Jump to content

போக்குவரத்து

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    533
  • Joined

  • Last visited

  • Days Won

    8

Status Updates posted by போக்குவரத்து

  1. சைக்கிள் ஓடும்போது நீங்கள் சரியான முறையில் தலை கவசம் அணிவது அவசியம். தலை கவசம் விபத்துக்களின் போது தலை, மூளைக்கு ஏற்படும் தாக்கங்களை குறைக்கும் வகையில் பல நுணுக்கங்களுடன் தயாரிக்கப்படுகின்றது.

  2. மோட்டார் சைக்கிள்களுக்கு மற்றைய வாகனங்களுக்கு வீதியில் உள்ள அதே உரிமைகள் உள்ளன. வாகனம் ஓடும் போது மோட்டார் சைக்கிள்களுடன் வீதியை பகிர்ந்து கொள்வதோடு அவர்கள் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

  3. வீதிக்கு நிர்ணயிக்கப்பட்ட வேகம் (Posted speed Limit) அதன் சட்ட அமுலாக்கம் எல்லா ஒழுங்கைகளிலும் ஒரே அளவானதே. வேகமான ஒழுங்கை, மெதுவான ஒழுங்கை என்று வேறுபாடு கிடையாது. ஆனால், மெதுவாக செல்லும் வாகனங்கள் வலது பக்க ஒழுங்கையை பாவிக்க வேண்டும்.

  4. வீதி போக்குவரத்திற்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் முறைகேடாக வாகனம் ஓடும் சாரதிகளை பற்றிய தகவல்களை காவல்துறைக்கு முறைப்பாடு செய்யுங்கள். வாகனம் ஓடிக்கொண்டு இருந்தால் உங்கள் வாகனத்தை பாதுகாப்பாக வீதி ஓரமாக நிறுத்திய பின்னரே தொலைபேசியில் காவல்துறைக்கு அறிவியுங்கள்.

  5. உங்கள் ஓட்டுநர் (driving record) பதிவு வருடாந்தம் நீங்கள் வாகனத்திற்கு செலுத்தும் காப்புறுதி கட்டணத்தை தீர்மானிக்கும் முக்கிய காரணி ஆகும். எனவே, போக்குவரத்து விதிமுறைகளுக்கு அனுசரித்து அவதானத்துடன் வாகனத்தை ஓடுங்கள்.

  6. வாகனம் ஓடும்போது வீதியில் வண்டி ஓடுகின்ற மற்றைய சாரதிகளை அவசரப்படுத்தவோ அல்லது வெட்டி ஓடவோ அல்லது கட்டுப்படுத்தவோ அல்லது அவர்கள் மீது தகாத வார்த்தை பிரயோகங்கள் செய்யவோ முனையாதீர்கள்.

  7. ஒன்றாரியோ போக்குவரத்து அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சாரதி அனுமதி பயிற்சியை பெறும்போது (MTO Approved BDE Course) நீங்கள் நீண்டகாலத்தில் பெருமளவு காப்புறுதி பணத்தை சேமிக்க முடியும்.

  8. அளவில் சிறிதாயினும், பெரிதாயினும் வாகனங்கள் பின்தொடர்வது, பின் தொடரப்படுவது (tailgating) ஆபத்தானது. அளவில் பெரிய வாகனங்களை நிறுத்த (stopping distance) நீண்டதூரம் தேவைப்படும். வாகனம் ஓடும்போது கூடிய இடைவெளிவிட்டு ஓடுங்கள்.

  9. போக்குவரத்து சிக்னல்கள் ஏதாவது கோளாறு காரணமாக வேலை செய்யாவிட்டால் அந்த சந்தியை ALLWAY STOP சந்தியாக (முதலில் வருபவர் முதலில் செல்லுதல், சந்தியில் முழுமையான நிறுத்தத்தின் பின் நகருதல்) பாவித்து மிகுந்த அவதானத்துடன் செல்லுங்கள்.

  10. நீங்கள் வாகனம் ஓடும்போது உங்கள் பார்வையை குறுகிய தூரத்தினுள் மட்டுப்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களின் பரந்த, நீண்ட பார்வை நீட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்கு போதிய கால அவகாசத்தை தருகின்றது.

  11. கோடை காலத்தில் உங்கள் வாகனத்தின் உள்ளே போறணை போல் வெப்பம் கடுமையாக காணப்படும். ஏசி போடாவிட்டால் சாரளங்களை திறந்துவிடுவது வெப்பநிலை உயர்வை குறைக்கலாம்.

  12. ஓரளவு புதிய வாகனங்களில் வாகனத்தை சூடாக்குவதற்கு (warm up) முப்பது செக்கன்கள் தாராளமாக போதும். இதற்கு மேலாக எஞ்சினை சூடாக்குவதற்காக தொடர்ந்து சும்மா இயக்குவது பொருள் விரத்தையும், சூழல் மாசடைதலையும் ஏற்படுத்தும்.

  13. நெடுஞ்சாலை போக்குவரத்து சட்டம் பிரிவு 130இன் பிரகாரம் மற்றவர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நீங்கள் கவனக்குறைவுடன் பெருந்தெருவை பயன்படுத்தினால் (வாகனம் ஓடினால்) அதற்கு அபராதமாக $200 தொடக்கம் $1000 வரை குற்றப்பணம் செலுத்த வேண்டி வரலாம்.

