Jump to content

போக்குவரத்து

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    533
  • Joined

  • Last visited

  • Days Won

    8

Blog Comments posted by போக்குவரத்து

  1. முறிவு இல்லாத திடமான கோடு (solid line) என்றால் ஒழுங்கை மாற்றம் செய்ய முடியாது.

    முறிவு உள்ள கோடு என்றால் எதிர்ப்புறமாக வாகனம் வராத போது அவதானத்துடன் ஒழுங்கை மாற்றம் செய்யலாம்.

    முறிவு இல்லாத திடமான கோடு காணப்படும்போது உங்களுக்கு முன்னால் உள்ள வாகனம் நகரமுடியாதபடி குழறுபடி ஏதும் ஏற்பட்டு நிறுத்தம் செய்யப்பட்டால் (Emergency Situations) எதிர்ப்புறமாக வாகனம் ஏதும் வராதபோது மிகவும் அவதானத்துடன் ஒழுங்கை மாற்றம் செய்து மீண்டும் அவதானத்துடன் பழைய ஒழுங்கையினுள் பிரவேசிக்கலாம்.

    இதுபற்றி விரிவாக கூறும் HTA (Highway Traffic Act) சரத்தை விரைவில் இங்கு இணைக்கின்றோம்.

    • முன்னால் செல்லும் வாகனம் அளவில் பெரியதாக காணப்பட்டால் அதற்கும் உங்கள் வாகனத்திற்கும் இடையில் அதிக அளவு இடைவெளியை பேணுவது மிக அவசியம்.
    • தேவை இல்லாமல் head lights ஐ high beam இல் போட்டு ஓடினால் 02 demerit points ம், அத்துடன் அபராதமும் கிடைக்கலாம்.
    • ஓட்டுனர் இருக்கையில் உங்கள் மார்புக்கும் steering wheel க்கும் இடையிலான தூரம் 10 அங்குலமாக அமையும் வகையில் பார்த்து கொள்வது முக்கியம்.
    • black ice க்கு மேல் ஏறி பின்சில்லு வழுக்கினால் உடனடியாக gas pedal இல் இருந்து காலை எடுத்து விட்டு நீங்கள் போக வேண்டிய பக்கமாக steer பண்ணுங்கள், brake அடிக்காதீர்கள்.
    • எஞ்சினை சூடாக்கிய பின் வாகனத்தை ஓட முன்னர் யன்னல்களை திறந்து carbon monoxide வாயுவை வெளியேற்றுங்கள்.
    • 36% ஆன விபத்துகள் நீங்கள் பாவிக்கும் மருந்துகளின் தாக்கத்தினால் வருகின்றன.

  2. விபத்து என்பது எதிர்பாராமல் ஏற்படுகிறது. நீங்கள் சிறந்த சாரதியானாலும் உங்கள் கட்டுப்பாட்டை மீறி எதிர்பாராமல் விபத்து ஏற்படலாம். ஆகையினால் எதிர் காலத்தில் விபத்து ஏற்பட்டால் அதை எதிர்கொள்வது எப்படி என்பதற்கான விடயங்களை முன் கூட்டியே திட்டம் இட்டு வையுங்கள். அது எதிர் காலத்தில் தற்செயலாக விபத்து ஏற்படும் சமயத்தில் இலகுவாக பாதகமான விளைவுகளை சமாளிப்பதற்கு உதவும்.

  3. மேலும் சில குறிப்புக்கள்..

    1-வாகனத்தின் சேதம் சிறிதாக தோன்றக்கூடும். ஆனால் திருத்தம் செய்யும் இடத்திற்கு கொண்டு செல்லும் போதே உண்மையான சேதம் அதிகம் என்பதை நீங்கள் உணரக்கூடும். எனவே, உங்களில் பிழை இல்லாமல் மற்றைய சாரதியில் பிழை என கருதி இருவரும் சமரசம் செய்தால் வாகனம் திருத்தும் செய்யும் நிலையத்தின் தகவலை கவனத்தில் எடுத்து கொண்டு செயற்படுங்கள்.

    2-விபத்து நடைபெற்றதும் சேதத்திற்கான இழப்பீடு சம்மந்தமாக சமரசம் செய்யும் சாரதி நீங்கள் முறைப்பாட்டு நிலையத்திற்கு 24 மணி நேரத்திற்குள் சென்று முறைப்பாடு செய்யாவிட்டால் உங்களை வாக்குறுதி அளித்தபடி இல்லாமல் ஏமாற்றவும் கூடும். எனவே அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

    3-உங்கள் கைத்தொலைபேசி, கமரா மூலம் தேவையான விபரங்களை படங்களாகவும், வீடியோவாகவும் எடுங்கள்.

