Jump to content

அக்னியஷ்த்ரா

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    1778
  • Joined

  • Last visited

  • Days Won

    10

Everything posted by அக்னியஷ்த்ரா

  1. காலம் மெதுவாக உருண்டோடிக்கொண்டிருக்க, மெதுவாக சபையிற்குள் நடக்க ஆரம்பித்திருந்த விரும்பத்தகாத விடயங்கள் வில்லியின் காதில் விழத்தொடங்கியது, சில விடயங்கள் கையும் மெய்யுமாக வில்லியிடமே மாட்டிக்கொண்டன , தொடர்ந்து அமைதி காத்த வில்லி ஒருகட்டத்தில் பொறுமை எல்லை மீற நேரடியாக சகோதரர் பீலிக்சிடமே சொல்லிவிட்டார், பீலிக்ஸும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்துவிட்டு தான் அவற்றை கவனத்திலெடுப்பதாக சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார், ஆனால் காலப்போக்கில் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை, சொல்லப்போனால் நிலைமை மேலும் மோசமாகிக்கொண்டே சென்றது, வில்லியால் தொடர்ந்தும் கண்டும் காணாமல் இருக்க முடியவில்லை , கடைசியாக தனது பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த வில்லி, தொடர்ந்தும் இப்படி நீடித்தால் தீவு முழுவதற்கும் பொறுப்பான சபை முதல்வரிடம் முறையிடுவதை தவிர வேறு வழியில்லை என்று பீலீக்ஸிடம் சொல்லிவிட்டு எழுந்து செல்வதை பீலிக்ஸ் வெறித்துப்போய் நோக்கிக்கொண்டிருந்தார், 1962, ஏப்ரல் 26 மதியம் 1 மணி சகோதரர் வில்லியும், மற்றைய சகோதர்களும் மத்திய உணவருந்திக்கொண்டிருந்தனர், வில்லி எப்போதும் மதிய உணவு முடிந்ததும் மிளகு ரசம் குடிப்பது வழக்கம், இந்த பழக்கம் அவர் ஆசியாவிற்கு வந்ததும் அவரிடம் தொற்றிக்கொண்டது , உடல் பருமனை கட்டுக்குள் வைத்திருக்க தவறாது அதனை பின்பற்றிவந்தார், சமையல்காரியும் மிளகு ரசத்தை மேசையில் வைத்துவிட்டு போக வழமை போலவே அதனை எடுத்து ரசித்து குடிக்க ஆரம்பித்தார், இன்று என்னவோ ரசத்தில் உப்பு கொஞ்சம் தூக்கலாக தெரிந்தது இருந்தாலும் வித்தியாசமான சுவையாக இருந்ததால் தொடந்து குடித்துவிட்டு, ஒரு குட்டித்தூக்கம் போட மாடியிலிருந்த அறைக்கு ஏறிப்போய் கட்டிலில் சரிந்தார். சிறிது நேரத்தில் இதயத்தை கையால் பிடித்து நெருக்குவது போல் உணர்வு, அப்படியே அடிவயிற்றிலிருந்து தொண்டை வரை எரியத்தொடங்கியது, கஷ்ட்டப்பட்டு எழுந்த வில்லி அருகிலிருந்த தண்ணீர் கோப்பையினை எடுத்தார் உள்ளே காலியாக இருந்தது , எழுந்து கதவுப்பிடியை அடைவதற்கு முன் தடுமாறி விழுந்தார் வில்லி கடைவாயோரம் ஈரலிப்பாக அரித்தது , ஆட்காட்டி விரலால் வாயோரம் வருடி எடுத்தார் விரலில் இரத்தத்துளி , ஒருவாறு சுதாரித்து எழுந்த வில்லி பலம் கொண்டமட்டும் கதவின் பிடியை திருகினார்,அது வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்தது. தொடர்ந்து போராடமுடியாத வில்லி அப்படியே கதவோரமாக உட்கார்ந்தார், வாயிலிருந்து இரத்தம் பீறிட கண்கள் மங்கிக்கொண்டு சென்றது, அந்த மங்கலினிடையே அவரது உயிர் கொஞ்சம், கொஞ்சமாக பிரிந்துகொண்டிருந்தது, சரியாக 20 நிமிடம் கழித்து வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்த கதவு திறக்கப்பட இரண்டு சோடி கால்கள் உள்ளே நுழைந்தன, அதில் ஒன்று மெதுவாக தடி ஒன்றினை எடுத்து முன்னோக்கி சரிந்து கிடந்த வில்லியின் தலையை உயர்த்தி பார்க்க நிலைகுத்தி நின்ற வில்லியின் வெளிறிப்போன கண்கள் அவர் ஏற்கனவே காலாவதியாகிவிட்டதை சொல்லாமல் சொல்லின. தடியை கொண்டு வில்லியை பரிசோதித்தவர் அடுத்தவரிடம் "இன்னும் சரியாக இருபது நிமிடம் கழித்து நீ அலறப்போகும் அலறலில் ஒட்டுமொத்த இல்லமும் கதவின் முன் நிக்க வேண்டும், இனிமேல் நமக்கு பிரச்சினை இல்லை " என்று விட்டு வில்லியின் அறையிலிருந்து வெளிப்பட்டார் பீலிக்ஸ். 2003 , இலங்கை கிழக்கு மாகாணம் எல்லோரும் இரவு 7:00 மணிக்கே பாடசாலைக்குள் ஆஜராகிவிட்டனர், சரியாக பதினொன்றரை மணிக்கு தங்களது அதிரடி நடவடிக்கைக்கு உரிய முஸ்தீபுகளை இட்டவாறு ஒவ்வொருவரும் தங்களுடைய டார்ச்சை இயக்கிப்பார்ப்பதும், எதிர்பாராத வகையில் அந்த நபர் எதிர் தாக்குதல் நடத்தினால் எப்படி எதிர்கொள்வது என்று ஒரு அதிரடிப்படையின் திடீர் அதிரடி நடவடிக்கைக்கு தயாராவதுபோல் தயாராகிக்கொண்டிருந்தனர். நேரம் 11:45 இரவுக்காவலாளி இன்றைக்கும் (சுலக்சனின் உபயத்தில் ) அரைப்போத்தல் சோமபானம் மாட்டிய உட்சாகத்தில் போதையில் உழன்றுகொண்டிருந்தான் ஐடியா மணி கட்டிட மாடியில் நிலையெடுக்க, அவனும் சுலக்சனும் எதிரெதிராக இருந்த இரு புதர்களின் பின் மறைந்து கொண்டனர் , இரண்டாவது குழு மண்டபத்தின் கடைக்கோடி மூலையில் நிலை எடுத்துக்கொண்டது. நேரம் 12:40 நேற்றையதை போன்றே அதே கரிய உருவம் வளவின் வாசலில் தென்பட ஐடியா மணி சுதாரித்துக்கொண்டான், நாய் காவல் காக்கத்துவங்கியதும் உருவம் குடவுன் உள்ளே செல்ல மெஷின் இயங்கத்துவங்கியது, உருவம் உள்நுழைந்ததை தெரிவிக்க ஐடியா மணி ஒருதடவை டார்ச்சை ஒளிர்ப்பித்து காட்டினான், கட்டிடத்தை வைத்தகண்வாங்காது பார்த்துக்கொண்டிருந்த அவனும்,சுலக்சனும் நடவடிக்கைக்கு தயாராகினர் நேரம் 1:05 மாடியிலிருந்து இரண்டுமுறை டார்ச் ஒளிர அவனும் சுலக்சனும் தயாராகிவிட்டனர், சரியாக ஐந்துநிமிட