Jump to content

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
 • Content Count

  85,545
 • Joined

 • Last visited

 • Days Won

  480

Posts posted by நவீனன்

 1. உடல் எனும் இயந்திரம் 40: உயிர் எங்கே இருக்கிறது?

   

   
  Desktopjpg

  ‘நினைவாற்றல்’ என்பது மூளை செய்யும் விந்தை; சரியாகப் புலப்படாத புதிர்! இன்னும் இது குறித்து நாம் முழுமையாக அறியவில்லை. இதுவரை தெரிந்தவரை, பெரும்பாலான நினைவுகள் பெருமூளையில்தான் பதிவாகின்றன. அதற்குத் துணைபுரிய ஹிப்போகாம்பஸ், அமிக்டாலா அடங்கிய ‘லிம்பிக் சிஸ்டம்’ என்ற அமைப்பும் மூளையில் உள்ளது. நினைவாற்றலுக்கும் அறிவாற்றலுக்கும் ஆதாரமாக இருப்பது இதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

  நினைவாற்றலில் ‘குறுகிய கால நினைவாற்றல்’ (Short term memory), ‘நீண்ட நாள் நினைவாற்றல்’ (Long term memory), ‘திறமை சார்ந்த நினைவாற்றல்’ (Skill memory) என மூன்று விதம் உண்டு. நம் புலன்களிலிருந்து வரும் செய்திகளை லிம்பிக் சிஸ்டம் வரவேற்று, பெருமூளையின் முன்பகுதிக்கு அனுப்புகிறது. அந்தச் செய்திகளைப் பெருமூளை ஒலியாகவோ, காட்சியாகவோ, உணர்வாகவோ தற்காலிகமாகச் சேமித்துக்கொள்கிறது.

   

  ஒரே நேரத்தில் 7 செய்திகள் சுமார் ஒரு நிமிட நேரத்துக்கு இங்கே தங்குகின்றன. புதிய செய்திகள் நுழையும்போது பழையவை அழிகின்றன. உதாரணமாக, காலையில் படித்தது நினைவில் இருக்கிறது; முதல் நாள் படித்தது நினைவில் இல்லை. இது, குறுகிய கால நினைவாற்றல்.

  அதேநேரத்தில் ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்தால், அதே விஷயத்தை அதிக காலம் நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது. இது, நீண்ட நாள் நினைவாற்றல். உதாரணமாக, பரீட்சைக்குப் படித்தது மறக்காமல் இருக்கிறது. ஒரு தூண்டுதல் மூலம் பழைய நினைவுகளைத் திரும்பப் பெறவும் முடிகிறது. ‘புத்தகக் காட்சி’ என்றதும், முன்பு ஒருமுறை புத்தகக் காட்சிக்குச் சென்றதும், போட்டிகளில் பரிசு பெற்றதும், ஆசிரியர் பாராட்டியதும் ஒரு சங்கிலித் தொடர்போல் நினைவுக்கு வருவது இந்த நினைவாற்றலுக்கு உதாரணம். சந்தோஷமான / துக்கமான சம்பவங்கள் ஆயுள் முழுவதும் நினைவில் நிற்பதும் இப்படித்தான்.

  ‘திறமை சார்ந்த நினைவாற்றல்’ சற்றே வித்தியாசமானது. இதற்குச் சிறுமூளைதான் சிறப்பு மையம். சைக்கிள், கார் போன்ற வாகனங்கள் ஓட்டுவது, வீணை, கிடார் போன்ற இசைக் கருவிகள் வாசிப்பது, நீச்சலடிப்பது, டைப் செய்வது போன்றவை இதற்குச் சில உதாரணங்கள். ‘தசைகளுக்கு நினைவாற்றல் உண்டு’ என்று எழுதியிருந்தேன். மேற்சொன்ன திறமைகளில் பெரும்பாலும் தசைகள்தான் பயிற்சி பெறுகின்றன. அங்குள்ள நரம்பணுக்கள் அந்தப் பயிற்சியை நினைவுகொள்கின்றன.

  அந்த நிகழ்வின் ஆரம்பத்தில் மட்டும் தசைகள் மூளையிலிருந்து ஆணையைப் பெறுகின்றன. தொடர்ச்சியாக அங்கிருந்து ஆணைகள் வரவேண்டும் என்று எதிர்பார்க்காமல் தாமாகவே அந்தச் செயல்களைத் தொடர்கின்றன. அதனால்தான் பேசிக்கொண்டே சைக்கிள் ஓட்டவும், கண்களைக் கட்டிக்கொண்டு அந்தரத்தில் கயிற்றின் மேல் நடக்கவும் முடிகிறது. இப்படிச் சொன்னால் இது இன்னும் நன்றாக விளங்கும்: நீச்சல் பயிற்சி பெறாத ஒருவர் நீச்சலடிக்க விரும்பினாலும், உடனே அவரால் நீச்சலடிக்க முடியாது. அவருடைய தசைகளுக்குப் பயிற்சி சார்ந்த நினைவு இல்லை என்பதுதான் அதற்குக் காரணம்.

  அறிவு என்பது என்ன?

  முந்தைய அனுபவத்தையும், அதனால் நமக்கு ஏற்பட்ட பாதிப்பையும் பலனையும் நினைவில் கொண்டு, அதன்படி நடந்துகொள்வதுதான் ‘அறிவு’. உதாரணமாக, ‘பாம்பு கடித்துவிடும்’ என்கிற அறிவு நமக்கு ஹிப்போகாம்பஸில் ஏற்படுகிறது. அடுத்தமுறை பாம்பைப் பார்த்ததும் அச்சப்படுகிறோம்; தப்பி ஓடப் பார்க்கிறோம் அல்லது அதை விரட்டுகிறோம். இவற்றைக் கவனித்துக்கொள்வது அமிக்டாலா.

  மறதி என்றால் என்ன?

  மூளை சில விஷயங்களைத் தேர்ந்தெடுத்துப் பதிவு செய்துகொள்கிறது; பல விஷயங்களை ஒதுக்கிவிடுகிறது. இதுதான் மறதிக்கு அடிப்படை. நம் பெயர், முகம், முகவரி போன்ற தேவையான விஷயங்களை மூளை எளிதில் மறப்பதில்லை. அதுபோல் நாம் விரும்பிச் செய்யும் செயல்களை மூளை தன்னிடம் எப்போதும் போட்டுக் கொள்கிறது. ஈடுபாடு இல்லாமல் செய்யும் செயல்களை அது விட்டுவிடுகிறது. அதனால்தான் ‘கஷ்டப்பட்டுப் படிப்பதைவிட இஷ்டப்பட்டுப் படிப்பவர்களுக்குப் பாடங்கள் மறப்பதில்லை!’ என்கிறார்கள்.

  அடுத்தது, தூக்கம். உடல் செல்களின் ஓய்வுக்கும் புதுப்பித் தலுக்கும் புத்துணர்வுக்கும் 8 மணி நேரத் தூக்கம் தினமும் அவசியம். இரவு வந்ததும், கண்களில் இருந்து ரெட்டிகுலர் அமைப்புக்குச் செய்தி போகிறது. அது ஹைப்போதலாமஸில் உள்ள உயிர்க்கடிகாரம் மூலம் பீனியல் சுரப்பிக்குத் தகவல் அனுப்புகிறது. அது ‘மெலட்டோனின்’ ஹார்மோனைச் சுரக்கிறது. இது மூளையின் பெரும்பாலான மின்தூண்டல்களைத் தற்காலிகமாக அணைத்துவிடுகிறது. உடனே நம் கண்கள் சொருக, தூக்கம் ஆட்கொள்கிறது.

  தூக்கத்தில், ‘விழி அசைவு இல்லாத் தூக்கம்’ (Non-rapid eye movement sleep - NREM Sleep), ‘வேகவிழி அசைவுத் தூக்கம்’ (Rapid eye movement sleep - REM Sleep) என இருவகை உண்டு. நாம் தூங்கும்போது இவை மாறி மாறி வரும். முதலாவது ஆரம்பநிலைத் தூக்கம். இரண்டாவது ஆழ்நிலைத் தூக்கம்.

  கனவு ஏற்படுவது எப்படி?

  வாழ்வின் நிகழ்வுகளோடு அவரவருக்கு ஏற்படும் அனுபவங்களின் பதிவுகளே கனவுகள். பெரும்பாலும் ஆழ்ந்த தூக்கத்தில்தான் கனவுகள் வரும். ஆனாலும், ஆரம்பநிலைத் தூக்கத்திலும் அவை வரலாம். விடியற்காலையில் ஆழ்ந்த தூக்கத்தில் வரும் கனவுகள் மறுநாள் நினைவுக்கு வரும். ஆரம்பநிலைத் தூக்கத்தில் உண்டாகிற கனவுகள் நினைவில் பதியாது; மறந்து விடும்.

  உயிர் எங்கே இருக்கிறது?

  மூளையில் இருக்கிறது! சுவாசமும் நாடித்துடிப்பும் நின்று போவதை ‘இதய இறப்பு’ (Cardiac death) என்கிறோம். மூளை செயலிழந்து போவதை ‘மூளை இறப்பு’ (Brain death) என்கிறோம். மூளை இறந்துவிட்டால், இதயம் துடித்தாலும் பலன் இல்லை. அதனால்தான் விபத்துகளில் மூளை இறப்புக்கு ஆளானவர்களின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கண், தோல் போன்ற முக்கிய உறுப்புகளைத் தேவையானவர்களுக்குக் கொடுத்துக் காப்பாற்றுகிறார்கள். ஆகவே, உடலில் உயிர் இருக்கும் இடம் மூளை.

  இத்தகைய மகத்துவம் வாய்ந்த மூளையைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமையல்லவா?

  சுய சுத்தம் மற்றும் சூழல் காத்தல் வழியாக நோய்த்தொற்றுகளைத் தவிர்த்தல்;

  ஆரோக்கியமான உணவு முறை, நாள்தோறும் உடற்பயிற்சி இவற்றின் மூலம் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடற்பருமன், இதய நோய் போன்றவற்றை ஓரங்கட்டுதல்;

  வாசித்தல், கற்றல், புதிர்க் கணக்குப் போடுதல் போன்ற பயிற்சிகளைக் கொடுத்து மூளைத் திறனை வளர்த்தல்;

  மது குடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகாமல் இருத்தல்; இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்துகொள்ளுதல் ஆகிய முன்னெச்சரிக்கைகளைக் கையாண்டால், மூளைக்குச் சிறந்த பாதுகாப்பு கிடைக்கும். அப்போது அது உற்சாகமாக உழைக்கும். அதன் பலனால், நம் ஆரோக்கியம் மேம்படும்.

  (நிறைவடைந்தது)
  கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

  https://tamil.thehindu.com

 2. ரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர்

   

   

  பிரமாண்டமான சரித்திரத் தொடர் 18

  என்ன நடந்தது என்பதே அப்பெரியவருக்கு சில கணங்கள் வரை புரியவில்லை.
  29.jpg
  கண்களைச் சுற்றி விண்மீன்கள் வட்டமிட்டன. நாசிக்குப் பதில் வாய் வழியே சுவாசிக்க வேண்டிய நிலை. ஓரளவு சுயநினைவு வந்த பிறகு தன் முன்னால் புற்கள் விஸ்வரூபம் எடுத்து மரங்களாக வளர்ந்திருப்பதைக் கண்டார்!அதன் பிறகுதான் தரையில், தான் விழுந்திருப்பதும் தனது பற்கள் சிதறியிருப்பதும் வாயிலிருந்து குருதி வடிந்து மண்ணை நனைப்பதும் புரிந்தது!‘‘டேய்... எழுந்திரு!’’ கரிகாலன் அதட்டினான்.
   

  பெரியவர் தலையை உயர்த்த முற்பட்டார். முடியவில்லை. கபாலம் பிளந்திருக்கிறதோ என்னவோ..?
   

  யாரோ கொத்தாக தலையின் சுருண்ட குழல்களைப் பிடித்துத் தூக்குவது தெரிந்தது. தள்ளாட்டத்துடன் எழுந்து நின்றார். தவறு. நிற்க வைக்கப்பட்டார். கேசங்களில் பிடிக்கப்பட்டிருந்த பிடி பலமாக இருந்ததால் தலையைப் பின்னோக்கிச் சாய்த்தபடிதான் முன்னோக்கிப் பார்க்க முடிந்தது.

  சிவகாமி, தன் வலது கையை மடக்கியும் இடது கையின் உள்ளங்கையை இறுக்கியும் நின்றிருந்தாள். மென்மைக்குப் பெயர் போன இந்தப் பெண்ணா தன் தாடையைப் பெயர்த்து முகத்தில் குத்தியிருக்கிறாள்..?‘‘ஆம்! சிவகாமிதான் இக்காரியத்தைச் செய்தாள்...’’ கரிகாலனின் குரல் பின்பக்கமிருந்து ஒலித்தது. ‘‘சொல். யார் நீ..?’’‘‘அதான் சொன்னேனே... உங்கள்... ரகசியக்... குழுவை... அம்மா..!’’ அலறியபடி மீண்டும் அப்பெரியவர் தரையில் விழுந்தார். இம்முறை சிவகாமியின் கரங்கள் இடியாக தன் கபாலத்தில் இறங்குவதைப் பார்த்து உணரும் பாக்கியம் அவருக்குக் கிட்டியிருந்தது!

  ‘‘வயதானவனை இப்படியா அடிப்பீர்கள்..?’’ இரத்தம் சிந்த இருமியபடி அப்பெரியவர் எழுந்தார். தன் தலைக் கேசத்தை கரிகாலன் பிடிக்கவில்லை என்பதும், சிவகாமி முஷ்டியை உயர்த்தியதுமே பிடிப்பை அவன் விட்டுவிட்டான் என்பதும் புரிந்தது. நல்ல ஜோடி. ஒருவர் நினைப்பதை மற்றவர் செய்து முடிக்கிறார்!

  ‘‘வயதானவனா... நீயா... முட்டாள்...’’ சிவகாமி தன் வலது காலை உயர்த்தி அவன் முகத்துக்கு நேரே கொண்டு வந்தாள்.கணத்தில் யமலோக வாசலுக்கு அப்பெரியவர் சென்றுவிட்டார்! நல்லவேளையாக அவ்வாசல் திறப்பதற்குள் பூமிக்கே திரும்பிவிட்டார்!
  இமைக்கவும் மறந்து, வாயிலிருந்து குருதி வடிந்த அந்த நிலையிலும் பிரமிப்பு விலகாமல் தன் கண்முன்னால் தென்பட்ட பாதத்தை செய்வதறியாமல் பார்த்தார்.
   

  அப்பாதம் அவரது நாசியின் நுனியைக் கூடத் தொடவில்லை.கணங்கள் யுகங்களாகக் கழிந்ததும் மெல்ல அப்பாதம் தரையில் இறங்கியது. இறங்கிய வேகத்தில் மீண்டும் அவர் கண் முன் தோன்றியது!இப்போது அந்தப் பாதத்தின் கட்டை விரலில் வெண் தாடி ஊசலாடிக் கொண்டிருந்தது!
   

  அதை அவர் முகத்தில் வீசிவிட்டு, உயர்த்திய தன் காலை சிவகாமி தரையில் இறக்கினாள். ‘‘வேடம் கலைந்துவிட்டது... இப்போது சொல்..!’’ ஈட்டியாகப் பாய்ந்தது அவள் குரல்.

  பெரியவராக வேடமிட்டிருந்த அந்த நடுத்தர மனிதன் தலைகுனிந்து நின்றான்.‘‘சாளுக்கியர்களின் எந்தப் படைப்பிரிவைச் சேர்ந்தவன் நீ..?’’ கேட்டபடி கரிகாலன் முன்னால் வந்து நின்றான்.வாய் திறக்காமல் மவுனம் சாதித்தான்.‘‘டேய்...’’ கர்ஜித்தபடி சிவகாமி தன் முஷ்டியை உயர்த்தினாள்.‘‘ஸ்ரீராமபுண்ய வல்லபரின் அந்தரங்க ஒற்றன் நான்...’’ தட்டுத் தடுமாறி பதிலளித்தான்.

  ‘‘வல்லபன் எந்தச் சிறையில் இருக்கிறான்..?’’ நிதானமாகக் கரிகாலன் தன் விசாரணையைத் தொடர்ந்தான்.‘‘எ..ந்..த... வ..ல்..ல..ப..ன்..?’’ ஒற்றன் விழித்தான்.‘‘பல்லவ நாட்டின் புரவிப்படைத் தளபதி!’’‘‘எனக்கு ராமபுண்ய வல்லபரை மட்டுமே தெரியும்... ஆ...’’ அநிச்சையாக தன் வலது செவியை ஒற்றன் பொத்தினான். வண்டுகளின் ரீங்கார ஒலி உள்ளெங்கும் அதிர்ந்தது!உயர்த்திய தன் கையை புன்னகையுடன் சிவகாமி
  இறக்கினாள்.

  பாதகி! புரவியை அப்படிக் கொஞ்சியவள் இப்படி பாறையாக மாறி அறைந்திருக்கிறாளே! பொங்கிய உமிழ்நீரை விழுங்க முடியாமல் தரையில் துப்பினான். மேலும் இரண்டு பற்கள் ரத்தத்துடன் தரையில் விழுந்தன!‘‘எஞ்சிய பற்களும் நாடி நரம்புகளும் உடலில் தங்க வேண்டுமா அல்லது இங்குள்ள செடி கொடி மரங்களுக்கு உரமாக வேண்டுமா..?’’ கரிகாலனின் உதட்டிலிருந்து குரூரம் வெளிப்பட்டது.

  ‘‘கா..ஞ்..சி... சிறை..யி..ல்...’’ ஒற்றன் தட்டுத் தடுமாறினான்.‘‘எங்கு வல்லபனை சிறைப்பிடித்தீர்கள்? அச்சப்படாமல் சொல். உயிரே போனாலும் ஒற்றன் உண்மையைச் சொல்லமாட்டான். ஆனால், இரண்டு தட்டு தட்டியதுமே நீ கக்க ஆரம்பித்து விட்டாய். அப்படியானால் எங்களிடம் சிக்கினால் சகலத்தையும் சொல்லிவிடும்படி உன் எஜமானரும் சாளுக்கியர்களின் போர் அமைச்சரு மான ஸ்ரீராமபுண்ய வல்லபர் உத்தரவிட்டிருக்க வேண்டும்.
  நடந்ததைச் சொல்!’’ கரிகாலனின் பார்வை அவன் உடலைச் சல்லடையாகத் துளைத்தன.

  இதன் பிறகு ஒற்றன் எதையும் மறைக்கவில்லை. கெடிலக்கரையில் வல்லபனைச் சுற்றி வளைத்துப் பிடித்ததையும் மல்லைக்கு இழுத்து வந்ததையும், காஞ்சி சிறையில் அவனை அடைக்கும்படி ஸ்ரீராமபுண்ய வல்லபர் அங்கு கட்டளையிட்டதையும் சொன்னான்.‘‘பிறகு எப்போது உன் போர் அமைச்சரை சந்தித்தாய்..?’’‘‘யாரைக் குறிப்பிடுகிறீர்கள் கரிகாலரே..? ஸ்ரீராமபுண்ய வல்லபரையா..?’’‘‘வேறு போர் அமைச்சர் சாளுக்கியர்களுக்கு ஏது..?’’‘‘இரண்டு நாழிகைகளுக்கு முன்பு!’’கரிகாலன் தலையசைத்தபடி சிவகாமியை ஏறிட்டான். ‘‘ஆயுதச் சுரங்கத்திலிருந்து, தான் வெளியேறிவிட்டதை நமக்கு உணர்த்தவும்; நாக விஷம் தோய்ந்த வாட்களை தாங்கள் கைப்பற்றிவிட்டதை நமக்குத் தெரிவிக்கவும் இந்த ஒற்றனிடம் ஒரு வாளைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்...’’

  ‘‘நமக்கு எதிர்த் திசையில் இருந்தல்லவா இந்த ஒற்றன் வந்தான்...’’ சிவகாமி புருவத்தை உயர்த்தினாள்.‘‘ஆம்! நாம் நேர் வழியில் வந்தோம். ராமபுண்ய வல்லபர் குறுக்கு வழியில் இவனை எதிர்கொண்டு நம்மைச் சந்திக்க அனுப்பி யிருக்கிறார்!’’‘‘அப்படியானால் நாம் நடமாடும் திசைகளை...’’சிவகாமியின் வாக்கியத்தை கரிகாலன் முடித்தான்.

   ‘‘விரல் நுனியில் சாளுக்கிய போர் அமைச்சர் வைத்திருக்கிறார்!’’‘‘நம்மை ஏன் அவர் கைது செய்யாமல் இருக்கிறார்..?’’‘‘பல்லவ இளவல் இருக்கும் இடத்தை அறிவதற்காக, சிவகாமி!’’ சிரித்தபடி பதிலளித்த கரிகாலன், தன் கரங்களை உயர்த்தி சோம்பல் முறித்துவிட்டு ஒற்றன் பக்கம் திரும்பினான். ‘‘இனி நீ செல்லலாம்... தொடர்ந்து மூன்று நாட்களுக்கு காலையும் மாலையும் புரவிக்கு படிகாரப் பாலின் ஒத்தடத்தைக் கொடுக்க மறக்காதே!’’ ஆள்காட்டி விரலை உயர்த்திச் சொல்லிவிட்டு, ‘‘வா சிவகாமி...’’ என்றபடி தங்கள் குதிரைகள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான்.

  ‘‘கரிகாலரே...’’ வழிந்த குருதியைத் துடைத்தபடி ஒற்றன் அழைத்தான்.‘‘என்ன..?’’ நின்ற இடத்திலிருந்தே கரிகாலன் திரும்பினான்.‘‘நான் வேடதாரி என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்..? இத்தனைக்கும் ‘செ - லி நா - லோ - செங் - கியா பா - தோ - பா - மோ’ என சரியாகத்தானே உங்கள் சங்கேதச் சொல்லை உச்சரித்தேன்!’’பதில் சொல்லாமல் கரிகாலன் கடகடவென்று சிரித்தான்.‘‘சொல்லலாம் என்றால் சொல்லுங்கள். இல்லையென்றால் வேண்டாம்...’’ ஒற்றனின் கண்களில் ஆர்வம் வழிந்தது.

  ‘‘நீ எப்படி உங்களுக்கு பாதகமில்லாமல் உண்மையைச் சொன்னாயோ அப்படி எங்களுக்கு பாதகமில்லாமல் நாங்களும் நிஜத்தைச் சொல்கிறோம்! ஒற்றனே... சங்கேதச் சொல்லை சரியாகத்தான் உச்சரித்தாய். ஆனால், அதில் ஆன்மா இல்லை. உயிர்ப்பில்லை! தவறு நிகழ்ந்துவிடக் கூடாதே என்ற பதற்றத்துடன் மனப்பாடம் செய்ததை ஒப்பித்தாய்... தவிர...’’நிறுத்திய கரிகாலன் மெல்ல ஒற்றனின் அருகில் வந்தான்.
   

  அச்சத்துடன் ஒற்றன் பின்னால் நகர்ந்தான்.சிரித்தபடி கரிகாலன் ஒற்றன் ஏறி வந்த புரவியை அணைத்து முத்தமிட்டான். ‘‘நாக விஷம் தோய்ந்த வாளை உன் இடுப்பில் நீ அணிந்திருந்தது சந்தேகத்தைக் கிளப்பியது என்றால்... உன்னை அணு அணுவாக ஆராய வைத்தது இந்த அசுவம்தான்!
   
  இது எங்கள் பல்லவ நாட்டின் புரவிப் படைத் தளபதியான வல்லபனுக்குச் சொந்தமானது. இந்தப் பகுதியிலேயே இதுபோன்ற சத்திரிய சாதிக் குதிரை அவனிடம் மட்டுமே உண்டு. அசுவத்தின் நாடி பார்க்க சிவகாமி இதன் செவிகளை ஆராய்ந்தபோது மச்சம் தென்பட்டது! அது அனைத்து உண்மைகளையும் சொல்லிவிட்டது...’’

   

  மீண்டும் ஒருமுறை அதன் நெற்றியில் தன் இதழ்களை கரிகாலன் பதித்தான். ‘‘வல்லபனைச் சுற்றி வளைத்து சாமர்த்தியமாக கெடிலநதிக்கரையில் கைது செய்த நீ... அவன் புரவி மீது மையல் கொண்டது முதல் குற்றம்! வழியில் பயன்படலாம் என்பதற்காக தன்னுடன் அவன் எடுத்துச் சென்ற கறிமஞ்சள், சவுக்காரம், வெல்லம், அபினி, பசும்பால், நீர், படிகாரம் ஆகியவற்றையும் நீ சுமந்து வந்தது இரண்டாவது குற்றம்!
   
  வல்லபனின் வஸ்திரத்துடனேயே அதை எடுத்து வந்தது மூன்றாவது குற்றம்! வல்லபனால் மட்டுமே இவ்வளவு அழகாக தன் வஸ்திரத்தை மடித்து புரவிக்கான மருந்துப் பொருட்களை வைக்க முடியும் என்பதை நான் அறிய மாட்டேன் என நீ எண்ணியது நான்காவது குற்றம்! சுரைக்காய் குடுவையில் இருக்கும் பல்லவ நந்தி இலட்சினையை நீ கவனிக்காமல் விட்டது ஐந்தாவது குற்றம்!’’

   

  சொன்ன கரிகாலன் நெருங்கி ஒற்றனின் தோளைத் தொட்டான். ‘‘இப்போது நான் சொன்ன அனைத்தையும் மறக்காமல் ஸ்ரீராமபுண்ய வல்லபரிடம் தெரிவித்துவிடு! போலவே எங்கள் நடமாட்டத்தை அணு அணுவாக அவர் கண்காணிக்கிறார் என்பதை நாங்கள் அறிந்துவிட்டதாகவும் தெரிவித்து விடு!
   
  இதையெல்லாம் தெரிந்து கொண்டபிறகும் நாங்கள் அச்சப்படவோ பின்வாங்கவோ இல்லை என்பதை அழுத்தம்திருத்தமாகத் தெரிவித்து விடு! பல்லவ இளவலை நாங்கள் சந்திக்கப் போவதில் எந்த மாற்றமும் இல்லை. முடிந்தால் எங்களை, பல்லவ இளவலை கைது செய்யச் சொல்!’’ அதன் பிறகு கரிகாலன் திரும்பிப் பார்க்கவில்லை. ஒற்றனும் எந்த அழைப்பையும் விடுக்கவில்லை.


  தங்கள் புரவிகளில் ஏறாமல் அவற்றுடன் நடந்தபடியே சிவகாமி யுடன் அடர் வனத்தின் புதருக்குள் ஊடுருவினான். சில காத தூரம் சென்றதும் சிவகாமியின் கைகளைப் பிடித்து நிறுத்தினான். தன் முன் வலுவான மரம் இருப்பதையும் அதன் அடிப்பாகம் மூன்று ஆட்கள் கைகோர்த்து அணைக்கும்படி இருப்பதையும் பார்வையால் அளந்து விட்டு சிவகாமி பக்கம் தன் கருவிழியைத் திருப்பினான்.

  உதட்டில் விரல் வைத்து அமைதி காக்கும்படி அவளிடம் சமிக்ஞை செய்துவிட்டு, தங்களுடன் வந்த இரு குதிரைகளையும் நெருங்கினான். அவற்றின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு இரு நெற்றிகளையும் தன்னிரு கரங்களாலும் ஒரே நேரத்தில் தடவினான். குனிந்து எட்டு கால்களையும் தடவி, பிடித்து விட்டான்இரண்டும் ஒரே நேரத்தில் கனைத்தன.

  புன்னகையுடன் ஒவ்வொரு குதிரையின் செவியிலும் தனித்தனியே முணுமுணுத்தான்.இரண்டும் வாயைத் திறந்து பற்களைக் காட்டின!செல்லமாக அவற்றின் காதுகளைப் பிடித்து வலிக்காமல் திருகி விட்டு, இரு கைகளாலும் இரண்டையும் தட்டிக் கொடுத்தான்!

  அடுத்த கணம் இரு புரவிகளும் ஒன்றுடன் ஒன்று ஒட்டியும் ஒட்டாமலும் உரசியும் உரசாமலும் சீறிப் பாய்ந்து காட்டுக்குள் பறந்தன. அக்கம்பக்கத்து மரக் கிளைகளில் அமர்ந்திருந்த பறவைகள் சடசடவெனச் சிறகடித்தபடி பறந்தன. அதைக் கண்டு அவன் உதட்டோரம் புன்னகை பூத்தது.

