Jump to content

போக்குவரத்து

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  533
 • Joined

 • Last visited

 • Days Won

  8

Everything posted by போக்குவரத்து

 1. (Ontario/Canada வாழ் சாரதிகளுக்கு) தொடர்ச்சி.. Collision Reporting Centre சம்மந்தமான சில தகவல்கள்: 1-இழுக்கப்படும் சேதம் அடைந்த வாகனம் முதலாவதாக நேராக இங்கு கொண்டு செல்லப்பட வேண்டும். 2-இங்கு சேவை இலவசம். 3-பொதுவாக 1000 டாலரிற்கு மேல் வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டால் இங்கு சென்று முறைப்பாடு செய்ய வேண்டும். 4-விபத்து ஏற்பட்டு 24 மணி நேரங்களுக்குள் இங்கு முறைப்பாடு செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் காப்புறுதி நிறுவனத்திற்கு இழப்பீட்டிற்காக செல்ல முடியாது. 5-விபத்து ஏற்பட்ட இடத்திற்கு மிக அண்மையாக உள்ள முறைப்பாட்டு நிலையத்துக்கு செல்லுங்கள்.
 2. (Ontario/Canada வாழ் சாரதிகளுக்கு) 1-Ambulance, Fire Services அழைக்கப்படும் போது அங்கு சிறிய கட்டணம் அறவிடப்படுகின்றது. இந்த சேவைகள் இலவசம் இல்லை. 2-Tow பண்ணும் போது நீங்கள் உங்கள் வாகனத்தை எங்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறாவிட்டால் அவர்கள் தமக்கு வருமானம் கிடைக்கும் திருத்த சாலைகளிற்கு இழுத்து செல்வார்கள். அந்த வாகன திருத்த சாலைகள் விலை/திருத்தம் செய்வதற்கான கூலி அதிகமானவையாக இருக்கலாம். 2-Tow செய்யும் போது உங்கள் வாகனம் அதிக தூரம் இழுத்து செல்லப்பட்டால் அதற்கு அதிக கட்டணம் அறவிடப்படும். எனவே, இழுக்கப்படும் முன்பே எங்கு வாகனம் திருத்தம் செய்வதற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதை கல
 3. பதற்றம் அடையாதீர்கள்: 1-காயப்பட்டவர்களுக்கு உதவி செய்யுங்கள். 2-விபத்தில் எவராவது காயம் அடைந்தால் அல்லது வாகனத்திற்கு அதிக சேதம் ஏற்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு (மாநகரசபை/மாகாண) அறிவியுங்கள். 3-ஒருவருக்கும் காயம் ஏதும் ஏற்படாவிட்டால், வாகனமும் ஓடக்கூடிய நிலையில் காணப்பட்டால் போக்குவரத்திற்கு தடங்கல் ஏற்படுத்தாது வாகனத்தை அவதானத்துடன் வீதி ஓரமாக நகர்த்துங்கள். 4-விபத்திற்கான காரணம் மதுபோதை/போதைப்பொருள்/குற்றச் செயல் என சந்தேகம் கொண்டால் உடனடியாக காவல்துறைக்கு அறிவியுங்கள். விபரத்தை திரட்டுங்கள்: 1-சாட்சிகள்: பெயர்/முகவரி/தொலைபேசி இல./வாகன தகடு இல. காவல்துறை அதிகாரி பெயர்/
 4. வாகனம் ஓடும் போது உங்கள் கவனத்தை சிதறடிக்கும்/வீதி விபத்து ஏற்பட இடம் அளிக்கும் செயற்பாடுகளை தவிர்த்து கொள்ளுங்கள்.

 5. சீரான வேகத்தில் ஓடும் போது எரிபொருளை சேமிக்க முடியும். வேகமாக ஓடும் போது மேலதிகமாக எரிபொருள் தேவைப்படும்.

 6. வாகனம் ஓடும்போது தற்செயலாக gas pedal உட்பக்கமாக செருகுபட்டால் கைகளை நீட்டி சரி செய்ய முயற்சிக்காதீர்கள்.