    4-ஒரு போதும் மற்றைய சாரதி வாய் மூலம் கூறுவதை நம்பாதீர்கள். அவரது லைசன்ஸ், காப்புறுதி விபரம், வாகன உரிமை விபரம் போன்றவற்றை நேரடியாக வாசித்து பார்த்து குறிப்பு எடுங்கள். சந்தேகம் தோன்றினால் காவல்துறையின் உதவியை நாடுவதற்கு தயங்காதீர்கள். நீங்கள் சமரசம் செய்தாலும் காப்புறுதி, லைசன்ஸ்,வாகன உரிமை பத்திரம்,தகடு இலக்கத்தை/விபரங்களை நேரடியாக பார்த்து பதிவு எடுங்கள். படமாகவும் எடுக்கலாம்.

  4. (Ontario/Canada வாழ் சாரதிகளுக்கு) தொடர்ச்சி..

    Collision Reporting Centre சம்மந்தமான சில தகவல்கள்:

    1-இழுக்கப்படும் சேதம் அடைந்த வாகனம் முதலாவதாக நேராக இங்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.

    2-இங்கு சேவை இலவசம்.

    3-பொதுவாக 1000 டாலரிற்கு மேல் வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டால் இங்கு சென்று முறைப்பாடு செய்ய வேண்டும்.

    4-விபத்து ஏற்பட்டு 24 மணி நேரங்களுக்குள் இங்கு முறைப்பாடு செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் காப்புறுதி நிறுவனத்திற்கு இழப்பீட்டிற்காக செல்ல முடியாது.

    5-விபத்து ஏற்பட்ட இடத்திற்கு மிக அண்மையாக உள்ள முறைப்பாட்டு நிலையத்துக்கு செல்லுங்கள்.

  5. (Ontario/Canada வாழ் சாரதிகளுக்கு)

    1-Ambulance, Fire Services அழைக்கப்படும் போது அங்கு சிறிய கட்டணம் அறவிடப்படுகின்றது. இந்த சேவைகள் இலவசம் இல்லை.

    2-Tow பண்ணும் போது நீங்கள் உங்கள் வாகனத்தை எங்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறாவிட்டால் அவர்கள் தமக்கு வருமானம் கிடைக்கும் திருத்த சாலைகளிற்கு இழுத்து செல்வார்கள். அந்த வாகன திருத்த சாலைகள் விலை/திருத்தம் செய்வதற்கான கூலி அதிகமானவையாக இருக்கலாம்.

    2-Tow செய்யும் போது உங்கள் வாகனம் அதிக தூரம் இழுத்து செல்லப்பட்டால் அதற்கு அதிக கட்டணம் அறவிடப்படும். எனவே, இழுக்கப்படும் முன்பே எங்கு வாகனம் திருத்தம் செய்வதற்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதை கலந்து பேசி தீர்மானியுங்கள்.

    3-உங்கள் வானகத்திற்கு1000 டாலருக்கு மேல் இழப்பு/சேதம் என அறிந்தால் காவல்துறைக்கு அறிவிக்க வேண்டும் என கூறப்படுகின்றது.

    4-உங்களில் பிழை காணப்படா விட்டாலும் நீங்கள் காப்புறுதி நிறுவனத்திடம் இழப்பீடு பெறுவதற்கு சென்றால் உங்கள் வானகத்திற்கான காப்புறுதி கட்டணம் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். காப்புறுதி நிறுவனங்கள் உங்கள் வானகத்திற்கான காப்புறுதி கட்டணத்தை நிர்ணயிக்கும் போது கடந்த காலத்தில் நீங்கள் விபத்தில் சம்மந்தப்பட்டு இருந்தால் அந்த விபத்து எவரது பிழை என்று பார்ப்பது இல்லை. மாறாக எத்தனை தடவைகள் நீங்கள் இழப்பீடு பெற்று இருக்கின்றீர்கள் என்றே பார்ப்பார்கள். எனவே உங்கள் தவறினால விபத்து ஏற்படாவிட்டாலும் நீங்கள் காப்புறுதி நிறுவனத்திடம் இழப்பீடு பெறுவதற்கு சென்றால் எதிர்காலத்தில் உங்கள் வாகன காப்புறுதி கட்டணம் அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

  6. பாதசாரிகளுக்கான சிக்னல் காட்டும் போதும் ஏன் நீங்கள் மேலதிகமாக சுற்று புறம் பார்த்து கவனம் எடுக்க வேண்டும்?

    ஏன் என்றால்,

    வாகனத்தை ஓடுபவர் அனுபவம் அற்ற புதிய சாரதியாக இருக்கலாம்.

