அக்னியஷ்த்ரா

கருத்துக்கள உறவுகள்
 • Content Count

  893
 • Joined

 • Last visited

 • Days Won

  2

அக்னியஷ்த்ரா last won the day on January 9 2018

அக்னியஷ்த்ரா had the most liked content!

Community Reputation

416 ஒளி

About அக்னியஷ்த்ரா

 • Rank
  உறுப்பினர்
 • Birthday 01/04/1987

Profile Information

 • Gender
  Male
 • Location
  தீயின் தணலில்
 • Interests
  Programming,Photography

Recent Profile Visitors

2,371 profile views
 1. கொஞ்சம் பொறுங்கோ ... சுமந்திரன் இன்னும் இதைப்பற்றி வாய் திறக்கவில்லை பார்த்தியளோ ....அவர் வாய் திறக்கட்டும் அப்புறம் பாருங்கோ யாழ் கள நிபுணர்களின் படையெடுப்பை , ஒருவேளை இவரும் மரித்த விசுவாசியாக இருப்பாரோ....அது சரி நமக்கேன் வம்பு
 2. என்ன கன்றாவி இது ....? ஆள் சரமாரியா அடிச்சு விட்டிருக்கிற மாதிரி தெரியுதே ....
 3. அதை விட மோசம் குடித்து விட்டு சைக்கிள் ,மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் முந்தைய நாள் எனது காரிலும் சிறு விபத்து , போதை தலைக்கேறியதில் பின்புறம் பார்க்காமல் காரின் முன் சைக்கிளுடன் பாய்ந்துவிட்டார் கணப்பொழுதில் சடன் பிரேக் அடித்தும் கார் தட்டி விட்டுவிட்டது ,காலில் சிறுகாயத்துடன் தப்பிவிட்டார் சுற்றி இருந்தவர்கள் காரைப்பர்த்துவிட்டு அவருக்கு ஏதாவது என்னிடமிருந்து பிடுங்கி கொடுக்க முயன்றும் DASH CAM வீடியோ என்னை காப்பாற்றிவிட்டது. இப்போது இப்படியாக முழு நேரத்தொழிலிலும் இறங்கியிருக்கிறார்கள் இலங்கை குடி மக்கள் உயிரை பணயம் வைத்து நல்ல உயர் சாதிக்கார் முன் பாய்வது ,பிறகு அவனிடமிருந்து நன்றாக கறப்பது ,
 4. ஐயோ சும்மாயிருங்கப்பா ...சுமந்திரன் போய் அடுத்து வந்து எங்கட தலையில் மிளகாய் அரைக்கப்போகும் நரேந்திரனுக்கும், அதற்க்கு பிறகு வரப்போகும் குபேந்திரனுக்கும் வாக்குப்போட தயாராகிட்டோம் ...இதுக்குள்ள நீங்கவேற இந்தாள்ற அலம்பலை பெரிசா எடுத்துகொண்டு
 5. பாராட்டுகள் சிறியண்ணைக்கும் அவரது பிள்ளைகளுக்கும் புலம்பெயர் இளம் தலைமுறை இப்படித்தான் கல்விகற்று சிறந்து அவர்கள்தம் நாடுகளில் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக வளரவேண்டும் ஒருகாலத்தில் இலங்கையின் அரசியலில் செல்வாக்கு செலுத்தும் காரணியாக இவர்கள் மாறும் காலம் தூரத்திலில்லை ....
 6. இவையனைத்தும் தெரிந்துகொண்டே கூத்தமைபிற்கு திரும்ப திரும்ப வாக்களித்து நீங்களும் நானும் கண்டதென்ன ....? நான் ஒருகட்டத்திற்கு மேல் தெளிவடைந்து விட்டேன் ஆனால் பெரும்பாலான கிழக்கர் இன்னும் கூத்தமைப்பை பிடித்து தொங்கி கோவணத்தையும் உருவிக்கொடுக்க ஆசைப்படும் போது நாம் என்ன செய்வது... விதி விட்ட வழி என்று வேடிக்கை பார்ப்பதை தவிர
 7. எது எப்படியாக இருந்தாலும் ...நிர்வாணப்படுத்தியது மாபெரும்தவறு .... 1983 இல் தமிழ் மகன் ஒருவரை நிர்வாணப்படுத்தி சுற்றி நின்று பரிகசித்து புகைப்படமெடுத்து மகிழ்ந்த சிங்களவர்களுக்கும் எமக்கும் என்ன வித்தியாசம். எனக்கென்னவோ கும்மானின் எசமானுக்கு அவசரமாக நாடாளவேண்டியுள்ளதால் , தமிழ் முஸ்லிம்களிடம் குரோதத்தை கிளறி விட்டு எசமான் பாசத்தை காட்டுகிறாரோ என்று தோன்றுகிறது