இடைவெளியில் காற்றை கிழிப்பது போல் அந்த உருவம் இவர்களை கடக்க, புதரை விட்டு எம்பி குதித்த அவனும், சுலக்சனும் அந்த கரிய உருவத்தை விரட்ட துவங்கினர், நிலையான வேகத்தில் காற்றில் மிதப்பது போல் வேகமாக சென்று கொண்டிருந்த உருவத்தை எட்டிப்பிடிக்க தன் வேகத்தை அதிகப்படுத்தினான் அவன், சுலக்சனோ அவனது வேகத்திற்கு தாக்குபிடிக்கமுடியாமல் மெதுவாக பின்தங்கத்தொடங்கினான் ஒருவாறு உருவத்தை எட்டிப்பிடிக்கும் அளவுக்கு நெருங்கியபோது அவனும் உருவமும் மண்டபத்தின் கடைக்கோடியை நெருங்கிவிட்டிருந்தனர். சரியாக இவன் கையை நீட்டவும் உருவம் மூலையில் திரும்பவும் அடுத்தபக்கத்திலிருந்து மற்றைய இருவரும் வெளிப்படவும் சரியாக இருந்தது, கணப்பொழுதில் அவன் கைக்கெட்டிய தூரத்திலிருந்த அந்த உருவம் மறைந்துபோயிருந்தது. "டேய் இப்பதான் விரட்டிக்கொண்டு வந்தனான்" "உனது காலடி சப்தம் கேட்டுத்தான் நாங்கள் ரெண்டுபேரும் வந்தம் " "டேய் நீங்க உண்மையாகவே காணவில்லையா ....?" "விரட்டிக்கொண்டு வந்தன் எண்டுபோட்டு நீ மட்டும் வாராய் " அவனுக்கு தலை விறைத்தது, சரி சுலக்சனிடம் கேட்போம் என்று விட்டு திரும்பினால் சுலக்சனை காணோம் அந்த கணத்தில் "ஐயோ அம்மா" என்று உச்சஸ்தாயியில் சுலக்சனின் அலறல் ,நாயின் உறுமலுடன் அந்த நிசப்தத்தில் எதிரொலித்தது. டேய் சுலக்சண்டா .. ஏக காலத்தில் அலறிய நால்வரும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓட்டமெடுத்தனர் (தொடரும் )
  2. ஒரு கரிய உருவம் வளவின் வாயிலில் திடீரெண்டு தென்பட்டது, படுத்துக்கிடந்த நாயோ சரேலென்று எழும்பி அந்த உருவத்தின் முன்னே ஓடி வந்து அந்த குடவுன் அருகே நெருங்கவும், இழை அறுந்த மின்குமிழ் மங்கலான ஒளியை பரப்பவும் சரியாக இருந்தது, அந்த கரிய உருவமோ ஓட்டமா,நடையா என்று அனுமானிக்க முடியாத வேகத்தில் குடவுனை நெருங்கி உள்ளேசென்றதும் ரோனியோ இயந்திரம் கைகளால் சுற்றப்படும் சத்தம் மெதுவாக காற்றில் எதிரொலிக்க தொடங்கியது, அனைவரும் விறைத்துப்போய் நோக்கிக்கொண்டிருக்க அந்த நாயோ குடவுனை சுற்றி காவல் காக்க தொடங்கியது, அனைவரிடமும் இருந்த மிகப்பெரிய கேள்வி அந்த உருவம் நடந்ததா இல்லை காற்றில் மிதந்ததா என்பதே, சரியாக ஒரு நாற்பத்தைந்து நிமிடம் கழித்து அந்த உருவம் குடவுனிலிருந்து வெளிப்பட நாயோ வளவின் வாயிலுக்கு சென்று நின்றுகொள்ள மின்குமிழும் அணைந்துவிட்டது, மெதுவாக சென்ற உருவம் இவர்கள் இருந்து படிக்கும் மண்டபத்தின் பின்புறம் சென்று இருட்டில் கரைய, நாயோ சர சரக்கும் புதரினுள் புகுந்து வந்த வழியே மறைந்துவிட்டது, நடந்த அனைத்து சம்பவங்களையும் பார்த்து பயத்தில் உலர்ந்து காய்ந்து போன வாயில் பேச்சுவராது ஆளையாள் பார்த்து முழித்துக்கொண்டிருந்தனர் அனைவரும், ஐடியா மணிதான் மௌனத்தை கலைத்தான் மச்சான்ஸ்....இது யாரோ ஒருவன் நம்மட ஸ்கூலை தப்பா யூஸ் பண்றான் போல இருக்கு ,நம்மட வொச்சரும் உடந்தை இல்லாட்டி எப்படி டெய்லி அண்ணருக்கு அரைப்போத்தல் ஊத்த காசு வருகுது . சுலக்சன் : "அப்பிடி என்ன நம்மடை பள்ளியில் செய்யப்போறான் " , ஐடியாமணி : 'மெஷின் சத்தம் கேட்கலையோ கள்ள நோட்டுகூட அடிக்கலாம் ' இது அவன் :'டேய் அது ரோனியோ மெஷின் சத்தமடா ' ஐடியாமணி : "நீ போய் கிட்ட நின்று பார்த்தநீயோ" அவன்: "அப்போ கரண்ட் எங்கயிருந்து வருது " ஐடியாமணி : "டேய் நிலத்திற்கு கீழாலையிருந்தும் கரண்ட் எடுக்கலாம்டா" இதற்கு மேல் ஒருவருக்கும் தங்களது கருத்துக்களை வைத்து எதிர் வாதம் செய்ய முடியவில்லை, அடுத்து என்ன செய்வது என்று ஒவ்வொருவரும் ஒருத்தரை ஒருத்தர் நோக்கிக்கொண்டிருக்க சுலக்சன் தீர்க்கமாக சொன்னான், நாளைக்கு அவனை பிடிக்கவேண்டும், எல்லோரும் விறைத்து போய் திரும்பினர் ஐடியா மணியோ "உனக்கு லூசா அந்த நாயை தாண்டி எப்படி பிடிப்பாய் " சுலக்சன் "ஒழுங்காக கவனி வளவு வாசல் வரைக்கும் தான் நாய் வருகிறது, அதற்க்கு பிறகு ஆள் தனியாகத்தான் போகுது நாளைக்கு நானும் ,அவனும் வாசல் தாண்டி மண்டபம் நோக்கிய ஒழுங்கைக்குள் ஒழித்து நிற்போம், ஆள் வாசல் தாண்டியதும் ஐடியா மணி மேல் மாடியிலிருந்து டார்ச்ச்சை இரண்டு முறை விட்டு விட்டு அடிப்பான், நாங்கள் பின்னால் விரட்ட நீங்கள் இருவரும் மண்டபத்தின் மூலையிலிருந்து முன்னாள் வரவேண்டும் ஆளை கோழி அமுக்குவது போல் அமுக்குகிறோம் " தரமான திட்டம், எல்லோரும் தயார் ,ஆளாளுக்கு மெதுவாக கட்டிடத்திலிருந்து வெளியே வந்து தங்களது படிப்பை தொடர்ந்தனர் 1952, இலங்கை கிழக்கு மாகாணம் வில்லியை பொறுத்தவரை சகலமும் சிறப்பாக போய்க்கொண்டிருந்தது, காலையில் பாடசாலை, பிற்பகலில் கூடைப்பந்து பயிற்சி, தேவாலயம் இப்படி அவருக்கென்றே ஒரு வாழ்க்கைமுறையை அமைத்துக்கொண்டார், பாடசாலையின் தற்போதைய ரெக்டர் ஓய்வு பெறும் காலமம் நெருங்கிக்கொண்டிருக்க, வில்லி ஒவ்வொருநாளும் தன்னை மேம்படுத்திக்கொண்டிருந்தார், அந்த நேரத்தில் தான் புதிய சகோதரர் ஒருவர் அவரது மடத்திற்கு மாற்றலாகி வந்திருந்தார், இந்தியாவில் பிறந்து வளர்ந்த சுதேசியாக இந்திய சபை பிரிவிற்குள் உள்வாங்கப்பட்டு ஒரு சிரேஷ்ட துறவியாக வளர்ந்திருந்த அவரது பெயர் பீலிக்ஸ் (Felix), சகோதரர் பீலிக்ஸ் பார்ப்பதற்கு சற்று கண்டிப்பான முரட்டு சுபாவம் கொண்டவர் தோற்றமும் அப்படித்தான் இருக்கும், நாளடைவில் வில்லிக்கும் , பீலிக்சிற்க்கும் நெருக்கம் ஏற்பட்டு பீலீக்சின் ஆன்மீக வழிகாட்டியாகவே மாறிவிட்டார் வில்லி.காலப்போக்கில் பாடசாலையின் தற்போதைய ரெக்டர் ஓய்வுபெற்று மாற்றலாகி சென்றுவிட, வில்லி பாடசாலையையும், பீலிக்ஸ் சபை மட முதல்வராகவும் பொறுப்பெடுத்துக்கொண்டனர், (தொடரும்)
