகலாம்.
பயன்: காலை உணவுக்குப் பதிலாக அல்லது 11 மணியளவில் இதைப் பருகலாம். புரோக்கோலி உயர் ரத்த அழுத்தத்துக்கு மருந்தாகிறது; கொலஸ்ட்ரால் அதிகரிப்பைத் தடுக்கிறது. இதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இதயம் வலிமை பெற மிகவும் துணைபுரிகிறது. இதில் அதிக கால்சியம், நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.ஹார்ட் ஸ்பெஷல் கிரீன் டீ
தேவை: கிரீன் டீ இலைகள் - ஒரு டீஸ்பூன் ஏலக்காய் - ஒன்று நெல்லிமுள்ளி - 10 கிராம் வெட்டி வேர் - 5 கிராம் தண்ணீர் - 200 மில்லி.
செய்முறை: பாத்திரத்தில் தண்ணீருடன் ஏலக்காய், வெட்டி வேர், நெல்லிமுள்ளி சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்கவிடவும். அதனுடன் கிரீன் டீ இலைகள் சேர்த்து மூடி வைக்கவும். 5 நிமிடங்கள் கழித்து வடிகட்டிப் பருகலாம் (நெல்லிமுள்ளி சேர்க்காவிட்டால் வடிகட்டிய பிறகு பாதியளவு எலுமிச்சைப் பழத்தைச் சாறு பிழிந்து சேர்த்துக் கலக்கவும்). விரும்பினால் சிறிதளவு தேன் சேர்த்துப் பருகலாம். இதை உணவுக்குப்பின் 60 மில்லி வரை வாரம் மூன்று நாள்கள் பருகலாம்.
பயன்: இந்த டீ இதயப் படபடப்பை சரி செய்யும். நாம் உண்ட உணவில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கக் கூடியது. தேவையற்ற எடை அதிகரிப்பைத் தடுக்கும். வெட்டி வேரின் நறுமணம் மன அமைதிக்கு உதவும். ஏலக்காய், சிறுமூளை பாதிப்பைத் தடுக்கும்.இதயம் காக்கும் பொடி
தேவை: தாமரைப்பூப் பொடி, ஒற்றை நாட்டுச் செம்பருத்திப்பூப் பொடி, மருதம்பட்டைப் பொடி, அமுக்கிராகிழங்குப் பொடி, சுத்தமான விரளி மஞ்சள் பொடி - தலா 10 கிராம் தேன் - அரை டீஸ்பூன்.
செய்முறை: தாமரை, செம்பருத்தி, மருதம் பட்டை, அமுக்கிராக்கிழங்கு, மஞ்சள் பொடி வகைகளை ஒன்றாகக் கலக்கவும். இந்தப் பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து, அரை டீஸ்பூன் தேன் சேர்த்துக் குழைத்துத் தினமும் இரவு படுப்பதற்கு முன் உண்ணலாம். 200 மில்லி தண்ணீருடன் ஒரு டீஸ்பூன் இந்தப் பொடியைச் சேர்த்துக் காய்ச்சி 100 மில்லி ஆகும் வரை கொதிக்கவிட்டு இறக்கி, வடிகட்டி தேன் சேர்த்துக் காலையில் குடிக்கலாம்.
பயன்: மேலே கூறிய அனைத்துப் பொடிகளிலும் இதயம் காக்கும் சத்துகள் அடங்கியுள்ளன. இதயம் திறம்படச் செயல்பட இந்தப் பொடி உதவும்.பசலைக்கீரை ஆளிவிதை பானம்
தேவை: நறுக்கிய பசலைக்கீரை - 2 கைப்பிடி அளவு வறுத்துப் பொடித்த ஆளிவிதைப் பொடி - அரை டீஸ்பூன் எலுமிச்சைப் பழம் - பாதியளவு (சாறு பிழியவும்) புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு வெள்ளை மிளகுத்தூள் - கால் டீஸ்பூன் இந்துப்பு - ஒரு சிட்டிகை தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை: பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீரைக் கொதிக்க வைக்கவும். அதனுடன் பசலைக்கீரை, புதினா இலைகள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். ஆறியதும் அப்படியே மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். அதனுடன் ஆளிவிதைப் பொடி, இந்துப்பு. எலுமிச்சைச் சாறு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை 100 மில்லி அளவு பருகலாம்.
பயன்: இதய நோயாளிகளுக்கான சிறந்த காலை உணவு இந்தப் பானம். இதில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. இது எடை அதிகரிப்பைத் தடுக்கும். மேலும், இரும்புச்சத்து, போலிக் அமிலம் இதில் அதிகமுள்ளதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கும். நல்ல கொழுப்பை அதிகரிக்கும்; கெட்ட கொழுப்பைக் குறைக்கும்.இஞ்சி பூண்டு வடிநீர்
தேவை: தோல் சீவிய இஞ்சி, தோலுரித்த பூண்டு - தலா 100 கிராம் எலுமிச்சைப் பழம் - ஒன்று (சாறு பிழியவும்) தேன் - ஒரு டீஸ்பூன் தண்ணீர் - 3 டம்ளர்.
செய்முறை: இஞ்சியுடன் பூண்டு சேர்த்து இடிக்கவும். அதனுடன் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு ஒரு டம்ளராக வற்றியதும் இறக்கி வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்துக் கலக்கவும். தினமும் காலை இந்த வடிநீரை, இளம் சூடாக வெறும் வயிற்றில் 2 டேபிள்ஸ்பூன் பருகி வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.
பயன்: ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். செரிமான மண்டலத்தைச் சுத்தம் செய்யும். அஜீரணப் பிரச்னையால் வரும் வாயுத் தொல்லை மற்றும் வாயு பிடிப்பால் வரும் இதயவலிக்கான சிறந்த நிவாரணியாக விளங்கும். இதயத்துக்கு ரத்த ஓட்டம் தடைபடாமல் நடைபெற உறுதுணை புரியும்.நெல்லிக்காய் கறிவேப்பிலை சாரம்
தேவை: பெரிய நெல்லிக்காய் - 2 கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு வறுத்துப் பொடித்த ஆளிவிதைப் பொடி - கால் டீஸ்பூன் தேன் (விரும்பினால்) – ஒரு டீஸ்பூன் தண்ணீர் - 200 மில்லி.
செய்முறை: நெல்லிக்காயுடன் கறிவேப்பிலை, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். அதனுடன் ஆளிவிதைப் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். இதைக் காலை, மாலை என இருவேளையும் 100 மில்லி பருகலாம். விரும்பினால் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துப் பருகலாம்.
பயன்: இது ஒரு காயகல்பமாகும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்; ரத்தக் கொதிப்பைச் சீராக்கும். புற்றுநோயைத் தடுக்கும். ரத்த சோகையை விரட்டும். கெட்ட கொழுப்பைக் குறைக்கும். மாரடைப்பு வராமல் தடுக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் சி-யும், கறிவேப்பிலையில் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது.ஹெல்த்தி மோர்
தேவை: நன்கு நீர்விட்டுக் கடைந்த மோர் - 200 மில்லி தோலுடன் சேர்த்து அரைத்த வெள்ளரிக்காய்ச்சாறு - 50 மில்லி சீரகத்தூள், ஆளிவிதைப் பொடி - தலா கால் டீஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, புதினா கலவை - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: நீர் மோருடன் வெள்ளரிக்காய்ச்சாறு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் கொத்தமல்லித்தழை, புதினா, கறிவேப்பிலை, சீரகத்தூள், ஆளிவிதைப் பொடி சேர்த்துக் கலக்கவும். விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் உப்பு சேர்க்கலாம். 100 மில்லி முதல் 200 மில்லி வரை காலை 11 மணி அளவிலும் அல்லது மாலை 4 மணி அளவிலும் பருகலாம்.
பயன்: இதில் நுண்ணுட்டச்சத்துகள் அதிகம். மாரடைப்பு வராமல் தடுக்கும். உச்சிமுதல் பாதம் வரை உள்ள அனைத்து செல்களுக்கும் புத்துயிர் கொடுக்கும். இதில் உள்ள தாது உப்புகள் மற்றும் புரோட்டீன், அமினோ அமிலங்கள், நோய் எதிர்ப்புக் காரணியாக விளங்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். மெனோபாஸ் நேரத்தில் வரும் பிரச்னைகளுக்கும் தீர்வாகும். கெட்ட கொழுப்பைக் கரைக்கும்; நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.அகத்திக்கீரை நீர்ச்சாறு
தேவை: அகத்திக்கீரை - ஒரு கப் சின்ன வெங்காயம் - 12 (தோலுரிக்கவும்) மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்) சீரகம், மிளகுத்தூள் - தலா கால் டீஸ்பூன் பச்சை மிளகாய் - ஒன்று (இரண்டாகக் கீறவும்) பூண்டு - 5 பல் இந்துப்பு - கால் டீஸ்பூன் அரிசி கழுவிய தண்ணீர் - 4 கப்.
தாளிக்க: ஆலிவ் எண்ணெய் - ஒரு டீஸ்பூன் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன்.
செய்முறை: குக்கரில் அகத்திக்கீரையுடன் சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள்தூள், பச்சை மிளகாய், இந்துப்பு, பூண்டு, மிளகுத்தூள், சீரகம், அரிசி கழுவிய தண்ணீர் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, நான்கு விசில்விட்டு இறக்கவும். குக்கரில் ஆவி அடங்கியதும் திறந்து மத்தால் கடையவும். வாணலியில் ஆலிவ் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்துக் கீரையுடன் கலக்கவும். இதனை அப்படியே ஒரு கப் சாப்பிடலாம். அல்லது சாதம், சப்பாத்தி, இட்லி போன்ற வற்றுக்குத் தொட்டுக்கொள்ளலாம்.
பயன்: அகத்திக்கீரை பித்த சூட்டைக் குறைக்கும். தோல் நோய்களுக்கும் மருந்தாகும். இதில் நிறைய நார்ச்சத்து உள்ளதால், வயிற்றுப்புண்ணை ஆற்றும். ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும். வாயுத்தொல்லை நீங்கும்; நெஞ்சடைப்பு அகலும்; மலச்சிக்கல் சீராகும்.முருங்கைக்கீரை மசியல்
தேவை: முருங்கைக்கீரை (பூக்களுடன்) - ஒரு கப் துவரம்பருப்பு, பாசிப்பருப்பு - தலா கால் கப் சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்) தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்) பூண்டு - 5 பல் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை சாம்பார் பொடி - 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (இரண்டாகக் கீறவும்) இந்துப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு.
தாளிக்க: ஆலிவ் எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், சீரகம், கடலைப்பருப்பு - தலா கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2.
செய்முறை: துவரம்பருப்புடன் பாசிப்பருப்பைச் சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். குக்கரில் ஆலிவ் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், தக்காளி, முருங்கைக்கீரை, முருங்கைப்பூ, பருப்பு வகைகள், தேவையான அளவு தண்ணீர், சாம்பார் பொடி, பெருங்காயத்தூள், இந்துப்பு சேர்த்துக் கலந்து மூடி, 2 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் கரண்டியால் நன்கு மசிக்கவும். சூடான, சுவையான, சத்தான, ஆரோக்கியமான முருங்கைக்கீரை மசியல் தயார்.
பயன்: இரும்புச்சத்து, கால்சியம், புரோட்டீன் போன்ற முக்கிய ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவாகும். ரத்தத்தில் உள்ள கொழுப்பு படிமானங்களைக் கரைக்கும். இதயத்துக்குப் பாதுகாப்பாக அமையும். ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்; நரம்பு சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கும்.ஸ்ட்ரெஸ் கிளியரன்ஸ் டிரிங்க்
தேவை: தூய்மையான விரளி மஞ்சள்தூள் - 4 கிராம் தூய்மையான சந்தனம் - 4 கிராம் தண்ணீர்விட்டான்கிழங்குப் பொடி - 4 கிராம் அதிமதுரப் பொடி - 4 கிராம் அமுக்கிராக்கிழங்குப் பொடி - 5 கிராம் உலர் திராட்சை - 5 தண்ணீர் - 200 மில்லி.
செய்முறை: பாத்திரத்தில் தண்ணீரைச் சூடாக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், சந்தனம், தண்ணீர்விட்டான்கிழங்குப் பொடி, அதிமதுரப் பொடி, அமுக்கிராக் கிழங்குப் பொடி சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு 100 மில்லியாக வற்றியதும் இறக்கி வடிகட்டவும். அதனுடன் உலர் திராட்சை சேர்த்துக் கலக்கவும். இதை 30 முதல் 50 மில்லி அளவு உணவுக்குப் பிறகு அருந்தி வரலாம்.
பயன்: மன அழுத்தம், பதற்றம் போன்றவை ஏற்படாமல் இருக்கப் பெரிதும் துணைபுரியும். ஹார்ட் அட்டாக் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஸ்ட்ரெஸ் ஆகும். இதைச் சரிசெய்ய இந்த டிரிங்க் உதவும்.
குறிப்பு: தேவையான பொருள்களில் கொடுத்துள்ள அனைத்து பொருள்களும் 50 கிராம் அளவில் வாங்கி ஒன்றாகக் கலக்கவும். அதிலிருந்து ஒரு டீஸ்பூன் அளவு 200 மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்தும் பருகலாம்.ஹெர்பல் பொடி மிக்ஸ்
தேவை: மருதம்பட்டைப் பொடி, அமுக்கிராக்கிழங்குப் பொடி, கோரைக் கிழங்குப் பொடி, தண்ணீர்விட்டான்கிழங்குப் பொடி, சீதாப்பழ இலை பொடி, சுத்தமான மஞ்சள்தூள் - தலா 10 கிராம் தேன் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: மருதம்பட்டைப் பொடி, அமுக்கிராக்கிழங்குப் பொடி, கோரைக் கிழங்குப் பொடி, தண்ணீர்விட்டான்கிழங்குப் பொடி, சீதாப்பழ இலை பொடி, சுத்தமான மஞ்சள்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சேகரிக்கவும். அரை டீஸ்பூன் பொடியுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிடலாம்.
பயன்: இந்தப் பொடியைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர, இதயம் பலவீனம் அடைவதைத் தடுக்கும். சீதாப்பழ இலை பொடியில் பொட்டாசியம் மிகுந்து காணப்படுகிறது. இது உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை (உப்பு) உறிஞ்சி ரத்த அழுத்தத்தைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கும்போது இதயத்தின் செயல்பாடும் திறம்பட இருக்கும்.தாமரைப்பூ சர்பத்
தேவை: வெண்தாமரை (அ) செந்தாமரைப்பூ - ஒன்று (இதழ்கள் மட்டும்) பனங்கற்கண்டு - ஒரு டேபிள்ஸ்பூன் பாதாம் பிசின் - ஒரு டீஸ்பூன் (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். முதல் நாளே ஊறவைக்கவும்) தண்ணீர் - 200 மில்லி மருதம்பட்டைப் பொடி - 10 கிராம்.
செய்முறை: பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். அதனுடன் தாமரைப்பூ இதழ்கள், பனங்கற்கண்டு சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடிகட்டி ஆறவிடவும். அதனுடன் மருதம்பட்டைப் பொடி, பாதாம் பிசின் சேர்த்து வாரம் இருமுறை 100 மில்லி அளவு பருகி வரலாம்.
பயன்: இதயம் பலப்படும். இதயம் சம்பந்தமான நோய்கள் விலகும். கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். இது எந்தப் பக்கவிளைவுகளும் இல்லாத மருந்தாக அமைந்த உணவாகும். இதைத் தயாரிக்க வெண்தாமரைப்பூவே சிறந்தது.மருதம்பட்டை பானம்
தேவை: மருதம்பட்டை - 10 கிராம் தண்ணீர் - 200 மில்லி சுக்குத்தூள் - ஒரு டீஸ்பூன் தனியாத்தூள் (மல்லித்தூள்) - ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் - அரை டீஸ்பூன் காய்ந்த ரோஜா இதழ்கள் - ஒரு டீஸ்பூன் பனை வெல்லம் அல்லது தேன் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: பாத்திரத்தில் 200 மில்லி தண்ணீருடன் மருதம்பட்டை, சுக்குத்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், காய்ந்த ரோஜா இதழ்கள் சேர்த்துக் குறைந்த தீயில் கொதிக்கவைத்து 100 மில்லியாக வற்றியதும் வடிகட்டவும். இத்துடன் பனை வெல்லம் அல்லது தேன் சேர்த்து நன்கு கலந்து பருகவும். இதன் சுவை சற்றுச் துவர்ப்பாக இருந்தாலும் உடல் ஆரோக்கியத்தைப் பலப்படுத்தும் பானமாக அமையும்.
பயன்: ரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குவரும். ரத்தத்தில் உள்ள நச்சுகளை நீங்கும். மருதம்பட்டை மற்றும் ரோஜா சேர்ந்த கலவை மன அமைதிக்கும் ஆழ்ந்த உறக்கத்துக்கும் உதவும். இதயப் படபடப்பை நீக்கும். உடல் எடை மற்றும் வயிற்றுப்பகுதி சதையைக் குறையும். இதய இயக்கம் சீராகி, உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும்.சீரகப் பொடி பானம்
தேவை: சீரகப் பொடி - ஒரு டீஸ்பூன் துளசி இலைகள் - 5 பட்டை - 2 சிறிய துண்டு ஏலக்காய் - 2 பனங்கற்கண்டு - ஒரு டீஸ்பூன் தண்ணீர் - 200 மில்லி.
செய்முறை: பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி லேசாகச் சூடு செய்யவும். அதனுடன் சீரகப் பொடி, துளசி இலைகள், பட்டை, ஏலக்காய் சேர்த்து அடுப்பைச் சிறு தீயில் வைத்து 5 நிமிடங்கள் சூடு செய்து இறக்கி மூடிவைக்கவும். 2 மணி நேரம் கழித்து மீண்டும் லேசாக ஒரு நிமிடம் சூடு செய்து வடிகட்டவும். அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து மாலை அல்லது இரவு நேரத்தில் தூங்கச் செல்லும் முன் குடிக்கலாம்.
பயன்: நுரையீரல் சம்பந்தமான நோய்கள் விலகும். நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். நல்ல தூக்கம் மற்றும் நுரையீரல் திறம்பட செயல்படுதல் இவை இரண்டுமே இதயத்துக்கு முக்கியமான செயல்பாடுகளாகும். எனவே, இந்தச் சீரகப் பொடி பானம் இதயத்தை வலுவூட்டி, திறம்படச் செயல்பட வைக்கும். மேலும், ரத்தக் கொதிப்பும் சீராகும்.திராட்சை கோசம்பி
தேவை: விதையுள்ள பன்னீர் திராட்சை - ஒரு கப் சீரகத்தூள், வெள்ளை மிளகுத்தூள், ஓமம் - தலா கால் டீஸ்பூன் தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை: பன்னீர் திராட்சையுடன் சீரகத்தூள், வெள்ளை மிளகுத்தூள், ஓமம், தண்ணீர் சேர்த்து அரைத்தெடுத்து வடிகட்டாமல் பருகவும். இதில் சுவைக்காக உப்பு, சர்க்கரை சேர்க்கக் கூடாது. ஏனென்றால் இது மருந்தாகும் உணவாகும். இதனை அப்படியே உண்ணும்போது முழுப் பயனையும் நம் இதயம் பெறும்.
பயன்: இது வைட்டமின் பி, சி மற்றும் போலிக் ஆசிட், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற பல சத்துகளைப் பெற்றுள்ளது. இதயத்துக்கு வலுவூட்டவும், ரத்த குழாய் அடைப்பைச் சரி செய்யவும் இது உதவுகிறது.அறுகம்புல் சாறு
தேவை: புதிதாகப் பறிக்கப்பட்ட அறுகம்புல் - அரை கட்டு தேன் - ஒரு டீஸ்பூன் எலுமிச்சைப் பழம் - பாதியளவு (சாறு பிழியவும்) இந்துப்பு - ஒரு சிட்டிகை சீரகத்தூள் - ஒரு சிட்டிகை தண்ணீர் - தேவையான அளவு.