 7. பாதசாரிகளுக்கான சிக்னல் காட்டும் போதும் ஏன் நீங்கள் மேலதிகமாக சுற்று புறம் பார்த்து கவனம் எடுக்க வேண்டும்? ஏன் என்றால், வாகனத்தை ஓடுபவர் அனுபவம் அற்ற புதிய சாரதியாக இருக்கலாம். வாகனத்தை ஓடுபவர் மது போதையில் இருக்கலாம். வாகனத்தை ஓடுபவர் குற்ற செயலுடன் சம்பந்தப்பட்டவராக இருக்கலாம். வானத்தை ஓடுபவர் சுகவீனம் அடைந்து இருக்கலாம். மோசமான வீதி நிலமைகள், மோசமான weather ஆக இருக்கலாம். சிக்னலில் தவறுகள் ஏற்படலாம். தெளிவாக பார்ப்பதற்கு இருள்/போதிய வெளிச்சம் இல்லாமல் இருக்கலாம். இவை போன்றன. இப்படியான சூழ்நிலைக்கு தமிழிலும் ஒரு அழகான பழமொழி உண்டு : நம்ப நட, நம்பி நடவாதே!
 8. வீதியின் குறுக்காக வாகனங்களிற்கு எச்சரிக்கை கொடுக்க மேலே தொங்குகின்ற மஞ்சள் நிறமான பாதசாரி சிக்னலை பாவிக்கும் போது, நீங்கள் கடப்பதற்கான பொத்தானை அழுத்தியதும் மஞ்சள் நிறமாக விட்டு விட்டு சிக்னல் எரிவதை ( flashing ) உறுதி செய்து கொண்டு கடவுங்கள்.
 9. வீதியை கடக்கும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விசயங்கள் : 1-பாதசாரிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள கடவையை ( pedestrians cross ) பாவியுங்கள். 2-பாதசாரிகளுக்கான சிக்னலை ( Pedestrian signals ) பாவியுங்கள். நீங்கள் கடப்பதற்கான சிக்னல் தோன்றுவதற்கு அதில் உள்ள பொத்தானை ( pedestrian push buttons ) அழுத்துங்கள். 3-நீங்கள் வீதியை குறுக்காக கடக்கும் போது மற்றைய ஒழுங்கையின் ஊடாக இடது, வலது புறமாக திரும்புகின்ற வாகனங்கள் உங்களை நோக்கி வரக்கூடும். அந்த வாகனத்தின் சாரதிகள் நீங்கள் வீதியை கடப்பதை அவதானிக்கலாம், அவதானிக்காமலும் விடலாம். எனவே, நீங்கள் வீதியின் குறுக்காக நடக்கும் போது
 10. நீங்கள் ஓடும் வாகனத்தில் உங்கள் பாதுகாப்பு வாகனத்தை முழுமையாக கட்டுப்படுத்தக்கூடிய சாரதி உங்களில் தங்கி உள்ளது.

 11. பலமான காற்று, மழை, பனி கொட்டும் நேரங்களில் உங்கள் வாகனத்திற்கும் முன்னால் செல்கின்ற வாகனங்களிற்கும் இடையில் போதியளவு இடைவெளியை ( space cushion ) பேணுங்கள்.

 12. இரண்டு வழி பாதை ஊடாக இரண்டு வழி பாதையில் இடது பக்கமாக திரும்புதல்: இரண்டு வழி பாதை ஊடாக ஒரு வழி பாதையில் இடது பக்கமாக திரும்புதல்: ஒரு வழி பாதை ஊடாக இரண்டு வழி பாதையில் இடது பக்கமாக திரும்புதல்: ஒரு வழி பாதை ஊடாக ஒரு வழி பாதையில் இடது பக்கமாக திரும்புதல் படங்கள், தகவல்கள் : ( MTO web )
 13. சமாந்தரமாக நிறுத்தம் செய்தல் (வலது பக்கமாக) : பிரிதொரு முறை சுருக்கமாக சுற்றிலுமாக 360 கோணத்தில் பார்க்கவும். உங்கள் தோளிற்கு மேலாக திரும்பி பார்க்கவும். உங்கள் வாகனத்தின் அரை வாசி பகுதி (உங்கள் shoulder) நிறுத்தம் செய்யப்பட்டு உள்ள வாகனத்தின் பின் பகுதிக்கு சமாந்தரமாக நிற்கும் போது steering wheel ஐ வலது பக்கமாக முழுவதுமாக சுழற்றவும். மிக மெதுவாக ரிவர்ஸ் செய்யவும். உங்கள் வாகனத்தின் முன் வலது பகுதி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ள வாகனத்தின் பின் இடது பகுதிக்கு நேராக நிற்கும் போது steering wheel ஐ இடது பக்கமாக முழுவதுமாக சுழற்றவும். தொடர்ந்து மிக மெதுவாக ரிவர்ஸ் செய்யவ
 14. Light சிக்னல் இல்லாத சந்திகளில் எப்படி இடது புறமாக திருப்பத்தை மேற்கொள்வது என பின்பு கூறப்படும்.
 15. சந்தியில் இடது புறமாக திருப்பத்தை மேற்கொள்ளும் போது கவனிக்க வேண்டிய சில முக்கிய விடயங்கள்: 1-இடது பக்கதிற்கு என தனியாக Light சிக்னல் காணப்பட்டால் நீங்கள் அந்த பிரத்தியேக சிக்னலில் பச்சை நிறம் அல்லது பச்சை அம்புக்குறி தோன்றும் போது மட்டுமே இடது பக்கமாக திருப்பத்தை மேற்கொள்ள வேண்டும். நேராக செல்வதற்கான Light சிக்னலில் பச்சை நிறம் காட்டினால் அதேசமயம் இடது புறத்திற்கான பிரத்தியேக சிக்னலில் சிவப்பு நிறம் காட்டினால், எதிர் புறமாக வாகனங்கள் வராவிட்டாலும் நீங்கள் இடது புறமாக திருப்பத்தை மேற்கொண்டால் அது சட்ட விரோதமானது ஆகும். 2-இடது பக்கத்திற்கு என பிரத்தியேகமாக Light சிக்னல் இல்லாமல் சந்திய
 16. பாடசாலைகள் மீண்டும் தொடங்கி விட்டன. பாடசாலை சூழலில் வாகனத்தை அவதானமாக ஓடுங்கள். பாடசாலை சூழலில் மற்றைய வாகனங்களை முந்தி பிடிக்காதீர்கள்.

