Jump to content

அக்னியஷ்த்ரா

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  1675
 • Joined

 • Last visited

 • Days Won

  9

Everything posted by அக்னியஷ்த்ரா

 1. உதுக்குத்தான் நானும், கிருபண்ணையும் சேர்ந்து அம்பிகா அன்ரியை கொண்டுவாங்கோ என்று வருடக்கணக்காக காட்டுக்கத்தல் கத்திறோம் ...கேட்டால்தானே அம்பிகா அன்ரி மட்டும் உள்ள இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா ....?
 2. வாசக உள்ளங்களிடம் மன்னிப்பு கெரோனாவால் பாதிக்கப்பட்டு சுய தனிமைப்படுத்தலில் உள்ளதால் தொடர்ந்து எழுத முடியவில்லை. முடிந்தவரை மிக விரைவில் எழுத முயற்சிக்கிறேன்
 3. சரித்திரம் - 2 சிறுவயதினில் இவனது வீட்டிற்கு வரும்போதெல்லாம் இவனை மடியில் தூக்கி வைத்து கொஞ்சி பாசத்தை பொழிந்த இவனது மாமியே இன்று இவனை நடத்தும் முறை அவனது மனதை பிழிந்தது. குளித்து முடிக்கமுன் பிரதான நீர்க்குழாயை மூடுவதும், இரவு 10 மணிக்குப்பின் இவனது அறைக்குரிய சுற்றுடைப்பானை அணைத்துவிடுவதும் இப்படி இவன் அனுபவிக்கும் கொடுமைகளை மனது அசைபோட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக "இந்த சனியன் எப்போது இங்கேயிருந்து வெளியேறுமோ" என்று இவன் காது படவே பேசிக்கொண்டது இவனால் தாங்கமுடியாத சம்பவமாகி அது ஒரு வடுவாகவே பதிந்தும் விட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் இனி இந்த இடத்திலிருந்து வெளியேறுவதே நல்லது நமது குறைந்த பட்ச மரியாதையையாவது காப்பாற்றிக்கொள்வோம் என்று முடிவெடுத்ததன் வெளிப்பாடே இந்த தேடல். ஒருவாரியாக இன்றைய இலத்திரனியல் நேரத்தாளினை பூர்த்திசெய்தாகிவிட்டது, இனி மென்பொருள் ஒருங்கிணைப்பு சோதனையாளர் அவரது வழு கண்டுப்பிடிப்புகளை பதிவேற்றும் வரை அவனுக்கு சிறு நிம்மதி வேலையில் மூழ்கியிருந்தவன் சட்டென்று நினைவு வந்தவனாக மணிக்கட்டை திருப்பிப்பார்த்தான் கடிகார முள் மணி நான்கை நெருங்கிக்கொண்டிருந்தது. தனது கணனி மேசையிருந்து விடுபட்டு அவனது மேலாளரின் அறையின் கதவினை தட்டினான். வரலாம் என்ற ஆங்கில உச்சரிப்பு கதவின் சாரளம் ஊடே வரவும் திறந்து கொண்டு உள்ளே சென்றான். "எக்ஸ்கியூஸ் மீ சேர்" என்ற மெதுவான வார்த்தையை கேட்ட அவனது மேலாளர் கணணிக்குள் புதைத்திருந்த தலையை விடுவித்துக்கொண்டு நிமிர்ந்து பார்வையினாலேயே அவனை அளந்தார். சேர் ஒரு வன் அவர் பெர்மிசன் வேணும், புது ரூம் ரெண்டுக்கு பார்க்கிறேன் 5 மணிக்கு வரச்சொல்லியிருக்கிறார்கள். கேட்டுக்கொண்டிருந்த மேலாளர் "ஹவ் அபௌட் தி டாஸ்க் லிஸ்ட்" என்று வரவேண்டிய இடத்திற்கு தயக்கமே இல்லாமல் பாய்ந்தார். அவனும் அதுதானே பயலாவது கேட்டவுடன் தூக்கி கொடுப்பதாவது என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே "ஐ ஹாவ் கொம்பிலீட்டட் இட் அண்ட் ரிலீஸ்ட் போர் கியூ ஏ டெஸ்டிங்: என்று முடித்தான். திருப்தியுடன் தலையை ஆட்டிய