 8. திருவாளர் யூட் அவர்களே அநேகமாக உங்களுக்கு வேறேதோ பிரச்சினை நியானியுடன் இருக்கிறது என்று நினைக்கிறேன். உங்களுக்கு கருத்தெழுதியது நான் எனக்கு பதிலெழுவதை விடுத்து நியானியை ஏன் நோண்டுகிறீர்கள். நீங்கள் நடந்துகொள்வதை பார்த்தால் ஒண்ணாம் கிளாஸ் மாணவன் டீச்சர் இவன் என்னை கிள்ளுறான் ...டீச்சர் இவன் எனக்கு அடிக்கிறான் என்று ஒரே காம்ப்ளயின்ட் பண்ணும் சிறுவன் ஞாபகம் தான் வருகிறது. நீங்கள் நியானியுடன் தனிப்பட்ட விடயமாக பேசவேண்டியிருந்தால் அதற்க்கு தனி மடலை உபயோகப்படுத்தவும்
 9. கொழும்பான் அண்ணை இலங்கை தன்னிறைவு கண்ட நாடல்ல ...அமெரிக்க டாலர் அங்கே உயர்ந்தால் இங்கே கதறி ஒப்பாரி ஓலம் வைக்கும் அளவுக்கு மற்றைய நாடுகளில் தங்கியிருக்கும் நாடு, கிரீசும் இப்படித்தான் எதை பற்றியும் யோசிக்காமல் இருந்து தற்போது ஒரு சாண்ட்விட்ச் இற்கு விபச்சாரம் செய்யும் நிலையில் இருக்கிறது. இலங்கையில் சனம் வாழத்தான் போகிறது அதை மறுக்க வில்லை ஆனால் இன்னும் சில வருடங்களில் அவர்களது வாழ்க்கைத்தரம், செலவு எந்தளவில் இருக்கும் என்பதே முன்னுள்ள கேள்வி. ஏற்க்கனவே இலங்கையின் credit rating படு பாதாளத்தில் இன்னும் சில வருடங்களுக்கு பெரிய மாற்றம் வர வழியில்லை .
 10. தலைவர் ஜூட் நக்கல் ,நளினம் கலந்து ஊர் பேச்சுவழக்கில் எழுதுவதை கூட கண்டுபிடிக்க முடியாமல் அறிவுக்கொள்ளளவு வரை போனது நீங்கள் , ஐக்கிய அமெரிக்க வரை கடன்வாங்க போன திரியில் ஐக்கிய அமெரிக்காவே எவ்வளவு பெரிய கடன்காரன் என்று வெட்டி ஓட்டிவிட்டு இண்டர்நேசனல் பாலிடிக்ஸ் , வேர்ல்ட் லெவல் எகோநோமிக்ஸ் , பினான்சியல் பார்காஸ்டிங் என்று வாயில் நுழையாத வார்த்தைகளை எல்லாம் துணைக்கு கூப்பிடுகிறீர்கள். எனக்கு நிர்வாகத்தின் முடிவில் எந்த கருத்துவேறுபாடுமில்லை எனது கருத்து நீக்கப்பட்டிருந்தாலும் அதனை அப்படியே அசால்ட்டாக கடந்து தான் சென்றிருப்பேன் உறவுகளுக்கு முதலில் எனது தொழிலை நன்றாக அறியத்தந்தால் அதன்பிறகு அதன் தொடர்பான எமது சமூகத்தின் பிற்போக்குத்தனத்தின் பாதிப்பையும் குறிப்பிட்டால் தெளிவாக விளங்கும் என்று நினைக்கிறேன் . நான் சிங்கையில் உள்ள ஒரு நிறுவனத்த்தில் முழுநேர மென்பொருள் பொறியியலாளர் ஆக இருந்தேன் அவர்களுடன் தொழில் செய்த காலத்தில் எனது நேர்த்தியும் ,நேர முகாமைத்துவமும் ,வருவிளைவு (Out put) உம் பிடித்து போனதால் இந்தியாவில் புதிய காரியாலயம் துவங்க இருந்த நோக்கத்தை மாற்றி இலங்கையை நோக்கி அவர்களது கவனத்தை திருப்பினர், எனவே புதிய காரியாலயத்துக்குரிய திறமைகளை அடையாளம் காண அதுவும் கிழக்கு மாகாணத்தை முன்னேற்றும் நோக்கத்துடன் சிங்கையில் இருந்து வந்து வீட்டிலிருந்தவாறே remote அக அவர்களுடன் பணிபுரிந்து வந்தேன். இந்தகாலத்தில் தான் ஒரு சில freshers ஐ இணைத்துக்கொண்டு ,கொழும்பில் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனம் இவர்களை போன்றவர்களுக்கு