செய்முறை: அறுகம்புல்லை நன்றாகச் சுத்தம் செய்து, தேவையான அளவு தண்ணீர்விட்டு நன்கு அரைத்து வடிகட்டவும். அதனுடன் மேலும் இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்துக் கலக்கவும். பிறகு எலுமிச்சைச் சாறு, இந்துப்பு, சீரகத்தூள், தேன் சேர்த்துக் கலக்கவும். இதைத் தினமும் 100 மில்லி குடித்து வர, இதயம் வலுப்பெறும்.
பயன்: அறுகம்புல்லில் நார்ச்சத்தும் பல நுண் ஊட்டச்சத்துகளும் உள்ளன. இவை கொழுப்பைக் கரைக்கவும் ரத்தத்தில் உள்ள நச்சுகளை முறிக்கவும் பெருந்துணை புரிகின்றன. இதய படபடப்பு குறையவும், ரத்த சுத்திகரிப்புக்கும், இதய தசைகளில் படிந்துள்ள கொழுப்பு படிமானங்களை அகற்றவும் இது உதவுகிறது.துளசி மஞ்சள் சாரம்
தேவை: துளசி இலைகள் - ஒரு கைப்பிடி அளவு சுத்தமான விரளி மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் தண்ணீர் - 200 மில்லி சீரகம் - கால் டீஸ்பூன்.
செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர்விட்டுச் சூடாக்கவும். அதனுடன் துளசி இலைகள், மஞ்சள்தூள், சீரகம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டவும். இதைத் தினமும் காலை அல்லது மாலை வேளையில் 100 மில்லி வரை குடிக்கலாம்.
பயன்: துளசி மற்றும் மஞ்சளில் ஏராளமான மருத்துவக் குணங்கள் உள்ளன. நுரையீரல் நோய்த்தொற்றைச் சரிசெய்து, ரத்த ஓட்டத்தைச் சீராக்கி இதயத் துடிப்புக்கு மிகவும் உறுதுணை புரிகிறது. மூளை செல்கள் சிதைவடையாமல் காத்து மன அமைதிக்கும் வழிவகுக்கிறது. செரிமான மண்டலத்தைச் சீர் செய்கிறது. மனச்சோர்வை நீக்குகிறது. இதயத்தின் படபடப்பை நீக்குகிறது. குழந்தைகளுக்கு துளசி - மஞ்சள் சாரத்துடன் சிறிதளவு பால் கலந்தும் கொடுக்கலாம்.நெல்லிக்காய் சர்பத்
தேவை: பெரிய நெல்லிக்காய் - 2 தோல் சீவிய இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு எலுமிச்சை (விரும்பினால்) - பாதி அளவு (சாறு பிழியவும்) தேன் - ஒரு டேபிள்ஸ்பூன் புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு இந்துப்பு - ஒரு சிட்டிகை ஊறவைத்த சப்ஜா விதை - கால் டீஸ்பூன் தண்ணீர் - 250 மில்லி.
செய்முறை: நெல்லிக்காய்களின் கொட்டைகளை நீக்கவும். அதனுடன் இஞ்சி, இந்துப்பு, புதினா, தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்தெடுத்து வடிகட்டவும். தேன், சப்ஜா விதைகள் சேர்த்துக் கலந்து பருகலாம். விரும்பினால் எலுமிச்சைச்சாறு சேர்க்கலாம்.
பயன்: இதில் அதிகளவில் உள்ள வைட்டமின் சி எலும்புக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள பாஸ்பரஸ், இரும்புச் சத்துகள் இதயத்துக்கு இதமளித்து, ரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது. உடலில் பிராண வாயுவை அதிகரித்துச் செல்களுக்கும் மூளைக்கும் புத்துணர்வு அளிப்பதால், இதயம் சீராகச் செயல்பட உறுதுணை புரிகிறது.மோர்க் கற்றாழை
தேவை: கடைந்த நீர் மோர் - 200 மில்லி சோற்றுக்கற்றாழை - ஒரு மடல் இந்துப்பு - ஒரு சிட்டிகை கொத்தமல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு.
செய்முறை: சோற்றுக்கற்றாழையின் உள்ளே உள்ள ஜெல்லிப் பகுதியை ஐந்து முதல் ஏழு தடவை வரை நன்றாகக் கழுவி மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்றுச் சுற்றவும். அதனுடன் கொத்தமல்லித்தழை, இந்துப்பு சேர்த்து நன்றாக அடிக்கவும். இறுதியாக மோர் சேர்த்து நன்கு அடித்து எடுத்து உடனே பருக வேண்டும்.
பயன்: இது தேவையற்ற கொழுப்பைக் கரைப்பதில் உறுதுணை புரியும். உடல் சூட்டைத் தணிக்கும். நாம் உண்ட உணவில் உள்ள கெட்ட கொழுப்பை நீக்கி, நல்ல கொழுப்பை அதிகரித்து இதயத்துக்கு வலுவூட்டும்.ரோஜாப்பூ இயற்கை லேகியம்
தேவை: நாட்டுப் பன்னீர் ரோஜா இதழ்கள் - 3 கைப்பிடி அளவு பனங்கற்கண்டுத்தூள் (அ) நாட்டுச் சர்க்கரை - 100 கிராம் தேன் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: சுத்தம் செய்த ரோஜா இதழ்களை ஜாடியில் போடவும். அதன் மீது பனங்கற்கண்டுத்தூள் அல்லது நாட்டுச் சர்க்கரை, மீண்டும் ரோஜா இதழ்கள் என மாற்றி மாற்றி நிரப்பவும். பிறகு ஜாடியைச் சுத்தமான துணியால் மூடி கட்டவும். தினமும் குலுக்கிவிடவும். மூன்றாவது நாள் காலையில் நன்கு கலந்து வெயிலில் துணி கட்டியபடியே ஒருநாள் வைத்து எடுக்கவும். அதனுடன் தேன் சேர்த்துக் கலந்து காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். இயற்கை முறையில் செய்த ரோஜாப்பூ லேகியம் தயார்.
பயன்: இந்த லேகியம் மூளையில் செரடோனின், மெலடோனின் போன்றவை சரியான நிலையில் உற்பத்தியாக உதவுகிறது. இது மன அமைதிக்கு உதவுகிறது. மேலும், ரத்த ஓட்டத்தைச் சமன் செய்து இதயம் சீராகச் செயல்பட உதவுகிறது. ரத்தத்தில் உள்ள நச்சுகளை முறிக்கிறது.அங்காயப் பொடி
தேவை: மணத்தக்காளி வற்றல், சுண்டைக்காய் வற்றல், சுக்கு, வேப்பம்பூ - தலா 20 கிராம் தனியா (மல்லி) - 50 கிராம் மிளகு, சீரகம் - தலா 25 கிராம் காய்ந்த கறிவேப்பிலை - 2 கைப்பிடி அளவு கல் உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் மணத்தக்காளி வற்றல், சுண்டைக்காய் வற்றல், சுக்கு, தனியா, மிளகு, சீரகம், கறிவேப்பிலை, வேப்பம்பூ ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். இதைக் காற்றுப்புகாத டப்பாவில் சேகரித்து வைக்கவும். இந்தப் பொடியை ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்துச் சிறிதளவு நல்லெண்ணெய்விட்டுச் சூடான சாதம் அல்லது இட்லியுடன் சேர்த்து உண்ணலாம்.
பயன்: இதில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களுமே மருத்துவக் குணம் கொண்டவை. இவை இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் ரத்தத்தைச் சுத்திகரித்து, ரத்த ஓட்டத்தைச் சீர் செய்யும்; கெட்ட கொழுப்பை கரைக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்றவற்றைச் சரி செய்யும். நரம்புகளுக்கு வலுவூட்டும். ரத்தத்தில் உள்ள நச்சுகளை வெளியேற்றும். தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும்.பன்னீர் ரோஜா வெற்றிலைத் துவையல்
தேவை: வெற்றிலை - 10 (காம்பு, நுனி கிள்ளவும்) பன்னீர் ரோஜாப்பூ - 3 (இதழ்கள் மட்டும்) உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 2 டீஸ்பூன் தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு பச்சை மிளகாய் - 5 (அல்லது காரத்துக்கேற்ப) எலுமிச்சைப்பழம் - பாதியளவு (சாறு பிழியவும்) கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - தலா ஒரு கைப்பிடி அளவு சீரகம் - ஒரு டீஸ்பூன் வெல்லம் - ஒரு சிறிய துண்டு (பொடிக்கவும்) எண்ணெய் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: நல்லெண்ணெய் (அ) ஆலிவ் எண்ணெய் - ஒரு டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2.
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வறுக்கவும். அதனுடன் இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இறுதியாக வெற்றிலை, ரோஜாப்பூ இதழ்கள் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி இறக்கவும். ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். பிறகு வெல்லம், எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கலக்கவும். அதே வாணலியில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து, அரைத்தெடுத்த துவையலில் சேர்க்கவும். சாதம், இட்லி, தோசை என அனைத்துக்கும் இது சூப்பர் காம்பினேஷன்.
பயன்: வெற்றிலை மற்றும் ரோஜாப்பூவில் உள்ள மருத்துவக் குணங்கள் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை நீக்கி இதயத்தைப் பாதுகாத்து, பலப்படுத்தும். ரத்த ஓட்டத்தைச் சரி செய்யும். நுரையீரல், இதயம் சரிவர இயங்கத் துணை புரியும்.துளசி நெல்லித் துவையல்
தேவை: துளசி இலைகள் - 2 கைப்பிடி அளவு பெரிய நெல்லிக்காய் - ஒன்று (கொட்டை நீக்கி நறுக்கவும்) சின்ன வெங்காயம் - 5 (தோலுரிக்கவும்) பூண்டு - 5 பல் சீரகம் - ஒரு டீஸ்பூன் கறுப்பு உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் - 3 (அ) மிளகு - ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு.
தாளிக்க: ஆலிவ் எண்ணெய் - தேவையான அளவு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்.
செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கறுப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து வறுக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், பச்சை மிளகாய் அல்லது மிளகு சேர்த்து வதக்கவும். பிறகு நெல்லிக்காய் சேர்த்து வதக்கவும். இறுதியாக துளசி இலைகள் சேர்த்து ஒரு புரட்டு புரட்டி இறக்கவும். ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து அரைத்து வைத்த துவையலில் கலக்கவும். கமகமவென்ற மணத்துடன், உடலுக்கும் மனத்துக்கும் ஆரோக்கியம் தரும் துவையல் தயார்.
பயன்: துளசியும் நெல்லிக்காயும் பல்வேறு சத்துகள் கொண்டவை. இவை இரண்டும் சேர்ந்து ஓர் உணவாகும்போது அது மருந்தாக வேலை செய்கிறது. நுரையீரல் மற்றும் இதயம் இவை இரண்டுக்கும் நன்மை செய்யும் விதமாக அமைகிறது.வெந்தய மல்லி பானம்
தேவை: வெந்தயம், மல்லி (தனியா), சுக்கு, விரளி மஞ்சள், சீரகம் - தலா 100 கிராம் பட்டை - 50 கிராம் எலுமிச்சைப்பழம் - பாதியளவு (சாறு பிழியவும்) தண்ணீர் - 200 மில்லி.
செய்முறை: வெறும் வாணலியில் வெந்தயம், மல்லி, சுக்கு, மஞ்சள், சீரகம், பட்டை ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்தெடுக்கவும். ஆறியதும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு பொடித்து, காற்றுப்புகாத டப்பாவில் சேகரிக்கவும். தண்ணீருடன் அரைத்த பொடி 2 டீஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு 100 மில்லியாகக் குறைந்ததும் இறக்கி வடிகட்டவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து இளம் சூடாகப் பருகவும். இதை உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு அருந்தலாம்.
பயன்: நாம் உண்ட உணவில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கவும், கலோரிகளை எரிக்கவும், அதிக எடை போடாமல் தடுக்கவும் இந்தப் பானம் உதவுகிறது. மாரடைப்புக்கு முக்கிய காரணங்கள் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை ஆகும். இவற்றைச் சரி செய்து மாரடைப்பு வராமல் பாதுகாக்க இந்த வெந்தய மல்லி பானம் உதவுகிறது.அமுக்கிராக்கிழங்குப் பொடி பால்
தேவை: அமுக்கிராக்கிழங்குப் பொடி - 10 கிராம் பால் - 200 மில்லி பூசணி விதை - 10 கிராம் நாட்டுச் சர்க்கரை (அ) பனங்கற்கண்டு - 20 கிராம் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: பாத்திரத்தில் பாலை ஊற்றிக் காய்ச்சவும். அதனுடன் அமுக்கிராக் கிழங்குப் பொடி, பூசணி விதை, பனங்கற்கண்டு அல்லது நாட்டு சர்க்கரை, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலந்து, அடுப்பை சிறு தீயில் வைத்து, 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டாமல் அருந்தவும்.
பயன்: உயர் ரத்த அழுத்தத்தைச் சரி செய்யும். இதயம் சீராக இயங்க உதவும். தூக்கமின்மையைப் போக்கும். உடல் சோர்வு நீக்கும். மலச்சிக்கலைப் போக்கும். உடல் வெப்பத்தைச் சீர் செய்யும். ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.சுரைக்காய் சாரம்
தேவை: சுரைக்காய்த் துண்டுகள் - ஒரு கப் தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்) சின்ன வெங்காயம் - 10 பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்) இந்துப்பு - தேவையான அளவு புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை கலவை - ஒரு கைப்பிடி அளவு பூண்டு - 10 பல்
தண்ணீர் - 2 கப்.
தாளிக்க: ஆலிவ் எண்ணெய் - ஒரு டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - 2.
செய்முறை: குக்கரில் சுரைக்காய்த் துண்டுகளுடன் சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, பூண்டு, இந்துப்பு, தண்ணீர் சேர்த்து மூடி, இரண்டு விசில்விட்டு இறக்கவும். வாணலியில் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து சுரைக்காய்க் கலவையுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும். இதை பிரவுன் ரைஸ் அல்லது சிறுதானிய சாத வகைகளுடன் மதிய உணவாகச் சாப்பிடலாம். அல்லது காலை நேரங்களில் பிரவுன் அல்லது கோதுமை பிரெட்டுடன் சாப்பிடலாம்.
பயன்: சுரைக்காயில் நீர்ச்சத்து, கனிமச்சத்துகள், உயிர்ச்சத்துகள் கூடுதலாக உள்ளன. இவையனைத்தும் உடலின் தேவையற்ற கொழுப்பை எரிக்கவல்லவை. ரத்த ஓட்டத்தைச் சீர்ப்படுத்தி இதயம் சீராக இயங்க உதவுபவை.செம்பருத்திப்பூ தோசை
தேவை: ஒற்றை நாட்டுச் செம்பருத்திப்பூ இதழ்கள் - 15 முதல் 20 (பொடியாக நறுக்கவும்) வரகு பச்சரிசி - 200 கிராம் இட்லி அரிசி - 50 கிராம் கறுப்பு உளுத்தம்பருப்பு - 50 கிராம் வெந்தயம் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு காய்ந்த மிளகாய் - 2.
செய்முறை: வரகு பச்சரிசியுடன் இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் சேர்த்து 6 மணிநேரம் ஊறவைக்கவும். பிறகு களைந்து அரைத்தெடுத்து உப்பு சேர்த்துக் கரைத்து 6 மணிநேரம் புளிக்கவிடவும். வாணலியில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளிக்கவும். அதனுடன் பொடியாகக் கிள்ளிய செம்பருத்திப்பூ இதழ்களைச் சேர்த்து வதக்கி மாவுடன் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவைத் தோசைகளாக ஊற்றி இருபுறமும் வேகவிட்டு எடுக்க செம்பருத்திப்பூ தோசை ரெடி. இதற்குப் பன்னீர் ரோஜா வெற்றிலைத் துவையல் அல்லது துளசி நெல்லித் துவையல் நல்ல காம்பினேஷன்.
பயன்: இது இதயத்துக்கு இதமளிக்கும். இதில் உள்ள காசி பால் எனும் பொருள் ஹார்மோனை சமன் செய்யும். ரத்த விருத்தியை ஏற்படுத்தும். ரத்த நாளங்களில் உள்ள அடைப்பைச் சீர் செய்யும்.அவசர யுகத்துக்கு அவசிய உணவுகள்
இன்றைய அவசர உலகில் நோய்களும் அவசர அவசரமாக நம்மைத் தாக்குகின்றன. வயோதிகத்தில் நம்மைத் தாக்குமோ என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்த நோய்கள் பலவும் வாலிபப் பருவத்திலேயே வாட்டி வதைக்கின்றன. குறிப்பாக, இதயம் சார்ந்த நோய்கள் நம்மைப் பெரிதும் அச்சுறுத்துவதாக உள்ளன. இதற்கு முக்கிய காரணங்கள் வாழ்க்கை முறை மாற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடு, உணவுப் பழக்க மாற்றம். இதயம் சார்ந்த நோய்களிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள நல்ல தூக்கம், உடற்பயிற்சி, முறையான உணவுப் பழக்கம் அவசியம். இதயம் காக்கும் முயற்சியில் இறங்கி, நாம் உண்ணும் உணவேயே மருந்தாக, அதிலும் இதயத்துக்கு உறுதியளிக்கும் மருந்தாக விளங்கும் விதத்தில் தோசை, சூப், துவையல், மசியல், சர்பத் என வகை வகையாகத் தயாரித்து விருந்து படைக்கிறார், ஓசூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் எஸ்.சாந்தி.
``இங்கே வழங்கப்பட்டுள்ள உணவு வகைகள் இதயம் சம்பந்தப்பட்டவை என்பதால் சோடியத்தை (உப்பு) குறைத்து பொட்டாசியத்தை (காய்கறி, பழங்கள் மற்றும் இயற்கை பொருள்கள் மூலம்) அதிகரித்து வழங்கப்பட்டுள்ளன. இயற்கை முறையில், அதே நேரம் அனைவரும் சமைத்து உண்ணும் விதமாகவும் அமைந்துள்ளன. இவை நம் குடும்பத்தினரின் ஆரோக்கியம் சிறக்க உறுதுணைபுரியும்’’ என்கிறார் ஓசூர் சாந்தி. -
ரத்த மகுடம்
பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 19
திறந்த சிவகாமியின் அதரங்களை தன் உதடுகளால் கரிகாலன் மூடினான்! இருவரது அமிர்தங்களும் இரண்டறக் கலந்தன. சங்கமித்துப் பெருகின. ஒற்றியதை விலக்காமல் தன்இரு கரங்களால் அவள் வதனத்தை ஏந்தினான். போருக்கு ஆயத்தமாகும் படைக்கலன்களைப் போல் இருவரது உடல் ரோமங்களும் குத்திட்டு நின்றன. ஆற்றுப்படுத்தவும் பரஸ்பர துணையின் அவசியத்தை உணர்த்தவும் இருவருக்குமே அந்தக் கணம் தேவைப்பட்டது. தங்களைப் பூரணமாக அதற்கு ஒப்புக் கொடுத்தார்கள். தன் அதரத்தைத் தவிர வேறு எங்கும் அவன் உதடுகள் நுழையாதது இன்பத்தையும் நிம்மதியையும் வெறுமையையும் ஒருசேர சிவகாமிக்கு அளித்தது.
