Jump to content

அக்னியஷ்த்ரா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1783
  • Joined

  • Last visited

  • Days Won

    10

Posts posted by அக்னியஷ்த்ரா

  1. 1 hour ago, goshan_che said:

    @அக்னியஷ்த்ரா மட்டுவில் இப்படி உள்ளதா? இல்லை எனில் -உங்கள் கவனத்துக்கு

    நல்லா கேட்டியள் போங்கோ...

    நானும் எனக்கு கீழே வேலை செய்வதற்கு முதற்கட்டமாக ஒரு மூன்று பேரை தயார் செய்ய ஒரு வருடமாக முக்கிக் கொண்டு நிக்கிறன். இந்த முறை மட்டும் கிடைக்கவில்லை என்றால் பிலிப்பைன்ஸில் கைக்கும் காலிற்கும் இருக்கிறார்கள் ஆட்கள் மொத்தமாக அங்கே நிறுவனத்தை தொடக்கிவிட்டு கிழக்கில் தொடங்கும் எண்ணத்தை ஊத்தி மூட வேண்டியதுதான். ரொம்ப நாளைக்கு நிறுவனத்திற்கு சாக்கு சொல்ல முடியாது. இவ்வளவிற்கும் சம்பளம் USD இல் ஆரம்பமே 1.5-2 லகரத்தை தொடலாம்

  2. Just now, goshan_che said:

    எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 

    Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.    
    நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.  
    Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை. 
        

    • Like 1
  3. 20 minutes ago, goshan_che said:

    எத்தனை வருடம் கழித்து போகிறீர்கள் ? யாழ் களத்தில் ஒரு சிட்சுவேஷன் ரிப்போர்ட் போட்டு விடவும்🙏.

    இனிய பயணமாகட்டும்.

    நன்றிகள் அண்ணை 
    நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது.
    சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    

    • Like 1
  4. 17 hours ago, goshan_che said:

    Oil of Olay, Gucci, Tom Ford, DKNY, Versace, Armani, CK, Tommy……

    வெளிநாட்டு வாசம் என்று ஒரு விசயம் நிச்சயம் உள்ளது.

    அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை  
    வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 

  5. 4 hours ago, island said:

    ஈழத்தில் சமூகநீதி ஏற்கனவே நிலைநாட்டப்பட்டு சாதி, இன, மத, பிரதேச வேறுபாடுகள் ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமுதாயம் கட்டப்பட்டு விட்டதென்றால் நீங்கள் கூறும் திராவிட சித்தாந்தம் தேவையில்லை என்று கூறலாம்.  அந்த பெயரில் அது  தேவையில்லை என்று நீங்கள் கூறலாமேயொழிய  அதையொட்டிய சித்தாந்தம் ஈழத்துக்கு தேவை என்பதை நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் நீங்களே ஈழத்தில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளை கடுமையாக கண்டித்து சமூகநீதியின் அவசியத்தை வலியுறுத்திய முற்போக்கு கருத்தாளராக உள்ளீர்கள். உங்கள் பல கருத்துக்கள் அவ்வாறு முற்போக்காக  இருந்ததை அவதானித்துள்ளேன். 

     ஈழத்துக்கு திராவிட சித்தாந்தத்தை ஒட்டிய சமூக நீதி சித்தாந்தம் தேவையில்லை என்று கூறுபவர் யாழ்பாண மேற்தட்டு ஆதிக்க சாதி கோட்பாடுகள் தொடரவேண்டும் என்று கருதும் ஒருவராகவே இருக்க முடியும். 

    ஈழத்தில் SC/ST, MBC ,BC இப்படி பிரிவுகளும் சாதிச்சான்றிதழ்களும் கிடையாது. 
    ஈரோடு வெங்கடப்பா நாயுடு முதல் எத்தனை ஈ வே ரா  இயக்கங்களும் கருஞ்சட்டை படைகளும் குத்திமுறிந்து இன்றுவரை பெரிதாக எதையும் கிழித்ததில்லை. வேண்டுமென்றால் சில சாதி மறுப்பு திருமணங்களை நடத்தி பப்லிக் ஸ்டண்ட் அடிக்கலாம். இந்த இயக்கங்களை அடியொற்றிவந்த அரசியல் கட்சிகளும் இன்றுவரை சாதியரசியல் நடத்திதான் பிழைத்துக்கொண்டிருக்கிறார்களேயன்றி பெரிதாக ஒன்றையும் சாதிக்கவில்லை.

