மகம்

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  369
 • Joined

 • Last visited

Community Reputation

52 Good

About மகம்

 • Rank
  உறுப்பினர்

Profile Information

 • Gender
  Male
 • Location
  இங்கும் அங்கும்
 • Interests
  விடுதலைக்கான விடாமுயற்சி
 1. மகம்

  Tamil Issue an Internal Matter of Sri Lanka: Chari

  இந்தச் செய்திகள் உண்மையாயின் இலங்கையுடனான உறவுபற்றிய தெளிவான கொள்கைகளை மோடி அரசு இன்னும் வகுக்கவில்லை என்றே கருதவேண்டியுள்ளது.மாநிலமுதல்வராக மட்டுமே இருந்தவர், மத்தியிலுள்ள ஆட்சிபற்றிய முன்னனுபவம் எதுவும் இல்லாதவர் எனப் பார்க்கும்போது அது ஏற்றுக்கொள்ளக்கூடியதே.100நாள், அப்படியென்று சிறிது பொறுத்திருந்து பார்ப்போம். அதற்குக் காரணம், தற்போது தீவிரமான எரியும் பிரச்சினையாக இருக்கின்ற இஸ்ரேல் - காசா பிரச்சினையை நாடாளுமன்றத்தில் விவாதிக்கவே முதலில் மறுத்துவிட்டார் சுஷ்மா சுவராஜ். இருபகுதியினரும் வேண்டும், பக்கச்சார்பின்றி நடக்கவேண்டும் என அப்போது கூறப்பட்டது. ஆனால் பின்பு ஐ நா மனித உரிமைப்பேரவையில் இஸ்ரேலைக் கண்டித்து கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்தது.அப்படியொரு கொள்கைத் தடுமாற்றம்! இங்கும் மோடி அரசிடம் தெளிவான கொள்கை இல்லையென்றே கொள்ளவேண்டியுள்ளது. எனினும் இந்த மாற்றத்திற்கு 'பிரிக்ஸ்' நாடுகள் - - பிரேசில்,ரஷ்யா,சீனா,தென்னாபிரிக்கா -- கொடுத்த அழுத்தமே காரணம் எனக்கூறப்படுகிறது. இவர்களின் உச்சிமகாநாடு அண்மையில்தான் பிரேசிலில் நடைபெற்றது. இப்படியாகப் பூகோள-அரசியல்-பொருளாதார அழுத்தங்கள்,காரணங்கள் பல இருக்கின்றன. ஒரு மேலதிகத்தகவல்:மோடி பிரதமராவதை விரும்பாதவர் சுஷ்மா சுவராஜ். இவர் அத்வானி போன்று விரும்பாது பின்பு ஏற்றுக்கொண்டவர்.முன்பு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். எனவேதான் முக்கிய அமைச்சர் பதவி வழங்கப்பட்டவர். இதனால் நிலைமைகள் தெளிவாக நாம் சிறிதுகாலம் பொறுத்திருக்கவேண்டும். PM Meets Putin, Favours Broadening of Strategic Partnership
 2. செல்வாக்கோடு வாழ்ந்த ராஜேந்திர சோழன் காஞ்சிபுரம் அருகே பிரம்மதேசம் என்ற ஊரில் இறந்துபோனான். அவன் கடைசியாகத் தரிசித்த ஒரு கோயில் இருக்கிறது. சுற்றிலும் பனைமரங்கள்; பொட்டல்காடு. ஏன் அந்தக் கோயிலுக்கு வந்து இறந்துபோனான்? தெரிந்தது இவ்வளவுதான்.'தற்கொலையா' என்பது தெரியாது.தமிழகவரலாற்று அறிஞர்கள்தான் விளக்கம் தரவேண்டும்.
 3. மகம்

  Tamil Issue an Internal Matter of Sri Lanka: Chari

  இலங்கை தொடர்பான விசேட கலந்துரையாடலில் இந்தியப் பிரதமர்!! இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்றைய தினம் இலங்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய வெளிவிகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அருன் ஜெயிட்லி ஆகியோருடன் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் போது அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் தம்மிடம் முன்வைத்தக் கருத்துக்களை சுஸ்மா சுவராஜ் பிரதமருடன் பகிர்ந்துக் கொண்டுள்ளார். மேலும் இலங்கை ஊடாக பாகிஸ்தானிய தீவிரவாதிகளும், புலனாய்வுத் தரப்பினரும் இந்தியாவுக்குள் ஊடுறுவ மேற்கொள்ளும் முயற்சி தொடர்பில் இதன் போது முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை விடயத்தில் தமிழ் நாட்டில் காணப்படுகின்ற எதிர்ப்புகள் உள்ளிட்ட அழுத்தங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகார கொள்கையில் ஏற்படுத்தவுள்ள மாற்றங்களுக்கான முன்னோட்டமாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றிருக்கலாம் என்று இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/news/32794/57//d,article_full.aspx