  அவற்றின் குளம்பொலிகள் மெல்லத் தேய்ந்து மறைந்த பிறகும் அந்த இடத்தை விட்டு கரிகாலன் அசையவில்லை. பின்னர் சிவகாமியின் இடுப்பைத் தன் கைகளால் வளைத்து அவளைத் தூக்கி தன் தோளில் போட்டுக்கொண்டான். பாதங்களை அழுத்தி ஒலி எழுப்பாமல் இரு கால் கட்டை விரல்களாலும் நடந்தபடி, தான் அளவிட்ட மரத்தை அடைந்தான்.
   

  தோளிலிருந்து சிவகாமியை இறக்காமலேயே தென்னை மரத்தில் ஏறுவது போல் கால்களைக் குவித்தும் உயர்த்தியும் அம்மரத்தில் ஏறி, அடர் கிளைகளின் நடுவில் புகுந்து அமருவதற்கு வாகான இடத்தில் சிவகாமியை இறக்கினான். இலைக் கொத்துகளைக் காற்றில் அசைவது போல் பிரித்துப் பார்த்தான்.
   
  வனத்தைச் சுற்றி ஆங்காங்கே புரவிகளும் சாளுக்கிய வீரர்களும் தனித்தனியாகவும் குழுக்களாகவும் நிற்பது புள்ளியாகத் தெரிந்தது.முழுவதுமாகச் சுற்றி வளைக்கப்பட்டிருக்கிறோம்! எந்தத் திசையில் சென்றாலும் யாராவது நம்மைப் பின்தொடர்வார்கள்! ஸ்ரீராமபுண்ய வல்லபர் பலே பேர்வழிதான்!


  ‘‘எப்படி வனத்திலிருந்து நாம் வெளியேறுவது..?’’

  செவியோரம் கிசுகிசுத்த சிவகாமியை நேருக்கு நேர் பார்க்க கரிகாலன் சட்டெனத் திரும்பினான்.இவ்வளவு வேகமாக அவன் திரும்புவான் என்பதை சிவகாமி எதிர்பார்க்கவில்லை. எனவே அவளால் விலக முடியவில்லை. எனவே அவன் உதடுகள் அவள் அதரங்களை முழுவதுமாக ஒற்றின! ஒற்றிய உதடுகளை வரவேற்கும் விதமாக அதரங்கள் திறந்தன!
   

  (தொடரும்)

  கே.என்.சிவராமன்

  http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14219&id1=6&issue=20180914

 3. 119. நிதி சால சுகமா?

   

   

  கண் விழித்தபோது அவன் ஒரு குடிசைக்குள் படுத்திருந்தான். அந்தப் பெண் அவன் அருகே அமர்ந்திருந்தாள். வினோத்துக்கு உடலெங்கும் நிறைய சிராய்ப்புகள் ஏற்பட்டிருந்தன. முழங்கால் எரிந்தது. மூக்கு எரிந்தது. இடது கன்னத்தில் எரிந்தது. அனைத்தையும்விடத் தன்னால் எழுந்திருக்கவே முடியாதோ என்று எண்ணும்படியாக இடுப்பில் உக்கிரமாக வலித்தது. ‘எழுந்திருக்காதே. அப்படியே படுத்திரு’ என்று அந்தப் பெண் சொன்னாள். அந்தக் கணம் அவனுக்குத் தோன்றியதெல்லாம் ஒன்றுதான். இவள் தனியாக எப்படித் தன்னைத் தூக்கிவந்து இங்கே கிடத்தியிருப்பாள்? சிறிது வெட்கமாக இருந்தது. அவனையறியாமல் சிரிப்பு வந்தது. அவள் அதைக் கவனித்தாள். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை.

  ‘என்னை மன்னியுங்கள். உங்களை சிரமப்படுத்தியிருக்கிறேன்’ என்று வினோத் சொன்னான்.

  ‘அதனால் பரவாயில்லை. உனக்கு கிருஷ்ண தரிசனம் நேர்ந்ததா?’

  ‘இல்லை. அவன் ஒவ்வொரு முறையும் என்னை இப்படித்தான் ஏமாற்றுகிறான்’.

  ‘எப்படி?’

  ‘ஒரு ஒளியாக அவன் எனக்கு வெளிப்படுகிறான். ஆனால் நான் முழுதும் பார்ப்பதற்குள்ளாக மறைந்துவிடுகிறான்’.

  ‘நின்று நிதானமாகப் பார்க்க வேண்டியதுதானே? எதற்கு அப்படி பேயைப் பார்த்தாற்போல ஓடினாய்?’

  இதற்கு என்ன பதில் சொல்வதென்று யோசித்தான். உண்மையில் அந்தப் பதற்றமும் பரிதவிப்பும் எங்கிருந்து வருகிறது என்று அவனுக்குப் புரிவதேயில்லை. ஒவ்வொரு முறையும் ஒளி தோன்றி மறைந்த பின்பு அதை நினைவில் கொண்டு வரப் பார்த்தால், அது வருவதில்லை. அடுத்த பல தினங்களுக்கு உடம்பு அடித்துப் போட்டாற்போல் ஆகிவிடுகிறது. எழுந்து நடமாடக்கூட சிரமமாகிவிடுகிறது. இதை அவன் அந்தப் பெண்ணிடம் சொன்னபோது, ‘சிலருக்கு அப்படித்தான் நேரும்’ என்று சொன்னாள்.

  ‘அம்மா, நீங்கள் அவனைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று வினோத் கேட்டான்.

  ‘யாரை?’

  ‘கிருஷ்ணனை’.

  ‘இல்லை. எனக்கு அவன் அத்தனை நெருக்கமில்லை’.

  ‘ஆம். நீங்கள் ஒரு சிவனடியார் என்று புரிந்துகொண்டேன்’.

  அவள் சிரித்தாள். ‘உனக்கு என்ன பிரச்னை? தெய்வத்துக்கு எதற்குப் பெயர் வேண்டுமென்று நினைக்கிறாய்? உன் கிருஷ்ணனும் சிவனும் இதனால்தான் உன்னை வைத்து விளையாடுகிறார்கள்’.

  ‘புரிகிறது தாயே. ஆனாலும் என் அறியாமை இங்கேயேதான் நின்று சுழல்கிறது. கொழும்புவில் அந்த ஒளிப்புள்ளி என்னை ஒரு சிவன் கோயிலுக்கு ஏன் அழைத்துச் சென்று விட்டது என்று இப்போதுவரை எனக்குப் புரியவில்லை’.

  ‘இதில் புரிய என்ன இருக்கிறது? உன் ஒளியை நீ கிருஷ்ணன் என்று நினைத்துக்கொண்டால், கிருஷ்ணன் உன்னை சிவனுக்கு சிநேகமாக்கிவிடப் பார்த்தான் என்று எண்ணிக்கொள். வந்த ஒளி சிவமென்றால் தன் சன்னிதியில் உனக்கு கிருஷ்ணனைக் காட்ட விரும்பியதாக நினைத்துக்கொள். அவ்வளவுதானே?’

  அவ்வளவுதானா! மனத்துக்குள் இரண்டாகப் பிளவுபட்டு நிற்கும் அவஸ்தையை எப்படிப் புரியவைக்க முடியும்?

  ‘தாயே, என்னிடம் என்றோ கிடைத்த சிவலிங்கத்தை நான் புறக்கணித்த குற்ற உணர்ச்சி எனக்கு இன்னும் மிச்சம் இருக்கிறது. கிருஷ்ணனை வணங்கும்போதெல்லாம் அதனாலேயே நான் ஓரத்தில் சிவனை நினைத்துக்கொள்கிறேன்’.

  ‘என்ன பிழை? ஒன்றுக்கு இரண்டு தெய்வங்கள் உனக்கு உதவி செய்ய இருந்தால் சௌகரியம்தானே?’

  ‘எங்கே உதவுகிறார்கள்? இரண்டு பேரும் சேர்ந்து அலைக்கழித்துக்கொண்டிருக்கிறார்கள்’ என்று வினோத் சொன்னதும் அவள் சிரித்தாள்.

  ‘மகனே, நீ நல்லவன். அப்பாவி. உன் அறியாமை அழகானது. உன் அண்ணன் உன்னைப் பற்றிச் சொன்னபோது நான் முதலில் நம்பவில்லை. ஆனால் இப்போது புரிந்துகொண்டேன்’ என்று அவள் சொன்னதும் வினோத்துக்குத் தூக்கிவாரிப் போட்டது.

  ‘அண்ணாவா? என்ன சொன்னான்?’ என்று கேட்டான்.

  ‘அது உனக்கு வேண்டாம். ஆனால் நான் உனக்கு ஒரு உதவி செய்ய முடிவு செய்திருக்கிறேன்’.

  ‘சொல்லுங்கள் தாயே’.

  அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். அவனையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, ‘சரி கண்ணை மூடு’ என்று சொன்னாள். அவன் கண்ணை மூடிக்கொண்டான்.

  ‘இப்போது சொல்வதைக் கவனமாகக் கேள். கிருஷ்ணனா சிவனா என்று பார்க்காதே. உன் மனத்தில் இப்போது முதலில் தோன்றுவது எதுவாக இருந்தாலும் அதை மட்டும் நினை. அதையே தியானப் பொருளாக்கு. நான் குரல் கொடுக்கும்வரை அதைத் தவிர வேறு எதையும் நினைக்காதே’ என்று சொன்னாள்.

  வினோத் சரி என்று சொல்லிவிட்டு அப்படியே கண்களை மூடிக்கொண்டான். பளிச்சென்று சித்ராவின் முகம் அவன் கண்களுக்குள் திரண்டு எழுந்து வந்து நின்றது. அவனுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது. இதென்ன விபரீதம்? இவள் முகம் ஏன் இப்போது நினைவுக்கு வருகிறது? ஆட்டத்தைக் கலைத்துவிட்டு முதலில் இருந்து தொடங்கலாமா என்று யோசித்தான். அது கூடாது என்று தோன்றியது. அந்தப் பெண் விதித்த ஒரே நிபந்தனையைக்கூடச் சரியாகப் பின்பற்ற முடியவில்லை என்பது மிகவும் துக்ககரமானதல்லவா.

  இருந்துவிட்டுப் போகட்டும் என்று சித்ராவையே நினைக்க ஆரம்பித்தான். சிறு வயதுகளில் வினய், சித்ராவை மிகவும் விரும்பியது அவனுக்கும் தெரியும். ஆனால் அது குறித்து அவன் வினய்யிடம் கேட்டதில்லை. வேறு யாருடனும் விவாதித்ததும் இல்லை. வினய் வீட்டைவிட்டு வெளியேறியபின் வெகு காலத்துக்கு வினோத் சித்ராவைக் குறித்து எண்ணிப் பார்த்ததேயில்லை. எப்போதாவது வீதியில் பார்க்க நேரும்போது சற்றுப் புன்னகை செய்துவிட்டுக் கடந்துவிடுவதே வழக்கம். அவனுக்குப் பள்ளி ஆசிரியர் வேலை கிடைத்த அன்றைக்குத்தான் முதல் முதலில் சித்ரா அழகாகத்தான் இருக்கிறாள் என்று நினைத்தான். என்ன காரணத்தாலோ அப்போது அவனுக்கு வினய்யின் நினைவு வரவில்லை.

  சிறு வயது முதல் பார்த்து வரும் பெண். ஒரே ஊர். அடுத்தடுத்த வீதிகளில் வசிப்பவர்கள். இரு குடும்பங்களுக்கும் நல்ல பரிச்சயம் உண்டு. இரு குடும்பங்களுமே ஐயங்கார் குடும்பங்கள். சௌகரியமாக வேறு வேறு கோத்திரம். சித்ராவைத் திருமணம் செய்துகொண்டால் என்ன என்று அன்றைக்குத்தான் அவன் முதலில் நினைத்தான். ஆனால் நினைத்துக்கொண்டதுதான். தவறியும் யாரிடமும் அதைப் பற்றி அவன் பேசவில்லை. ஆசிரியப் பணியை முடித்துவிட்டு ஒவ்வொரு நாளும் ஓய்வு நேரத்தில் அவன் சித்ராவை அதன்பின் நினைத்துக்கொள்ள ஆரம்பித்தான். அது சுகமாக இருந்தது. அவளைக் காதலிக்கலாம் என்றும் நினைத்தான். தனது நள்ளிரவு ரகசிய சிவபூஜைக்குப் பின்பு சிவனின் அனுமதியோடுதான் அவன் சித்ராவை நினைத்துக்கொள்ள ஆரம்பிப்பான். நினைவில் அவளைத் தொடுவான். கன்னங்களை வருடுவான். நெருங்கி முத்தமிடுவான். அவள் கையைப் பிடித்துக்கொண்டு திருவிடந்தையில் இருந்து நீலாங்கரை வரை கடற்கரையில் நடப்பான்.

  மறுநாள் காலை தற்செயலாகச் சித்ராவை வீதியில் பார்க்க நேர்ந்துவிட்டால் மிகவும் சந்தோஷமாகிவிடுவான். சிவனே தங்களைச் சேர்த்துவைப்பான் என்று அவன் மனத்துக்குள் தோன்றும். என்றைக்காவது மெல்ல அவளிடம் பேச்சுக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்வான். அது அபத்தமாக ஆரம்பித்துவிடக் கூடாது என்றும் உடனே நினைத்துக்கொள்வான். அவளுடன் பேசுவதற்குப் பொருத்தமாக ஏதாவது ஒரு விஷயத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நினைத்து, அதற்காகப் பலநாள் யோசித்தான். அவளது பிரத்தியேக விருப்பங்கள், ஆர்வங்கள் குறித்துக் கொஞ்சமாவது தெரிந்துகொண்டால்தான் அது முடியும் என்று தோன்றியது. யாரைப் போய்க் கேட்பது?

  இந்தக் கவலையில் இருந்தபோதுதான் ஒருநாள் கேசவன் மாமா, சித்ரா நன்றாகப் பாடுவாள் என்ற தகவலைத் தற்செயலாக அம்மாவிடம் சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்டான்.

  ‘அப்படியா? எனக்குத் தெரியாதே. மாமி சொன்னதே இல்லியே?’ என்று அம்மா சொன்னாள்.

  ‘இத்தன வருஷமா பாத்துண்டிருக்கோம். இன்னிக்குத்தான் எனக்கே தெரிஞ்சிதுக்கா. பிரமாதமா பாடறா. இன்னிக்குக் கோயில்ல பெருமாள் சேவிக்க வந்தா. பிராகாரம் சுத்திட்டு தாயார் சன்னிதி வாசல்ல உக்காந்துண்டிருந்தப்ப தனக்குத்தானே மெல்லிசா பாடிண்டிருந்தா.. அந்தப் பக்கமா போனேனா.. எனக்குத் தூக்கி வாரிப் போட்டுடுத்துக்கா. சுருதி சுத்தம்னா அப்படி ஒரு சுருதி சுத்தம். குரலும் நன்னா ஒத்துழைக்கறது அவளுக்கு. ஏண்டிம்மா, இப்படி ரகசியமா பாடிண்டிருக்கே, நன்னா வாய் விட்டுப் பாடப்படாதான்னு கேட்டேன். போங்கோ மாமான்னு வெக்கப்பட்டுண்டு எழுந்து போயிட்டா’ என்று கேசவன் மாமா சொன்னார்.

  வினோத்துக்கு இந்தத் தகவல் போதுமானதாக இருந்தது. மறுநாள் பள்ளிக்கூடம் விட்டதும் அவன் திருப்போரூருக்கு சைக்கிளில் போனான். சன்னிதித் தெருவில் ஒரு கேசட் கடை இருந்தது. ஓரிரு முறை அந்தப் பக்கம் போகும்போது அதைப் பார்த்திருக்கிறான். எனவே நேரே அந்தக் கடைக்குச் சென்று எம்.எல். வசந்தகுமாரி, டிகே ஜெயராமன் கேசட்டுகள் சிலவற்றை வாங்கிக்கொண்டான். அன்றைய தேதியில் யார் பிரபலமான கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் என்று அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை. கடைக்காரனிடம் கேட்கச் சற்று வெட்கமாக இருந்தது. எப்பேர்ப்பட்ட சங்கீத ஞானஸ்தராக இருந்தாலும் எம்.எல். வசந்தகுமாரியையும் டிகே ஜெயராமனையும் நிராகரிக்க மாட்டார்கள் என்று அவனுக்கு உறுதியாகத் தோன்றியதால் அவற்றை வாங்கினான். கேசட்டின் மேலே இருந்த பிளாஸ்டிக் உறையைக் கிழித்தெறிந்துவிட்டு அதைப் பையில் போட்டுக்கொண்டு கிளம்பினான்.

  மாலை ஆறு மணிக்கு அவன் திருவிடந்தை கோயிலுக்குப் போனான். மாமா அப்போதுதான் கோயிலில் இருந்து கிளம்பிக்கொண்டிருந்தார். ‘என்னடா விசேஷம் இன்னிக்கு?’ என்று கேட்டார்.

  ‘சும்மாத்தான் மாமா’ என்று சொல்லிவிட்டு நேரே சன்னிதிக்குப் போனான். தீர்த்தம் சடாரி வாங்கிக்கொண்டு தாயார் சன்னிதிக்கு வந்து உட்கார்ந்தான்.

  ஆறரைக்கு சித்ரா கோயிலுக்கு வந்தாள். அவள் உள்ளே நுழையும்போதே வினோத் அவளைப் பார்த்துவிட்டான். பதற்றமாக இருந்தது. யாராவது பார்த்தால் என்னவாவது நினைத்துக்கொள்வார்களே என்று கவலையாக இருந்தது. ஆனால் அவன் ஒரு பள்ளி ஆசிரியர். கௌரவமான வேலையில் இருப்பவன். சட்டென்று அப்படி யாரும் உடனே தவறாக நினைத்துவிட மாட்டார்கள் என்றும் தோன்றியது. அவள் பெருமாள் சேவித்துவிட்டுத் தாயார் சன்னிதிக்கு வரும்வரை அவனுக்கு நிலைகொள்ளவில்லை. உடம்பெல்லாம் வியர்த்துவிட்டது. நெஞ்சு வறண்டு தாகம் எடுத்தது. சகித்துக்கொண்டு பொறுமையாகக் காத்திருந்தான்.

  சித்ரா சன்னிதிக்கு வந்தபோது மிக மிக இயல்பாக எப்போதும் புன்னகை செய்வது போலவே செய்தான். அவளும் பதிலுக்குச் சிரித்தாள்.

  ‘நீ நன்னா பாடறியாமே? மாமா சொன்னார்’ என்று ஆரம்பித்தான்.

  அவள் சற்று வெட்கப்பட்டாற்போல் இருந்தது.

  ‘இந்தா’ என்று கேசட்டுகளை நீட்டினான்.

  ‘என்னது?’

  ‘எனக்குப் பிடிச்சிருந்தது. உனக்குப் பிடிக்கறதான்னு கேட்டுப் பாரு’ என்று சொன்னான்.

  அவள் மறுக்கவில்லை. ‘தேங்ஸ்’ என்று சொல்லிவிட்டு வாங்கிக்கொண்டாள்.

  ‘பாட்டு கத்துண்டியான்ன?’

  ‘எப்பவோ கத்துண்டது. ரொம்ப சின்ன வயசுல’.

  ‘ஏன் விட்டுட்டே?’

  ‘இங்க யார் இருக்கா சொல்லித்தர?’

  ‘அப்போ மட்டும் யார் இருந்தா?’

  ‘என் பாட்டி இருந்தாளே. அவ நன்னா பாடுவா’.

  ‘ஓ’.

  அதற்குமேல் பேசினால் சரியாக வராது என்று அவனுக்குத் தோன்றியது. ‘சரி, கேட்டுட்டு சொல்லு’ என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டான். யாரும் பார்க்கவில்லை என்பது நிம்மதியாக இருந்தது.

  இரண்டு நாள் கழித்து சித்ரா வீட்டுக்கு வந்து கேசட்டுகளைத் திருப்பிக் கொடுத்தாள். அம்மாவுக்கு அது மிகுந்த ஆச்சரியம். ‘நீ எப்படா இதெல்லாம் கேக்க ஆரம்பிச்சே?’ என்று வினோத்தைக் கேட்டாள்.

  ‘எப்பவோ’ என்று மட்டும் சொல்லிவிட்டு, ‘சரி உனக்குப் பிடிச்சிதா?’ என்று சித்ராவிடம் கேட்டான்.

  அவள், ‘ம்’ என்று மட்டும் சொன்னாள். மேற்கொண்டு இசை சார்ந்து பேசுவதற்குத் தன்னிடம் ஒன்றுமில்லை என்பதை நினைவுகூர்ந்த வினோத், ‘உக்காரேன். ஒரு பாட்டு பாடு. அம்மா கேப்பா’ என்று சொன்னான்.

  அம்மாவுக்கு அதுவே பூரித்துவிட்டது. ‘அதானே? நீ நன்னா பாடுவேன்னு கேசவன் சொன்னான். ஒரு பாட்டு பாடேன்?’ என்று கேட்டாள்.

  அன்றைக்கு சித்ரா நிதி சால சுகமா என்ற கீர்த்தனையைப் பாடிக்காட்டினாள். அது மிகவும் நன்றாக இருப்பதாக அம்மா சொன்னாள். வினோத்துக்கு ராகமோ மற்றதோ தெரியவில்லை. சித்ரா சகஜமாகத் தன் வீட்டுக்கு வந்து சொன்ன வார்த்தையைத் தட்டாமல் பாடிக் காட்டியதே மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அம்மா அவளுக்குக் காப்பி கொடுத்தாள். குடித்துவிட்டு, ‘போயிட்டு வரேன் மாமி’ என்று சொல்லிவிட்டு அவள் கிளம்பியபோது, வினோத் வாசல்வரை வந்து அனுப்பிவைத்தான்.

  அம்மாவுக்கு ஏதாவது புரிந்திருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. புரியவேயில்லை என்றாலும் அது ஒரு சரியான தொடக்கமாக இருக்கும் என்று நினைத்தான். இரவு சீக்கிரமே சாப்பிட்டுவிட்டுப் படுத்து, சித்ராவை நினைத்துக்கொள்ள ஆரம்பித்தான்.

  (தொடரும்)

  http://www.dinamani.com/junction/yathi/2018/aug/30/119-மாரு-பல்க-2990454.html

 4. அருமையான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு

   
  அ-அ+

  சூடான சாதத்தில் கருவாட்டு குழம்பை ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இன்று வாளைக்கருவாட்டுடன் மொச்சை, முருங்கைக்காய் சேர்த்து குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

   
   
   
   
  அருமையான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு
   

  தேவையான பொருட்கள் :

  வாளை கருவாடு - 6 துண்டுகள்,

  வெந்தயம், மிளகு, சீரகம் - தலா 1 டீஸ்பூன்,
  நசுக்கிய பூண்டு - 5 பல்,
  சாம்பார் வெங்காயம் - 6,
  மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
  மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
  கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிது,
  நறுக்கிய முருங்கைக்காய், கத்திரிக்காய், வேகவைத்த மொச்சை யாவும் கலந்தது - 1 கப்,
  உப்பு - தேவைக்கு.
  புளி - நெல்லிக்காய் அளவு,

  நல்லெண்ணெய் - தேவையான அளவு.
   
  201809141213596961_1_Karuvattu-Kuzhambu1._L_styvpf.jpg

  செய்முறை :

  வாளை கருவாட்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

  புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

  வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் வெந்தயம், மிளகு, சீரகம் போட்டு தாளித்த பின்னர் பூண்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

  வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.

  பின்பு கரைத்த புளிக்கரைசல், தேவையான அளவு தண்ணீர், உப்பு, முருங்கைக்காய், கத்திரிக்காய், மொச்சை, கருவாடு சேர்த்து கொதிக்க விடவும்.

  நன்றாக கொதித்து குழம்பு பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
   
  சூப்பரான வாளை கருவாட்டு மொச்சை குழம்பு ரெடி.

  https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/09/14121359/1191201/dry-fish-mochai-curry.vpf

 5. ஓர் உணவுக் கவளத்தை எத்தனை முறை சுவைக்க வேண்டும்? - மருத்துவ உண்மை!

   

  பற்களோடும் எச்சில் சுரப்புகளோடும் நாம் சாப்பிடும் உணவுப் பொருள்கள் உறவாடுவது எவ்வளவு அவசியம் தெரியுமா?

  ஓர் உணவுக் கவளத்தை எத்தனை முறை சுவைக்க வேண்டும்? - மருத்துவ உண்மை!
   

  ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது ’ என்றொரு பழமொழி உண்டு. உணவை  நன்றாக மென்று சாப்பிட்டால், நோயின்றி வாழலாம் என்பதுதான்  பழமொழி உணர்த்தும் உண்மை. செரிமானம் என்னும் அடித்தளம் பலமாக அமைந்துவிட்டால், நோய்கள் நம்மை நெருங்காது.  

  உணவு

  `வேலைகளை விரைந்து முடித்துவிட்டு, பொறுமையாக உணவைச் சாப்பிடலாம்’ என்றிருந்த காலம் மாறி, `உணவை விரைவாகச் சாப்பிட்டுவிட்டு, மற்ற அலுவல்களுக்கு நிறைய நேரம் ஒதுக்கலாம்’ என்ற சூழலில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பற்களோடும் எச்சில் சுரப்புகளோடும் தொடர்புகொள்ளாமலே, உணவுப் பொருள்களை நேரடியாக உணவுக்குழாய்க்குள் (Oesophagus) தள்ள முயல்கிறோம். உணவை நொறுக்குவதற்கு அத்தியாவசியமான டெரிகாய்ட் (Pterygoid), மேஸட்டார் (Masseter), டெம்பொராலிஸ் (Temporalis) போன்ற தசைகளுக்கு வேலைகொடுக்காமல் ஓய்வளிக்கிறோம். 

   

   

  பற்களோடும் எச்சில் சுரப்புகளோடும் நாம் சாப்பிடும் உணவுப் பொருள்கள் உறவாடுவது எவ்வளவு அவசியம் தெரியுமா? குடிக்கும் நீரைக்கூட மென்று பருகுங்கள் என்று சொல்வார்கள். அப்படி இருக்கும்போது, உணவுகளை நன்றாக மென்ற பிறகு உட்செலுத்துவதுதானே சரியாக இருக்கும். பலர் நினைப்பதைப்போல, செரிமானம் வயிற்றில் தொடங்குவதில்லை. வாய்ப் பகுதியிலேயே தொடங்கிவிடுகிறது. பற்கள், தாடைத் தசைகள், நாக்கு, எச்சில் ஆகியவற்றின் உதவியுடன் உணவை நொறுக்குவதுதான் செரிமானத்தின் முதல் படி. இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டால், உணவை நொறுக்குவதற்கான அவசியம் புரிந்துவிடும். 

   

   

  இறைச்சி

  உணவுகளை நொறுக்கி, சிறுசிறு அளவாக மாற்றும்போது, உணவுகளிலிருந்து சாரங்களைப் பிரித்தெடுக்க செரிமானக் கருவிகளுக்கு எளிதாக இருக்கும். இல்லையென்றால், வயிற்றுப் பகுதிக்குச் செல்லும் உணவை உடைக்க, செரிமானக் கருவிகள் அதிக நேரம் உழைக்க வேண்டியிருக்கும். நன்றாக மென்று சாப்பிடும்போது, எச்சில் சுரப்பின் அளவு அதிகரிக்கும். நொறுக்கப்பட்ட உணவுடன் எச்சில் கலந்து, பிசுபிசுப்புடன் இரைப்பை நோக்கிப் பயணிக்கவைக்கும். நாம் சாப்பிடும் மாவுப்பொருள்களை உடைக்கும் செயல், எச்சில் சுரப்புகளில் உள்ள `அமைலேஸ்’ (Salivary amylase) நொதியால் வாய்ப்பகுதியிலேயே தொடங்கிவிடுகிறது. எச்சில் சுரப்பில் இருக்கும் `லைஸோசைம்’ (Lysozyme) என்னும் நொதிக்குக் கிருமிகளை அழிக்கும் தன்மையும் இருக்கிறது. கொழுப்புப் பொருள்களின் செரிமானமும் எச்சில் சுரப்புகளால் வாயிலேயே தொடங்கிவைக்கப்படுகிறது. ஆனால், முழுமைபெறுவதற்கு அவை வயிற்றுக்குள் செல்வது அவசியம். 