    சாதியை ஒழிக்க வக்கற்ற இந்த கூட்டம் கையில் சிக்கிய சிறுபான்மை பார்ப்பானை தூக்கி தூக்கி அடித்து இன்னுமொருவகை சாதிவன்ம அரசியலைதான் செய்துகொண்டிருக்கின்றன. 
    பொருண்மிய, கல்வி, சமுதாய விழிப்புணர்வு போன்றவைகளால்   சாதாரண மனிதப்பரிமாணம் மூலமாக மெதுவாக  காணாமல் போகும் சாதியத்தை வெங்கடப்பா இல்லாவிட்டால் தமிழ்நாட்டு ஆண்கள் யட்டி அணிந்திருக்க மாட்டார்கள் பெண்கள் பாவாடை கட்டியிருக்கமாட்டார்கள் என்று  புருடாவிட்டு அரசியல் அறுவடை நடத்துகிறது இந்த  திருட்டுக்கூட்டம்  

    இந்த அடித்தட்டு சாதிக்கட்டமைப்பு  நிலையை அப்படியே ஈழத்தில் பொருத்தினால் ஈழம் சுமார் 200 வருடங்கள் முன்னே சென்றுவிட்டது. இங்கே ஈழ தமிழர்களுக்கு யட்டி, பாவாடை அணிவிக்க எந்த வெங்கடப்பாவும் தேவைப்படவில்லை. இங்கு பட்டியல்இனங்களும்  இல்லை சாதிச்சான்றிதழ்களும் இல்லை
    ஈழத்தில்  தற்போது காணப்படும் மிகக்குறைந்த சாத்தியக்கட்டமைப்புகள் தானாகவே சமுதாய, கல்வி ,பொருண்மிய முன்னேற்ற பரிமாணங்களால் காணாமல் ஆகிக்கொண்டுதான் இருக்கின்றன. இது எவர் விரும்பினாலும் விரும்பாவிடினும் நடக்கும் மாற்றம் காலத்தின் கட்டாயம் 

    சமீபகாலமாக ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் அந்நியமான பதங்களான  தலித், அம்பேத்கார், ஈ வே ரா, திராவிடம் போன்றவை திட்டமிட்டு இந்திய அடிவருடிகளால் திணிக்கப்படுவதை பார்க்கலாம். இவர்கள் தொடர்பாக ஈழத்தமிழர்கள் மிகுந்த விழிப்புடன் இருப்பது அவசியம். தமிழ்நாட்டில் இருக்கும் குழாயடி சாதிக்கட்டமைப்பை தமிழர்களிடம் திணித்து குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நடத்தும் உத்தியே இது.

    தமிழ் நாட்டில் எதையுமே சாதிக்காத கொள்கையை அங்கே இருக்கும் சாதிக்கட்டமைப்பை விட அதிக பரிணாமமடைந்த இனக்கூட்டம் தூக்கி சுமக்கவேண்டிய அவசியமே இல்லை. இங்கே இருக்கும் சாதியம் தானாகவே காணாமல் போய்விடும், சமூக, கல்வி பொருளாதார முன்னேற்றங்களால் அப்படி காணாமல்  போய்க்கொண்டுதான் இருக்கிறது  
     

    • Like 2
    • Thanks 1
  6. 2 hours ago, ரசோதரன் said:

    தலைவர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.

    புடின் மூன்றாம் உலகப் போர் மூண்டு விடும் என்று எச்சரிக்கின்றார்.

    அமெரிக்கா சீனா டிக்டாக்கின் மூலம் உளவு பார்க்கின்றதென்றும், வேறு பல காரணங்களுக்காகவும் சீனாவை எச்சரிக்கின்றது.

    சீனா பதிலுக்கு அமெரிக்காவை எச்சரிக்கின்றது.

    மோடி அடுத்த மாதம் வரும் தேர்தலை ஒட்டி தென் இந்தியாவில் செய்யும் சூறாவளிப் பிரசாரத்தில் தினமும் விரலைக் காட்டி எச்சரிக்கை விடுகின்றார்.