 4. ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு- மத்திய, மாநில அரசுகள் விழா நடத்த கோரிக்கை! Published: Monday, July 28, 2014, 14:18 [iST] சென்னை: அலைகடல் மீது பல கலம் செலுத்தி கங்கை வென்று கடாரம் கைப்பற்றிய மாமன்னன் ராஜேந்திர சோழன் அரியணை ஏறி ஆயிரமாவது ஆண்டை மத்திய, மாநில அரசுகள் பெருவிழாவாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தமிழர்களின் பெருமிதமான சோழ வம்சத்தில் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1012ஆம் ஆண்டு இணை அரசராக பொறுப்பேற்றவர் ராஜேந்திர சோழன். பின்னர் 1014 ஆம் ஆண்டு அரசராக கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு முடி சூடி கொண்டார் ராஜேந்திர சோழன். அம்மாமன்னன் அரியணை ஏறி ஆயிரமாவது ஆண்டு இது. இந்த ஆயிரமாவது ஆண்டு விழாவை ராஜேந்திர சோழனின் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்து பொதுமக்கள் சிறப்போடு கொண்டாடினர். இந்த விழாவை ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாடவில்லை. மாநில அமைச்சர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. பெரும்பாலான அரசியல் கட்சிகளும் பங்கேற்கவில்லை. இது அப்பகுதி மக்களையும் வரலாற்று ஆய்வாளர்களையும் வருத்தமடைய வைத்துள்ளது. ராஜேந்திர சோழன் மிகப் பெரிய கடற்படையை வைத்திருந்தார். இதனாலேயே இந்திய கடற்படையில் ஒரு கப்பலுக்கு பெயரும் கூட ராஜேந்திரா என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. பின்னாளில் அது சாணக்யா என்றானது. ராஜராஜனையும் ராஜேந்திரனையும் பொதுமக்கள் கொண்டாடினாலும் பொதுவாக அரசுகளும் கட்சிகளும் 'அபசகுனமாக' பார்ப்பதுதான் தொடர் கதையாகி வருகிறது. சோழர்கள் தொடர்புடைய விழாக்களில் பங்கேற்றால் பதவி பறிபோய்விடும் என்பதுதான் அரசியல் தலைவர்களின் எண்ணமாக இருந்து வருகிறது. இதனாலேயே ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டை பற்றி அரசுகளும் அரசியல் தலைவர்களும் கண்டு கொள்ளவில்லை. சரி அரசியல்வாதிகள்தான் அப்படி எனில் இலக்கிய கர்த்தாக்கள் ஓரிருவரைத் தவிர பெரும்பாலானோர் இந்த விழாவை கொண்டாட முன்வரவில்லை.. திரைத்துறையினரும் கூட இப்படி பெருமிதத்தை உச்சிமோந்து கொண்டாட தயாராக இல்லை.. தமிழ் மாமன்னன் ராஜேந்திர சோழனை தமிழர்களே கொண்டாட தயாரில்லை என்கிற போது அரசுகள் எப்படி கவனம் செலுத்தும்? என்கின்றனர் கங்கைகொண்டசோழபுரத்துவாசிகள். ஒரு வரலாற்று பெருமிதத்தை வருங்கால தமிழகத்துக்கு உணர்த்த தவறிவிட்டதே தமிழ்ச் சமூகம் என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். தமிழ் மாமன்னர் ராஜேந்திர சோழனை எப்போதுதான் நம் அரசுகள் கொண்டாடுமோ? என்பதுதான் கங்கைகொண்ட சோழபுரத்து மக்களின் ஏக்கம். Read more at: http://tamil.oneindia.in/news/tamilnadu/tn-leaders-forget-rajendra-chozha-207123.html
 5. இராசேந்திரசோழனை நினைவுகூரல் தமிழரின் வீரத்தையும், அறத்தையும், கலையையும் உலகிற்கு பறைசாற்றிய பேரரசன் இராசேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா நேற்று கங்கை கொண்ட சோழபுரத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை பொதிகை தொலைக்காட்சி மட்டுமே முழுவதும் ஒளிபரப்பியது. அரசியல் கட்சி தலைவர்கள் எவரையும் காணமுடியவில்லை. நியாயமாக தமிழக முதல்வரே நேரில் வந்து இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்திருக்க வேண்டும். தமிழகம் தழுவிய விழாவாக இதை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். திராவிட அமைப்புகள், கட்சிகள் சோழர்களின் புகழ்பாட ஒருபோதும் முன்வர மாட்டார்கள் . அதேபோல் ஆரிய இந்துத்வா அமைப்புகளும் சோழர்களை சிறப்பிக்க முன்வர மாட்டார்கள். காரணம் சோழர்கள் தமிழ்த் தேசத்தின் பெருமைமிகு சின்னமாக விளங்குவதால் தான். சோழர்கள் தமிழ்த் தேசத்திற்கு ஆற்றிய தொண்டை நினைவு கூர தமிழ் ஆர்வலர்களும் கங்கை கொண்ட சோழபுரத்து மக்களுமே இந்த விழாவில் பெருமளவில் கலந்து கொண்டனர். சிங்களவன் தமிழீழ தேசத்தை 1.5 லட்சம் பேர்கள் கொண்ட ராணுவத்தை வைத்தே சிதைத்தான் கைப்பற்றினான். ஆங்கிலேயனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற இந்தியா ஒரு இலட்சம் ராணுவ வீரர்களை கொண்டு பல சமஸ்தானங்களை மிரட்டி இந்தியாவோடு இணைத்தது. இராசேந்திர சோழன் 9 இலட்சம் போர் வீரர்களை கொண்ட வலிமையான படையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் என்பதை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. இருப்பினும் இராசேந்திரன் மேற்கு நோக்கி போகாமல் கிழக்கு நோக்கி படை எடுத்தான். அதன் விளைவு இன்று தமிழர்கள் அந்நியர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்று சோழர்கள் இந்திய நிலப்பரப்பை முழுவதும் கைப்பற்றி இருந்தால் இன்று இந்தியாவின் அரசியலை தமிழர்கள் தான் தீர்மானித்து இருப்பார்கள். வரலாற்றில் அப்படி ஒரு வாய்ப்பு இல்லாமல் போனது நமக்கு வருத்தமே! இவ்வளவு பெரிய நாவாய் படை, காலாற்படை, குதிரை படை, யானை படை வைத்திருந்த கடைசி தமிழ் மன்னன் இராசேந்திர சோழன் தான் . அவனுக்கு வரலாற்றை மாற்றும் வலிமை இருந்தது. பஞ்சாயத்து முறை , தேர்தல் முறை , வியக்க வைக்கும் நீர் பாசனம் , கட்டட கலை , சிற்பக் கலைகள் என பலவற்றையும் வழங்கியது சோழர்கள் தான். இவ்வளவு பெருமைமிக்க சோழர்களை தமிழ்ப் பகைவர்கள் இழித்தும் பழித்தும் பேசி வருகின்றனர். பல தவறான ஆதாரமற்ற அவதூறுகளை பரப்பி வருகின்றனர். இவர்களின் பேச்சைக் கேட்டு தமிழர்களும் இராசேந்திர சோழனுக்கு உரிய மரியாதை கொடுக்காமல் அவனது ஆயிரமாவது விழாவை சிறப்பாக கொண்டாட முன்வரவில்லை என்பது வேதனை அளிக்கிறது. வரலாற்றில் இருந்தே தமிழர்கள் பாடம் படிக்க வேண்டும். நாம் பெருமை மிக்க வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் என்பதை நாம் உணரவேண்டும். இழந்த நிலப்பகுதிகளையும், மொழி வளத்தையும், தமிழர் இறையாண்மையையும் நாம் மீட்க வேண்டுமெனில் சோழர்களை நாம் நினைவு கூர்வது அவசியமாகும். இப்போதுள்ள சர்வதேச அரசியலில் தமிழர்கள் பகடைக் காய்களாக மாறாமல், காய்களை நகர்த்தும் சக்திகளாக உருமாறுவோம். அதற்கான வேலைகளை தமிழர்கள் நாம் தொடர்ந்து முன்னெடுப்போம். இராச்குமார் பழனிசாமி // முகநூல் வழியாக /27 யூலை 2014 / ---------------------------------------------------------------------------------------------------------------- ராஜேந்திர சோழன் 1000 // தமிழ்மகன் http://bit.ly/1lBIfzf மாமன்னர் ராஜேந்திர சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழா! வங்கக் கடல், கலிங்கம், சுமத்ரா, சீனம்... இங்கெல்லாம் தம் ரதகஜதுரக பதாதிகளுடன் சீறிப் பயணித்தவன் ராஜேந்திர சோழன். அவன் அரியணை ஏறிய 1000-வது ஆண்டு இது. 'கங்கை கொண்ட சோழன்’ புதினம் மூலம் ராஜேந்திர சோழனின் அசகாய சாதனைகளை விவரித்திருப்பார் எழுத்தாளர் பாலகுமாரன். அவரிடம் ராஜேந்திர சோழனின் பராக்கிரமங்களைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லிக் கேட்டோம்... "ராஜராஜ சோழன் காலத்துக்குப் பிறகு மிகப் பெரிய படை திரட்டி, கங்கை வரை போய் வெற்றிக்கொடி நாட்டி வந்த தமிழ் மன்னன் ராஜேந்திர சோழன் மட்டுமே. அதன்பிறகு மற்ற மன்னர்கள் பகைவரைத் தடுப்பதோடு சரி. தாக்கியதற்கான சரித்திரம் இல்லை. கங்கை கொண்ட சோழபுரத்தைச் சேர்ந்த ராஜராம் கோமகன் என்பவர், ராஜேந்திர சோழனின் 1000-வது பட்டாபிஷேக விழாவைக் கொண்டாடத் திட்டங்கள் போட்டிருக்கிறார். நானும் கலந்துகொள்கிறேன். இந்த மாதிரியான விழாக்கள், தமிழர் சரித்திரம் மீது ஆர்வம்கொண்ட இளைஞர்களுக்கு உதவி செய்யும். தமிழ், மேலும் வாழும்!'' ''ராஜேந்திர சோழனின் தீரம் எத்தகையது?'' '' 'அலைகடல் மீது பல கலம் செலுத்தி’ என்றுதான் அவன் மெய்கீர்த்தி சொல்கிறது. கடலின் தன்மை தெரிந்து, காற்றின் தன்மை தெரிந்து, இருட்டில் சுடர் மூலம் வழி தெரிந்து, ஆமைகள் போகிற நீரோட்டப் பாதை தெரிந்து, நூற்றுக்கணக்கான நாவாய்கள் அதாவது மிகப் பெரிய மரக்கலங்களோடு அவன் கிழக்கே உள்ள நாடுகளுக்குப் போயிருக்கிறான். இன்றைய சிங்கப்பூர், மலேசியா, ஜாவா, இந்தோனேசியா... எனப் பல