Jump to content

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    85545
  • Joined

  • Last visited

  • Days Won

    480

Posts posted by நவீனன்

  1. ஆப்பத்திற்கு அருமையான முட்டை குருமா

     

    சப்பாத்தி, பூரி, ஆப்பம், தோசை, இட்லிக்கு சூப்பராக இருக்கும் முட்டை குருமா. இன்று முட்டை குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

     
    ஆப்பத்திற்கு அருமையான முட்டை குருமா
     
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 6
    கெட்டியான தேங்காய் பால் - 1 கப்
    பச்சைமிளகாய் - 8
    இஞ்சி பூண்டு விழுது - 4 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - கால்ஸ்பூன்
    சீரகத்தூள் - 1 ஸ்பூன்
    பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி, பிரிஞ்சி - தலா 1
    கொத்தமல்லி - கால் கப்
    வெங்காயம் - 5
    எண்ணெய் - ஒரு குழிகரண்டி
    கொத்தமல்லி - ஒரு கொத்து

    201805041506564959_1_kurma._L_styvpf.jpg

    செய்முறை :

    வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசி, பிரிஞ்சி இலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    பச்சைவாசனை போனதும் மஞ்சள் தூள், சீரகத்தூள் சேர்க்கவும்.

    பின்னர் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.

    நன்கு கொதி வந்ததும் மிதமான தீயில் வைத்து முட்டையை உடைத்து ஊற்றி மூடி வைக்கவும்.

    5 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து திருப்பி போட்டு மீண்டும் 2 நிமிடம் வேக வைத்து கொத்தமல்லிதழை தூவி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான பூரிக்கு அருமையான முட்டை குருமா ரெடி.

    குறிப்பு - கெட்டியான தேங்காய் பால் தான் சேர்க்க வேண்டும். தேங்காய் விழுது சேர்க்க கூடாது.

    https://www.maalaimalar.com/

  2. சப்பாத்திக்கு அருமையான எள்ளு மட்டன் கிரேவி

     

    தோசை, இட்லி, சாதம், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த எள்ளு மட்டன் கிரேவி. இந்த இந்த கிரேவி செய்முறையை பார்க்கலாம்.

     
    சப்பாத்திக்கு அருமையான எள்ளு மட்டன் கிரேவி
     
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - அரைக் கிலோ
    தயிர் - 2 தேக்கரண்டி
    உப்பு - ஒரு தேக்கரண்டி
    மிளகு - ஒரு தேக்கரண்டி
    எள் - 2 தேக்கரண்டி
    கிராம்பு - 2
    முந்திரி - 6,
    பட்டை - சிறு துண்டு
    வெங்காயம் - 3
    தக்காளி - 3
    பெருஞ்சீரகம் - ஒரு தேக்கரண்டி
    காய்ந்த மிளகாய் - 8
    சீரகம் - ஒரு தேக்கரண்டி
    பூண்டு - 10
    எண்ணெய் - தேவையான அளவு
    இஞ்சி - சிறிய துண்டு
    இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி


    201805041212435893_1_Sesame-Mutton-Curry._L_styvpf.jpg

    செய்முறை :

    மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

    கொத்தமல்லி, 1 தக்காளி, 2 வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    2 தக்காளியை விழுதாக அரைத்து சேர்க்கவும்.

    கழுவிய மட்டனில் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு வேக‌ வைக்கவும்.

    வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், எள், பட்டை, கிராம்பு, முந்திரி, சேர்த்து நன்கு வதக்கவும்.

    இதனுடன் 1 வெங்காயம், காய்ந்த‌ மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.

    வதக்கிய அனைத்தும் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் ஒரு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய 1 தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் அரைத்து வைத்துள்ள‌ வெங்காய‌ மசாலா கலவை, அரைத்த தக்காளி விழுதை சேர்த்து நன்கு கிளறவும்.

    பின்னர் அதனுடன் வேக‌ வைத்த‌ மட்டனை சேர்க்கவும். மட்டன் வேக‌ வைத்த‌ தண்ணீர் மற்றும் தேவையான‌ அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க‌ விடவும்.

    நன்கு கொதித்த‌ பின்னர் கொத்த‌மல்லித் தழை தூவி இறக்கவும்.

    சுவையான‌ எள்ளு மட்டன் கிரேவி தயார்.

    https://www.maalaimalar.com

  3. ஸ்பைசி வெஜிடபிள் சாமை கஞ்சி

     
    அ-அ+

    சிறுதானியங்களில் சிறப்பு மிக்க சாமையில் கஞ்சி தயாரிப்பது எளிது. இதில் காய்கறிகள், மசாலா கலந்து செய்தால் சுவை இரட்டிப்பாகும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

     
     
     
     
    ஸ்பைசி வெஜிடபிள் சாமை கஞ்சி
     
    தேவையான பொருட்கள்

    சாமை - 50 கிராம்
    பயத்தம் பருப்பு - 50 கிராம்
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 2
    இஞ்சி பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
    தேங்காய் பால்- 1 கப்
    கேரட், பீன்ஸ் - கால் கப்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    மிளகு தூள் - அரை தேக்கரண்டி
    தனியா தூள் - கால் தேக்கரண்டி
    எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப

    தாளிக்க  :

    பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, கடுகு.

    201805030958314628_1_samai-rice-vegetable-kanji._L_styvpf.jpg

    செய்முறை :

    சாமை அரிசியை நன்றாக கழுவி அரை மணிநேரம் ஊறவைக்கவும்.

    பயத்தம் பருப்பை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்..

    வெங்காயம், ப.மிளகாய், காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி- பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    அடுத்து அதில் கேரட், பீன்ஸ் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    காய்கறிகள் நன்றாக வதங்கியதும் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

    பிறகு அதில் பயத்தம் பருப்பு, சாமை, பாதியளவு மிளகுத்தூள், தனியாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

    நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கி விடவும்.

    விசில் போனவுடன் மூடியை திறந்து தேங்காய்பால் சேர்த்து நன்கு கலக்கவும்.

    பின் மீண்டும் குக்கரை அடுப்பில் வைத்து சூடு பண்ணவும்.

    கடைசியாக எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் சேர்த்து உடனே அடுப்பிலிருந்து இறக்கவும்.

    சுவையான ஸ்பைசி வெஜிடபிள் சாமை கஞ்சி ரெடி.

    https://www.maalaimalar.com

    பால்சுறா குழம்பு

     
     
     
     
    தாய்ப்பாலை அதிகரிக்கும் பால்சுறா குழம்பு
     
    தேவையான பொருட்கள் :

    பால் சுறா - 250 கிராம்
    தேங்காய் - அரை மூடி (துருவிக்கொள்ளவும்)
    புளி - ஒரு சிறிய உருண்டை (இந்த குழம்புக்கு புளி அதிகம் தேவையில்லை)
    பூண்டு - 4 பல் (தட்டிக் கொள்ளவும்)
    சீரகம் - 2 டீஸ்பூன்
    மிளகு - ஒரு டீஸ்பூன்
    மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்
    சுக்கு - ஒரு சிறிய துண்டு (அம்மியில் வைத்துத் தட்டவும்)
    காய்ந்த மிளகாய் - ஒன்று  
    கடுகு - ஒரு டீஸ்பூன்
    வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - 2 சிட்டிகை
    கறிவேப்பிலை - சிறிது
    நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    201805021507267268_1_paal-sura-curry._L_styvpf.jpg

    செய்முறை :

    புளியை கால் கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்து கொள்ளவும்.

    பால் சுறாவை சிறு துண்டுகளாக நறுக்கி கழுவிக் கொள்ளவும்.