  நாம் உணவுகளை நன்றாக மென்று சாப்பிடும்போது, விரைவில் உணவு உண்ட திருப்தி கிடைக்கும். மென்று சாப்பிடாவிட்டால், திருப்தி இல்லாமல் அதிக அளவில் உணவுகளை எடுத்துக்கொள்ள நேரிடும். உணவை அதிக நேரம் சவைக்கும்போது, உணவுகளில் உள்ள சுவையை முழுமையாக அனுபவிக்க முடியும். வாயில் மென்று சாப்பிடத் தொடங்கும்போதே, வயிற்றுப் பகுதியில் செரிமானத்துக்குத் தேவையான செயல்பாடுகள் எல்லாம் தொடங்கிவிடும். `வாயில் உணவு நுழைந்துவிட்டது… நம்மிடம் வரும் உணவை செரிப்பதற்குத் தயாராவோம்’ என வயிற்றுத் தசைகள், கணையம், கல்லீரல் என உள்ளுறுப்புகள் காத்துக்கிடப்பது இயங்கியல். 

   

   

  சாப்பிடுவது

  ஓர் உணவுக் கவளத்தை எத்தனை முறை சவைக்க வேண்டும் என்றால், அது உணவைப் பொறுத்தது. சில காய் மற்றும் பழ வகைகளை ஐந்து முதல் பத்துமுறை சவைத்தால் போதுமானது. அதுவே, சற்று கடினமான உணவையோ இறைச்சித் துண்டுகளையோ இருபது முதல் முப்பது முறை சவைக்கவேண்டியிருக்கும். உணவு நூல்களும் சுமார் முப்பதுமுறை வரை மென்று சாப்பிட வேண்டும் என்றே கூறுகின்றன. 

  ஆனால், நாம் எத்தனை முறை மென்று சாப்பிடுகிறோம் என்று யோசித்துப்பாருங்கள். அடுத்த வேளை உணவு சாப்பிடும்போது கவனித்தால், நாம் அவ்வளவாக உணவை சவைப்பதில்லை என்பது தெளிவாகத் தெரியும். ’முப்பது முறை சவைக்கிறேன்’ என்று எண்ணிக்கொண்டே சாப்பிட வேண்டிய அவசியமில்லை. உணவு, வாயில் நன்றாக கூழ்ம நிலைக்கு வந்தவுடன் விழுங்கினால் போதும். விழுங்குவதற்கு முன், சிறு உணவுத் துணுக்குகள் வாய்ப்பகுதியில் சுழன்றுகொண்டிருந்தால், நீங்கள் உணவை தேவையான அளவுக்கு சவைக்கவில்லை என்று அர்த்தம்.

  உணவை மென்று சாப்பிடுவதால் பற்களுக்கு பலம் உண்டாகும். மெல்லும்போது சுரக்கும் அதிக அளவிலான எச்சில் சுரப்பு, பற்களில் கிருமிகளின் தாக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ளும். `உணவு சாப்பிடும்நேரத்தில் முழுக் கவனத்தையும் உணவில் மட்டுமே செலுத்த வேண்டும்’ என்று சொல்வதற்கான காரணங்கள் பல. செல்போன் பேசிக்கொண்டும், வேறு செயல்களைச் செய்துகொண்டும் சாப்பிடும்போது, உணவின்மேல் கவனம் இல்லாமல், மென்று சாப்பிடுவதற்கு வாய்ப்பே இல்லாமல்போகும்.

  முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும், மென்று சாப்பிடமுடியாத சூழலில், செரிப்பதற்குக் கடினமான உணவுகளைக் கொடுத்து, செரிமானக் கருவிகளுக்கு கூடுதல் சுமை கொடுக்கக் கூடாது. செரிமானத்துக்கு எளிமையான மற்றும் கூழ்ம வகை உணவுகளைக் கொடுப்பது நல்லது. பற்களின் செயல்பாடு தொடங்கியதும், குழந்தைப் பருவம் முதல் மென்று சாப்பிடுவதன் அவசியத்தை அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது முக்கியம். 

  சாப்பிடுவது

  சில தாய்ப் பறவைகள், உணவை நன்றாக நொறுக்கித் தங்களது இளம் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடுவதும் செரிமானத்தைத் தூண்டும் அறிவியல்தான். சில விலங்குகளின் வயிற்றுக்குள் சென்ற பாதி செரிமானமான உணவுப் பொருள்கள், வாய்ப்பகுதியில் நொறுக்கப்படுவதற்காக மீண்டும் எதுக்களிக்கப்படுவதும் இயற்கை உணர்த்தும் அறிவியலே.

  தொடர்ந்து, உணவை மென்று சாப்பிடாமல் விழுங்கிக்கொண்டிருந்தால், வயிற்று உப்புசம், உணவு எதுக்களித்தல், வாய்வுப்பெருக்கம் போன்ற குறிகுணங்கள் தோன்றும். அனைவரது வீட்டிலும் ஒரு கண்காணிப்பு கேமரா இருந்தால், கீழ்க்கண்ட நிகழ்வுகளைக் காணமுடியும். காலையில் பள்ளி செல்லும் குழந்தைகள் புத்தகங்களை பரபரப்பாகத் தேட, குடும்பத் தலைவர் அலுவலகம் செல்லும் அவசரத்தில் வேறு வேலை செய்துகொண்டே காலை உணவை வேகவேகமாக உட்செலுத்த, குடும்பத் தலைவியோ, இட்லித் துண்டுகளைக் குழந்தைகளின் வாயில் திணிக்க, மீதமிருக்கும் இட்லியை வேகமாக விழுங்கிவிட்டு, அவரும் அலுவலகம் செல்லும் அவசர யுகத்தில் உணவை மெதுவாக மென்று சாப்பிட முடியுமா? மென்று சாப்பிடுவதன் அறிவியலைப் புரிந்துகொண்டால்...

  உணவை நொறுக்குவதற்கு வாய்ப்பகுதியில் மட்டுமே பற்கள் இருக்கின்றன. வாய்ப்பகுதியைத் தாண்டிவிட்டால், தசைகளின் இயக்கங்கள் மற்றும் ரசாயனங்களின் சூட்சுமங்களின் மூலமே உணவுகளைக் கசக்கிப் பிழிந்து சாரத்தை உறிஞ்ச முடியும். செரிமானத்தை எளிமையாக்க பற்கள், தசைகள், ரசாயனங்கள் போன்றவற்றின் கூட்டுச் செயல்பாடு மிகவும் அவசியம். செரிமானத்தின்போது தசைகளும் ரசாயனங்களும் நாம் சொல்வதைக் கேட்காது. ஆனால், `உணவை நன்றாக நொறுக்கு’ என்று பற்களுக்கு ஆணையிடலாம் அல்லவா... பற்களைப் பயன்படுத்தி நொறுங்கத் தின்போம்!... 

  https://www.vikatan.com/news/health/136848-tips-for-healthy-eating.html

 6. 118. கிருஷ்ண லீலா

   

   

  முதலில் வினோத்துக்கு சிரிப்பு வந்தது. பேருந்தை விட்டு இறங்கிய சில நிமிடங்கள் அங்கேயே சாலை ஓரமாகச் சென்று அமர்ந்து அந்தக் குழலோசையைக் கேட்டுக்கொண்டிருந்தான். சிரிக்க வேண்டும்போலத் தோன்றியதால் அனுபவித்துச் சிரிக்கவும் செய்தான். பிறகுதான் அந்த ஓசை எங்கிருந்து வருகிறது என்று சுற்றுமுற்றும் பார்த்தான். ஓசைதான் அது. இசையல்ல. வாசிக்கத் தெரியாத யாரிடமோ ஒரு புல்லாங்குழல் சிக்கிக்கொண்டிருக்கிறது என்று நினைத்தான். அவன் ஏன் திருவண்ணாமலையில் இருந்துகொண்டு தான் வந்து இறங்கும் நேரத்துக்குச் சரியாக அதை ஊத வேண்டும்? ஆளை நேரில் பார்த்து விசாரித்துவிடுவது என்று முடிவு செய்துகொண்டு எழுந்தான்.

  அவன் அதற்கு முன் திருவண்ணாமலைக்கு வந்ததில்லை. சிவபக்தி மேலோங்கி சிவ ஸ்மரணையிலேயே கிடந்த நாள்களில் என்றாவது அங்கே போய்வர வேண்டும் என்று எண்ணிக்கொள்வான். ஆனால் முடிந்ததில்லை. விதியே போல இம்முறை திருவண்ணாமலை தன்னை இழுத்துத் தன் பக்கம் வரவழைத்துக்கொண்டிருக்கிறது என்று எண்ணிக்கொண்டு இறங்கிய கணத்தில் கேட்ட குழலோசை, அந்நகரின் மீது அவனுக்கு இருந்த பழைய பரவசமூட்டும் ஞாபகங்களைச் சற்று மட்டுப்படுத்தியது. தனக்கு ஏற்பட்டிருக்கும் ஊசலாட்டம் அவனுக்கு மிகவும் வெட்கமளித்தது. கிருஷ்ணா கிருஷ்ணா என்று சொல்லிக்கொண்டே இருந்தென்ன. மனத்தின் பக்குவம் அரைக்கும் கீழான வேக்காட்டில்தான் உள்ளது. நல்லது. தான் எத்தனைக் கீழானவன் என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு சந்தர்ப்பம் என்று நினைத்துக்கொண்டான்.

  குழலோசை கேட்ட திக்கில் அவன் நடந்துகொண்டிருந்தான். பேருந்து நிலையத்துக்குத் தெற்குப்புறமாக அந்த ஓசை வந்துகொண்டிருந்தது. அவன் வேறெதையும் கவனிக்காமல் ஓசையை மட்டுமே இலக்காக வைத்து நடந்தான். இரண்டு நிமிடங்களில் அவனுக்கு அந்த ஓசையின் பிறப்பிடம் தெரிந்துவிட்டது. கதவு பூட்டப்பட்டிருந்த ஒரு சிறு அடகுக் கடையின் வெளித் திண்ணையில் அமர்ந்திருந்த பெண்தான் ஒரு புல்லாங்குழலை வைத்து ஊதிக்கொண்டிருந்தாள். அது கச்சேரி வாசிக்கும் புல்லாங்குழல் அல்ல. திருவிழாக்களில் கிடைக்கும் சிறுவர்களுக்கான ஊதுகுழல். கணக்கு வழக்கின்றி ஒன்பது துவாரங்கள் அதில் இருந்தன. அந்தப் பெண்ணோ, முதல் மூன்று துவாரங்களை மட்டுமே பயன்படுத்தி ஊதிக்கொண்டிருந்தாள். மனத்துக்குள் அவள் ஏதோ ஒரு பாடலை அல்லது ஆலாபனையை உத்தேசித்திருக்கக்கூடும். ஆனால் வெளிப்பட்ட ஓசை கொடூரமாக இருந்தது.

  அவளைக் கண்டதும் வினோத் நின்றுவிட்டான். சிறிதுநேரம் அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். மிஞ்சினால் அவளுக்கு நாற்பது வயது இருக்கும் என்று தோன்றியது. தலைமுடியின் முன்புறம் முழுதும் நரைத்திருந்தது. பின்னால் அத்தனை வெளுப்பில்லை. வேர்க்கடலைத் தோலின் நிறத்தில் இருந்தாள். ஒழுங்காகத் தேய்த்துக் குளித்தால் இன்னமும் சற்றுப் பளிச்சென்று இருப்பாள் என்று தோன்றியது. ஆனால் அவள் குளித்துப் பல நாள்கள் ஆகியிருக்க வேண்டும். முகமெல்லாம் எண்ணெய் வழிந்துகொண்டிருந்தது. வாராத தலைமுடி காற்றில் அலைந்து ஆடிக்கொண்டிருந்தது. ஏராளமான சுருக்கங்களும் கிழிசல்களும் கொண்ட புடைவை ஒன்றை அணிந்துகொண்டிருந்தாள். ரவிக்கை கிழியாதிருந்தது. அவளுக்குப் பக்கத்தில் ஒரு அழுக்கு மூட்டை இருந்தது. கொஞ்சம் துணிகளும் ஒரு தட்டும் வெளியே தென்பட்டன.

  ஒரு பிச்சைக்காரியாகவோ, பைத்தியக்காரியாகவோ அவள் இருக்கலாம் என்று வினோத்துக்குத் தோன்றியது. போகலாம் என்று நினைத்த கணத்தில் அவள் ஊதுவதை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்துச் சிரித்தாள். அருகே வரும்படிச் சைகை செய்தாள். வினோத்துக்குப் போவதா வேண்டாமா என்று யோசனையாக இருந்தது. தன் மேலாடையின் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். அதில் சில சில்லறைகள் இருந்தன. அழைத்த மரியாதைக்கு நெருங்கிச் சென்று காசைப் போட்டுவிட்டுப் போய்விடலாம் என்று நினைத்து அவளை நெருங்கினான். அவன் நெருங்கி அருகே வரும்வரை சிரித்தபடியே இருந்தவள், கிட்டே வந்ததும், ‘சிவனிடமும் ஒரு குழல் உண்டு’ என்று சொன்னாள்.

  அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. அடுத்தக் கணம் அப்படியே அவள் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினான். எழவேயில்லை. வெகுநேரம் அப்படியே கிடந்தான். அவனை மீறி அழுகை வெடித்துச் சிதறியது. நெடுநேரம் அழுதுகொண்டே இருந்தான். பிறகு அவனே தன்னைத் தேற்றிக்கொண்டு எழுந்து அவள் எதிரே அமர்ந்து கைகூப்பினான். அந்தப் பெண் ஒன்றும் பேசவில்லை. கண்ணை இமைக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். பிறகு, ‘நீ பாவம். உன்னை அவன் மிகவும் படுத்துகிறான்’ என்று சொன்னாள்.

  ‘ஆம் தாயே. சிறு வயது முதல் நான் ஒரு சிவ பக்தனாகவே இருந்தேன். ஒரு நாளில் நடைபெற்ற ஒரு சம்பவத்துக்குப் பின் என் கவனம் முழுதும் கிருஷ்ணனின்பால் சென்றுவிட்டது. பல வருடங்களாக கிருஷ்ணனைத் தவிர வேறு எதையும் நான் நினைக்கவேயில்லை. திடீரென்று இப்போது சில நாள்களாக எனக்கு வினோதமான சம்பவங்களும் அனுபவங்களும் நேர்கின்றன’.

  ‘என்ன தோன்றுகிறது? சிவன்தான் உனக்கு உரியவன் என்றா?’

  ‘இல்லை. எனக்கு எதுவும் தோன்றவில்லை. குழப்பமும் அச்சமும்தான் மனமெங்கும் நிறைந்திருக்கிறது’.

  ‘சரிதான். குழப்பமும் அச்சமும் இருந்தால் கிருஷ்ணன் எப்படி இருப்பான் அல்லது சிவன்தான் எப்படி வந்து உட்காருவான்?’

  ‘தெரியவில்லை தாயே. இதற்கு விடைதேடித்தான் நான் இங்கே வந்திருக்கிறேன்’.

  ‘இங்கே என்றால்?’

  வினோத் ஒரு கணம் யோசித்தான். ‘ஆம். நான் திட்டமிட்டுத் திருவண்ணாமலைக்கு வரவில்லை. ஏறி உட்கார்ந்த பேருந்து என்னை இங்கே கொண்டுவந்து இறக்கிவிட்டது. இதுவும் சிவன் செயலாக இருக்குமோ என்ற ஐயம் இருக்கிறது’.

  அவள் சிரித்தாள். ‘என்னோடு வா’ என்று அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

  அது கிட்டத்தட்ட கிரிவலம்தான். மலையைச் சுற்றிவரும் பாதையில் அவள் போய்க்கொண்டே இருந்தான். வினோத்தும் அவள் பின்னால் நடந்துகொண்டே இருந்தான். இடையே இரண்டு முறை நின்று, ‘உனக்குப் பசிக்கிறதா? தாகம் எடுக்கிறதா?’ என்று அவள் கேட்டாள். வினோத் இல்லை என்று சொன்னான். அதற்குமேல் அவள் எதுவும் பேசாமல் நடந்துகொண்டே இருந்தாள். ஓரிடத்துக்கு வந்து சேர்ந்ததும், ‘சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொள். நாம் சிறிது தூரம் மலையில் ஏறவேண்டி இருக்கும்’ என்று சொன்னாள். வினோத் அங்கேயே அமர்ந்தான். அவள் தனது புல்லாங்குழலை அந்த அழுக்கு மூட்டைக்குள் சொருகியிருந்தது அவன் கண்ணை உறுத்திக்கொண்டே இருந்தது. சட்டென்று அதை எடுத்துப் பார்த்தான். அவள் சிரித்தாள். ‘ஊது’ என்று சொன்னாள். வினோத் அதைத் தன் வாயில் வைத்து ஊதினான். அவள் ஊதியபோது வந்தது போன்ற ஓசையே வந்தது.

  அவள் மீண்டும் சிரித்தபடி, ‘காற்றில் ஒன்றுமில்லை. குழலிலும் ஒன்றுமில்லை. துவாரங்களை மூடித் திறப்பதில்தான் உள்ளது’ என்று சொன்னாள்.

  ‘ஆம் தாயே. சரியாக மூடவும் சரியாகத் திறக்கவும் தெரிந்தவன் கலைஞன் ஆகிறான்’.

  ‘ஆனால் சரியாக மூடிக்கொள்ளத் தெரிந்தால் மட்டுமே நீ சன்னியாசி ஆவாய்’ என்று அவள் சொன்னாள். வினோத்துக்கு அவள் சொன்னதன் பொருள் உடனே புரியவில்லை. ஆனால் அவள் தன்னைக் குறிவைத்து அனுப்பப்பட்டவள் என்பது மட்டும் புரிந்துவிட்டது.

  சிறிது நேரம் கழித்து அவள், ‘புறப்படலாம்’ என்று சொன்னாள். அவன் எழுந்துகொண்டான். பாதையற்ற வழியில் அவள் முன்னால் உள்ள பாறைகளைப் பிடித்துக்கொண்டு மெல்ல மெல்ல ஏறிக்கொண்டிருந்தாள். வினோத்தும் அவளைப் பின்பற்றி மலையின் மீது ஏறிக்கொண்டிருந்தான். பத்து நிமிடங்களில் அவனுக்கு மூச்சு வாங்க ஆரம்பித்துவிட்டது. வியர்த்துக் கொட்டியது. அவள் திரும்பிப் பார்த்து, ‘முடியவில்லையா?’ என்று கேட்டாள். அவன் ஆம் என்று தலையசைத்ததும், ‘சரி அப்படியே உட்கார்’ என்று அவளும் ஒரு பாறையின் மீது அமர்ந்தாள். வினோத் உட்கார்ந்ததும் தனது மூட்டையைப் பிரித்து உள்ளிருந்து ஒரு சிறிய காகிதப் பொட்டலத்தை எடுத்தாள்.

  ‘என்ன அது?’

  ‘சிவ மூலிகை’ என்று அவள் சொன்னாள். அதை நன்றாகக் கசக்கி ஒரு சிறிய குழலுக்குள் திணித்தாள். மீண்டும் மூட்டைக்குள் கைவிட்டுத் தேடி ஒரு தீப்பெட்டியை எடுத்தாள். குழலை வாயில் வைத்து அதைப் பற்றவைத்தாள். அடி வயிறு வரை காற்றை இழுத்து புகையை உண்டாக்கினாள். பிறகு அந்தக் குழலை அவனிடம் கொடுத்து, ‘சாப்பிடு’ என்று சொன்னாள்.

  வினோத்துக்குத் தயக்கமாக இருந்தது. ‘பழக்கமில்லை’ என்று சொன்னான்.

  ‘ஒன்றும் செய்யாது. சாப்பிடு’.

  ‘சாப்பிடுவதா?’

  ‘ஆம். இழுப்பதல்ல இது. இது ஒருவித உணவு. சாப்பிடு’ என்று மீண்டும் சொன்னாள். மிகுந்த தயக்கமும் அச்சமும் பதற்றமும் மேலோங்க, வினோத் அந்தக் குழலைக் கையில் வாங்கினான். விரல்கள் நடுங்கின.

  ‘ஏன் இவ்வளவு அச்சப்படுகிறாய்? ஒன்றும் செய்யாது. சாப்பிடு’.

  அவன் வாயில் வைத்துப் புகையை இழுத்தான்.

  ‘உடனே விடாதே. உள்ளே தேக்கிவை’ என்று அவள் சொன்னதும், அவன் கண்ணை மூடிக்கொண்டு மனத்துக்குள் ஓம் பூஹு ஓம் புவஹ என்று சொல்ல ஆரம்பித்தான்.

  அவள் வாய்விட்டு உரக்கச் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் அவனது ஜபம் கலைந்து கண்ணைத் திறந்து பார்த்தான். வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் புகை வெளியேறியது.

  ‘மீண்டும் சாப்பிடு’ என்று சொன்னாள். அவன் மீண்டும் இழுத்தான். நான்கைந்து முறை இழுத்துவிட்டு அவளிடம் கொடுத்துவிட்டான். அவள் அதை வாங்கி, தானும் இரண்டு முறை இழுத்தாள். பிறகு எரிந்த பகுதியைக் கீழே கொட்டிவிட்டு, மிச்சமிருந்த இலைத் தூளை மீண்டும் காகிதத்துக்குள் போட்டு மடித்து மூட்டைக்குள் வைத்துக்கொண்டு, ‘இப்போது நாம் போகலாம். களைப்புத் தெரியாது’ என்று சொன்னாள்.

  வினோத்துக்குத் தன்னால் நடக்க முடியுமா என்று ஐயமாக இருந்தது. கால் பாதங்களுக்குள் யாரோ ஒரு மூட்டை பஞ்சை அடைத்துவைத்துவிட்டாற்போல் இருந்தது. காதுகளுக்குள் சூடாக ஒரு திரவம் வழிவதுபோல் இருந்தது. மூக்கு எரிந்தது. பசுமையற்ற மலைப்பரப்பின் வெளியெங்கும் பழுப்பு நிறத்துக்கு மாறித் தெரிந்தது. அவன் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். சிறிது தூரம் போனதும் அவன் நின்றான். அவள், ‘என்ன’ என்று கேட்டாள். வினோத் படபடப்பாகத் தொலை தூரத்தில் எதையோ சுட்டிக்காட்டினான். அவள் பார்த்துவிட்டு மீண்டும் ‘என்ன’ என்று கேட்டாள்.

  ‘அதோ.. அதோ.. என் கிருஷ்ணன் தெரிகிறான்.. அவன் என்னைக் கூப்பிடுகிறான்...’

  ‘முட்டாள். இங்கு யாருமில்லை’.

  ‘இல்லை. ஒளி தெரிகிறது பாருங்கள் தாயே. அதுதான். அது அவன்தான். கிருஷ்ணா...’ என்று கதறிக்கொண்டு ஓட ஆரம்பித்தான். பத்தடி ஓடுவதற்குள் அவனுக்குக் கால் தடுக்கியது. தடாலென்று கீழே விழுந்தவன் பிடிமானமின்றி அப்படியே உருள ஆரம்பித்தான்.

  (தொடரும்)

  http://www.dinamani.com/junction/yathi/2018/aug/29/118-கிருஷ்ண-லீலா-2989423.html

 7. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பால் கோவா கொழுக்கட்டை

   
  அ-அ+

  இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று பால் கோவா கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

   
   
   
   
  விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: பால் கோவா கொழுக்கட்டை
   

  தேவையான பொருட்கள் :  

  மேல் மாவு செய்ய:


  கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
  தண்ணீர் - ஒன்றே கால் கப்,
  உப்பு - சிட்டிகை,
  எண்ணெய் ஒரு டீஸ்பூன்.

  பூரணம் செய்ய:

  இனிப்பு கோவா - ஒரு கப்,

  உடைத்த பாதாம், முந்திரி - தலா 3 டீஸ்பூன்.
   
  201809121513301571_1_palkova-stuffed-kozhukattai._L_styvpf.jpg

  செய்முறை :

  தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு. பூரணம்

  ஒரு பாத்திரத்தில் இனிப்பு கோவா, உடைத்த பாதாம், முந்திரியை போட்டு ஒன்றாக சேர்த்து கலக்கவும். இதுவே பூரணம்.

  மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.  
   
  சூப்பரான பால் கோவா கொழுக்கட்டை ரெடி.

  https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/09/12151330/1190846/palkova-stuffed-kozhukattai.vpf

 8. 117. குழலோசை

   

   

  சென்னை வந்து இறங்கியதும் வினோத்துக்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை. மிகவும் குழப்பமாக இருந்தது. எங்கோ தடுமாறுகிறோம் என்று மட்டும் புரிந்தது. ஆனால் அதைக் குறிப்பாக எடுத்து நோக்க முடியவில்லை. தன்னையறியாமல் சிவனை நெஞ்சத்தில் இருந்து நகர்த்திவைத்தது பிழையோ என்று தோன்றியது. இதைக் குறித்து யாரிடமும் பேசவும் முடியாத அவலம் அவனை வதைத்தது. கழிந்த வருடங்களில் அவன் ஒரு சிறந்த கிருஷ்ண பக்தனாக சக பிரம்மச்சாரிகளாலும் சன்னியாசிகளாலும் கருதப்பட்டு வந்திருந்தான். கணப்பொழுதும் ஓய்வின்றி கிருஷ்ண கைங்கர்யங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தான். இரவு படுப்பதற்கு எந்நேரம் ஆனாலும் ஆயிரத்தெட்டு முறை ஹரே கிருஷ்ண ஜபம் செய்யாமல் படுக்கமாட்டான். ‘நாளெல்லாம் அதைத்தானே சொல்லிக்கொண்டிருக்கிறாய்? இரவு தனியே எதற்கு?’ என்று அவனது நண்பர்கள் சிலர் கேட்டபோதெல்லாம், ‘உறங்கும் நேரம் ஜபம் இருக்காது. அதை ஈடுகட்ட உறங்கும் முன் அதைச் செய்துவிடுகிறேன்’ என்று சொல்வான்.

  எதற்காக கிருஷ்ணன் தன்னை இலங்கை வரை அழைத்துச் சென்றான் என்று எப்படி யோசித்துப் பார்த்தும் அவனுக்கு விளங்கவில்லை. மீண்டும் பெங்களூருக்குச் சென்றால் தான் காணாமல் போனதற்கு விளக்கம் சொல்ல வேண்டும். உள்ளதை அப்படியே சொல்வதில் ஏதாவது சிக்கல் வரக்கூடும் என்று அவனுக்குத் தோன்றியது. தன்னெஞ்சறிய மாற்றிச் சொல்லவும் மனசாட்சி இடம் தராது என்று உறுதியாகத் தெரிந்தது. இது என்ன அவஸ்தை? இன்னொருவருக்கு நிரூபித்து விளக்குவதல்ல; தனக்கே இத்தடுமாற்றம் ஓர் அவமானமல்லவா? தெய்வம் ஒன்றுதான். அதில் சந்தேகமில்லை. அதைச் சிவமென்று எண்ணுவதையும் யாரும் தடைபோட இயலாதுதான். ஆனால் ஒரு பப்பாளிப் பழத்தைப்போல மனத்தை இரண்டாக வகிர்ந்து வைத்துக்கொண்டு வாழ்வது சிரமம். லயிப்பது சிரமம்.

  உறுத்தலுடனே அவன் நடந்துகொண்டிருந்தான். பூக்கடை பேருந்து நிலையத்தை நெருங்கிக்கொண்டிருந்தபோது எதிரே அவன் கேசவன் மாமா வருவதைப் பார்த்தான். அவர்தான் அது. சந்தேகமில்லை. காலம் விதைத்த புதிய அடையாளங்களை மீறி அது மாமாதான் என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. முழங்கை வரை நீண்ட சட்டையும் எக்கணமும் அவிழ்ந்துவிடலாம் என்று தோன்றும்படிக்கு இடுப்பில் கட்டிய வேட்டியும் நெற்றியில் இட்ட ஒற்றை ஶ்ரீசூர்ணமுமாக அவரைக் கண்டதுமே அவனுக்கு பகீரென்று ஆகிவிட்டது. அவர் பார்ப்பதற்குள் எங்காவது மறைந்துவிட வேண்டும் என்று நினைத்தான். அந்தக் கணம் அவன் கிருஷ்ணனை மறந்தான். சிவனை மறந்தான். அப்படியே தரையில் படுத்து உருண்டு எங்காவது ஓடிவிட்டால் தேவலாம் போலிருந்தது. மாமாவின் இரு கரங்களிலும் இரண்டு கட்டைப் பைகள் இருந்தன. லிங்கிச் செட்டித் தெருவில் வாங்கினால் சீப், என்.எஸ்.சி. போஸ் சாலையில் சல்லிசாகக் கிடைக்கும் என்று யாரோ எதைக் குறித்தோ அவருக்குச் சொல்லியிருக்க வேண்டும். திருவிடந்தையில் இருந்து பஸ் பிடித்து இவ்வளவு தூரம் இத்தனை காலை நேரத்தில் வந்திருக்கிறார் என்றால் எப்பேர்ப்பட்ட மனிதர்.