நாடுகளில் அவன் கால்கள் பதித்திருக்கிறான். போரில் வென்று பெரும்பொருட்களை தமிழகத்துக்குக் கொண்டுவந்திருக்கிறான். சோழர்களுக்கு நடு நாடு, தொண்டை நாடு, தாண்டி கீழைச் சாளுக்கிய நாட்டோடு மிக நல்ல நட்பு இருந்திருக்கிறது. அதாவது ஆந்திர மக்களோடு, தமிழர்கள் மிக நெருக்கமாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், மேலைச் சாளுக்கியம் என்கிற கன்னட மக்களோடுதான் அவர்கள் எப்போதுமே முரண்பட்டு இருக்கிறார்கள். கீழைச் சாளுக்கியத்தை கன்னடர்கள் கபளீகரம் செய்யாதிருக்க, மணவினை ஏற்பாடு செய்து கீழைச் சாளுக்கியத்துக்கு மிகப் பெரிய படை அனுப்பவேண்டிய நிர்பந்தம் ராஜேந்திர சோழனுக்கு ஏற்பட்டது. கீழைச் சாளுக்கியத்துக்கு மேல் இருந்து கலிங்க தேசமும் ஒட்ட தேசமும் அவனுக்குத் தொந்தரவு செய்ததால் அதைத் தண்டிக்கவேண்டிய அவசியமும் ஏற்பட்டது. அவ்வளவு தொலைவு போய்விட்டதால் இன்னும் சற்று நகர்ந்து, வங்காளத்தில் புகுந்து மிகப் பெரிய கங்கை நதியையும், படகுகளையும், முகத்துவாரத்தையும் அவன் பார்த்து வியந்திருக்கிறான். யானைகள் வைத்து பாலம் கட்டி, அதன் மீது குதிரைகள் ஏற்றி மறுகரைக்குப் போயிருக் கிறான். இடைவிடாது மழை பெய்யும் அசாம் வரைக்கும் அவன் போயிருக்க வேண்டும். அங்கு இருந்த பெண்டிர், பண்டாரங்களை மட்டும் அல்ல... கோயில் சிலைகளையும் பெயர்த்து எடுத்து வந்திருக்கிறான். அவன் கொண்டுவந்த பல சிலைகளை என்ன காரணத்தினாலோ கங்கை கொண்ட சோழபுரத்தில் வைக்காமல், அதன் அருகே செங்கமேடு என்ற கிராமத்தில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்படுகின்றன. எந்த வழிபாடும் இல்லாமல் இருக்கின்றன!'' ''ராஜேந்திர சோழனின் சொந்த வாழ்க்கையில் என்ன செய்தி இருக்கிறது?'' ''அவனுக்கு மனைவியர் பலர். அதில் வீரமா தேவி என்பவள் மிக நெருக்கம். ராஜேந்திர சோழன் தன் 84-ம் வயதில் மரணமடைந்தபோது அவளும் உடன்கட்டை ஏறினாள். ராஜேந்திர சோழன் தன் மத்திம வயதில் திருவாரூரைச் சேர்ந்த பரவை என்கிற தேவரடியாரை நேசித்தான். தேவரடியார் என்று அப்போது அழைக்கப்பட்டவர்கள், தங்களை கோயிலுக்கு எனத் தீர்மானம் செய்தவர்கள்; நித்யசுமங்கலிகள். அவர்களைத் திருமணம் செய்துகொண்டால் அது ஒரு வைப்பாட்டி நிலையில்தான் இருக்கும். ஆனால், பரவையின் அறிவிலும் அழகிலும் ஈர்க்கப்பட்டு, ராஜேந்திர சோழன் அவளை அவ்விதம் நடத்தாமல், தன் தேரில் ஏற்றி திருவாரூர் முழுவதும் சுற்றி வந்தான். அவள் விரும்பியதால் செங்கல்லால் அமைந்த திருவாரூர் கோயிலைக் கருங்கல்லால் உருவாக்கி, அதன் மீது தங்கத் தகடு வேய்ந்து, அவளை முதன்முதலில் சந்தித்த இடத்தில் ஒரு கல்வெட்டு பொறித்திருக்கிறான். அவள் உயரத்துக்கு ஒரு வெண்கலக் குத்துவிளக்குச் செய்யச் சொல்லி அதைக் கருவறையில் வைத்து ஏற்றியிருக்கிறான். இன்று இருக்கும் விளக்கும் அவன் கொடுத்ததாக இருக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது! இதே விதமாக ராஜேந்திர சோழன் தன்னுடைய தந்தையின் அனுக்கிக்கு... அதாவது காதல் தோழிக்கு ஒரு பள்ளிப்படை கோயில் எழுப்பியிருக்கிறான். அவளுக்கு பஞ்சவன் மாதேவி என்று பெயர். பஞ்சவன் மாதேவி பட்டமகிஷியும் அல்ல; மனைவியும் அல்ல; அனுக்கி. அதாவது, கேர்ள் ஃப்ரெண்ட்போல. ஆனால், அவள் ராஜேந்திரனால் அங்கீகரிக்கப்பட்டு, தாய் எனப் போற்றியிருக்கிறான். அந்தப் பள்ளிப்படை கோயில் இன்றளவும் நன்றாக இருக்கிறது!'' ''நாட்டின் நிர்வாகம் எப்படி இருந்தது?'' ''மிகச் சிறப்பாக இருந்தது. விவசாயத் தொழில்கள் மிக அற்புதமாக நடைபெற்றன. ஒரு காசுக்கு 150 வாழைப்பழம். ஒரு பொற்காசுக்கு இரண்டு பசு மாடுகள், ஓர் எருமை. ஒரு பொற்காசுக்கு ஆழாக்கு ஏலக்காய் என வியாபாரங்கள் நடந்திருக்கின்றன. பசு சல்லிசாகக் கிடைக்கும். ஆனால், ஏலக்காய் கேரளத்தில் இருந்து வரவேண்டும். அதனால் விலை அதிகம். கம்மாளர்களுக்கும் சிற்பிகளுக்கும் உலோகத் தச்சர்களுக்கும் மரத் தச்சர்களுக்கும் மிகப் பெரிய மரியாதை இருந்தது. அவர்கள் நல்லது கெட்டதுக்கு