    பூண்டைத் தட்டிக்கொள்ளவும்.

    தேங்காய்த் துருவலுடன் மிளகு, சீரகம், மல்லி (தனியா), தட்டிய சுக்கு, காய்ந்த மிளகாய் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும்.

    தட்டிய பூண்டைச் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் அரைத்த மசாலா, தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர், புளிக்கரைசல் சேர்த்து பச்சை வாடை போகும்வரை நன்கு கொதிக்கவிடவும்.

    நன்றாகக் கொதித்ததும் பால் சுறாவைச் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். அதிகம் கிளற வேண்டாம். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பிலிருந்து இறக்கிப் பரிமாறவும்.

    சூப்பரான பால்சுறா குழம்பு ரெடி.

    https://www.maalaimalar.com/

  4. சூப்பரான வடு மாங்காய் ஊறுகாய்

     
    அ-அ+

    தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த வடு மாங்காய் ஊறுகாய். இன்று இந்த ஊறுகாய் செய்முறையை பார்க்கலாம்.

     
    சூப்பரான வடு மாங்காய் ஊறுகாய்
     
    தேவையான பொருட்கள் :

    பிஞ்சு மாங்காய்கள் - ஒரு கிலோ
    மிளகாய்ப்பொடி - 50 கிராம்
    கடுகு பொடி - 25 கிராம்
    நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    201804301503286015_1_mavadu-pickle._L_styvpf.jpg

    செய்முறை

    மாங்காய் காம்களை நீக்கி நன்கு கழுவித்துடைத்து ஈரமில்லாமல் வைக்கவும்.

    இந்த வடு மாங்காயில் நல்லெண்ணெய் போட்டு பிரட்டி, கடுகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு மேலாக பரவலாகப் போட்டு காற்று போகாமல் மூடி வைக்கவும்.

    தினமும் ஒருமுறை குலுக்கி விடவும். நன்றாக ஊற 10 நாட்களாவது ஆகும்.

    10 நாட்கள் கழித்து எடுத்து சாப்பிடலாம்.

    சூப்பரான வடு மாங்காய் ஊறுகாய் ரெடி.

    https://www.maalaimalar.com

  5. சூப்பரான இறால் ஊறுகாய் செய்வது எப்படி

     
    அ-அ+

    எலுமிச்சை, மாங்காய், வடுமாங்காய், நெல்லிக்காய் ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அசைவ பிரியர்களுக்கு விருப்பமான இறால் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

     
     
     
     
    சூப்பரான இறால் ஊறுகாய் செய்வது எப்படி
     
    தேவையான பொருட்கள்

    இறால் - கால் கிலோ
    இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
    மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
    மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
    நல்லெண்ணெய் - 200 கிராம்
    வினிகர் - 1/2 கப்
    உப்பு - 1 தேக்கரண்டி

    றுத்து பொடிக்க

    கடுகு - 1 ஸ்பூன்
    சோம்பு - 1 ஸ்பூன்
    வெந்தயம் - 1/2 ஸ்பூன்

    201804281143379689_1_prawn pickle._L_styvpf.jpg

    செய்முறை

    இறாலை சுத்தமாக கழுவி கொள்ளவும்.

    நன்றாக கழுவிய இறாலில் கொஞ்சம் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது போட்டு பிசறி அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

    ஒரு கடாயில் பாதி எண்ணெய் விட்டு காய்ந்ததும் இறலை போட்டு நன்கு சிவக்க பொறித்து எடுத்து ஆற வைக்கவும்.

    இறாலை பொரித்த எண்ணெயுடன் மீதி எண்ணெயை ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

    அடுத்து பொரித்த இறால் மஞ்சள் தூள், மிளகாய் தூள் போட்டு 5 நிமிடம் கிளறி விடவும்.

    பின்பு அதில் வினிகர், உப்பு சேர்த்து இறக்கி விடவும்.

    கடைசியாக அதன் மேல் வறுத்து பொடித்த பொடியை போட்டு நன்றாக கிளறி ஆற வைத்து பாட்டிலில் போட்டு வைக்கவும்.

    ஊறுகாய்க்கு மேலே 1 இஞ்ச் உயரத்திற்கு எண்ணெய் இருக்க வேண்டும்.

    பாட்டிலின் வாயை வெள்ளை துணியால் மூடி மூன்று நாள் கழித்து உபயோகப்படுத்தலாம். உப்பு காரம், புளிப்பு போன்றவை அவரவர் ருசிக்கேற்ப்ப சேர்த்துக் கொள்ளலாம். இந்த ஊறுகாய் 2 மாதம் வரை கெடாமல் இருக்கும்.

    சூப்பரான இறால் ஊறுகாய் ரெடி.

    https://www.maalaimalar.com/

  6. கிராமத்து ஸ்பெஷல் உப்புக்கறி

     

    ஆயிரம் வகை உணவு இருந்தாலும் உப்புக்கறிக்கு ஈடாகாது. பழைய கஞ்சியை உப்புக்கறியோடு சாப்பிடும்போது சுவையே அலாதியாக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.

     
    கிராமத்து ஸ்பெஷல் உப்புக்கறி
     
    தேவையான பொருட்கள் :

    வெள்ளாட்டுக்கறி - ஒரு கிலோ
    எண்ணெய் - 200 மில்லிகிராம்
    சோம்பு - ஒரு டீஸ்பூன்
    சின்ன வெங்காயம் - 200 கிராம்
    காய்ந்த மிளகாய் - 150 கிராம்
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    தண்ணீர் - 150 மில்லி
    சீரகம் - ஒரு டீஸ்பூன்
    கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித்தழை - தேவைக்கேற்ப
    உப்பு - தேவையான அளவு

    201804281503377332_1_uppu-kari-mutton._L_styvpf.jpg

    செய்முறை :

    கறியை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

    சின்ன வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    மண்சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் சுத்தம் செய்த ஆட்டுக்கறியை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் சீரகம், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மொத்தமாகக் கிளறிவிடவும்.

    தண்ணீர் ஊற்றி, கறி நன்றாக வேகும்வரை மண்சட்டியை மூடிவைக்கவும்.

    சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் ஆட்டுக்கறியில் உள்ள தண்ணீர் எல்லாம் வற்றி கமகம மணத்துடன் உப்புக்கறி, நாக்கில் எச்சில் ஊறும் அளவுக்குத் தயாராகி இருக்கும்.

    அந்த நேரத்தில், கொத்தமல்லி மற்றும் புதினா இலைகளைத் தூவி, இறக்கி சிறிது நேரத்துக்குப் பிறகு சாப்பிடவும்.

    சூப்பரான உப்புக்கறி ரெடி.

    https://www.maalaimalar.com

  7. பீட்சா ரெசிப்பி

     

     

    ளைய தலைமுறையின் நவீன அடையாளம் பீட்சா. இதன் மேல் அடுக்கில் வைக்கப்படும் டாப்பிங்ஸைப் பொறுத்து இதன் ஊட்டச்சத்துகளும் கலோரிகளும் மாறுபடும். காளான், சீஸ், கீரை, சாஸேஜ், அன்னாசி... இப்படி எதுவும் பீட்சாவுக்குப் பெருமை சேர்க்கும். ஒரு ஸ்லைஸ் பீட்சாவின் எடை 100 கிராம் என்றால், அதில் 250 கலோரிகள் இருக்கும். பீட்சாவையும் சுவைக்க வேண்டும், கலோரியும் அதிகமாகக் கூடாது என்றால் என்ன செய்வது?  

    p97a_1522392326.jpg

    வீட்டிலேயே பீட்சா செய்யும்போது சீஸ் அளவைப் பாதியாகக் குறைக்கலாம். ரெஸ்டாரென்ட்டுகளிலும் `ஹாஃப் சீஸ்’ என்று கேட்டு வாங்கலாம். 