    ஸ்டாலின், உதயநிதி, டி ஆர் பாலு பதிலுக்கு எச்சரிக்கின்றார்கள்.

    மகிந்த எச்சரிக்கின்றார்.

    ரணில் எச்சரிக்கின்றார்.

    அநுர குமார திசாநாயக்க, தேரர்கள்,...... டயானா கமகே கூட மக்களை எச்சரிக்கின்றார்.

    ஒரு தலைவர் என்றால், அப்பப்ப சில எச்சரிக்கைகள் விட்டுக் கொண்டே இருக்க வேண்டும் போல.........😀

    நாமளும் யாழ்களத்தில் ஒரு எச்சரிக்கையை விடுவோம் ...தலைவராகிடலாமில்ல 

    • Haha 1
  7. 11 hours ago, ஏராளன் said:

    அவர்கள் ஸ்பானிய மொழியில் மட்டுமே பேசினர். அவர்களின் ஆங்கிலம் சிறிதளவே பேசினர். எங்கள் போலீசார் அவர்களிடம் இந்தியில் பேசிக் கொண்டிருந்தனர். அதனால் அவர்களுக்கு என்ன ஆனது என்று தொடக்கத்தில் தெரியவில்லை

    இதற்குத்தான் ஹிந்தி படியுங்கோ ஹிந்தி படியுங்கோ என்று சொன்னால் கேட்டால்தான் 

    • Haha 1
  8. ஊர்ல கக்கூசுக்கு குழி தோண்டனும் என்றால் நைசா புலிகளது தங்கம் எங்கடை வளவு மூலையில் புதைத்து  இருக்கு என்று கதையை கிளப்பிவிட்டால் போதும் பரிவாரங்களுடன் வந்து ப்ரீயாக கிண்டித்தந்துவிட்டு போவார்கள். ஊர் மக்கள் இந்த வசதியை தவிர்க்காமல் உபயோகிக்க வேண்டும்  

    • Like 1
    • Haha 1
  9. On 19/2/2024 at 09:15, Cruso said:

    சிங்கள அரசுடன் இணைக்க அரசியல் செய்து வாழ்க்கை ஓட்டுவதுதான் கடைசி தீர்வு. 

    நல்வரவு மிஸ்டர் துரோகி அவர்களே 
    Welcome to the club

  10. 13 hours ago, Kapithan said:

    அதனால் இலங்கை இனப்பிரச்சனையில் தற்போதைய நிலையில் இந்தியாவை மீறி எதனையும் மேற்கு செய்யப்போவதில்லை. 

    நாங்கள்  இந்தியாவே ஒன்றும் செய்யப்போவதில்லை என்கிறோம் நீங்கள் ஒரேயடியாக மேற்க்கிற்கே போய்விட்டீர்கள்.பேசாமல் சிங்களவனுடன் சேர்ந்து அவன் தருவதை வாங்கிக்கொண்டு இருந்தால் கோவணமாவது மிஞ்சும்.அதைவிட்டு  இந்தியாவுக்கு வால்பிடிச்சுக்கொண்டு திரிந்தால் சோத்துக்கே சிங்கியடிக்கும் நிலைதான் வரும். இப்பவே  முக்கால்வாசி அந்த நிலை தான். நாட்டில் முக்கால்வாசி மூளைசாலிகள் வெளியேறிவிட்டார்கள், ஏற்கனவே மூன்றாம் பெரும்பாண்மை இனி இந்தியா பிடித்துத்தரும் தமிழீழத்தில் 60 தாண்டிய  கிழடு கட்டைகள் தான் சீவிக்கப்போயினம்     

    • Like 1
  11. On 4/2/2024 at 18:21, island said:

    கருணாநிதியை  மட்டுமல்ல உலகில் யாரை எல்லாம் இதற்காக குற்றம் சாட்ட முடியுமோ அவர்களை எல்லாம் இழுத்து குற்றம் சாட்டுவார்கள். அப்படிக்குற்றம் சாட்டும் போது மற்றய விரல்கள் தம்மை குற்றம் சாட்டுவதை மறந்துவிடுவார்கள். 