  3. சபை முதல்வரின் கூற்றுக்கிணங்க , கோவாவிலிருந்து நேராக இலங்கை கிழக்கு மாகாணம் வந்திறங்கினார் வில்லி, பயணக்களைப்பை இரண்டுநாட்கள் ஓய்விலிருந்து கழித்துவிட்டு பாடசாலையை சுற்றி நோட்டம்விட தொடங்கினார். அந்த பாடசாலையும் ,அதன் சூழலும் அவருக்கு பிடித்துப்போனது, மெது மெதுவாக பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் என்று எல்லோரது மனதிலும் இடம்பிடித்த வில்லி,சில மாதங்களிலேயே முழுப்பாடசாலைக்குமே பிடித்துப்போன ஆசிரியராக மாறிப்போனார், பாடசாலை நேரம் தவிர்ந்த மாலை நேரங்களில் பாடசாலை கூடைப்பந்து அணிக்கு பயிற்சி வழங்கி மெருகேற்றினார், கிட்டத்தட்ட முழு இலங்கையிலும் முதன்முதலில் ரோனியோ மெஷினை ஐரோப்பாவிலிருந்து தருவித்து ரோனியோ மெஷின் பாவித்த முதல் பாடசாலை எனும் பெருமை பாடசாலைக்கு கிடைக்க வழிசமைத்தார், பிரதர் வில்லியம் என்று அழைக்கப்பட்டாலும் அவர் ரோனியோ மெஷின் இயக்குவதை அடிக்கடி பார்க்கும் சிறுவர்கள் எல்லாம் காலப்போக்கில் "ரோனியோ பிரதர்" என்று அழைக்க தொடங்கினர், இப்படி பாடசாலையில் ஒரு முக்கிய நபராக தன்னை தகவமைத்துக்கொண்டார் வில்லி. காலம் மெதுவாக நகர நகர இவரது சபை இல்லத்திற்கு புதிய துறவிகள் மாற்றலாகி வருவதும் போவதுமாக இருக்கும் போது வில்லியின் வாழ்க்கையை புரட்டிபோடப்போகும் ஒருவரது அறிமுகம் கிடைத்தது 2003, கிழக்கு மாகாணம் 'தீபம்' பாடசாலையின் வெள்ளிவிழா சஞ்சிகை அவனுள் ஏற்படுத்தியிருந்த பிரமிப்புகள் ஏராளம் 100 வருட பாரம்பரியம் கொண்ட அந்த பாடசாலையில் இரண்டு சஞ்சிகைகளே வெளியாகியிருந்தது, முதல் சஞ்சிகை வில்லியின் காலத்திலும் ,இரண்டாவது சஞ்சிகை இன்னுமொருஅதிபரின் காலத்திலும் வெளியாகியிருந்தது, இரண்டினதும் பிரதம பதிப்பாசிரியர் வேறுயாருமில்லை அது அவனுடைய பாட்டி அவரொரு பயிற்றப்பட்ட ஆசிரியராக பிரதர் வில்லியம் பணியிலிருக்கும் போதுதான் அவரது பாடசாலையில் இணைந்தார், வில்லியால் ஒரு பல்துறை விற்பன்னராக வளர்த்தெடுக்கப்பட்டவர் , இரண்டாவது சஞ்சிகை பதிப்பை 5 வயது சிறுவனாக வீட்டில் இருந்து வேடிக்கை பார்த்த நினைவுகள் அவனை வருடிச்சென்றன, இன்றும் அந்த இரண்டு சஞ்சிகைகளையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறான். சிறுவயதில் அவனது பாட்டியிடமிருந்து பல செவிவழி கதைகள் கேட்டு நினைவினில் வைத்திருந்தான் நேரம் இரவு 8:30 பாடசாலையின் கூடைப்பந்து மைதானம் முன்னே அத்தனை பேரும் ஆஜர் திட்டம் ஏற்கனவே தீட்டியதுபோல இரவு 11:00 மணிக்கு மூன்றாம் மாடி கட்டிடத்தினுள் உள்நுழைந்து நோட்டம் விடுவது, ஒவொருத்தராக மற்றவருடைய முகத்தை பார்த்துக்கொண்டு நேரத்தை போக்கிக்கொண்டிருந்தனர் நேரம் 11:00 ஒருவர் பின் ஒருவராக கட்டிடத்தினுள் நுழைந்துகொண்டிருக்க காவலாளியோ வாங்கி வைத்திருந்த அரைப்போத்தல் சோம பானத்தை உள்ளே தள்ளிவிட்டு நிறைவெறியில் சாக்குக்கட்டிலில் உழன்று கொண்டிருந்தான், மேசைகளை அடுக்கி ஏறி நின்று கொண்டு ஒவ்வொருத்தராக நோட்டம் விட ஆரம்பித்தனர், நேரம் 11:49 ஆகும் போது, அந்த வளவினை ஒட்டியிருந்த புதர்கள் சர சரக்க அதனுள்ளேயிருந்து ஒரு நாய் வெளியே வந்தது, பார்த்தமாத்திரத்திலேயே அவனுக்கும்,சுலக்சனுக்கும் புரிந்துவிட்டது இது அதே நாய் தான், வந்த நாய் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அந்தவளவின் வாயிலில் சென்று படுத்துக்கொள்ள ஒன்றுமே நடப்பதாக தெரியவில்லை, நிமிடங்கள் கரைய மேசையில் நின்று கால்கள் வலித்தது தான் மிச்சம், ஒவொருத்தராக மேசையின் மீது திரும்பி உட்கார்ந்து கொண்டு தங்களுக்குள்ளே முறை போட்டுக்கொண்டு 15 நிமிடத்திற்கொருவர் என்று நோட்டம்விட்டுக்கொண்டிருந்தனர் நேரம் 12:55 "ஐடியா மணியின்" முறை திடிரென்று அருகில் திரும்பிப்பார்த்தவாறு உட்கார்ந்திருந்த அவனின் தலையை உசுப்பி எழும்புமாறு சைகை செய்ய முழு குழுவும் எழுந்து நின்று மெதுவாக தங்கள் தலையை உயர்த்தினர்..அப்போது அங்கே சில அமானுஷ்யங்கள் நடக்க ஆரம்பித்தன (தொடரும் )