  வினோத் சுற்றுமுற்றும் பார்த்தான். சட்டென்று இடதுபுறம் வரிசையாகக் கடை வைத்திருந்த காய்கறிக்காரப் பெண்களைத் தாண்டிக் குதித்து மார்க்கெட்டுக்குள் நுழைந்தான். அவன் திரும்பிப் பார்த்தபோது மாமா அவனைப் பார்த்துவிட்டாற்போலத் தோன்றியது. அவனுக்கு அச்சமாகிவிட்டது. உடனே காய்கறி மார்க்கெட்டுக்குள் ஓடத் தொடங்கினான். இன்னொரு முறை திரும்பக் கூடாது என்ற உறுதியுடன் அவன் கால் போன போக்கில் ஓடிக்கொண்டே இருந்தான். எங்கெங்கோ சுற்றி, பூக்கடை பேருந்து நிலையத்தின் பின்புறமாக உள்ளே புகுந்து, முன் வழியாக வெளியே வந்து நின்று மூச்சுவிட்டான்.

  இப்போது மாமா தென்படவில்லை. அந்த வரை நல்லது என்று நினைத்துக்கொண்டான். அந்த இடத்தைவிட்டே போய்விட்டால் இன்னமும் நல்லது. ஒரு கணம்தான். உடனே அவனுக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. கொழும்புவுக்குக் கப்பலில் போய்க்கொண்டிருந்தபோது அவன் மாமாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தான். அந்தக் கடிதத்தில் தான் இலங்கையில் இருப்பதாகவும் அம்மா இறந்துவிட்டால் அத்தகவலை வீரகேசரியில் விளம்பரமாக வெளியிட வேண்டும் என்றும் அவன் கேட்டிருந்தான். ஏனென்றால், அவனோடு சென்ற குழுவில் பாதிப்பேர் கொழும்புவிலேயே தங்கும் எண்ணத்தில்தான் கப்பல் ஏறியிருந்தார்கள். கிருஷ்ணனுக்குக் கொழும்பு நகரில் ஒரு ஆலயம் அமைக்கும் திட்டத்தை எப்படியாவது வெற்றிகரமாக்கிவரும் பொறுப்பு அவர்களிடம் தரப்பட்டிருந்தது. அரசாங்க ஒத்துழைப்பைக் கோரிப் பெறுவது முதல் பணி. இடம் தேடுவது அடுத்தது. அதன்பின் சிறிதாக ஒரு குடிசை வீடு கட்டிக்கொள்ள முடிந்துவிட்டால் போதும். அங்கிருந்தபடியே கிருஷ்ண பக்தியைப் பரவச் செய்துவிட முடியும். பரவும் பக்தி பணம் பொருள்களைக் கொண்டுவந்து சேர்க்கும். பிறகு கோயிலைக் கிருஷ்ணன் கட்டிக்கொள்வான்.

  எப்படியானாலும் அடுத்த ஐந்தாண்டுகளேனும் தான் இலங்கையில்தான் இருப்போம் என்று எண்ணிக்கொண்டுதான் வினோத் கப்பல் ஏறியிருந்தான். ஆனால் கொழும்புவில் இறங்கிய மறுநாளே கப்பலேறி இந்தியா திரும்பவேண்டி வரும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. அந்தக் கடிதத்தை எழுதியிருக்க வேண்டாம் என்று இப்போது அவனுக்குத் தோன்றியது. எழுதியதுகூடப் பிழையில்லை. படித்துப் பார்த்துவிட்டுக் கிழித்துக் கடலில் போட்டிருக்கலாம். கர்ம சிரத்தையாகக் கொழும்பு துறைமுகத்தைவிட்டு வெளியேறும் முன்னரே கண்ணில் பட்ட தபால் நிலையப் பெட்டியில் அதனைச் சேர்த்துவிட்டுத்தான் அவன் பட்டணப் பிரவேசம் செய்தான்.

  மாமா கண்ணில் மட்டும் பட்டால், அவர் கேட்கும் முதல் கேள்வி அந்தக் கடிதத்தைப் பற்றியதாகத்தான் இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. அடுத்த வினா சித்ராவுக்குச் செய்த துரோகத்தைப் பற்றி. அதனால் குடும்பத்துக்கு நேர்ந்திருக்கக்கூடிய அவமானத்தைப் பற்றி. இவை அனைத்தையுமே அவனால் தகுந்த பதில் சொல்லிச் சமாளிக்க முடியும்தான். அவன் கிருஷ்ண பக்தனாக மட்டுமோ, சிவ பக்தனாக மட்டுமோ இருந்திருந்தால் அது சாத்தியம். சன்னியாசம் என்னும் உயர் நோக்கத்துடன் பயணம் செய்துகொண்டிருக்கும் ஒருவனுக்கு இரட்டைக் கடவுள்கள் அளிக்கும் இம்சை தாங்க முடியாததாக இருந்தது. இரண்டில் ஒன்றைத் தீர்மானம் செய்யாமல் தன்னால் யாரையுமே சந்திக்கவோ, எதிர்கொள்ளவோ முடியாது என்று தோன்றியது. அதனால்தான் கேசவன் மாமாவை ஐம்பதடி தொலைவில் கண்டதும் அவன் தலை தெரிக்க ஓடினான். இத்தனைக்கும் மத்தியில் தனக்கு அவரைக் கண்டதும் பாசமோ, அதை நிகர்த்த வேறெதுவோ உருவாகவில்லை என்பதையும் அவன் கவனித்தான். அது சற்று நிம்மதியளித்தது. ஒரு தெளிவு உண்டாகும்வரை இனி சுற்றிக்கொண்டே இருப்பது என்று முடிவு செய்தான். சட்டென்று அவனைக் கடந்து நகர்ந்த ஒரு பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டான்.

  ஏறும்போது அவன் அந்த வண்டி எங்கே போகிறது என்று பார்க்கவில்லை. ஏறி அமர்ந்து, நடத்துநர் அருகே வந்ததும் அதைக் கேட்டான். அவர் வினோத்தை ஒரு மாதிரி பார்த்தார். ‘நீங்க எங்க போகணும்?’ என்று பதிலுக்குக் கேட்டார். வினோத்துக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சில விநாடி யோசித்தான். அதற்குள் அவனுக்கு அருகே இருந்த மனிதர், ‘திருவண்ணாமலை’ என்று சொல்லி ஒரு டிக்கெட் வாங்கினார். வினோத்தும் உடனே திருவண்ணாமலை என்று சொன்னான். அவனிடம் சிறிது பணம் இருந்தது. திருவண்ணாமலை வரை டிக்கெட் வாங்குவதற்கு அது போதுமானதாக இருந்ததில் அவன் சற்று நிம்மதியானான். டிக்கெட் வாங்கிக்கொண்டு சாய்ந்து அமர்ந்தபோதுதான் திக்கென்றானது.

  திருவண்ணாமலை!

  சட்டென்று அருகே இருந்தவரிடம், ‘இந்த வண்டி திருவண்ணாமலை வரைதான் போகிறதா?’ என்று கேட்டான்.

  ‘ஆம். ஏன் கேட்கிறீர்கள்?’

  ‘ஒன்றுமில்லை’ என்று சொல்லிவிட்டான். ஆனால் அந்தக் கணம் முதல் அவனுக்கு உடலெல்லாம் நடுங்கத் தொடங்கியது. இதென்ன சொல்லிவைத்த மாதிரி இப்படி நடக்கிறது? சென்னை போய்ச் சேர்ந்த பின்பு என்ன செய்ய வேண்டும் என்று அந்தப் பெண்மணி வழிகாட்டுவார் என்று கிளம்பும்போது, அந்தத் துறைமுக அதிகாரி சொன்னது அவனுக்கு நினைவுக்கு வந்தது. பூக்கடைப் பேருந்து நிலையத்தில் அந்தக் காலை வேளையில் எத்தனையோ பேருந்துகள் எங்கெங்கோ கிளம்பிக்கொண்டிருந்தன. மிகச் சரியாக எப்படித் தான் திருவண்ணாமலை செல்லும் பேருந்தில் ஏறினோம்? புரியவில்லை.

  இதற்குமேல் இதனைப் பற்றிச் சிந்திக்கக் கூடாது என்று அவனுக்குத் தோன்றியது. சற்றும் உணர்ச்சிவசப்படாமல் நடப்பதை அதன் போக்கில் கவனித்துக்கொண்டே போவதுதான் சரி என்று நினைத்தான். கூடவே அவன் மனத்தில் இன்னொன்றும் தோன்றியது. இன்னொரு முறை அந்த ஒளிக்கோளத்தின் தரிசனம் கிடைத்தால் அதன் பின்னால் நிச்சயமாக எழுந்து போகக் கூடாது என்பதுதான் அது.

  தான் சரியாக இருக்கிறோம், சம நிலையில் இருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு உறங்க ஆரம்பித்தான். திருவண்ணாமலை சென்று சேரும்வரை அவன் உறங்கிக்கொண்டேதான் இருந்தான். பேருந்து நின்று அனைவரும் இறங்கிச் சென்றபின் நடத்துநர் வந்து அவனை எழுப்பினார்.

  ‘திருவண்ணாமலை வந்துவிட்டதா?’ என்று வினோத் பரபரப்பாக எழுந்தான். மண்ணில் கால் வைத்தபோது எங்கிருந்தோ புல்லாங்குழல் சத்தம் கேட்டது.

  (தொடரும்)

  http://www.dinamani.com/junction/yathi/2018/aug/28/117-குழலோசை-2988732.html

 9. கருணா விவகாரத்தில் கிழக்கு பல்கலைக்கழகம் வகித்த பங்கு - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குணசீலன்

   

   

  விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் கருணாவுக்கும் இடையில் ஏற்பட்ட பிளவிற்கு கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் சிவராம் போன்றவர்கள் காரணமாக இருந்தார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இந்த சந்தேகத்தை இந்நூலாசிரியர் துரைரத்தினமும் எழுப்பியிருக்கிறார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகு. குணசீலன் தெரிவித்தார்.

  ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம் என்ற நூல் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை சுவிட்சர்லாந்து செம்மாக்கிறேத்தன் ஸ்ரீகதிர்வேலாயுதசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்ற போது நூல் விமர்சன உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருபவருமான அழகு குணசீலன் இதனை தெரிவித்தார்.

  வைத்தியகலாநிதி விவேகானந்தன் ஜெயரூபன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அழகு குணசீலன் தொடர்ந்து உரையாற்றுகையில்...

  நாங்கள் ஏற்கனவே அறிந்த செய்திகளில் அவர் சொல்லாமல் விட்ட சம்பவங்களை அல்லது தன்னால் காலச்சூழல் கருதி சொல்ல முடியாமல் போன சம்பவங்களை இப்போது சொல்ல வேண்டும் என்ற மன உறுத்தலின் வெளிப்பாடாகவே இந்த நூலை அவர் எழுத தூண்டிருக்கலாம் என நினைக்கிறேன்.

  இது அவரின் நேர்மையான போக்கை வெளிப்படுத்துகிறது. இந்த நூலை வசித்த போது அவர் மீது எனக்கிருந்த விமர்சனங்கள் இல்லாமல் போய்விட்டது.

  கருணாவின் பிளவு, அந்த பிளவுக்கு பின்னணியில் இருந்தவர்கள், இந்த பிளவின் பின்னணியில் சிவராமிற்கு இருந்த பங்கு, கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு இருந்த பங்கு புலம்பெயர் நாடுகளில் இருந்தவர்கள் வழங்கிய துரோகி பட்டங்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம், என பல விடயங்களை இந்த நூலில் உள்ளடக்கி இருக்கிறார்.

  இனந்தெரியாத நபர்கள் என தான் செய்திகளில் சொன்ன விடயங்கள் யார் அந்த இனந்தெரியாதவர்கள் என்பதை இந்த சம்பவங்களை விபரிக்கும் போது தெளிவாக சொல்கிறார்.

  இந்த கொலைகளை விடுதலைப்புலிகள் செய்தார்கள், இந்த கொலைகளை ஏனைய இயக்கங்கள் செய்தார் என அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு ஆதாரத்துடன் அந்நம்பவங்களை விபரிக்கின்றார்.

  ஒரு பத்திரிகையாளன் காலம் கடந்த சூழலில் நடந்து வந்த பாதையை திரும்பி பார்த்து தன்னை சுயவிமர்சனம் செய்கிறார்.

  நான் இந்த செய்தியை மக்களுக்கு சொல்லியிருக்க வேண்டும், இனத்தின் நன்மைகருதி இதனை சொல்லாமல் விட்டிருக்கிறேன். பத்திரிகையாளன் என்ற நிலையில் இது தவறு என தன்னை சுயவிமர்சனம் செய்கிறார். இந்த சுயவிமர்சனம் நேர்மையான பத்திரிகையாளனுக்கு அவசியமாகும்.

  தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் பிளவு என்பது தொடர்ந்து வந்திருக்கிறது. ஜி.ஜி.பொன்னம்பலம்- செல்வநாயகம், பிரபாகரன் - உமாமகேஸ்வரன், பிரபாகரன் மாத்தையா, யோகி, கருணா என தொடர்ந்து பின்னர் கருணா பிள்ளையான் பிளவு என்று தொடர்கிறது.

  ஏனைய இயக்கங்களுக்கும் இதேநிலைதான் ஏற்பட்டிருக்கிறது. புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, ஈரோஸ் என அனைத்து இயக்கங்களும் பிளவு பட்டிருக்கின்றன. இந்த பிளவுகள் என்பது தமிழ் அரசியலில் புதிய விடயங்கள் அல்ல.

  தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் தான் உருவாக்கினார்கள் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அல்ல கிழக்கில் இருந்த பத்திரிகையாளர் சங்கம் தான் இந்த உருவாக்கத்தின் பின்னணியில் இருந்தது. பின்னர் 2004ல் தான் விடுதலைப்புலிகள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள் என்ற விடயத்தை இந்நூல் விளக்குகிறது.

  விடுதலைப்புலிகள் தேர்தல் அரசியலை நம்பியிருந்தவர்கள் அல்ல. தமது இலக்கை தேர்தல் அரசியல் மூலம் அடையலாம் என அவர்கள் ஒரு போதும் எண்ணியதில்லை. இது விடுதலைப்புலிகளின் அரசியலை தெரிந்தவர்களுக்கு புரியும் என அழகு குணசீலன் தெரிவித்தார்.

  இந்த நூல் அறிமுக விழாவில் விமர்சன உரையை ஊடகவியலாளர் சண்.தவராசாவும் நிகழ்த்தினார்.

  நூல் அறிமுக உரையினை மார்க்கண்டு ஜெயமோகனும் சிறப்புரைகளை ஐ.பி.சி தொலைக்காட்சி செய்திப் பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் பிரேம் சிவகுரு, தமிழ் ஆரவலர் கிருஷ;ணா அம்hலவாணர், கவிஞர் கல்லாறு சதீஸ் போன்றவர்கள் நிகழ்த்தினார்கள்.

   

  625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

  625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

  625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

  625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

  625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

  https://www.ibctamil.com/launch/80/105979?ref=imp-news

 10. ராஜீவ்-லலித் சந்திப்பின் விளைவு
  என்.கே. அஷோக்பரன் /

  தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி - 160)

  ராஜீவ் காந்தி - லலித் அத்துலத்முதலி இடையேயான சந்திப்பு பற்றி, இந்திய நாடாளுமன்றத்துக்கு அறிவித்த இந்திய வௌிவிவகார அமைச்சர் குர்ஷித் ஆலம் கான், இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில், இந்திய - இலங்கை உறவு தொடர்பான பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டனவெனவும் இலங்கை விரும்பும் பட்சத்தில், இலங்கைக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும், ஆனால், இலங்கைத் தீவின் இனப்பிரச்சினைக்கான தீர்வை, இறுதியில் இலங்கை அரசாங்கமே காணவேண்டுமென்று இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கையின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலியிடம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

  மேலும், ராஜீவ் காந்தி, இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது பற்றி, பலமான முறையில் தனது கரிசனையை அத்துலத் முதலியிடம் குறிப்பிட்டதையும் குர்ஷித் ஆலம் கான், தன்னுடைய அறிக்கையில் கோடிட்டுக் காட்டியிருந்தார். மறுபுறத்தில், இந்தப் பேச்சுவார்த்தையை லலித் அத்துலத்முதலி வெற்றியாகப் பார்த்தார். பேச்சுவார்த்தைகள், நட்புறவுடனும் பயனுள்ளதாகவும் அமைந்ததாக, ஜே.ஆரிடம் கருத்து வௌியிட்ட அத்துலத்முதலி, இந்திரா காந்தியைவிட, ராஜீவ் காந்தியின் அணுகுமுறை இலங்கைக்குச் சாதகமாக உள்ளதையும் சுட்டிக்காட்டினார். இந்தக் கொள்கை மாற்றத்தின் முதல் பலன், ராஜீவ் - அத்துலத்முதலி பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்த போதே இலங்கைக்குக் கிடைத்திருந்தது.

  1985 ஜனவரி 10ஆம் திகதியன்று, ஜோர்தானிலிருந்து கொழும்புக்குப் பயணமாகிக்கொண்டிருந்த பொதி சுமக்கும் விமானமொன்று, அவசரமாகத் தரையிறங்க வேண்டிய நிலையொன்றின் காரணமாக, தென்னிந்தியாவின் திருவானந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. குறித்த விமானத்தில், ஜோர்தானிலிருந்து இலங்கைக்கு இரகசியமாக வழங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் படைத்தளவாடங்கள் இருந்ததாக, தன்னுடைய கட்டுரையொன்றில் திலீப் பொப் குறிப்பிடுகிறார்.

  ராஜீவ் காந்தியின் தனிப்பட்ட தலையீட்டின் காரணமாக, எந்தத் தடையுமின்றி எரிபொருள் மீள்நிரப்பிய பின், குறித்த விமானம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் குறிப்பிடும் திலீப் பொப், அத்துலத்முதலியே இந்திரா காந்தியின் காலத்தில் இது சாத்தியமாகியிருக்காது என்று குறிப்பிட்டதாகவும் பதிவுசெய்கிறார். இலங்கை அரசாங்கத்தை அரவணைத்துப் போக, ராஜீவ் விரும்பியிருந்தார் என்பது இப்போது தௌிவாகியிருந்தது. ஆனால் அவர், ஜே.ஆரைச் சந்திப்பதில் உறுதியாக இருந்தார். அதற்கான அழைப்பையும், அவர் அத்துலத்முதலியூடாக அனுப்பி வைத்திருந்தார்.  

  ஜே.ஆரின் யுத்தப் பாதை

  ராஜீவ் காந்தி, இலங்கை விவகாரத்தை நட்புறவுடன் அணுக விரும்பியதில் தவறில்லை. ஒப்பீட்டளவில் இளைஞரான அவர், புதியதோர் அரசியல் அணுகுமுறையை விரும்பியிருந்தார். 

  ஆனால், அவருடைய அடிப்படை எண்ணம், பேச்சுவார்த்தை மூலம் இலங்கைப் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் தான் இருந்தது. அதிலும், தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களையும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளச் செய்யவேண்டும் என்ற எண்ணத்தை, அவர் கொண்டிருந்தார்.

  மறுபுறத்தில், ஜே.ஆர்., இந்திரா காந்தியின் ஆதிக்கப் போக்கிலிருந்து மாறுபட்ட ராஜீவின் நட்புறவுப் போக்கை, தன்னுடைய அரசியலுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் இராஜதந்திர உபாயத்தையே கையாண்டார். இராணுவ ரீதியான வெற்றியே ஜே.ஆரின் இலக்காக இருந்தது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக, அவர் அதற்காகவே தயாராகியிருந்தார்.

  ஜே.ஆரும், ஜே.ஆர். அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களும், யுத்தம் மூலம் இனப்பிரச்சினையை வெற்றிகொள்வது பற்றி சூளுரைக்கத் தொடங்கியிருந்தனர். அமைச்சரவையிலிருந்து விலக்கப்பட்டிருந்தாலும், தன்னுடைய பேரினவாத அரசியலை சிறில் மத்யூ கைவிடவில்லை. தமிழ் இளைஞர் ஆயுதக்குழுக்கள் முற்றாக அழித்தொழிக்கப்பட வேண்டுமென, அவர் அனல் கக்கப் பேசிக்கொண்டிருந்தார். பிரதமர் ரணசிங்ஹ பிரேமதாஸவும், இதற்கு விதிவிலக்கல்ல.

  பிரிவினைவாதிகள் ஆபத்தானவர்கள், அவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதே, அவரது வீராவேசப் பேச்சாக இருந்தது. தேசிய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி, யுத்த முழக்கம் செய்வது போல, நாடு தாக்குதலுக்குத் தயாராக இருக்கிறது, நாம் அவர்களைத் தோற்கடித்தே தீருவோம் என்று சூளுரைத்தார்.

  இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, 1985 பெப்ரவரி இறுதியில், ஜே.ஆர். ஆற்றிய கொள்ளை விளக்க உரையொன்றில், நாடு இறுதி யுத்தத்துக்குத் தயாராகிவிட்டிருந்தது என்று முழங்கியிருந்தார். தொடர்ந்து, நாடு முழுவதும் யுத்தத்துக்கு ஆதரவு திரட்டும் முகமான பிரசாரங்கள், சிறிது சிறிதாக முன்னெடுக்கப்படத் தொடங்கின.   

  ராஜீவுக்கு, ஜே.ஆர் எழுதிய கடிதம்

  இதேவேளை, இந்தியாவை இராஜதந்திர ரீதியில் சமாளித்துப் போகும் அவசியத்தையும் உணர்ந்த ஜே.ஆர்., 1985 மார்ச் 1ஆம் திகதி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கு, இராஜதந்திர ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். ஜே.ஆர் என்ற அரசியலில், பழுத்த “ஆசியாவின் நரியின்” இராஜதந்திர அறிவின் சாற்றை, அந்தக் கடிதத்தில் காணலாம்.

  பொது நெறிமுறைகளையும் சம்பிரதாயங்களையும் கடந்து, தனிப்பட்ட உறவை உணர்த்தும் வகையில் “என் அன்புக்குரிய ராஜீவ்” என்று தனது கடிதத்தை ஆரம்பித்த ஜே.ஆர்., “நான் இந்தியாவினதும் அதன் மக்களதும் நண்பன், அதன் பாரம்பரியத்தை ரசிப்பவன், அம்மண் தந்த மிகச்சிறந்த புதல்வனின் வழியைப் பின்பற்றுபவன்” என்று குறிப்பிட்டதுடன் தொடர்ந்து ராஜீவின் பாட்டனாரும் இந்தியாவின் முதல் பிரதமருமான பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கும் தனக்கும் இடையிலான நெருங்கிய உறவு பற்றிச் சிலாகித்து எழுதுகிறார்.

  நேரு குடும்பத்தின் நண்பனாக தன்னை வர்ணித்த ஜே.ஆர்., இந்த நட்பு, ஜவஹர்லால் நேருவை 1939இல் அவருடைய இலங்கை விஜயத்தின் போது, தன்னுடைய வீட்டில் உபசரித்தது முதல் உருவானது என்றும் அது இப்போது, நேரு குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை வரை தொடர்வதையும் கோடிட்டுக் காட்டுகிறார்.

  நேருவை தன்னுடைய நாயகர்களில் ஒருவராக வர்ணித்ததுடன், அவரும் இந்தியாவின் ஏனைய பல தலைவர்களும் விரும்பிய அஹிம்சை வழியையே தானும் நேசிப்பதாகக் குறிப்பிடுகிறார். 

  தன்னுடைய இந்திய விஜயத்தின் போது, நேருவின் அலஹாபாத் இல்லத்தில் தான் சில நாள்கள் விருந்தினராகத் தங்கியதைக் குறிப்பிட்ட ஜே.ஆர்., நேருவின் சிறைவாசத்தின் போது, தமக்கிடையே இருந்த கடிதத் தொடர்பையும் அந்தக் கடிதங்களின் நகல்களைத் தான் நேரு ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தமையும் கோடிட்டுக் காட்டுகிறார்.

  இந்த ஆலாபனைகளைத் தொடர்ந்து, அண்மைக்கால இலங்கை - இந்திய உறவின் நிலை பற்றிக் குறிப்பிட்ட ஜே.ஆர், துரதிர்ஷ்டவசமாக, நீங்களும் நானும் அறிந்த அண்மைக்காலப் பிரச்சினைகளால், எம் இரு நாடுகளிடையேயான உறவு பாதிப்படைந்துள்ளது என்று எழுதியதுடன், இந்த நிலையை மாற்றியமைக்கத் தான் விரும்புவதாகவும் இதுபற்றி தன்னுடைய அமைச்சரிடம் (அத்துலத் முதலியிடம்) சில நாள்கள் முன்னர் ராஜீவ் காந்தி குறிப்பிட்ட விடயங்கள் தனக்கு மகிழ்ச்சி தருவதாகவும் இதனால், ஏலவே எழுந்துள்ள முட்டுக்கட்டை நிலையை மாற்றுவதற்கான புதிய முயற்சிகளை எடுக்கும் ஊக்கம் பிறந்துள்ளதாகவும், அதற்காகத் தான் ராஜீவ் காந்தியைச் சந்தித்துக் கலந்துரையாட விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

  ஆனால் அந்தச் சந்திப்புக்கு முன்பதாக, ராஜீவ் காந்தியின் மனநிலையை அறிந்துகொள்வதற்காக, அவருடைய முக்கிய அதிகாரி ஒருவரை கலந்தாலோசனைக்காக இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்ட ஜே.ஆர், அதன் மூலமாக, ராஜீவின் மனநிலையைப் புரிந்துகொள்வதுடன், இருவரும் சந்திக்கும் போது, தற்போதுள்ள பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பொது அணுகுமுறையொன்றைக் கையாள உதவும் என்று குறிப்பிட்டிருந்தார்.

  தொடர்ந்தும், ராஜீவ் காந்தியின் அண்மையை பேச்சுகள் தொடர்பில் தன்னுடைய மகிழ்ச்சியைப் பதிவுசெய்த ஜே.ஆர்., அது, எதிர்கால உறவுகள் பற்றி தனக்குப் புதிய ஊக்கத்தைத் தந்திருப்பதாக எழுதியதுடன், தன்னுடைய அண்மைக்காலப் பேச்சுகளை, ஊடகங்கள் திரிபுபடுத்துவதாகக் கோடிட்டுக் காட்டியதுடன், அதனால் ஏற்பட்டிருக்கக்கூடிய குழப்பங்களைக் களைவதற்காக, தான் அண்மையில் ஆற்றிய கொள்கைவிளக்க உரையின் மூலப் பிரதியை, குறித்த கடிதத்துடன் இணைத்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.

  அடுத்ததாக, இலங்கையின் இனப்பிரச்சினை பற்றிய விடயத்தினுள் நுழைந்த ஜே.ஆர்., உலகின் பலபாகங்களிலும் பயங்கரவாதம் எனும் அசிங்கமான தலை உயர்வதாகத் தெரிவித்ததுடன், இலங்கைப் பிரச்சினையை, இந்தியாவின் வடகிழக்கு மற்றும் பஞ்சாப் ஆகிய பிராந்தியங்களில் எழுந்துள்ள பிரச்சினையுடன் ஒப்பிட்டார்.

  மேலும், இந்தியாவின் பாரிய நிலப்பரப்பு அளவின் காரணமாக, ஒரு மூலையில் இடம்பெறும் பயங்கரவாதம், முழு நாட்டையும் பாதிப்பதில்லை என்பதை கோடிட்டுக் காட்டியவர், இலங்கை என்று சிறிய நிலப்பரப்பில் ஒரு இடத்தில் இடம்பெறும் பயங்கரவாதம், முழுநாட்டையும் ஆபத்தில் தள்ளுகிறது என்று குறிப்பிட்டார்.