வழங்கும் சம்பளத்தை போல் இரு மடங்கு சம்பளமும் வழங்கி கொஞ்சம் , கொஞ்சமாக வளரத்தொடங்கினோம். ஆனால் இந்த freshers இற்கு இலகுவாக கிடைத்த வாய்ப்பு என்பதாலோ என்னவோ அவர்களுக்கு அதன் தார்ப்பரியம் புரியவில்லை , நேரத்தை வீணடிக்க தொடங்கினர் விளைவு Out Put இல்லை, வேலையை விட்டு தூக்க வேண்டி வந்தது , இதற்குள் நான் தொடர்ந்து இவ்வாறு வேலை செய்துகொண்டிருந்தது மூலம் இன்னும் பிற்படுத்தப்பட்ட ,கிணற்று தவளைகளான எமது சமூகத்தின் அடுத்த விளைவை நான் சந்திக்க நேர்ந்தது. திருமண பேச்சுக்கள் தள்ளிப்போக தொடங்கின ,சில ஆரம்பக்கட்டத்திலே உடையத்தொடங்கின ஏன் என்று நான் தேடியபோது பையனுக்கு வேலை இல்லையாம் .... வீட்டிலிருந்து கொண்டு தான் வேலை என்று சொல்லுகிறார்கள் ...அதெப்படி வீட்டிலிருந்து வேலை செய்வது ...? பையனுக்கு நிறைய சொந்தங்கள் வெளிநாட்டிலிருப்பதாலும் அம்மா வேற டபிள் பென்ஷன் என்பதாலும் பந்தாவாக ஒரு காரை வச்சு சமாளிக்கிறான் மற்றப்படிக்கு வேறொன்றுமில்லை . இப்படி பலவிடையங்கள் பெண் வீட்டாரின் காதுகளுக்கு போய் சேர்ந்தால் அவர்கள் என்ன செய்வார்கள், இப்படி தடுமாறிக்கொண்டு இருக்கும் போது இலங்கை அரசாங்கமும் அவர்களுடைய பங்கிற்கு (அதுதான் திறைசேரி எப்போதோ காலியாகிவிட்டதே) நிறுவனங்கள் மீதான புதிய வரிகளை (new tax slabs and with holding tax for small and medium industries ) என்று ஆரம்பித்து சிங்கையில் உள்ள எனது தாய் நிறுவனத்திற்கு B.P எகிற வைத்தனர். போதாக்குறைக்கு மகிந்த மாமாவின் வருகை எல்லா புதிய முதலீட்டாளர்களுக்கும் வயிற்றில் புளியை கரைத்ததா....? எனது நிறுவனமும் சிவாஜி நீங்கள் இலங்கையில் கிழித்தது போதும் திரும்ப சிங்கைக்கே வந்திருங்க என்று மீள அழைத்து விட்டார்கள். விளைவு சிவாஜி காயிங் பேக் டு சிங்கை ...அம்புட்டுதான்
 11. அது ப்ளடி ஸ்ரிலங்கன்ஸ் இனது பூர்வ ஜென்ம புண்ணியம் ... அதுதான் நாமளும் ஓடுறம் நாட்டை விட்டு ....விட்டா கோவணத்தையும் உருவாமல் விடமாட்டாங்கள் போல இருக்கு பெப் 11 பறப்பு ....
 12. தலைவர் இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்ர்கள். அமெரிக்கா ஆகப்பெரிய பெக்கர் என்றா ....? அப்படி ஆகப்பெரிய பெக்கர் இடமே திருவோடு ஏந்தும் இலங்கை திருவாளர்கள் எவ்வளவு மாகா மட்டமான பெக்கர்ஸ் ஆ இருப்பினம். அதுசரி நீங்கள் ஒருகாலத்தில் அமெரிக்காவை தமிழர்கள் கிஸ் அடித்திருந்தால் தீர்வு ஜம்மென்று குதித்திருக்கும் என்று அடிச்சு விட்ட ஆள் எலுவா .....? இந்த அமெரிக்காவையா தமிழர்களை கிஸ் அடிக்க சொன்னீங்கோ ....நல்லவேளை தமிழர்கள் செய்யவில்லை இல்லாட்டில் உதட்டில் குஷ்டம் தான் வந்திருக்கும்
 13. எடுப்பது பிச்சை ...அதற்குள் எகத்தாளம் ஊரில சொல்லுவினம் பின்னுக்கு சொறிய நகமில்லைஎன்றாலும் வாய்க்கொழுப்பு குறையாது என்று இலங்கை அரசியல் வாதிகளுக்கு இது நன்றாகவே பொருந்தும்
 14. ஹலோ ஜஸ்டின் அண்ணை எப்பிடி சுகம் ......? நல்ல ஆள் ஐயா நீங்கள் போவதென்றால் இப்பிடி ஒரேயடியாகவா ஓடிவிடுவ்து .... திரும்ப கண்டதில் ரொம்ப சந்தோசம்