  4. இருவரும் இரத்தம் உறைந்து போய் , மெதுவாக பின்னேறிக்கொண்டிருக்க நாயோ இன்று ஒரு சம்பவத்தை நடத்திக்காட்டியே தீருவது என்ற முடிவில் இருவர்மேலும் வெறிகொண்டு பாய எதுவாக குனிந்து எம்ப தயாரானது, அந்தக்கணத்தில் ..திடீரென்று இவர்களிருவரும் பின்புறமிருந்து ஒரு டோர்ச்சின் மின்னொளியுடன் "தம்பி நீங்க ரெண்டு பேரும் இங்க என்ன செய்றீங்க...?" என்ற வசனமும் சேர்ந்து ஒலித்தது , திடுக்கிட்டு இருவரும் திரும்பி பார்க்க அங்கே பாடசாலை இரவு காவலாளி நின்றுகொண்டிருந்தார். அவரை பார்த்துவிட்டு இருவரும் நாயை நோக்கி திரும்பிய கணம் அங்கு நாய் நின்ற அடையாளமே இல்லை, கணப்பொழுதில் நடந்து முடிந்துவிட்ட சம்பவத்தால் இருவருக்குமே குரல் அடைந்துக்கொண்டது, இருந்தும் ஒரு மாதிரி சுதாகரித்துக்கொண்டு "அது .......ஒண்டுக்கு போக வந்தம் அண்ணன் " என்று சுலக்சன் சொல்ல காவலாளியோ சகட்டு மேனிக்கு கிழிக்க தொடங்கினான், "இங்கே வரக்கூடாது என்றெல்லா சொல்லியிருக்கன் ...நாளைக்கு நாய் அது இது என்று கடிச்சால் நான் தான் பதில் சொல்லவேணும், இப்படி நீங்க கண்டபடிக்கு இருட்டிற்குள் திரிவீர்கள் என்றால் நான் அதிபரிடம் முறையிட்டுவிடுவேன்,இது தான் கடைசி எச்சரிக்கை இனி உங்களில் யாரையும் இங்காலப்பக்கம் காணக்கூடாது " என்று முடித்தான், மன்னித்துக்கொள்ளுங்கோ அண்ணன் என்றுவிட்டு இருவரும் நடந்ததை தமக்குள்ளே மென்குரலில் பேசிக்கொண்டுசெல்வதை அவன் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தன, அடுத்தநாள் மொத்த குழுவும் பாடசாலையில் அவர்கள் வழமையாக சந்திக்குமிடத்தில் ஆஜர், நடந்தவற்றை இவன் விபரிக்க, நாயிடம் மாட்டிய கதையை சுலக்சன் விபரிக்க மற்றைய மூவருக்கும் ஆர்வம் பற்றிக்கொண்டது, மூவரில் ஒருவன் (அவனது பட்டப்பெயர் ஐடியா மணி, முக்கியமான நேரங்களில் வித்தியாசமாக யோசித்து ஆச்சரியமூட்டும் வகையில் ஐடியா தருவதால் மொத்தக்குழுவும் அவனுக்கு வைத்த பெயர் அது ) தாடையை தடவி கொஞ்சம் யோசித்துவிட்டு சொன்னான். "புதரிட்க்கு அருகிலும் போகக்கூடாது, ஆனால் வளவிற்குள் என்ன நடக்குது என்றும் பார்க்கவேண்டும் டேய் எதுக்குடா இப்படி யோசிக்கிறீங்க கோமேர்ஸ் கிளாசில் வலப்பக்க சுவரில் மேசை வைத்து ஏறியிருந்து பார்த்தால் முழுவதுமே தெரியுமே ...? " .ஐடியா மணி ஐடியா மணிதான் அவன் சொல்லிய வர்த்தக வகுப்பு அந்த வெறும் வளவின் இடதுபுற வேலியுடன் ஒட்டிக்கொண்டுசெல்லும் மூன்று மாடிக்கட்டடத்தில் கடைக்கோடியில் இருந்தது, அட ஆமால்ல.... மெதுவாக காவலாளிக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கட்டிடத்திற்குள் புகுந்தால் அப்புறம் வேட்டை தான், சரி இன்றைக்கு மொத்தக்குழுவும் இரவு 11:00 மணியளவில் கட்டிடத்திற்குள் புகுந்து தொடர்ந்து நோட்டம் விடுவது என்று தீர்மானிக்கப்பட்டது 1946, கோவா பதினைந்து நாட்களாக தொடர்ந்து பயணித்த களைப்பில் தொடர்ந்து மூன்று நாட்கள் உண்ணுவதும் உறங்குவதுமாகவே போய்விட்டது வில்லிக்கு, எழுந்து ஒரு காப்பியை தயார்செய்து மேசையிவைத்துவிட்டு பத்திரிகையை கையில் எடுக்க அவரது சபை முதல்வரிடமிருந்து அழைத்துவந்தது, உடனடியாக முதல்வரை சந்திக்க அவரோ "நீர் உடனடியாக இன்னும் ஐந்து தினங்களில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் எங்களதுசபையின் கீழுள்ள பாடசாலைக்கு புறப்படவேண்டும், அங்கே ஆங்கில ஆசிரியருக்கு வெற்றிடமுள்ளதுடன் அடுத்த ரெக்டராக உம்மைத்தான் சபை தெரிவுசெய்துள்ளது, எனவே இப்போதுள்ள ரெக்டரின் கீழ் நீர் பணி செய்து அனுபவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும்" என்று முடித்தார் புதிய இடம் புதிய அனுபவம் புதிய இனக்குழுமத்திற்கு சேவை செய்யப்போவதை நினைத்து தனக்குள்ளே மகிழ்ந்து போன வில்லி பயண ஏற்பாடுகளை செய்யத்தொடங்கினார். (தொடரும்) பணியில் மாட்டிக்கொண்டதால் இரண்டுநாட்கள் எழுதமுடியவில்லை எதிர்பார்ப்புடன் இருந்த வாசக உள்ளங்களுக்கு எனது வருத்தத்தை பகிர்ந்துகொள்கிறேன்
  5. வில்லி தங்களுடன் இருந்த இரண்டுமாதங்களும் போனதே தெரியவில்லை, மிகவும் இயல்பாக எதிலுமே பற்றற்றவனாக , கனிவும் சாந்தியும் எதிலும் நிதானம் கொண்டவனாக ஒரு முற்றுமுழுதான துறவியாக மாறிவிட்டான், நாளை மதியம் ரோட்டர்டாமிலுள்ள (rotterdam ) துறைமுகத்திலிருந்து கோவா துறைமுகத்திற்கு செல்லும் கப்பலில் 15 நாட்கள் தொடர்ந்து பயணம் , சோபியாவிற்கு இருக்கும் ஒரே பயம் உலகப்போர் இப்போதுதான் முடிந்து ஒரு பிரளயமே ஓய்ந்திருக்கும் சமயத்தில் எங்காவது தனித்து விடப்பட்ட ஜேர்மனிய யு போர்ட் (U-boat) தனது மகன் செல்லப்போகும் கப்பலை குறிவைத்துவிடுமோ எனபதுதான், உலகப்போர்க்காலத்தில் ஏகப்பட்ட பயணிகள் கப்பல்கள் இப்படி யு போட்களால் துவம்சம் செய்யப்பட ஒருகாலத்தில் ஐரோப்பாவிலிருந்தான பயணிகள் கப்பல் போக்குவரத்துகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டன, பயத்திலிருந்தவள் அதனை மகனிடம் கேட்டும்விட்டாள் ,வில்லியும் சிரித்துக்கொண்டே பயப்படாதீர்கள் அம்மா , ஒரு மாதத்திற்கு முன்னர் தான் என்னுடைய மூன்றாம் பிரிவு துறவிகள் எதுவித இடர்பாடுகளுமின்றி கோவா சென்றடைந்தனர், நீங்கள் பயப்படுமளவுக்கு ஒன்றும் இல்லை என்று ஆறுதல் கூறிவிட்டு தன்னுடைய நாயுடன் விளையாடிக்கொண்டிருந்தார். அடுத்தநாள் மதியம் கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க எதனையும் வெளிக்காட்டாது துறைமுகத்தின் இறங்குதுறையுடன் தொடுகையிலிருந்த கப்பலின் படிக்கட்டில் தனது உறவுகளை திரும்பிப்பார்த்துக்கொண்டே ஏறினார் வில்லி, தாய் சோபியாவோ அழுகை உச்சத்தில் வாயை பொத்திக்கொண்டு விசும்பிக்கொண்டிருக்க தங்கை அவள் தோளை இருகரத்தால் பற்றிப்பிடித்துக்கொண்டிருந்தாள், தம்பியின் கையிலிருந்த டியூக் அவரிடம் ஓடிவர திமிறிக்கொண்டிருந்தது, இறுதியாக எல்லோரையும் பார்த்து கையசைத்த வில்லி கீழிருந்து பார்ப்பவர்களுக்கு ஒரு எறும்பு போல தெரிந்தார், கப்பல் புறப்படபோவதற்கு முன்னர் கப்பல் கப்டன் தனது சமிங்ஞ்சையான அந்த காதினை செவிடாக்கும் ஒலியெழுப்பியை இயக்க பாபா.....