Jump to content

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Content Count

    85,545
  • Joined

  • Last visited

  • Days Won

    480

Everything posted by நவீனன்

  1. வெந்தயக்கீரை சாம்பார்.. செய்வது எப்படி?? தேவையானவை: வெந்தயக்கீரை - 2 சிறுகட்டு, துவரம்பருப்பு - ஒரு கப், புளி - எலுமிச்சைப் பழ அளவு, சாம்பார் பொடி - 3 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். வெந்தயக்கீரையை ஆய்ந்து சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கவும். வாணலியில் புளியைக் கரைத்து ஊற்றி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, வதக்கிய கீரையையும் சேர்த்து கொதிக்கவிட்டு, வேகவைத்த பருப்பை சேர்த்துக் கிளறவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து, குழம்பில் சேர்த்து இறக்கவும். குறிப்பு: வெந்தயக்கீர
  2. இன்ஸ்டன்ட் போண்டா தேவையானவை: இட்லி மாவு - 1 கப் பெரிய வெங்காயம் - 1 பச்சை மிளகாய் - 2 கறிவேப்பிலை - சிறிதளவு அரிசி மாவு, ரவை - தலா 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தே.அளவு எண்ணெய் - பொரிக்க‌ செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ள்வும். ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, அரிசி மாவு, ரவை, உப்பு ஆகியவற்றை கெட்டியாக ஒன்றாக கலக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்தக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து எண்ணெயில் விட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்தால் இன்ஸ்டன்ட் போண்டா ரெடி.
  3. வெண்டைக்காய் ஸ்வீட் பச்சடி.. செய்வது எப்படி?? தேவையானவை:வெண்டைக்காய் - கால் கிலோ, வெல்லம் - 50 கிராம், புளி - சுண்டைக்காய் அளவு, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன். செய்முறை: வெண்டைக்காயை சின்னச் சின்ன வில்லைகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, வெண்டைக்காயை வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். முக்கால் பதம் வெந்ததும் வெல்லத்தைப் பொடித்துச் சேர்க்கவும். தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, பச்சடியில் சேர்த்து இறக்கவும்
  4. செட்டிநாட்டுத் தைப்பொங்கல் ரெசிப்பிக்கள் பொங்கல் சாதம் சர்க்கரைப் பொங்கல் பருப்பு மசியல் வாழைக்காய்ப் பொரியல் அவரைக்காய்ப் பொரியல் சர்க்கரைவள்ளிக் கிழங்குப் பொரியல் மொச்சைக் கூட்டு பறங்கிக்காய்க் குழம்பு பல காய்க் குழம்பு தைப்பொங்கல் அன்று செட்டிநாட்டுப் பகுதிகளில் கடைப்பிடிக்கும் சம்பிரதாய உணவு வகைகளைச் செய்து காட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் அன்னம் செந்தில்குமார். பொங்கல் சாதம் தேவையானவை: பச்சரிசி - 200 கிராம் தண்ணீர் - 4 டம்ளர் செய்முறை: பச்சரிசியை ஒரு முறை கழுவவும். இரண்ட
  5. 'டட்லி-செல்வா' ஒப்பந்தம் 11-01-2016 09:31 AM Comments - 0 Views - 16 என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 22) 'டட்லி-செல்வா' ஒப்பந்தத்தின் பின்னணி 1964 டிசெம்பரில், ஸ்ரீமாவின் அரசாங்கம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தலுக்காகக் கட்சிகள் தயாராகும் போதே, 1965 தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உணர்ந்திருந்தன. இருதரப்பும் தொங்கு நாடாளுமன்றம் ஒன்று உருவாகக்கூடிய சாத்தியப்பாட்டையும் கருத்திற்கொண்டு, தம
  6. கீரை மிளகூட்டல்.. செய்வது எப்படி?? தேவையானவை: முளைக் கீரை - ஒரு சிறிய கட்டு, சீரகம் - ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - ஒரு சிறிய கப், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: துவரம்பருப்பை வேகவைத்துக் கொள்ளவும். கீரையைப் பொடியாக நறுக்கி வேகவிடவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு... சீரகம், தேங்காய்த் துருவல், மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை வறுத்து, கொஞ்சம் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து, உப்பு சேர்த்து
  7. மொச்சை சாம்பார்.. செய்வது எப்படி?? தேவையானவை: உலர் மொச்சை - 100 கிராம், சாம்பார் பொடி - 2 டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், புளி - எலுமிச்சைப் பழ அளவு, தேங்காய்த் துருவல் - சிறிய கப், கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: மொச்சையை 5 மணி நேரம் ஊறவைத்து, வேகவைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பை குழைவாக வேகவிடவும். தனியா, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்
  8. வீட்டிலேயே கார்லிக் பிரெட் தயாரிக்க வேண்டுமா? அரை ஸ்பூன் பூண்டு பேஸ்ட் எடுத்து, அதில் இரண்டு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் குழையுங்கள். இதை பிரெட் துண்டுகளின் மேல் லேசாகத் தடவி, தோசைக்கல்லிலோ அல்லது டோஸ்ட்டரிலோ டோஸ்ட் செய்தால்.. கார்லிக் பிரெட் தயார். இதைவிட எளிமையாக தயாரிக்க...முதலில் வெண்ணெய் தடவிய பிரெட்டை டோஸ்ட் செய்யுங்கள். பிறகு, இரண்டாக வெட்டிய ஒரு பல் பூண்டை அதன் மேல் தேய்த்துவிட்டால்..கார்லிக் வாசனையுடன் பிரெட் கமகமவென்று இருக்கும்.
  9. மாம்பழ லஸ்ஸி.. செய்வது எப்படி?? தேவையானவை: நன்கு கனிந்த மாம்பழத் துண்டுகள் - ஒரு கப், தயிர் - ஒரு கப், பால் - அரை கப் (காய்ச்சி ஆற வைத்தது), ஐஸ்கட்டிகள், சர்க்கரை - தேவைக்கேற்ப. செய்முறை: கொடுக்கப் பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து, குளிர வைத்து, சிறிய கிண்ணங்களில் ஊற்றிப் பரிமாறவும். தேங்காய்ப்பொடி.. செய்வது எப்படி?? தேவையானவை: முற்றிய தேங்காய் - ஒன்று, உளுத்தம்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 6, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: தேங்காயை உடைத்து துருவிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்
  10. 'ஹத் ஹவுள': டட்லி தலைமையில் அமைந்த ஏழுதரப்புக் கூட்டணி 04-01-2016 10:17 AM Comments - 0 Views - 3 என்.கே.அஷோக்பரன் LLB (Hons) தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன? (பகுதி 21) வளர்ந்த இனவாதமும், வேரூன்றத் தொடங்கிய மதவாத அரசியலும், முளைவிடத் தொடங்கிய பிரிவினையும் 1960-1964ஆம் ஆண்டு டிசெம்பர் வரையான ஸ்ரீமாவின் அரசாங்கத்தில் வீறுகொண்டு அமுல்ப்படுத்தப்பட்ட 'தனிச் சிங்களச்' சட்டத்தின் விளைவாக, தமிழர் அரசியல் பரப்பிலும் தமிழ் மக்களிடையேயும் 'பிரிந்து' செல்வதற்கான எண்ணம் முளைவிடத் தொடங்கியது. 1961 சத்தியாக்கிரக மற்றும் குட
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.