     

    இதோ... இந்தியத் தன்மையுடன் இன்டர்நேஷனல் சுவை பீட்சா வகைகளை வீட்டிலேயே செய்து ருசிக்கும் விதமாகப் புதுப்புது வொரைட்டிகளில் அழகிய படங்களோடு நமக்களிக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த சமையல் கலைஞர் ப்ரியா சதீஷ். 

    ஹரியாலி வீட் பீட்சா

    தேவையானவை - பீட்சா பேஸ் செய்ய:

    கோதுமை மாவு – ஒன்றரை கப்
    ஈஸ்ட், சர்க்கரை, உப்பு – தலா ஒரு டீஸ்பூன்
    வெதுவெதுப்பான நீர் – அரை கப்
    ஆய்ந்த கீரை – ஒரு கப்
    பச்சை மிளகாய் – 2
    எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

    டாப்பிங் செய்ய:

    பேசில் இலைகள் – ஒரு கப்
    பொடியாக நறுக்கிய பார்ஸ்லே இலைகள் – ஒரு கப்
    பைன் நட்ஸ் – கால் கப்
    மொசரல்லா சீஸ் – கால் கப்
    ஆலிவ் எண்ணெய் – கால் கப்பிலிருந்து அரை கப் வரை
    ராக்கெட் இலைகள் - சிறிதளவு
    ஆலிவ் - 10 (நறுக்கவும்)
    மொசரல்லா சீஸ் துருவல் – ஒன்றரை கப்   

    p97c_1522392382.jpg

    அலங்கரிக்க:

    பேசில் இலைகள், ராக்கெட் இலைகள், பார்ஸ்லே இலைகள், பீட்சா சீஸனிங் – சிறிதளவு

    செய்முறை:

    கீரையுடன் பச்சை மிளகாய் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். வெதுவெதுப்பான நீருடன் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, அரைத்த கீரை விழுது சேர்த்துக் கலக்கவும். அதனுடன் ஈஸ்ட் கலவை, எண்ணெய்விட்டு மிருதுவாகப் பிசையவும். இதை எண்ணெய் தடவிய பெரிய பவுலில் போட்டு, மூடி இரண்டு மடங்காகப் பொங்கி வரும் வரை அப்படியே வைக்கவும். பேசில் இலைகளுடன் பார்ஸ்லே இலைகள், பைன் நட்ஸ், கால் கப் மொசரல்லா சீஸ், ஆலிவ் எண்ணெய் சேர்த்து விழுதாக அரைத்து எடுக்கவும். இதுதான் பெஸ்டோ. மாவை நன்கு அழுத்திப் பிசைந்து இரண்டு பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பாகத்தை 6 இன்ச் அளவு விட்டத்துக்குச் சப்பாத்தி போல தேய்க்கவும். அதன் மேலே போர்க் ஸ்பூனால் ஆங்காங்கே குத்திவிட்டு பெஸ்டோவைப் பரப்பவும். அதன் மீது சீஸ் துருவலைத் தாராளமாக தூவி, நறுக்கிய ஆலிவ், ராக்கெட் இலைகள் தூவவும். அதன்மீது சிறிதளவு சீஸ் துருவலைத் தூவி  180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனுள் (oven) வைத்து 10 – 15 நிமிடங்கள் வரை பேக் செய்து எடுக்கவும். வெளியே எடுத்த பிறகு அலங்கரிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தூவி, சூடாகப் பரிமாறவும். இதே போல மீதமுள்ள மாவிலும் தயாரிக்கவும். 


    p97d_1522392416.jpg

    பீட்ரூட் ஹம்மஸ் நோ ஈஸ்ட் பான் பீட்சா

    தேவையானவை - பீட்சா பேஸ் செய்ய:

    மைதா மாவு - 2 கப்
    பேக்கிங் பவுடர் - 2 டீஸ்பூன்
    பீட்சா சீஸனிங் – ஒரு டேபிள்ஸ்பூன்
    பால் – முக்கால் கப்
    எண்ணெய் – கால் கப்
    உப்பு – ஒரு டீஸ்பூன்  

    ஹம்மஸ் செய்ய:

    கொண்டைக்கடலை – முக்கால் கப்
    பீட்ரூட் – ஒன்று (தோல் சீவி, பொடியாக நறுக்கவும்)
    எள் - 2 டேபிள்ஸ்பூன்
    ஆலிவ் எண்ணெய் - 4/5  டேபிள்ஸ்பூன்
    எலுமிச்சைச் சாறு – ஒரு டீஸ்பூன்
    உப்பு – அரை டீஸ்பூன்  

    டாப்பிங் செய்ய:

    பேசில் இலைகள் - சிறிதளவு
    ஆலிவ் - 10 (நறுக்கவும்)
    மொசரல்லா சீஸ் துருவல் - 2 கப்
    சில்லி ஃப்ளேக்ஸ், பீட்சா சீஸனிங் - சிறிதளவு

    செய்முறை:

    கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள் குக்கரில்  கொண்டைக்கடலையுடன் பீட்ரூட் சேர்த்து வேகவைத்து, 6 - 7 விசில்விட்டு இறக்கவும். ஆறியதும் திறந்து நீரை வடியவிட்டு, சிறிதளவு கடலையை அலங்கரிக்க தனியாக எடுத்துவைக்கவும்.  வெறும் வாணலியில் எள்ளைச் சேர்த்து வறுத்து எடுத்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைக்கவும். அதனுடன் வேகவைத்த கொண்டைக்கடலை கலவை, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து, நடுநடுவே எண்ணெய்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும் (தண்ணீருக்குப் பதிலாக, கடலையை வேகவைத்த தண்ணீரை ஊற்றியும் அரைக்கலாம்). மைதா மாவுடன் பேக்கிங் பவுடர், உப்பு, பீட்சா சீஸனிங், பால், எண்ணெய் சேர்த்து மிருதுவாகப் பிசைந்து மூடிவைக்கவும். அரை மணி நேரம் கழித்து மாவை எடுத்து மீண்டும் பிசையவும். பிறகு, மாவை இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பாகம் மாவை எடுத்து, சப்பாத்தி போல திரட்டவும். பானை (Pan) சூடாக்கி, திரட்டிய சப்பாத்தியைப் போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, லேசான பழுப்பு நிறமாக மாறும் வரை வேகவிட்டு எடுக்கவும்.

    இதன்மீது கடலைக் கலவையைத் தடவி, மேலே சிறிதளவு சீஸ் துருவலைத் தூவவும். அத்துடன் எடுத்த வைத்த கடலை, ஆலிவ், பேசில் இலைகளைப் பரப்பவும். இறுதியாக மீதமுள்ள சீஸ் துருவலைத் தாராளமாக தூவி அதே பேனில் வைத்து மூடி, மூன்று நிமிடங்கள் வரை வேகவைத்து எடுக்கவும்.

    மேலே சில்லி ஃப்ளேக்ஸ், பீட்சா சீஸனிங்கால் அலங்கரித்துச் சூடாகப் பரிமாறவும்.