மேலாளர் "ஓகே யு கேன் டேக் தி பிரேக்" என்று முடித்துவிட்டு இவனது பதிலுக்கு காத்திராமல் கணனியினுள் மீண்டும் தலையை புதைத்தார். "தங் யூ சேர்" என்று விட்டு அறையை விட்டு வெளியே வந்த அவன் ஓட்டமும் நடையுமாக அலுவலகத்தை விட்டு வெளியே வந்து எதிரே வந்துகொண்டிருந்த முச்சக்கரவண்டியை நோக்கி கையை நீட்டினான் தலையை வெளியே நீட்டிய சாரதி சேர் எங்க போகவேணும் என்று சிங்களத்தில் கேட்கவும். தெஹிவளை மேம்பாலம் அருகில் என்று முடித்தான் . சாரதி "சேர் மீட்டர் போடல ஒரு 300 ரூபாய் கொடுங்க" என்று அவன் தலையை சொறியவும், 300 அதிகம் 250 தாறன் ஆனால் இவ்வளவு விரைவாக கொண்டு செல்லமுடியுமோ அவ்வளவு விரைவாக போகவேண்டும் என்று இவன் சொல்லவும். ஏறுங்கோ சேர் என்று சிரித்துக்கொண்டே முச்சக்கரவண்டியின் இக்னிஷியனை உசுப்பினான், சற்றைக்கெல்லாம் டுப்ளிகேஷன் தெருவில் முச்சக்கரவண்டி சீறத்தொடங்கியது. பாம்பு போவதுபோல வளைந்து நெளிந்து முச்சக்கரவண்டி எடுத்த வேகத்தில் எதற்க்காக இவனிடம் வேகமாக செல்லச் சொன்னோமோ ..? பாவி நமக்கே பால் ஊத்திவிடுவான் போல என்று தன்னைத்தானே நொந்துகொண்டான் அவன். நேரம் 4:50 காலிவீதி போக்குவரத்து நெரிசலை முச்சக்கரவண்டியின் வேகத்தில் லாவகமாக கடந்து நெருங்கியிருந்தான் அவன். இன்னும் மார்க்கஸை காணோம் சரி கொஞ்சம் பொறுக்கலாம் என்று நினைத்த மாத்திரத்தில் கைபேசி கிறுகிறுத்தது மார்க்கஸிடமிருந்து ஒரு குறுந்தகவல், வந்துகொண்டேயிருக்கிறேன் இன்னும் 5 நிமிடத்தில் நெருங்கிவிடுவேன் என்று இருந்தது. சரியாக சொன்ன நேரத்தில் பேருந்து நிறுத்தத்திலிருந்து வெளிப்பட்டான் மார்க்கஸ், கையை அசைத்தவாறே நெருங்கியவன் "என்ன மச்சி ரெடியா வா போகலாம் நான் ஏற்கனவே சொல்லிட்டேன், இரண்டு அறைகளில் இரண்டு இடங்கள் மட்டுமே காலியாக இருக்கிறதாம், ஒன்று முதலாம் மாடியிலும் மற்றயது அதே தளத்திலும் தான் இருக்கிறதாம். இரண்டிலும் ஒவ்வொரொருவர் வீதம் இருப்பதால் நீ சேர்ந்துதான் தங்கவேண்டும் உனக்கு சம்மதம் தானே என்று கேட்டான். இவனோ தனது நிலையை முழுவதுமாக மார்க்கசிடம் சொல்லவில்லையென்பதால் மார்க்கசும் பயல் எதற்கும் தயார் என்பதை அறியவில்லை. சிரித்துக்கொண்டே அதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை மச்சி என்று சொல்லிவிட்டு இன்னுமோர் முச்சக்கரவண்டியை இடை மறித்து மார்க்கசுடன் அதில் ஏறிக்கொண்டான் முகவரியை முச்சக்கரவண்டி சாரதியிடம் சொல்லவும் அவனும் கல்கிஸ்ஸை பக்கம் முச்சக்கரவண்டியை விரட்டத்தொடங்கினான், சரியாக ஒரு 15 நிமிட பயணத்தில் கொஞ்சம் ஒதுக்குப்புறமாக கடற்கரையை அண்டியாதாக ஒரு பெரிய கட்டிடம் தெரியத்தொடங்கியது, மார்க்கஸ் இவனை உசுப்பி அந்த கட்டிடத்தை காட்டினான். கொஞ்சம் வெளிறிப்போய் அழுக்குப்படிந்திருந்த அந்த கட்டிடம் பார்த்த மாத்திரத்திலேயே ஒரு பழைய கட்டிடம் என்று மிக இலகுவாக வெளிக்காட்டிக்கொண்டது. கட்டிடத்தின் முன்னே