இன்பத்துக்குக் காரணம், ஹிரண்யவர்மர் தன்மீதான ஐயங்களைக் கிளப்பியபிறகும் கரிகாலன் அவளை நம்புவதை அவன் உடல் வெளிப்படுத்தியது. நிம்மதிக்குக் காரணம், பெருக்கெடுக்கும் வெள்ளத்திலும் கரைகள் உடையாதபடி பார்த்துக் கொள்ளும் அவன் கண்ணியம். வெறுமைக்குக் காரணம், கரைகள் உடைந்தால்தான் என்ன... எதற்காக இவ்வளவு கட்டுப்பாடுடன் அதற்கு அணை போட வேண்டும்... என்ற கேள்வி. பூத்த மூன்று உணர்ச்சிகளிலும் வெறுமையே ஜெயித்தது! அதை வெளிப்படுத்தும் விதமாக அடிவயிற்றிலிருந்து பெருமூச்சை வெளியேற்றினாள்.
இதன் விளைவாக மூச்சை உள்ளுக்கு இழுத்தபோது எலும்புகளுடன் ஒட்டிய அவள் ஸ்தனங்கள், சுவாசத்தை வெளியேற்றும்போது அளவுக்கு மீறி வளர்ந்து கச்சையின் முடிச்சைத் தளர்த்தின! தனது உடல் தன் வசத்தில் இல்லை என்பதை வெள்ளத்தில் மூழ்கத் தொடங்கிய அந்நிலையிலும் உணர்ந்தாள். இச்சூழலில் தன் முகக்குறிப்பை அவன் கண்டால் என்ன நினைப்பான்..? தாங்க முடியாமல் அதரங்களை விலக்கியவள், என்ன ஏது என கரிகாலன் பார்வையால் வினவுவதற்குள் கிளைகளில் அமர்ந்திருந்த அவன் மடியில் சாய்ந்தாள்.
நல்லவேளை... குப்புறப் படுத்திருக்கிறோம். வதனத்தில் பீறிட்டு ஓடும் குருதியோட்டத்தை அவன் காணவில்லை என்று நினைக்கும்போதே... குழையத் தொடங்கிய அவள் உடலின் வெப்பம், அவன் தொடைகளில் அழுத்தத் தொடங்கிய தன் ஸ்தனங்களின் வழியே கரிகாலனின் உடலுக்குள் ஊடுருவுவதை உணர்ந்தாள்! கையறு நிலையில் சிவகாமி தவித்தது எத்தனை யுகங்களோ... தலைக்கு மேல் பாய்ந்த வெள்ளம் எத்தனை அடிக்கு உயர்ந்தால்தான் என்ன... என்ற முடிவுக்கு அவள் வந்தபோது அவள் செவிக்குள் அவன் சுவாசம் பாய்ந்தது!
கண்களுக்குத் தெரியாமல் இருந்த அவள் உடல் ரோமங்களும் புலப்படத் தொடங்கின! இமைகளை மூடினாள்.‘‘சிவகாமி...’’ அவள் பெயர்தான். பலமுறை அழைத்துப் பழக்கப்பட்ட நாமகரணம்தான். ஆனால், அப்போது அதை உச்சரிப்பதற்குள் கரிகாலனுக்கு வியர்த்துவிட்டது! படர்ந்த கொடியைத் தாங்கும் வல்லமை அவன் உடல் என்னும் மரத்துக்கு இருந்தது. ஆனால், ஏனோ அக்கணத்தில் கொடியே மலையாகக் கனத்தது. பாரம் தாங்காமல் நிமிர்ந்தான் கரிகாலனின் தடுமாற்றம் சிவகாமிக்கு சிரிப்பை வரவழைத்தது.
ஆணின் பலவீனம், பெண்ணின் உடல் குழைவதைக் காண்பதுதான் என்பதை அனுபவபூர்வமாக அப்போது உணர்ந்தாள். அறிவையும் வலுவையும் செயல்படுத்த முடியாமல் தன் முன் ஒடுங்கி நிற்பவனைப் பார்க்க பாவமாக இருந்தது! முகத்தைச் சாய்த்து இமைகளைப் பிரித்து தன் பார்வைக் கணையை அவன் நெஞ்சில் பாய்ச்சினாள்! ‘‘அழைத்தீர்களா...’’ ‘‘ம்...’’
‘‘எதற்கு..?’’என்னவென்று சொல்லுவான்..? அவள் இடுப்பில் தன் கரங்களைத் தவழவிட்டான். தொடு உணர்ச்சி தாங்காமல் அசைந்தாள். அவர்கள் அமர்ந்திருந்த கிளையும் அசைந்து இருவரையும் நடப்புக்கு அழைத்து வந்தது. கரிகாலன் சட்டென்று கிளைகளை லேசாக விரித்து கீழே பார்த்தான்.
‘‘யாராவது வந்துவிட்டார்களா..?’’ கேட்டபடி எழுந்திருக்க முற்பட்ட சிவகாமியைத் தடுத்து, முன்பு போலவே படுக்க வைத்தான். ‘‘இல்லை...’’ ‘‘சாளுக்கிய வீரர்கள் வரவில்லையா..?’’‘‘இல்லை என்றேனே...’’ காரணமில்லாமல் எரிந்து விழுந்தான். சிவகாமிக்குச் சிரிப்பு வந்தது. ‘‘அதற்கு...’’‘‘ம்...’’ இருவருக்குமே வார்த்தைகள் வரவில்லை. எந்த சாளுக்கிய வீரனும் சந்தேகப்பட்டு இங்கு வராததால் நாம் இப்படியே இருக்கப் போகிறோமா... என்று கேட்க நினைத்தாள். வார்த்தைகள் வெளிவர மறுத்தன. அவன் கை விரல்கள் தன் முதுகில் கோடு கிழிக்கத் தொடங்கியதும் பார்வையைத் தாழ்த்தினாள்.
‘‘சிவகாமி...’’இப்போது ‘ம்’ கொட்டுவது அவள் முறையானது. ‘‘ம்...’’‘‘எதற்காக உன்னை அழைத்தேன் என்று கேட்டாய் அல்லவா..?’’ எப்போது கேட்டாள்... ஆம். சில கணங்களுக்கு முன். ஏன் கேட்டாள்... அவன் விரல்கள் ஏன் இப்படி முதுகில் ஊர்கின்றன... கச்சையின் முடிச்சுப் பக்கமாக நகர்கிறதே... முடிச்சை நிமிண்டுகிறானே... ஏற்கனவே முடிச்சின் இறுக்கம் தளர்ந்திருக்கிறதே... ஒருவேளை... ‘‘ஆம் கேட்டேன்...’’‘‘பதில் தெரிய வேண்டாமா..?’’ எந்த பதில்..? தளர்ந்த கச்சையின் உட்புறத்துக்குள் விரல் நுழையப் போகிறதா... இந்த இடம்... இச்சூழல்... ‘‘சொல்லுங்கள்...’’
‘‘எதைச் சொல்ல வேண்டும்..?’’பித்து நிலை. மாறி மாறிப் பிதற்றுவதை இருவரும் அறிந்தே இருந்தார்கள். உடல்களின் மொழி அதன் போக்கில் உரையாடலைத் தொடர... பேச்சு மொழி தொடர்பற்று ஒலித்துக் கொண்டிருந்தது. ‘‘எதற்காக என்னை அழைத்தீர்கள் என்பதை..!’’ஏதோ சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான் இதை உச்சரித்தாள். ஆனால், அதுவே அதுவரை மறைந்திருந்த அனைத்தையும் கரிகாலனுக்கு நினைவுபடுத்திவிட்டது! குறிப்பாக மரத்தின் மீது தாங்கள் அமர்ந்திருக்கும் காரணத்தை. கச்சையின் முடிச்சை தன் கை கட்டை விரலாலும் ஆள்காட்டி விரலாலும் உருட்டிக்கொண்டிருந்த கரிகாலன், நிதானத்துக்கு வந்தான்.
அதுவரை தன் வெற்று முதுகில் அளைந்துகொண்டிருந்த அவன் விரல்கள் ஒரு நிலைக்கு வந்ததிலிருந்து அவனது மனப்போக்கை சிவகாமி ஊகித்துவிட்டாள். மேற்கொண்டு உரையாடலைத் தொடர்ந்த அவனது குரலின் தொனியும் அவன் மனநிலை மாறிவிட்டதை வெளிப்படுத்தியது.‘‘வனத்தைச் சுற்றி சாளுக்கிய வீரர்கள் இருக்கிறார்கள். அப்படி யிருக்க இங்கிருந்து எப்படி வெளியேறப் போகிறோம்... பல்லவ இளவலைச் சந்திக்கப் போகிறோம்... என்று கேட்டாய் அல்லவா..?’’அவள் வினவியது, ‘எப்படி வனத்திலிருந்து வெளியேறுவது..?’ என்று மட்டும்தான். ஆனால், அவள் சொல்லாமல் விட்ட சகலத்தையும் கரிகாலன் சொல்லிவிட்டான்.
எனில், ஏதோ திட்டம் வகுத்திருக்கிறான் என்று அர்த்தம். அதைக் கேட்பதற்காக எழுந்திருக்க முற்பட்டாள். ‘‘எதுவாக இருந்தாலும் இப்படியே கேள்...’’ கரிகாலன் அதட்டினான். ‘‘இ..ப்..ப..டி..யே..வா..?’’‘‘ஆம். இப்படியே...’’ சொன்ன கரிகாலன் மீண்டும் அவள் முதுகில் தன் விரல்களைப் படரவிட்டான். முன்பு அவன் விரல்கள் படர்ந்து அளைந்தன என்றால் இப்போது அதே விரல்கள் யாழை மீட்டுவதுபோல் அவள் சருமத்தை வருடின. அதை அனுபவித்தபடியே தொடர்ந்தாள். ‘‘ஆம்... எப்படி வெளியேறப் போகிறோம் என்று கேட்டேன்... வழி கிடைத்துவிட்டதா..?’’
‘‘கிடைத்துவிட்டது...’’ சொன்ன கரிகாலன் இமை மூடித் திறப்பதற்குள் தளர்ந்திருந்த அவளது கச்சையின் முடிச்சை அவிழ்த்தான்! அதிர்ந்துபோய் முகத்தைத் திருப்பி அவனைப் பார்க்க அவள் முற்படுவதற்குள், கச்சையை இறுக்கி முடிச்சிட்டான். தன்னை பிரமையுடன் ஏறிட்டவளின் அதரங்களை நோக்கிக் குனிந்தவன் தன் உதடுகளால் அவளை அழுத்தி முத்தமிட்டுவிட்டு நிமிர்ந்தான். அவள் முதுகைத் தடவிக்கொண்டிருந்த இடது கை, அவள் தலையைக் கோதத் தொடங்கியது. அங்கிருந்து நகர்ந்து அவள் கன்னங்களைத் தடவிவிட்டு பழையபடி முதுகுக்கு வந்தது.
‘‘சிவகாமி, நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் தெரியுமா..?’’லேசாகப் புரண்டு தன் ஸ்தனங்களை இன்னும் அழுத்தமாக அவன் தொடையில் பதித்தபடி, வந்த சிரிப்பை வாயைப் பொத்தி அடக்கினாள். ‘‘கள்ளி!’’ அவள் கன்னத்தைக் கிள்ளி அதே இடத்தில் முத்தமிட்டுவிட்டு நிமிர்ந்தான். ‘‘மல்லை மாநகரத்துக்கு வடமேற்கே...’’ சொன்ன கரிகாலன் மீண்டும் கிளைகளை விலக்கி கீழேயும் பக்கவாட்டிலும் ஆராய்ந்தான். சாளுக்கிய வீரர்கள் சல்லடை யிட்டுச் சலித்துக் கொண்டிருந்தார்கள். உதட்டோரம் புன்னகை வழிய அவளை ஏறிட்டவன் அவள் இடுப்பு முடிச்சைத் தளர்த்தி ஆடையை சற்றே கீழிறக்கினான்.
தடுக்க உயர்ந்த அவள் கரங்களை கெட்டியாகப் பிடித்தான்.‘‘கவனி சிவகாமி... ஏனெனில் மறுமுறை சொல்ல நேரம் இருக்காது...’’‘‘அப்படியானால் அமர்ந்து கொள்கிறேன்...
’’‘‘தேவையில்லை... செவிகளைத் திறந்து வை... தவிர உன் உடலில் நான் வரையப் போகும் கோடுகளை நன்றாக உள்வாங்கு...’’ இரு கரங்களையும் முன்னோக்கி நகர்த்தி சிவகாமியை நன்றாக தன்னை நோக்கி இழுத்தான். கச்சையின் முடிச்சிலிருந்து இடுப்பைத் தளர்த்தி, தான் வெளிப்படுத்திய பிரதேசம் வரை தன் வலது உள்ளங்கையால் நன்றாகத் தேய்த்தான்.
பின்னர் அப்பகுதியின் நான்கு புறங்களிலும் தன் ஆள்காட்டி விரலால் கோடு இழுத்தான்.‘‘இதுதான் தொண்டை மண்டலம் சிவகாமி. வடக்கில் இருப்பது வேங்கடம். கிழக்கில் உள்ளது கெடிலநதிக்கரை. இதைக் கடந்தால் நடுநாடு. அங்கிருந்து சோழநாடு. தென்பக்கத்து எல்லை வழியாக மட்டுமல்ல, மேற்குப் பக்கமாகவும் கொங்குப் பகுதிக்குள் நுழையலாம். பெரும்பாலும் குன்றுகளும் மலைகளும்தான்...’’ என்றபடியே அவள் பின்புற மேட்டின் பக்கம் தன் விரல்களைக் கொண்டு சென்றவன், ‘‘ம்...’’ என சிவகாமி அதட்டியதும் கண்களைச் சிமிட்டி விட்டு தொடர்ந்தான்.
‘‘தொண்டை மண்டலத்தின் வடக்குப் பாகம் குன்றுகள் அடர்ந்தது. அழகானது. கிழக்கு, தெற்குப் பாகங்கள் தட்டையானவை. சாரமுள்ள பூமி. அதனாலேயே வேளாண்மை நடைபெற்று வருகிறது. குன்றுகள் அடர்ந்திருந்தாலும் இயற்கையாகவே பள்ளத்தாக்குகள் அனேக இடங்களில் இருப்பதால் ஏரி, குளங்களை வெட்டி பல்லவர்கள் நீர்ப்பாசனத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். காவேரிப்பாக்கமும், மாமண்டூரும் எப்போதும் நீருள்ள ஏரிகள். தொண்டை மண்டலத்தில் பாயும் நதிகளில் முக்கியமானது பாலாறு. இதன் வடக்குப் பாகம் வடசுபா. தெற்குப் பாகம் தென் சுபா.
இங்குள்ள மலைகள் தென்மேற்கிலுள்ள கங்குந்தியில் நுழைந்து வடக்கு நோக்கிச் சென்று கொஞ்சம் கொஞ்சமாக வேங்கடம் வரை கிழக்கு நோக்கிச் செல்கின்றன. கரகம்பாடி, மாமண்டூர் கிராமங்கள் வழியாக வடக்கு நோக்கி கடப்பைக்கு போகும் ஒரு நீண்ட பள்ளத்தாக்கினால் இம்மலைத்தொடர்ச்சி பிளக்கப்பட்டு, மாமண்டூர் பள்ளத்தாக்கில் மறுபடியும் மேலெழும்பி காளஹஸ்தி என்கிற காயலா ஸ்தலத்தில் இருந்து வட கிழக்காகச் செல்கிறது...’’ நிறுத்திய கரிகாலன் அவள் எதிர்பாராத நேரத்தில் குனிந்து அவள் அதரங்களை முத்தமிட்டு விட்டு தொடர்ந்தான். ‘‘இங்கு கீழிருந்து மேலாகச் செல்ல ஏராளமான கணவாய்கள் உண்டு.
ஆனால், வண்டிகள் போகக் கூடியவை கல்லூர், மொகிலி, செய்னகுந்தா ஆகிய மூன்று கணவாய்களே! சந்திரகிரியிலுள்ள கல்லூர் கணவாய், கடப்பைப் பியலூருக்குள் நுழைந்து தாமல்செருவு பள்ளத்தாக்கை ஒட்டிச் செல்கிறது. செய்னகுந்தா கணவாய் பழமானேரிக்குச் சென்று மொகிலியிலிருந்து வரும் செங்குத்தான பாதையுடன் இணைகிறது...’’ மூச்சுவிடாமல் பல்லவ நாட்டின் எல்லைகளைக் குறிப்பிட்டபடியே வந்த கரிகாலனின் குரல் சட்டென உணர்ச்சிவசப்பட்டது.‘‘தொண்டை மண்டலத்தின் சிறப்பு என ஜவ்வாது குன்றுகளைச் சொல்லலாம்.
அது இங்கிருக்கிறது...’’ என சிவகாமியின் கச்சையி லிருந்து கீழ்நோக்கிக் கோடிழுத்தான். அவன் விரலுக்கும் தன் ஸ்தனத்துக்கும் அதிக தூரமில்லை என்பதை உணர்ந்த சிவகாமியின் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.‘‘பல்லவ நாட்டின் தென் மேற்கில் இவை இருக்கின்றன. இவற்றை பள்ளத்தாக்கு ஒன்று பிரிக்கிறது. இப்பள்ளத்தாக்கு பின்னர் குறுகி மலையுடன் இணைந்து கொங்குப் பகுதியில் பெரிதாகிறது. வேங்கட மலை வழியே பல சிறு மலைத் தொடர்கள் வடக்கு, மேற்கு என தனித்தனியே நகர்கின்றன.
வடக்கில் இருக்கும் சிறுமலையின் அகன்ற பள்ளத்தாக்குக்குக் கிழக்கே காளஹஸ்தியில் வடக்கு நோக்கி நகரிக் குன்றுகளால் அடைக்கப்பட்டிருக்கிறது. இங்கிருக்கும் மூங்கில் காடுகளுக்குத்தான் நாம் செல்ல வேண்டும்....’’ கரிகாலன் சொல்லச் சொல்ல சிவகாமியின் கண்கள் விரிந்தன. ‘‘இங்குதான் பல்லவ இளவல் ராஜசிம்மர் இருக்கிறாரா..?’’‘‘இல்லை...’’ கரிகாலனின் குரல் அழுத்தமாக ஒலித்தது. ‘‘பின் எதற்காக அங்கு செல்லவேண்டும்..?’’ ‘‘அங்குதான் ஹிரண்யவர்மர் நமக்காகச் சேகரித்து வைத்திருக்கும் ஆயுதங்கள் இருக்கின்றன!’’
(தொடரும்)
- கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14250&id1=6&issue=20180921
-
மாங்காய் நெய் இறால் மசாலா
என்னென்ன தேவை?
இறால் - 1/2 கிலோ,
நெய் - 5 டேபிள்ஸ்பூன்,
கடுகு, வெந்தயம், சீரகம், மிளகு - தலா 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
மாங்காய் - 4 துண்டு,
சாம்பார் வெங்காயம் - 6,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி - சிறிது,
உப்பு - தேவைக்கு.
மசாலா அரைக்க...
எண்ணெய் - சிறிது,
மிளகு, தனியா, சீரகம் - தலா 25 கிராம்,
காய்ந்தமிளகாய் - 5,
புளி - எலுமிச்சை அளவு,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
.
எப்படிச் செய்வது?
தோசைக்கல் மசாலாவை வதக்கி அரைத்துக் கொள்ளவும்.கடாயில் நெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம், மிளகு தாளித்து கறிவேப்பிலை, வெங்காயத்தை வதக்கி, மாங்காய், தோசைக்கல் மசாலா, இறால் சேர்த்து சிறிது வதக்கி கெட்டியாக வந்ததும் கொத்தமல்லி, மிளகுத்தூள் கலந்து இறக்கவும்.வாளை கருவாட்டு குழம்பு
என்னென்ன தேவை?