ங்ங் என்ற சத்தம் முழு துறைமுகம் முழுக்க கேட்டது, மெதுவாக கப்பல் கண்களிருந்து மறையும் வரை வெறித்து பார்த்துக்கொண்டிருந்த வில்லியின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக தங்களது வாகனம் நோக்கி செல்லத்தொடங்கினர். 2003 , இலங்கை கிழக்கு மாகாணம் உள்ளே சுலக்சனை காணவில்லை என்றதும் தூக்கி வாரிப்போட்டது அவனுக்கு, எங்கே போயிருப்பான் இவன் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே சுலக்சனின் கை இவன் தோள்மீது விழுந்தது, சற்று பயந்துவிட்டான் இருப்பினும் காட்டிக்கொள்ளாமல் திரும்ப சுலக்சனோ என்ன ...முடிஞ்சுதா ....? ம்...நீ எங்க போனனீ ......? இது அவன் ங்கே ...நீங்க மட்டும்தான் மனுஷன் எங்களுக்கெல்லாம் வராது பாருங்க என்றான் சுலக்சன் சிரித்துக்கொண்டே தூங்கிக்கொண்டு இருந்தியே எப்போ எழும்பின நீ ...? இது அவன் நீங்க பூனை நடையென்று யானை நடை நடந்தபோதே எழும்பிட்டன் . அதிருக்கட்டும் எங்க ரிலீஸ் பண்ணநீ ...? நான் குப்பை மேட்டுப்பக்கம் நீ ...? அதைத்தான் மச்சான் சொல்லவந்தனான் என்று தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒன்றும் விடாமல் சுலக்சனிடம் சொல்லிமுடித்தான். சொல்லிமுடிக்கும் தறுவாயில் சுலக்சன் பார்த்த பார்வையே சொல்லியது இவன் சொல்லிய எதையுமே அவன் நம்பவில்லை என்று, சரி ,நீ நம்பேல்ல தானே என்னோட வா உனக்கு என்ன நடக்குது என்று காட்டுறன், தலையை சொறிந்துவிட்டு சரி நட என்றுவிட்டு சுலக்சனும் அவன் பின்னால் நடக்கிறான், இருவரும் புதரை நெருங்கியிருப்பார்கள் சட்டென்று அவர்களை நோக்கி மெதுவான உறுமலுடன் எதுவோ ஒன்று வருவதை போல் தோன்றியது. இருவருமே அவ்விடத்தில் நின்று இருளை உற்று நோக்க வாயை திறந்து தன்னுடைய வேட்டைப்பற்களை காட்டியவாறு உறுமிக்கொண்டே பாயத்தயாராக நாயொன்று அவர்களை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தது , இதுவரை எத்தனையோ நாய்களை பார்த்திருக்கிறான் எவற்றிலும் இந்த நாயின் கண்களை அவன் கண்டதில்லை அப்படியொரு இரத்த சிவப்பில் அந்த இரவு வேளையிலும் மினுமினுத்துக்கொண்டிருந்தது. ம...ச்...சா...ன் சுலக்சன் உடைந்த குரலில் ஒவ்வொரு எழுத்தாக உச்சரித்துக்கொண்டு இவனுடன் சேர்ந்து ஒவ்வொரு அடியாக பின்னேறிக்கொண்டிருக்க மாட்டினால் வெறும் எலும்புதான் என்பதை வேட்டை தோரணையில் முன்னேறிக்கொண்டிருந்த நாயின் பார்வையும் அதன் வாயிலிருந்து வடிந்த வீணியும் சொல்லாமல் சொல்லியது (தொடரும் )
  6. பெயரை உன்னிப்புடன் படித்து முடித்து விட்டு திரும்பியவன் சுலக்சனுடன் சேர்த்து இரசாயனவியலை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான், வினாடிகள் நிமிடங்களாக, நிமிடங்கள் மணிகளாக இருவரும் புத்தகங்களிற்குள் ஒன்றிப்போய்விட்டனர். திடிரென்று அவனுக்குள் இயற்கை உபாதை எட்டிப்பார்க்க புத்தகத்தின் மேலால் சுலக்சனை எட்டிப்பார்த்தான், படிக்கிறேன் என்ற பெயரில் கடைவாயில் எச்சில் வடிய சுலக்சனோ நித்திரையாசனத்தில் உடகார்ந்திருந்தான். "பாரு தொரை படிக்கிற அழகை" என்று மெதுவாக சொல்லிவிட்டு எழுந்து கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான், நேரமோ 12:49 மண்டபத்தின் முன்னாலிருக்கும் கத்தா மரத்தின் அடியில் ஒதுங்கப்போனானவனுக்கு அப்போதுதான் ஞாபகம் வந்தது, இந்த மரத்திற்கடியில் சிறுநீர் வாடை வருகிறது என்று அநேகமாக இரவில் இருந்து படிக்கும் குழுவின் வேலையாக தான் இருக்கும், இப்படியே நீடித்தால் ஆட்களை மெதுவாக நிறுத்திவிடவேண்டியதுதான் என்று அதிபர் எங்கள் பகுதித்தலைவரிடம் கண்டித்த விடயம். சரி மெதுவாக கூடைப்பந்து மைதானம் தாண்டி இருக்கும் அடர்ந்த புதர்கள் எதற்குள்ளாவது ஒதுங்கினால் பிரச்சினையில்லை என்றுவிட்டு, கையில் தனது பேனா டோர்ச்சினை எடுத்துக்கொண்டு கூடைப்பந்து மைதானம் தாண்டி கண்ணில் பட்ட ஒரு புதரின் மேல் வெள்ளத்தை மடை திறந்து பாயவிட்டான். வெள்ளம் பாய்ந்து முடிந்து நிற்கும் தருவாயில் தான் கவனித்தான், அருகே இருக்கும் வேற்று வளவின் மூலையில் இருக்கும் குடவுனிலிருந்து இயந்திரம் ஒன்று வேலை செய்துகொண்டிருக்கும் சத்தம் சீரான இடைவெளியில் கேட்டுக்கொண்டேயிருந்தது,அந்த சத்தம் அவனுக்கு மிகவும் பரிச்சயமானது அது ஒரு ரோனியோ மெஷினின் சத்தம் , மெதுவாக தடுப்பிற்கு மேலே எட்டி பார்த்தான். அங்கே குடவுன் உள்ளே மங்கலான ஒரு ஒளி வெளிச்சத்தில் மின்குமிழ் ஒன்று எரிந்துகொண்டிருந்தது அந்த ஒளியின் நிழலில் ஒரு மனிதன் நிற்பதுபோன்ற நிழல் சுவரில் தெறித்துக்கொண்டிருந்தது, மின்குமிழ் காற்றில் ஆடும்போதெல்லாம் அந்த நிழலும் சேர்ந்து ஆடிக்கொண்டிருந்தது, ஒருகணம் விதிர்விதிர்த்து போய்விட்டான் காரணம் இந்த எதுவும் அந்த குடவுனிற்குள் சாத்தியமில்லை, சாதாரணதரம் படிக்கும்போது பலமுறை விவசாய பாடவேளைகளில் விவசாய சிரமதானமென்று இந்த வெற்றுவளவை அவனது முழு வகுப்புமே துப்புரவு செய்திருக்கிறது, அந்த குடவுனுக்கு மின் இணைப்பே கிடையாது, அப்படியிருக்க எப்படி இந்த மின் குமிழ் எரிகிறது, உள்ளே நிற்கும் நபர் யார் பயத்தில் அடிவயிற்றில் அமிலம் சுரக்க மெதுவாக வந்தவழியே திரும்பினான், மீண்டும் மண்டபத்திற்குள் நுழைந்து சுலக்சன் இருந்த பக்கத்தை நோக்கி தலையை திருப்ப, அங்கே...