இறங்கிய இருவரும் இறங்கவும் காவலாளி வெளிப்படவும் சரியாக இருந்தது, நாணயத்தாள்களை எண்ணி இவன் முச்சக்கரவண்டி சாரதியிடம் கொடுத்துக்கொண்டிருக்க மார்க்ஸோ காவலாளியுடன் எதுவோ பேசிக்கொண்டிருந்தான். சரியாக இவன் திரும்ப மார்கசோ உரிமையாளர் உள்ளே தான் இருக்கிறாராம் முதலாம் மாடியில் ஏறி போகட்டுமாம் என்று கையை வாயிலை நோக்கிகாட்டினான். காவலாளியும் ஒரு முறைப்புடன் இருவரையும் ஏறியிறங்க பார்த்துக்கொண்டே கதவை திறந்து விட இருவரும் உள்நுழைந்தனர் ....(தொடரும்)
 4. வெழுவை வாங்குவது யாரென்று தெரியுமே நல்லூரானை இடித்து மலசலகூடம் கட்டுவேன் என்று கூவிய அதே குடு குப்பாடியன் சரியான ஆளுக்கு தான் வெளுத்திருக்கினம்
 5. கவனிக்கவில்லை....அண்ணை நிர்வாகத்தின் கவனத்திற்கு...தயை கூர்ந்து இந்த திரியை 24 ம் அகவை சுய ஆக்கங்களிற்குள் செருகி விடவும்
 6. தோள்பட்டையில் திடீரென ஒரு கை விழுந்ததும் திடுக்கிட்டு திரும்பினான் அவன். அங்கே மார்க்கஸ் சிரித்துக்கொண்டு நிற்க அவனோ "டேய் உன்னைத்தான் பார்த்துக்கொண்டு நிண்டனான். கோல் எடுப்பம் என்று போனை தூக்க நீ வந்திட்டாய், சரி நான் கேட்டவிடயம் எப்படி ஏதாச்சும் சிக்கிச்சா....?" என்று முடித்தான். மார்க்கஸோ தலையை மெதுவாக ஆட்டிவிட்டு மச்சான் இங்க வெக்கை அதிகமாக இருக்கு வா கூலாக ஏதாவது சாப்பிட்டுக்கொண்டு கதைப்பம் என்று அருகே இருந்த கூல் பாரினுள் நுழைய இவனும் தொற்றிக்கொண்டான். இரண்டு பழரச கோப்பைகளை மேசையில் வைத்துக்கொண்டு மெதுவாக உறிஞ்சியவாறே இருவரும் பேச ஆரம்பித்தனர். மார்க்கஸ் ஆரம்பித்தான் "மச்சான் உன்னோட பட்ஜெட்டிற்கு கொழும்பில் இடம் பார்ப்பது கஷ்ட்டம், மாத வாடகைக்கே உன்னுடைய முழு சம்பளம் பத்தாது, நானும் தேடி தேடி களைச்சு போயிட்டன் ஆனால் ஒரு இடமிருக்கு தெஹிவளை பக்கம் கொஞ்சம் ஒதுக்குபுறமாக இருக்கும். நிறைய சிறிய சிறிய அறைகள் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார்கள், நம்மை போல நிறைய பேர் அங்கே தங்கி இருக்கிறார்கள் தனி அறை ஏழாயிரத்து ஐநூறு வரும், இன்னொருவருடன் சேர்ந்து தங்கினால் நான்காயிரத்திற்குள் முடிக்கலாம். கரண்ட் செலவை அவர்களே பார்த்து கொள்வார்கள். உனக்கு சம்மதம் என்றால் சொல் நாளைக்கே போய் பார்த்து விட்டு வரலாம்". மறுபேச்சின்றி தலையை ஆட்டினான் அவன். மாமியின் வீட்டில் நான் படும் அவஸ்தைகளுக்கு எப்படியாவது முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று மனதிற்குள் நினைத்தவாறு. "சரி மச்சி நாளைக்கு மாலை 5 மணி போல போய் பார்க்கலாம் தானே என்று கேட்கவும் மார்க்கஸ்.. ம்ம் நான் அவர்களுக்கு தகவல் சொல்லிவிடுகிறேன் நாளைக்கு போவோம்" என்று சொல்லிக்கொண்டே இருவரும் எழுந்து கடையை விட்டு வெளியேறினர். மார்க்கஸ் கையினால் ஐந்து என்று சைகை செய்துவிட்டு திரும்பி வேகமாக நடந்து இவனது பார்வையை விட்டு மறையவும் இவனும் எதிர்திசையில் நடக்கலானான். மனமோ மிகுதியாக இருந்தவற்றை அசைபோடும் வேலையிலிறங்கியது..................(தொடரும்)
