Jump to content

போக்குவரத்து

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    533
  • Joined

  • Last visited

  • Days Won

    8

Everything posted by போக்குவரத்து

  1. பெரும்பாலான மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் அவற்றை (வீதியில் செல்லும் மோட்டார் சைக்கிள்களை) இதர வாகனங்களின் சாரதிகள் அவதானிக்காமையினாலேயே ஏற்படுகின்றன.

  2. இரவில் வாகனம் ஓடும் போது வெளிச்சத்துக்கும் இருளுக்கும் இடையிலான மாறுபாடு உங்கள் கட்புலனை குறைக்கின்றது. வாகனத்தின் டாஷ்போடின் வெளிச்சத்தை மிகவும் குறைவாக வைப்பது (dashboard lights at low) வெளியில் தெளிவாக பார்ப்பதற்கு உங்களுக்கு உதவும்.

  3. சூரிய உதயத்துக்கு சற்று முன்னதாகவும், சூரிய அஸ்தமனத்திற்கு சற்று பின்னதாகவுமே அதிகளவு வாகன விபத்துக்கள் ஏற்படுகின்றன. இந்த நேரங்களே வாகனம் ஓடுவதற்கு ஒப்பீட்டளவில் அதிக ஆபத்து உள்ளவை.

  4. காற்றுடன் இடி, மின்னல் ஏற்படும் நேரங்களில் அவை நீங்கும்வரை உங்கள் வாகனத்தினுள் தங்குவதே அதிக பாதுகாப்பானது.

  5. அவதானத்துடன் கவனமாக நீங்கள் வாகனம் ஓடினால் அதனால் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் வாகனத்தில் உள்ள பயணிகள், வீதியை பாவிக்கும் ஏனையோருக்கும் நன்மைகள் ஏற்படும்.

  6. கோடை காலத்திலேயே வீதி திருத்த வேலைகள் அதிகளவில் நடைபெறுகின்றன. வீதி திருத்த வேலைகள் நடைபெறும் இடங்களில் மேலதிக அவதானத்துடன் வாகனத்தை ஓடுங்கள்.

  7. வெவ்வேறு வகையான வாகனங்களுக்கு வெவ்வேறு வகையான சாரதி அனுமதி பத்திரங்கள் உள்ளன. உங்கள் சாரதி அனுமதி பத்திரம் மூலம் அனுமதியுள்ள வாகனங்களை மட்டும் ஓடுங்கள்.

  8. வாகனத்தின் பின் இருக்கையில் உள்ளவர்கள் இருக்கை பட்டி (Seat Belt) அணிய தேவையில்லை என்று பலரும் நினைக்கிறார்கள். அனுபவம் வாய்ந்த சாரதிகளும், நீண்டகாலமாக வாகனத்தில் பயணம் செய்பவர்களும் இவ்வாறு நினைக்கிறார்கள். வாகனத்தின் பின் இருக்கையில் உள்ளவர்கள் இருக்கை பட்டி அணிய தேவையில்லை என்று நினைப்பது சரியானதா? இல்லை, மிக தவறானது. வாகனத்தில் உள்ள அனைவரும் இருக்கை பட்டி அணிய வேண்டும் என்பதே சரியானது. இருக்கை பட்டியின் முக்கியத்துவம் எவை? ஒரு விபத்து ஏற்படும்போது அல்லது வாகனம் விரைவாக நிறுத்தம் செய்யப்படும் போது விபத்தின் அல்லது உடனடி நிறுத்தத்தின் தாக்கம் காரணமாக (Impact) வாகனத்தின் உட்பகுதியுடன் உங்கள் உடல் விரைவாக சென்று எதிர்பாராமல் மோதல் அடைவதை இருக்கை பட்டி தடுக்கிறது. உதாரணமாக, ஓடும் வாகனத்தில் திடீரென விரைவாக பிரேக் பிடிக்கப்படும் போது பின் இருக்கையில் உள்ள நீங்கள் வாகனத்தின் முன் இருக்கையை நோக்கி உதறி எறியப்படக்கூடும். இதன்போது உங்கள் தலை, கை, நெஞ்சுப்பகுதி போன்றவை அடிபட்டு காயம் ஏற்படலாம். ஆனால், இருக்கை பட்டி அணிந்தால் அது உங்கள் உடல் உதறப்பட்டு வாகனத்தின் உட்பகுதிகளுடன் மோதுவதை தடுக்கிறது. இவ்வாறே, இருக்கை பட்டி அணியாவிட்டால் விபத்தின் போது உங்கள் தலை மிக வேகமாக வாகனத்தின் யன்னல் கண்ணாடியுடன் அடிபட்டு மோசமான காயம் ஏற்படலாம். ஆனால், இருக்கை பட்டி அணியும்போது உங்கள் உடல் உதறப்பட்டு வாகனத்தின் பகுதிகளுடன் முட்டி மோதுவது தடுக்கப்படுகிறது. அதிகளவு விபத்துக்களில் வாகனத்தின் கதவு திறபடுகிறது. நீங்கள் இருக்கை பட்டி அணியாவிட்டால் விபத்தின் தாக்கம் காரணமாக தானாக திறபடும் கதவூடாக நீங்கள் தெருவில் தூக்கி எறியப்பட்டு மோசமான காயங்கள் ஏற்படலாம். பல வீதி விபத்துக்களில் பயணிகள் வாகனத்தின் கதவூடாக வீதியில் தூக்கி வீசப்பட்டு உடல் உருண்டு பலத்த காயங்களினால் உடனடியாகவே மரணம் அடைவதை அன்றாடம் செய்திகளில் காண்கிறோம். ஆனால், இருக்கை பட்டி அணியும்போது இருக்கை பட்டி வாகனத்தின் கதவு விபத்தின்போது திறபட்டாலும் நீங்கள் வெளியே உதறி எறியப்படாதவாறு உங்கள் உடலை இருக்கிப்பிடித்து உங்களை காப்பாற்றுகிறது. இருக்கை பட்டி அணிவது காவல்துறையை திருப்திப்படுத்துவதற்காக அல்ல, ஆனால், உங்கள் உயிரை காப்பாற்றுவதற்காக என்பதை நினைவில் வையுங்கள். சரியான முறையில் இருக்கை பட்டி அணிவது உங்கள் உயிரை காப்பாற்றும். நீங்கள் எவ்வளவோ திறமைசாலியான சாரதியாக காணப்படலாம். ஆனால், விபத்திலிருந்து திறமைசாலிகளும் 100% தப்பிக்க முடியாது. உங்கள் வாழ்க்கை, உங்களை நம்பி வாகனத்தில் ஏறுகின்ற பயணிகளின் வாழ்க்கை சோம்பேறித்தனம் காரணமாக அல்லது உதாசீனம் காரணமாக இருக்கை பட்டி அணியாமல் விபத்தில் மோசமாக பாதிக்கப்படுவதற்கு அல்லது உயிரிழப்பு ஏற்படுவதற்கு சந்தர்ப்பத்தை உருவாக்காதீர்கள். ஓடும் வாகனத்தில் உள்ள அனைவரும் இருக்கை பட்டியை முறையாக அணிந்துள்ளதை உறுதி செய்யுங்கள். கீழுள்ள வீடியோக்களை பாருங்கள். இருக்கை பட்டி அணியும் போதும் இருக்கை பட்டி அணியாதபோதும் விபத்து ஏற்பட்டால் எப்படியான விளைவுகள் ஏற்படுகிறது என்பதை காண்பிக்கின்றன: ஆக்கம்: போக்குவரத்து http://www.CarDriving.CA
  9. மழைநீர் கிரீஸ், ஒயில் இவற்றுடன் கலப்பதால் வீதி மேற்பரப்பில் வாகனத்தின் ரயருடன் ஏற்படக்கூடிய உராய்வின் வீரியம் குறைகிறது, வாகனத்தை உடனடியாக நிறுத்தம் செய்ய முடியாமல் போகிறது. எனவே, மழைகாலங்களில் வாகனத்தை மெதுவாய் ஓடுங்கள்.

