அருள்123456789

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  230
 • Joined

 • Last visited

Community Reputation

40 Neutral

About அருள்123456789

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Not Telling
 1. உங்கள் எழுத்தின் பணி இனிதே தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கோமகன். உங்கள் எழுத்தில் வேகம் கோபம் இனிமை சோகம் குமுறல், மகிழ்ச்சி, நகைச்சுவை என்று எல்லாம் கலந்த கலவையாக பதிவுகளை பதிந்து யாழ் களத்தையே களைகட்ட வைத்து, எல்லோரையும் களிப்புற வைத்த பதிவுகளின் ஒரு நல்ல மனிதர் நீங்கள். உங்கள் பணி செவ்வனே தொடர எனது வழ்த்துக்கள்....
 2. நானும் நிறையத்த தடவை கவனித்திருக்கிறேன். சில ஆண்கள் தங்கள் பிரச்சினைகளை மறக்க உடனே சிகரெட்டை கையிலெடுப்பார்கள். என்? ஆனால் புகைத்தல் உடல் நலத்திற்கு கேடு என்று அழுத்தி அதில் எழுதியுள்ளார்கள். அப்படியிருந்தும் காதலுக்காக அந்த சிகரட்டை தொடத்தான் வேண்டுமா கவிதை? மனதை உருக்கும் காதலுக்காக உயிரை உருக்கும் சிகரெட் எதற்காக... காதலில் உருகினாலும் கவிதை மொழி அழகு....
 3. உங்கள் உயிரின் துடிப்பில் மலர்ந்த கவிதை அழகானது சுமேரியர் . பாராட்டுக்கள்....
 4. இப்பொழுதெல்லாம் இப்படியான பாம்புகளிற்கு இன்னும் வாய்பளிக்கும் வண்ணம் எமது மண்ணின் கலாச்சாரம் மழுங்கடிக்கப்பட்டுள்ளது சகாரா . உலகெங்கும் இப்படியான பாம்புகள் உலவுகின்றன. .. பெண்கள் தான் உஷாராக வேண்டும். நடப்பை நகர்த்திய விதம் மிக நன்று...
 5. உங்கள் அனுபவப் பகிர்வு மிக நன்றாக , அதோடு அதன் அனுபவங்கள் அழகாக இருக்கிறது. தொடர்ந்து வாசித்துக் கொண்டு தான் இருக்கிறேன் . உடனுக்குடன் நான் வாசிக்கும் பதிவுகளுக்கு கருத்து எழுத நேரம் தான் கிடைப்பது அரிது. .. இருந்தும் எல்லோருடைய பதிவுகளையும் வாசிப்பேன். அந்த வகையில் உங்கள் பதிவும் ஒன்று..தொடருங்கள்..
 6. கோமகன் உங்கள் கவிதையும் படமும் நன்றாக இருக்கிறது .. இது உங்கள் துணைவியாருக்கு சமர்ப்பணம் தானே ...
 7. நீந்திக்கடந்த நெருப்பாறு தொடரை ஆவலோடு வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு தந்தையின் மனநிலை , ஒரு போராளியின் மனநிலையை உணர்த்தியபடி எழுதப்பட்டுள்ள இந்த தொடர் நன்றாக உள்ளது.... தொடருங்கள்...
 8. மிக நன்றாக இருக்கிறது பகலவன் உங்கள் கதை... தொடர்ந்து வாசித்துக் கொண்டு தான் இருக்கிறேன்... வாய்விட்டுச் சிரிக்க வைக்கும் உங்கள் தொடரை தொடருங்கள். ..... ஒவ்வொரு நிகழ்வுமே அழகாக இருக்கிறது....
 9. இன்றுவரை எம் நிலையில் மாற்றங்கள் ஏதுமில்லையே சாந்தி. இன்று விடியும் , நாளை விடியும் என்று நம்பிக்கையில் இருந்தோம்... 2009 திலிருந்து அந்த நம்பிக்கையும் அருகி விட்டது... இனி என்று நமக்கு புத்தாண்டு இனிதே பிறக்கும் என்று ஏக்கங்களை மட்டும் சுமந்திருக்கிறோம் என்றும் போலவே... பகிர்வுக்கு நன்றிகள் சாந்தி...
 10. பிரியம் ஏற்படுத்தும் காயங்கள் இப்படித்தான் வலிகளை கூட்டும், அதையும் தாண்டிய உண்மை அன்பு வாழ்வில் ஜெயிக்கும். வலிகளை ரசிக்கும் பண்பில் பிரியம் இல்லை என்பதை புரிந்தாலே வாழ்வின் யதார்த்தமும் புரிந்து விடும்... "வலிகளை வலிமையாக்கு .. வாழ்க்கை இனிதாகும்..." கவிதை உங்களின் மனக்காயங்கள் ஆறட்டும் விரைவில்..
 11. எங்கு போனீர்கள் நாம் இங்கு சாகையிலே .... சுபேஸ் உங்கள் ஆதங்கம் , கடவுளை எட்டியிருக்குமா ..? ஆனால் மனிதர்களிடம் நிச்சயம் எட்டியிருக்கும்.. உங்கள் கவிதைகளில் பொங்கியெழும் அத்தனை வார்த்தைகளும் மிக அருமை என்று வெறும் வார்த்தைகளால் பாராட்ட முடியவில்லை. ஏனென்றால் அவ்வளவும் வலிகளின் மேல் நின்று எழுதிய ஒரு இளம் கவிஞனின் வார்த்தைகள் இவை .. நீங்கள் கேட்டிருந்த அத்தனை கேள்விகளுக்கும் இறைவன் மட்டுமல்ல , அரசியல் நாடகம் நடத்தும் எந்த வாதிகளாலும் பதிலை கூறமுடியாது... இது தமிழினத்தின் சாபம் மட்டுமே ... தொடருங்கள் இது போன்ற கவிதைகளில் நம் உணர்வுகள் பதியப்படட்டும் ....
 12. நிச்சயமாக ஒவ்வொரு தமிழனுக்கும் உள்ள கோபத்தை பொங்கிய உள்ளத்தோடு பகிர்ந்து இருக்கிறீர்கள். ஆனாலும் நம்புவோம் ...அடுத்த தை பிறக்கும் போதாவது தமிழனுக்கு வழி பிறந்திடுமென்றே... நன்றிகள் கவிதைக்கு சுமேரியர்..
 13. கவிதைக்கு நன்றிகள் கோமகன்... ஞாபகங்களை மீட்டமைக்கும் ....நன்றிகள்... அனைவருக்கும் எனது உளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள் ...
 14. தொடருங்கள் கவிதை ..... பொறுத்திருந்து பார்ப்போம் .. கால தேவதை உங்களை எப்படியெல்லாம் சோதிக்கிறாள் என்று.. அதை அறிய மிக ஆவல் ....