 7. "கொழும்பிற்கு வந்து இரண்டு மாதங்களாகிவிட்டது , மாதம் பதினைந்தாயிரம் ரூபாய்க்குள் வண்டியை ஓட்டவேண்டும். வேலைக்கு சேர்ந்த பின்னும் செலவிற்காக வீட்டில் தொங்கிக்கொண்டிருக்க முடியாது. மாமியின் வீடாக இருந்தாலும் வேண்டா விருந்தாளியாக மாறிவிடும் முன் நானாகவே வேறு ஒரு இடத்திற்கு சென்றுவிடுவது நல்லது....ம் பார்க்கலாம் மார்க்கஸ் என்ன சொல்கிறான் என்று" என்றவாறு மனதிற்குள் தன்னுடனேயே பேசிக்கொண்டு பாதையின் இருபுறமும் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான் அவன். மணிக்கட்டிலிருந்த கடிகாரமோ விநாடியை நிமிடங்களாக மாற்றிக்கொண்டிருக்க, இந்த மார்க்கஸை மட்டும் காணவில்லை. தொலைபேசியை சட்டைப்பையில் இருந்து உருவி உயிர்கொடுத்து மார்க்கஸ் எனும் பெயரை தேடி அழைப்பை ஏற்படுத்திய மறுகணமே அங்கு ......தொடரும் யாழ் 24 ம் அகவையை சிறப்பிக்கும் முகமாக அக்னி எழுதும் அமானுஷ்ய தொடர்
 8. திரும்ப திரும்ப சொல்வது ஒன்றுதான் உங்களுக்கு தரப்பட்ட தானை தலைவன் சுமந்திரன், விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ அவரோடு தான் குடும்பம் நடத்தியாகவேண்டும், வந்த வேலை முடியும் வரை எவர் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் ஆட்டவும் முடியாது அசைக்கவும் முடியாது
 9. சும்மா சொல்லப்படாது ஐயாவுக்குள் ஒரு மினி ஹல்க் தூங்கிக்கொண்டிருக்கு ஐயாவின் குத்தை பார்த்து கோத்தாவுக்கு யட்டி நனைந்து விட்டதாம். https://youtu.be/MwGkIjL1I50
 10. உது தெரியுமோ இலங்கையில் பிரமிட் வர்த்தகத்தை Revolving matrix மார்க்கெட்டிங் என்ற பெயரில் ஏகப்பட்ட பணத்தை சுருட்டி ஏப்பம் விட்ட F3C அணில் பண்டார என்றவனிடம் நமது புலம்பெயர்ஸ் லட்சக்கணக்கில் கோட்டை விட்டிருக்கினமாமே, பயல் கதிரையில் இருந்தவிடத்திலிருந்தே இலட்சக்கணக்கில் உழையுங்கள் என்று விட்ட கரடியில் இழுபட்டு தங்களது சிங்கள நண்பர்குழாம்கள் விரித்த வலையில் ஏகப்பட்ட லகரங்கள் நாமமாம். இத்தனைக்கும் பயல் இலங்கையில் இன்னும் ஜம்மென்று வடக்கு கிழக்கு தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து யாவாரம் செய்யுறானாம், எவ்வளவோ முறைப்பாடு போயும் ஒன்னும் வேலைக்காகவில்லை ஏனென்றால் கட்டிங் ஏகப்பட்ட இடங்களுக்கு பாயுதாம். சும்மா உன் குழாய் அதுதான் you tube இல் தட்டிப்பாருங்கோ ஏகப்பட்ட புலம்பல்களை பார்த்து ரசிக்கலாம்
 11. கோத்தாவுக்கு ஆயுள் சம்மந்தனுக்கு தூக்கு கொடுப்பதென்றாலும் எனக்கு டபுள் ஓகே, என்னை பொறுத்தவரை தொலைபேசியை அணைத்துவிட்டு இந்தியாவுக்குள் ஒழித்துக்கொண்டிருந்த அனைவருமே கே-மாரிகள் தான், கும்பலாக அள்ளிக்கொண்டுபோய் கட்டி தூக்குங்கள்