    இதே போல மீதமுள்ள மாவிலும் தயாரிக்கவும்.


    p97e_1522392455.jpg

    சாக்லேட் - ரசகுல்லா பீட்சா

    தேவையானவை:

    மைதா மாவு – ஒன்றரை கப்
    சர்க்கரை - 2 டீஸ்பூன்
    ஈஸ்ட், உப்பு – தலா ஒரு டீஸ்பூன்
    வெதுவெதுப்பான நீர் – அரை கப் முதல் முக்கால் கப் வரை
    எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்

    சாக்லேட் கலவை செய்ய:

    ஃப்ரெஷ் க்ரீம் – ஒரு கப்  
    சாக்லேட் துருவல் – ஒரு கப்

    டாப்பிங் செய்ய:

    ரசகுல்லா -  10 (இரண்டாக நறுக்கவும்)
    உலர்பழக் கலவை – அரை கப்
    கிவிப்பழத் துண்டுகள் - சிறிதளவு

    செய்முறை:

    வாணலியில் க்ரீம் சேர்த்துச் சூடு செய்து இறக்கவும் (அதிகமாகச் சுட வைக்க வேண்டாம்). அதனுடன் சாக்லேட் துருவல் சேர்த்துக் கிளறி உருக்கவும். இதை ஆறவிட்டு ஃப்ரிட்ஜில் இரவு முழுவதும் வைத்து எடுக்கவும். வெதுவெதுப்பான நீரில் சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்துக் கரைத்து, பத்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும். மைதா மாவுடன் உப்பு, ஈஸ்ட் கலவை சேர்த்துக் கலக்கவும்.

    அதனுடன் எண்ணெய் சேர்த்து மாவாகப் பிசைந்து மூடி வைக்கவும். மாவு இரு மடங்காக ஆன பிறகு மீண்டும் பிசைந்து இரண்டு பாகங்களாகப் பிரிக்கவும்.

    பிறகு, ஒரு பாகம் மாவை எடுத்துக் கனமான சப்பாத்தியாகத் திரட்டவும். மேலே ஃபோர்க் ஸ்பூனால் ஆங்காங்கே குத்திவிட்டு ப்ரீஹீட் செய்த அவனுள் (oven) வைத்து 10 முதல் 20 நிமிடங்கள் வரை `பேக்’ செய்து எடுக்கவும். அதன்மீது சாக்லேட் கலவையைப் பரப்பவும்.

    இறுதியாக டாப்பிங் செய்யக் கொடுத்துள்ள பொருள்களைத் தூவி அலங்கரித்து முக்கோண வடிவில் வெட்டிப் பரிமாறவும்.

    இதே போல மீதமுள்ள இன்னொரு ஒரு பாகம் மாவிலும் தயாரிக்கவும்.


    p97f_1522392484.jpg

    சீஸ் - எக் குழிப்பணியார பீட்சா

    தேவையானவை:

    பீட்சா பேஸ் செய்ய:

    மைதா மாவு - 2 கப்
    முட்டை - ஒன்று
    வெதுவெதுப்பான பால் – கால் கப்
    சர்க்கரை, ஈஸ்ட், வெண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்
    உப்பு – ஒரு டீஸ்பூன்  

    டாப்பிங் செய்ய:

    வெண்ணெய், மைதா மாவு – தலா 2 டேபிள்ஸ்பூன்
    காய்ச்சி ஆறவைத்த பால் – அரை கப்
    இத்தாலியன் சீஸனிங் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
    ஃப்ரெஷ் க்ரீம் - 2 டேபிள்ஸ்பூன்
    மொசரல்லா சீஸ் – கால் கப்
    பேசில் இலைகள் - சிறிதளவு
    பொடியாக நறுக்கிய
    கலர் குடமிளகாய் – ஒரு கப்
    உப்பு – தேவையான அளவு

    முட்டைப் பணியாரம் செய்ய:

    முட்டை - 3
    பொடியாக நறுக்கிய பார்ஸ்லே இலைகள் - சிறிதளவு
    சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு – தேவையான அளவு

    செய்முறை:

    வெதுவெதுப்பான பாலில் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்துக் கலந்து 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். மைதா மாவுடன் உடைத்த முட்டை, ஈஸ்ட் கலவை, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெண்ணெய் சேர்த்துப் பிசைந்து, எண்ணெய் தடவிய பெரிய பவுலில் போட்டு ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். மாவு இரண்டு மடங்காகப் பொங்கிய பிறகு மீண்டும் நன்கு பிசைந்து இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கவும். உடைத்த முட்டையுடன் பார்ஸ்லே இலைகள், உப்பு, சீஸ் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக்கல்லைக் காயவைத்து முட்டைக் கலவையைக் குழிகளில் ஊற்றி வேகவிட்டு எடுக்கவும்.

    வாணலியில் வெண்ணெயை லேசாக சூடாக்கி மைதா மாவு சேர்த்து வறுக்கவும். (மைதா மாவு நிறம் மாறக் கூடாது), அதனுடன் பாலை கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, கட்டி தட்டாதவாறு கைவிடாமல் கிளறவும். பிறகு ஃப்ரெஷ் க்ரீம், பேசில் இலைகள், உப்பு, இத்தாலியன் சீஸனிங், மொசரல்லா சீஸ் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

    இதுவே வொயிட் சாஸ். ஒரு பங்கு மாவைக் கனமான சப்பாத்தியாகத் தேய்த்து அதன் மீது வொயிட் சாஸ் தடவவும். பிறகு, அதன் மேலே கலர் குடமிளகாய், பேசில் இலைகள், குழிப்பணியாரம், சீஸ் துருவலைப் பரப்பி 180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனுள் (oven) வைத்து 15 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுத்து, சூடாகப் பரிமாறவும்.

    இதேபோல மீதமுள்ள இன்னொரு பாகம் மாவிலும் தயாரிக்கவும்.


    p97g_1522392516.jpg

    மசாலா வடகறி வீட் பீட்சா

    பீட்சா பேஸ் செய்ய:

    கோதுமை மாவு - 2 கப்
    ஈஸ்ட், உப்பு – தலா ஒரு டீஸ்பூன்
    வெதுவெதுப்பான நீர் – ஒரு கப்
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
    சர்க்கரை - 2 டீஸ்பூன்

    மசாலா வடகறி செய்ய:

    வெங்காயம், தக்காளி – தலா 2 (பொடியாக நறுக்கவும்)
    இஞ்சி - பூண்டு விழுது – ஒன்றரை டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கவும்)
    மசால் வடை - 7 (உதிர்க்கவும்)
    பாவ் பாஜி மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
    பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    மொசரல்லா சீஸ் துருவல் – சிறிதளவு (அலங்கரிக்க)
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு – தேவையான அளவு

    செய்முறை:

    வெதுவெதுப்பான நீருடன் சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்துக் கலந்து பத்து நிமிடங்கள் அப்படியே வைக்கவும். பிறகு கோதுமை மாவுடன் உப்பு, ஈஸ்ட் கலவை சேர்த்துக் கலக்கவும். அதனுடன் எண்ணெய்விட்டு மாவாகப் பிசைந்து, எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். மாவு இரண்டு மடங்காகப் பொங்கிய பிறகு மீண்டும் பிசைந்து இரண்டு சம பாகங்களாகப் பிரிக்கவும். ஒரு பங்கு மாவை ஆறு இன்ச் விட்டம், அரை முதல் ஒரு இன்ச் கனம் கொண்ட சப்பாத்தியாகத் தேய்த்து 180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனுள் (oven) வைத்து 10 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுக்கவும். இதுவே பீட்சா பேஸ்.

    வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும். அதனுடன் பாவ் பாஜி மசாலாத்தூள், உதிர்த்த மசால் வடை, தேவையான உப்பு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். பிறகு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். வடகறி தயார். பீட்சா பேஸ் மீது வடகறியைப் பரப்பவும். அதன் மேலே சீஸ் துருவல் தூவி, மறுபடியும் 10 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.