    வாகனத்தை ஓடுபவர் மது போதையில் இருக்கலாம்.

    வாகனத்தை ஓடுபவர் குற்ற செயலுடன் சம்பந்தப்பட்டவராக இருக்கலாம்.

    வானத்தை ஓடுபவர் சுகவீனம் அடைந்து இருக்கலாம்.

    மோசமான வீதி நிலமைகள், மோசமான weather ஆக இருக்கலாம்.

    சிக்னலில் தவறுகள் ஏற்படலாம்.

    தெளிவாக பார்ப்பதற்கு இருள்/போதிய வெளிச்சம் இல்லாமல் இருக்கலாம்.

    இவை போன்றன.

    இப்படியான சூழ்நிலைக்கு தமிழிலும் ஒரு அழகான பழமொழி உண்டு :

    நம்ப நட, நம்பி நடவாதே!

  7. வீதியின் குறுக்காக வாகனங்களிற்கு எச்சரிக்கை கொடுக்க மேலே தொங்குகின்ற மஞ்சள் நிறமான பாதசாரி சிக்னலை பாவிக்கும் போது, நீங்கள் கடப்பதற்கான பொத்தானை அழுத்தியதும் மஞ்சள் நிறமாக விட்டு விட்டு சிக்னல் எரிவதை ( flashing ) உறுதி செய்து கொண்டு கடவுங்கள்.

  8. இரண்டு வழி பாதை ஊடாக இரண்டு வழி பாதையில் இடது பக்கமாக திரும்புதல்:

    2-27.jpg

    இரண்டு வழி பாதை ஊடாக ஒரு வழி பாதையில் இடது பக்கமாக திரும்புதல்:

    2-28.jpg

    ஒரு வழி பாதை ஊடாக இரண்டு வழி பாதையில் இடது பக்கமாக திரும்புதல்:

    2-27.jpg

    ஒரு வழி பாதை ஊடாக ஒரு வழி பாதையில் இடது பக்கமாக திரும்புதல்

    2-28.jpg

    படங்கள், தகவல்கள் : ( MTO web )

  9. சமாந்தரமாக நிறுத்தம் செய்தல் (வலது பக்கமாக) : பிரிதொரு முறை சுருக்கமாக

    சுற்றிலுமாக 360 கோணத்தில் பார்க்கவும்.

    உங்கள் தோளிற்கு மேலாக திரும்பி பார்க்கவும்.

    உங்கள் வாகனத்தின் அரை வாசி பகுதி (உங்கள் shoulder) நிறுத்தம் செய்யப்பட்டு உள்ள வாகனத்தின் பின் பகுதிக்கு சமாந்தரமாக நிற்கும் போது steering wheel ஐ வலது பக்கமாக முழுவதுமாக சுழற்றவும்.

    மிக மெதுவாக ரிவர்ஸ் செய்யவும்.

    உங்கள் வாகனத்தின் முன் வலது பகுதி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ள வாகனத்தின் பின் இடது பகுதிக்கு நேராக நிற்கும் போது steering wheel ஐ இடது பக்கமாக முழுவதுமாக சுழற்றவும்.

    தொடர்ந்து மிக மெதுவாக ரிவர்ஸ் செய்யவும்.

    முழுவதுமாக பின்னால் வந்ததும் வாகனத்தின் steering wheel ஐ நேராக்கவும்.

    நிறுத்தம் செய்யும் கியருக்கு மாற்றவும்.

    வாகனத்தின் கதவை திறந்து வெளியேறுவதற்கு முன்பாக வேறு வாகனங்கள் வரவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

  10. Light சிக்னல் இல்லாத சந்திகளில் எப்படி இடது புறமாக திருப்பத்தை மேற்கொள்வது என பின்பு கூறப்படும்.

  11. முன் சில்லுகளை நேர் செய்வது இங்கு முக்கியம். ஸ்ரியரிங்கை பாவித்து முன் சில்லுகளை நேராக்குவதற்கு தெரிந்து வையுங்கள். முன்சில்லுகள் நேராக நிற்கும் போது, ஸ்ரியரிங்கை அசையாமல் பிடிக்கும் போது உங்கள் வாகனம் முன்னிற்கு அல்லது பின்னிற்கு நகர்ந்தால் அது நேர்கோட்டில் அசையும். பலர் சமாந்தரமாக வாகனத்தை தரிக்கும் போது பிழை விடுவதற்கு ஆரம்பத்தில் முன் சில்லுகளை நேராக்காமல் ரிவர்ஸ் செய்வதும் காரணம் ஆகும்.

    • Like 1
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.