Jump to content

போக்குவரத்து

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    533
  • Joined

  • Last visited

  • Days Won

    8

Everything posted by போக்குவரத்து

  1. தரிப்பிடங்களிலுள்ள வாகனங்களிற்கு (parked vehicles) அருகாக நடந்து செல்லும்போது அவதானம் தேவை. நிறுத்தம் செய்யப்பட்டுள்ள வாகனங்கள் உங்களை நோக்கி சடுதியாக நகரக்கூடும்.

  2. சூரிய ஒளி கண்ணை கூசச்செய்து வாகனம் ஓடுவதற்கு தடங்கல் தரும். இதை தவிர்ப்பதற்கு சன்கிளாஸ் அணியுங்கள். உங்கள் வாகன கண்ணாடியின் உள்புறம் வெளிபுறங்களையும் அழுக்கின்றி பேணுங்கள்.

  3. வயதில் மூத்தவர்களின் கண், செவிப்புலன்கள் பலவீனமாக காணப்படும் அத்துடன் அவர்கள் வீதியை கடப்பதற்கு அதிக நேரமும் எடுக்கும். வாகனம் ஓடும்போது இவர்களை எதிர்கொண்டால் மேலதிக அவதானத்தையும், பொறுமையையும் கடைப்பிடியுங்கள்.

  4. கோடைகாலங்களில் செல்லப்பிராணிகளை வாகனத்தினுள் தனிமையாக விட்டு பூட்டிவிட்டு செல்லாதீர்கள். அவை இறந்துவிடக்கூடும்.

  5. கோடை காலங்களில் வாகனத்தில் எரிபொருளை தொட்டி நிறையும் வரை முழுவதுமாக நிரப்பாதீர்கள். வெப்ப விரிவாக்கம் காரணமாக கசிவு ஏற்பட்டு எரிபொருள் வீணாகிவிடும்.

  6. நாட்டுப்புற சாலைகளில் நீங்கள் வாகனம் ஓடும்போது எதிர்பாராமல் குறுக்கே வரக்கூடிய விலங்குகளை உங்கள் பரந்த பார்வை மூலம் முன்கூட்டியே அவதானித்தாலே அவற்றுடன் மோதுவதை பாதுகாப்பாக தவிர்க்க முடியும்.

  7. மோட்டார் சைக்கிள் ஓடுவதற்கு மேலதிகமான உடல் மற்றும் உள ஆரோக்கியம் தேவை. இல்லாவிட்டால் உங்களுக்கோ மற்றவர்களுக்கோ பாதிப்பு ஏற்படலாம்.

  8. தெருவில் நடந்து செல்லும் போது கையடக்க மின்னணு சாதனங்களை பயன்படுத்தினால் அவதானமின்மை காரணமாக நீங்கள் விபத்தில் சிக்கக்கூடும்.

  9. வாகனம் ஓடும்போது கையடக்க மின்னணு சாதனங்களை (cell phones, texting devices and GPS systems) பயன்படுத்தினால் விபத்தில் நீங்கள் சிக்குவதற்கான வாய்ப்பு 4 மடங்குகள் கூடுகிறது (குறுஞ்செய்தி/Text பாவித்தால் 28 மடங்கு கூடுகிறது)

  10. வாகனத்தை வீட்டில் தரிக்கும் போது நேராக முன்னாக சென்று நிறுத்தாமல் ரிவர்சில் விட்டால் மீண்டும் எடுக்கும் போது இலகுவாக காணப்படும், அத்துடன் பாதுகாப்பானதும் கூட.