  அடுத்ததாக, சர்வகட்சி மாநாடு பற்றி எழுதிய ஜே.ஆர்., வடக்கு - கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைத்த பிராந்திய சபை மற்றும் நாடாளுமன்றத்துக்கான இரண்டாவது அவை என்ற இரண்டே இரண்டு விடயங்கள் தொடர்பில் மட்டுமே, சர்வ கட்சி மாநாட்டில், தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் இணக்கம் காணப்பட முடியவில்லை என்று குறிப்பிட்டதுடன், அரசியல் தீர்வொன்றை எட்டும் வகையில், மாகாண சபைகளூடான அதிகாரப் பகிர்வு முறை பற்றி, தொடர்ந்தும் தமிழ் ஐக்கிய விடுதலைக் கூட்டணியுடன் பேசத் தயாராக இருப்பதாக, தன்னுடைய கடிதத்தில் பதிவுசெய்தார்.   

  இறுதியாக, ஜே.ஆர் குறிப்பிட்ட விடயம் முக்கியமானது. நான் உங்களிடம் ஒரு சிறிய கோரிக்கையைத் தான் முன்வைக்கிறேன் என்று தொடங்கியவர், நாம் பயிற்சி முகாம்கள் பற்றிய பிரச்சினையை மறந்துவிடுவோம். தென்னிந்தியாவில், இலங்கைப் பயங்கரவாதிகளின் நடமாற்றம் பற்றி, அவர்களது திட்டமிடுதல்கள் பற்றி மறந்துவிடுவோம். நான் உங்களிடம் கேட்பதெல்லாம், அவர்கள் ஆயுதங்களுடன் இலங்கைக்கு வருவதைத் தடுக்குமாறு தான். அதேவேளை, இலங்கையர்கள் உங்கள் நாட்டில் தஞ்சம் பெறுவதைத் தடுக்கவும் முடியுமா என்று ஜே.ஆர் வினயமாக வேண்டினார். இதனை நாம் இணைந்துச் செய்வதற்கான பொதுத்திட்டமொன்றுக்கு இணங்க முடியுமானால், நான் யுத்தத்திலுள்ள இராணுவத்தை மீளப்பெற முடியும் என்பதோ, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதுடன், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கை அதன் இயல்பு நிலைக்கு மீளக் கொண்டுவர முடியும் என்று குறிப்பிட்டார்.

  உயிரையும் உடமைகளையும் பறிக்கும் இந்தப் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான இந்த நடவடிக்கையை, நீங்கள் நிச்சயம் செய்வீர்கள், அது உங்கள் அயலவனின் அமைதியாக வாழ்க்கை மீளத்திரும்ப உதவும் என்று எழுதிய ஜே.ஆர்., எல்லை கடந்த பயங்கரவாதம், இரண்டு நாட்டினதும் ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்றும் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு, இந்தப் பயங்கரவாதமே பிரதான முட்டுக்கட்டையாக இருப்பதாக, இலங்கையின் பிரதான அரசியல் கட்சிகள் யாவும் கருதுவதாகவும் பதிவுசெய்தார்.

  இறுதியாக, எங்களுடைய பிரச்சினையைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், இது தற்போது உங்களுடைய பிரச்சினையும் கூட. ஆகவே, உதவி செய்யுங்கள் என்று வினயமாக வேண்டி, தனது கடிதத்தை முடித்திருந்தார்.   

  பல விடயங்களைத் தொட்டுச் சென்றாலும், இந்தக் கடிதத்தில் மேவிநிற்கும் பொருள் ஒன்று தான். இன்று இலங்கையினதும் இந்தியாவினதும், உலகினதும் பெரும்பிரச்சினை பயங்கரவாதமாகும்.  அதனை இல்லாதொழிப்பதுதான், முதல் கடமை. அதையே இனப்பிரச்சினைத் தீர்வினதும் முதற்படியாக ஜே.ஆர். குறிப்பிட்டிருந்தார்.

  இதில், ராஜீவ் காந்திக்கும் இணக்கம் இருப்பதாகவே தெரிந்தது. ஆனால், இருவரும் ஓர்  இடத்தில் வேறுபட்டனர். ராஜீவ் தமிழ் இளைஞர் ஆயுதக் குழுக்களை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைக்க விரும்பினார். ஜே.ஆரின் எண்ணம், யுத்த ரீதியான வெற்றியை நோக்கியே இருந்தது.  

  (அடுத்த திங்கட்கிழமை தொடரும்)    

  http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ராஜீவ்-லலித்-சந்திப்பின்-விளைவு/91-221506

 11. 116. கப்பல்

   

   

  இருளில் ஒரு பூனையின் கண்களைப் போல அந்தக் கிழவியின் கண்கள் மின்னிக்கொண்டிருந்தன. ஆனால் அவள் பார்வையில் உணர்ச்சிகள் இல்லை. வெறியோ, கோபமோ இல்லை. அனைத்தையும் அந்த ஒரு அடியில் இறக்கிவைத்துவிட்டவள் போல அமைதியாக வினோத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். தடுமாறிக் கீழே விழுந்த வினோத், ஒன்றும் புரியாமல் மீண்டும் எழுந்து நின்றபோது அவள் சட்டென்று நடந்துபோக ஆரம்பித்தாள். இப்போது தான் என்ன செய்ய வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவளை அழைப்பதா, எதற்கு அடித்தாள் என்று கேட்பதா, அல்லது போகிறவளை அவள் வழியில் போகவிட்டுவிட்டுத் தன் இருப்பிடத்துக்குத் திரும்பிவிடுவதா என்று குழப்பமாக இருந்தது. அவள் சித்தம் கலங்கியவளாக இருக்கக்கூடும் என்று நினைத்தான். பத்தடி தூரம் நடந்து சென்றவள் ஒரு கணம் நின்று அவனைத் திரும்பிப் பார்த்தாள். இது வினோத் எதிர்பாராதது. ‘வா’ என்று அழைப்பது போலத் தலையை அசைத்தாள். போவதா, வேண்டாமா என்று தெரியாமல் மேலும் சில கணங்கள் யோசித்துவிட்டு, தன்னையறியாமல் அவள் பின்னால் நடக்கத் தொடங்கினான்.

  விடியும்வரை அவள் நடந்துகொண்டே இருந்தாள். வினோத்தும் ஒன்றும் பேசாமல் அவள் பின்னால் போய்க்கொண்டிருந்தான். அவ்வப்போது அவன் பின்னால் வருகிறானா என்று அவள் திரும்பிப் பார்த்ததுடன் சரி. ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. தான் ஏன் பைத்தியம்போல அவள் பின்னால் போய்க்கொண்டிருக்கிறோம் என்று அவனுக்குக் குழப்பமாக இருந்தது. ஒரு கிழவி. வயதானவள். சித்தம் கலங்கியவளாக இருக்கலாம். அவள் தன்னை அடித்ததன் காரணத்தைக் கேட்டிருக்கலாம். அல்லது திருப்பித் தாக்கிவிட்டுப் போயிருக்கலாம். அதையும் செய்யாமலேகூடப் போயிருக்க முடியும். இந்த மூன்றையும் செய்யாமல் அவள் பின்னால் தான் ஏன் போய்க்கொண்டிருக்கிறோம் என்று அவனுக்குப் புரியவில்லை. இருப்பினும் அவளைப் பின்தொடர்ந்து போவதைத் தன்னால் தவிர்க்க முடியாது என்று நினைத்தான்.

  நடந்துகொண்டே இருந்தவள் சூரிய உதய சமயத்தில் துறைமுகத்தை வந்து சேர்ந்தாள். திரும்பி வினோத்தைப் பார்த்தாள். இம்முறை அவன் நெருங்கும்வரை அசையாமல் நின்றிருந்தாள். அவன் அருகே வந்ததும் சிங்களத்தில் உரக்க ஏதோ சொன்னாள். அவனுக்கு அது புரியவில்லை. என்ன என்று கேட்டான். அவள் மீண்டும் சிங்களத்தில் ஏதோ சொன்னாள். முதல் முறை பயன்படுத்திய சொற்களைக் காட்டிலும் இம்முறை அதிக சொற்களை அவள் பேசினாள். வினோத்துக்கு அவள் பைத்தியம் இல்லை என்று தெரிந்தது. ஆனால் அவள் சொல்வதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. கையை ஆட்டி ஜாடை காட்டியபடி பேசினால்கூடப் புரிந்துகொள்ளச் சற்று வசதியாக இருக்கும். ஆனால் அவள் அப்படிச் செய்யவில்லை. கைகளை அசைக்காமல், முகத்தில் எந்த உணர்ச்சி பாவத்தையும் காட்டாமல் குரலில் மட்டும் ஏற்றத் தாழ்வுகளை வைத்து ஒலிபரப்பிக்கொண்டிருந்தாள்.

  ‘அம்மா, எனக்கு நீங்கள் பேசும் மொழி தெரியாது. தமிழ் தெரிந்தவன் நான். சிறிது ஆங்கிலமும் அறிவேன். இந்த இரு மொழிகளில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் பேசினால் என்னால் புரிந்துகொள்ள முடியும். அல்லது வேறு யாருடைய உதவியையாவது பெற்று நீங்கள் சொல்ல விரும்புவதை எனக்குத் தெரிவிக்கலாம்’ என்று அமைதியாகச் சொன்னான்.

  இதற்கும் அவள் சிங்களத்திலேயே வேக வேகமாக ஏதோ பதில் சொன்னாள். வினோத் சுற்றுமுற்றும் பார்த்தான். உதவிக்கு யாராவது வருவார்களா என்பதே அவனது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் ஒவ்வொருவரிடமும் சென்று ‘உங்களுக்குத் தமிழ் தெரியுமா?’ என்று கேட்கத் தயக்கமாக இருந்தது. யுத்த காலத்தில் அது சற்றுப் பொருத்தமற்ற வினாவாக இருக்கும் என்றும் தோன்றியது.

  மேலும் சில நிமிடங்கள் அவனுக்கு இந்த அவஸ்தை நீடித்தது. ஒரு கட்டத்தில் அவள் மீண்டும் அவன் கன்னத்தில் பளாரென்று அறைந்து, மீண்டும் சிங்களத்தில் ஏதோ சொன்னாள். உண்மையிலேயே வினோத்துக்கு மிகவும் பரிதாபமாகப் போய்விட்டது. அவள் அடித்தது இம்முறை அவனுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. ஒரு மூதாட்டியைத் தான் ஏதோ ஒரு விதத்தில் அசௌகரியப்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்று கருதினான். என்ன செய்யலாம் என்று அவனுக்குப் புரியவில்லை. சட்டென்று நெடுஞ்சாண்கிடையாக அவள் காலில் விழுந்து கும்பிட்டு எழுந்து நின்றான்.

  ‘என்னால் உங்களையும் உங்கள் மொழியையும் புரிந்துகொள்ள முடியவில்லை அம்மா. நான் இந்தியாவில் இருந்து வந்திருக்கிறேன். ஒரு கிருஷ்ண பக்தன். சன்னியாசி இல்லை. ஆனால் விரைவில் அப்படி ஆகிவிடுவேன். இரு மொழிகள் தெரிந்த யாரேனும் உதவினால் என்னை உங்களுக்கு விளங்கவைக்க முடியும். அதே போல நீங்கள் சொல்வதையும் நான் விளங்கிக்கொள்ளப் பார்ப்பேன். அது நடக்காமல் நம் உரையாடலுக்கு ஒரு முடிவே இருக்காது’ என்று சொன்னான்.

  இம்முறை அவள் பதில் சொல்லவில்லை. சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். பிறகு வா என்று தலையசைத்துவிட்டு மீண்டும் நடக்க ஆரம்பித்தாள். துறைமுகத்தில் அவளுக்கு யாரையோ தெரிந்திருந்தது. அவரிடம் சென்று ஏதோ பேசினாள். அந்தக் காலை வேளையில் அவளைப் பொருட்படுத்திக் கேட்கவும், அவள் சொன்னதற்குத் தலையசைத்துவிட்டு உள்ளே போகவும் அங்கே ஒருவர் இருந்தார்.

  பத்து நிமிடங்களில் திரும்பி வந்தவர், மீண்டும் அவளிடம் ஏதோ சொன்னார். வினோத்தைப் பார்த்து வா என்று சைகை செய்தார். வினோத்துக்கு ஒன்றும் புரியவில்லை. அவள் போ போ என்று அவனை அவசரப்படுத்தினாள். வேறு வழியின்றி வினோத் அவரோடு துறைமுகத்துக்குள் நுழைந்தான். அந்தப் பெண்மணி அவன் போவதையே பார்த்துக்கொண்டிருந்துவிட்டு வெளியேறிப் போனாள்.

  வினோத்தை உள்ளே அழைத்துச் சென்ற நபர், அவன் கையில் ஒரு டிக்கெட்டைக் கொடுத்தார்.

  ‘என்ன?’ என்று வினோத் கேட்டான்.

  ‘நீங்கள் இந்தியாவுக்குப் போய்விடுங்கள். இங்கே இருக்க வேண்டாம்’ என்று அவர் ஆங்கிலத்தில் சொன்னார்.

  ‘ஏன்?’

  ‘அது எனக்குத் தெரியாது. ஆனால் இதை உங்களிடம் சொல்லச் சொல்லி அந்தப் பெண்மணி சொன்னார்’.

  ‘அவர் யார்?’

  ‘அவர் ஒரு சன்னியாசினி. பார்த்தால் அப்படித் தெரியாது. எனக்கு அவரை வெகு காலமாகத் தெரியும்’.

  ‘ஐயா நான் கிருஷ்ண பக்த இயக்க நண்பர்களுடன் இங்கே வந்திருக்கிறேன். எனது நண்பர்கள் கொழும்பு நகரில்தான் தங்கியிருக்கிறார்கள். நேற்றுத்தான் நாங்கள் இங்கே வந்து இறங்கினோம். இப்போது என்னைக் காணாமல் அவர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள். நான் திரும்பிச் செல்ல ஒரு காரணம் தேவையல்லவா?’

  ‘அது எனக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் போய்விட வேண்டும் என்று அவர் சொன்னார்’.

  வினோத்துக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. ‘வேறு ஏதேனும் சொன்னாரா?’ என்று கேட்டான்.

  சிறிது யோசித்துவிட்டு, ‘போக மறுத்தாலும் விடாதீர்கள். எப்படியாவது கப்பல் ஏற்றிவிடுங்கள் என்று சொன்னார்’.

  அவனுக்கு உண்மையில் மிகுந்த குழப்பமாகிவிட்டது. என்ன காரணமாயிருக்கும் என்று திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தான். ஒன்றும் விளங்கவில்லை. அவளைச் சந்திக்கும் முன்னர், ஒளிக் கோளம் தன்னை ஏன் ஒரு சிவன் கோயிலுக்கு அழைத்துச் சென்றது என்ற குழப்பம் மட்டுமே அவனுக்கு இருந்தது. இப்போது அந்தப் பெண் சன்னியாசி எதற்காகத் தன்னை இந்தியாவுக்குத் திரும்பச் சொல்கிறாள் என்ற குழப்பம் சேர்ந்துகொண்டது.

  ஆனால் நெடுநேரம் அவனால் நின்று யோசித்துக்கொண்டிருக்க முடியவில்லை. அந்தத் துறைமுக ஊழியர் அவனை அவசரப்படுத்தி அழைத்துச் சென்று புறப்படத் தயாராக இருந்த ஒரு சரக்குக் கப்பலில் ஏற்றிவிட்டு, ‘ஊர் போய்ச் சேருங்கள். உங்களைச் சேர வேண்டிய தகவலை அவர் எப்படியாவது உங்களுக்குத் தெரியப்படுத்துவார்’ என்று சொன்னார். இதுவும் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதற்குமேல் என்ன பேசுவது என்று அவனுக்குத் தெரியவில்லை. பத்திருபது பயணிகளும் நிறைய சரக்கு மூட்டைகளும் பெரிய பெரிய சரக்குப் பெட்டிகளும் மட்டும் இருந்த அந்தக் கப்பலில் அவன் ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்துச் சென்று அமர்ந்துகொண்டான்.

  அவனது நண்பர்களும் சன்னியாசிகளும் இந்நேரம் கண் விழித்து எழுந்திருப்பார்கள். அவனைக் காணாமல் கவலைப்படுவார்கள். முடிந்தவரை தேடுவார்கள். உடனே பெங்களூருக்குத் தகவல் தர முயற்சி செய்வார்கள். அவர்களுக்கு எப்படி இந்த விவரத்தைத் தெரிவிப்பது என்று அவனுக்குப் புரியவில்லை. யாரோ ஒரு பெண் சொன்னதைக் கேட்டுத் தான் எதற்காகக் கப்பல் ஏறினோம் என்று ஒரு கணம் நினைத்தான். ஆனால் தன்னால் அதைச் செய்யாமல் இருந்திருக்க முடியாது என்றும் தோன்றியது. தனக்கு மட்டும் ஏன் இம்மாதிரியான அனுபவங்கள் நிகழ்கின்றன என்று அவனுக்குப் புரியவில்லை. சிறிது கவலையாக இருந்தது. கண்ணை மூடிக்கொண்டு கிருஷ்ணனை நினைக்க முயற்சி செய்தான்.

  மூடிய விழிகளுக்குள் ஒரு புள்ளியைப் போல சிறிதாக ஒரு சிவலிங்கம் தோன்றியது. அதை அவன் எதிர்பார்க்கவில்லை. கணப் பொழுதில் அந்தப் புள்ளி ஒரு பலூனைப் போல விரிவடைந்துகொண்டே சென்று பிரம்மாண்டமாக விண்ணையும் மண்ணையும் அடைத்து நின்ற ஒரு பேருருவமாக உருக்கொண்டது. அத்தனை பெரிய லிங்க ரூபத்தை அவன் அதற்குமுன் தரிசித்ததில்லை. சிலிர்த்தது. மறுகணம் கண்ணைத் திறந்தான்.

  கப்பல் புறப்பட்டுப் போய்க்கொண்டிருந்தது.

  (தொடரும்)

  http://www.dinamani.com/junction/yathi/2018/aug/27/116-கப்பல்-2988464.html

 12. கருணாவின் பிரிவில் சிரேஸ்ட ஊடகவியலாளர் சிவராம்! காலம் கடந்து வெளிவரும் உண்மைகள்

   

   

  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரிந்த விடயம் ஊடகவியலாளர் சிவராமிற்கு தெரியும் என இரா.துரைரத்தினம் தனது நூலில் சுட்டிக்காட்டுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான அழகு குணசீலன் தெரிவித்துள்ளார்.

  ஊடகவியலாளர் இரா.துரைரத்தினத்தின் செய்திகளின் மறுபக்கம் என்ற நூல் அறிமுகவிழா சுவிஸ் நடைபெற்றுள்ளது.

  கருணாவின் பிளவில் மறைக்கப்பட்டுள்ள இன்னும் பல விடயங்கள்.. ( காலம் கடந்து வெளிவரும் உண்மைகள்)

  • கருணா பிரிவதற்கு முன் சிவராம் எதற்காக கொக்கட்டிச்சோலைக்கு சென்றார்?

   

  • நீண்ட கால நண்பனான நூலாசிரியர் இரா.துரைரத்தினத்திடம், சிவராம் கொக்கட்டிச்சோலை பயணத்தை மறைத்தது ஏன்?

   

  • உண்மையில் சிவராமின் நிலை என்ன எனும் பல மர்ம முடிச்சுக்களுக்கு பதில் வழங்குகின்றார் செய்திகளின் மறுபக்கம் நூலின் ஆசிரியர் இரா.துரைரத்தினம்.

  இந்த புத்தகத்தில் இன்னும் 29 சிறப்பு அரசியல் தொகுப்புக்கள் உள்ளன.

  அவற்றை பெற்றுக் கொள்ள வேண்டுமானால் கீழ் காணும் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளுங்கள்.

  இரா.துரைரத்தினம்
  0041795556902
  thurair@hotmail.com

   

   

  625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

   

  https://www.tamilwin.com/politics/01/192948?ref=imp-news

 13. 115. இருவர்

   

   

  தன் வாழ்நாளில் மீண்டும் ஒருமுறை அந்தப் பேரொளியின் தரிசனம் கிட்டுமா என்று வினோத் அந்த முதல் தரிசனம் நிகழ்ந்த கணத்தில் இருந்து ஏங்கிக்கொண்டிருந்தான். இன்னொரு முறை அப்படியொரு தரிசனம் கிடைக்குமானால், கண்டிப்பாக ஒளியின் ஊடே கிருஷ்ணனைத் தரிசித்துவிட முடியும் என்று அவன் மனத்தில் உறுதியாகத் தோன்றியது. விழித்திருந்த நேரமெல்லாம் அதைக் குறித்து மட்டுமே அவன் யோசித்துக்கொண்டிருந்தான். ஆனால் என்ன யோசித்தும் அந்த முதல் தரிசன அனுபவத்தை மீளக் கொண்டுவர முடியவில்லை. இடைவிடாது பக்தி செய்வதன் மூலம் மட்டுமே இறைவனை அறிய முடியும் என்று திரும்பத் திரும்ப அவனுக்குச் சொல்லித் தரப்பட்டிருந்தது. அவன் அதைத்தான் செய்துகொண்டிருந்தான். எப்போதும் கிருஷ்ண ஜபம். செய்கிற ஒவ்வொரு செயலையும் கிருஷ்ணார்ப்பணம் என்று எண்ணியே செய்தான். உண்ணும் உணவு, பருகும் நீர், சுவாசிக்கும் காற்றுவரை கிருஷ்ணனைத் தவிர வேறில்லை என்பதில் அவனுக்குச் சற்றும் சந்தேகமில்லை. யாருமற்ற பொழுதுகளில் கிருஷ்ண ஸ்மரணை அதிகரித்து, சமயத்தில் அழவும் ஆரம்பித்துவிடுவான். எப்படியாவது உன்னைப் பார்த்துவிட வேண்டும் கிருஷ்ணா என்று தனக்குள் கதறுவான். திருமணத்துக்கு முதல் நாள் தனக்குக் காட்சி கொடுப்பதற்காக வந்துவிட்டு என்ன காரணத்தாலோ கிருஷ்ணன் வேண்டாம் என்று மனத்தை மாற்றிக்கொண்டு போய்விட்டதாக அவன் நினைத்தான். இன்னொரு முறை ஒளிக்கோளம் தென்பட்டால் பாய்ந்து அதன் உள்ளே புகுந்துவிட வேண்டும் என்று அப்போதே நிச்சயம் செய்துகொண்டான்.

  கொழும்பு துறைமுகத்தில் அவர்கள் சென்ற கப்பல் நின்றதும், பயணிகள் அனைவரும் முதலில் இறங்கிய பின்பு சன்னியாசிகள் தனியே மொத்தமாக இறங்கினார்கள். மொத்தம் எட்டு சன்னியாசிகள். அவர்களோடு பன்னிரண்டு பிரம்மச்சாரிகள். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் மிகவும் தீவிரமாக நடந்துகொண்டிருந்த சமயம். பாதுகாப்பு கெடுபிடிகளும் பரிசோதனைகளும் அதிகம் இருந்தன. மலையகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியால்தான் அவர்களால் கொழும்புவுக்கு வர முடிந்திருந்தது. இலங்கையில் ஒரு கிருஷ்ணர் ஆலயத்தை எழுப்புவதற்கான சாத்தியங்களை ஆராய்வது திட்டம்.

  வினோத் அன்றிரவு சக பிரம்மச்சாரிகளுடன் ஒரு பள்ளிக்கூடக் கட்டடத்தில் தங்கினான். என்றோ அது பள்ளிக்கூடமாக இருந்திருக்க வேண்டும். அப்போது அது செயல்பாட்டில் இல்லை. உடைந்த ஒரு சில மேசை நாற்காலிகள் மட்டுமே அங்கு எஞ்சியிருந்தன. அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்திக்கொண்டிருந்தவர், இழுத்து மூடிவிட்டு லண்டனுக்குப் போய்விட்டதாகச் சொன்னார்கள். கிருஷ்ணரின் சேவையில் இருப்பவர்களுக்கு சுக சௌகரியங்கள் ஒரு பொருட்டல்ல. அவர்கள் அன்றிரவு பிரெட்டும் வாழைப்பழமும் மட்டும் சாப்பிட்டுவிட்டு அங்கேயே தரையில் துணி விரித்துப் படுத்தார்கள்.

  அதிகாலை மூன்று மணிக்கு வினோத்துக்கு யாரோ எழுப்புவது போன்ற உணர்வு ஏற்பட்டது. திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்த்தபோது அந்த ஒளிக்கோளம் அவன் படுத்திருந்த அறைக்கு வெளியே அந்தரத்தில் மிதந்துகொண்டிருந்தது. வினோத் பரவசமாகிப் போனான். உடனே எழுந்து ‘கிருஷ்ணா..’ என்று கத்திக்கொண்டு அதனை நோக்கிப் பாய்ந்தான். முதல்முறை நிகழ்ந்தது போலவே இப்போதும் அந்த ஒளிக்கோளம் மெல்ல நகர்ந்து போக ஆரம்பித்தது. வினோத் அதன் பின்னாலேயே நடக்கத் தொடங்கினான். அவன் எவ்வளவு வேகமாக ஓடியும் அந்தக் கோளத்தை அவனால் நெருங்க முடியவில்லை. அவன் கிட்டே போகும்போதெல்லாம் அது பத்தடி தள்ளிப் போய் இருந்தது. ‘கிருஷ்ணா, இந்த முறை என்னைக் கைவிடாதே. என்னை ஏற்றுக்கொண்டுவிடு. உன்னோடு சேர்த்துக்கொண்டுவிடு’ என்று கதறியபடியே வினோத் அதைத் தொடர்ந்துகொண்டிருந்தான்.

  நெடுந்தூரம் அவன் நடந்து போய்க்கொண்டே இருந்தான். ஒளியும் நிற்காமல் மிதந்து சென்றுகொண்டே இருந்தது. முற்றிலும் சுய நினைவு அழிந்து அந்த ஒளிக் கோளம் சென்ற திக்கில் அவன் போனான். தோட்டமா, காடா என்று சரியாகத் தெரியாத ஒரு பகுதிக்குள் அது சென்றது. வினோத்தும் விடாமல் அங்கே சென்று சேர, இறுதியில் ஒரு சிறு கோயிலின் பின்புறமாகச் சென்று அந்த ஒளி மறைந்துவிட்டது. வினோத் அதிர்ச்சியானான். கிருஷ்ணா கிருஷ்ணா என்று கதறியபடியே கோயிலைச் சுற்றி வந்து முன்புறம் வந்தான். சன்னிதி மூடியிருந்தது. ஆனால் உள்ளே பார்க்கும்படியாகக் கம்பிக் கதவுதான் போடப்பட்டிருந்தது. சிறியதொரு விளக்கு மட்டும் அங்கே எரிந்துகொண்டிருக்க, வினோத் உள்ளே பார்த்தபோது ஒரு சிவ லிங்கம் தெரிந்தது.

  அந்தக் கணத்தில் அவனுக்கு சுய நினைவு மீண்டது. இது என்ன? கிருஷ்ணன் எதற்காக என்னை ஒரு சிவன் கோயிலுக்கு அழைத்து வந்து விட்டிருக்கிறான்? அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. சட்டென்று காவிரி வெள்ளத்தில் தனக்குக் கிடைத்த சிவலிங்கத்தை நினைத்துக்கொண்டான். அந்த லிங்கம் கிடைத்த நாளாக அவன் சிவ நாமத்தை மட்டுமே உச்சரித்துக்கொண்டிருந்தான். திருமணத்துக்கு முதல் நாள் கண்ட ஒளி, கிருஷ்ணன்தான் என்று அவன் மனத்தில் குறிப்பாக ஒன்று விழுந்ததில் இருந்துதான் அவன் கிருஷ்ணனை நினைக்க ஆரம்பித்திருந்தான். சற்றும் எதிர்பாராதவிதமாக கிருஷ்ணன் ஏன் தன்னை சிவன் சன்னிதியில் கொண்டு நிறுத்தியிருக்கிறான்?

  வினோத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. மிகவும் குழப்பமாக, தலை சுற்றுவதுபோல் இருந்தது. மனத்துக்குள் ஒரு மெல்லிய குற்ற உணர்வு எழ ஆரம்பித்தது. சிவனை மறந்தது தவறோ? கிருஷ்ணன் அதைச் சுட்டிக்காட்டுகிறானோ? ஒருவேளை சிவனேதான் ஒளியாக முதலில் வந்தானோ? இப்போது வந்தவனும் அவனேதானா? அப்படியானால் அன்றைக்கு ஒளியைக் கண்ட கணத்தில் இது கிருஷ்ணன் என்று ஏன் மனத்தில் தோன்ற வேண்டும்?

