Jump to content

போக்குவரத்து

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    533
  • Joined

  • Last visited

  • Days Won

    8

Everything posted by போக்குவரத்து

  1. சைக்கிளில்(துவிச்சக்கரவண்டி) ஓடுபவர்கள் வீதி போக்குவரத்து விதிமுறைகளுக்கு விதிவிலக்கு இல்லை. அவர்கள் ஒரு வழிப்பாதையில் எதிர்ப்புறமாக (opposite direction of oneway street) சென்றால் HTA, சரத்து 153இன் படி $85 குற்றப்பணம் செலுத்த வேண்டும்.

  2. வாகனம் ஓடும் போது கவன குறைவுடன் வளைவுகளில் திரும்புதல் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். வளைவுகள் ஊடாக வாகனம் ஓடும் போது கடினமாக பிரேக் அடிப்பது, gas pedal ஐ கடினமாக மிதிப்பது இரண்டுமே ஆபத்தானவை.

  3. வீதி திருத்த வேலைகள் நடைபெறும் இடங்களில் ஆட்கள் வேலை செய்யும்போது போக்குவரத்தை கட்டுப்படுத்தும் அதிகாரியின் பணிப்புரைகளிற்கு கட்டுப்படாவிட்டால் தண்டனை : $500 அபராதம் அத்துடன் மூன்று Demerit புள்ளிகள்.

  4. அவசரகால நேரத்தில் Emergency வாகனங்கள் நிறுத்தி நிற்கும்போது அவற்றை விலத்தி செல்லாவிட்டால் (Move Over Law) தண்டனை $2000 குற்றப்பணம் + 3 demerit புள்ளிகள். தொடர்ந்தும் அதே தவறை செய்தால் தண்டனை $4000 குற்றப்பணம் + 06 மாதங்கள் சிறைத்தண்டனை + 02 வருடங்கள் சாரதி அனுமதி பத்திரம் இரத்து.

  5. சிவப்பு விளக்கு எரியும்போது வலது பக்கம் திரும்புவதாக இருந்தால் திரும்பும் அதே ஒழுங்கையில் வேறு வாகனங்கள் வராவிட்டாலும் உங்கள் வாகனத்தை சந்தியில் முழுமையான நிறுத்தத்திற்கு கொண்டுவந்த பின்னரே பாதுகாப்பாக வலது திருப்பத்தை செய்ய வேண்டும்.

  6. முறையான காப்புறுதி இல்லாமல் வாகனம் ஓடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும். அகப்பட்டால் அதிகூடிய அபராதம் கிடைப்பதோடு எதிர்காலத்தில் காப்புறுதி கட்டணம் அதிகளவு உயரலாம்.

  7. எவ்வளவு தூரம் பார்க்கமுடியும், எவ்வளவு தெளிவாக பார்க்க முடியும் என்பவை நீங்கள் அறியாமலேயே உங்கள் கண்களில் மாறலாம். எனவே, கிரமமாக உங்கள் கண்களை நீங்கள் பரிசோதனை செய்வது அவசியம் ஆகும்.

  8. வாகனத்தை நீங்கள் வேகமாக ஓடுவதால் சேமிக்ககூடிய நேரத்தை விட, வாகனத்தின் வேகத்தை அதிகரிப்பதால் ஏற்படக்கூடிய வாகன விபத்தின் பாதிப்பு மிக கடுமையானது.

  9. துவிச்சக்கர வண்டி/சைக்கிளும் ஒரு வாகனமே. சைக்கிள் ஓடுபவர்கள் வீதி போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களும் வீதி போக்குவரத்து குற்ற செயல்களுக்கான தண்டனையை/அபராதத்தை பெறவேண்டும்.

  10. ரிவர்ஸ் செய்யும்போது யாராவது உதவியானால் ஒழிய டிரக், பேருந்து இவற்றின் சாரதியால் முழுமையாக பின்னால் தெளிவாக பார்க்க முடியாது. ரிவர்ஸ் செய்யும் இந்த வாகனங்களுக்கு அருகில் இல்லாமல் தள்ளி நில்லுங்கள்.