  10. முன்னால் செல்லும் வாகனத்தை மிக அருகாக நீங்கள் பின் தொடர்ந்து செல்வது (Tailgating) மிகவும் ஆபத்தானது. Tailgating நீங்கள் விபத்தில் சிக்கும் சாத்தியத்தை பல மடங்கு அதிகரிக்கிறது.

  11. வாகனத்தின் பின் இருக்கைகளில் உள்ளவர்கள் இருக்கை பட்டி அணியதேவையில்லை என நினைப்பது மிகவும் தவறானது. ஓடுகின்ற வாகனத்தில் உள்ள அனைவரும் இருக்கை பட்டி அணியவேண்டும்.

  12. ஒருவரும் வரவில்லை என்று மனதினுள் நினைத்து கொண்டு STOP Sign இல் முழுமையான நிறுத்தத்திற்கு வாகனத்தை கொண்டுவராது அவசரப்பட்டு திருப்பத்தை மேற்கொள்வதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

  13. ஒழுங்கை மாற்றம் செய்யும்போது, ஒழுங்கை மாறும் முன்னர் வேறு வாகனங்கள் நீங்கள் செல்ல விரும்பும் அதே ஒழுங்கையினுள் வரவில்லை என்பதை உறுதிப்படுத்துங்கள்.

  14. சீரான சமநிலை, நேர்த்தி இல்லாத டயர்கள் (Improperly balanced & Misaligned tires) உள்ள வாகனத்தை ஓடும்போது ஓடும் பாதையில் இருந்து எதிர்பாராமல் விலகி சென்று விபத்து ஏற்படலாம்.

  15. STOP Sign வரும்போது வாகனத்தை முழுமையான நிறுத்தத்திற்கு கொண்டு வந்த பின்னரே திருப்பத்தை மேற்கொள்ள வேண்டும்.

  16. உங்கள் வாகனத்தின் காற்று வடிகட்டி (Air filters) பழையதாயின் அதை மாற்றுங்கள்; இல்லாவிட்டால் எரிபொருள் வீணாகுவதோடு இயந்திரத்தின் இயங்குதிறனும் குறைவடையும்.

  17. தொலைபேசி, குறுஞ்செய்தி பாவனைகள், உணவு உண்ணுதல், அதிகமான உரையாடல்... இவை வாகனம் ஓடும்போது உங்கள் கவனத்தை சிதறடித்து விபத்து ஏற்படுவதற்கு காரணமாகலாம்.

  18. மிக விரைவாக செய்யப்படும் பாதுகாப்பற்ற ஒழுங்கை மாற்றங்கள் விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. அந்நிலையில் வாகனத்தின் அளவு/வகை/தெரு நிலமை ஆகியவை விபத்தின் கோரத்தை தீர்மானிக்கின்றன.

  19. புதிய அகவையில் பயணிப்பதற்கு வாழ்த்து தெரிவித்த உறவுகள் ஜீவா, இசைக்கலைஞன், நுணாவிலான் ஆகியோருக்கு நன்றி.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.