செக்கு எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,
வெந்தயம், மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
நசுக்கிய பூண்டு - 5 பல்,
சாம்பார் வெங்காயம் - 6, மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது,
நறுக்கிய முருங்கைக்காய், கத்திரிக்காய், வேகவைத்த மொச்சை யாவும் கலந்தது - 1 கப்,
வாளை கருவாடு - 6 துண்டுகள்,
உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெயை காயவைத்து வெந்தயம், மிளகு, சீரகம் தாளித்து பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும். பின்பு தேவையான அளவு தண்ணீர், உப்பு, முருங்கைக்காய், கத்திரிக்காய், மொச்சை, கருவாடு சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்து குழம்பு பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2922&id1=0&issue=20180901
-
-
-
-
ரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர்
பிரமாண்டமான சரித்திரத் தொடர் 18
என்ன நடந்தது என்பதே அப்பெரியவருக்கு சில கணங்கள் வரை புரியவில்லை.
கண்களைச் சுற்றி விண்மீன்கள் வட்டமிட்டன. நாசிக்குப் பதில் வாய் வழியே சுவாசிக்க வேண்டிய நிலை. ஓரளவு சுயநினைவு வந்த பிறகு தன் முன்னால் புற்கள் விஸ்வரூபம் எடுத்து மரங்களாக வளர்ந்திருப்பதைக் கண்டார்!அதன் பிறகுதான் தரையில், தான் விழுந்திருப்பதும் தனது பற்கள் சிதறியிருப்பதும் வாயிலிருந்து குருதி வடிந்து மண்ணை நனைப்பதும் புரிந்தது!‘‘டேய்... எழுந்திரு!’’ கரிகாலன் அதட்டினான்.
பெரியவர் தலையை உயர்த்த முற்பட்டார். முடியவில்லை. கபாலம் பிளந்திருக்கிறதோ என்னவோ..?யாரோ கொத்தாக தலையின் சுருண்ட குழல்களைப் பிடித்துத் தூக்குவது தெரிந்தது. தள்ளாட்டத்துடன் எழுந்து நின்றார். தவறு. நிற்க வைக்கப்பட்டார். கேசங்களில் பிடிக்கப்பட்டிருந்த பிடி பலமாக இருந்ததால் தலையைப் பின்னோக்கிச் சாய்த்தபடிதான் முன்னோக்கிப் பார்க்க முடிந்தது.
சிவகாமி, தன் வலது கையை மடக்கியும் இடது கையின் உள்ளங்கையை இறுக்கியும் நின்றிருந்தாள். மென்மைக்குப் பெயர் போன இந்தப் பெண்ணா தன் தாடையைப் பெயர்த்து முகத்தில் குத்தியிருக்கிறாள்..?‘‘ஆம்! சிவகாமிதான் இக்காரியத்தைச் செய்தாள்...’’ கரிகாலனின் குரல் பின்பக்கமிருந்து ஒலித்தது. ‘‘சொல். யார் நீ..?’’‘‘அதான் சொன்னேனே... உங்கள்... ரகசியக்... குழுவை... அம்மா..!’’ அலறியபடி மீண்டும் அப்பெரியவர் தரையில் விழுந்தார். இம்முறை சிவகாமியின் கரங்கள் இடியாக தன் கபாலத்தில் இறங்குவதைப் பார்த்து உணரும் பாக்கியம் அவருக்குக் கிட்டியிருந்தது!
‘‘வயதானவனை இப்படியா அடிப்பீர்கள்..?’’ இரத்தம் சிந்த இருமியபடி அப்பெரியவர் எழுந்தார். தன் தலைக் கேசத்தை கரிகாலன் பிடிக்கவில்லை என்பதும், சிவகாமி முஷ்டியை உயர்த்தியதுமே பிடிப்பை அவன் விட்டுவிட்டான் என்பதும் புரிந்தது. நல்ல ஜோடி. ஒருவர் நினைப்பதை மற்றவர் செய்து முடிக்கிறார்!
‘‘வயதானவனா... நீயா... முட்டாள்...’’ சிவகாமி தன் வலது காலை உயர்த்தி அவன் முகத்துக்கு நேரே கொண்டு வந்தாள்.கணத்தில் யமலோக வாசலுக்கு அப்பெரியவர் சென்றுவிட்டார்! நல்லவேளையாக அவ்வாசல் திறப்பதற்குள் பூமிக்கே திரும்பிவிட்டார்!
இமைக்கவும் மறந்து, வாயிலிருந்து குருதி வடிந்த அந்த நிலையிலும் பிரமிப்பு விலகாமல் தன் கண்முன்னால் தென்பட்ட பாதத்தை செய்வதறியாமல் பார்த்தார்.
அப்பாதம் அவரது நாசியின் நுனியைக் கூடத் தொடவில்லை.கணங்கள் யுகங்களாகக் கழிந்ததும் மெல்ல அப்பாதம் தரையில் இறங்கியது. இறங்கிய வேகத்தில் மீண்டும் அவர் கண் முன் தோன்றியது!இப்போது அந்தப் பாதத்தின் கட்டை விரலில் வெண் தாடி ஊசலாடிக் கொண்டிருந்தது!அதை அவர் முகத்தில் வீசிவிட்டு, உயர்த்திய தன் காலை சிவகாமி தரையில் இறக்கினாள். ‘‘வேடம் கலைந்துவிட்டது... இப்போது சொல்..!’’ ஈட்டியாகப் பாய்ந்தது அவள் குரல்.
பெரியவராக வேடமிட்டிருந்த அந்த நடுத்தர மனிதன் தலைகுனிந்து நின்றான்.‘‘சாளுக்கியர்களின் எந்தப் படைப்பிரிவைச் சேர்ந்தவன் நீ..?’’ கேட்டபடி கரிகாலன் முன்னால் வந்து நின்றான்.வாய் திறக்காமல் மவுனம் சாதித்தான்.‘‘டேய்...’’ கர்ஜித்தபடி சிவகாமி தன் முஷ்டியை உயர்த்தினாள்.‘‘ஸ்ரீராமபுண்ய வல்லபரின் அந்தரங்க ஒற்றன் நான்...’’ தட்டுத் தடுமாறி பதிலளித்தான்.
‘‘வல்லபன் எந்தச் சிறையில் இருக்கிறான்..?’’ நிதானமாகக் கரிகாலன் தன் விசாரணையைத் தொடர்ந்தான்.‘‘எ..ந்..த... வ..ல்..ல..ப..ன்..?’’ ஒற்றன் விழித்தான்.‘‘பல்லவ நாட்டின் புரவிப்படைத் தளபதி!’’‘‘எனக்கு ராமபுண்ய வல்லபரை மட்டுமே தெரியும்... ஆ...’’ அநிச்சையாக தன் வலது செவியை ஒற்றன் பொத்தினான். வண்டுகளின் ரீங்கார ஒலி உள்ளெங்கும் அதிர்ந்தது!உயர்த்திய தன் கையை புன்னகையுடன் சிவகாமி
இறக்கினாள்.
பாதகி! புரவியை அப்படிக் கொஞ்சியவள் இப்படி பாறையாக மாறி அறைந்திருக்கிறாளே! பொங்கிய உமிழ்நீரை விழுங்க முடியாமல் தரையில் துப்பினான். மேலும் இரண்டு பற்கள் ரத்தத்துடன் தரையில் விழுந்தன!‘‘எஞ்சிய பற்களும் நாடி நரம்புகளும் உடலில் தங்க வேண்டுமா அல்லது இங்குள்ள செடி கொடி மரங்களுக்கு உரமாக வேண்டுமா..?’’ கரிகாலனின் உதட்டிலிருந்து குரூரம் வெளிப்பட்டது.
‘‘கா..ஞ்..சி... சிறை..யி..ல்...’’ ஒற்றன் தட்டுத் தடுமாறினான்.‘‘எங்கு வல்லபனை சிறைப்பிடித்தீர்கள்? அச்சப்படாமல் சொல். உயிரே போனாலும் ஒற்றன் உண்மையைச் சொல்லமாட்டான். ஆனால், இரண்டு தட்டு தட்டியதுமே நீ கக்க ஆரம்பித்து விட்டாய். அப்படியானால் எங்களிடம் சிக்கினால் சகலத்தையும் சொல்லிவிடும்படி உன் எஜமானரும் சாளுக்கியர்களின் போர் அமைச்சரு மான ஸ்ரீராமபுண்ய வல்லபர் உத்தரவிட்டிருக்க வேண்டும்.
நடந்ததைச் சொல்!’’ கரிகாலனின் பார்வை அவன் உடலைச் சல்லடையாகத் துளைத்தன.
இதன் பிறகு ஒற்றன் எதையும் மறைக்கவில்லை. கெடிலக்கரையில் வல்லபனைச் சுற்றி வளைத்துப் பிடித்ததையும் மல்லைக்கு இழுத்து வந்ததையும், காஞ்சி சிறையில் அவனை அடைக்கும்படி ஸ்ரீராமபுண்ய வல்லபர் அங்கு கட்டளையிட்டதையும் சொன்னான்.‘‘பிறகு எப்போது உன் போர் அமைச்சரை சந்தித்தாய்..?’’‘‘யாரைக் குறிப்பிடுகிறீர்கள் கரிகாலரே..? ஸ்ரீராமபுண்ய வல்லபரையா..?’’‘‘வேறு போர் அமைச்சர் சாளுக்கியர்களுக்கு ஏது..?’’‘‘இரண்டு நாழிகைகளுக்கு முன்பு!’’கரிகாலன் தலையசைத்தபடி சிவகாமியை ஏறிட்டான். ‘‘ஆயுதச் சுரங்கத்திலிருந்து, தான் வெளியேறிவிட்டதை நமக்கு உணர்த்தவும்; நாக விஷம் தோய்ந்த வாட்களை தாங்கள் கைப்பற்றிவிட்டதை நமக்குத் தெரிவிக்கவும் இந்த ஒற்றனிடம் ஒரு வாளைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்...’’
‘‘நமக்கு எதிர்த் திசையில் இருந்தல்லவா இந்த ஒற்றன் வந்தான்...’’ சிவகாமி புருவத்தை உயர்த்தினாள்.‘‘ஆம்! நாம் நேர் வழியில் வந்தோம். ராமபுண்ய வல்லபர் குறுக்கு வழியில் இவனை எதிர்கொண்டு நம்மைச் சந்திக்க அனுப்பி யிருக்கிறார்!’’‘‘அப்படியானால் நாம் நடமாடும் திசைகளை...’’சிவகாமியின் வாக்கியத்தை கரிகாலன் முடித்தான்.
‘‘விரல் நுனியில் சாளுக்கிய போர் அமைச்சர் வைத்திருக்கிறார்!’’‘‘நம்மை ஏன் அவர் கைது செய்யாமல் இருக்கிறார்..?’’‘‘பல்லவ இளவல் இருக்கும் இடத்தை அறிவதற்காக, சிவகாமி!’’ சிரித்தபடி பதிலளித்த கரிகாலன், தன் கரங்களை உயர்த்தி சோம்பல் முறித்துவிட்டு ஒற்றன் பக்கம் திரும்பினான். ‘‘இனி நீ செல்லலாம்... தொடர்ந்து மூன்று நாட்களுக்கு காலையும் மாலையும் புரவிக்கு படிகாரப் பாலின் ஒத்தடத்தைக் கொடுக்க மறக்காதே!’’ ஆள்காட்டி விரலை உயர்த்திச் சொல்லிவிட்டு, ‘‘வா சிவகாமி...’’ என்றபடி தங்கள் குதிரைகள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான்.
‘‘கரிகாலரே...’’ வழிந்த குருதியைத் துடைத்தபடி ஒற்றன் அழைத்தான்.‘‘என்ன..?’’ நின்ற இடத்திலிருந்தே கரிகாலன் திரும்பினான்.‘‘நான் வேடதாரி என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்..? இத்தனைக்கும் ‘செ - லி நா - லோ - செங் - கியா பா - தோ - பா - மோ’ என சரியாகத்தானே உங்கள் சங்கேதச் சொல்லை உச்சரித்தேன்!’’பதில் சொல்லாமல் கரிகாலன் கடகடவென்று சிரித்தான்.‘‘சொல்லலாம் என்றால் சொல்லுங்கள். இல்லையென்றால் வேண்டாம்...’’ ஒற்றனின் கண்களில் ஆர்வம் வழிந்தது.
‘‘நீ எப்படி உங்களுக்கு பாதகமில்லாமல் உண்மையைச் சொன்னாயோ அப்படி எங்களுக்கு பாதகமில்லாமல் நாங்களும் நிஜத்தைச் சொல்கிறோம்! ஒற்றனே... சங்கேதச் சொல்லை சரியாகத்தான் உச்சரித்தாய். ஆனால், அதில் ஆன்மா இல்லை. உயிர்ப்பில்லை! தவறு நிகழ்ந்துவிடக் கூடாதே என்ற பதற்றத்துடன் மனப்பாடம் செய்ததை ஒப்பித்தாய்... தவிர...’’நிறுத்திய கரிகாலன் மெல்ல ஒற்றனின் அருகில் வந்தான்.
அச்சத்துடன் ஒற்றன் பின்னால் நகர்ந்தான்.சிரித்தபடி கரிகாலன் ஒற்றன் ஏறி வந்த புரவியை அணைத்து முத்தமிட்டான். ‘‘நாக விஷம் தோய்ந்த வாளை உன் இடுப்பில் நீ அணிந்திருந்தது சந்தேகத்தைக் கிளப்பியது என்றால்... உன்னை அணு அணுவாக ஆராய வைத்தது இந்த அசுவம்தான்!இது எங்கள் பல்லவ நாட்டின் புரவிப் படைத் தளபதியான வல்லபனுக்குச் சொந்தமானது. இந்தப் பகுதியிலேயே இதுபோன்ற சத்திரிய சாதிக் குதிரை அவனிடம் மட்டுமே உண்டு. அசுவத்தின் நாடி பார்க்க சிவகாமி இதன் செவிகளை ஆராய்ந்தபோது மச்சம் தென்பட்டது! அது அனைத்து உண்மைகளையும் சொல்லிவிட்டது...’’மீண்டும் ஒருமுறை அதன் நெற்றியில் தன் இதழ்களை கரிகாலன் பதித்தான். ‘‘வல்லபனைச் சுற்றி வளைத்து சாமர்த்தியமாக கெடிலநதிக்கரையில் கைது செய்த நீ... அவன் புரவி மீது மையல் கொண்டது முதல் குற்றம்! வழியில் பயன்படலாம் என்பதற்காக தன்னுடன் அவன் எடுத்துச் சென்ற கறிமஞ்சள், சவுக்காரம், வெல்லம், அபினி, பசும்பால், நீர், படிகாரம் ஆகியவற்றையும் நீ சுமந்து வந்தது இரண்டாவது குற்றம்!வல்லபனின் வஸ்திரத்துடனேயே அதை எடுத்து வந்தது மூன்றாவது குற்றம்! வல்லபனால் மட்டுமே இவ்வளவு அழகாக தன் வஸ்திரத்தை மடித்து புரவிக்கான மருந்துப் பொருட்களை வைக்க முடியும் என்பதை நான் அறிய மாட்டேன் என நீ எண்ணியது நான்காவது குற்றம்! சுரைக்காய் குடுவையில் இருக்கும் பல்லவ நந்தி இலட்சினையை நீ கவனிக்காமல் விட்டது ஐந்தாவது குற்றம்!’’சொன்ன கரிகாலன் நெருங்கி ஒற்றனின் தோளைத் தொட்டான். ‘‘இப்போது நான் சொன்ன அனைத்தையும் மறக்காமல் ஸ்ரீராமபுண்ய வல்லபரிடம் தெரிவித்துவிடு! போலவே எங்கள் நடமாட்டத்தை அணு அணுவாக அவர் கண்காணிக்கிறார் என்பதை நாங்கள் அறிந்துவிட்டதாகவும் தெரிவித்து விடு!இதையெல்லாம் தெரிந்து கொண்டபிறகும் நாங்கள் அச்சப்படவோ பின்வாங்கவோ இல்லை என்பதை அழுத்தம்திருத்தமாகத் தெரிவித்து விடு! பல்லவ இளவலை நாங்கள் சந்திக்கப் போவதில் எந்த மாற்றமும் இல்லை. முடிந்தால் எங்களை, பல்லவ இளவலை கைது செய்யச் சொல்!’’ அதன் பிறகு கரிகாலன் திரும்பிப் பார்க்கவில்லை. ஒற்றனும் எந்த அழைப்பையும் விடுக்கவில்லை.
தங்கள் புரவிகளில் ஏறாமல் அவற்றுடன் நடந்தபடியே சிவகாமி யுடன் அடர் வனத்தின் புதருக்குள் ஊடுருவினான். சில காத தூரம் சென்றதும் சிவகாமியின் கைகளைப் பிடித்து நிறுத்தினான். தன் முன் வலுவான மரம் இருப்பதையும் அதன் அடிப்பாகம் மூன்று ஆட்கள் கைகோர்த்து அணைக்கும்படி இருப்பதையும் பார்வையால் அளந்து விட்டு சிவகாமி பக்கம் தன் கருவிழியைத் திருப்பினான்.
உதட்டில் விரல் வைத்து அமைதி காக்கும்படி அவளிடம் சமிக்ஞை செய்துவிட்டு, தங்களுடன் வந்த இரு குதிரைகளையும் நெருங்கினான். அவற்றின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு இரு நெற்றிகளையும் தன்னிரு கரங்களாலும் ஒரே நேரத்தில் தடவினான். குனிந்து எட்டு கால்களையும் தடவி, பிடித்து விட்டான்இரண்டும் ஒரே நேரத்தில் கனைத்தன.
புன்னகையுடன் ஒவ்வொரு குதிரையின் செவியிலும் தனித்தனியே முணுமுணுத்தான்.இரண்டும் வாயைத் திறந்து பற்களைக் காட்டின!செல்லமாக அவற்றின் காதுகளைப் பிடித்து வலிக்காமல் திருகி விட்டு, இரு கைகளாலும் இரண்டையும் தட்டிக் கொடுத்தான்!
அடுத்த கணம் இரு புரவிகளும் ஒன்றுடன் ஒன்று ஒட்டியும் ஒட்டாமலும் உரசியும் உரசாமலும் சீறிப் பாய்ந்து காட்டுக்குள் பறந்தன. அக்கம்பக்கத்து மரக் கிளைகளில் அமர்ந்திருந்த பறவைகள் சடசடவெனச் சிறகடித்தபடி பறந்தன. அதைக் கண்டு அவன் உதட்டோரம் புன்னகை பூத்தது.
அவற்றின் குளம்பொலிகள் மெல்லத் தேய்ந்து மறைந்த பிறகும் அந்த இடத்தை விட்டு கரிகாலன் அசையவில்லை. பின்னர் சிவகாமியின் இடுப்பைத் தன் கைகளால் வளைத்து அவளைத் தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டான். பாதங்களை அழுத்தி ஒலி எழுப்பாமல் இரு கால் கட்டை விரல்களாலும் நடந்தபடி, தான் அளவிட்ட மரத்தை அடைந்தான்.
தோளிலிருந்து சிவகாமியை இறக்காமலேயே தென்னை மரத்தில் ஏறுவது போல் கால்களைக் குவித்தும் உயர்த்தியும் அம்மரத்தில் ஏறி, அடர் கிளைகளின் நடுவில் புகுந்து அமருவதற்கு வாகான இடத்தில் சிவகாமியை இறக்கினான். இலைக் கொத்துகளைக் காற்றில் அசைவது போல் பிரித்துப் பார்த்தான்.வனத்தைச் சுற்றி ஆங்காங்கே புரவிகளும் சாளுக்கிய வீரர்களும் தனித்தனியாகவும் குழுக்களாகவும் நிற்பது புள்ளியாகத் தெரிந்தது.முழுவதுமாகச் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறோம்! எந்தத் திசையில் சென்றாலும் யாராவது நம்மைப் பின்தொடர்வார்கள்! ஸ்ரீராமபுண்ய வல்லபர் பலே பேர்வழிதான்!