  11. ஒழுங்கை மாற்றம் போக்குவரத்து நிலவரம், சூழ்நிலைக்கு ஏற்ப தேவைப்படுகின்றது. வாகனம் ஓடும்போது ஒழுங்கை மாற்றம் அடிக்கடி செய்ய வேண்டி ஏற்படலாம் அல்லது 20 நிமிடம் அளவிற்கு கூட அது தேவைப்படாதும் போகலாம். வலது பக்கமாக உள்ள ஒழுங்கையில் இயலுமான வரை ஓடவேண்டும் என்பதே பொதுவான போக்குவரத்து விதியாகும் (வட அமெரிக்கா). எப்போது ஒழுங்கை மாற்றம் செய்ய வேண்டும்? 1-உங்கள் பார்வை முன்னால் செல்கின்ற பெரிய வாகனங்கள் மூலம் (பார ஊர்தி, பேருந்து) தடைப்படுமாயின் 2-உங்களுக்கு முன்னால் செல்லும் வாகனம் காரணம் இல்லாமல் மெதுவாக செல்லுமாயின் 3-நீங்கள் ஓடுகின்ற வலது அல்லது இடது ஒழுங்கை முடிவடையப் போகுமாயின் 4-நீங்கள் ஓடுகின்ற ஒழுங்கையில் வீதி திருத்த வேலைகள் நடைபெறுமாயின் 5-நீங்கள் சந்தியில் வலது அல்லது இடது பக்கத்திற்கு திரும்ப வேண்டி ஏற்படுமாயின் 6-போக்குவரத்து அதிகாரி அல்லது காவல்துறையினரால் கட்டளையிடப்படுமாயின் 7-pavement markings மூலம் அறிவுறுத்தப்படுமாயின் 8-Emergency வாகனங்கள் வருமாயின் 9-ஒரு சந்தியில் இடது புறமாக திருப்பத்தை மேற்கொண்ட பின்னர் 10-ஒரு வாகனம் மூலம் நீங்கள் அருகாக பின் தொடரப்பட்டால் (being Tailgated) (வீதிக்கு நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை முதலில் கணக்கில் எடுங்கள்). எப்போது ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது? 1-காரணம் இல்லாமல், பாதுகாப்பு இல்லாமல் மற்றைய வாகனங்களை முந்தி செல்வதற்காக ஒழுங்கை மாற்றத்தை மேற்கொள்ளாதீர்கள். 2-Snowplowவாகனத்தை ஒருபோதும் முந்தக்கூடாது. 3-பாதசாரிகள் கடவைக்கு (pedestrian crossing) 30மீற்றர் தூரத்திற்கு அருகாக (within) ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது. 4-சந்திகளில் ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது. புகையிரத கடவைகளுக்கு அருகாக ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது. 5-முன்னால்/பின்னால் தெளிவாக பார்க்க முடியாதவாறு உங்கள் பார்வை (visibility) தடைப்படுமாயின் ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது. 6-உங்கள் blind spot இல் ஏதாவது வாகனம் நிற்குமாயின் ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது. 7-அருகாக அல்லது பின்னால் வரும் வாகனம் நீங்கள் செல்ல விரும்பும் அதே ஒழுங்கையினுள் ஒழுங்கை மாற்றம் செய்து வர முயற்சிக்குமாயின் நீங்கள் ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது. 8-குறுகிய பாலம், சுரங்கப்பாதை உள்ள இடத்தில் ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது. 9-வீதியில் ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது என Sign ஏதாவது போடப்பட்டு இருந்தால் ஒழுங்கை மாற்றம் செய்ய கூடாது. 10-உங்களுக்கு முன்னால் உள்ள வாகனம் நிறுத்தப்பட்டு இருக்குமாயின் போக்குவரத்து, நிலவரத்தின் அடிப்படையில் பாதுகாப்பாக ஒழுங்கை மாற்றம் செய்ய வேண்டிய தேவை இருப்பின் மட்டும் ஒழுங்கை மாற்றம் செய்யலாம். 11-pavement markings ஐ (வீதியில் கீறப்பட்டுள்ள அடையாளங்களை) கவனியுங்கள். solid line (முறிவு இல்லாத கோடு) ஒழுங்கை மாற்றம் செய்யகூடாது என்பதை அறிவுறுத்துகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் Common Sense ஐ பாவியுங்கள், அத்துடன் பாதுகாப்பிற்கு (safety) முக்கியத்துவம் கொடுங்கள். ஆக்கம் : போக்குவரத்து http://CarDriving.CA
  12. நாட்டுப்புற சாலைகளில் (country roads) வழமையில் நிர்ணயிக்கப்பட்ட வேகம் அதிகமாக இருப்பதாலும், ஒழுங்கை மாறும் போது எதிர்ப்புறமாக வரும் வாகனங்களின் ஒழுங்கையை பகிர்ந்துகொள்ள வேண்டி நேருவதாலும் (if unmarked) ஒழுங்கை மாற்றம் செய்யும்போது அதிக எச்சரிக்கை தேவை.