    சார்வாள் 
    ஈழம் அழிந்ததற்கு எவருமே காரணமில்லாமல் இருக்கலாம். ஆனால் யார் யார் ஈழத்தமிழருக்கு ஆதரவில்லாதவர்கள் என்பதை சொல்லிக்கொண்டேயிருக்கும் உரிமை ஈழத்தமிழர்களுக்கு உண்டல்லவா.
    அவர்களது வாயில் ஈழம் வந்தால் எங்களது வாயில் அவர்களது வண்டவாளங்கள் வரும் அதை தவிர்க்க முடியாது   

    On 4/2/2024 at 20:21, Kapithan said:

    பாவம் திருமா. 

    அவர் தூக்கிப்பிடித்த அரசியல் பொய்த்துப் போவது அவருக்கு புரிந்துகொள்ளக்கூடியதாக இருந்தாலும் அதை அப்பட்டமாக தனது சாதி மக்களிடம் கூற முடியாது தவிக்கிறார்.  அதனால் பழியை எங்காவது   போட்டுத்தானே ஆக வேண்டும். 

    அண்ணன் திருமா 
    2 சீட்டு மட்டன் குருமாவாகி பலகாலம், மணிப்பூருக்கு பாய்ந்து பாய்ந்து தவிலடிக்கும் சமூகநீதி போராளி 
    தி.மு.க சட்டமன்ற உறுப்பினரின் மகனாலும் மருமகளாலும் சொல்லெண்ணா கொடுமைகளை அனுபவித்த 
    பட்டியல் இனப்பெண் பக்கம் திரும்பியே பார்க்கவில்லை. வழமை போல  அந்தப்பெண் கூறிய அத்தனைக்குற்றச்சாட்டையும் போலியானவை என்று தி.மு.க கைவரிசையை காட்டி அப்படியே அமுக்கிவிட்டது   

    • Like 2
    • Thanks 1
  12. 3 hours ago, alvayan said:

    சிங்கன் விளையாட்டுபிள்ளை...8 வருசத்துக்கு ஒன்று...இன்னமும் 2 தாரத்துக்கு பலன் இருக்கு..

    அமைதி மார்க்கத்தில் பெண்கள் எல்லாம் விளைநிலங்கள், விதைத்து அறுவடை முடிந்ததும் தலாக் ...தலாக் ....தலாக் ஒரு நிலத்துடைய கதை குளோஸ் அடுத்த நிலத்தை வாங்கி பயிர்செய்யவேண்டியதுதான். .  
    ஒரே நேரத்தில் நான்கு நிலங்களை வைத்திருக்கலாம். தலாக், குலா முறையில் எத்தனை நிலத்திலும் பயிர் செய்யலாம். தலாக் சொல்ல சொல்ல count ரீ செட் ஆகும் இதுதவிர முத்தாஹ் வேற உண்டு 

    • Haha 1
  13. 11 hours ago, ஈழப்பிரியன் said:

    என்ன ஒருத்தரும் புதிய தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை?

    கூத்தமைப்பானுகளுக்கு வாழ்த்து வேற ஒரு கேடு.
    ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது தமிழ் தேசியம் என்றாலே என்னவென்று தெரியாமல் அடிமட்ட உறுப்பினர்களுக்கெல்லாம் கல்தா கொடுத்து தலைவர் போட்டிக்கு போட்டியிடும் அளவுக்கு வளர்ந்து நிற்கும் சுத்துமாத்தின் உழைப்பு சாதாரணமானதல்ல. கூத்தமைப்பு ஒரு  இலங்கை தி.மு.க 

    • Like 1
    • Haha 2
  14. On 17/1/2024 at 16:37, கிருபன் said:

    யாழ்கள உறுப்பினர்கள் அடுத்த தலைவராக யாரை விரும்புகின்றார்கள் என்பதை திரியின் மேலே உள்ள கருத்துக்கணிப்பின் மூலம் தெரிவிக்கலாம்😁

    கிருபண்ணை உங்களது கருத்துக்கணிப்பில் அம்பிகா அன்றி சேர்க்கப்படாமையை வன்மையாக கண்டிக்கிறேன் 
    என்னுடைய தெரிவு ஒன் அன்ட் ஒன்லி அம்பிகா அன்றி  

  15. 14 minutes ago, ஏராளன் said:

    இஸ்ரேல், ஹமாஸ், ஹவுதி, அமெரிக்க தலைமையிலான படைகள், ஈரான் ஆகியவை மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளால், பெர்சியன் வளைகுடா, ஓமன் வளைகுடா பகுதிகள் அமைந்துள்ள மண்டலத்தில் பதற்றம் நிலவுகிறது.