‘‘எப்படி வனத்திலிருந்து நாம் வெளியேறுவது..?’’
செவியோரம் கிசுகிசுத்த சிவகாமியை நேருக்கு நேர் பார்க்க கரிகாலன் சட்டெனத் திரும்பினான்.இவ்வளவு வேகமாக அவன் திரும்புவான் என்பதை சிவகாமி எதிர்பார்க்கவில்லை. எனவே அவளால் விலக முடியவில்லை. எனவே அவன் உதடுகள் அவள் அதரங்களை முழுவதுமாக ஒற்றின! ஒற்றிய உதடுகளை வரவேற்கும் விதமாக அதரங்கள் திறந்தன!
(தொடரும்)
கே.என்.சிவராமன்http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14219&id1=6&issue=20180914
-
அருமையான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு
அ-அ+சூடான சாதத்தில் கருவாட்டு குழம்பை ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இன்று வாளைக்கருவாட்டுடன் மொச்சை, முருங்கைக்காய் சேர்த்து குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வாளை கருவாடு - 6 துண்டுகள்,வெந்தயம், மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
நசுக்கிய பூண்டு - 5 பல்,
சாம்பார் வெங்காயம் - 6,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது,
நறுக்கிய முருங்கைக்காய், கத்திரிக்காய், வேகவைத்த மொச்சை யாவும் கலந்தது - 1 கப்,
உப்பு - தேவைக்கு.
புளி - நெல்லிக்காய் அளவு,நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
வாளை கருவாட்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் வெந்தயம், மிளகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.
பின்பு கரைத்த புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர், உப்பு, முருங்கைக்காய், கத்திரிக்காய், மொச்சை, கருவாடு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்து குழம்பு பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சூப்பரான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு ரெடி. -
-
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பால் கோவா கொழுக்கட்டை
அ-அ+இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று பால் கோவா கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மேல் மாவு செய்ய:
கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
தண்ணீர் - ஒன்றே கால் கப்,
உப்பு - சிட்டிகை,
எண்ணெய் ஒரு டீஸ்பூன்.
பூரணம் செய்ய:
இனிப்பு கோவா - ஒரு கப்,உடைத்த பாதாம், முந்திரி - தலா 3 டீஸ்பூன்.
செய்முறை :
தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு. பூரணம்
ஒரு பாத்திரத்தில் இனிப்பு கோவா, உடைத்த பாதாம், முந்திரியை போட்டு ஒன்றாக சேர்த்து கலக்கவும். இதுவே பூரணம்.
மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.
சூப்பரான பால் கோவா கொழுக்கட்டை ரெடி. -
-
-
ரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர்
பிரமாண்டமான சரித்திரத் தொடர்-17
கரிகாலனின் பார்வை பதிந்த திக்கை சிவகாமியும் கவனித்தாள். பெரியவரின் இடுப்பில் வாள் இருந்தது. அந்த வாள் சற்று முன்னர் சுரங்கத்தில் அவர்கள் பார்த்த நாக விஷம் தோய்ந்த வாட்களில் ஒன்று என்பதை ஊகிக்க அவளுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அந்த வாட்களில் இரண்டை தன் கைகளில் ஏந்தி சாளுக்கிய வீரர்களை நிர்மூலமாக்கியது அவள்தானே..? அதன் அமைப்பும் பிடிப்பும் அவள் அறியாததா என்ன..?
அந்தப் பெரியவர் யாராக இருக்கும் என்ற வினா நாடி நரம்பெல்லாம் பரவியது. சுரங்கத்துக்கு எதிர்த் திசையில் புரவியில் வந்த பெரியவருக்கு எப்படி அந்த வாள் கிடைத்தது..? எனில் அங்கிருந்த ஹிரண்ய வர்மரும், சிறை வைக்கப்பட்ட சாளுக்கிய போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபரும் என்ன ஆனார்கள்..? ஆயுதங்களை புலவர் தண்டி அனுப்பிய ஆட்கள் எடுத்துக் கொண்டார்களா அல்லது சாளுக்கியர்களின் வசமே அவை போய்ச் சேர்ந்ததா..? இந்தப் பெரியவர் பல்லவர்களின் நண்பரா அல்லது எதிரியா..?
அனைத்துக்குமான விடைகள் அப்பெரியவரிடம்தான் இருக்கின்றன. அவரை விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரிக்க அதிக கணங்கள் தேவைப்படாது. கரிகாலன் அதை கவனித்துக் கொள்வான்.ஆனால், அதற்கு முன் புரவியை குணப்படுத்த வேண்டும். அளவுக்கு மீறி உஷ்ணம் அதன் உடலெங்கும் ஊடுருவியிருக்கிறது. காலதாமதம் நிச்சயம் அதன் உயிரை மாய்க்கும். சொந்த உணர்ச்சி களுக்கு எந்தவொரு அசுவ சாஸ்திரியும் இடம்கொடுக்கக் கூடாது. முழு கவனமும் புரவிகளிடத்தில்தான் குவிய வேண்டும்.
ஏனெனில் அசுவங்கள் என்பவை தனித்த உயிரினமல்ல; அவை அசுவ சாஸ்திரி களின் உயிர். இதைக் காப்பாற்றுவதுதான் இத்தருணத்தில் அவளது முழுமுதல் வேலை. முடிவுக்கு வந்த சிவகாமி எவ்வித உணர்ச்சியும் இன்றி புரவியின் பக்கம் திரும்பினாள். தன் எஜமானரைத் தவிர வேறு யாருக்கும் கட்டுப்படாத அப்புரவி, அவளுக்கு வசப்பட்டிருக்கிறது. எனில், தன்னை அது நம்புகிறது என்று அர்த்தம்.
அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமானால் அலைபாயும் மனதுடன் அதற்கு சிகிச்சை அளிக்கக்கூடாது. புரவிகளின் கெட்டிக்காரத்தனத்துக்கு அளவேயில்லை. யாருக்குக் கட்டுப்பட்டு அது நிற்கிறதோ அவரது எண்ண ஓட்டத்தைத் துல்லியமாக அறியும் சக்தி அவற்றுக்கு உண்டு. வசப்பட்டவர்களின் உள்ள உணர்ச்சிக்கு ஏற்ப தன் இயல்பையும் உணர்வையும் மாற்றிக் கொள்ளும். சத்திரியப் புரவியான இது, இந்தக் கல்யாண குணங்களைக் கொண்டது.
எனவே நம் மனம் அலைபாய்ந்தால் அது இப்புரவியின் உடலிலும் எதிரொலிக்கும்; அதன் உடல்நலத்தையும் பாதிக்கும். பெரியவர் குறித்து எழுந்த வினாக்களை காற்றில் கரைத்து விட்டு அந்த மாநிறப் புரவியின் நெற்றி யில் அன்போடு முத்தமிட்டாள். அதன் செவிகளைத் தடவினாள். கால்களைப் பிடித்துவிட்டாள். குருதியில் பாய்ந்திருக்கும் உஷ்ணத்தின் தன்மையால் அக்குதிரை திமிறியது. பொறுக்க முடியாமல் முன்னங்கால்களை உயர்த்தியது.
அதனையும் அறியாமல், அதன் சித்தத்தையும் மீறி அவளை வீழ்த்த முற்பட்டது. புரிந்துகொண்ட சிவகாமி, உயர்த்திய அதன் குளம்புகளைத் தன்னிரு கரங்களிலும் ஏந்தினாள். தொடு உணர்ச்சியின் வழியே அதற்குச் செய்தி சொன்னாள். முயன்று கட்டுப்பட்டு தன் மூர்க்கத்தை அது தளர்த்திக் கொண்டது. அதன் கண்களில் இருந்து வழிந்த உஷ்ண நீரை தன் உள்ளங்கையால் துடைத்தாள்.‘‘கரிகாலரே..!’’ திரும்பிப் பார்க்காமல் குரல் கொடுத்தாள்.
‘
‘உடனடியாக கறிமஞ்சள், சவுக்காரம், வெல்லம், அபினி, பசும் பால், நீர் வேண்டும். அருகிலிருக்கும் கிராமத்துக்குச் சென்று இவற்றை வாங்கி வாருங்கள். புரவிக்கு உடனடியாக மருந்து தயாரித்துக் கொடுத்தாக வேண்டும்...’’அவளுக்குப் பின்புறமிருந்து எந்த பதிலும் வரவில்லை.‘‘நான் சொன்னது காதில் விழுந்ததா..?’’‘‘அவசியமில்லை...’’பதில் சொன்னது கரிகாலன் அல்ல.
சிவகாமிக்கு அவன் குரல் நன்றாகத் தெரியும். தள்ளி நின்றும் கேட்டிருக்கிறாள். நெருக்கமாக செவியோரம் அவன்கிசுகிசுத்ததையும் அனுபவித்திருக்கிறாள்.
எனில், பெரியவரே தன்னுடன் உரையாட முற்படுகிறார். ஏன் கரிகாலன் அமைதியாக இருக்கிறான்?விடை தேட முற்பட்ட எண்ணத்தை குழி தோண்டிப் புதைத்தாள். புரவிதான் இப்போது முக்கியம். ‘‘ஏன் பெரியவரே..?’’ திரும்பாமல் பேச்சைத் தொடர்ந்தாள்.‘‘அருகில் எந்தக் கிராமமும் இல்லை...’’‘‘பரவாயில்லை. தொலைவில் இருந்தாலும் அவர் வாங்கி வரட்டும். மருந்து இப்போது அவசியம் தேவை. இல்லை யெனில் புரவி சுருண்டுவிடும்...’’‘‘அப்படி எதுவும் நிகழாது...’’‘‘இல்லை பெரியவரே... புரவியின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது...’’‘‘தெரியும் மகளே..!’’ என்றபடி அந்தப் பெரியவர் அவள் அருகில் வந்தார்.
சிவகாமி அவரை நிமிர்ந்து பார்க்கவில்லை. பார்வையைத் தாழ்த்தியவண்ணம் புரவியின் முகத்தோடு ஒன்றியிருந்த அவள் விழிகளில் அவரது வாளின் நுனி தென்பட்டது. நாக விஷம் தோய்ந்த வாள்! அமைதியாக இருந்தாள். பெரியவரே பேச்சைத் தொடர்ந்தார். ‘‘புரவியை கவனித்ததை வைத்தே நீ ஒரு அசுவ சாஸ்திரி என்பதைப் புரிந்துகொண்டேன்! நிச்சயம் உன் கணிப்பு தவறாக இருக்காது. உன் முகக்குறிகள் புரவியின் அவஸ்தைகளைப் பிரதிபலிக்கின்றன. நிச்சயம் இக்குதிரைக்கு சிகிச்சை அவசியம். ஆனால், நீ கேட்ட மருந்துகளை கரிகாலன்... அதுதானே அவன் பெயர்? அப்படித்தானே அழைத்தாய்... கொண்டு வர பல காத தூரங்கள் பயணப்பட வேண்டும்.
அதுவரை புரவி தாங்காது...’’‘‘சற்று நேரத்துக்கு என்னால் இதை சமாளிக்க வைக்க முடியும் பெரியவரே... மருந்து வந்தாக வேண்டும்...’’‘‘அவை என்னிடம் இருக்கின்றன!’’ சட்டென்று பதில் சொன்ன பெரியவர், தன் இடுப்பு முடிச்சை அவிழ்த்தார். அவள் கேட்ட மருந்துகளை எடுத்துக் காட்டினார். ‘‘புறப்படும்போதே தேவைப்படும் என பத்திரப்படுத்தினேன். என்ன... அழகான அசுவ சாஸ்திரியை சந்திக்க நேரிடும் என்பதைத்தான் ஊகித்தும் பார்க்கவில்லை..!’’
தன் கண்முன் அவர் நீட்டிய வஸ்திர முடிச்சைப் பார்த்தாள். சந்தேகங்கள் அலை அலையாக எழுந்தன. பெரியவர் யார் என்ற வினா விஸ்வரூபம் எடுத்தது. புரவியின் கனைப்பு அவளை நடப்புக்குக் கொண்டு வந்தது. சட்டென தன் முன் நீட்டப்பட்ட வஸ்திரத்தைப் பிடுங்கி அதன் முடிச்சை அவிழ்த்தாள். ஒரு ஜோடி கால்கள் அவள் அருகில் வந்தன. அவை கரிகாலனுக்குச் சொந்தமானவை என்பதை விரல்களின் நீளத்திலிருந்து உணர்ந்தாள். அவன் பார்வையை எதிர்கொள்ள வேண்டும் என்று எழுந்த ஆவலை அடக்கினாள். கூடாது.
புரவியின் கண்களைவிட்டு, தன் பார்வையை விலக்கக் கூடாது. எல்லாவற்றையும்விட இப்போது புரவிக்கு அவசியம் இந்தப் பார்வை அரவணைப்புதான். இமைக்காமல் குதிரையின் கருவிழிகளைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். கரிகாலனின் வலக்கரம் உயர்ந்து தன் தோளை அணைத்தபோது இனம் புரியாத பரவசமும் நிம்மதியும் அவள் உடலெங்கும் பரவியது. ‘நானிருக்கிறேன்... எதற்கும் கவலைப்படாதே...’ என்று அவன் அறிவித்த செய்தி, பெரும் பலத்தை அவளுக்குக் கொடுத்தது. அச்செய்தியை பார்வை வழியே புரவிக்கும் கடத்தினாள்.
தன் வலக்கரத்தால் மருந்துகளை கரிகாலன் எடுத்துக்கொண்டான். கறிமஞ்சள், சவுக்காரம், வெல்லம் ஆகியவற்றை கற்களால் பொடி செய்து அவளிடம் கொடுத்தான். அதை அபினியுடன் கலந்து உருண்டையாக்கி, புரவியின் வாயருகே கொண்டு சென்றாள். மறுகையால் அதன் தலையை அவள் கோதிவிட்டாள். குதிரை தன் வாயைத் திறந்தது. லாவகமாக தன் கையிலிருந்த உருண்டையை உள்ளே செலுத்தினாள்.
புரவிக்குப் புரையேறியது. பெரியவர் நீர்க் குடுவையை நீட்டினார். கொஞ்சமாக நீரைக் குடித்து அது தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டது. இதற்குள் சுள்ளிகளை அடுக்கி சிக்கிமுக்கிக் கற்களால் அதை கரிகாலன் பற்றவைத்திருந்தான். பாலுடன் சுரைக்காய் குடுவையை பெரியவர் கொடுத்தார்! எல்லாவற்றையும் வைத்திருக்கிறார்! அனைத்துக்கும் தயாராக வந்திருக்கிறார்! சந்தேகத்தின் அளவு அதிகரித்தது. சுரைக்காய் தீப்பற்றி எரியாமல் பக்குவமான சூட்டில் பசும் பாலை தண்ணீர் கலந்து கரிகாலன் சுட வைத்தான்.
வஸ்திர முடிச்சில் இருந்த படிகாரத்தை பொடி செய்து பாலில் அதைத் தூவினான். எழுந்த வாடையை புரவி நன்றாக சுவாசிக்கும்படி சிவகாமி செய்தாள். பின்னர் பெரியவரின் வஸ்திர நுனியை நன்றாக விரித்து அதில் தூசிகள் இல்லாதபடி உதறிவிட்டு படிகாரம், நீர் கலந்த பாலில் முக்கி எடுத்துப் பிழிந்தாள். சூடு குறைந்ததும் அந்த வஸ்திரத்தால் புரவியின் கண்களைச் சுற்றிலும் துடைத்தாள். பன்னிரண்டு முறை இதுபோல் செய்த பிறகு அந்த அசுவம் தன் தலையைச் சிலுப்பியது.
அதன் நெற்றியில் அழுத்தமாக முத்தம் கொடுத்துவிட்டு சிவகாமி நிமிர்ந்தாள். பெரியவரை நேருக்கு நேர் சந்தித்தாள். ‘‘இனி பயமில்லை. சற்று ஓய்வு எடுத்ததும் புரவியின் மீது நீங்கள் ஏறிக்கொண்டு எங்கு செல்லவேண்டுமோ அங்கு செல்லலாம். இன்னும் மூன்று நாட்களுக்கு காலையும் மாலையும் புரவிக்கு காய்ச்சிய படிகாரப் பாலின் ஒத்தடம் தரப்பட வேண்டும். இது உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்...’’
‘‘எதனால் அப்படி நினைக்கிறாய்..?’’ புன்னகையுடன் அப்பெரியவர் கேட்டார்.‘‘கையோடு மருந்துகளுடன் நீங்கள் பயணம் செய்வதை வைத்து!’’
‘‘அதாவது என்னையும் அசுவ சாஸ்திரியாகக் கருதுகிறாய். அப்படித்தானே?’’சிவகாமி பதிலேதும் சொல்லவில்லை.‘‘ஓரளவு அது சரிதான். ஆனால், உன் அளவுக்கு நான் கைதேர்ந்த அசுவ சாஸ்திரி அல்ல. கண்டிப்பாக நீ சொன்னபடி புரவிக்கு ஒத்தடம் அளிக்கிறேன்!’’ தலையைத் தாழ்த்தியபடி அப்பெரியவர் சொன்னார்.
தன்னை அவர் கிண்டல் செய்வது சிவகாமிக்குப் புரிந்தது. முகத்தைத் திருப்பி கரிகாலனைப் பார்த்தாள். அவன் அந்தப் பெரியவரை அணு அணுவாக ஆராய்ந்துகொண்டிருந்தான். மார்பில் இரு கைகளையும் கட்டியிருந்தார். கால்களை லேசாக அகற்றியிருந்தார். ஆஜானுபாகுவான உருவம். நிமிர்ந்திருந்ததால் அவரது தலையின் சுருண்ட பின்புறக் குழல்கள் அவர் கழுத்தை மறைத்து தோள்களைத் தொட்டுக் கொண்டிருந்தன. கேசத்திலும் தென்பட்ட வீரம், கரிகாலனை யோசிக்க வைத்தது.
அளவோடு சிறுத்த இடுப்பும் அதற்கு மேலும் கீழும் உறுதியுடன் இருந்த உடற்கூறுகளும் இடைவிடாத யோகப் பயிற்சிக்குச் சான்று கூறின. கால்கள் ஏதோ இரும்பால் செய்யப்பட்டதைப் போல் இருந்த தோரணை அவரது திடத்தை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்தது. அவர் தன்னைப் போலவே அதிக சதைப் பிடிப்பு இல்லாதவர். எனவே, பலத்தில் தனக்கு எந்தவிதத்திலும் குறைந்தவரல்ல என்பதை கரிகாலன் உணர்ந்தான்.
அதுதான் அவனுக்கு ஐயத்தை ஏற்படுத்தியது. தலைக்குழல்களும் மார்பு வரை புரண்ட தாடியும் வெண்மையாக இருந்தன. ஆனால், உடலோ மத்திம வயதுக்கு அவர் சொந்தக்காரர் என்பதை எடுத்துக் காட்டியது. வேடம் தரித்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள கரிகாலனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. ஏற்கனவே அவர் இடுப்பி லிருந்த வாளின் வரலாறு வேறு ஐயத்தைக் கிளப்பியிருக்கிறது... ‘‘யார் நீங்கள்..?’’ நிதானமாகக் கரிகாலன் தன் விசாரணையைத் தொடங்கினான்.