  மெல்ல மெல்ல அவனது பதற்றம் அதிகரிக்க ஆரம்பித்தது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? சிவனுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டுத் திரும்பிப்போய் அந்தப் பழைய பள்ளிக்கூடக் கட்டடத்தில் நண்பர்களோடு படுத்துவிடலாம். அல்லது இந்தச் சம்பவத்தின் குறியீடு என்னவாக இருக்கும் என்று உட்கார்ந்து சிந்திக்கத் தொடங்கலாம்.

  இரண்டாவதைச் செய்யலாம் என்று நினைத்து அங்கேயே அவன் அமர்ந்துவிட்டான். தெய்வம் ஒன்று என்பதில் அவனுக்குச் சந்தேகம் இல்லை. ஆனால் அது கிருஷ்ணன்தான் என்று அன்றுவரை நினைத்துக்கொண்டிருந்தான். கிருஷ்ண அனுபவம் ஏற்படுவதற்கு முன்பு அது சிவமாக மட்டுமே இருந்ததையும் நினைவுகூர்ந்தான். லிங்கம் கிடைத்தபோது உண்டான பரவசமும் சிவ பக்தியும் இந்தக் கோயிலுக்கு வந்து சேர்ந்தபோது ஏன் தனக்கு உருவாகவில்லை என்று நினைத்துப் பார்த்தான். மனமெங்கும் கிருஷ்ணன் வியாபித்திருக்கும்போது சிவனைப் பெரிதாகக் கருதத் தோன்றாதது பற்றிய அச்சமும் தவிப்பும் அவனுக்கு ஏற்பட்டது. இது கிருஷ்ணன் தனக்கு வைக்கும் பரீட்சையாக இருக்குமோ என்று நினைத்தான். என்ன செய்து இதிலிருந்து விடுபட முடியும் என்று தெரியவில்லை.

  திரும்பிச் சென்று நண்பர்களிடமும் மூத்த சன்னியாசிகளிடமும் தனது அனுபவத்தைச் சொல்லிக் கருத்துக் கேட்கலாமா என்று நினைத்தான். ஆனால் அவன் சொன்ன அந்த ஒளிப்பந்தின் கதையையே அவனோடு இருந்தவர்களுள் பலர் நம்பவில்லை. ‘இதோ பார் வினோத்! கிருஷ்ணன் என்பது ஒரு தத்துவம். தத்துவம் மட்டுமே. உருவமல்ல. நபரல்ல. உணரத் தொடங்கும்வரை மட்டுமே உருவத்துக்கு வேலை. உணர்ந்துவிட்டால் உருவம் பொருட்டல்ல. சைக்கிள் பழகும்போது யாராவது பிடித்துக்கொள்ள வேண்டியிருப்பது போலத்தான் அது’ என்று ஒரு சுவாமிஜி சொன்னார்.

  ‘ஆனால் நான் கண்ட ஒளிக்கோளம் உண்மை சுவாமிஜி’.

  ‘அது உன் பிரமையாக இருக்கலாம். அடிமனத்தில் இருந்த கிருஷ்ண தாகம் அதை எழுப்பி வெளியே கொண்டுவந்து நிறுத்தியிருக்கும்’ என்று அவர் சொன்னார்.

  அவனுக்கு அப்போது அது புரியவில்லை. அவரோடு விவாதம் செய்யவும் விருப்பமில்லாமல் இருந்தான். அது ஒரு அனுபவம். அவனுக்கு நேர்ந்தது. அவனுக்கு மட்டும் நேர்ந்த அனுபவம். அதை எப்படி அடுத்தவருக்குப் புரியவைப்பது? புரியவைக்கத்தான் முடியுமா?

  அதை நினைத்துப் பார்த்தவன், இந்தச் சம்பவத்தை இப்போது போய்ச் சொன்னால் மீண்டும் அதே போன்ற கருத்துகள்தாம் வரும் என்று நினைத்தான். பிரச்னை, அது கிருஷ்ணனா சிவனா என்பதுதானே தவிர, ஒரு ஒளி தன்னைத் திரும்பத் திரும்பத் தொட்டுத் திருப்புவதை இல்லை என்று சொல்லவே முடியாது.

  நெடுநேரம் அவன் அந்த சிவன் சன்னிதியிலேயே அமர்ந்திருந்தான். ஏதாவது குறிப்பால் உணர்த்தப்படும் என்று எதிர்பார்த்தான். ஆனால் அப்படி எதுவும் நிகழவில்லை. பொழுது விடிய ஆரம்பித்திருந்தது. விடியும்போதே மழையும் பெய்யத் தொடங்கியது. திரும்பிவிடலாம் என்று நினைத்தான். ஆனால் இந்தக் குழப்பம் தன்னைச் சாகும்வரை நிம்மதியாக இருக்க விடாது என்று தோன்றியது. என்னவானாலும் கிருஷ்ணன் செயல் என்று எண்ணிக்கொண்டு எழுந்தான்.

  அவன் சற்றும் எதிர்பாராவிதமாகப் பின்னங்கழுத்தில் பொளேர் என்று யாரோ அறைந்தார்கள். கிருஷ்ணா என்று அலறிக்கொண்டு அவன் கீழே விழுந்தான். நெற்றி தரையில் மோதி ரத்தம் வந்தது.

  (தொடரும்)

  http://www.dinamani.com/junction/yathi/2018/aug/24/115-இருவர்-2986590.html

  • Like 1
 14. 114. ஒளியின் வழி

   

  மூன்று பகல்கள், நான்கு இரவுகள். வினோத் நடந்துகொண்டே இருந்தான். அவனுக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த அந்த ஒளிக்கோடு ஒரு கட்டத்தில் அவன் கண்ணைவிட்டு மறைந்துவிட்டது. ஆனாலும் தனக்கு வழி தெரியும் என்று அவனுக்குத் தோன்றியது. ஒரு தீர்மானத்துடன் செலுத்தும் சக்தியைப்போல அவன் மனமே அவனை வழிநடத்திப் போய்க்கொண்டிருந்தது. இடையில் அவன் எங்கும் நிற்கவில்லை. உணவு உட்கொள்ளத் தோன்றவில்லை. நீர் அருந்தவும் அவசியம் இருக்கவில்லை. தன் உணர்வு முற்றிலும் இல்லாமல் போய் அவன் மனமும் மூளையும் முற்றிலும் பாதங்களுக்கு இறங்கி அவற்றைச் செலுத்திக்கொண்டிருந்தன. விடிந்தால் தனக்குத் திருமணம் என்பதோ, தன்னைக் காணாமல் வீட்டில் தேடுவார்கள் என்பதோ அவன் நினைவில் அறவே இல்லை. கனவுகளுடன் காத்திருந்த சித்ராவைக் குறித்த எந்த எண்ணமும் எழவில்லை. ஊரே கூடித் தன் வீட்டின் முன் நின்று சபிக்கும் என்று எண்ணிப்பார்க்க முடியவில்லை. அவன் சிந்தை முழுதும் கிருஷ்ணன் நிறைந்திருந்தான். கிருஷ்ணன் அவன் பாதங்களில் அமர்ந்துகொண்டு அவனைச் செலுத்திக்கொண்டிருந்தான்.

  நாள்களும் நேரமும் பகலிரவும் முற்றிலும் மறந்து நடந்துகொண்டே இருந்தவன் ஏதோ ஓரிடத்தில் மயங்கி விழுந்தான். எவ்வளவு நேரம் அவன் மயக்கத்தில் இருந்தான் என்று அவனுக்குத் தெரியாது. கண் விழித்தபோது மிகவும் பசித்தது. சுற்றுமுற்றும் பார்த்தான். அது ஒரு நெடுஞ்சாலை. கண்ணுக்கெட்டிய தொலைவில் கடைகள் ஏதும் இல்லை. மனித நடமாட்டமும் தென்படவில்லை. தான் எங்கே வந்திருக்கிறோம் என்று அறிந்துகொள்ள விரும்பினான். இன்னும் சிறிது தூரம் நடக்கலாம் என்று முடிவு செய்தபோது, எந்தப் பக்கம் இருந்து வந்தோம் என்ற குழப்பம் ஏற்பட்டது. சட்டென்று அங்கேயே அமர்ந்து கண்களை மூடி கிருஷ்ண ஜபம் செய்யத் தொடங்கினான். நூற்றெட்டு முறை ஜபித்துவிட்டு எழுந்ததும் அவனது பாதங்கள் மீண்டும் அவனைச் செலுத்திக்கொண்டு போயின. ஆனால் இப்போது அவனுக்குக் கால் வலித்தது. களைப்புத் தெரிந்தது. பசி குதறிப் போட்டுக்கொண்டிருந்தது. ஒரு நெடுஞ்சாலை உணவகம் கண்ணில் பட்டது. உணவகத்தின் வெளியே நான்கைந்து பேருந்துகள் நின்றுகொண்டிருந்தன.

  வேறெதையும் சிந்திக்காமல் அவன் நேரே உணவகத்தினுள் நுழைந்து அமர்ந்தான். காணாதது கண்டாற்போல எட்டு இட்லிகள் சாப்பிட்டான். நிறையத் தண்ணீர் குடித்தான். நேரே கல்லாவுக்கு வந்து, தன்னிடம் உண்டதற்குப் பணமில்லை என்று சொன்னான். அங்கிருந்த நான்கைந்து பேர் அவனை இழுத்துப்போட்டு அடி அடி என்று அடித்தார்கள். வினோத் பொறுமையாக அடிகளை வாங்கிக்கொண்டான். அவன் சுருண்டு விழுந்துவிடுவான் என்று தெரிந்தபோது உணவக முதலாளி, ‘சனியனை விட்டுவிடுங்கள்’ என்று சொன்னார். அவன் அந்த நபருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தான். மீண்டும் நடக்க ஆரம்பித்தான்.

  மேலும் இரண்டு நாள்கள் நடந்த பின்பு அவன் கோயமுத்தூரை அடைந்தான். கண்ணில் தென்பட்ட திருமண மண்டபத்தில் இருந்து நாகஸ்வர ஓசையும் மேளச் சத்தமும் கேட்டது. வினோத் அந்த மண்டபத்துக்குள் நுழைந்து நேரே உணவு அரங்கத்துக்குச் சென்றான். திருப்தியாக அமர்ந்து சாப்பிட்டான். வெளியே வரும்போது வெற்றிலை பாக்கு கவர் ஒன்று கொடுத்தார்கள். அதில் ஒரு தேங்காயும் இருந்தது. அதை அடுத்த வேளைக்கு வைத்துக்கொண்டான். ஒரு லாரி டிரைவரிடம் தன்னிடம் பணம் இல்லாததைச் சொல்லி, எப்படியாவது தன்னை குருவாயூருக்குக் கொண்டு சேர்த்துவிட முடியுமா என்று கேட்டான். இரக்க சுபாவம் கொண்ட அந்த டிரைவர், அவனை குருவாயூர் வரை செல்லும் தனது சக டிரைவர் நண்பனின் லாரியில் ஏற்றி அனுப்பிவைத்தார்.

  வினோத் குருவாயூரைச் சென்றடைந்தபோது நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது. தன்னை ஏற்றிவந்து இறக்கிவிட்ட லாரி டிரைவருக்கு நன்றி சொல்லிவிட்டு அவன் கோயிலை நோக்கி நடந்தான். இதுதான், இதுதான் என்று அவன் மனத்துக்குள் ஒரு குரல் ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்தக் கணமே பாய்ந்து சென்று கிருஷ்ணனின் பாதாரவிந்தங்களைப் பற்றிக்கொண்டு அவனோடே கரைந்து காணாமலாகிவிட வேண்டும் என்ற வெறி உண்டானது. தன் சக்தியெல்லாம் திரட்டிக்கொண்டு அவன் கோயிலை நோக்கி ஓடத் தொடங்கினான். பத்து நிமிடங்கள் ஓடியபின்பு கோயில் கண்ணுக்குத் தென்பட்டது. வழியெங்கும் இருந்த கடைகளை மூடியிருந்தார்கள். பக்தர்கள் வெகு சாதாரணமாகச் சாலை ஓரங்களிலேயே குடும்பம் குடும்பமாகப் படுத்துக் கிடந்தார்கள். கோயிலை நெருங்கிய பின்புதான் அவனுக்கு இந்நேரம் கோயில் நடை சாத்தியிருக்கும் என்பதே நினைவுக்கு வந்தது. வேறு வழியின்றி அவனும் ஒரு கடை வாசலில் படுத்தான். நன்றாக உறங்கிவிட்டான்.

  மறுநாள் காலை விடிந்து எழுந்தபோது அவனுக்குள் இருந்த வெறி சற்று மட்டுப்பட்டு கனிந்த பக்தி ஒன்றே மேலோங்கியிருந்தது. யாரோ ஒரு பக்தரை நிறுத்தி, தனக்கு ஒரு வேட்டி மட்டும் வாங்கித் தர முடியுமா என்று கேட்டான். அவர் சம்மதித்து, அவனை ஒரு கடைக்கு அழைத்துச் சென்று ஒரு வேட்டி வாங்கிக் கொடுத்தார். வினோத் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, ருத்ர தீர்த்தத்தை நோக்கிச் சென்றான். நிம்மதியாக நீரில் இறங்கிக் குளித்து எழுந்தான். படிக்கட்டில் கிடந்த ஒரு கோபி சந்தனத் துண்டை எடுத்துக் குழைத்து நெற்றியில் இட்டுக்கொண்டான். புதிய வேட்டியை அணிந்துகொண்டு பழைய உடைகளைத் தூக்கிப் போட்டான். கோயிலுக்குள் செல்ல வரிசையில் நிற்கும் கூட்டத்தோடு சென்று தானும் நின்றுகொண்டான். அன்று காலை எட்டு முப்பதுக்கு அவனுக்கு குருவாயூரப்பன் தரிசனம் கிடைத்தது. சன்னிதியில் அவன் தன்னிலை மறந்து கிருஷ்ணா கிருஷ்ணா என்று கதறியதை சுற்றி இருந்தவர்கள் வினோதமாகப் பார்த்தார்கள். தன்னை அதுவரை செலுத்திவந்த ஒளி இப்போது மீண்டும் தோன்றி அப்படியே தன்னை ஏந்தி எடுத்துச்சென்று கிருஷ்ணனுடன் சேர்த்துவிடாதா என்று மிகவும் ஏங்கினான். ஆனால் அவ்வாறு ஏதும் நிகழவில்லை. ஆள்கள் பிடித்து இழுத்து அவனை மற்றவர்களோடு வெளியே தள்ளிவிட்டார்கள்.

  அன்று முழுதும் அவன் கோயிலுக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்தான். பிரசாத வரிசையில் நின்று பிரசாதம் வாங்கி உணவாக உட்கொண்டான். இந்த உலகத்திலேயே தனக்கு மிகுந்த பாதுகாப்பான இடம் அந்தக் கோயில்தான் என்று அவன் மனத்துக்குள் ஓர் எண்ணம் எழுந்தது. காலம் முழுதும் அங்கேயே இருந்து தீர்த்துவிட முடிவு செய்துகொண்டு, மாலை மீண்டும் ருத்ர தீர்த்தக் கரைக்குச் சென்றான். அங்கே அவன் க்ஷேத்ரக்ஞ தாஸ் கோஸ்வாமி என்ற சன்னியாசியைச் சந்தித்தான்.

  சுவாமிஜி பாலக்காட்டைச் சேர்ந்தவர். ஆலத்தூரில் பிறந்து வளர்ந்து அங்கேயே படிப்பை முடித்துவிட்டு கிருஷ்ண பக்தி இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டவர். குளக்கரையில் வினோத் அவரைப் பார்த்தபோது அவனையறியாமல் அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. சற்றும் தயங்காமல் அவர் அருகே சென்று நெடுஞ்சாண்கிடையாக அவர் காலில் விழுந்தான். ஆசி சொல்லி எழுப்பிய சுவாமி அவனைப் பற்றி விசாரித்தார்.

  ‘என்னைப் பற்றிச் சொல்ல ஒன்றுமில்லை சுவாமி. எனக்கு கிருஷ்ணனைக் காட்டித் தருவீர்களா?’ என்று வினோத் கேட்டான்.

  அன்றைக்கு நெடுநேரம் அவனோடு பேசிக்கொண்டிருந்த சுவாமிஜி, தான் கிளம்பும்போது அவனைத் தன்னோடு அழைத்துச் சென்றார். வினோத் சில மாதங்கள் பெங்களூரில் தங்கியிருந்தான். அதற்கு முன்புவரை ஒரு வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்த கிருஷ்ண பக்தர்கள், அந்த ஆண்டுதான் பெங்களூர் வளர்ச்சிக் கழக அதிகாரிகளைச் சந்தித்து கிருஷ்ணருக்குக் கோயில் கட்ட ஓர் இடம் ஒதுக்கித் தரும்படிக் கேட்டார்கள். அந்த ஆண்டு ஆகஸ்டு மாதத் தொடக்கத்தில் கிருஷ்ணருக்கு அங்கே ஓர் இடம் கிடைத்துவிட்டது. பெங்களூர் நகரத்தின் வடக்குப் பகுதியில் அமைந்திருந்த ஒரு சிறு குன்றை அதிகாரிகள் கிருஷ்ணருக்காக விட்டுக்கொடுக்க முன்வந்தார்கள். ஏழு ஏக்கர் பரப்பளவுள்ள வெறும் பாறைக் குன்று. மருந்துக்கும் அங்கே பசுமை கிடையாது. ‘முடிந்தது இந்த இடம்தான். என்ன செய்ய முடியுமோ செய்துகொள்ளுங்கள்’ என்று அதிகாரிகள் சொன்னார்கள்.

  அந்தக் குன்றை கிருஷ்ணனின் பேராலயமாக மாற்றும் முயற்சியில் பெங்களூர் பக்தர்கள் ஈடுபட ஆரம்பித்தபோது, வினோத் தன்னை அந்தப் பணியில் முற்றுமுழுதாக ஈடுபடுத்திக்கொண்டான். ஒரு தன்னார்வலனாக அவனது ஈடுபாடும் அர்ப்பணிப்பும் க்ஷேத்ரக்ஞ தாஸ் கோஸ்வாமிக்கு மிகவும் பிடித்துப்போனது. அடுத்த வருடம் இலங்கைக்கு ஒரு நீண்ட சுற்றுப்பயணம் புறப்பட்ட சன்னியாசிகள் குழுவோடு, பிரம்மச்சாரி உதவியாளர்களுள் ஒருவனாக வினோத் தேர்ந்தெடுக்கப்பட்டான். வெள்ளை உடுப்பும் சிறு சிகையும் துளசி மாலையும் கோபி சந்தனமும் அணிந்து அவன் டோலக் அடித்துக்கொண்டும் கிருஷ்ண பஜன் பாடிக்கொண்டும் சன்னியாசிகளோடு சேர்ந்து சென்னை வந்தான். வீட்டைக் குறித்த நினைவு அவனுக்கு அப்போது அறவே இல்லை. ஓரிரவு மட்டும் பிராட்வே ஆர்மீனியன் தெருவில் ஒரு இல்லத்தில் தங்கியிருந்துவிட்டு மறுநாள் புறப்பட்ட கப்பலில் அவர்கள் குழு இலங்கைக்குக் கிளம்பியது.

  அந்தக் கப்பல் கொழும்பு சென்றடைந்தபோது, அவனுக்கு மீண்டும் அந்தப் பேரொளியின் தரிசனம் கிடைத்தது.

  (தொடரும்)

  http://www.dinamani.com/junction/yathi/2018/aug/23/114-ஒளியின்-வழி-2985400.html

 15. ரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர்

   

   

  பிரமாண்டமான சரித்திரத் தொடர்-17

  கரிகாலனின் பார்வை பதிந்த திக்கை சிவகாமியும் கவனித்தாள். பெரியவரின் இடுப்பில் வாள் இருந்தது. அந்த வாள் சற்று முன்னர் சுரங்கத்தில் அவர்கள் பார்த்த நாக விஷம் தோய்ந்த வாட்களில் ஒன்று என்பதை ஊகிக்க அவளுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அந்த வாட்களில் இரண்டை தன் கைகளில் ஏந்தி சாளுக்கிய வீரர்களை நிர்மூலமாக்கியது அவள்தானே..? அதன் அமைப்பும் பிடிப்பும் அவள் அறியாததா என்ன..?

  அந்தப் பெரியவர் யாராக இருக்கும் என்ற வினா நாடி நரம்பெல்லாம் பரவியது. சுரங்கத்துக்கு எதிர்த் திசையில் புரவியில் வந்த பெரியவருக்கு எப்படி அந்த வாள் கிடைத்தது..? எனில் அங்கிருந்த ஹிரண்ய வர்மரும், சிறை வைக்கப்பட்ட சாளுக்கிய போர் அமைச்சரான ராமபுண்ய வல்லபரும் என்ன ஆனார்கள்..? ஆயுதங்களை புலவர் தண்டி அனுப்பிய ஆட்கள் எடுத்துக் கொண்டார்களா அல்லது சாளுக்கியர்களின் வசமே அவை போய்ச் சேர்ந்ததா..? இந்தப் பெரியவர் பல்லவர்களின் நண்பரா அல்லது எதிரியா..?

  அனைத்துக்குமான விடைகள் அப்பெரியவரிடம்தான் இருக்கின்றன. அவரை விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரிக்க அதிக கணங்கள் தேவைப்படாது. கரிகாலன் அதை கவனித்துக் கொள்வான்.ஆனால், அதற்கு முன் புரவியை குணப்படுத்த வேண்டும். அளவுக்கு மீறி உஷ்ணம் அதன் உடலெங்கும் ஊடுருவியிருக்கிறது. காலதாமதம் நிச்சயம் அதன் உயிரை மாய்க்கும். சொந்த உணர்ச்சி களுக்கு எந்தவொரு அசுவ சாஸ்திரியும் இடம்கொடுக்கக் கூடாது. முழு கவனமும் புரவிகளிடத்தில்தான் குவிய வேண்டும்.

  ஏனெனில் அசுவங்கள் என்பவை தனித்த உயிரினமல்ல; அவை அசுவ சாஸ்திரி களின் உயிர். இதைக் காப்பாற்றுவதுதான் இத்தருணத்தில் அவளது முழுமுதல் வேலை. முடிவுக்கு வந்த சிவகாமி எவ்வித உணர்ச்சியும் இன்றி புரவியின் பக்கம் திரும்பினாள். தன் எஜமானரைத் தவிர வேறு யாருக்கும் கட்டுப்படாத அப்புரவி, அவளுக்கு வசப்பட்டிருக்கிறது. எனில், தன்னை அது நம்புகிறது என்று அர்த்தம்.

  அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டுமானால் அலைபாயும் மனதுடன் அதற்கு சிகிச்சை அளிக்கக்கூடாது. புரவிகளின் கெட்டிக்காரத்தனத்துக்கு அளவேயில்லை. யாருக்குக் கட்டுப்பட்டு அது நிற்கிறதோ அவரது எண்ண ஓட்டத்தைத் துல்லியமாக அறியும் சக்தி அவற்றுக்கு உண்டு. வசப்பட்டவர்களின் உள்ள உணர்ச்சிக்கு ஏற்ப தன் இயல்பையும் உணர்வையும் மாற்றிக் கொள்ளும். சத்திரியப் புரவியான இது, இந்தக் கல்யாண குணங்களைக் கொண்டது.

  எனவே நம் மனம் அலைபாய்ந்தால் அது இப்புரவியின் உடலிலும் எதிரொலிக்கும்; அதன் உடல்நலத்தையும் பாதிக்கும். பெரியவர் குறித்து எழுந்த வினாக்களை காற்றில் கரைத்து விட்டு அந்த மாநிறப் புரவியின் நெற்றி யில் அன்போடு முத்தமிட்டாள். அதன் செவிகளைத் தடவினாள். கால்களைப் பிடித்துவிட்டாள். குருதியில் பாய்ந்திருக்கும் உஷ்ணத்தின் தன்மையால் அக்குதிரை திமிறியது. பொறுக்க முடியாமல் முன்னங்கால்களை உயர்த்தியது.

  அதனையும் அறியாமல், அதன் சித்தத்தையும் மீறி அவளை வீழ்த்த முற்பட்டது. புரிந்துகொண்ட சிவகாமி, உயர்த்திய அதன் குளம்புகளைத் தன்னிரு கரங்களிலும் ஏந்தினாள். தொடு உணர்ச்சியின் வழியே அதற்குச் செய்தி சொன்னாள். முயன்று கட்டுப்பட்டு தன் மூர்க்கத்தை அது தளர்த்திக் கொண்டது. அதன் கண்களில் இருந்து வழிந்த உஷ்ண நீரை தன் உள்ளங்கையால் துடைத்தாள்.‘‘கரிகாலரே..!’’ திரும்பிப் பார்க்காமல் குரல் கொடுத்தாள்.

  ‘உடனடியாக கறிமஞ்சள், சவுக்காரம், வெல்லம், அபினி, பசும் பால், நீர் வேண்டும். அருகிலிருக்கும் கிராமத்துக்குச் சென்று இவற்றை வாங்கி வாருங்கள். புரவிக்கு உடனடியாக மருந்து தயாரித்துக் கொடுத்தாக வேண்டும்...’’அவளுக்குப் பின்புறமிருந்து எந்த பதிலும் வரவில்லை.‘‘நான் சொன்னது காதில் விழுந்ததா..?’’‘‘அவசியமில்லை...’’பதில் சொன்னது கரிகாலன் அல்ல.
  சிவகாமிக்கு அவன் குரல் நன்றாகத் தெரியும். தள்ளி நின்றும் கேட்டிருக்கிறாள். நெருக்கமாக செவியோரம் அவன்கிசுகிசுத்ததையும் அனுபவித்திருக்கிறாள்.

   எனில், பெரியவரே தன்னுடன் உரையாட முற்படுகிறார். ஏன் கரிகாலன் அமைதியாக இருக்கிறான்?விடை தேட முற்பட்ட எண்ணத்தை குழி தோண்டிப் புதைத்தாள். புரவிதான் இப்போது முக்கியம். ‘‘ஏன் பெரியவரே..?’’ திரும்பாமல் பேச்சைத் தொடர்ந்தாள்.‘‘அருகில் எந்தக் கிராமமும் இல்லை...’’‘‘பரவாயில்லை. தொலைவில் இருந்தாலும் அவர் வாங்கி வரட்டும். மருந்து இப்போது அவசியம் தேவை. இல்லை யெனில் புரவி சுருண்டுவிடும்...’’‘‘அப்படி எதுவும் நிகழாது...’’‘‘இல்லை பெரியவரே... புரவியின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது...’’‘‘தெரியும் மகளே..!’’ என்றபடி அந்தப் பெரியவர் அவள் அருகில் வந்தார்.

  சிவகாமி அவரை நிமிர்ந்து பார்க்கவில்லை. பார்வையைத் தாழ்த்தியவண்ணம் புரவியின் முகத்தோடு ஒன்றியிருந்த அவள் விழிகளில் அவரது வாளின் நுனி தென்பட்டது. நாக விஷம் தோய்ந்த வாள்! அமைதியாக இருந்தாள். பெரியவரே பேச்சைத் தொடர்ந்தார். ‘‘புரவியை கவனித்ததை வைத்தே நீ ஒரு அசுவ சாஸ்திரி என்பதைப் புரிந்துகொண்டேன்! நிச்சயம் உன் கணிப்பு தவறாக இருக்காது. உன் முகக்குறிகள் புரவியின் அவஸ்தைகளைப் பிரதிபலிக்கின்றன. நிச்சயம் இக்குதிரைக்கு சிகிச்சை அவசியம். ஆனால், நீ கேட்ட மருந்துகளை கரிகாலன்... அதுதானே அவன் பெயர்? அப்படித்தானே அழைத்தாய்... கொண்டு வர பல காத தூரங்கள் பயணப்பட வேண்டும்.

  அதுவரை புரவி தாங்காது...’’‘‘சற்று நேரத்துக்கு என்னால் இதை சமாளிக்க வைக்க முடியும் பெரியவரே... மருந்து வந்தாக வேண்டும்...’’‘‘அவை என்னிடம் இருக்கின்றன!’’ சட்டென்று பதில் சொன்ன பெரியவர், தன் இடுப்பு முடிச்சை அவிழ்த்தார். அவள் கேட்ட மருந்துகளை எடுத்துக் காட்டினார். ‘‘புறப்படும்போதே தேவைப்படும் என பத்திரப்படுத்தினேன். என்ன... அழகான அசுவ சாஸ்திரியை சந்திக்க நேரிடும் என்பதைத்தான் ஊகித்தும் பார்க்கவில்லை..!’’