    அமைதி மார்க்கம் எங்கிருந்தாலும் மற்றவர்களை அமைதியாக இருக்கவிடவே மாட்டார்கள் 

  16. 2 hours ago, Kapithan said:

    எப்படிச் செய்வது? யார் செய்வது?

    எம்மிடம் அது தொடர்பான திட்டம் ஏதும் உண்டா? 

    கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதுவுமே தென்படவில்லை . 

    எப்படிச் செய்வது? இந்தியாவை இழுத்துவிட்டு  யார் செய்வது?  R&AW 

    எம்மிடம் அது தொடர்பான திட்டம் ஏதும் உண்டா? கூத்தமைப்பிடம் உண்டு 

    கண்ணுக்கெட்டிய தூரம்வரை எதுவுமே தென்படவில்லை . ஆட்டுக்குட்டி அண்ணாமலை முதல் அனைத்து சங்பரிவார் கூட்டங்களும் வடக்கிற்கு அடிக்கும் விசிட்களிலிருந்து தெரியவில்லையா  

    கடைசியாக இதற்குத்தானே ஆசைப்படுறீங்கள் ...?

    • Thanks 1
  17. 1 hour ago, Cruso said:

    ஆனால் ஒருவனுக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்து வெற்றி கண்டதில்லை

    ஒன்றை தவிர வடக்கு கிழக்கை நிர்வாகரீதியாக பிரித்ததில் மட்டும் வெற்றி 

    • Like 1
  18. 18 hours ago, ஏராளன் said:

    மனித உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ இன்றி நடந்த இந்த தாக்குதல் முறியடிப்பு நடவடிக்கை எந்த கப்பலுக்கும் சேதமின்றி நடைபெற்றது.

    “டெஸ்ட்ராயர்” (destroyer) எனப்படும் போர்கப்பல்களும் இரண்டும், எஃப்-18 (F-18) ரக போர் விமானங்களும் இந்த முறியடிப்பில் அமெரிக்க கடற்படையால் ஈடுபடுத்தப்பட்டன.

    டெஸ்ட்ராயர்,  எப் 18 சூப்பர் ஹார்னெட் என்று கலக்கும் அமெரிக்கனுடன் , 5 இத்துப்போன சீனத்து மிக் சங்டுக்களை அதுவும் கப்பலில் ஏற்றி இறக்க முடியாத இறதல், மற்றும் இந்தியனின் பிச்சை கப்பலையும் வைத்துக்கொண்டு ஆசியாவின் பிச்சைக்காரன் போடும் போட்டி   இருக்கே வேற லெவல் 

    • Thanks 1
  19. @கிருபன்  அண்ணை என்னவாம் உங்கடையாள் என்னவோ கருத்தெல்லாம் விடுறாவு.
    ஆண்டிக்கு புதுசா வேற ஒரு போஸ்ட்  கிடைச்சிருக்கு போல  

  20. 15 hours ago, nunavilan said:

    அரசுடன் ஒரு டீலை எழுத்து மூலம் பெற்று அதனை செய்விக்க கூடிய யாராவது எம்முடம் உள்ளார்களா?  

    அதை அப்பவே செய்திருக்கலாமே அரசுடன் சேர்ந்து இருப்பையாவது காப்பாற்றுங்கள் என்று சொன்னவர்களுக்கு துரோகி பட்டம் கொடுத்துவிட்டு கூத்தாடிகளுடன் அடித்த கூத்து மட்டுமே ஈழ  தமிழர்களுக்கு மிச்சம்.  இப்போது சுடலை ஞானம் வந்து என்ன பிரயோசனம்  

  21. 1 hour ago, Cruso said:

    சோமாலிய போன்ற ஒரு நாட்டில் மேற்கத்திய நாடுகளின் வரி விதிப்பு கொள்கையை நடைமுறை படுத்தினால் எப்படி இருக்கும்? அதே நிலைமைதான் இங்கும்.