    இதே போல மீதமுள்ள இன்னொரு பங்கு மாவிலும் தயாரிக்கவும்.


    p97h_1522392546.jpg

    மில்லட் பான்கேக் மஷ்ரூம் பீட்சா

    தேவையானவை:

    டார்ட் பேஸ் செய்ய:

    சிறுதானிய கலவை மாவு – ஒரு கப்
    காய்ச்சி ஆறவைத்த பால் – ஒரு கப்
    முட்டை - ஒன்று
    பேக்கிங் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு – தேவையான அளவு
    எண்ணெய் - 2  டேபிள்ஸ்பூன்
    ஆனியன் பவுடர் – ஒரு டீஸ்பூன்

    பீட்சா செய்ய:

    பீட்சா சாஸ் - 4 டேபிள்ஸ்பூன்
    நறுக்கிய மஷ்ரூம் – ஒரு கப்
    சோயா சாஸ் – ஒரு டீஸ்பூன்
    ஆலிவ் – 6 (வட்டமாக நறுக்கவும்)
    வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
    தக்காளி – 2 (பொடியாக நறுக்கவும்)
    துருவிய பீட்சா சீஸ் – ஒரு கப்
    பேசில் இலைகள் - சிறிதளவு

    செய்முறை:

    சிறுதானிய மாவுடன் ஆனியன் பவுடர், உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலக்கவும். உடைத்த முட்டையுடன் பால், எண்ணெய் சேர்த்து நன்கு அடித்து, மாவுக் கலவையுடன் சேர்த்துக் கலக்கவும். இதை ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய்விட்டு மஷ்ரூம் துண்டுகள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும். தோசைக்கல்லைக் காயவைத்துக் கரைத்த சிறுதானிய மாவை எடுத்துச் சிறிய கனமான தோசையாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இதுதான் பான் கேக். மாவு முழுவதையும் இதேபோல் செய்துகொள்ளவும். ஒரு பான் கேக் மீது சிறிதளவு பீட்சா சாஸ், சோயா சாஸ் ஆகியவற்றைத் தடவவும். அதன்மீது வதக்கிய மஷ்ரூம், வெங்காயம், தக்காளி, ஆலிவ், பேசில் இலைகள் ஆகியவற்றைப் பரப்பவும். இதன் மேலே சீஸ் தூவி அலங்கரிக்கவும். தவாவைச் சூடாக்கி, அடுப்பை சிறு தீயில் வைத்து, பான் கேக்கை வைத்து சீஸ் உருகி வந்த பிறகு எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.  மற்ற பான் கேக்குகளையும் இதேபோல் செய்துகொள்ளவும்.


    p97i_1522392570.jpg

    எக் - ராகி டார்ட் பீட்சா

    தேவையானவை:

    டார்க் பேஸ் செய்ய:

    ராகி மாவு (கேழ்வரகு மாவு) – அரை கப்
    கோதுமை மாவு – ஒரு கப்
    ஈஸ்ட், சர்க்கரை, உப்பு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்
    வெதுவெதுப்பான நீர் – அரை கப் முதல் முக்கால் கப் வரை
    டார்ட் டின் - தேவைக்கேற்ப

    பீட்சா செய்ய:

    பீட்சா சீஸனிங் - 3 டீஸ்பூன்
    வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்)
    தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)
    பொடியாக நறுக்கிய குடமிளகாய் – ஒரு கப்
    ஆலிவ் – 7 (வட்டமாக நறுக்கவும்)
    முட்டை – 4 அல்லது  5
    சீஸ் துருவல் – ஒரு கப்
    பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    பீட்சா சாஸ் - சிறிதளவு

    செய்முறை:

    வெதுவெதுப்பான நீரில் ஈஸ்ட், சர்க்கரை சேர்த்துக் கரைத்து 10 நிமிடங்கள் தனியாக வைக்கவும். ராகி மாவுடன் கோதுமை மாவு, உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் ஈஸ்ட் கலவை, எண்ணெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். இதை எண்ணெய் தடவிய பெரிய பவுலில் வைத்து மூடி போட்டு ஒரு மணி நேரம் அல்லது மாவு இரண்டு மடங்காக ஆகும் வரை அப்படியே வைக்கவும். பிறகு, மாவை மீண்டும் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கி வட்டமாகத் தேய்த்து டார்ட் டின்னின் அளவுக்கு ஏற்ப வெட்டிக்கொள்ளவும். இதை டார்ட் டின்னில் வைத்து ஆங்காங்கே போர்க் ஸ்பூனால் குத்திவிடவும். 180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவனில் (oven) இதை வைத்து 10 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுக்கவும். மீதமுள்ள மாவிலும் இதே போல் செய்துகொள்ளவும். இவைதான் டார்ட் பேஸ்.

    டார்ட் டின்னில் உள்ள ஒரு டார்ட் பேஸ் மீது சிறிதளவு பீட்சா சாஸ் தடவவும். அதன் மீது சீஸ் துருவல், வெங்காயம், தக்காளி, குடமிளகாய், ஆலிவ், பீட்சா சீஸனிங் ஆகியவற்றைப் பரப்பவும். மேலே சிறிதளவு சீஸ் தூவி மைக்ரோவேவ் அவனுள் வைத்து ஐந்து நிமிடங்கள் வரை 180 டிகிரி டெம்பரேச்சரில் பேக் செய்து எடுக்கவும். அதன்மீது முட்டையை உடைத்து ஊற்றி மேலே சிறிதளவு கொத்தமல்லித்தழையைத் தூவவும். இதை மீண்டும் ஐந்து நிமிடங்கள் அல்லது முட்டை செட்டாகும் வரை  பேக் செய்து, டார்ட் டின்னைவிட்டு எடுத்துச் சூடாகப் பரிமாறவும். மற்ற டார்ட் பேஸ்களையும் இதே போல் செய்துகொள்ளவும்.


    p97j_1522392599.jpg

    அக்கி ரொட்டி பீட்சா

    தேவையானவை:

    அக்கி ரொட்டி செய்ய:

    அரிசி மாவு – ஒரு கப்
    பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன்
    பொடியாக நறுக்கிய வெங்காயம் - 4 டீஸ்பூன்
    கேரட் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
    உப்பு – தேவையான அளவு
    சீஸ் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    தண்ணீர் – தேவையான அளவு

    பீட்சா செய்ய:

    பீட்சா சாஸ் - 3 டேபிள்ஸ்பூன்
    உதிர்த்த சோள முத்துகள் – அரை கப்
    செர்ரி – 10 (இரண்டாக நறுக்கவும்)
    நறுக்கிய குடமிளகாய் (பச்சை, மஞ்சள்) கலவை – அரை கப்
    ஆலிவ் – 10 (வட்டமாக நறுக்கவும்)
    துருவிய பீட்சா சீஸ் – அரை கப்
    பேசில் இலைகள் - சிறிதளவு
    பீட்சா சீஸனிங் - சிறிதளவு

    செய்முறை:

    அரிசி மாவுடன் பச்சை மிளகாய், வெங்காயம், கேரட், சீஸ், உப்பு, எண்ணெய் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்துக் கெட்டியாகப் பிசையவும்.  பிசைந்த மாவை இரண்டு சம பாகங்களாகப் பிரித்து உருண்டைகளாக உருட்டவும். தோசைக்கல்லைக் காயவைத்து, எண்ணெய் தடவி, ஓர் உருண்டையை வைத்து வட்டமாகக் தடிமனான ரொட்டி போல தட்டவும். பிறகு, அடுப்பை சிறு தீயில் வைத்துச் சுற்றிலும் எண்ணெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். இதேபோல மற்றோர் உருண்டையையும் தட்டி வேகவிட்டு எடுக்கவும்.