‘‘உங்கள் குழுவைச் சேர்ந்தவன்...’’ பெரியவரின் பதிலிலும் அதே அமைதி.‘‘எங்கள் குழுவா..?’’‘‘ஆம். பல்லவ இளவல் ராஜசிம்மனுக்கு விசுவாசமாக இருக்கும் ரகசியக் குழு!’’ அழுத்தமாகச் சொன்ன அப்பெரியவர், ‘‘செ - லி நா - லோ - செங் - கியா பா - தோ - பா - மோ...’’ என்ற சமிக்ஞைச் சொல்லை மீண்டும் உச்சரித்தார். அதுதான், தான் செய்த தவறு என்பது பிறகுதான் அப்பெரியவருக்குப் புரிந்தது. ஏனெனில் ‘உங்களைச் சேர்ந்தவன்’ என்பதற்காக அவர் உச்சரித்த சொல்லே அவரது சுயரூபத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டது!
(தொடரும்)
- கே.என்.சிவராமன்http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14188&id1=6&issue=20180907
-
அருமையான நெத்திலி மீன் பொரியல்
அ-அ+தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த நெத்திலி மீன் பொரியல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
நெத்திலி மீன் - 1/2 கிலோ, நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,
கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 5,
சாம்பார் வெங்காயம் - 6,
பச்சைமிளகாய் - 2,
இடிச்ச பூண்டு - 5 பல்,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
தனியாத்தூள், சீரகத்தூள் - தலா 1 டீஸ்பூன்,
மிளகுத்தூள், கொத்தமல்லி - சிறிது,உப்பு - தேவைக்கு.
செய்முறை :
நெத்திலி மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், ப.மிளகாய், இடிச்ச பூண்டு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தேங்காய்த்துருவல், நெத்திலி மீன், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
சூப்பரான நெத்திலி மீன் பொரியல் ரெடி. -
-
-
-
இது அவகாடோ ஸ்பெஷல்!
``பட்டர் ஃபுரூட், ஆனைக்கொய்யா, வெண்ணெய் பழம் என்றெல்லாம் அழைக்கப்படும் அவகாடோ, இப்போது பெரும்பாலான நகரங்களில் அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் பழமாகிவிட்டது. அன்றாட நார்ச்சத்து தேவையில் 40 சதவிகிதத்தை இப்பழம் பூர்த்தி செய்கிறது. அதோடு, ரத்த அழுத்தப் பிரச்னையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. புற்றுநோயை எதிர்க்கிறது. ஆர்த்ரிடிஸ் வராமல் பாதுகாக்கிறது. சிறுநீரகப் பாதிப்பைத் தடுக்கிறது.
இதன் ருசி இனிப்பாகவோ, துவர்ப்பாகவோ, புளிப்பாகவோ இருக்காது. இனிப்பில்லா பப்பாளிப் பழம் போன்ற புதிய சுவையையும் வெண்ணெய் சாப்பிடுவது போன்ற உணர்வையும் அளிக்கும். வீட்டிலேயே செய்யும் வகையில் வித்தியாசமான அவகாடோ ரெசிப்பிகளை வண்ணமயமான படங்களுடன் அளிக்கிறார் ஷார்ஜாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் லக்ஷ்மி வெங்கடேஷ்.
இது ஃபுரூட்ஃபுல் சமையல்!அவகாடோ... சில குறிப்புகள்
அவகாடோ பழம் பச்சை நிறத்தில் உருண்டை வடிவம் முதல் பெயார்ஸ் காய் வடிவம் வரை பலவிதங்களில் கிடைக்கிறது. இதில் நல்ல கொழுப்புகள், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் கே1, வைட்டமின் பி6 மற்றும் கார்போஹைட்ரேட் போன்ற சத்துகள் உள்ளன.
ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரை இப்பழம் அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது.
அவகாடோவை தேர்ந்து எடுக்கும் முறை: பழத்தின் மேல் தோல் கரும்பச்சை நிறத்திலோ, பிரவுன் நிறத்திலோ இருக்க வேண்டும். பழுக்கிறபோது தோல் கருத்து வரும். சதைப் பகுதி பச்சை நிறமாக இருக்க வேண்டும். தொட்டுப் பார்க்கும்போது பழம் சற்றுக் கனமாக இருக்க வேண்டும். `பொதபொத’ என்று அழுந்தக்கூடாது. பழத்தின் காம்பைச் சற்று அகற்றிப் பார்த்தால் சதைப் பகுதி பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். பழத்தின் தோல் இலைப் பச்சை நிறத்தில் இருந்தால் காயாக இருக்க வாய்ப்புள்ளது.
பயன் படுத்தும் முறை: மாம்பழத்தை நறுக்குவது போல இரண்டு பாகமாக நறுக்கினால் உள்ளே ஒரு எலுமிச்சை அளவுக்குக் கொட்டை இருக்கும். இதனை நீக்கிவிட்டு, பழத்தின் சதைப் பகுதியை ஒரு ஸ்பூனால் வழித்து எடுக்க வேண்டும். தோல் மிகவும் மெலிதாக இருக்கும். சதைப் பகுதியை மட்டும்தான் சமையலில் பயன்படுத்த வேண்டும்.அவகாடோ சப்பாத்தி வித் அவகாடோ கிரேவி
தேவையானவை - சப்பாத்தி செய்ய:கோதுமை மாவு - ஒரு கப்
அவகாடோ விழுது - ஒரு கப்
பச்சை மிளகாய் - 2
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
கிரேவி செய்ய:
அவகாடோ காய் - ஒன்று (தோல் சீவி, கொட்டை நீக்கி, பெரிய துண்டுகளாக நறுக்கவும்)
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அவகாடோ விழுதுடன் பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர்விடாமல் மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். இதனுடன் கோதுமை மாவு, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி, மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைக் காயவைத்து, சப்பாத்திகளைப் போட்டுச் சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும். பிறகு அவகாடோ துண்டுகள், சிறிதளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கிளறி, மூடிபோட்டு ஐந்து நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும். இந்த கிரேவியை அவகாடோ சப்பாத்தியுடன் பரிமாறவும்.அவகாடோ மஃபின் வித் அவகாடோ ஃக்ரீம் சீஸ் ஃப்ரோஸ்டிங்
தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப்
மைதா மாவு - ஒன்றே கால் கப்
பேக்கிங் பவுடர் - ஒரு டீஸ்பூன்
பேக்கிங் சோடா - ஒரு டீஸ்பூன்
அவகாடோ விழுது - ஒரு கப்
முட்டை - 2
சர்க்கரை - ஒரு கப்
மோர் - ஒரு கப்
வெண்ணெய் - கால் கப்
தண்ணீர் - அரை கப்
வெனிலா எசென்ஸ் - ஒரு டீஸ்பூன்
உப்பு - அரை டீஸ்பூன்
ஃப்ரோஸ்டிங் செய்ய
குளிர்ந்த விப்பிங் க்ரீம் - கால் கப்
க்ரீம் சீஸ் - 2 கப்
அவகாடோ விழுது - ஒரு கப்
ஐசிங் சுகர் - 3 கப்
எலுமிச்சைத் தோல் துருவல் - ஒரு பழத்தின் துருவல் (பழத்தின் தோலை மேலாகத் துருவவும். கீழே இருக்கும் வெள்ளை பாகத்தைத் துருவக் கூடாது)
எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன் (விரும்பினால்)
செய்முறை:
பேக்கிங் அவனை 80 டிகிரியில் 20 நிமிடங்கள் `ப்ரீஹீட்’ செய்யவும். மஃபின் ட்ரேயில் மஃபின் பேப்பர் கப்புகளைப் போட்டு வைக்கவும். மைதா மாவுடன் கோதுமை மாவு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து இரண்டு முறை சலித்து எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும். அதனுடன் வெண்ணெய், மோர், அவகாடோ விழுது, சர்க்கரை, வெனிலா எசென்ஸ் தண்ணீர் சேர்த்து எக் பீட்டரால் நன்கு அடிக்கவும். மாவுக் கலவையை முட்டைக் கலவையுடன் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கட்டி தட்டாமல் மெதுவாகக் கலக்கவும். பிறகு, மாவுக் கலவையை மஃபின் கப்களில் பாதியளவுக்கு ஊற்றவும். இதை ப்ரீஹீட் செய்த பேக்கிங் அவனுக்குள் (baking oven) வைத்து 8 முதல் 20 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும் (டூத்பிக்கால் மஃபின் நடுவே குத்தி வெந்துவிட்டதா எனப் பார்க்கவும். டூத்பிக்கில் மாவு ஒட்டாமல் வந்தால், மஃபின் வெந்துவிட்டது என்று அறியலாம்). பிறகு வெளியே எடுத்து 20 நிமிடங்கள் ஆறவிடவும்.
ஃப்ரோஸ்டிங் செய்யக் கொடுத்துள்ள க்ரீமை எலெக்ட்ரிக் பீட்டரால் 5 நிமிடங்கள் நன்றாக அடிக்கவும். அதனுடன் ஐசிங் சுகர், அவகாடோ விழுது, எலுமிச்சைத் தோல் துருவல், எலுமிச்சைச் சாறு, வெனிலா எசென்ஸ் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் நன்றாக அடித்து எடுக்கவும். இதை `பைப்பிங் பேக்’கில் ஊற்றி, ஆறிய மஃபின்கள் மீது பைப் செய்து பரிமாறவும்.அவகாடோ க்ரீம்
தேவையானவை:
குளிர்ந்த விப்பிங் க்ரீம் - 500 மில்லி
ஃப்ரெஷ் க்ரீம் - ஒரு கப்
அவகாடோ விழுது - ஒரு கப்
அவகாடோ துண்டுகள் - கால் கப்
ஐசிங் சுகர் - ஒரு கப்
வெனிலா எசென்ஸ் - அரை டீஸ்பூன் (விரும்பினால்)
செய்முறை:
விப்பிங் க்ரீமை எலெக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடிக்கவும். சிறிது நேரம் கழித்து அதனுடன் ஐசிங் சுகர் சேர்த்து, பஞ்சு போல வரும் வரை அடித்து எடுக்கவும் (ஒரு தட்டில் வைத்துத் தலைகீழாக கவிழ்த்தால் அது கீழே விழாமல் இருக்க வேண்டும்). அதனுடன் ஃப்ரெஷ் க்ரீம், அவகாடோ விழுது, வெனிலா எசென்ஸ் சேர்த்து மீண்டும் அடிக்கவும். இந்தக் கலவையை ஒரு மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். பிறகு அதனுடன் அவகாடோ துண்டுகள் சேர்த்து கட் அண்டு ஃபோல்டு முறையில் மெதுவாகக் கலக்கவும் (நன்கு அழுத்தாமல் மென்மையாகக் கலக்கவும்).விருப்பம்போல் நறுக்கிய அவகாடோ பழத்துண்டுகளை மேலே வைத்து அலங்கரித்தும் பரிமாறலாம்.
குறிப்பு:
அவகாடோவைப் பாதியாக நறுக்கி, உள்ளிருக்கும் கொட்டைகளை நீக்கி, உள்ளிருக்கும் சதைப்பகுதியை ஒரு ஸ்பூனால் ஸ்கூப் செய்து எடுக்கவும். அவகோடா விழுது தயாரிக்க அவகாடோவின் சதைப்பகுதியுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுக்கவும்.அவகாடோ ஸ்பினச் லச்சா பராத்தா
தேவையானவை:
கோதுமை மாவு - ஒரு கப்
அவகாடோ விழுது - ஒரு கப்
பாலக்கீரை - ஒரு கட்டு (நறுக்கவும்)
பச்சை மிளகாய் - 2
ஓமம் - கால் டீஸ்பூன்
வறுத்த சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாலக்கீரையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவைத்து வடியவிடவும். அதனுடன் அவகாடோ விழுது, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். கோதுமை மாவுடன், உப்பு, சீரகத்தூள், ஓமம், நெய், அரைத்த விழுது, தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு, மாவைச் சிறிய உருண்டைகளாக்கி மெல்லிய சப்பாத்திகளாகத் திரட்டவும். அதன் மீது எண்ணெய் அல்லது நெய் தடவி, சிறிதளவு கோதுமை மாவைத் தூவவும். சப்பாத்தியின் இரு ஓரங்களையும் பிடித்துக்கொண்டு விசிறி போல மடித்து வட்டமாகச் சுருட்டவும். பிறகு, உருண்டைகளை உள்ளங்கையில் வைத்து அழுத்தி, சற்றுக் கனமான பராத்தாக்களாகத் திரட்டவும். தோசைக்கல்லைக் காயவைத்துத் திரட்டிய பராத்தாக்களைப் போட்டுச் சுற்றிலும் நெய் அல்லது எண்ணெய்விட்டு, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். சூடாகப் பரிமாறவும்.அவகாடோ ஐஸ்க்ரீம்
தேவையானவை:
அவகாடோ விழுது - ஒரு கப்
குளிர்ந்த விப்பிங் க்ரீம் - ஒரு கப்
சர்க்கரை - ஒரு கப்
வெனிலா எசென்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய நட்ஸ் கலவை (பாதாம், பிஸ்தா, வால்நட்) - கால் கப்
செய்முறை:
சிறிதளவு நட்ஸ் கலவையை அலங்கரிக்க தனியாக எடுத்து வைக்கவும். விப்பிங் க்ரீமை எலெக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடிக்கவும். சிறிது சிறிதாக சர்க்கரை சேர்த்து, பஞ்சு போல வரும் வரை மேலும் அடிக்கவும் (ஒரு தட்டில் வைத்துத் தலைகீழாக கவிழ்த்தால் அது கீழே விழக் கூடாது). அதனுடன் அவகாடோ விழுது, வெனிலா எசென்ஸ் சேர்த்து மீண்டும் அடிக்கவும். பிறகு நட்ஸ் சேர்த்து கட் அண்டு ஃபோல்டு முறையில் மெதுவாகக் கலக்கவும் (நன்கு அழுத்தாமல் மென்மையாகக் கலக்கவும்).
இதனை மூடி ஃப்ரீசரில் ஆறு மணி நேரம் வைத்து எடுக்கவும். ஐஸ்க்ரீம் ஸ்கூப்பரால் பந்து போல் உருட்டி எடுத்து ஐஸ்க்ரீம் பவுலில் வைத்து, மேலே அலங்கரிக்க வைத்துள்ள நட்ஸ் தூவிப் பரிமாறவும்.சேவரி அவகாடோ பேன்கேக்
தேவையானவை:
கோதுமை மாவு - ஒன்றரை கப்
மைதா மாவு - கால் கப்
அவகாடோ விழுது - ஒரு கப்
கேரட் துருவல் - அரை கப்
பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
மோர் - 2 கப்
மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்
பேக்கிங் சோடா – அரை டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு வெங்காயம், கேரட், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி இறக்கி ஆறவிடவும். கோதுமை மாவுடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் அவகாடோ விழுது, வதக்கிய கலவை, மோர் சேர்த்து நன்கு கெட்டியாகக் கலக்கவும். தோசைக்கல்லைக் காயவிட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, மாவைச் சிறிய தோசைகளாக ஊற்றிச் சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.க்ரீன் டிடோக்ஸ் ஸ்மூத்தி
தேவையானவை:
அவகாடோ - பாதியளவு
வெள்ளரிக்காய் - பாதியளவு (தோலுரித்து, துண்டுகளாக்கவும்)
பாலக்கீரை - அரை கப்
தோல் சீவிய இஞ்சி - அரை இன்ச் துண்டு
நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்
ஆளிவிதை (Flaxseeds) பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
வறுத்த சீரகத்தூள், மிளகுத்தூள் - தலா அரை டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
ஐஸ் க்யூப்ஸ் - சிறிதளவு
குளிர்ந்த தண்ணீர் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அவகாடோவின் சதைப்பகுதியுடன் வெள்ளரிக்காய், பாலக்கீரை, இஞ்சி, கொத்தமல்லித்தழை, ஆளிவிதைப் பொடி, உப்பு, சீரகத்தூள், மிளகுத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அதனுடன் எலுமிச்சைச் சாறு, குளிர்ந்த தண்ணீர், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று அடித்து எடுத்து, டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்.அவகாடோ ஸ்வீட் லஸ்ஸி
தேவையானவை:
அவகாடோ - ஒன்று (தோல், கொட்டை நீக்கி, சதைப்பகுதியை எடுக்கவும்)
சர்க்கரை - 5 டேபிள்ஸ்பூன்
காய்ச்சி ஆறவிட்டு, குளிரவைத்த பால் - ஒரு கப்
குளிர்ந்த நீர் - ஒரு கப்
ஐஸ் க்யூப்ஸ் - சிறிதளவு
செய்முறை:
அவகாடோ சதைப்பகுதியுடன் சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அதனுடன் பால், குளிர்ந்த நீர், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து மீண்டும் ஒரு சுற்று அடித்து, டம்ளரில் ஊற்றிப் பரிமாறவும்.அவகாடோ கேசடியா
தேவையானவை - மேல் மாவு செய்ய:
மைதா மாவு - 2 கப்
உப்பு - தேவையான அளவு
ஸ்டஃபிங்க் செய்ய:
அவகாடோ - ஒன்று (தோல் சீவி, கொட்டை நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கவும்)
உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் - தலா ஒன்று (தோல் சீவி, துண்டுகளாக்கவும்)
வேகவைத்த ராஜ்மா - கால் கப்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
மோசரெல்லா சீஸ் துருவல் - அரை கப்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
டொமேட்டோ கெட்சப் - 3 டீஸ்பூன்
மயோனைஸ் - 3 டீஸ்பூன்
புதினா சட்னி - 3 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புதினா சட்னி செய்ய:
புதினா - கால் கட்டு
கொத்தமல்லித்தழை - ஒரு கட்டு
பச்சை மிளகாய் - 2
க்ரீம் சீஸ் (அ) தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:புதினாவுடன் கொத்தமல்லித்தழை, சீரகத்தூள், பச்சை மிளகாய் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர் தெளித்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். அதனுடன் உப்பு, க்ரீம் சீஸ் அல்லது தயிரைச் சேர்த்து, மீண்டும் சட்னி பதத்துக்கு அரைத்தெடுக்கவும். இதுவே புதினா சட்னி. மைதா மாவுடன் உப்பு, சிறிதளவு நீர் சேர்த்துச் சப்பாத்தி மாவுப் பதத்துக்குப் பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும். மயோனைஸுடன் டொமேட்டோ கெட்சப் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பிசைந்த மாவைச் சிறிய உருண்டைகளாக்கி மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி எண்ணெய்விட்டு, தேய்த்த சப்பாத்திகளைப் போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். காய்கறிகளுடன் உப்பு சேர்த்து வேகவிடவும். உருளைக்கிழங்கை நன்றாக மசிக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், வேவைத்த ராஜ்மா, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். ஒரு சப்பாத்தியின் மீது 2 டேபிள்ஸ்பூன் புதினா சட்னி தடவவும். மற்றொரு சப்பாத்தியின் மீது 2 டேபிள்ஸ்பூன் கெட்சப் கலவையைப் பரப்பவும். அதன் மீது தேவையான அளவு வேகவைத்த காய்கறி கலவை, அவகாடோ துண்டுகள் வைத்து, மேலே சிறிதளவு சீஸ் துருவலை தூவவும். இதன் மீது புதினா தடவிய சப்பாத்தியை வைத்து மூடவும். அதன் மேலே சிறிதளவு வெண்ணெய் தடவவும். இதை கிரில் செய்து டூபிக்கால் குத்திப் பரிமாறவும்.குயாகாமோல்
தேவையானவை:
நன்கு பழுத்த அவகாடோ - ஒன்று (தோல், கொட்டை நீக்கி, சதைப்பகுதியை எடுக்கவும்)
எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:அவகாடோ சதைப்பகுதியைக் கரண்டியால் நன்கு மசிக்கவும். அதனுடன் உப்பு, எலுமிச்சைச் சாறு, வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலக்கவும். இதனை சப்பாத்தி, பிரெட் உடன் பரிமாறவும்.