  13. வாகனத்தில் திருட்டினால் பாதிக்கப்படாமலிருக்க எல்லா யன்னல் கண்ணாடிகளையும் முழுவதுமாக மூடுங்கள், பெறுமதியான பொருட்களை வாகனத்தினுள் வெளியார் பார்வைக்கு தெரியும்படி வைக்காதீர்கள், வாகனத்தின் கதவுகளை lock செய்யுங்கள்.

  14. அதிக பாரம் (ஆட்கள்/பொருட்கள்) ஏற்றப்பட்ட வானில் புவியீர்ப்பு மையம் மேலே உயர்வதால் வேகமாக ஓடும் சமயத்தில் அவசரமாக நிறுத்தம் செய்ய முற்படும் போது வாகனம் உருண்டு கவிழ்வதற்கான சாத்தியம் அதிகரிக்கின்றது.

  15. புகையிரதம் முந்திப்பிந்தி வரலாம். புகையிரத கடவையை ஒவ்வொரு தடவையும் கடக்கும்போது எச்சரிக்கை தேவை. புகையிரதம் வரும் சமயத்தில் பொறுமை இல்லாமல் வேகமாக நீங்கள் கடக்க முயற்சிப்பது மிகவும் ஆபத்தானது.

  16. விபத்து ஏற்படும் போது வாகனத்தில் காற்றுப்பை (airbag) மணிக்கு 200 தொடக்கம் 300 மைல் வேகத்தில் விரிகின்றது. காற்றுபையுக்கு அருகாக இருந்தால் அல்லது பாதுகாப்பு பட்டியை அணியாவிட்டால் காற்றுப்பை தாக்கி சிறுவரிற்கு பாரதூரமான காயம் ஏற்படலாம்.

  17. 1-ஹைவேயை நோக்கிய வளைவினுள் நுழையும் போது வளைவுக்குரிய அதன் வேகத்தை பார்த்து ஓடுங்கள். 2-ஆர்முடுகும் ஒழுங்கையின் (acceleration lane) நீளத்தை (length of the lane) கவனியுங்கள். 3-நுழைய வேண்டிய ஒழுங்கையினுள் போதுமான அளவு இடைவெளியை (adequate gap) பாருங்கள். 4-எந்த இடைவெளியினுள் (இரண்டு வாகனங்களுக்கு இடையிலான) நீங்கள் நுழைய போகின்றீர்கள் என்பதை தீர்மானியுங்கள். 5-நேரே பாருங்கள், கண்ணாடியை பாருங்கள், நுழையும் பக்கத்திற்குரிய சிக்னலை போடுங்கள், blind spotஐ பாருங்கள், குறிப்பிட்ட இடைவெளியினுள் பாதுகாப்பாக நுழைந்து ஹைவே போக்குவரத்துடன் இணையுங்கள். 6-ஹைவேயின் ஆர்முடுகும் ஒழுங்கையில் காரணம் இல்லாமல் வேகத்தை குறைக்காதீர்கள். 7-ஹைவேயுக்கு நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் (பொதுவாக 100km/h) வாகனத்தை ஓடுங்கள். ஆக்கம்: போக்குவரத்து http://CarDriving.CA
  18. தெரு உங்களுக்கு மட்டுமானது அல்ல. ஹைவேயில் மற்ற வாகனங்கள் நுழைவதற்கு இடம் விட்டுக் கொடுங்கள். மற்றைய வாகனங்களை வெட்டி மறித்து ஓடாதீர்கள்.