    வேகவைத்த ரொட்டியின் மீது சிறிதளவு பீட்சா சாஸ் தடவவும். அதன்மீது சோள முத்துகள், செர்ரி, ஆலிவ், குடமிளகாய் ஆகியவற்றை அடுக்கவும். மேலே சீஸ் துருவல், பேசில் இலைகள் தூவி அலங்கரிக்கவும். தோசைக்கல்லைக் காயவிட்டு ரொட்டி பீட்சாவை வைத்து மூடி, அடுப்பை சிறு தீயில் வைத்து, சீஸ் உருகும் வரை வேகவிட்டு எடுக்கவும். மேலே சிறிதளவு பீட்சா சீஸனிங் தூவி, சூடாகப் பரிமாறவும். மற்றொரு ரொட்டியையும் இதேபோல் செய்துகொள்ளவும்.


    p97k_1522392623.jpg

    டோஃபு - மஷ்ரூம் பன் பீட்சா

    தேவையானவை:

    ஸ்வீட் பன் (அ) பர்கர் பன் - 4 
    வெங்காயம், தக்காளி – தலா 2 (பொடியாக நறுக்கவும்)
    பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
    பொடியாக நறுக்கிய கலர் குடமிளகாய் – அரை கப்
    பொடியாக நறுக்கிய மஷ்ரூம் – அரை கப்
    துருவிய டோஃபு – அரை கப்
    பீட்சா சீஸனிங் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
    சில்லி ஃப்ளேக்ஸ் - சிறிதளவு
    எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
    வெண்ணெய் - 6-8 டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    சீஸ் துருவல் - தேவையான அளவு

    செய்முறை:

    தோசைக்கல்லைக் காயவைத்துச் சிறிதளவு வெண்ணெய் தடவவும். அதன்மீது பன்னை வைத்து அடுப்பைச் சிறு தீயில் வைக்கவும். `மேஷர்’ கொண்டு பன்களின் மேற்பகுதியை அழுத்தி, பன்னை பீட்சா பேஸ் போல ஆக்கவும். மற்ற பன்களையும் அதேபோல செய்யவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கி தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து மேலும் வதக்கவும். அதனுடன் குடமிளகாய், மஷ்ரூம், டோஃபு துருவல், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, சீஸனிங் தூவிக் கிளறி இறக்கவும். பன்களின் மீது இந்தக் கலவையைப் பரப்பி, மேலே சீஸ் துருவலைத் தாராளமாகத் தூவவும். தோசைக்கல்லைச் சூடாக்கி பன் பீட்சாக்களை ஒவ்வொன்றாக வைத்து மூடி போட்டு சீஸ் உருகத் தொடங்கும்போது எடுத்து, மேலே சில்லி ஃப்ளேக்ஸ், சீஸனிங் தூவிப் பரிமாறவும்.


    p97l_1522392651.jpg

    பனீர் அண்டு பைனாப்பிள் காக்ரா பீட்சா

    தேவையானவை:

    சிறிய காக்ரா - 6 (ரெடிமேடாகக் கடைகளில் கிடைக்கும்)
    விதை நீக்கி, பொடியாக நறுக்கிய தக்காளி – கால் கப்
    கலர் குடமிளகாய் கலவை – கால் கப்
    வேகவைத்த சோள முத்துகள் – கால் கப்
    பொடியாக நறுக்கிய பனீர் துண்டுகள் – கால் கப்
    பொடியாக நறுக்கிய அன்னாசித் துண்டுகள் – கால் கப்
    பச்சை மிளகாய் - 2
    பீட்சா சீஸனிங் – ஒரு டேபிள்ஸ்பூன்
    துருவிய பீட்சா சீஸ் – கால் கப்
    பீட்சா சாஸ் - 5 டீஸ்பூன்
    பேசில் இலைகள் - சிறிதளவு
    உப்பு – தேவையான அளவு

    செய்முறை:

    தக்காளியுடன் குடமிளகாய், சோள முத்துகள், பனீர் துண்டுகள், பச்சை மிளகாய், அன்னாசித் துண்டுகள், பீட்சா சீஸனிங், உப்பு சேர்த்துக் கலந்து தனியாக வைக்கவும். காக்ராவின் மீது சிறிதளவு பீட்சா சாஸைத் தடவவும். அதன்மீது தக்காளி கலவையைப் பரப்பவும். மேலே சீஸ் துருவல், பேசில் இலைகள் தூவி அலங்கரிக்கவும். மைக்ரோவேவ் அவனில் காக்ரா ஒரு நிமிடம் அல்லது சீஸ் உருக ஆரம்பிக்கும் வரை வைத்து, பிறகு எடுத்துச் சூடாகப் பரிமாறவும்.

    எல்லா காக்ராக்களையும் இப்படியே செய்துகொள்ளவும்.    

    https://www.vikatan.com

  8. சூப்பரான ஸ்பைசி மட்டன் சாப்ஸ்

     
    அ-அ+

    தோசை, சப்பாத்தி, நாண், சாம்பார் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த ஸ்பைசி மட்டன் சாப்ஸ் சூப்பராக இருக்கும். இன்று இந்த மட்டன் சாப்ஸை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

     
     
     
     
    சூப்பரான ஸ்பைசி மட்டன் சாப்ஸ்
     
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - அரை கிலோ
    கறிவேப்பிலை - சிறிது
    பச்சை மிளகாய் - இரண்டு
    கரம் மசாலா தூள் - கால் தேக்கரண்டி
    தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
    மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
    இஞ்சி பூண்டு - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி

    201804251506354092_1_spicy-mutton-chops._L_styvpf.jpg

    செய்முறை :

    மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    கழுவிய மட்டனை குக்கரில் போட்டு அதில் உப்பு, தனியாதூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகு தூள், பச்சை மிளகாய், 1 கப் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வேக வைக்கவும்.

    குக்கரை விசில் போனவுடன் குக்கர் மூடியை திறந்து வைக்கவும்.

    ஒரு தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதில் கரம் மசாலா தூள் சேர்த்து அதில் வேக வைத்த மட்டனை தண்ணீருடன் சேர்த்து தண்ணீர் வற்றி நன்கு சிவக்க வறுத்தெடுத்து பரிமாற வேண்டும்.

    சுவையான ஸ்பைசி மட்டன் சாப்ஸ் ரெடி

    https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2018/04/25150635/1158970/spicy-mutton-chops.vpf

  9. குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை சப்பாத்தி ரோல்அ-அ+

    விடுமுறை நாட்களில் குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லும் போது முட்டை சப்பாத்தி ரோல் செய்து எடுத்து சென்றால் விரும்பி சாப்பிடுவார்கள்.

     
    குழந்தைகளுக்கு விருப்பமான முட்டை சப்பாத்தி ரோல்
     
    தேவையான பொருட்கள் :

    பெரிய வெங்காயம் - 2
    முட்டை - 3
    மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 1
    மிளகு தூள் - 2 ஸ்பூன்
    சப்பாத்தி - 4
    லெமன் ஜூஸ் - தேவையான அளவு
    எண்ணெய் - 4 ஸ்பூன்
    கடுகு, உளுந்து, கறிவேப்பிலை - கொஞ்சம்
    உப்பு - தேவையான அளவு
    பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு

    201804201522119806_1_egg-chapati-roll._L_styvpf.jpg

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முதலில் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் முட்டை உடைத்து ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து முட்டை வெந்து உதிரி உதிரியாக வரும் வரை வதக்கவும்.