சுலக்சன் இல்லை, 1946, ஆம்ஸ்டர்டாம் அம்மா ...அம்மா அண்ணனிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது, இந்தாருங்கள் என்று கத்திகொண்டே சோபியாவிடம் ஓடிவருகிறாள் வில்லியின் அனுப்புத்தங்கை, , கடிதத்தை வாங்கிய சோபியாவும் படிக்க ஆரம்பிக்கிறாள், வழமையான நல விசாரிப்புகளிற்க்கு பின் தான் படிப்பை முடித்து இந்தியாவின் கோவாவிற்கு செல்லும் நான்காவது மிஷனரி பிரிவிற்கு தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இரண்டுமாத விடுமுறையில் வீட்டிற்கு வரப்போவதாகவும் எழுதியிருந்தார் வில்லி, ஆறு மாதத்தின் பின் காணப்போகும் தன் மகனை வரவேற்க தடல் புடலான ஏற்பாடுகளுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள் சோபியா (தொடரும்)
  7. இன்னும் முடியவில்லை புங்கையண்ணை இப்போதான் கதை புகைய அரம்பித்திருக்கிறது, இனித்தான் கொழுந்துவிட்டு எரியப்போகிறது தொடரும் போட மறந்துவிட்டேன்
  8. விழா இனிதே நிறைவுற்ற மகிழ்ச்சியில் இராவுணவு அருந்திக்கொண்டிருந்த வில்லியின் குடும்பத்தினரின் நிசப்தத்தை குலைத்தது வில்லியின் குரல். அம்மா நான் துறவியாகலாம் என்று நினைக்கிறேன் எடுத்தவுடனே தடால் என்று விடயத்தை போட்டுடைத்துவிட்டு தன் தாயின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தார் வில்லி , சோபியாவிற்கோ வில்லி சொல்லியது தெளிவாக கேட்கவில்லை தெளிவாக கேட்கவில்லை என்பதை விட கேட்டவிடயத்தை ஜீரணிக்க மூளை நேரம் கேட்டுக்கொண்டிருந்தது. விறைத்துப்போய் நிமிர்ந்த சோபியா மீண்டும் கேட்டாள் என்ன சொன்னாய் வில்லி....?, துறவியாகி ஆசியாவிற்கு சொல்லப்போகிறேன் எவ்வித சலனமுமில்லாத முகத்திலிருந்து தெளிவான தீர்க்கமான பதில், சில நிமிடங்களுக்கு முன் மகிழ்ச்சி ததும்ப காட்சியளித்த சோபியாவின் வீடு சில நிமிட இடைவெளிகளில் ஒரு இழவு வீடு போல மாறிவிட்டது,சோபாவில் அழுது வீங்கிய கண்ணுடன் சோபியா அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்க அவளது கையை பிடித்து தனது மடியில் வைத்துக்கொண்டிருந்தாள் அவளது தங்கை ,கையினால் நெற்றியை தாங்கிக்கொண்டு உட்கார்த்திருந்த தங்கையின் கணவர் , இரண்டு கைகளையும் தனது ஜாக்கெட் பைக்குள் விட்டவாறு யன்னல் வழியே வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்த வில்லியை நோக்கி கேட்டார், என்னப்பா சொல்கிறாய் இந்த சொத்து ,ஆஸ்த்தி, அந்தஸ்த்து இவையெல்லாவற்றையும் விட்டு ஒரு துறவியாக போகப்போகிறாயா ...? வில்லியிடமிருந்து ஒற்றை வார்த்தையில் மட்டுமே பதில் வந்தது , ஆம் அப்படியென்றால் இதையெல்லாம் யார்நிர்வாகிப்பது, அம்மா பார்த்துக்கொள்வார் கூடவே நீங்களும் இருக்கிறீர்கள், தம்பி பராயமடைந்ததும் அவனிடம் ஒப்படைத்து விடுங்கள். வில்லியிடம் பேசிக்கொண்டிருக்கும் எல்லோருக்கும் தெரியும் அவனது பிடிவாதக்குணம், அவனை மாற்ற முனைவது விழலுக்கிறைத்த நீர், அவன் போக்கிலேயே விட்டுவிடுவது தான் சரி என்ற முடிவிற்கு வந்து சோபியாவையும் தேற்றி சமாதானப்படுத்தினர், உரோமன் கத்தோலிக்க மதத்தில் அதிக பற்றுடைய சோபியாவும் இது கடவுளின் சித்தம் என்று ஒரு கட்டத்தில் தன்னை தானே தேற்றிக்கொண்டாள். அன்றிலிருந்து இரண்டு வாரத்தில் ஹார்லெம் என்னுமிடத்திலிருந்த அன்புச்சகோதரகள் சபையின் குருமடத்திற்கு தனது மூன்று வருட இறையியல் படிப்பிற்கு சென்றுவிட்டார் வில்லி 2003, இலங்கை கிழக்கு மாகாணம் மணடபத்தினுள் நுழைந்த சுலக்சன் கருமமே கண்ணாக தனது படுக்கை விரிப்பு, தலையணை போன்றவற்றை ஓரமாக வைத்து விட்டு மேசைகளை இழுத்து ஒன்று சேர்த்துக்கொண்டிருந்தான், இவனது கண்ணோ வழமை போலவே அந்த மண்டபம் முழுவதும் கொழுவிவிடப்பட்டிருந்த புகைப்படங்கள் மீது ஓடிக்கொண்டிருந்தது, பாப்பரசர் முதல் பாடசாலையின் பழைய ஆண்/பெண் அதிபர்கள், ரெக்டர்கள் என்று வரிசை வரிசையாக மூன்று நிரைகளில் படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன, அதில் ஒரு புகைப்படம் மட்டும் இவனுக்கு பிடித்த புகைப்படம் முதல் நிரையில் ஐந்தாவதாக இருக்கும், வித்தியாசமானதும் கூட மற்றைய புகைப்படங்களில் எல்லோரும் கடவுச்சீட்டிற்கு எடுத்து என்லார்ஜ் பண்ணியதுபோல் நெஞ்சுப்பகுதியுடன் சிரித்துக்கொண்டிருக்க இந்த புகைப்படத்தில் இருப்பவர் மட்டும் முழு தோற்றத்தில் ஒய்யாரமாக ஒரு தூணில் சாய்ந்திருந்து போஸ் கொடுப்பர், அவரது இடது காலிற்கருகில் ஒருகூடைப்பந்தும் இருக்கும் அதுவும் அந்த புகைப்படத்தில் பதிவாகியிருந்தது, அந்த மண்டபத்திற்குள் ஒரு அரைமணி நேரத்தில் சுற்றி இருக்கும் எல்லா புகைப்படங்களையும் பார்த்துக்கொண்டு வரும் ஒருவரிடம் இவற்றில் உங்களுக்கு பிடித்தது எதுவென்று கேட்டால் எந்தத்தயக்கமும் இன்றி காட்டும் புகைப்படம் அதுவாகத்தான் இருக்கும், சிறுவயதிலிருந்தே அடிக்கடி அந்தப்புகைப்படத்தை பார்த்து அதனுடன் அவனுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுவிட்டது இந்த ஈர்ப்பு ஏற்பட இன்னுமொரு காரணமும் இருந்தது, அது அவனது கல்லூரியின் வெள்ளிவிழா சஞ்சிகையான "தீபம்" மூலம் ஏற்பட்டது. தீபத்தின் மூன்றாவது வெளியீட்டில் இந்த புகைப்படத்தில் நிற்பவரது வாழ்க்கை வரலாறு பல்வேறு இளவயது புகைப்படங்களுடன் வெளியாகியிருந்தது, அதில் அவர் தன் குடும்பத்துடன் நிற்பது, கூடைப்பந்து பயிற்சியளிப்பது , கல்லூரியின் முதலாவது கூடைப்பந்து அணியுடன் நிற்பது மட்டுமல்லாது ஒரு புகைப்படத்தில் வெள்ளை நிற இயந்திரம் ஒன்றை இயக்குவது போலவும் இருந்தது. இப்படி எல்லாவற்றையும் மனதிற்குள் அசைபோட்ட அவன் மீண்டும் அந்த புகைப்படத்தின் கீழுள்ள பெயரை வாசித்துக்கொண்டான்...அந்தப்பெயர் Rev.Bro Wilheim Henricus Eijkman D.S.L Rector 1956-1962 (தொடரும் )