 12. நக்கீரர் பரம்பரையல்லவா , முன் வரிசையில் முண்டியடித்துக்கொண்டு உற்காந்திருப்பினம். கோத்தாவுக்கு வாக்கு போடக்கூடாது, ஆனால் கோத்தாவுக்கு முண்டு கொடுத்து நிறுத்த முன்வரிசையில் அமரவேண்டும்
 13. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளராக இருந்த பொழுதே அம்பிகா அன்ரி இப்படி மனிதஉரிமைகளுக்காக போராடவில்லையே ...இப்போது மட்டும் எங்கிருந்து வந்தது மனிதஉரிமைகள் மீது அதீத திடீர் பாசம், எல்லாவற்றுக்கும் காரணம் தேசிய பட்டியலில் உள்ளேவந்து ஆயுள் பூராக நோகாமல் நோம்பு கும்பிட ஒரு ப.உ கதிரை. இதுவே எம் கடுப்பிற்கு காரணம்
 14. ஐ ...கிருபண்ணையின் அம்பிகா அன்றி இறங்கிட்டாவு இனியென்ன மண்ணோடு மண்ணாக மக்கிப்போன ஆட்களையும் தோண்டி உயிரோடு கொண்டு வந்து தேடும் உறவுகள் முன் நிறுத்தியபின் தான் அடுத்த வேலையே
 15. 24 சூடு வாங்குவது எனபது அந்த மாதிரி வேற லெவல் தண்டனை, ஒரே தடவையில் சூடு வைக்க மாட்டினம் அதிக பட்சம் 4-6 உடல் நிலையை பொறுத்து, பிறகு களிம்பு தடவி ஆறவைத்து அதே இடத்தில் 3-6 மாதத்தில் மீண்டும் உரிப்பினம். 24 சூடு வாங்கி திரிபவர்கள் என்றாலே ஒரு தனி கெத்துதான். அமெரிக்கனுக்கே சூடு பறக்க உரித்து அனுப்பிய நாடு சிங்கை
 16. மின்னஞ்சல் உள்வருகை மக்கர் பண்ணியதால் யாழ் இணையத்தினுள் நுழைய முடியவில்லை தானியங்கியும் என்னை தூக்கி கருத்துக்கள பார்வையாளர்கள் பட்டியலில் போட்டுவிட்டது நிர்வாகத்தின் கவனத்திற்கு நன்றி
 17. சீன காமதேனுவையும், அதன் கன்று இந்திய நந்தினியையும் இரு கைகளில் வைத்துக்கொண்டு எதற்கு இந்த கேள்வி, அதுதான் கேட்கக் கேட்கக் கொட்டுகிறதே
 18. இல்லை, இது இன்னும் இந்தியா தமிழர்களுக்கு தீர்வை வாங்கித்தரும் என்று நம்பி இந்திய Proxy க்களின் பின் கூத்தாடுபவர்களுக்கு சொல்லப்படும் செய்தி, கடன் தருவதென்றால் இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கொடு ...கேஸ் குளோஸ் சொல்லுமா இந்தியா, விடுமா RAW, வேண்டுகோள் விடுப்பார்களா Proxyகள்
 19. தமிழன் என்று நினைக்கிறன் அக்கோய் தலைக்கு 4000 ரூபாய் போட்டு இந்தியக்கடனை அடைப்பினம், அந்தப்படத்தில் ரேவதி தான் விஜயை தூண்டிவிடுவார். நம்மாளோட ரேவதி யாரோ தெரியலை. லூஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகும்போது எல்லாவற்றையும் மொத்தமாக கொண்டுபோய் இறக்கிவிடுவது வவுனியாக்கும் நல்லது, இலங்கைக்கும் நல்லது
 20. சிங்கையிலும் உண்டண்ணை இங்கு நாங்கள் AWS (Annual Wage Supplement) என்போம், என்ன கொழுத்த சம்பளத்தில் இருந்தால் வருவதை IRAS வருமான வரி என்று புடுங்கிக்கொள்ளும்(சிலபேருக்கு AWS தாண்டி 12 வது மாத சம்பளத்திலும் அடி விழும் ), AWS இல்லாதவர்கள் தங்களது 12 வது மாதவருமானத்தில் ஆழுதழுது வரி கட்டுவினம். ஒரு நன்மை என்னவென்றால் வருடாந்த வருமான வரியை இலகு 12 மாத தவணையில் கட்டிமுடிக்கலாம். முக்கால்வாசி பேர் அப்படித்தான் செய்வது
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.