  11. தூக்க கலக்கத்தில் வாகனம் ஓடுவது மதுபோதையில் வாகனம் ஓடுவது போல் அதிகளவு ஆபத்தானது. போதியளவு தூக்கம் இல்லாமல் வாகனம் ஓடினால் மதுபோதையில் வாகனம் ஓடும்போது உள்ளதுபோல வீதி விபத்தில் நீங்கள் சிக்குவதற்கு அதிகளவு சாத்தியம் உள்ளது. நீண்ட பயணங்களின் போது வாகனம் ஓடும் முன்னர் போதியளவு தூக்கம் கிடைக்காது என நீங்கள் கருதினால் வாகனத்தை நீங்கள் ஓடாது வேறு பயண வழிமுறைகளை கையாளுங்கள். குறுகிய தூர பயணங்களாயினும் போதியளவு தூக்கம் கிடைக்கவில்லையாயின் வாகனத்தை நீங்கள் ஓடாது வேறு போக்குவரத்து முறைகளை பயன்படுத்துங்கள், உதாரணமாக பொது பேருந்து சேவை, டாக்சி போன்றவை. வாகனம் ஒரு இயந்திரம் என்பதை நினைவில் வையுங்கள். இயந்திரத்தை நீங்கள் இயக்கும் போது உங்கள் கவனம் அங்கு குவிக்கப்படாவிட்டால் அது மோசமான வீதி விபத்துக்களில் முடியலாம். அவ்விபத்துக்களில் உங்களுக்கு உடலியல் ரீதியான பாதிப்பு ஏற்படாவிட்டாலும் ஏனைய வீதி பாவனையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் கவன குறைவுடன் வாகனம் ஓட்டியதற்காக உங்களுக்கு சிறை தண்டனையும் கிடைக்கலாம். உங்கள் வாகனத்தினுள் உள்ள யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டால் அது ஆயுள் முழுவதும் உங்களுக்கு மன அழுத்தத்திற்கு காரணமாக அமையலாம். அண்மைய ஆய்வு தகவல்களின்படி போதியளவு தூக்கம் இல்லாமல் வாகனத்தை ஓடுவதனால் மோசமான பல வீதி விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. சில மருந்து வகைகள் தூக்கம், சோம்பலை ஏற்படுத்தக்கூடியன. நீங்கள் மருந்துகளை உட்கொள்ள முன்னர் வைத்தியரிடம் அவற்றினால் ஏற்படக்கூடிய விளைவுகளை முழுமையாக கேட்டு அறியுங்கள். தூக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மருந்து எதையாவது உள்ளெடுத்தால் அந்த மருந்தின் தாக்கம் நீங்கும் வரை வாகனம் ஓடுவதை கண்டிப்பாக நிறுத்தி வையுங்கள். தூக்க கலக்கத்தில் வாகனம் ஓடுவது உங்கள் இனிமையான பயணத்தையும் கெடுத்துவிடும் என்பதை மறவாதீர்கள். வாகனம் வீதியில் நகர்கின்ற ஒரு இயந்திரம். அதற்கு தன்னை இயக்குபவர் தூங்குகின்றாரா அல்லது விழித்துள்ளாரா என்று எல்லாம் தெரியாது. தூக்க கலக்கத்தினால் ஒரு சில நொடிகள் உங்கள் கவனம் சிதறுவது உங்கள் வாழ்க்கையையே மோசமான முறையில் தலைகீழாக மாற்றக்கூடும். ஆக்கம்: போக்குவரத்து http://cardriving.ca
  12. பல ஒழுங்கைகள் உள்ள பாதையானால் மழை நேரங்களில் கரை ஒழுங்கைகளை பாவிக்காமல் நடு ஒழுங்கைகள் ஊடாக ஓடுவதன் மூலம் பல சிரமங்களை தவிர்க்க முடியும்.

  13. நீங்கள் Roller Skater பயன்படுத்துபவரானால் அதனை ஒவ்வொரு தடவையும் பயன்படுத்த முன்னர் சில்லுகள், பலகை, பொருத்துக்கள் என்பன சேதமின்றி நல்ல நிலையில் காணப்படுவதை உறுதிப்படுத்துங்கள்.

  14. குடியிருப்பு பகுதி, விளையாட்டு மைதானம் உள்ள இடங்களில் வாகனம் ஓடும் போது மேலதிக கவனம் தேவை.

  15. புகையிரத பாதையில் நடந்து செல்லாதீர்கள்.

  16. நீண்ட வார விடுமுறையில் காவல்துறையினரின் கண்காணிப்பு அதிகமாக காணப்படும். போக்குவரத்து விதிகளுக்கு அனுசரித்து வாகனம் ஓடுங்கள்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.