  19. திட்டமிட்ட காப்புறுதி, விபத்து மோசடிகள் வாகனத்தை ஓடுகின்ற அனைவரையும் பாதிக்கின்றன. Crime Stoppers 1-800-222-TIPS

  20. நீண்ட பயணங்களில் உங்கள் வாகனத்தின் ரயர் அழுத்தம், திரவம்/fluid அளவு, விளக்குகள், சிக்னல், இதர பழுது/குறைபாடுகள் இவற்றை பயணத்தின் முன்பே சரி/சோதனை செய்வது அவசியம்.

  21. மின்னணு உறுதி கட்டுப்பாடு (Electronic stability control) என்பது நீங்கள் வாகனம் ஓடும்போது இந்த பொறிமுறை பாவனையில் இருக்குமாயின் ஸ்ரியரிங்க் மூலம் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாத தருணங்களில் வாகனம் உங்களின் கட்டுபாட்டினுள் வருவதற்கு ஏற்ற முறையில் தானாகவே உங்கள் வாகனத்தின் நான்கு சில்லுகளினதும் பிரேக்குகள் தனித்தனியாக தேவையான அளவு பிடிக்கப்படும். அத்துடன் தேவைக்கு தகுந்த படி எஞ்சினின் சக்தியும் கட்டுப்படுத்தப்படும். சுருக்கமாக இது... 1-வாகனம் வழுக்கி (skids) செல்லும் போது அதை கட்டுப்படுத்துவதற்கான ஒரு பொறிமுறை. 2-குறிப்பிட்ட சில வாகனங்களிலேயே இந்த தொழில்நுட்பம் உள்ளது. 3-Anti-lock braking system (ABS)உடன் இணைந்து பிரயோகம் செய்யப்படும் தொழில்நுட்பம். 4-வீதியில் ஓடுகின்ற எல்லா வாகனங்களிலும் இந்த பொறிமுறை காணப்படுமாயின் வருடத்திற்கு ஏறக்குறைய 10,000 உயிர்களை காப்பாற்றவும், 600,000 வாகன விபத்துக்களை தவிர்க்கவும் முடியும் என்று சொல்லப்படுகின்றது. 5-இந்த தொழில்நுட்பம் உங்கள் வாகனத்தில் காணப்பட்டால் விபத்தை 50%இனால் குறைக்க முடியும் என்று கருதப்படுகின்றது. சில தவிர, எல்லா வாகனங்களிற்கும் இந்த பொறிமுறை இல்லை. வெவ்வேறு வாகன தயாரிப்பாளர்கள், வெவ்வேறு வாகன வடிவமைப்புக்களிற்கு ஏற்ப இந்த பொறிமுறையில் ஒன்றுக்கு ஒன்று சிறிதளவு மாற்றங்கள் காணப்படும். ஆக்கம் : போக்குவரத்து http://CarDriving.CA
  22. வாகனத்தை ஓடாமல் எஞ்சினை மட்டும் சும்மா வேலை செய்ய விடுவதால் (Idling) எஞ்சினின் ஆயுள் குறையும், எரிபொருள் வீணாகும், சூழல் மாசுபடும், பணமும் விரயமாகும்.

  23. பாடசாலை பேருந்து சிவப்பு Flashஉடன் நிற்கும்போது இரண்டு திசைகளிலும் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் தண்டனை: $400 தொடக்கம் $4000 வரை அபராதம் அத்துடன் ஆறு demerit புள்ளிகள்.

  24. சிறுவர்களை ஒருபோதும் வாகனங்களில் தனியாக விட்டுச் செல்லாதீர்கள். வீட்டு கராச்சில், பாதையில் உள்ள உங்கள் வாகனங்களை சிறுவர்கள் நுழைய முடியாதவாறு பூட்டி வையுங்கள்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.