சங்கு ஊதிக்கொள்ளவும், வீட்டுக்கு இரண்டு வாசல் வைத்துக்கொள்ளவும், சுண்ணாம்பு அடித்துக்கொள்ளவும், செருப்பு அணிந்துகொள்ளவும், பல்லக்கில் ஏறவும், தோளில் துணி போத்திக்கொள்ளவும், தலைப்பாகை அணியவும், பூணூல் அணிந்துகொள்ளவும் ராஜேந்திர சோழன் உரிமை கொடுத்திருக்கிறான். அளவான வரி, அனைவருக்கும் அத்தியாவசிய வசதிகள், கரை புரண்டோடிய செல்வம்... என வளமும் நலமுமாக இருந்தது சோழ சாம்ராஜ்ஜியம்!'' ''இப்போது அந்தச் செல்வங்கள் எல்லாம் எங்கே?'' ''400 வருட பகைமையைத் தீர்த்துக்கொள்ள, பாண்டியர்கள் படையெடுத்து வந்து சோழர்களைத் தாக்கி ஒரு தூணும் நிற்கவொட்டாது இடித்து, கோவேறு கழுதை பூட்டி, பேய் கடுகு விதைத்து ஊரை நாசம் செய்தார்கள். பொன் பொருட்களை வாரிக்கொண்டு போனார்கள். அவை அடுத்த தலைமுறையிலேயே டெல்லியில் இருந்து வந்த இஸ்லாமிய தளபதியால் கொள்ளையடிக்கப் பட்டன. 36 யானைகள் முழுவதும் பொன், பொருட்கள் டெல்லிக்குக் கொண்டுபோகப்பட்டன. டெல்லியில் உள்ள ஆட்சியாளர்களை அடுத்த 120 வருடங்களில் ஆங்கிலேயர்கள் தாக்கி, அந்தப் பொன் பொருட்களை எடுத்துக்கொண்டு இங்கிலாந்துக்குப் போனார்கள். இங்கிலாந்தின் பல சாலைகள், கட்டடங்கள் இந்தப் பொற்காசுகளால் நிர்மாணிக்கப்பட்டவை; தமிழக செல்வத்தால் வளர்ந்தவை!'' ''பாண்டியர்களுக்கும் சோழர்களுக்கும் ஏன் பகை?'' ''ஓர் இனம் மற்ற இனத்தால் அழிக்கப்படாது. எப்போதுமே ஓர் இனம் இரண்டாகப் பிரிந்து தன்னைத்தானே அழித்துக்கொள்ளும். தமிழ் பேசும் பாண்டியர்களைக் கடுமையாகத் தாக்கி தமிழ் பேசும் சோழர்கள் துன்புறுத்தினார்கள். கன்னியாகுமரி வரை துரத்தினார்கள். பனங்காட்டுக்குள் வாழச் செய்தார்கள். அதே பாண்டியர்கள் பல தலைமுறைகளுக்குப் பிறகு மிக வெஞ்சினத்தோடு, சோழர்களின் பல்வேறு பெருமைகளை அழித்தார்கள். மிகச் சிறந்த தமிழர் நாகரிகம் ஒன்று 10 சதவிகிதம் மட்டும்தான் பார்க்க, கேட்கக் கிடைத்தன! இவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்த ராஜேந்திர சோழன் காஞ்சிபுரம் அருகே பிரம்மதேசம் என்ற ஊரில் இறந்துபோனான். அவன் கடைசியாகத் தரிசித்த ஒரு கோயில் இருக்கிறது. சுற்றிலும் பனைமரங்கள்; பொட்டல்காடு. ஏன் அந்தக் கோயிலுக்கு வந்து இறந்துபோனான் என்று மனம் பதறுகிறது. 'இவ்வளவு செல்வாக்கோடு வாழ்ந்துவிட்டு, அங்கே அந்தச் சிறிய கிராமத்தில் இறந்துபோனாயே... ஏனப்பா?’ என்று அலறத் தோன்றுகிறது!'' - கம்மியக் குரலில் முடிக்கிறார் பாலகுமாரன். -------------------------------------------------------------------------------------------------------------------- தில்லை க. குமரன் shared Vikatan's photo. / முகநூல் வழியாக /25 யூலை 2014 /
 6. விசுகு அண்ணாவின் மகனுக்கும் பெற்றோர்க்கும் எமது வாழ்த்துகள்!
 7. பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும். அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு. இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது. மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா. யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது. திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர். எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து. வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது. எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு. மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது. கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது. விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு. இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும். - எழுத்துச் சித்தர் பாலகுமாரன் // முகநூல் வழியாக‌ முகநூல் வழியாக‌
 8. மிக அருமையான பதிவு.ஆன்மீக அனுபவத்தின் ஆவணப்படுத்தலாகவும், எமது விடுதலைப்போராட்டவாழ்வு நிகழ்வுகள்,அனுபவங்களின் ஆவணப்படுத்தலாகவும் அமைகிறது.மிகுந்த பயனுள்ள செயற்பாடு.
