Jump to content

போக்குவரத்து

கருத்துக்கள பார்வையாளர்கள்
 • Posts

  533
 • Joined

 • Last visited

 • Days Won

  8

Status Updates posted by போக்குவரத்து

 1. உங்கள் வானகத்திற்கு வரக்கூடிய பொதுவான பிரச்சனைகளை தீர்க்க கூடிய, சீராக்கங்களை செய்யகூடிய அடிப்படை அறிவை நீங்கள் பெற்றால் அது நேரத்தையும், பணத்தையும் சேமிக்க உதவும்.

 2. நீங்கள் ஓடுகின்ற வாகனத்தின் உரிமையாளர் கையேட்டினை (owner's manual) அடிக்கடி வாசித்து விளங்கி கொள்வது உங்களுக்கு பல அனுகூலங்களை தரும்.

 3. நீங்கள் சந்திகளில் திருப்பத்தை மேற்கொள்வதற்கு முன்னர், அது வலது திருப்பமாயினும் சரி இடது திருப்பமாயினும் சரி, உங்கள் வாகனத்தை சரியான ஒழுங்கையிற்கு கொண்டு செல்லுதல் மிக முக்கியமானது.

  1. நிழலி

   நிழலி

   இதனை ஒழுங்காக கடைப்பிடிக்காமையால் தான் பல விபத்துகள் நடக்கின்றன.

 4. மோசமான காலநிலை நிலவும்போது வாகனம் ஓடி விபத்துக்கள் வந்தால் காப்புறுதி நிறுவனங்கள் மோசமான காலநிலை நிலமையில் வாகனம் ஓடுவதை உங்களது தவறாகவே பார்க்கின்றன.

 5. உங்கள் வாகனத்தில் மாற்றங்கள் செய்யும்போதும் (கண்ணாடிகளின் தன்மை, உள் கண்ணாடிகள், பொருட்களை தொங்கவிடுதல்), பிரத்தியேக கருவிகளை இணைக்கும்போதும் நீங்கள் செய்யக்கூடிய, செய்யக்கூடாத விடயங்களை அறிந்து செயற்படுங்கள். இல்லாவிட்டடால் விதி முறைகளை அனுசரிக்காமை காரணமாக காவல்துறை உங்களுக்கு தண்டம் விதிக்கலாம்.

 6. Snow, Ice உள்ள நிலமைகளில் வாகனம் ஓடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் உங்கள் வாகனத்தின் வேகத்தை குறையுங்கள், முன்னால் செல்லும் வாகனத்திற்கு இடையில் ஆகக்குறைந்தது உங்கள் வாகனத்தின் நீளத்தை விட மூன்று மடங்கு நீளமுள்ள இடைவெளையும் விடுங்கள்.

 7. பாதணி அணியாமல் வெறுங்காலுடன் வாகனம் ஓடாதீர்கள். வாகனம் ஓடும்போது இயலுமானவரை சப்பாத்து அணியுங்கள். குதி உயர்ந்த பாதணி, தட்டையான அடி தடிப்பான சப்பாத்து, கனதியான பாரவேலைக்குரிய சப்பாத்து இவற்றை அணிந்து வாகனம் ஓடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

 8. வாகன அனுமதி பத்திரம், சாரதி அனுமதி பத்திரம், வாகன காப்புறுதி பத்திரம் ஆகியவற்றை அவை காலாவதியாகும் வரை காத்திராமல் உடனடியாகவே புதுப்பியுங்கள். காலாவதியாகிய பத்திரங்களுடன் வாகனம் ஓடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

 9. தெருவில் செல்கின்ற மற்றைய சாரதிகள் போக்குவரத்து விதிமுறைகளை அனுசரிக்காமல் முறைகேடாக வாகனம் ஓடுகின்றார்கள் என்பதற்காக நீங்களும் அவர்கள் போல் முறைகேடாக வாகனம் ஓடுவது தவறானதும், ஆபத்தானதும் ஆகும்.