அவகாடோ கேசரி
தேவையானவை:
ரவை - அரை கப்
அவகாடோ விழுது - ஒரு கப்
சர்க்கரை - ஒன்றேகால் கப்
வெந்நீர் - ஒன்றரை கப்
பச்சை ஃபுட் கலர் - கால் டீஸ்பூன்
டூட்டி ஃப்ரூட்டி - 2 டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
நெய் - கால் கப்
செய்முறை:
தண்ணீரை நன்கு கொதிக்கவிடவும். அடிகனமான பாத்திரத்தில் நெய்விட்டுச் சூடாக்கி, ரவையைச் சேர்த்து வறுக்கவும். பிறகு அடுப்பை சிறு தீயில் வைத்து, வெந்நீர் ஊற்றிக் கிளறவும். அதனுடன் அவகாடோ விழுது சேர்த்துக் கட்டிகள் இல்லாமல் கிளறி வேகவிடவும். பிறகு சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பச்சை ஃபுட் கலர் சேர்த்துக் கிளறவும். அவகாடோ கேசரி வெந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது டூட்டி ஃப்ரூட்டி தூவிக் கிளறி இறக்கவும். -
ரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர்
கே.என்.சிவராமன் - 16
ஓவியம்: ஸ்யாம்
வாளைச் சுழற்றியபடியே தன் புரவியை சிவகாமி திருப்பினாள். அவளுக்குப் பக்கவாட்டில் இருந்த குதிரையின் மீது முண்டமாக ஒருவன் சாய்ந்தான்... தரையில் விழுந்தான். கழுத்திலிருந்து பெருகிய குருதி புற் களைச் சிவப்பாக்கியது.அவனைத் தொடர்ந்து வந்த நான்கு வீரர்களை சில கணங்களில் கரிகாலன் செயலிழக்க வைத்து விரட்டினான். ஆயுதங்களைப் பறிகொடுத்து தலைதெறிக்க அவர்கள் குதிரைகளில் பறப்பதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.இருவரும் தத்தம் புரவிகளில் அமர்ந்தபடி வட்டமாகச் சுற்றினார்கள். சருகுகள் மிதிபடும் ஓசையைத் தவிர அமைதியே அங்கு நிலவியது. பறவைகள் ஏதும் சடசடவென மிரண்டு பறக்கவில்லை. கரிகாலன் புன்னகையுடன் சிவகாமியை ஏறிட்டான். ‘‘நளினமும் ரவுத்திரமும் உன் வாள் வீச்சில் தெரிகிறது!’’‘‘பெருமை எல்லாம் கற்றுத் தந்த ஆசானுக்குப் போய்ச் சேர வேண்டும்...’’ பதிலளித்த சிவகாமியின் குரலிலும் முகத்திலும் ஒருசேர கடுமை பரவியது.
கொதிப்பவளை ஆற்றுப்படுத்த புரவியுடன் நெருங்க முற்பட்டான். ஆமாம், முயன்றான். அதற்குள் அவனைச் சுமந்த குதிரையும் சிவகாமி அமர்ந்திருந்த புரவியும் ஒருசேர தலையை உயர்த்தி கனைத்தன.இருவருக்கும் வரும் சிக்கல் புரிந்தது. அவர்களது புரவிகள் அதை உணர்த்தின. தங்களுக்கு வரும் ஆபத்தை மட்டுமல்ல, பருவநிலை மாற்றங்களையும் தாவரங்களாலும் விலங்குகளாலும் உணர முடியும். தங்கள் ‘சகஹிருதயர்களுக்கு’ அவற்றைத் தெரிவிக்கவும் முடியும்.படைப்பின் ரகசியம் இது. இத்தனைக்கும் தாவரங்களின் வேர்கள் தனித்தனிதான். இரு மரங்கள் போதுமான இடைவெளிவிட்டு ஒன்றை ஒன்று தொடாமல், நெருங்காமல் வளர்ந்திருக்கும்தான். என்றாலும் ஒரு மரம் வெட்டப்படும்போது, தனக்கு வந்திருக்கும் ஆபத்தை குறிப்பிட்ட தொலைவு வரை வளர்ந்திருக்கும் அனைத்து மரங்களுக்கும் அது அறிவிக்கும். அதுநாள்வரை, தான் சேமித்து வைத்திருந்த சக்திகளை உடனே மற்றவற்றுக்கு கடத்தும். அவற்றைத் தப்பிக்கச் சொல்லி செய்தி அனுப்பும்.
இதே தன்மை விலங்குகளுக்கும் உண்டு. குறிப்பாக, மனிதர்களால் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு. இவை தங்களுக்கு வரும் ஆபத்தை மட்டுமல்ல... தங்கள் எஜமானர்களுக்கு வரும் சிக்கல்களையும் முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்கும். போலவே, தங்களைப் போன்ற சக விலங்குகளுக்கு ஓர் ஆபத்து அல்லது நோய் என்றால் அதை முதன்முதலில் உணர்பவையும் இவைதான்.கரிகாலனும் சிவகாமியும் அமர்ந்திருந்த புரவிகள் அந்த நேரத்தில் கனைத்தது இதன் ஒருபகுதிதான். இருவருமே அசுவசாஸ்திரிகளாக இருந்ததால் குதிரைகளின் மொழி அவர்களுக்குப் புரிந்தது. எனவே, வருவது ஆபத்தல்ல... மாறாக, ஏதோ ஒரு புரவிக்கு சிக்கல் எழுந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு இறங்கினார்கள். தங்கள் வாட்களை இடுப்பில் சொருகிக் கொண்டார்கள். உன்னிப்பாகத் தங்களைச் சுற்றிலும் நோட்டமிட்டார்கள்.
கணங்கள் கடந்தன. அவர்கள் ஏறி வந்த புரவிகள் நிலைகொள்ளாமல் தவித்தன. எட்டு கால்களையும் முன்னும் பின்னுமாக நகர்த்தின. கனைப்பின் வேகம் அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்தன.கரிகாலனும் சிவகாமியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘‘இரு... என்னவென்று பார்த்து வருகிறேன்!’’ அவளிடம் சொல்லி விட்டு அடர்ந்த வனத்துக்குள் அவன் நகர முற்பட்டபோது, எதிரே இருந்த புதர் பக்கம் சலசலப்பு எழுந்தது. இருவரும் தங்கள் பார்வையை அந்தத் திக்கில் பதித்தார்கள். தள்ளாட்டத்துடன் குதிரை ஒன்று மெல்ல மெல்ல இரண்டாள் உயர செடி, கொடிகளை விலக்கியபடி வந்தது. அதன் மீது வயதான ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். வயது அறுபதுக்கு மேல் இருக்கும். மார்பு வரை வெண்மை நிறத் தாடி புரண்டிருந்தது. அதனுடன் போட்டி போடும் வகையில் வெள்ளை நிற தலைக் கேசம்.
அவர் கண்களில் மரணபயம் தென்படவில்லை. ஆனால், தான் அமர்ந்திருக்கும் புரவியின் நிலை அவருக்குப் புரிந்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் தன்னை அது தரையில் தள்ளிவிடலாம் என்பதை உணர்ந்திருந்தார். அக்குறிப்பு அவர் வதனத்தில் நீக்கமற நிறைந்திருந்தது.கண் எதிரே சற்றே வெட்டவெளி தென்படுவதையும், ஆணும் பெண்ணுமாக இருவர் புரவிகளுடன் அங்கிருப்பதையும், இருவரது தோற்றமும் பல்லவர்கள் போல காணப்பட்டதும், அவர்களது இடுப்பிலிருந்த மெல்லிய கூர்மையான வாளும் அந்தப் பெரியவருக்கு நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். கைகளை உயர்த்தி, ‘‘செ - லி நா - லோ - செங் - கியா பா - தோ - பா - மோ...’’ எனக் கத்தினார்.
கரிகாலனும் சிவகாமியும் அதிர்ந்தார்கள். இது ரகசியச் சொல். செ - லி என்றால் ஸ்ரீ. நா - லோ - செங் - கியா என்றால் நரசிம்ம. பா - தோ - பா - மோ என்றால் போத்தவர்மன். மொத்தமாகச் சேர்த்தால் ஸ்ரீநரசிம்ம போத்தவர்மன். இரண்டாம் நரசிம்ம வர்மரான பல்லவ இளவல் ராஜசிம்மரை சீனர்கள் இப்படித்தான் அழைப்பார்கள். இதையேதான் சங்கேதச் சொல்லால் ரகசியங்களைப் பரிமாறிக் கொள்ளவும், பரஸ்பர நம்பிக்கையுடன் பணியாற்றவும் பல்லவ நலம் விரும்பிகள் தங்களுக்குள் உபயோகித்தார்கள். அதனால்தான் கரிகாலனை முதன்முதலில் சந்தித்தபோது சிவகாமி இதையே உச்சரித்தாள். இதற்குக் கட்டுப்பட்டுத்தான் எந்த வினாவும் தொடுக்காமல் அவளுடன் பயணப்படுகிறான்.
அந்தளவுக்கு சக்தி மிக்க அச்சொல்லை புரவியில் அமர்ந்திருந்த பெரியவர் உச்சரித்ததும் கரிகாலனும் சிவகாமியும் தாமதிக்கவில்லை. எந்த மனிதராக இருந்தாலும் ஆபத்துக் காலத்தில் உதவுவது மனிதப் பண்பு என்று நினைக்கும் அவர்கள் இருவரும் தங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தபிறகு சும்மா இருப்பார்களா..?பாய்ந்து சென்று கைத்தாங்கலாய் அப்பெரியவரை இறக்கினார்கள்.‘‘புரவிக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை. திடீரென்று அது தள்ளாட ஆரம்பித்தது...’’ சுட்டிக் காட்டியபடி சொன்ன பெரியவர், ‘முதலில்அதைக் கவனியுங்கள்... பிறகு நாம் உரையாடுவோம்...’ என்பதைக் குறிப்பால் உணர்த்தினார்.ஆனால், பெரியவர் இப்படிச் சொல்வதற்கு முன்பாகவே, அவரைத் தரையில் இறக்கிய கையோடு சிவகாமி அப்புரவியை நெருங்கி யிருந்தாள்.
அடர் மாநிறப் புரவி. மூக்கு வரை தண்ணீருக்குள் மூழ்கி நீரைக் குடிக்கும். பலமான தேகம். அச்சு அசல் சத்திரிய சாதிக் குதிரை என பார்த்ததுமே தெரிந்தது. எனில் பராக்கிரமும் கோபமும் சம அளவில் இதற்கு இருக்கும். எதிரிகளுடன் போர் செய்ய ஏற்றது. தன் எஜமானருக்கு வெற்றியைத் தேடித் தரும் வல்லமை படைத்தது. சத்ருக்களிடம் தன் எஜமானரைச் சிக்க விடாது. ஒருவேளை அகப்படும் சூழல் வந்தால் தன் முன்னங்கால்களை உயர்த்தி எதிரிகளைத் தடுத்து நிறுத்தும். பற்களால் சத்ருக்களின் தேகத்தைக் கடித்துக்குதறும்; துண்டாக்கும். இதுபோன்ற புரவி கிடைப்பது அதிர்ஷ்டம்.
மெல்ல அதைத் தட்டிக் கொடுத்தாள். அதன் நெற்றியைத் தடவி தன் அன்பை சிவகாமி பகிர்ந்துகொண்டாள். ஆரம்பத்தில் முரண்டு பிடித்த புரவி இதன்பிறகு அவளுக்குக் கட்டுப்பட்டது. குழந்தையைப்போல் அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் துணை புரிந்தது.தனக்கு அப்புரவி வசப்பட்டதும் அதன் நாடித் துடிப்பை அறிய முற்பட்டாள். மனிதர்கள் போலவேதான் அசுவங்களும். எப்படி மனிதர்களின் நோய்களை நாடித் துடிப்பின் வழியே கண்டறிகிறோமோ அப்படி புரவிகளுக்கு ஏற்பட்டிருக்கும் வியாதியின் தன்மை அறிய அசுவசாஸ்திரிகள் அதன் நாடியைப் பார்ப்பார்கள். அதாவது குதிரையின் செவி, கண்கள், வாய், அக்குள் ஆகிய நான்கையும் பரிசோதிப்பதுதான் அதற்கு நாடி பார்ப்பது. நகுல சகாதேவர் அருளிய ‘அசுவ சாஸ்திரம்’ பயின்றிருந்த சிவகாமிக்கு இச்சிகிச்சை எல்லாம் தண்ணீர்பட்ட பாடு. தன் பெரு விரலைத்தவிர மற்ற நான்கு விரல்களையும் வரிசையாக ஒன்றாகச் சேர்த்து அப்புரவியின் செவியை மெதுவாக சிவகாமி பார்த்தாள். அப்பகுதி சூடாக இருந்தால் ஜுரம். குளுமையாக இருந்தால் சீதளம். சூடும் குளுமையும் கலந்திருந்தால் நோயும் கலந்திருக்கிறது என்று அர்த்தம்.
கண்களைச் சுருக்கி ஒரு கணம் யோசித்த சிவகாமி, பிறகு குதிரையின் கண்களை விரித்துப் பார்த்தாள். இரத்தம் வெளுத்து தண்ணீர் அங்கு ததும்பிக் கொண்டிருந்தால் புரவிக்கு வெட்டை அதிகரித்து சூடேறியிருக்கிறது என்று பொருள். மாறாக, கண்கள் மஞ்சள் நிறத்திலோ வான நிறத்திலோ கலந்து தோன்றினால் அதற்கு பித்த ஜுரம் என்று அர்த்தம். அதுவே பச்சை இரத்தம் புள்ளியாக விழுந்திருந்தால் ஜன்னி பிடித்திருப்பதாகக் கொள்ளலாம். கண்கள் இரத்தச் சிவப்பாகக் காணப்பட்டால் வாயு அதிகரித்திருக்கிறது என்றும்; கண்கள் சிவந்து கீழ்வயிறும் அண்டமும் வீங்கியிருந்தால் ஜகர்பாத்து உண்டாகி இருக்கிறதென்றும் பொருள்.
இதை ஆராய்ந்துவிட்டு சிவகாமி முழங்காலிட்டு புரவியின் வாய் பக்கம் வந்தாள். உதடு வெளுத்து பச்சை நரம்புகள் விம்மி கால்களில் எந்த ஓரு அசைவுமில்லாமல் நீண்டு கண்களில் நீர் இருந்தால் ஜவுகீறா பிறந்திருப்பதாகவும்; வயிறு வீங்கி மலசலங் கட்டுப்பட்டுப் படுப்பதும் எழுந்திருப்பதுமாக இருந்தால் பர்கீறா பிறந்திருப்பதாகவும்; தாகம் அதிகரித்து கொள்ளும் புல்லும் கொஞ்சமாகத் தின்று பெருமூச்செறிந்தால் ஆப்கீறா பிறந்திருக்கிறது என்றும்; தேகம் முழுவதும் சூடேறி மார்பு கனத்து புற்களைத் தின்னாமல் கண்களில் நீர் ததும்பிக் கொண்டு தலையைக் கீழே போட்டுவிடுமானால் குளுமை பிறந்திருக்கிறது என்றும் உணர வேண்டும் என்கிறது ‘அசுவ சாஸ்திரம்’.
அந்த வெட்ட வெளியில் தண்ணீருக்கும் கொள்ளுக்கும் வாய்ப்பில்லை. ஆனால், புற்கள் நிறைந்திருக்கின்றன. அதைக் கொண்டு அப்புரவிக்கு வந்திருக்கும் நோயின் தன்மையை அறிய முற்பட்ட சிவகாமி இறுதியாக அக்குள் பக்கம் வந்தாள்.இதற்காக கிட்டத்தட்ட தரையில் படுத்து அக்குதிரையின் முன்னங்கால் இடுக்கை நெருங்கி அதன் துடிப்பைக் கண்காணித்தாள். மெலிந்து மெதுவாகத் துடித்தால் குளிர்மை; வேகமாக துடித்தால் சூடு. இரண்டு முன்னங்கால் இடுக்கிலும் - அக்குளிலும் - மெலிந்து மெதுவாகத் துடித்தால் அதிக குளிர்மை; இரு அக்குளிலும் வேகமாகத் துடித்தால் அதிக சூடு. நடக்கவே முடியாமல் புரவி தள்ளாடும்...தெளிவுடன் லாவகமாகப் படுத்தவாறே அசைந்து குதிரைக்கு வெளியே வந்த சிவகாமி எழுந்து நின்றாள். ‘‘குணப்படுத்தி விடலாம்... ஒன்றும் பிரச்னையில்லை...’’ என்று சொன்னபடியே தன் பின்னால் திரும்பி கரிகாலனையும் அப்பெரியவரையும் பார்த்த சிவகாமி அதிர்ந்தாள்.காரணம், கரிகாலனின் பார்வை அந்தப் பெரியவரின் இடுப்பில் பதிந்திருந்தது. அங்கு வாள் ஒன்றை பெரியவர் சொருகியிருந்தார். அந்த வாள், சற்று முன்னர் சுரங்கத்தில் அவர்கள் பார்த்த நாக விஷம் தோய்ந்த வாட்களில் ஒன்று!
(தொடரும்)http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14128&id1=6&issue=20180831
-
-
-
சுவரொட்டி கறி பிரட்டல்
அ-அ+ஆட்டு மண்ணீரலில் (சுவரொட்டி) அதிகளவு இரும்புசத்து நிறைந்துள்ளது. இன்று இந்த சுவரொட்டி கறி பிரட்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஆட்டு சுவரொட்டி - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 150 கிராம்
பச்சை மிளகாய் - 2
அரைக்க
தேங்காய் - 2 துண்டு
மிளகு - இரண்டு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டிநல்லெண்ணெய் - தேவைக்கு
செய்முறை :
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
ஆட்டு சுவரொட்டியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெயை சற்று தூக்கலாக விட்டு சூடானதும் சுத்தம் செய்த ஆட்டு சுவரொட்டியை போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு பொதியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து லேசாக தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
சிறிது வாசம் வந்ததும் அரைத்த தேங்காய் விழுதுகளைச் சேர்த்து பச்சை வாசம் போனபிறகு இறக்கி பரிமாறவும்.
சூப்பரான சுவரொட்டி கறி பிரட்டல் ரெடி. -
ரத்த மகுடம்
பிரமாண்டமான சரித்திரத் தொடர் - 15
அந்த இடத்திலேயே ஸ்ரீ ராமபுண்ய வல்லபர் மடிந்தார் என்றுதான் அதுவரை நடந்ததை எல்லாம் திகைப்புடன் பார்த்துக்கொண்டிருந்த ஹிரண்ய வர்மர் நினைத்தார்.கனல் கக்கும் கண்களுடன் வாளை உயர்த்தியபடி சாளுக்கிய போர் அமைச்சரை சிவகாமி நெருங்கியதை யார் கண்டாலும் அப்படிப்பட்ட முடிவுக்குத்தான் வருவார்கள்.ஆனால், உயர்த்திய வாளை ஸ்ரீ ராமபுண்ய வல்லபரின் மார்பிலோ தலையிலோ சிவகாமி இறக்கவில்லை. மாறாக, அவரது பின்னால் நின்றபடி தன் வாளின் நுனியை அவர் கழுத்தில் பதித்தாள். கணத்துக்கும் குறைவான நேரம் கரிகாலனின் நயனங்களைச் சந்தித்தாள்.