    நீங்கள் இப்படி சொல்றீங்கள், அங்கே இலங்கையில் இருந்து வீடியோ போடும் இரண்டும்கெட்டான் யூ ட்யூபர்கள் 
    பொறுத்திருந்து பாருங்கோ இலங்கை இனி அடுத்த சிங்கப்பூர், பிரிட்டிஷ் காரன் மாதிரி வரி வசூலிப்பதால் நாங்கதான் ஆசியாவின் யூ கே என்று இஷ்ட்டத்திற்கு அடித்துவிட்டு மஹிந்தவிற்க்கே tough கொடுக்கினம். 

  22. On 9/12/2023 at 01:00, ஈழப்பிரியன் said:

    இதிலே உள்ள கோவிந்தன் கருணாகரன் இப்போ பாராளுமன்ற உறுப்பினரா?

    ஆம் அண்ணை 
    எனது மாமி முறையான ஒருவரின் வீட்டிற்கு அருகில் தான் மட்டுநகர் வாவி வீதியில் (Lake  road) இவரது காரியாலயம் உள்ளது. எம்.பியானவுடன் பார்த்திருக்க வளர்ந்து இன்று பலமாடி கட்டிடம்.
    செய்த பாவங்களுக்கு பரிகாரம் தேடவென்று மட்டுநகரின் தூரப்பிரதேசங்களுக்கும் வசதியற்றவர்களுக்கும் இவர் வழங்கிய இலவச அமரர் ஊர்தி இவரது காரியாலயம் முன் எப்போதும்  நிறுத்தப்பட்டு இருக்கும்.  
     

    • Thanks 1
  23. 6 hours ago, goshan_che said:

    இன்றேல் இங்கிலாந்து, இங்கிலாந்தாக அன்றி, இலாகூராக மாறிவிடும். 

    எனக்கென்னவோ அப்படி மாறி ரொம்பக்காலம், இப்போ இஸ்லாமாபாத் ஆக மாறிவிடக்கூடாது என்று முக்குறினம் போல். ஆனால் அவர்களது கபாசிட்டி தெரியுமல்லோ இறங்கினவர்கள்  இதே வேலையாக இருந்து  வருடத்துக்கொன்று ரிலீஸ் பண்ணி பாத்திருக்க மஜோரிட்டி ஆயிடுவினம்

  24. 1 hour ago, Cruso said:

    நீங்கள் என் இங்கு இருக்க முடியாமல் அங்கு ஓடினீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா?
    ஐயா எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். East or West home is best.

    சார்வாள்...ஒருசிலர் உயிரை காப்பாற்ற, ஒரு சிலர் குடும்பங்களிற்காக, இன்னும் சிலர் தொழிற்தகுதி கல்வித்தகுதியுடன் நல்ல வாழ்க்கைத்தரத்தை நாடி இப்படி பல விடயங்கள் உண்டு. நானும் ஒருகாலத்தில் யுகே ,கனடா என்று எப்பவோ செட்டிலாக கிடைத்த வாய்ப்பையெல்லாம் உதறித்தள்ளி விட்டு நாட்டை விட்டு ஒரு இன்ச் அரக்கமாட்டேன் என்று பிடிவாதத்துடன் நின்றவன் தான். பிறகு தான் தெரிந்தது இந்த எண்ணம் தலைவருடன் நின்று தமிழீழம் பிடிக்க சண்டை போடுவது போல... 
    உன்னதமான நோக்கம் ,இறுதியில் ஒத்தைப்பைசாக்கு பிரயோசனப்படாது என்று. வெளிநாடு வந்து  இந்தவருடத்துடன் 5 வருடங்கள் முடிகின்றது. உழைத்து விட்டு திரும்ப நாட்டிற்கு வந்துவிடுவோம் எனும் எண்ணத்துடன் தான் வந்தேன். நாளைக்கு எனது பிள்ளைகள் என் சவக்குழியை தோண்டி எடுத்து  கரிச்சு கொட்டக்கூடாது என்பதால் இப்போது நிரந்தரவதிவுரிமைக்கு முயற்சிக்கிறேன். 
    இது எனது அனுபவம் மட்டுமே      

    • Like 4
    • Thanks 2
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.