 10. வீதியின் ஈரலிப்பினால் உராய்வின்மை காரணமாக உங்கள் வாகனம் வழுக்கி பாதையிலிருந்து திடீரென விலக தொடங்கினால் பதற்றப்படாதீர்கள். உடனடியாக கால் பாதத்தை வேகமிதிப்பானிலிருந்து தூக்கிவிட்டு வாகனம் செல்லவேண்டிய பாதையை நோக்கி ஸ்ரியரிங்கை பிடியுங்கள். பிரேக் அடிக்காதீர்கள்.

 11. விடுமுறை காலங்களில் திருட்டு அதிகமாய் இருக்கும். உங்கள் வாகனத்தின் யன்னல்களையும், கதவுகளையும் முழுமையாய் மூடுங்கள். பொருட்கள் எதனையும் வெளியே இருக்கைகளில், அடிதளத்தில் தெரியகூடியதாய் வைக்காது வாகனத்தின் trunkஇனுள் மறையுங்கள்.

 12. நீரிழிவு நோய் உள்ளவர்கள் வாகனம் ஓடும்போது உடல்நிலையில் திடீரென தகாத மாற்றம் ஏற்பட்டால் விபத்துக்கள் ஏற்படலாம். உங்களுக்கு நீரிழிவு நோய் காணப்பட்டால் வாகனம் ஓடுவதற்கு ஏற்றநிலையில் உடல்நிலை உள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள்.

 13. விடுமுறை காலங்களில் வாகனம் நிறுத்தம் செய்வதற்கு இடம் கிடைப்பது சிரமமாய் அமையும். உங்கள் வாகனத்தை அருகில் உள்ள தரிப்புக்களை அண்டி செல்லாமல் நேர்த்தியாக நிறுத்தம் செய்யுங்கள்.

 14. நீங்கள் வாகனம் வாங்கும் போது வாங்கும் வாகனத்தின் அடையாள இலக்கமும் (Vehicle Identification Number (VIN)) வாகனத்தின் அனுமதி பத்திர (Green ownership document) இலக்கமும் ஒன்றாக இருப்பதை உறுதிப்படுத்துங்கள்.

 15. கனடாவில் வாகன விபத்தினாலேயே அதிகளவு சிறுவர் வருடாந்தம் கொல்லப்படுகிறார்கள். சிறுவர்கள் வாகனத்தில் இருக்கை பட்டியை சரியாக அணிந்துள்ளதையும், சரியான இருக்கையில் அமர்வதையும் உறுதி செய்யுங்கள். குழந்தைகளின் சிறப்பு இருக்கையையும், இருக்கை பட்டியையும் சரியாக பாவியுங்கள்.

 16. வாகனத்தில் இருக்கை பட்டியை சரியான முறையில் அணியுங்கள். இருக்கை பட்டி உங்கள் இடுப்பு, நெஞ்சு பகுதிக்கு மேலாக தோள்பட்டையை மேவி செல்ல வேண்டும். இருக்கை பட்டியை கையில் இழுத்து உடலில் முட்டாமல் பிடிப்பது, கையுக்கும் நெஞ்சுக்கும் இடையாக விடுவது போன்ற செய்கைகள் தவறானது.

 17. திடீரென ஒரு வீதி விபத்தில் உங்கள் வாகனம் சிக்கி விட்டால் பின்னால் வரும் வாகனங்கள், சந்தியாயின் வேறு புறமாக வரும் வாகனங்கள் தொடர்ந்து வந்து மோதாமல் இருப்பதற்கு பாதுகாப்பு எச்சரிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.

 18. சவாரிக்கு போதியளவு நேரம் ஒதுக்குங்கள். ஈரமான (wet) வீதியில் நிறுத்தம் செய்வதற்கு கூடுதல் நேரம், தூரம் பிடிக்கும், எனவே முன்னால் செல்லும் வாகனத்திற்கு இடையில் கணிசமான இடைவெளி விடுங்கள், அத்துடன் வேகத்தையும் குறையுங்கள்.

 19. ஒன்றாரியோ மாகாணத்தில் புதிய போக்குவரத்து விதிகளின்படி 21 வயதுக்கு கீழ்ப்பட்ட ஒருவர் (அவர் எப்படியான வகை சாரதி அனுமதி பத்திரத்தை வைத்திருந்தாலும்) மதுபோதையில் ஓடுவது கண்டுபிடிக்கப்பட்டால் (எவ்வளவு வீதம் என்றாலும் - Zero Tolerance) சாரதி அனுமதி பத்திரம் உடனடியாக 24 மணிநேரங்களுக்கு இரத்து செய்யப்படும்.