அதில் வெளிப்பட்ட செய்தி கரிகாலனுக்கு நன்றாகவே புரிந்தது. ‘கடந்த காலங்களில் எடுத்ததற்கெல்லாம் எதிராளியை வெட்ட முற்பட்டதுபோல் இம்முறை செய்யமாட்டேன். என்னைத் தடுத்து நிறுத்தும் பணியையும் உங்களுக்கு வழங்க மாட்டேன்...’‘‘ஆண்களுக்கு இன்பம் அளிக்க மட்டுமே பெண்கள் படைக்கப்படவில்லை என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்...’’ ஸ்ரீ ராமபுண்ய வல்லபரிடம் நிதானமாகச் சொன்னாள் சிவகாமி. ‘‘ஒட்டுமொத்தமாக பெண்களைத் தரக்குறைவாக நீங்கள் பேசியதாகத் தென்பட்டாலும் அது முழுக்க முழுக்க என்னைக் குறி வைத்தது என்பது பிறக்கவிருக்கும் சிசுவுக்கும் தெரியும். என்றாலும் உங்களை மரியாதையாக அழைக்கவும் நடத்தவுமே விரும்புகிறேன்!
வயது மட்டுமே அதற்குக் காரணமல்ல. ஒரு தேசத்தின் அமைச்சர் பொறுப்பில் நீங்கள் இருப்பதே பிரதான காரணம். நீங்கள் வகிக்கும் பதவிக்கு உரிய மரியாதையை அளிக்கவேண்டியது பல்லவ மன்னரின் மகளாக நடத்தப்படும் இந்தப் ‘பெண்ணின்’ கடமை. அதிலிருந்து நழுவுவது பல்லவ நாட்டையே அவமதிப்பதற்குச் சமம். ஒருபோதும் அப்படிப்பட்ட செயலில் இறங்க மாட்டேன்...’’அழுத்தம்திருத்தமாகச் சொன்ன சிவகாமி, கடைசி வாக்கியத்தை உச்சரிக்கும்போது கரிகாலனை நோக்கினாள். இது தனக்காகச் சொல்லப்பட்டது என்பதை அவனும் உணர்ந்தான். ‘என்னைக் குறித்து யார் என்ன சொன்னாலும் நம்ப வேண்டாம். பல்லவ நாட்டுக்கு ஒருபோதும் நான் துரோகம் இழைக்க மாட்டேன்...’
‘‘அளிக்கும் மரியாதையை ஏற்று நீங்கள் அமைதியாக இருப்பீர்கள் என நம்புகிறோம். மாறாக ஏதேனும் செய்ய முற்பட்டால் நாக விஷம் தோய்ந்த இந்த வாள்...’’ வாக்கியத்தை முடிக்காமல் ஸ்ரீ ராமபுண்ய வல்லபரின் தொண்டைக் குழியைத் தடவினாள்.அங்கிருந்த அனைவருக்குமே நிலைமை புரிந்தது. குறிப்பாக சாளுக்கிய போர் அமைச்சருக்கு. உடன் வந்த வீரர்களில் ஒருவர் கூட தன்னைக் காப்பாற்றும் நிலையில் இல்லை என்பதை உணர அவருக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. என்றாலும் ஒரு நம்பிக்கை இருந்தது. அது புன்முறுவலாகவும் வெளிப்பட்டது.
கரிகாலனின் கருவிழிகளில் மிதந்த அக்காட்சியை ஸ்ரீ ராமபுண்ய வல்லபரின் பின்னால் நின்றிருந்த சிவகாமி கண்டாள். ஏளனச் சிரிப்பு அவள் முகத்தில் பூத்தது. இதன்பிறகு நடந்தது சாளுக்கிய போர் அமைச்சர் கனவிலும் நினைத்துப் பார்க்காதது.சிவகாமியின் ஒரு கரத்தில் இருந்த வாள், அவரது கழுத்தைத் தடவிக் கொண்டிருக்க... மறுகரத்தை இமைக்கும் பொழுதில் சாளுக்கிய போர் அமைச்சரின் இடுப்புக்கு கொண்டு வந்தாள். வேட்டியின் மடிப்பில் பதுங்கியிருந்த மூங்கில் குழலை லாவகமாக எடுத்து ஊதினாள்.மறுகணம் நூறுக்கும் மேற்பட்ட வராகங்கள் ஒருசேர குரல் கொடுப்பது போன்ற ஒலி பிறந்தது.
இதனைத் தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட சாளுக்கிய வீரர்கள் ஈட்டிகளுடன் சுரங்கத்துக்குள் இறங்கினார்கள். கண் முன் விரிந்த காட்சியைக் கண்டு திகைத்து நின்றார்கள்!மாகாளியாக வாய்விட்டுச் சிரித்தாள் சிவகாமி. ‘‘நிச்சயம் வெளியில் கொஞ்சம் ஆட்களை நிறுத்தி வைத்திருப்பீர்கள் என்பதை ஊகித்தேன். எந்த போர் அமைச்சரும், தான் அழைத்து வரும் வீரர்களை பகுதி பகுதியாகப் பிரித்தே எதிரிகளைச் சுற்றி வளைக்க முற்படுவார் என்பது யுத்த தந்திரத்தின் பால பாடம். நீங்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?!பதுங்கி இருக்கும் வீரர்களை நீங்கள் அழைக்கும் விதம் என்னவாக இருக்கும் என்பதை அறியவேண்டிய அவசியமே இல்லை. ஏனெனில் ஒரு மூங்கில் குழாயை எடுத்து ஊதுவதுதான் சாளுக்கிய வீரர்களுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம் என்பதை புலவர் தண்டி ஏற்கனவே சொல்லியிருக்கிறார்!’’
அலட்சியத்துடன் முன்னால் நின்ற சாளுக்கிய வீரர்களைப் பார்த்தாள். ‘‘கட்டளையிட்டால்தான் செய்வீர்களா? கையிலிருக்கும் ஈட்டிகளைத் தரையில் போடுங்கள். சிறிய தந்தையே... சுரங்கத்தின் ஈசான்ய மூலையில் கொடிகள் படர்ந்திருக்கின்றன. அக்கொடிகளை வெட்டி இந்த ஈட்டிகளை ஒன்றாகக் கட்டுங்கள். மீதிக் கொடியைக் கொண்டு இந்த வீரர்களின் கால்களைப் பிணையுங்கள்...’’கரிகாலனின் பார்வை சமிக்ஞையை ஏற்று சிவகாமியின் கட்டளையை ஹிரண்ய வர்மர் நிறைவேற்றினார்.இதற்குள் ஸ்ரீ ராமபுண்ய வல்லபரின் தோளில் இருந்த அங்கவஸ்திரத்தை எடுத்து சிவகாமி அவரது கைகளைப் பின்புறமாகக் கட்டினாள். இடுப்பு வேட்டி அவிழாமல் இருக்க அவர் கட்டியிருந்த சிறிய வஸ்திரத்தை அவிழ்த்து அவர் வாயில் அடைத்தவள், எல்லாவற்றையும் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்த கரிகாலனை நெருங்கினாள். அவளும் எதுவும் பேசவில்லை. அவனும் உரையாடலைத் தொடங்கவில்லை. இருவரது கண்களும் பல்வேறு விஷயங்களை அலசின; ஆராய்ந்தன.
கனைப்புச் சத்தம் கேட்டு இருவரும் திரும்பினார்கள். ஹிரண்ய வர்மர் தன் பணியை முடித்திருந்தார்.அதுவரை அமைதியாக இருந்த கரிகாலன் இம்முறை அதைக் கலைத்தான். ‘‘பல்லவ நாட்டுக்கு மிகப்பெரிய உதவியைச் செய்திருக்கிறீர்கள். இதற்காக ஒவ்வொரு பல்லவ வீரனும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறான். இந்த ஆயுதங்களைப் பெற்று உரிய இடத்துக்குக் கொண்டு செல்லும் பொறுப்பை புலவர் தண்டி எங்களிடம் ஒப்படைக்கவில்லை. உங்களிடம் அவர் அப்படிக் கூறியிருந்தாலும் எங்களுக்கு இடப்பட்ட கட்டளை வேறு. அதை நிறைவேற்ற நாங்கள் புறப்படுகிறோம். எப்படியும் இன்னும் சிறிது நேரத்தில் புலவரால் அனுப்பப்பட்டவர்கள் இங்கு வருவார்கள். அவர்களிடம் ஆயுதங்களை நீங்கள் ஒப்படைக்கலாம்...’’‘‘நல்லது கரிகாலா! இவர்களை என்ன செய்வது?’’
‘‘எதுவும் செய்ய வேண்டாம் மன்னா! ஆயுதங்கள் அப்புறப்படுத்தப்பட்டதும் சுரங்கத்தை மூடாமல் சென்று விடுங்கள். எப்படியும் சாளுக்கிய போர் அமைச்சரைத் தேடி வீரர்கள் வருவார்கள். அவர்கள் இவர்களைக் காப்பாற்றி அழைத்துச் செல்வார்கள்...’’சொன்ன கரிகாலன் ஹிரண்ய வர்மரை நெருங்கி வணங்கினான்.அவனை அள்ளி அணைத்தவர், சிவகாமியைப் பார்த்தபடி அவனிடம் சொன்னார். ‘‘வெற்றி மங்கை எப்போதும் உன் பக்கத்தில் இருக்கிறாள். செல்லும் காரியம் மட்டுமல்ல... செய்யப் போகும் காரியங்களிலும் ஜெயம் உனக்கே..!’’
தலையசைத்துவிட்டு கரிகாலன் தள்ளி நின்றான். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக தன் சிறிய தந்தையின் காலைத் தொட்டு சிவகாமி நமஸ்கரித்தாள்.அவளது தோள்களைத் தொட்டு ஹிரண்ய வர்மர் எழுப்பினார். ‘‘ஸ்ரீ சக்கர நாயகியை உன் உருவில் காண்கிறேன் சிவகாமி! ஆண்கள் கூட துணிந்து செய்யத் தயங்கும் விஷயங்களை அநாவசியமாகச் செய்கிறாய். உன்னைப் போன்ற வீராங்கனைகள் இருக்கும் வரை பல்லவ நாடு யாரிடமும் அடிமைப்பட்டு விடாது. சென்று வென்று வா...’’
இருவருக்கும் விடைகொடுத்தபோது அவரையும் அறியாமல் அவர் கண்கள் கலங்கின.கட்டப்பட்ட நிலையில் இருந்த சாளுக்கிய போர் அமைச்சரிடம் கரிகாலன் சென்றான். ‘‘உங்கள் வீரர்களை அழித்ததும், உங்களுக்குப் பாதுகாப்பாக வந்தவர்களை இப்படிக் கட்டி உருட்டியதும் நானல்ல. வீரர் கூட்டமும் அல்ல. மாறாக, ‘ஆண்களுக்கு இன்பம் அளிக்கத்தானே பெண்களைப் படைத்திருக்கிறான்..?’ என உங்களால் ஏளனமாகச் சுட்டப்பட்ட ஒரு பெண்தான் மகத்தான் இந்தச் செயலை தன்னந்தனியாகச் செய்திருக்கிறாள்! இதுதான் பல்லவ வீரம். இதுதான் தமிழகப் பெண்களின் உரம். மீண்டும் நாம் யுத்தகளத்தில் சந்திப்போம்!’’ சொல்லிவிட்டு விடுவிடுவென்று வெளியேறினான்.
சிவகாமி எதுவும் சொல்லாமல் இரு வாட்களை எடுத்துக் கொண்டு ஸ்ரீ ராமபுண்ய வல்லபருக்கு ஒரு புன்னகையை மட்டும் பரிசாக வழங்கிவிட்டு கரிகாலனைத் தொடர்ந்தாள்.இருவரும் சுரங்கத்தை விட்டு வெளியே வந்தார்கள். ஒரு வாளை அவனிடம் கொடுத்தாள். பெற்று தன் இடுப்பில் அதைக் கட்டிக் கொண்ட கரிகாலன் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு தன் உதட்டைக் குவித்து விநோதமான ஒலி ஒன்றை எழுப்பினான். இரு புரவிகள் புதர்களை விலக்கிவிட்டு அவர்கள் அருகில் வந்தன.இருவருமே தத்தம் குதிரைகளை நெருங்கினார்கள். ஏறவில்லை. மாறாக அதன் நெற்றியை முத்தமிட்டார்கள். இடுப்பைத் தடவிக் கொடுத்தார்கள். கால்களைப் பிடித்துவிட்டார்கள்.
புரவிகள் இரண்டும் கூச்சத்தில் நெளிந்து அவர்களது கன்னங்களைத் தடவி தங்கள் அன்பை வெளிப்படுத்தின.அதன்பிறகு இருவரும் தாமதிக்கவில்லை. தாவி தத்தம் புரவிகளில் ஏறினார்கள்.‘‘வட திசையா?’’ சிவகாமி கேட்டாள்.கரிகாலன் பதிலொன்றும் சொல்லவில்லை.‘‘நம்பிக்கை இல்லையென்றால் சொல்ல வேண்டாம். முன்னால் செல்லுங்கள். பின்னால் வருகிறேன்!’’‘‘வடமேற்குத் திசை!’’ சட்டென்று கரிகாலன் பதிலளித்தான்.‘‘நல்லது! முன்னால் செல்கிறேன். பின்தொடர்ந்து வாருங்கள். என்னைக் கண்காணிக்கவும் வசதியாக இருக்கும்!’’ சொன்ன சிவகாமி குனிந்து அசுவத்தின் செவியில் எதையோ முணுமுணுத்தாள். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக அதுவும் தன் பிடரியைக் குலுக்கியது.நிதானமான வேகத்துடன் இரு அசுவசாஸ்திரிகளும் ஒருவர் பின் ஒருவராகப் பறந்தார்கள்.
புரவியிடம் தென்பட்ட நிதானம் சிவகாமியின் உள்ளத்தில் இல்லை. மனமென்னும் அக்னிக் குஞ்சில் அவள் தேகம் தகித்துக் கொண்டிருந்தது. கரிகாலன் இன்னமும் தன்னை நம்பவில்லை என்ற உண்மை அவளை எரித்து எரித்துச் சாம்பலாக்கியது. எந்தவொரு பெண்ணும் நம்பிக்கைக்குரிய ஆணிடம்தான் தன்னையே ஒப்படைப்பாள். வாழ்க்கைச் சூழல் காரணமாக பரத்தைத் தொழிலை மேற்கொள்பவளாக அவள் இருந்தாலும் அவளது நேசத்துக்கு உரியவன் என ஒருவன் இருப்பான். அவனிடம் மட்டுமே அவளால் பூரணமாக ஒன்ற முடியும்.அப்படியொரு தருணம் தங்கள் இருவரது வாழ்க்கையிலும் வந்து போயிருக்கிறது. ஹிரண்ய வர்மர் மட்டும் வராமல் இருந்திருந்தால் கரை உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்திருக்கும்.
இதை கரிகாலன் உணரவில்லை என்றாலும் அவன் தேகம் புரிந்து கொண்டிருக்கும். பூரணத்தை உணரும் சக்தியற்றதா அவன் உடல்..? அப்படியிருந்தும் சந்தேகத்தின் மேகம் அவனைச் சூழ்ந்திருக்கிறதே...நினைக்க நினைக்க பிரளயகாலத்தின் அலைகளாக அவள் மனம் சீறியது. இந்த ஆவேசம்தான் சற்று முன் சுரங்கத்தில் ருத்ர தாண்டவம் நடத்தியது. அப்படியும் அடங்காமல் இப்போதும் பொங்குகிறது. ஓர் அணைப்பு... ‘பரிபூரணமாக உன்னை நம்புகிறேன்...’ என்பதை வெளிக்காட்டும் பார்வை... போதும். பிரளயம் அடங்கிவிடும். ஆனால், நடக்குமா..?சிவகாமி நினைத்து முடிப்பதற்குள் கரிகாலனின் புரவி அவளை அணைத்தாற்போல் மறித்து நின்றது.பரவசத்துடன் அவனை ஏறிட்டாள். எதிர்பார்த்தது எதிரில் இருந்த நயனங்களில் வழியவில்லை. ஏமாற்றம் மூர்க்கத்தை அதிகரித்தது. தன் கால்களால் குதிரையைத் தட்டி முன்செல்ல கட்டளையிட்டாள்.
‘‘பொறு...’’ அவளுக்கு மட்டும் கேட்கும் விதத்தில் முணுமுணுத்த கரிகாலன், அவள் புரவியின் கடிவாளத்தைப் பிடித்து இழுத்தான்.‘என்ன..?’’பதில் சொல்லாமல் அண்ணாந்து பார்த்தான்.சிவகாமியின் பார்வையும் மேல்நோக்கிச் சென்றது.பறவைகள் படபடப்புடன் கிறீச்சிட்டபடி அங்கும் இங்கும் பறந்தன.சட்டென சிவகாமிக்கு விபரீதம் புரிந்தது. இடுப்பிலிருந்து வாளை உருவினாள்.ஜாடை மூலம் அவளை முன்னால் செல்லும்படி கரிகாலன் செய்கை செய்தான்.முன்பு போலவே அதே நிதானத்துடன் தன் குதிரையைச் செலுத்தினாள். கருவிழிகளில் எச்சரிக்கை குடிகொண்டது. சருகுகளை மிதித்தபடி கரிகாலன் அமர்ந்திருக்கும் புரவியின் குளம்போசையைக் கேட்டாள். மெல்ல மெல்ல குளம்புகளின் ஒலி அதிகரித்தது. எனில், நான்குக்கும் மேற்பட்ட புரவிகள் தங்களைப் பின்தொடர்கின்றன. கணக்கிட்ட சிவகாமி, தான் அமர்ந்திருக்கும் புரவியின் பிடரி ரோமம் கொஞ்சம் கொஞ்சமாகக் குத்திட்டு நிற்பதைக் கண்டாள்.அடுத்த கணம், தன் வாளை வலதும் இடதுமாகச் சுழற்றினாள்.சாளுக்கிய வீரன் ஒருவன் வெட்டுப்பட்ட தலையுடன் அந்தரத்தில் பறந்தான்!
(தொடரும்)
- கே.என்.சிவராமன்http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14114&id1=6&issue=20180824
சமையல் செய்முறைகள் சில
in நாவூற வாயூற
Posted
அருமையான வறுத்த மீன் குருமா
சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், இடியாப்பம், இட்லிக்கு தொட்டுக்கொள்ள இந்த வறுத்த மீன் குருமா அருமையாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மீன் துண்டுகள் - அரை கிலோ (முள் இல்லாத மீன்)
பச்சை மிளகாய் - 3
வெங்காயம் - 1
தக்காளி - 2
கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - அரை டீஸ்பூன்
பட்டை - மிகச் சிறிய துண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 +1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் - 2-3 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு.
அரைக்க....
தேங்காய்த் துருவல் - 5 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
மீன் துண்டுகளை சுத்தமாக கழுவி துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
மீனுடன் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் அரை டீஸ்பூன், தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்து வரும் பொழுது மீன் போட்டு பொரித்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விடவும், சோம்பு பட்டை போட்டு தாளித்த பின்னர் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளி, சிறிது உப்பு சேர்த்து மூடி போட்டு சிறிது வதங்க விடவும். தக்காளி நன்கு வதங்கிய பின்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து நன்கு ஒரு சேர வதக்கவும்.
அடுத்து அதில் ஒன்னரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
அடுத்து அதில் வறுத்து வைத்துள்ள மீன் துண்டுகளை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி, புதினா சேர்த்து இறக்கவும்.
வறுத்த மீன் குருமா ரெடி.
இந்த குருமாவிற்கு முள் அதிகமில்லாத மீன் துண்டுகள் சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். சீலா, வாவல், பாறை மீன் பொருத்தமாக இருக்கும்.
https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/09/27151812/1194156/fried-fish-korma.vpf