சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு மணி நேரத்துக்கு படப்பிடிப்பு நடத்த எத்தனை லட்சம் தெரியுமா?
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் சினிமா படப்பிடிப்பு நடத்த, ஒரு மணி நேரத்திற்கு 4 லட்ச ரூபாய் வாடகை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2 வழித்தடங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளில், முதற்கட்டமாக கோயம்பேடு - ஆலந்தூர் இடையே ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. 10 கிலோ மீட்டர் இடைவெளியில் மட்டுமே தற்போது மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால், எதிர்பார்த்த அளவு பயணிகளிடம் வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், மெட்ரோ ரயிலில் சினிமா படப்பிடிப்பு நடத்த தமிழ் திரை துறையினர் ஆர்வத்துடன் இருந்தன