  9. டமார் என்று ஒரு ஓசை இருவருக்கும் பின்புறமிருந்து , திடுக்கிட்டு இருவரும் திரும்பிப்பார்க்க பாடசாலை இரவுநேர காவலாளி, பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தின் உடைந்து இற்றுப்போய்விட்ட கதவினை திறக்க முயன்று கீழே விழுந்துவிட்ட கதவினை தூக்க பகீரதப்பிராயத்தனம் பண்ணிக்கொண்டிருந்தார், சுலக்சனும்,அவனும் உடனே ஓடிப்போய் கைலாகு கொடுத்து தூக்கிவிட காவலாளியோ "தம்பிகள் வழமையாக மேடையில் தானே படுக்கிற நீங்கள், இண்டைக்கு மழை வரும்போல கிடக்கு அதுதான் அதிபர் மணடபத்தை திறந்து விட சொன்னவர் நீங்கள் படிச்சு முடிச்சுட்டு மண்டபத்திற்குள்ளேயே படுங்கோ என்று சொல்லிவிட்டு , தம்பிகள் வழமை போலவே கூடைப்பந்து மைதானம் தாண்டி இரவையில் போகாதீங்கோ கட்டாக்காலி நாய்கள் பின்பக்க வேலியால் உள்ள வரும், இருட்டில் வெருண்டு கடிச்சுப்போடும் எனக்கும் இரண்டு தடவை கடிச்சு இருக்கு அதனால் நான் என்ன சத்தம் கேட்டாலும் அங்காலை போறதில்லை நீங்களும் போகாதீங்கோ" என்று விட்டு தன்னுடைய டோர்ச்விளக்கினை ஒருதடவை சரிசெய்து பார்த்துக்கொண்டார் , நாங்கள் எதுக்கண்ணை அங்காலே போகப்போறம் என்று சொல்லிவிட்டு மண்டபத்தினுள் வந்தவனுடைய கண் ஓரிடத்தில் குத்திட்டு நின்றது 1943, ஆம்ஸ்டர்டாம் 15 நிமிடத்தில் தயாராகிவந்து தாயின் முன் நின்றார் வில்லி, தனது மகனின் மிடுக்கினை பார்த்து சோபியா பெருமிதமடைந்ததுடன் மட்டுமல்லாது இன்று தனது சந்ததியின் முதல் பட்டதாரியை கண்டுகளிக்கப்போகும் சந்தோஷத்துடன் வில்லியின் பட்டமளிப்பு விழாவிற்கு குடும்பசகிதம் தயாராகி தங்கள் மகிழுந்தில் அமர்ந்தனர் , இன்றுடன் தனதுமகன் தன் குடும்ப பாரத்தை சுமக்க தயாராகிவிடுவான், தகப்பனுடைய வியாபாரத்தையும்,பரம்பரை சொத்துக்களையும் அவன் முகாமைசெய்யும் காலம் நெருங்கிக்கொண்டுவருகிறது என்று பெருமிதத்தில் பூரித்துப்போயிருந்த சோபியாவின் மௌனத்தை வில்லியின் குரல் கலைத்தது, "அம்மா" "ஆம் மகனே " "இன்று உங்களது கனவில் ஒன்றை நிறைவேற்ற போகிறேன் " "எனக்கு தெரியும் நீ ஒரு சிறந்த மகன், பொதுநலம் கொண்டவன்,மற்றவர்களின் கஷ்ட்டம் காண சகியாதவன் உன்னை ஒரு சிறந்த மனிதனாக வளர்த்ததில் என்னை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் " "அம்மா எனக்கு உங்களிடமிருந்து ஒன்று வேண்டும் " "சொல் மகனே உனக்கு என்ன வேண்டும் " "பட்டமளிப்பு விழா முடிந்ததும் கேட்கிறேன்" சோபியா இருந்த பூரிப்பில் அவன் சொன்ன வாக்கியங்களை அவள் உள்வாங்கியதாக தெரியவில்லை (தொடரும் )
  10. நன்றி அக்கா நன்றியண்ணை நன்றி அக்கா நன்றியண்ணை ஆதரவளிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள்
  11. சைக்கிளை திருப்பிய வில்லிக்கு எந்தவொரு ஆச்சரியமும் தராமல் தனது இருகைகளையும் இடுப்பின் இருபுறமும் குத்தியவாறு முறைத்துக்கொண்டிருந்தார் அவரது தாயார் சீமாட்டி சோபியா (Sophia Eijkman), கணவனை இழந்தபின்னும் தனது பிள்ளைகளை தனியாக நின்று கண்டிப்புடன் கவனமாக வளர்த்த அந்தத்தாயின் நிற்கும் தோரணையே வில்லிக்கு இன்றைக்கு நமக்கு சகட்டுமேனிக்கு அர்ச்சனை ஆரம்பம் தான் என்று சொல்லாமல் சொல்லியது, இது எதனையும் அறியாமல் ஓடிவந்து வில்லியின் மீது ஏறிப்பாய்ந்து தனது நாவினால் அவரது உடலில் வழியும் வியர்வயை துடைத்துக்கொண்டிருந்தது வில்லியின் செல்ல நாய் டியூக். அப்படியே கதவோரத்தில் அண்ணன் வாங்கிக்கட்டப்போவதை வேடிக்கை பார்க்க வில்லியின் தங்கையும் தம்பியும் தயார்நிலையில் இருந்தனர், தாயின் முகத்தை நேர்கொண்டு பார்க்க முடியாமல் தனது பார்வையை தாழ்த்திக்கொண்டு மெதுவாக நழுவி தாண்டிப்போக நினைத்த வில்லியை தடுத்துநிறுத்தியது தாயின் கை , அவரிடமிருந்து வந்த ஒரே ஒரு கேள்வி இன்று என்ன நாள்...? வில்லியோ எனக்கு தெரியும் அம்மா மன்னித்துவிடுங்கள், தயாரிடமிருந்து வந்த பதில் சரி போ சீக்கிரம் தயாராகு, தலை குனிந்தவாறு வில்லி மாடியேறி தனது அறைக்கு சென்றுவிட அண்ணன் வாங்கிக்கட்டுவான் வேடிக்கை பார்க்கலாம் என்று வந்த வில்லியின் தங்கையும், தம்பியும் ஏமாற்றத்தில் வந்த வழியே திரும்பி அவர்களது அறைக்கு சென்றுவிட்டனர் 2003, இலங்கை கிழக்கு மாகாணம் சைக் ...