    முட்டை வெந்தவுடன் கடைசியாக மிளகுதூள் சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.

    ஒரு தட்டில் மேல் ஒரு சப்பாத்தியை வைத்து நடுவில் சிறிது முட்டை பொரியலை பரப்பி, கொஞ்சம் வெங்காயம், அரை மூடி லெமன் ஜூஸ் தெளித்து ரோல் செய்து பரிமாறவும். இவ்வாறு அனைத்து சப்பாத்தியிலும் செய்யவும்.

    சூப்பரான முட்டை சப்பாத்தி ரோல் ரெடி.

    https://www.maalaimalar.com

  10. சூப்பரான கூனி இறால் வறுவல் செய்வது எப்படி

     

     
     

    கூனி இறால் வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும். இன்று கூனி இறால் வறுவல் செய்முறையை பார்க்கலாம்.

     
     
     
     
    சூப்பரான கூனி இறால் வறுவல் செய்வது எப்படி
     
    தேவையான பொருட்கள் :

    கூனி இறால் (Baby Prawns / Kooni) - 1 கப்
    தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    பூண்டு - 6 பல்
    ப.மிளகாய் - 2
    வெங்காயம் - 2
    மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - சிறிதளவு
    இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    201804071115224220_1_Baby-Prawns-Roast._L_styvpf.jpg

    செய்முறை :

    பூண்டு, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயை  அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய பூண்டு, ப.மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் வெங்காயம், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.

    பிறகு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.

    அடுப்பை மிதமான தீயில் வைத்து கூனி இறாலை சேர்த்து 8 முதல் 10 நிமிடங்கள் வதக்கவும். கூனி இறால் விரைவில் வெந்து விடும்.

    சூப்பரான கூனி இறால் ரெடி.

    https://www.maalaimalar.com

  11. உடுப்பி முதல் உலகம் வரை! - கர்நாடகா தெருக்கடை ஸ்பெஷல்

     

     

    பாரம்பர்ய சைவ உணவுகளுக்குப் பெரும்புகழ் பெற்றது உடுப்பி. நவீன உணவுகளுக்குப் பெருமை சேர்ப்பது பெங்களூரு. இப்படி கலாசாரமும் புதுமையும் கலந்த உணவு வகைகளைக் கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளிலுள்ள தெருக்கடைகளில் ருசிக்கலாம்.  

    p7a_1522473944.jpg

    உலகத் தெருக்கடை உணவு வரிசையில் கர்நாடக மாநில ஸ்பெஷல் உணவுகளை எளிதாகச் செய்யும் விதத்தில் அழகிய படங்கள் மற்றும்  வீடியோக்களுடன் அளிக்கிறார் ஷார்ஜாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் லக்ஷ்மி வெங்கடேஷ். 

    p7b_1522473968.jpg

    வெண் மைசூர் மசாலா தோசையோ, மங்களூரு பன்னோ, மதுர் வடையோ, கோலி பஜ்ஜியோ... இனி நம் வீட்டிலேயே மணக்கும்... ருசிக்கும்!

    மசாலா பிரெட்

    தேவையானவை:

    பிரெட் ஸ்லைஸ் - 10 (ஓரங்களை நீக்கவும்)
    கேரட் துருவல் – அரை கப்
    குடமிளகாய்,  வெங்காயம், முட்டைகோஸ் - தலா அரை கப்
    தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    சாட் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
    டொமேடோ கெட்சப் - ஒரு டேபிள்ஸ்பூன்
    பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை,  பச்சை மிளகாய் - சிறிதளவு
    வெண்ணெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு  

    p7c_1522473996.jpg

    செய்முறை:

    வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், தக்காளி, கேரட் துருவல்,  குடமிளகாய், முட்டைகோஸ்,  பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.  அதனுடன் மிளகாய்த்தூள், சாட் மசாலாத்தூள், டொமேட்டோ கெட்சப், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும். பிரெட்டின் மீது சிறிதளவு வெண்ணெய் தடவவும். தோசைக்கல்லைக் காயவைத்து பிரெட்டைப் போட்டு இருபுறமும் டோஸ்ட் செய்து எடுக்கவும். அதன் மீது காய்கறிக் கலவையைப் பரப்பி பரிமாறவும். 

    p7d_1522474045.jpg

    உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.

     


    p7e_1522474066.jpg

    கோலி பஜ்ஜி

    தேவையானவை:

    மைதா மாவு - ஒரு கப்
    புளித்த தயிர் - அரை கப்
    சமையல் சோடா - அரை டீஸ்பூன்
    பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் - ஒரு டேபிள்ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
    தோல் சீவி துருவிய இஞ்சி -
    ஒரு டீஸ்பூன்
    பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - ஒரு டீஸ்பூன்
    சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
    எண்ணெய்,  உப்பு, தண்ணீர் - தேவையான அளவு

    செய்முறை:

    மைதா மாவுடன் புளித்த தயிர்,  சமையல் சோடா, உப்பு, சர்க்கரை,  தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகக் கரைத்து மூன்று மணி நேரம் ஊறவிடவும். பிறகு அதனுடன் பச்சை மிளகாய் துண்டுகள்,  தேங்காய்த் துண்டுகள், இஞ்சி,  கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை சேர்த்து மாவைக் கையால் நன்றாகக் கலக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு மாவைச் சிறிய போண்டாக்கள் போல  கிள்ளிப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். 

    p7f_1522474104.jpg

    உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.

     


    p7g_1522474143.jpg

    பிஸ்கட் ரொட்டி

    தேவையானவை - மேல் மாவு செய்ய:

    மைதா மாவு - ஒரு கப்
    உப்பு - அரை டீஸ்பூன்
    எண்ணெய் - 2 டீஸ்பூன்

    ஸ்டஃபிங் செய்ய:

    ரவை, தேங்காய்த் துருவல் - தலா அரை கப்
    உளுத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் (அரை மணி நேரம் ஊறவைக்கவும்)
    பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கவும்)
    பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு
    பெருங்காயத்தூள் -  கால் டீஸ்பூன்
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

    செய்முறை:

    மைதா மாவுடன் எண்ணெய், உப்பு சேர்த்துப் பிசிறவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பூரி மாவைவிடச் சற்று கெட்டியாகப் பிசைந்து, அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளிக்கவும். அதனுடன் உளுத்தம்பருப்பு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு, ரவையை சேர்த்து கிளறி இறக்கவும். இதுவே ஸ்டஃபிங்.
    பிசைந்த மைதா மாவைச் சிறிய உருண்டைகளாக்கி வட்டமாகத் திரட்டவும். அதன் நடுவே சிறிதளவு ஸ்டஃப்பிங் வைத்து மூடி மீண்டும் சற்று கனமான பூரிகளாகத் திரட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவிட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து, திரட்டிய பூரிகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். 

    p7h_1522474182.jpg

    உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.