 9. China’s President Xi Jinping will this year become the first Chinese head of state to visit Sri Lanka in three decades, underlining Beijing’s renewed push to deepen its strategic and economic presence in the neighbourhood and in the Indian Ocean. Mr. Xi’s visit was discussed in Beijing this week as Sri Lankan Minister of Economic Development Basil Rajapaksa, as the President’s Special Envoy, met with the Chinese leadership. The Chinese leader will become the first President to visit Sri Lanka since former leader Li Xiannian in 1986. His visit assumes significance in the context of strengthening ties between the two countries, with China investing heavily in the island nation. A $500 million- built port built by the Chinese was inaugurated in Colombo last year giving Beijing a strong foothold in one of the busiest international shipping routes in the world. With heavy investment in infrastructure, including in a massive port it helped build in Hambantota along Sri Lanka’s southern coast, China is said to have surpassed Japan and India as the biggest contributor to investments in the island nation. ‘The China card’ Foreign policy experts have often pointed to Sri Lanka playing the “China card” against India, which has invested in some key projects in the neighbouring country, including a massive housing project targeting 50,000 homes in the war-torn north that it is currently engaged in. For Chinese President Xi, Sri Lanka has become a particularly important country as a crucial point on his government’s signature “maritime silk road” economic initiative, which the President unveiled in October in a bid to boost maritime connectivity and economic ties in the neighbourhood. Mr. Xi is likely to stop in Colombo as he visits India later this year. Pakistan is also an expected destination, according to analysts, as Chinese leaders usually do not visit India without stopping in Pakistan subsequently, as Premier Li Keqiang did last year. Mr. Li’s visit to India last May was his first overseas visit after taking office. On Wednesday, Chinese Vice Premier Wang Yang discussed with Sri Lankan Minister Basil Rajapaksa on-going talks over a free trade agreement. He called on both sides “to begin negotiation on their proposed free trade agreement as soon as possible, encourage Chinese enterprises to expand investment in Sri Lanka and strengthen the strategic partnership of cooperation between the two countries”, the official Xinhua news agency quoted him as saying. Mr. Wang also said that the upcoming visit by Mr. Xi would be “a diplomatic landmark” for both countries, the Sri Lankan Embassy in Beijing quoted him as saying in a statement. Mr. Basil Rajapaksa hailed China’s contribution to Sri Lanka’s development, telling Commerce Minister Gao Hucheng that Colombo was willing to fast track free trade negotiations with China emerging as “the largest single development partner”. He also noted that there was a 140 per cent increase in tourist arrivals from China in the past year. http://www.thehindu.com/news/international/south-asia/xi-set-for-historic-sri-lanka-visit/article6178213.ece?homepage=true
 10. அமைதியை அடைவதற்கான அழைப்பு "அமைதி [சமாதானம்] , உங்கள் உள்ளேயே இருக்கிறது. அதனால் நீங்கள் எங்கு சென்றாலும் அந்த அமைதியும் உங்களுடனேயே வருகிறது. நீங்கள் ஒரு வசுவில் ஏறும்போதும் அந்த அமைதியும் உங்களுடனேயே வருகிறது. நீங்கள் போராடிக்கொண்டிருக்கும்போதும் அந்த அமைதி உங்களுடனேயே இருக்கிறது. நீங்கள் தூங்கிக்கொண்டிருக்கும்போதும் அந்த அமைதி உங்கள் உள்ளேயே இருக்கிறது. கற்பனைக்கு அப்பாற்பட்ட விரக்தியில் நீங்கள் இருக்கும்போதும் அந்த அமைதி உங்கள் உள்ளேயே இருக்கிறது. நீங்கள் செய்வது என்னவாக இருப்பினும், அந்த அமைதி உங்களுடன் வரமுடியாத எந்த இடத்திற்கும் உங்களால் போகமுடியாது. ஏனெனில் அது உங்கள் உள்ளேயே இருந்துகொண்டிருக்கிறது." ------ பிரேம் ராவத்[Prem Rawat ] நாம் எல்லோரும் நமது வாழ்க்கையில் ஓர் அமைதியை, ஆனந்தத்தை, மகிழ்ச்சியை, நிறைவைத் தேடிக்கொண்டிருக்கிறோம். பிரேம் ராவத் [மகராஜி ] அவர்கள் நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் அந்தப் பொருள் உங்கள் உள்ளேயே இருக்கிறது என்று சொல்வதுடன் நின்றுவிடாது உள்ளே சென்று அந்தப்பொருளுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான வழிமுறையையும் காட்டித் தருகிறார். அந்த வழிமுறையை அவர் " ஞானஅறிவு [ Knowledge ] " என்று அழைக்கிறார். பல நாடுகளுக்கும் சென்று பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு இந்த ஞானஅறிவை வழங்கிய பிரேம் ராவத் இப்போது ரொறன்ரோ வரவுள்ளார். அவர் 2014 யூலை 13ந்திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 7மணிக்கு, Sony Centre for the Performing Arts -- 1 Front St. East [at Yonge] இல் உரையாற்றுகிறார். அவரின் ஆங்கிலஉரை உடன் தமிழில் மொழிபெயர்க்கப்படும்.