  தன் கண்முன் அவர் நீட்டிய வஸ்திர முடிச்சைப் பார்த்தாள். சந்தேகங்கள் அலை அலையாக எழுந்தன. பெரியவர் யார் என்ற வினா விஸ்வரூபம் எடுத்தது. புரவியின் கனைப்பு அவளை நடப்புக்குக் கொண்டு வந்தது. சட்டென தன் முன் நீட்டப்பட்ட வஸ்திரத்தைப் பிடுங்கி அதன் முடிச்சை அவிழ்த்தாள். ஒரு ஜோடி கால்கள் அவள் அருகில் வந்தன. அவை கரிகாலனுக்குச் சொந்தமானவை என்பதை விரல்களின் நீளத்திலிருந்து உணர்ந்தாள். அவன் பார்வையை எதிர்கொள்ள வேண்டும் என்று எழுந்த ஆவலை அடக்கினாள். கூடாது.

  புரவியின் கண்களைவிட்டு, தன் பார்வையை விலக்கக் கூடாது. எல்லாவற்றையும்விட இப்போது புரவிக்கு அவசியம் இந்தப் பார்வை அரவணைப்புதான். இமைக்காமல் குதிரையின் கருவிழிகளைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். கரிகாலனின் வலக்கரம் உயர்ந்து தன் தோளை அணைத்தபோது இனம் புரியாத பரவசமும் நிம்மதியும் அவள் உடலெங்கும் பரவியது. ‘நானிருக்கிறேன்... எதற்கும் கவலைப்படாதே...’ என்று அவன் அறிவித்த செய்தி, பெரும் பலத்தை அவளுக்குக் கொடுத்தது. அச்செய்தியை பார்வை வழியே புரவிக்கும் கடத்தினாள்.

  தன் வலக்கரத்தால் மருந்துகளை கரிகாலன் எடுத்துக்கொண்டான். கறிமஞ்சள், சவுக்காரம், வெல்லம் ஆகியவற்றை கற்களால் பொடி செய்து அவளிடம் கொடுத்தான். அதை அபினியுடன் கலந்து உருண்டையாக்கி, புரவியின் வாயருகே கொண்டு சென்றாள். மறுகையால் அதன் தலையை அவள் கோதிவிட்டாள். குதிரை தன் வாயைத் திறந்தது. லாவகமாக தன் கையிலிருந்த உருண்டையை உள்ளே செலுத்தினாள்.

  புரவிக்குப் புரையேறியது. பெரியவர் நீர்க் குடுவையை நீட்டினார். கொஞ்சமாக நீரைக் குடித்து அது தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டது. இதற்குள் சுள்ளிகளை அடுக்கி சிக்கிமுக்கிக் கற்களால் அதை கரிகாலன் பற்றவைத்திருந்தான். பாலுடன் சுரைக்காய் குடுவையை பெரியவர் கொடுத்தார்! எல்லாவற்றையும் வைத்திருக்கிறார்! அனைத்துக்கும் தயாராக வந்திருக்கிறார்! சந்தேகத்தின் அளவு அதிகரித்தது. சுரைக்காய் தீப்பற்றி எரியாமல் பக்குவமான சூட்டில் பசும் பாலை தண்ணீர் கலந்து கரிகாலன் சுட வைத்தான்.

  வஸ்திர முடிச்சில் இருந்த படிகாரத்தை பொடி செய்து பாலில் அதைத் தூவினான். எழுந்த வாடையை புரவி நன்றாக சுவாசிக்கும்படி சிவகாமி செய்தாள். பின்னர் பெரியவரின் வஸ்திர நுனியை நன்றாக விரித்து அதில் தூசிகள் இல்லாதபடி உதறிவிட்டு படிகாரம், நீர் கலந்த பாலில் முக்கி எடுத்துப் பிழிந்தாள். சூடு குறைந்ததும் அந்த வஸ்திரத்தால் புரவியின் கண்களைச் சுற்றிலும் துடைத்தாள். பன்னிரண்டு முறை இதுபோல் செய்த பிறகு அந்த அசுவம் தன் தலையைச் சிலுப்பியது.

  அதன் நெற்றியில் அழுத்தமாக முத்தம் கொடுத்துவிட்டு சிவகாமி நிமிர்ந்தாள். பெரியவரை நேருக்கு நேர் சந்தித்தாள். ‘‘இனி பயமில்லை. சற்று ஓய்வு எடுத்ததும் புரவியின் மீது நீங்கள் ஏறிக்கொண்டு எங்கு செல்லவேண்டுமோ அங்கு செல்லலாம். இன்னும் மூன்று நாட்களுக்கு காலையும் மாலையும் புரவிக்கு காய்ச்சிய படிகாரப் பாலின் ஒத்தடம் தரப்பட வேண்டும். இது உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்...’’

  ‘‘எதனால் அப்படி நினைக்கிறாய்..?’’ புன்னகையுடன் அப்பெரியவர் கேட்டார்.‘‘கையோடு மருந்துகளுடன் நீங்கள் பயணம் செய்வதை வைத்து!’’
  ‘‘அதாவது என்னையும் அசுவ சாஸ்திரியாகக் கருதுகிறாய். அப்படித்தானே?’’சிவகாமி பதிலேதும் சொல்லவில்லை.‘‘ஓரளவு அது சரிதான். ஆனால், உன் அளவுக்கு நான் கைதேர்ந்த அசுவ சாஸ்திரி அல்ல. கண்டிப்பாக நீ சொன்னபடி புரவிக்கு ஒத்தடம் அளிக்கிறேன்!’’ தலையைத் தாழ்த்தியபடி அப்பெரியவர் சொன்னார்.
  31.jpg
  தன்னை அவர் கிண்டல் செய்வது சிவகாமிக்குப் புரிந்தது. முகத்தைத் திருப்பி கரிகாலனைப் பார்த்தாள். அவன் அந்தப் பெரியவரை அணு அணுவாக ஆராய்ந்துகொண்டிருந்தான். மார்பில் இரு கைகளையும் கட்டியிருந்தார். கால்களை லேசாக அகற்றியிருந்தார். ஆஜானுபாகுவான உருவம். நிமிர்ந்திருந்ததால் அவரது தலையின் சுருண்ட பின்புறக் குழல்கள் அவர் கழுத்தை மறைத்து தோள்களைத் தொட்டுக் கொண்டிருந்தன. கேசத்திலும் தென்பட்ட வீரம், கரிகாலனை யோசிக்க வைத்தது.

  அளவோடு சிறுத்த இடுப்பும் அதற்கு மேலும் கீழும் உறுதியுடன் இருந்த உடற்கூறுகளும் இடைவிடாத யோகப் பயிற்சிக்குச் சான்று கூறின. கால்கள் ஏதோ இரும்பால் செய்யப்பட்டதைப் போல் இருந்த தோரணை அவரது திடத்தை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்தது. அவர் தன்னைப் போலவே அதிக சதைப் பிடிப்பு இல்லாதவர். எனவே, பலத்தில் தனக்கு எந்தவிதத்திலும் குறைந்தவரல்ல என்பதை கரிகாலன் உணர்ந்தான்.

  அதுதான் அவனுக்கு ஐயத்தை ஏற்படுத்தியது. தலைக்குழல்களும் மார்பு வரை புரண்ட தாடியும் வெண்மையாக இருந்தன. ஆனால், உடலோ மத்திம வயதுக்கு அவர் சொந்தக்காரர் என்பதை எடுத்துக் காட்டியது. வேடம் தரித்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள கரிகாலனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. ஏற்கனவே அவர் இடுப்பி லிருந்த வாளின் வரலாறு வேறு ஐயத்தைக் கிளப்பியிருக்கிறது... ‘‘யார் நீங்கள்..?’’ நிதானமாகக் கரிகாலன் தன் விசாரணையைத் தொடங்கினான்.

  ‘‘உங்கள் குழுவைச் சேர்ந்தவன்...’’ பெரியவரின் பதிலிலும் அதே அமைதி.‘‘எங்கள் குழுவா..?’’‘‘ஆம். பல்லவ இளவல் ராஜசிம்மனுக்கு விசுவாசமாக இருக்கும் ரகசியக் குழு!’’ அழுத்தமாகச் சொன்ன அப்பெரியவர், ‘‘செ - லி நா - லோ - செங் - கியா பா - தோ - பா - மோ...’’ என்ற சமிக்ஞைச் சொல்லை மீண்டும் உச்சரித்தார். அதுதான், தான் செய்த தவறு என்பது பிறகுதான் அப்பெரியவருக்குப் புரிந்தது. ஏனெனில் ‘உங்களைச் சேர்ந்தவன்’ என்பதற்காக அவர் உச்சரித்த சொல்லே அவரது சுயரூபத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டது!
  (தொடரும்)

  - கே.என்.சிவராமன்

  http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14188&id1=6&issue=20180907

  • Like 1
 16. உடல் எனும் இயந்திரம் 39: மூளைக்குள் ஒரு தொலைபேசி நிலையம்!

   

   
  udaljpg

  முன் மூளை எனும் பெருமூளையைத் தெரிந்துகொண்டோம். நடுமூளை (Mid brain) என்பது பெருமூளைக்கு அடியிலும், தண்டுவடத்துக்கு மேல்முனையிலும் அமைந்துள்ளது. பின் மூளை (Hind brain) என்பது நடு மூளைக்கு அடியில் ஒளிந்திருக்கும் சிறுமூளை (Cerebellum), மூளைப் பாலம் (Pons), முகுளம் (Medulla oblongata) ஆகிய அமைப்புகள் கொண்ட பகுதி.

  நடுமூளை, மூளைப் பாலம், முகுளம் ஆகிய பகுதிகள் கொண்டது, ‘மூளைத்தண்டு’ (Brain stem). பெருமூளைக்கு உதவ, அதற்கு அடியில் மூளைத்தண்டுக்கு மேல் முனையில் தலாமஸும் ஹைப்போதலாமஸும் உள்ளன. அதோடு பிட்யூட்டரி சுரப்பியும் பைனியல் சுரப்பியும் இங்குதான் இருக்கின்றன.

   

  நமக்கு ஒரு ஜோடி தலாமஸ் இருக்கிறது. இது, உடல் உணர்ச்சிகளைத் தொகுத்தும் பகுத்தும் உணரக்கூடிய பகுதி. இது மட்டும் இல்லையென்றால், பெருமூளை ரொம்பவே குழம்பிப் போகும். இதை மூளைக்குள் இருக்கும் ஒரு ‘தொலைபேசி நிலையம்’ என்று வர்ணிக்கலாம்.

  எப்படி ஒரு தொலைபேசி நிலையத்திற்கு வந்து சேரும் அழைப்புகள் பகுக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு, அவை செல்ல வேண்டிய தொலைபேசி எண்களுக்குச் சரியாக அனுப்பப்படுகின்றனவோ, அதுமாதிரி நம் புலன்களிலிருந்து தலாமஸுக்கு வரும் செய்திகள் அனைத்தும் அலசப்பட்டு கண்ணுக்கு, காதுக்கு, ருசிக்கு, தொடுதலுக்கு எனத் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, பெருமூளையின் அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. உதாரணமாக, தோழி தொடுவதை ரசிக்கிறீர்கள்; தம்பி கிள்ளும்போது ‘ஸ்..ஆ.. வலிக்கிறது’ என்கிறீர்கள்.

  இந்த இரண்டையும் வித்தியாசப்படுத்திக் காண்பிப்பது தலாமஸ்தான். நம்மை சுயநினைவுடனும் எச்சரிக்கை உணர்வுடனும் இருக்க வைப்பது, பயம், கோபம் போன்ற உணர்ச்சிகளை வெளிக்காட்டுவது எல்லாமே தலாமஸ் செய்யும் வேலைதான். தலாமஸ் மட்டும் வேலை நிறுத்தம் செய்துவிட்டது என்றால், ‘கோமா’ எனும் ஆழ்நிலை மயக்கத்துக்குச் சென்று விடுவோம்.

  தலாமஸுக்கும் மூளைத்தண்டுக்கும் நடுவில் ஒரு ஜோடி ‘ஹைப்போதலாமஸ்’ ஒளிந்திருக்கிறது. இது ஒரு வாதுமை அளவில்தான் இருக்கிறது. ஆனால், இதுதான் மூளையிலேயே மிகவும் துடிப்பானது. உடலின் உயிர்க்கடிகாரம் இங்குதான் உள்ளது. இது தானியங்கு நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் தண்ணீரின் அளவைச் சரியாக வைத்துக்கொள்கிறது.

  உடல் வெப்பம், பசி, தாகம், உறக்கம், ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பல உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இதற்கு ஏதாவது பாதிப்பு வந்தால், நமக்குப் பசிக்காது; தாகம் எடுக்காது. அதுபோல், உடலுக்குக் காய்ச்சல் வந்தால், இந்தப் பகுதி தன் கட்டுப்பாட்டில் இல்லை என்று அர்த்தம். இவை மட்டுமல்லாமல், பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டிவிட்டு, பலதரப்பட்ட ஹார்மோன்களையும் சுரக்கச் செய்வதும் இதுதான்.

  பெருமூளைக்கு அடிப்புறத்தில் தலாமஸுக்கு அருகில் ‘அடிவார நரம்பு முடிச்சுகள்’ (Basal ganglia) உள்ளன. இவை கண் அசைவு, கற்றல் திறன், அறிவு சார்ந்த நிலை போன்ற பலவற்றைக் கவனிப்பது மட்டுமின்றி விரல்களில் ஏற்படும் நுட்பமான அசைவுகளையும் கட்டுப்படுத்துகின்றன.

  உதாரணமாக, கையில் பேனா பிடிப்பது, எழுதுவது, வரைவது போன்ற அசைவுகளைக் கவனிப்பது இவைதான். இவற்றில் பாதிப்பு ஏற்படுமானால், டம்ளரைக் கூடப் பிடிக்க முடியாத அளவுக்குக் கை விரல்களில் நடுக்கம் ஏற்படும். தாத்தா, பாட்டிகளுக்கு ‘உதறுவாதம்’ (Parkinson’s disease) வருவது இப்படித்தான்.

  நடுமூளை என்பது பெருமூளை, தலாமஸ், ஹைப்போதலாமஸ் மற்றும் அதனடியில் இருக்கும் மூளையின் மற்ற பகுதிகளையும் இணைக்கிற பாலமாக இருக்கிறது. மூளையின் மூன்று பகுதிகளில் மிகவும் சிறியது இதுதான். இது தன்னிச்சையாகச் சில செயல்களைக் கட்டுப்படுத்தக் கூடியதுதான் என்றாலும் பார்வைக்கும் செவி உணர்வுக்கும் அதிகம் உதவுகிறது.

  முக்கியமாக, நாம் பேருந்திலும் ரயிலிலும் பயணம் செய்யும்போது எதிரில் நகரும் காட்சிகளைப் பார்ப்பதற்கு ஏற்ப கண்ணில் ‘விழிப்பாவை’யின் (Pupil) அளவைக் கட்டுப்படுத்தி அந்தக் காட்சிகளை நமக்குத் தெரிவிப்பது இதுதான்.

  சிறுமூளை என்பது பின்மூளையில் பெருமூளைக்கு அடிப்புறத்தில் இருக்கிறது. இது பார்ப்பதற்குக் குடுமிபோல் இருக்கிறது. இதுவும் பெருமூளைபோல் வலது, இடது என இரண்டு அரைக்கோளங்களைக் கொண்டுள்ளது. இதனுள்ளும் வலது பக்க நரம்புகள் இடது பக்கத்துக்கும் இடது பக்க நரம்புகள் வலது பக்கத்துக்கும் தடம் மாறிச் செல்கின்றன.

  நாம் நிமிர்ந்து நிற்கிறோம்; நடை தள்ளாடாமல் நேர்கோட்டில் நடக்கிறோம் என்றால் அதற்குக் காரணம் சிறுமூளைதான். இது தசைகளின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதால் சாத்தியப்படுகிறது. ஒரே நேரத்தில் பல தசைகள் இயங்கும்போது, அவற்றை ஒன்றுக்கொன்று ஒருங்கிணைந்து செயல்பட வைப்பதும் சிறுமூளைதான். உதாரணமாக, ஓட்டப் பந்தயத்தில் ஒருவர் ஓடும்போது கை, கால் தசைகள் மட்டுமல்லாமல், மார்புத் தசைகளும் வயிற்றுத் தசைகளும் வேகமாக இயங்க வேண்டும். அந்த இயக்கத்தைக் கவனிப்பது சிறுமூளை.

  மூளைத்தண்டின் கடைசிப் பகுதி, முகுளம். ஆனாலும், நாம் உயிர் வாழத் தேவையான இதயத் துடிப்பு, சுவாசம், ரத்த அழுத்தம், குடலியக்கம் போன்ற அதிமுக்கியமான உடல் இயக்கங்களைக் கட்டுப்படுத்துவது இதுதான். உணவை மெல்லுதல், விழுங்குதல், உமிழ்நீர் சுரத்தல், இருமல், தும்மல் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் சிறப்பு மையங்களும் இதில்தான் உள்ளன.

  உணவு செரிமானம் ஆகவில்லை என்றாலோ, தலைசுற்றல் வந்தாலோ வாந்தி ஏற்படுகிறது அல்லவா? அது ஏன்? வாந்திக்கான சிறப்பு மையம் முகுளத்தில்தான் உள்ளது. ‘உணவோ, நஞ்சோ, குடலில் இருப்பது வெளியேறினால்தான் நல்லது’ என வயிறு மூளைக்குத் தகவல் தெரிவித்தால், அது முகுளத்தில் உள்ள வாந்தி மையத்தைத் தூண்டி வாந்தி ஏற்படச் செய்கிறது.

  மூளைப் பாலம் என்பது நடுமூளையையும் முகுளத்தையும் இணைக்கிற நரம்புப் பாதை. அதோடு சிறுமூளையின் இரண்டு அரைக்கோளங்களையும் இதுதான் இணைக்கிறது; உறக்கத்துக்கும் சுவாசத்துக்கும் துணைபுரிகிறது.

  எல்லாவற்றுக்கும் உள்ளே, மூளைத்தண்டுக்குள் முகுளத்திலிருந்து நடுமூளைவரை ‘ரெட்டிகுலர் அமைப்பு’ உள்ளது. ‘நாம் உறங்கும்போதும் விழித்திருக்கிற காவலாளி’ என்று இதைச் சொல்லலாம். ஏனெனில், நம்மை உறங்க வைப்பதும், உறக்கத்தைக் கட்டுப்படுத்தி விழிக்க வைப்பதும் இதுதான்.

  மூளையிலிருந்து உடலுக்குச் செல்லும் 12 ஜோடி கபால நரம்புகளில் வாசனைக்கும் பார்வைக்குமான கபால நரம்புகள் மட்டும் பெருமூளையில் இருந்து கிளம்புகின்றன. மீதி 10 ஜோடி நரம்புகள் மூளைத் தண்டிலிருந்துதான் கிளம்புகின்றன.

  லிம்பிக் சிஸ்டம், ஹிப்போகாம்பஸ், அமிக்டாலா… இவை எல்லாம் என்ன? அடுத்த வாரம் பார்ப்போம்.

  (அடுத்த வாரம் நிறைவடையும்)
  கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்

  https://tamil.thehindu.com

 17. 113. வா!

   

   

  ஒரு நெருக்கடிக்கு ஆட்பட்டாற்போல உணர்ந்தேன். இதற்குமுன் இப்படி இல்லை. என்றுமே இருந்ததில்லை. என் சன்னியாசத்தின் சாரமான சுதந்திரத்தை அதன் பூரண வடிவில் நான் அனுபவித்துக்கொண்டிருந்தேன். சட்டென்று ஒரே நாளில் அனைத்தையும் யாரோ கலைத்துப் போட்டுவிட்டாற்போல் இருந்தது. நான் ஊருக்கே வந்திருக்கக்கூடாதோ என்று ஒரு கணம் தோன்றியது. உடனே அது சரியல்ல என்றும் தோன்றியது. என்னைப் போன்ற இரண்டு வேறு வேறு சன்னியாசிகளை நான் சந்தித்திருக்கிறேன். தற்செயலாக அவர்கள் என் உடன் பிறந்தவர்களாகவும் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். அப்படி நினைத்துக்கொள்வது சற்று வசதியாக இருந்தது. ஆனால் அந்த நினைவை மீறியும் அவர்களின் சொந்த அனுபவங்களின் மீது என் கரிசனம் சற்று அதிகம் விழுவதுபோலத் தோன்றியது. எந்தக் கணத்தில் மனம் இளகத் தொடங்குகிறதோ அப்போது ஓடிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

  வினோத் தனது கதையை விவரித்துக்கொண்டிருந்தபோது பல சமயம் எனக்கு மிகுந்த மன நெகிழ்ச்சி உண்டானதை கவனித்தேன். வினய் மீதான அவனது அக்கறையையும் கரிசனத்தையும் மேலுக்குக் கிண்டல் செய்தாலும் அதே உணர்வுதான் எனக்கும் உள்ளதென்பதை எண்ணிப் பார்த்தேன். இது ஒரு சன்னியாசிக்குரிய லட்சணமல்ல என்று தோன்றியது. என் குருநாதர் ஒரு சமயம் சொன்னார், ‘விமல்! என்றைக்காவது உன் பெற்றோர், உடன் பிறந்தோர் மீது பிரத்தியேகமாக ஒரு பாசமோ பரிவோ உண்டானால் உடனே சென்று ஒரு சாக்கடைக்குள் படுத்துவிடு. அந்தக் கொசுக்கள் பயந்து அலறி எழுந்து உன்னை மொய்க்கும். ஈக்கள் உன் மூக்கின்மீது வந்து உட்காரும். துர்நாற்றமும் அந்த நாற்றம் எங்கிருந்து வந்திருக்கும் என்ற எண்ணமும் சேர்ந்து உன் வயிற்றைப் புரட்டும். எண்ணிலடங்காத நோய்களின் தொற்று உன்னைத் தாக்கும் என்று அறிவு அச்சுறுத்தும். பத்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்துவிட்டு எழுந்துபோய் நன்றாக சோப்புப் போட்டுக் குளித்துவிடு’.

  நான் சட்டென்று எழுந்தேன். ‘என்ன?’ என்று வினோத் கேட்டான்.

  ‘ஒரு நிமிடம் இரு. வந்துவிடுகிறேன்’ என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று நடக்கத் தொடங்கினேன். பூக்கடை பேருந்து நிலையத்தின் பின்புறம் அந்நாள்களில் ஒரு பெரிய சாக்கடை ஆறு இருந்தது. பன்றிகள் சகஜமாகப் புரண்டு விளையாடும் சாக்கடை. நான் நடக்கத் தொடங்கியபோது அதுதான் முதலில் என் கண்ணில் பட்டது. சற்றும் யோசிக்காமல் அந்தச் சாக்கடைக்குள் இறங்கிப் படுத்துவிட்டேன்.

  அந்தப் பக்கம் போய்க்கொண்டிருந்தவர்கள் முதலில் இதைக் கவனிக்கவில்லை. நான் தவறி விழுந்திருப்பேன் என்று எண்ணி ஒரு சிலர் நெருங்கி வந்து ‘எழுந்திருங்கள், எழுந்திருங்கள்’ என்று கூக்குரலிட்டார்கள். எனக்குப் புன்னகை செய்யத் தோன்றியது. ஆனால் அமைதி காத்தேன். நன்றாக ஒருமுறை அதில் புரண்டு சாக்கடை நீரில் மூக்கை அழுத்தி தரையில் அழுந்தத் தேய்த்து அதன்பின்புதான் எழுந்தேன். அந்தக் கோலத்தில் என்னைக் கண்டவர்கள் சட்டென்று விலகிச் செல்லத் தொடங்கினார்கள். எனக்கே அது ஒரு புதிய அனுபவம்தான். குடலைப் புரட்டும் துர்நாற்றத்தை அதற்குமுன் நான் அனுபவித்ததில்லை. சில விநாடிகள் சிரமமாக இருந்தது. ஆனால் கண்டிப்பாக உயிர் போய்விடாது என்று நினைத்தேன்.

  சாக்கடையை விட்டு வெளியே வந்து சுற்றுமுற்றும் பார்த்தேன். பேருந்து நிலையத்துக்குள் ஒரு குடிநீர்க் குழாய் இருந்தது நினைவுக்கு வந்தது. நேரே அதை நோக்கிச் சென்றேன். வழியில் என்னைக் கண்ட அத்தனை பேரும் விலகி ஓடினார்கள். குருநாதர் சொன்னது சரிதான் என்று தோன்றியது. அதனைக் காட்டிலும் ஓர் உன்னதமான மருந்து அந்தச் சமயத்தில் எனக்கு வேறு இருந்திருக்க முடியாது என்று பட்டது. நான் அந்தக் குடிநீர்க் குழாயில் தண்ணீர் பிடித்து முகத்தைக் கழுவி, ஆடைகளையும் சுத்தம் செய்யத் தொடங்கியபோது வினோத் பார்த்துவிட்டான்.

  ‘டேய் அங்கே பார்!’ என்று வினய்க்கும் என்னைக் காட்டினான். இருவரும் இருந்த இடத்தில் இருந்து எழுந்து என்னை நோக்கி ஓடி வந்தார்கள்.

  என்ன என்ன என்று வினய் பதற்றப்பட்டான்.

  ‘ஒன்றுமில்லை வினய். சற்று உதவி செய். தண்ணீர் பிடித்து என் மீது ஊற்று’ என்று சொன்னேன்.

  அதற்குள் வினோத் ஒரு கடைக்கு ஓடிச்சென்று ஒரு தகர டப்பாவை வாங்கி வந்திருந்தான். அதில் தண்ணீரைப் பிடித்து என் மீது கொட்டினான். அவன் தண்ணீரைக் கொட்டக் கொட்ட, வினய் என் மீது படிந்திருந்த சாக்கடைக் கழிவுகளைக் கையால் தேய்த்து சுத்தம் செய்தான்.

  அது முடிய ஐந்து நிமிடங்கள் ஆயின. வினோத் தன் தோள் பையில் இருந்து ஒரு சோப்பை எடுத்துக் கொடுத்தான். அதையும் தேய்த்துக் குளித்தேன். அவன் தனக்கென எடுத்துவந்திருந்த ஒரு மாற்று உடை அவனிடம் இருந்தது. அதைக் கொடுத்து என்னை அணிந்துகொள்ளச் சொன்னான். ஆயிரம் பேர் நடமாடிக்கொண்டிருந்த பேருந்து நிலையத்தில் சற்றும் வெட்கம் கொள்ளாமல் என் ஜிப்பாவையும் குர்த்தாவையும் அவிழ்த்து எறிந்துவிட்டு வினோத்தின் ஜிப்பாவையும் வேட்டியையும் அணிந்துகொண்டேன். இப்போது அவர்கள் இருவரையும் பார்த்துச் சிரித்தேன்.

  ‘என்ன ஆயிற்று?’ என்று வினய் கேட்டான்.

  ‘ஒன்றுமே இல்லை. வா’ என்று அழைத்துக்கொண்டு மீண்டும் நாங்கள் அமர்ந்திருந்த இருக்கைக்கே வந்தேன்.

  ‘நீ எங்கே கிளம்பிப் போனாய்? ஏன் சாக்கடையில் விழுந்தாய்?’ என்று வினோத் கேட்டான்.

  ‘மீண்டும் விழுந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்’ என்று பதில் சொன்னேன். அது அவனுக்குப் புரிந்திருக்காது என்று தோன்றியது.