  14. தேவையில்லாத நேரங்களில் உங்கள் வாகனத்தின் எஞ்சினை நிறுத்துவதன் மூலம் சூழல் காற்றின் தரத்தை மேம்படுத்த முடியும், சூழல் மாடுபடுவதை குறைக்க முடியும், பணமும் விரயம் அடைவதை குறைக்க முடியும்.

  15. காவல்துறையினர் நீங்கள் முறைகேடாக அல்லது தவறாக வாகனம் ஓடும்போது அவ்வாறான குற்ற செயல்களுக்காக உங்களுக்கு வழங்கும் சீட்டுக்கள் (Tickets) உங்கள் வாழ்வின் எதிர்காலத்தையே மாற்றலாம். போக்குவரத்து விதிகளிற்கு கட்டுப்பட்டு, அதை அனுசரித்து வாகனம் ஓடுங்கள்.

  16. கடுகதி பாதையில் முன்னதாகவே தீர்மானிக்காமல் கடைசி நேரத்தில் அவசரமாக Exit எடுப்பது/வெளியேறுவது ஆபத்தானது. எந்த Exit மூலம் பாதுகாப்பாக வெளியேறுவது என்பதை முன்கூட்டியே தீர்மானியுங்கள்.

    1. நிழலி

      நிழலி

      நல்ல தகவல் இது...நான் அடிக்கடி ஜி.பி.எஸ் சொல்லும் பாதையை கவனிக்காமல் திடீர் திருப்பம் எடுப்பது வழக்கம்

  17. கடுகதி பாதையின் ஆர்முடுகும் ஒழுங்கை பகுதியில் அல்லது கடுகதி பாதையுடன் இணையும் பகுதியில் நீங்கள் வாகனத்தை நிறுத்துவது அதிகளவு ஆபத்தானது. பின்பக்கத்தால் வந்து உங்கள் வாகனத்துடன் வேறு வாகனங்கள் மோதக்கூடும்.

  18. வீதியில் உங்களுடன் குதிரைகளும் சவாரியில் ஈடுபட்டால் குதிரைகளிலிருந்து கூடியளவு இடைவெளியை விட்டு மெதுவாக விலத்தி ஓடுங்கள். உங்கள் பாதையை மறைப்பினும் அவற்றுக்கு ஹோன் அடிக்காதீர்கள்.

  19. ஈஸ்டர் வாழ்த்துக்கள்! மதுபானம் அருந்தினால் வாகனம் ஓடாதீர்கள்!! நீண்ட வார விடுமுறை காலத்தில் முறைகேடாக வாகனம் ஓடும் (மது அருந்திவிட்டு) சாரதிகளை கண்காணிப்பதற்கு காவல் துறையினரின் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.

  20. ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களின் மோதல் (Multiple collision) வாகனங்களிடையே போதியளவு இடைவெளி விட்டு ஓடாதபடியால் வருகிறது. நெருக்கமாக ஒரு வாகனத்தின் பின்னால் செல்லும் போது திடீரென முன்னால் செல்லும் வாகனம் வேகத்தை குறைக்கும்போது அல்லது நிற்கும்போது பின்னால் செல்லும் வாகனங்கள் உடனடியாக நிறுத்தம் செய்ய முடியாது போகின்றது.

  21. துவிச்சக்கர வண்டிகளுக்கு (சைக்கிள்) ஒதுக்கப்பட்ட ஒழுங்கையில் உங்கள் வாகனத்தை தற்காலிகமாகவோ அல்லது குறுகிய அல்லது நீண்ட நேரத்துக்கு நிறுத்தம் செய்யக்கூடாது. துவிச்சக்கரவண்டி ஓடுபவர்களுக்கு நீங்கள் வாகனத்தை அவர்கள் ஒழுங்கையில் நிறுத்தம் செய்தால் ஆபத்து ஏற்படலாம்.

  22. நீங்கள் வாகனம் ஓடும்போது உங்கள் வானத்திலுள்ள பயணிகளுடன் அளவுக்கு அதிகமாக உரையாடுவதை தவிர்த்து வாகனத்தை ஓடுவதில் கூடியளவு கவனத்தை செலுத்துவது பாதுகாப்பான சவாரிக்கு உதவும்.

  23. உங்கள் வாகனத்தின் Hornஐ முறையாக பயன்படுத்துவதற்கு தெரிந்துகொள்வது விபத்துக்களை தவிர்ப்பதற்கும், பாதுகாப்பான சவாரிக்கும் உதவும். இதர வீதி பயன்பாட்டாளர்களுடன் திறனுடன் சமிக்ஞைகளை பரிமாறிக்கொள்ள தேவைப்பட்டால் மட்டும் Hornஐ பயன்படுத்துக்கள்.

  24. உங்கள் வாகனங்களில் சில்லுகளின் சீரமைப்பு (Wheel Alignment) வருடத்திற்கு ஒரு தடவை சரிபார்க்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் எரிபொருள் வீணடிக்கப்படும், ரயர்களின் ஆயுளும் குறையும் என்பதோடு வாகனம் ஓடும்போதும் பிரச்சனைகளும் ஏற்படும்.

  25. கை அசைவுகள், சைகை மூலம் மற்றைய வாகன சாரதிகளுடன் அல்லது பாதசாரிகளுடன் நீங்கள் தொடர்புகொண்டாலும் அதை அவர்கள் அவதானித்து சரியான முறையில் விளங்கிக்கொள்வார்கள் என்று நிச்சயம் இல்லை. எனவே அவதானம் தேவை.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.