இந்த நிகழ்ச்சி முற்றிலும் இலவசமானது. ஆனால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தமது பெயர் விபரங்களை மின்னஞ்சல்வழியாக முன்கூட்டியே பதிவுசெய்தல் வேண்டும். அதற்கு கீழே தரப்படும் உரிய இணைப்பைச் சொடுக்கி அதிலுள்ள அறிவுறுத்தல்களின்படி அழைப்பை[invitation]க் கோரவும். உங்கள் வரவை உறுதிசெய்தபின்பு மின்னஞ்சல்மூலம் உங்களுக்கான நுழைவு அனுமதி அனுப்பிவைக்கப்படும். ரொறன்ரோ நிகழ்ச்சி முன்பதிவு http://www.wopg.org/en/confirmed/8021-toronto-2014 ---------------------------------------------------------------------- மூச்சின் இயல்பும் மகிமையும் http://www.yarl.com/forum3/index.php?showtopic=118007&hl= http://www.youtube.com/user/wopgyt
 11. தமிழர் தேசியத்தால் 'அப்பா" என பேரன்புடன் அழைக்கப்பட்ட மாமனிதர் இராஐரட்னம் இவர்களது மறைவு ஈழத்தமிழினத்திற்கு ஒரு பேரிழப்பாகும். அவரின் வாழ்க்கையில் இருந்து நாம் பலதைக் கற்றுக் கொள்ளவேண்டும். பெரும்பணம், கல்வி ,உச்சவேலைவாய்ப்பு என அனைத்தும் பெரிதாக அமைந்தாலும் சாமானியனாக இனப்பற்றுடன் உச்ச அர்ப்பணிப்புடன் இயங்குவது என்பதற்கு இவர் ஒரு வரலாற்றுப்புத்தகம். சிறப்புகள் மிகுந்த இந்த 'மாமனிதருக்கு' எமது வீரவணக்கங்கள். தலைவணங்கி அஞ்சலி செலுத்துகிறோம். அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
 12. மாமனிதர் இராஐரட்னம் அவர்களுக்கு இறுதி வணக்கம்: [Friday, 2014-06-20 20:11:40] ஈழத்தமிழினத்தின் உரிமைப் போரை மனதில் நிறுத்தி நீண்டகாலம் அயராது உழைத்த மாமனிதர் இராஐரட்னம் தனது 89வது வயதில் அமெரிக்காவில் காலமானார். தமிழீழத்தின் வடமராச்சி அல்வாயில் பிறந்தவர் இவர். சிங்கர் இராஐரட்னம் என ஆரம்ப காலத்தில் பலராலும் அறியப்பட்ட இராஐரட்னம் அவர்கள் தமிழர் உரிமைப்போர் தீவிரமடையாத தனது இளமைக் காலத்தில் இருந்தே ஈழத்தமிழர் விவகாரத்தில் அதீத அக்கறையும் நீண்ட தொலைநோக்குப் பார்வையும் கொண்டவராக செயற்பட்டார் என்பது பலரும் அறியாத அதியுட்சசெயற்பாடு. அத்தகைய ஒரு நிலையை அவர் கடைசி வரை பேனினார் என்பதே ஒரு வரலாற்று அதிசயம். படம் போடுவதற்காவும் அறிக்கைகள் விடுவதற்காகவும் அவர் செயற்பாடு என்றும் அமைந்ததில்லை. மிகவும் அமைதியானவர். அதிகம் பேசமாட்டார். ஆனால் தன்னைப்போல் சிந்திப்பவர்களுடன் மனம் திறந்து ஆழமாகப் பேசுவார். ஒவ்வொரு வார்த்தைகளுக்குள்ளும் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். இன்றைய இளையவர்கள் பலரும் இன்றையநிலை�� காலம் சார்ந்து சிந்திக்கத்தவறுபவற்றையே சிந்திக்கும் வல்லமை பெற்ற காலத்தையும் வென்றவர். இவரது ஆற்றலையும் ஆழுமையையும் தீர்க்கதரிசனத்தையும் இனம் கண்டு கொண்ட தமிழீழத் தேசியத்தலைமை இவர் மீது ஆழமான அன்பையும் பற்றுறுதியையும் நீண்ட தொடர்பாடலையும் கொண்டிருந்தது என்பதில் எவ்வித ஆச்சரியமுமில்லை. அதேபோன்று தமிழ் தாயின் தவப்புதல்வனான இவர் தமிழர் தேசம் பேரழிவை சந்தித்த போதெல்லாம் எவ்வித விளம்பரமுமின்றி தனி மனிதனாக மட்டுமன்றி குடும்பமாக தமிழர் தேசத்தை தாங்கி நின்ற வரலாறு யாரும் அறியாத உச்சம். இலங்கைத் தமிழ்ச் சங்கம் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் தலைவர் மட்டுமின்றி 2003ஆம் ஆண்டு இவருக்கு அச்சங்கம் வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கிக் கொளரவித்தமையையும் இங்கு நினைவில் கொள்ளலாம். இந்தியா என்பது வெறுத் தமிழகம் அல்ல அதையும் கடந்து வெல்லப்பட வேண்டியது என்பதை 10 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த பாரதீக ஐனதா ஆட்சிக்காலத்தில் சாதித்துக் காட்டியவர். அது குறித்த பார்வை வெற்றியை நோக்கிய உபாயங்கள்�� அதை வென்றெடுப்பதற்கான கடினமான உழைப்பு அனைத்தும் ஒன்று திரண்ட ஒரு புரட்சித் தமிழனே மாமனிதர் இராஐரட்னம் அவர்கள். தமிழர் வரலாறு தமிழர் உரிமைப்போராட்டத்தின் நியாயத்தன்மை குறித்து புத்தகம் கட்டுரைகள் விளக்கக்குறிப்பேடுகள் என பலவற்றை எழுதி தமிழர் அமைப்புக்களின் பெயரில் தானே அச்சிட்டு வெளியிட்டார். இவரது துணைவியாரின் ஆழமான தமிழினப்பற்றே இவர் தனது இனப்பணியை முழுமையாகச் செய்வதற்கும் இவரது பிள்ளைகளும் இனப்பற்றுடன் இயங்குவதற்கும் பாரிய பின்புலமான அமைந்தது என்பதை இவ்விடத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னரும்�� தனது இனத்தின் மேல் கொண்ட உச்சமான பற்றுறுதி காரணமான தமிழர் தாயகத்தில் பல பாடசாலைகளில் கணனிக்கூட அமைப்பு மற்றும் வைத்தியசாலைகளின் மேம்பாடு தொழில்துறை வளர்ச்சி என பல திட்டங்களை தனது மக்களுக்காக தானாகவே செய்து கொடுத்தார். இனம் உரிமை சார்ந்த பயணத்தினால் இவரது குடும்பம் பல்வேறு உச்சசவால்களையும் சரிவுகளையும் சந்தித்தாலும் அது குறித்த எவ்வித வருத்தத்தையும் இவரோ இவரது குடும்பமோ என்றும் வெளியிட்டதில்லை. மாறாக முன்னரை விடப் பலமடங்கு என்றும் தொண்டாற்றுபவர்களாகவே திகழ்திருக்கின்றார்கள். தமிழர் தேசியத்தால் 'அப்பா" என பேரன்புடன் அழைக்கப்பட்ட மாமனிதர் இராஐரட்னம் இவர்களது மறைவு ஈழத்தமிழினத்திற்கு ஒரு பேரிழப்பாகும். அவரின் வாழ்க்கையில் இருந்து நாம் பலதைக் கற்றுக் கொள்ளவேண்டும். பெரும்பணம் கல்வி