     


    p7i_1522474216.jpg

    மங்களூர் பன்ஸ்

    தேவையானவை:

    மைதா மாவு - ஒரு கப்
    பழுத்த வாழைப்பழம்  (பெரியது) - ஒன்று
    தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
    நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
    சர்க்கரை - கால் கப்
    சமையல் சோடா - கால் டீஸ்பூன்
    உப்பு - சிறிதளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வாழைப்பழத்தின் தோலை நீக்கிவிட்டு ஃபோர்க்கின் பின்பகுதியால் நன்கு மசிக்கவும். அதனுடன் மைதா மாவு,  தயிர்,  சர்க்கரை,  உப்பு, நெய், சமையல் சோடா சேர்த்துப் பூரி மாவுப் பதத்துக்குப் பிசையவும் (தேவைப்பட்டால் சிறிது சிறிதாக தண்ணீர்விட்டுப் பிசையவும்).  மாவின் மேல் சிறிதளவு எண்ணெய் தடவி மூடி ஐந்து மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு மாவைச் சிறிய உருண்டைகளாக்கி பூரிகளாகத் தேய்க்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்துத் திரட்டிய பூரிகளைப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, அதிகம் சிவக்காமல் பொரித்தெடுக்கவும்.  

    p7j_1522474248.jpg

    உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.

     


    p7k_1522474316.jpg

    பேளே ஹோளிகே

    தேவையானவை:

    மேல் மாவு செய்ய:

    மைதா மாவு - ஒரு கப்
    உப்பு,  மஞ்சள்தூள்  -  தலா கால் டீஸ்பூன்
    எண்ணெய் - கால் கப்
    தண்ணீர் - அரை கப்
    அரிசி மாவு - கால் கப்

    பூரணம் செய்ய:

    கடலைப்பருப்பு - ஒரு கப்
    வெல்லம் - ஒரு கப்
    ஏலக்காய்த்தூள், நெய் - தலா கால் டீஸ்பூன்
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

    செய்முறை: 

    மைதா மாவுடன் அரிசி மாவு,  உப்பு, மஞ்சள்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பரோட்டா மாவு பதத்துக்குப் பிசையவும். மேலே எண்ணெய்விட்டு இரண்டு மணி நேரம் ஊறவிடவும். இதுவே மேல் மாவு. கடலைப்பருப்புடன் மஞ்சள்தூள், எண்ணெய் சேர்த்து மலர வேகவிடவும். வாணலியில் கடலைப்பருப்புடன் வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கெட்டியாகக் கிளறி இறக்கவும். ஆறியதும் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். இதுவே பூரணம். இதைச் சிறிய உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவில் சிறிதளவு எடுத்துத் தட்டி நடுவே  பூரண உருண்டை வைத்து மூடவும். இதை அரிசி மாவில் புரட்டி எடுத்து போளிகளாகத் தேய்க்கவும். தோசைக்கல்லைச் சூடாக்கி போளிகளைப் போட்டு, சுற்றிலும் நெய்விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும். பேளே ஹோளிகே தயார். இந்தப் போளிகளின் மேலே சிறிதளவு நெய்விட்டுப் பரிமாறவும். 

    p7l_1522474361.jpg

    உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.

     


    p7m_1522474398.jpg

    மைசூர் மசாலா தோசை

    தேவையானவை:

    தோசை மாவு - 2 கப்
    உருளைக்கிழங்கு பால்யா - அரை கப்
    மிளகாய் சட்னி - கால் கப்
    எண்ணெய் -  தேவையான அளவு

    தோசை மாவு அரைக்க:

    பச்சரிசி - அரை கப்
    புழுங்கல் அரிசி - அரை கப்
    உளுத்தம்பருப்பு - கால் கப்
    கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
    அவல் - கால் கப்
    உப்பு - தேவையான அலவு

    உருளைக்கிழங்கு பால்யா செய்ய:

    உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும்)
    வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) 
    பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்)
    கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
    பூண்டு - 4 பல்
    முந்திரி - 5
    மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு

    மிளகாய் சட்னி செய்ய:

    காய்ந்த மிளகாய் - 10
    வறுத்த கடலைப்பருப்பு - கால் கப்
    பூண்டு - 5 பல்
    புளிக்கரைசல் -  ஒரு டேபிள்ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    தோசை மாவு அரைக்க கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துக் கழுவி, 2 மணி நேரம் ஊறவைத்து நைஸாக அரைத்தெடுக்கவும். அதனுடன் உப்பு சேர்த்துக் கரைத்து 8 மணி நேரம் புளிக்கவிடவும். மிளகாய் சட்னி செய்யக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாக சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.

    வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை முந்திரி சேர்த்து தாளிக்கவும். அதனுடன் மஞ்சள்தூள், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.  அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.  

    தோசைக்கல்லைக் காயவைத்து மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றவும். சற்று வெந்ததும் ஒரு டீஸ்பூன் மிளகாய் சட்னியை அதன் மேல் தடவவும். 

    நடுவில் உருளைக்கிழங்கு மசாலாவை வைக்கவும். சுற்றிலும் தேவையான அளவு எண்ணெய்விட்டுப் பொன்னிறமாக வெந்ததும் இரண்டாக மடித்து எடுக்கவும். மைசூர் மசாலா தோசை தயார். 

    p7n_1522474451.jpg

    உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.

     

     

     


    p7o_1522474490.jpg

    மதுர் வடை

    தேவையானவை:

    ரவை, மைதா மாவு - அரை கப்
    அரிசி மாவு - ஒரு கப்
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்
    வெங்காயம் - 2 (பொடியாக  நறுக்கவும்)
    பச்சை மிளகாய் - 2 (பொடியாக  நறுக்கவும்)
    நறுக்கிய கறிவேப்பிலை,  கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
    சூடான எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
    எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
    உப்பு - ஒன்றரை டீஸ்பூன்

    செய்முறை:

    ரவையுடன் மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள்,  பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, வெங்காயம், சூடான எண்ணெய் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு தண்ணீர்விட்டு  சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து, மாவைப் பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி எண்ணெய் தடவிய பிளாஸ்டிக் ஷீட்டில் தட்டிப் போடவும். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, வடைகளைப் போட்டுச் சிவக்க பொரித்தெடுக்கவும். தேங்காய் சட்னி அல்லது கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறவும். 

    p7p_1522474517.jpg

    உங்கள் மொபைலில் இந்த QR code-ஐ ஸ்கேன் செய்தும் வீடியோவைக் காணலாம்.

     

    https://www.vikatan.com

  12. ஆரோக்கியமான முருங்கைக்கீரை ஆம்லெட்

     
    அ-அ+

    கீரையை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு கீரை, முட்டை சேர்த்து ஆம்லெட் போல் செய்து கொடுக்கலாம். இன்று முருங்கைக்கீரை ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.

     
     
     
     
    ஆரோக்கியமான முருங்கைக்கீரை ஆம்லெட்
     
    தேவையான பொருட்கள் :

    முருங்கைக்கீரை - ஒரு கப்
    முட்டை - 3
    வெங்காயம் - ஒன்று
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    அரைக்க:

    தேங்காய்ப் பூ - ஒரு தேக்கரண்டி
    பச்சை மிளகாய் - ஒன்று
    கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
    சீரகம் - கால் தேக்கரண்டி

    201804111203295977_1_drumstick-leaves-omlet._L_styvpf.jpg

    செய்முறை :

    வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    அரைக்கக் கொடுத்துள்ளவற்றை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.

    வெங்காயம் சிறிது வதங்கியதும் அத்துடன் முருங்கைக்கீரையைச் சேர்த்து மேலும் 3 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் வதக்கிய கீரை, அரைத்த தேங்காய் விழுது சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு நுரை பொங்க அடிக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, சூடானதும் முட்டைக் கலவையை ஆம்லெட்டாக ஊற்றி வேகவிடவும்.

    ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி போட்டு வேக வைக்கவும்.

    வெந்ததும் விரும்பிய வடிவில் வெட்டி எடுக்கவும்.

    லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற, ஆரோக்கியமான முருங்கைக்கீரை ஆம்லெட் தயார்.

    https://www.maalaimalar.com

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.