  யோசித்துப் பார்த்தால், நான் அவ்வளவு பதற்றமடைந்ததற்குக் காரணம் வினோத் விவரித்த அவனது அனுபவங்கள்தாம். ஐயோ என்று ஒரு கணம் மனத்துக்குள் கதறிவிட்டபோதுதான் சுதாரித்துக்கொண்டேன். நான் சன்னியாசி ஆனதுபோல அத்தனை சுலபமாக இன்னொருவர் ஆகியிருக்க முடியாது என்பதே உண்மை. கடைசி வரை போராடி, தனக்குத்தானே தீட்சை அளித்துக்கொண்ட வினய், இன்றுவரை அது பற்றிய குற்ற உணர்வில் தவிப்பதுகூட எனக்குப் பெரிதாகப் படவில்லை. கிருஷ்ணனால் அலைக்கழிக்கப்பட்ட கதையை வினோத் சொன்னபோதுதான் நான் மனம் நெகிழ்ந்து போனேன். வினய்யை அவன் கடைத்தேற்றுவதற்கு முன்னால் அவனுக்கு நான் என்னவாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதிர்ஷ்டவசமாக குருநாதர் சொன்ன வைத்தியம் நினைவுக்கு வந்து அதைச் செயல்படுத்தியதால் சற்று நிதானமடைந்தேன். என் நாசிக்குள் இன்னமும் அந்தச் சாக்கடையின் நெடி அடித்துக்கொண்டே இருந்தது. அது இருக்க வேண்டியதுதான் என்று தோன்றியது. அது இருக்கும்வரை நான் மீண்டும் ஒருமுறை சலனமடைய மாட்டேன் என்று சொல்லிக்கொண்டேன்.

  நாங்கள் அந்தப் பேருந்து நிலைய இருக்கையிலேயே அமர்ந்திருந்தோம். இரண்டு மணி நேர இடைவெளியில் திருப்போரூர் செல்லும் பேருந்துகள் நான்கும், கோவளம் செல்லும் பேருந்துகள் இரண்டும் கிளம்பிச் சென்றதைப் பார்த்தோம். ஆனால் ஏறத் தோன்றவில்லை. அன்றைக்குச் செவ்வாய்க்கிழமை. வியாழக்கிழமை இரவுதான் அம்மா காலமாவாள் என்று அண்ணா சொல்லியிருந்ததாக வினோத் சொன்னது ஒரு காரணமாயிருக்கலாம். எப்படி யோசித்துப் பார்த்தாலும் ஐயோ என்று பதறித் துடித்துக்கொண்டு வீட்டுக்கு ஓடும் நிலையில் நாங்கள் மூவருமே இல்லை என்பது புரிந்தது. இதை வினய்யிடம் குறிப்பிட்டு, ‘சந்தேகப்படாதே. நீ ஒரு சன்னியாசிதான் என்பதை நிரூபிக்க இந்த ஒரு காரணமே போதும்’ என்று சொன்னேன். அவன் சிரித்தான்.

  சட்டென்று பேச்சை மாற்றி, ‘உன் கிருஷ்ணன் அத்தனைக் கொடூரமானவனா? எப்படி அவனைச் சகித்துக்கொண்டு இன்னமும் சுமந்துகொண்டிருக்கிறாய்?’ என்று வினோத்திடம் கேட்டான். அவன் புன்னகை செய்தான். ஆனால் பதில் சொல்லவில்லை.

  எனக்கே அது வியப்புத்தான். திருமணத்துக்கு முதல் நாள் இரவு அவனது வாழ்வின் புதிய அத்தியாயம் ஆரம்பமாகியிருக்கிறது. அன்றைக்கு ஜானவாச ஊர்வலமெல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்து படுத்தபோது வினோத் உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியும் கிளுகிளுப்பும் கொண்டிருந்தான். விடிந்தால் திருமணம். புதிய மனைவி. புதிய வாழ்க்கை. தானும் மகிழ்ந்து, அம்மா அப்பாவையும் மகிழ்ச்சியில் ஆழ்த்த அவன் தேர்ந்தெடுத்திருந்த சிறந்த உபாயம். எப்படியாவது சிரமப்பட்டு ஒரு எம்.ஏ., எம்.எட்., முடித்துவிட்டு அரசுப் பள்ளியில் ஆசிரியராகிவிட வேண்டும் என்று அவன் அப்போது நினைத்தான். அது அவனுக்கு முடியாத காரியமும் அல்ல. சித்ரா நிச்சயமாக அதற்கு ஒத்துழைப்பதாகச் சொல்லியிருந்ததும் அவனுக்கு மானசீக பலத்தைத் தந்திருந்தது.

  அதையெல்லாம் எண்ணிக்கொண்டுதான் அவன் உறங்கச் சென்றான். அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் எழுப்பிவிடுவேன் என்று அம்மா சொல்லியிருந்தாள். அதற்குள் சிறிது தூங்கிவிடுவது நல்லது என்றே அவனுக்குத் தோன்றியது. படுத்த சில நிமிடங்களில் தூங்கியும் விட்டான். நள்ளிரவு தாண்டி அரை மணி நேரம் ஆகியிருக்கும். சட்டென்று அவனை யாரோ தொட்டு எழுப்புவது போலிருந்தது. வினோத் கண் விழித்துப் பார்த்தபோது அறைக்குள் யாருமில்லை. விளக்கைப் போட்டுப் பார்த்தான். ஒன்றுமேயில்லை. மீண்டும் விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தான்.

  இப்போது மீண்டும் யாரோ தொட்டு எழுப்புவது போன்ற உணர்வு ஏற்பட, திடுக்கிட்டுக் கண் விழித்துப் பார்த்தான். யாருமில்லை. வினோத்துக்குச் சிறிது அச்சமாகிவிட்டது. ‘யார்? யாரது?’ என்று குரல் கொடுத்துப் பார்த்தான். பதில் இல்லை. எழுந்து சென்று கதவைத் திறந்து மாமாவின் பக்கத்தில் படுத்துக்கொண்டுவிடலாமா என்று அவன் நினைத்த கணத்தில் அறைக்குள் யாரோ வத்திக்குச்சி கிழிப்பது போன்றதொரு சத்தம் வந்தது. ஒரு ஒளிப்புள்ளி. புள்ளிதான் அது. ஆனால் தோன்றிய கணத்தில் ஒரு பூதாகாரப் பந்தாக உருப்பெற்று சுவரின் மீது படர்ந்து உத்தரத்தில் ஏறித் தொங்கியது. வினோத்துக்கு மிகுந்த அதிர்ச்சியாகிவிட்டது. ஐயோ என்று கத்த நினைத்த கணத்தில் ஒரு ஓங்கார சத்தம் எழுந்து அறையெங்கும் நிறைந்தது. அவன் தன் மனத்துக்குள் சிவ சிவ சிவ என்று ஜபிக்கத் தொடங்கினான். சில விநாடிகள்கூட ஆகியிருக்காது. அவனையறியாமல் சிவநாமம் மாறி கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண என்று உச்சரிப்பு வேறு விதமானது.

  அதுவரைதான் அவனுக்கு நினைவிருந்தது. அதன்பின் அந்த ஒளிக்கோளம் மெல்லக் கீழிறங்கி வந்து அவனைத் தொட்டது. ‘ஹே கிருஷ்ணா...’ என்று அலறிக்கொண்டு வினோத் விழுந்து சேவித்தான். அந்த ஒளி தரையில் படர்ந்து அவன் மார்பு வரை ஊர்ந்து அப்படியே அவனை மெல்லத் தூக்கியது. தரையைவிட்டு ஓரடி உயரத்தில் தான் மிதந்துகொண்டிருப்பதை வினோத் கண்டான். பரவசத்தில் அவன் கண்கள் தாரை தாரையாக நீர் சொரிந்துகொண்டே இருக்க, கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண என்று ஓயாமல் உதடுகள் உச்சரித்துக்கொண்டே இருந்தன.

  சட்டென்று அந்த ஒளிப் பாளம் ஒரு குச்சியைப் போல ஒல்லியாகி நின்றது. அந்தரத்தில் இங்குமங்கும் ஆடி மிதந்தபடி அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது. வினோத்துக்குத் தன்னிலை மறந்துபோனது. கிருஷ்ண ஜபத்தை விடாமல் செய்தபடி அவனும் அந்த ஒளிக் குச்சியைச் சுற்றி வர ஆரம்பித்தான். எவ்வளவு நேரம் அப்படி செய்திருப்பான் என்று தெரியாது. இறுதியில் ‘வா’ என்ற ஒற்றைச் சொல் ஒன்று எங்கிருந்தோ ஒலித்தது. யாரும் கைவைத்துத் திறக்காமல் அறைக்கதவு தானே திறந்துகொள்ள அந்த ஒளிக் குச்சி வெளியேறிச் சென்றது. வினோத் அதைப் பின்பற்றிச் செல்லத் தொடங்கினான்.

  (தொடரும்)

  http://www.dinamani.com/junction/yathi/2018/aug/22/113-வா-2985084.html

 18. அருமையான நெத்திலி மீன் பொரியல்

   
  அ-அ+

  தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த நெத்திலி மீன் பொரியல். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

   
   
   
   
  அருமையான நெத்திலி மீன் பொரியல்
   

  தேவையான பொருட்கள் :

  நெத்திலி மீன் - 1/2 கிலோ, நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,


  கடுகு, சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்,
  காய்ந்தமிளகாய் - 5,
  சாம்பார் வெங்காயம் - 6,
  பச்சைமிளகாய் - 2,
  இடிச்ச பூண்டு - 5 பல்,
  தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
  தனியாத்தூள், சீரகத்தூள் - தலா 1 டீஸ்பூன்,
  மிளகுத்தூள், கொத்தமல்லி - சிறிது,

  உப்பு -  தேவைக்கு.
   
  201809031506425777_1_meen-poriyal._L_styvpf.jpg

  செய்முறை :

  நெத்திலி மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

  கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் சின்ன வெங்காயம், ப.மிளகாய், இடிச்ச பூண்டு சேர்த்து வதக்கவும்.

  அடுத்து அதில் தனியாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

  அடுத்து அதில் தேங்காய்த்துருவல், நெத்திலி மீன், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.
   
  சூப்பரான நெத்திலி மீன் பொரியல் ரெடி.

  https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/09/03150642/1188612/nethili-meen-poriyal.vpf

 19. ப்ராஸ்டேட் புற்றுநோயை தடுக்க முடியுமா...?

   

  இன்று ஐம்பது வயதைக் கடந்த ஆண்களில் பலர் ப்ராஸ்டேட் புற்றுநோயால் திக்கப்பட்டிருக்கிறார்கள்

  health.jpg

  இவர்களில் முழு உடற் பரிசோதனையையும், தொடர் கண்காணிப்பில் உள்ளவர்களும் இதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகளின் போது பரிசோதனை செய்து கொண்டு, அத்தகைய பாதிப்பை உறுதிப்படுத்திக் கொண்டு நவீன சிகிச்சையின் மூலம் குணமடைந்திருக்கிறார்கள். 

  அறிகுறிகளை அலட்சியப்படுத்தியவர்கள் இவ்வகையினதான புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, மரணத்தையும் சந்தித்திருக்கிறார்கள்.

  முதலில் இதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ளுங்கள். பதினைந்து வயது முதல் பத்தொன்பது வயது வரையில் உள்ள இளம் ஆண்களுக்கு இத்தகைய தருணங்களில் பாலியல் சுரப்பியான புராஸ்டேட் சுரப்பியின் செயற்பாடு சீராகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும். 

  இதன் போது மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளானால் அதன் காரணமாக புராஸ்டேட் சுரப்பியின் செயற்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு, புற்றுநோய் செல்கள் அங்கு வந்து தங்கி பல்கி பெருகுவதற்கு வழி வகுக்கின்றன. இதனை அண்மைய ஆய்வுகள் மூலம் உறுதி செய்திருக்கிறார்கள். 

  அதனால் புராஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்கவேண்டும் என்றால் பதின்ம வயது என்ப்படும் பதிமூன்று வயது முதல் பத்தொன்பது வயது வரையிலான காலகட்டத்தில் மதுவை தொடவேக்கூடாது. அதையும் கடந்து தொட்டால் அவர்களுக்கு எதிர்காலத்தில் புராஸ்டேட் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மூன்று இரண்டு பங்கு அதிகம் என்று உறுதியாக சொல்கிறார்கள் 

  ஆய்வாளர்கள். அத்துடன் புராஸ்டேட் சுரப்பில் இருக்கும் புற்றுநோயிற்கான செல்கள் முற்றிய நிலையில் ஏனைய எலும்புகளிலும் ஊடுருவிச் செல்லக்கூடியது என்றும், வேறு உறுப்புகளுக்கு பரவும் தன்மையைக் கொண்டது என்றும் வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

  முதல் நிலையில் எந்த அறிகுறியையும் தோற்றுவிக்காது. நான்காம் நிலையில் முற்றும் போது தான் அறிகுறிகள் தோன்றும். உடனடியாக சிறுநீர் கழிக்கவேண்டும் என்ற உணர்வு, சிறுநீர் கழிக்கும் போது அசௌகரியமான உணர்வு, விந்து மற்றும் சிறுநீர் வெளியேறும் போது அதனுடன் சிறிதளவில் இரத்தமும் வெளியேறுவது, முதுகின் கீழ் பகுதி, தொடையில் மேல் பகுதி, இடுப்பு ஆகிய பகுதிகளில் தாங்க முடியாத வலி அல்லது விட்டுவிட்டு வலி ஏற்படும். 

  இத்தகைய அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டாலும் உடனடியாக வைத்தியர்களை சந்திக்க வேண்டும். அவர்கள் பரிந்துரைக்கும் எம் ஆர் ஐ ஸ்கேன், சி டி ஸ்கேன் மற்றும் எலும்பிற்கான ஸ்கேன் ஆகிய பரிசோதனைகளை செய்து பாதிப்பு உள்ளதா? என்பதை பரிசோதிக்கவேண்டும்.

  இதனை வராமல் தடுக்கவேண்டும் என்றால் முதலில் மதுவை முற்றாக தவிர்க்கவேண்டும். உடல் எடையை சீராக பராமரிக்கவேண்டும். கலோரி அதிகமாக இருக்கும் உணவுகளையும், பானங்களையும் தவிர்க்கவேண்டும். தினமும் காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். பதப்படுத்தப்பட்ட இறைச்சியை தவிர்க்கவேண்டும். கல்சிய சத்து அதிகமுள்ள உணவையும், பால்மா பொருள்களினால் செய்யப்பட்ட உணவு மற்றும் பானத்தை மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி மட்டுமே சாப்பிடவேண்டும்.

  டொக்டர் கோவிந்தராசன்

  தொகுப்பு அனுஷா.

  http://www.virakesari.lk/article/39264

 20. 112. கிருஷ்ணனாவது

   

   

  வினோத்தால் அந்த நாளை மறக்கவே முடியாது. பூரண ஞானமடைந்த ஒரு யோகியின் எதிரே அமர்ந்திருக்கும் பரவசத்தில் நெடுநேரம் அவன் பேச்சற்று இருந்தான். அவனையறியாமல் அவன் கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது.அவன் சம நிலைக்கு வரும்வரை அண்ணா அமைதி காத்தான். பிறகு, ‘எனக்கு இடப்பட்ட கடமையை நிறைவேற்றிவிட்டேன்’ என்று சொன்னான்.

  ‘என்ன செய்தாய்?’

  ‘சொன்னேனே. உன் மனத்துக்குள் ஒரு செய்தியைப் புதைத்திருக்கிறேன்’.

  ‘இல்லை. என்னால் எதையும் உணர முடியவில்லை. உன்னிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை’.

  ‘இப்போது வராது. தேவைப்படும்போது அது உன் சிந்தையில் உதிக்கும்’.

  ‘புரியவில்லை’.

  ‘வினோத், உனக்கு அந்தத் தகவல் இப்போது தேவையில்லை. ஆனால் ஒருநாள் அது தேவைப்படும். அன்று என் குரல் உன் மனத்தில் அதை ஒலிபரப்பும்’.

  ‘இதெல்லாம் மாயாஜாலம் போல இருக்கிறது’.

  ‘ஒன்றுமே இல்லை. வெறும் அறிவியல்’ என்று அண்ணா சொன்னான்.

  ‘அறிவியலா?’

  ‘ஆம். அறிவியல்தான். ஒரு கேசட்டில் பதிவுசெய்து வைப்பதைப் போல உன் மனத்துக்குள் பதிந்து வைத்திருக்கிறேன். அவ்வளவுதான். உரிய நேரத்தில் அது ஒலிபரப்பாகும்’.

  வினோத் அவனை பிரமித்துப் போய்ப் பார்த்துக்கொண்டிருந்தான். ‘விஜய், நான் எளியவன். எனக்கு யோகம் தெரியாது. சித்து தெரியாது. ஞானமடைந்தவனா என்றால் அதையும் யோசித்துத்தான் சொல்லவேண்டி இருக்கும். ஆனால் நான் பக்தியை என் வழியாகக் கொண்டவன். பக்தி ஒன்றே முக்திக்கு வழி என்று நினைப்பவன்’.

  ‘தவறில்லை’.

  ‘எனக்கு கிருஷ்ண மந்திரம் தவிர வேறெதுவும் தெரியாது’.

  ‘தெரிந்தது போதுமே?’

  ‘நாம ஜெபம் ஒன்றுதான் நான் செய்வது. நாள் முழுவதும் அதைத்தான் உச்சரித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு இடப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன்’.

  ‘கடை திறப்பது போன்ற கட்டளைகளையா?’

  ‘ஆம். அதுவும் உண்டு. எங்கள் இயக்கம் செய்யும் பணிகளுள் முதன்மையானது அன்னதானம். தேசம் முழுதும் மிகப்பெரிய அளவில் நடக்கிற காரியம். அதற்கு நிதி வசூல் செய்வதுதான் எனக்கு அனைத்தினும் தலையாய பணி’.

  அண்ணா சிரித்தான். ‘பரவாயில்லை. ஆனால் உன் துறவின் நோக்கம் இதுவா என்று அவ்வப்போது கேட்டுக்கொள்’.

  ‘கேட்காமல் இல்லை. என் துறவின் நோக்கம் அன்றைக்கு ஒளிக் கோளமாகத் தென்பட்டவனின் உருவத்தைத் தெளிவாகப் பார்ப்பது. என்றைக்காவது அது நடந்துவிடும்’.

  ‘பார்ப்பதா? அது அத்தனை அவசியமா?’

  ‘இல்லையா?’

  ‘வினோத்! இறையை உணர்வதுதான் முதன்மையானது. இறைத்தன்மையை நெருங்குவது முக்கியமானது. இரண்டறக் கலத்தல் இறுதியில் வருவது’.

  ‘அப்படியா சொல்கிறாய்? ஆனால் என் நண்பர்களுடன் நீ பேசியதை வைத்து உன்னை நான் வேறு விதமாக எண்ணிவிட்டேன்’.

  ‘அது சும்மா தமாஷுக்குப் பேசியது. ஒன்றைப் புரிந்துகொள். அறிவியல் என்பது ஆன்மிகத்தின் புரிந்த பகுதி. புரிந்ததில் தெளிவு இருந்தால்தான் புரியாதவற்றை நோக்கி நகர முடியும்’.

  ‘எனக்கு உன்னைக் காண ஒரே பிரமிப்பாக இருக்கிறது. உன்னைப் பார்ப்பேன் என்று நினைக்கவேயில்லை’.

  அண்ணா சிரித்தான்.

  ‘இது நம் குடும்பத்தின் விதி வினோத். நாம் நால்வரும் இப்படியாகப் பிரிந்து போக வேண்டியவர்கள் என்பது என்றோ முடிவான விஷயம்’.

  ‘அவ்வப்போது அம்மாவை எண்ணிக்கொள்வேன். சற்று வருத்தமாக இருக்கும்’.

  ‘என்ன வருத்தம்?’

  ‘நான்கைப் பெற்று நான்கையும் இழப்பதன் வலியைச் சொன்னேன்’.

  அண்ணா இதற்கு பதில் சொல்லவில்லை. நெடுநேரம் பேசாதிருந்துவிட்டு, ‘அவள் சமாளித்துக்கொண்டுவிட்டாள்’ என்று சொன்னான்.

  ‘அவர்கள் இருவரும் என்ன ஆனார்கள், எங்கே இருக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா? நீ அவர்களைச் சந்தித்தாயா?’

  ‘சந்திக்கவில்லை. ஆனால் கவனிக்கிறேன்’.

  ‘வினய் என்ன செய்கிறான்?’

  அண்ணா சிரித்தான். ‘அவன் விதியை வெல்லப் பார்க்கிறான். ஆனால் அவனால் அது முடியாது’.

  ‘ஐயோ’.

  ‘அவன் ஒரு மாயவலைக்குள் சிக்கிக்கொண்டான். மீள முடியாமல் அவதிப்படுகிறான்’.

  ‘உன்னால் உதவ முடியாதா?’

  ‘முடியாது’ என்று உடனே சொன்னான்.

  ‘ஏன்?’

  ‘எனக்கு அதற்கு அனுமதி இல்லை’.

  வினோத்துக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. சிறிது நேரம் கண்மூடி ஜபம் செய்தான். பிறகு, ‘விமல்?’ என்று கேட்டான்.

  அண்ணா சிரித்துவிட்டான்.

  ‘ஏன் சிரிக்கிறாய்?’

  ‘அவனும் சன்னியாச ஆசிரமத்தைத்தான் ஏற்றான். ஆனால் ராஜரிஷி ஆகிவிட்டான். வாழ்நாளில் ஒருபோதும் அவன் உண்மை உணரமாட்டான்’.

  ‘என்ன சொல்கிறாய்?’

  ‘அவன் ஒரு அரசியல் புரோக்கர். விடு. அவனை மறந்துவிடு’.

  வினோத்துக்கு நெடுநேரம் வியப்பு தீரவேயில்லை. இது எப்படி,இது எப்படி என்று திரும்பத் திரும்பத் தனக்குள் கேட்டுக்கொண்டே இருந்தான். அண்ணா அவனுக்குத் தன் வலக்கரத்தில் அணிந்திருந்த மணிக்கயிறை அவிழ்த்துக் கொடுத்தான்.

  ‘இதை வைத்துக்கொள். இது ஒரு காப்பு. இதை அணிந்துகொள்ள உங்கள் இயக்கம் அனுமதிக்குமா?’

  ‘தெரியவில்லை. நாங்கள் துளசி மாலை மட்டுமே அணிவோம்’ என்று கழுத்தைத் தொட்டுக் காட்டினான்.

  ‘பரவாயில்லை. உன் பையில் வைத்துக்கொள்’ என்று சொன்னான்.

  வினோத் அதைத் தன் கழுத்தில் தொங்கிய பையில் போட்டுக்கொண்டான். அதில் ஏற்கெனவே ஒரு ஜபமாலை இருந்தது.

  அண்ணா அவனிடம் மேலும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தான். சிறு வயதில் அவனுக்குக் கிடைத்த சுவடியைக் குறித்துச் சொன்னான். ‘அந்தச் சுவடி திருப்போரூர் சாமியிடம் உள்ளதை எனக்குச் சொன்னதே கபிலர்தான்’.

  வினோத் சட்டெனக் கேட்டான், ‘கபிலர் ஏன் உன்னைத் தேர்ந்தெடுத்தார்?’

  அண்ணா சிறிது யோசித்தான். பிறகு ‘தெரியவில்லை. எனக்கு அந்தக் கொடுப்பினை இருந்திருக்கிறது’ என்று சொன்னான்.

  கிளம்பும்போது, ‘உனக்கு உபயோகப்படும்’ என்று சொல்லி இரண்டு மூச்சுப் பயிற்சிகளை அவனுக்குச் சொல்லிக் கொடுத்து அனுப்பிவைத்தான்.

  ‘மறுபடி உன்னை எப்போது பார்ப்பேன்?’ என்று வினோத் கேட்டான். சிரித்துவிட்டு அண்ணா அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

  வினோத் இந்தச் சம்பவத்தை எங்களுக்குச் சொன்னபோது என்னால் வெறுமனே சிரிக்கத்தான் முடிந்தது. வினய்க்குத்தான் ஆற்றாமை பொங்கிவிட்டது. ‘நான் உருப்படமாட்டேன் என்று அவன் சொன்னானா? உண்மையிலேயே அப்படித்தான் சொன்னானா?’ என்று திரும்பத் திரும்பக் கேட்டான். வினோத் அவனை சமாதானப்படுத்த முடிவு செய்தான்.

  ‘இதோ பார் வினய், பிழைப்பது அல்லது வாழ்வது என்பது வேறு. வாழ்வுக்கு அப்பால் உள்ளவற்றின் அடிப்படைகளை அறிவது வேறு. சன்னியாசம் அதற்கான அடிப்படை சௌகரியம். அதை மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்த நினைப்பதுதான் எல்லா பிரச்னைகளுக்கும் தொடக்கப்புள்ளி’ என்று சொன்னான்.

  ‘ஆம். புரிகிறது. ஆனால் பாதி வாழ்க்கை விரயமாகிவிட்டது’.

  ‘வருந்தாதே. வாழ்வின் நீளம் நீ அறியமாட்டாய். அது நூறாண்டுகளாக இருக்கலாம். நாளையே முடியக்கூடியதாகவும் இருக்கலாம். வாழும் கணத்தில் என்ன செய்கிறோம் என்பதே முக்கியம்’.

  ‘இனி என்ன செய்வது?’

  ‘கிருஷ்ணனை நினை. அவனை மட்டும். பக்தி கூட வேண்டாம். வெறும் ஜபம் போதும். வெறுமனே உச்சரித்துக்கொண்டிருப்பதே உன்னை உய்யச் செய்யும்’ என்று வினோத் சொன்னபோது நான் பாய்ந்து அவன் வாயைப் பொத்தினேன்.

  ‘டேய் நிறுத்து. நீ எனக்கு ஒரு பாதிரி போலத் தெரிகிறாய்’ என்று சொன்னேன்.

  ‘இல்லை விமல். அவனைத் தடுக்காதே. அவன் எனக்கு நல்லது செய்ய நினைக்கிறான்’.

  ‘முட்டாள். உனக்கு ஒருவராலும் நல்லது செய்ய முடியாது. உன் வாழ்க்கையை அவன் வாழமாட்டான். உன்னால் ஒருபோதும் அவன் வழியில் போக முடியாது’.

  ‘ஏன் அப்படிச் சொல்கிறாய்?’

  ‘நாம் இடறுகிறோம் என்று நீ நினைத்திருந்தால், என்றோ சொரிமுத்துவிடம் திரும்பிச் சென்றிருப்பாய்’ என்று சொன்னேன்.

  வினய் அமைதியாகிவிட்டான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ‘ஆம். நீ சொல்வது சரி. நான் யுத்த களத்தில் இருக்கிறேன். எனது தருமம் வேறு’ என்று சொன்னான்.

  நான் வினோத்திடம் வினய்யின் பிரச்னையைப் பற்றி விளக்கிச் சொன்னேன். ‘அவன் உன்னை, என்னை, அண்ணாவைவிட வல்லவன். துரதிருஷ்டவசமாக அவன் தெய்வங்களுடன் யுத்தம் புரியத் தொடங்கிவிட்டான். சரணடைந்தால் வாரியத் தலைவர் பதவி நிச்சயம். அதைக் காட்டிலும் அவன் எதிர்க்கட்சிக்காரனாக இருப்பதே நல்லது’ என்று நான் சொன்னதை வினோத் விரும்பவில்லை.

  ‘நீ மிகவும் மலினப்படுத்துகிறாய்’ என்று சொன்னான்.

  ‘இல்லை. அதுதான் உண்மை. அவனது கட்டை விரலைப் பார்’ என்று அவன் கையை எடுத்துக் காட்டினேன்.

  பல்லாண்டுக்காலம் கட்டுப்போட்டு ஓர் இடாகினியை அடைத்து வைத்திருந்த அந்த விரலின் நிறமே கருநீலமாகியிருந்தது. ரத்த ஓட்டம் முற்றிலும் இல்லாமல் போய், அது ஒரு காய்ந்த கரித்துண்டுபோல் இருந்தது. வினோத்துக்கு அது புரியவில்லை. நான் விளக்கிச் சொன்னதையும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. இந்த உலகின் அனைத்துச் சிக்கல்களுக்கும் கிருஷ்ணன் தீர்வு தந்துவிடுவான் என்று அவன் சொன்னான்.

  ‘மடையா, வினய் ஒரு கிருஷ்ணனாகியிருக்க வேண்டியவன். இது உன் கிருஷ்ணனுக்கே தெரியும், கேட்டுப் பார்’ என்று கத்தினேன்.

  வினோத் பயந்துவிட்டான். ‘சரி. நான் உனக்காக ஜபம் செய்கிறேன்’ என்று வினய்யிடம் சொன்னான்.

  நான் தலையில் கைவைத்து அப்படியே அமர்ந்துவிட்டேன்.

  (தொடரும்)

  http://www.dinamani.com/junction/yathi/2018/aug/21/112-கிருஷ்ணனாவது-2984255.html

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.