 20. Perfect Practice makes you Perfect. நீங்கள் வாகனம் ஓடும் போது விடுகிற ஒவ்வொரு தவறுகளையும் மீண்டும் மீண்டும் சரி செய்து முறையாக ஓடும் போது, சிறிது காலத்தின் பின் நேர்த்தியாக வாகனம் ஓடும் ஆற்றல் உங்களுக்கு தானாகவே வந்துவிடும்.

 21. நீங்கள் வாகனம் ஓடும் போது மிக நீண்ட பார்வை வீச்சை ஏற்படுத்தினால் (Look ahead as far as you can comfortably see) போக்குவரத்தில் ஏற்படும் இடைஞ்சல்கள், இடர்கள், ஆபத்துக்களை முன்கூட்டியே இலகுவாக எதிர்கொள்ளவும் அல்லது தவிர்க்கவும் முடியும்.

 22. வாகனத்தில் சிக்னல் போடுவதற்கு ஆகக்குறைந்தது பின்வரும் நேர இடைவெளிகளின் முன் நீங்கள் பின் பார்வை கண்ணாடியை (Rear Mirror) பார்க்க வேண்டும். திருப்பங்கள்: 2 செக்கன்கள், ஒழுங்கை மாற்றம்: 3 செக்கன்கள், அவசர கால நிறுத்தம்: 5 செக்கன்கள்

 23. புகார் ஊடாய் (fog) வாகனம் ஓடும்போது வாகனத்தின் முன் விளக்கை போடுங்கள் ஆனால், உயர் ஒளி கற்றையை (high beam) பாய்ச்சாதீர்கள். உயர் ஒளி கற்றையை புகாரில் செலுத்தும்போது நீங்கள் வெளியே தெளிவாக பார்ப்பது இன்னும் கடினமாகும்.

 24. சன நெருக்கம் மிகுந்த நகர் பகுதியில் திருப்பங்களை மேற்கொள்வது உங்களுக்கு சற்று கடினமாகவும், குழப்பமாகவும் விளங்கலாம். குறிப்பிட்ட ஒரு சந்தியில் சட்டரீதியாக திருப்பத்தை மேற்கொள்வது பற்றி தெளிவும், பாதுகாப்பும் இல்லை என்றால் திருப்பத்தை செய்யாதீர்கள்.

 25. இடது பக்க திருப்பத்தை மேற்கொள்வதற்கு என பிரத்தியேக ஒழுங்கை காணப்படாதபோது அந்நிலையில் நீங்கள் இடதுபக்க திருப்பத்திற்காக சந்தியில் காத்து நிற்கும்போது, உங்களிற்கு பின்னால் அவசரகால வாகனம் வந்தால் சந்தியை ஊடறுத்து நேரே சென்று ஓரமாக நிறுத்தி அவசரகால வாகனத்துக்கு வழிவிடுங்கள்.

  1. தமிழரசு

   தமிழரசு

   இங்கு ரைட்டு ஹான்ட் லெப்ட் ஹான்ட்டு என்று மாறுபட்ட சாலை விதி உள்ள நாடுகள் உள்ளது ஆகையால் இது எந்த எந்த நாட்டு சாலை விதி என்பதினை குறிப்ப்டவேண்டும் யாழில் எல்லா நாட்டு வாசகர்களும் இருக்கின்றார்கள் என்பதினை தயவு செய்து கருத்தில் கொள்ளவும்.

  2. போக்குவரத்து

   போக்குவரத்து

   நாம் வழங்கும் குறிப்புக்கள் வட அமெரிக்காவை மையப்படுத்தியவை. வேறு நாட்டு சாரதிகள் தமது நாட்டுக்கு ஏற்ற வகையில் இவற்றில் சில மாற்றங்களை செய்ய வேண்டி வரலாம். ஆனால், பொதுவான விடயங்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியானவை. நன்றி

×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.