 17. எழுதும் கருத்துகளிற்கு அருகில் உள்ள பகுதியில் Gender:Male இப்படி தெரிகிறது. அல்லது Not telling என்று காட்டுகிறது. இதை மறைப்பது எப்படி? சிலருக்கு மட்டும் Gender என ஒரு பகுதி தெரிய இல்லை. அவர்கள் எப்படி Gender தோன்றாத விதமாக மறைத்தார்கள் என கூற முடியுமா? எமக்கும் அப்படி செய்து தர முடியுமா? நன்றி
 18. முன் சில்லுகளை நேர் செய்வது இங்கு முக்கியம். ஸ்ரியரிங்கை பாவித்து முன் சில்லுகளை நேராக்குவதற்கு தெரிந்து வையுங்கள். முன்சில்லுகள் நேராக நிற்கும் போது, ஸ்ரியரிங்கை அசையாமல் பிடிக்கும் போது உங்கள் வாகனம் முன்னிற்கு அல்லது பின்னிற்கு நகர்ந்தால் அது நேர்கோட்டில் அசையும். பலர் சமாந்தரமாக வாகனத்தை தரிக்கும் போது பிழை விடுவதற்கு ஆரம்பத்தில் முன் சில்லுகளை நேராக்காமல் ரிவர்ஸ் செய்வதும் காரணம் ஆகும்.
 19. பல நுட்பங்கள் உள்ளன. ஒரு வழி சுருக்கமாக: 1-மற்றைய வாகனத்திற்கு மிக அருகாக உங்கள் வாகனத்தை சமாந்தரமாக கொண்டு வந்த பின்னர் உங்கள் வாகனத்தின் முன் சில்லுகளை நேராக்குங்கள். 2-உங்கள் வலப்பக்கமாக பாருங்கள் (இடது பக்கமாக மற்றைய வாகனம் இருந்தால் இடது பக்கமாக பார்க்க வேண்டும்). ரிவர்ஸ் கியருக்கு மாற்றிவிட்டு மெதுவாக உங்கள் வாகனத்தின் முன் சில்லுகள் மற்றைய வாகனத்தின் பின் சில்லுகளுக்கு சமாந்தரமாக வரும் வரை ரிவர்ஸ் செய்யுங்கள். 3-இப்போது steering ஐ வலது பக்கமாக முழுவதுமாக சுற்றுங்கள் (இடது பக்கமாக மற்றைய வாகனம் இருந்தால் இடது பக்கமாக சுற்ற வேண்டும்). இனி தொடர்ந்து மிக மெதுவாக ரிவர்ஸ் செய்
 20. winter காலத்தில் சூரியன் தாழ் வானத்தில் நிற்கும் போது சரியாக கண் கூசும். sun glass பாவியுங்கள்.

 21. வாகனம் நிறுத்த கூடாது என சொல்லப்பட்ட இடத்தில் வாகனத்தை park செய்தால் மூன்று மடங்கு அபராதம் கிடைக்க கூடும்.

 22. CarDriving எனும் பெயரை போக்குவரத்து என்று மாற்றுவீர்களா? நன்றி.
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.