உச்சவேலைவாய்ப்பு என அனைத்தும் பெரிதாக அமைந்தாலும் சாமானியனாக இனப்பற்றுடன் உச்ச அர்ப்பணிப்புடன் இயங்குவது என்பதற்கு இவர் ஒரு வரலாற்றுப்புத்தகம். இவரது இழப்பால் துயருறும் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் துயரில் ஈழத்தமிழினமும் முழுமையான இணைந்து கொள்கிறது. மாமனிதர்கள் மரணத்தை வென்றவர்கள். என்றும் எம் மனங்களில் வாழ்வார்கள். Mamanithar J.M. Rajaratnam, a graduate of University of Ceylon, was the winner of a five year open Government Scholarship for studies in Accounting in the UK. He was the CEO and Chairman Board of Directors of Singer Company's operations in Ceylon, was transferred to the US head office and appointed Vice President of Finance and Accounting of the International Group of the Corporation. Mamanithar J.M. Rajaratnam has been included in the Marquis Who's Who in America. After his retirement, he works as a Consultant to the World Bank, Member of the Roster of Experts on matters related to transnational corporations of the United Nations and a Member of the US Executive Volunteer Service Corps. Mamanithar J.M. Rajaratnam lobbied governments and international bodies for the Eelam Tamil cause, has published "Tamils of Sri Lanka - The quest for human dignity" issued by the Tamil Information Center of UK. He has spoken at various conventions in the USA, Canada, the UK and India on the Tamil Eelam cause. http://www.seithy.com/breifNews.php?newsID=111701&category=TamilNews&language=tamil http://sangam.org/loss-president-jm-rajaratnam/
 13. கோவை: மறைந்த திரைப்பட இயக்குநர் மணிவண்ணன் பன்முகத் தன்மை கொண்ட கலைஞராகத் திகழ்ந்தவர் என நடிகர் சத்யராஜ் தெரிவித்தார். உலக மனிதாபிமானக் கழகம் சார்பில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இயக்குநர் மணிவண்ணன் எழுதிய கவிதை தொகுப்பான "மணித் துளிகள்' என்ற நூலை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட, நடிகர் சத்யராஜ் பெற்றுக் கொண்டார். மணிவண்ணன் எனும் பன்முகக் கலைஞன்!- சத்யராஜ் புகழாரம் இந்நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசியது: பெரியார், மார்க்ஸ் ஆகியோர் சமுதாய மாற்றத்திற்காகப் பாடுபட்ட புரட்சியாளர்கள். அவர்களது சிந்தனை வழியில் வாழ்ந்து மறைந்தவர் இயக்குநர் மணிவண்ணன். தனிமனித லட்சியங்களைத் தவிர்த்து சமுதாய மாற்றத்திற்கான லட்சியங்களுடன் வாழ்ந்த அவர், திரைப்பட இயக்குநர், திரைக்கதை, வசனகர்த்தா, நகைச்சுவையாளர் என பன்முக சிந்தனையாளராகத் திகழ்ந்தவர். இயக்குநர் மணிவண்ணன் வாழ்ந்த வரை அவர் கவிஞர் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. திரைப்பட நடிகராக என்னை உருவாக்கியதில் இயக்குநர் மணிவண்ணனுக்கு மிகப் பெரிய பங்கு உள்ளது. ஒருவர் சமுதாயத்தில் கொண்டுள்ள சிந்தனையை குடும்பத்தில் செயல்படுத்துவது கடினமானது. ஆனால் குடும்ப வாழ்க்கையிலும் அதனைச் செயல்படுத்தியவர் மணிவண்ணன்,"என்றார். எழுத்தாளர் பாமரன் பேசுகையில், "இயக்குநர் மணிவண்ணன் மாற்றுக் கொள்கை கொண்டவர்களையும் மதிக்கக் கூடியவராகத் திகழ்ந்தவர். தனது கொள்கையில் இறுதிவரை சமரசம் செய்து கொள்ளாதவராக அவர் இருந்தார்," என்றார். Read more at: http://tamil.oneindia.in/movies/news/manivannan-was-multi-faceted-creator-sathyaraj-203674.html
 14. "எமக்காக தன்னை அர்ப்பணித்த எல்லா வல்லமையும் இருந்தும் அதைப்பாவியாது தர்மம் வெல்லும் என வலியுறுத்துவதற்காக கைகட்டி நின்ற அவர் உயிருடன் தப்பியிருக்கணும் அவர் உயிருடன் வாழணும் என்று எல்லோரும் விரும்புகிறார் ஆசைப்படுகிறார்கள். இது மக்களின் நம்பிக்கை விருப்பம் ஆசை." இந்த 'நம்பிக்கை, விருப்பம், ஆசை' என்பவற்றை நாம் அதன் அடுத்த உயர்நிலைக்கு எடுத்துச் செல்லவேண்டும்.அதற்கான வழிமுறை நமக்குத்தெரிந்திருந்தும் நாம் அதை உரிய ஈடுபாட்டுடன் செய்வதாக இல்லை. அந்த வழிபாட்டை, வழிமுறையை நாம் மேற்கொண்டால்,நாம் அதன் மயமானால், அதுவே ஆனால், நாம் விரைவாக வென்றுவிடுவோம்.
 15. தாயகக் கனவுகளுடன் ....... [31] "காலமும், கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரித்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது. எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும், தமிழகத் தலைவர்களுக்கும், இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்." "பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்ற போதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம்." "எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி, சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்." "இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், எந்தக் கோடியில் வளர்ந்தாலும், எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன். அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக் கொள்வோமாக.புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் --------------------------------------- மு டி வ டை ந் த து -----------------------------------------------------------------------------