என்ன இதுக்குத்தான் உந்த உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவை தூக்கினோமோ, படிக்கிறன்,படிக்கிறன் உந்த கோதாரிபுடிச்ச இன்னோர்கானிக்கும் , தொழிற்படும் தாவரமும் முடியுதே இல்ல, இண்டைக்கு எப்படியாவது மிச்சம் இருக்கும் துண்டுகளை சப்பி துப்பி முடிச்சிடனும் ,என்று சைக்கிளை பலமாக மிதிக்கிறான் அவன், எப்படியும் நம்ப கம்பைன் ஸ்டடி அணி இண்டைக்கும் வரும் சேர்ந்து படிச்சு முடித்திடலாம் என்று நினைத்துக்கொண்டு இரண்டாவது மிதி மிதிக்கும் போது தொலைவில் அந்த பரிச்சயமான உருவம், இரவு 7:30 மணிக்கே அடையாளம் காணுமளவு பருத்த உருவம், இந்த உருவத்தை இரவு 12:00 மணிக்கும் அடையாளம் கண்டுவிடலாம், ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்திலும் இவனோட சைசுக்கு ஆளே இருக்காது என்று மனத்திற்குள் கலாய்த்துவிட்டு தனது உற்ற நண்பன் சுலக்சனை நோக்கி சைக்கிளை மிதிக்கிறான் அவன், நண்பனும் அவனது பங்கிற்கு படித்துவிட்டு தூங்க தலையணை, படுக்கைவிரிப்புகள் சகிதம் புத்தகங்களையும் சுமந்துகொண்டு இவனை நோக்கி நடந்து வருகிறான். அணியில் இவர்கள் இருவர் மட்டுமல்ல மொத்தமாக ஐவர் அனைவரும் ஒன்று சேர்ந்து இரவு நேரத்தில் அவர்கள் படிக்கும் பாடசாலையில் தங்கியிருந்து படிப்பது வழக்கம், அவ்வாறு தங்கியிருந்து படிக்க பாடசாலை அதிபரும் அனுமதி வழங்கியிருந்தார், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துவிட்டு பாடசாலைக்குள் நுழைந்தனர், மச்சி இண்டைக்கு மத்த பார்ட்டி வருமோ தெரியாது நாம ரெண்டுபேரும் ஆரம்பிப்போம் வா என்று இருவரும் மெதுவாக புத்தகங்களை திறந்து சுலக்சன் பௌதீகவியலை படிக்க ஆரம்பிக்க, இவனோ இரசாயனவியலை திறந்து மெதுவாக பக்கத்தை புரட்டினான்...... அப்போது (தொடரும்)
  12. 1943, ஆம்ஸ்டர்டாம் Wilheim Henricus Eijkman -- பிரித்தானிய சிலோனில் பிரதர் வில்லியம் என்று அழைக்கப்படப்போகும் கதையின் நாயகன், தன்னுடைய சைக்கிளை அம்ஸ்டர்டாமின் குச்சொழுங்கைகளிற்குள் புகுந்து வளைந்து நெளிந்து லாவகமாக செலுத்திக்கொண்டிருந்தார், ஒரு தடகள வீரனுக்குரிய மீயுயர் உடற்தகுதியும், ஆறடி ஆஜானுபாகுவான மாநிற தேகமும், அடர் செம்பட்டை நிற தலை முடியும் சைக்கிளை கையாளும் லாவகமும் தெருவில் நின்றிருந்த சகலருடைய கவனத்தையும் சற்றே ஈர்த்திருந்தது என்றால் மிகையில்லை, பேக்கரியினுள் வியன்னா ரோலினை வாங்கிக்கொண்டு தெருவில் இறங்கிய அங்கிள் பிரிட்சின்(Fritz) நெஞ்சின் மீது வில்லியின் சைக்கிளின் கைப்பிடி உரசிக்கொண்டு போனது, அங்கிள் பிரிட்சிற்கோ ஒருகணம் இதயம் மேலேறி கீழிறங்கியது கையை உயர்த்தி கண்டபடிக்கு ஏசப்போன பிரிட்ஸ் அது வில்லி என்று தெரிந்ததும் தனது கையின் சைகையை டாட்டா காட்டுவதை போல மாற்றிக்கொண்டார், தன்னுடைய அருமை வில்லியை எப்படி கடிந்துகொள்வது கையிலிருக்கும் வியன்னாரோலிற்கே காரணம் அவனல்லவா, சாரி அங்கிள் உச்சஸ்தாயியில் கத்திய வில்லி வேகத்தை குறைப்பதாக இல்லை, பயல் ஏன் இப்படி புயல் வேகத்தில் செல்கிறான் வழமையாக சைக்கிளை ஒய்யாரமாக ஒட்டி வருவோர் போவோர் எல்லோரையும் பார்த்து ஒரு புன்னகை கூட செய்யாது போகமாட்டான் இப்படி போகிறான் என்று யோசித்துக்கொண்டே தெருவை கடந்தார். இன்னும் இரண்டு தெருதான் பாக்கி பிறகு அப்படியே சைக்கிளை ஒடித்து திருப்பினால் வீடுதான் என்று விட்டு தனது சட்டைப்பை கடிகாரத்தை எடுத்து பார்த்தார் வில்லி, வேகம் தாராளமாக கைகொடுத்திருந்தது அவரது அனுமானிப்பில் இன்னும் அரை மணிநேரம் மிச்சமிருந்தது ,வீடு சேர 5 நிமிடம் போதும் என்று நினைத்துக்கொண்டு இரண்டு தெருக்களையம் மின்னல் போல் கடந்து சைக்கிளை ஒடித்து திருப்பினார் ....அங்கே (தொடரும்)
  13. மீண்டும் அந்த பாழடைந்த கொட்டிலில் உள்ள இழையறுந்த மின்குமிழ் மங்கலான ஒளியில் அங்குமிங்கும் ஆடத்தொடங்கியது, மின்தொடுப்பற்று இருந்த ரோனியோ இயந்திரத்தின் கைப்பிடி சுழல தொடங்க , எலும்பும் தோலுமாக கிடந்த இரு நாய்களும் அந்த அரவம் கேட்டு கோரைப்பற்கள் வெளியே தெரிய வில்லிருந்து கிளம்பிய அம்பு போல் சீறிப்பாய்ந்தன, சபை பொறுப்பாளருக்கு விளங்கி விட்டது, இனி ஆட்டம் ஆரம்பம் என்று...... (தொடரும்) சொந்த அனுபவம், செவிவழி,கற்பனை கலந்து யாழின் 23 ம் அகவைக்காக அக்னி எழுதும் அமானுஷ்ய தொடர்
  14. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாலி அண்ணை
  15. பிறந்த நாள் வாழ்த்துக்களை அள்ளிவழங்கிய அனைத்து யாழ் அன்புள்ளங்களுக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்
  16. ஆக இழப்பை மட்டும் வைத்துக்கொண்டு பெரிய இழப்பா சிறிய இழப்பா என்று முடிவு செய்யச் சொல்கிறீர்கள்,உரிமை அரசியல் போய் இனி இழப்பரசியல் போல ...😂 எதையாவது பெற்று நமது இருப்பையாவது தக்க வைப்போம் என்பதற்கு தயாரில்லை, மக்களில் புரட்சி,போராட்டம் வெடிக்கும் ,எமக்காதரவான ஜட்டிகள், இரத்தத்திலக உசுப்பேத்தல்களுக்கு விலை போகும் தேசிக்காய்களும் இருப்பார்கள் தானே இம்முறை மஹிந்த மாபியா கொடுக்கும் டிரீட்மென்டில் கொழுப்பு கரைந்து சோறு முக்கியம் அமைச்சரே என்ற நிலைக்கு அவர்களாவே வருவினம் புதுக்குதிரைகளாவது பரவாயில்லை எஜமானரின் காலடிதான் எங்களிடம் பெரிசாக உரிமை அது இது என்று எதிர்பார்க்கபடாது என்று முன்னாடியே சொல்லிவிட்டு ஓடுகிறார்கள், ஆனால் இந்த பழுத்து போன திருட்டு குதிரைகள் இருக்கு பாருங்கோ எதை நோக்கி ஓடுகிறோம் என்றும் தெரியாது எது பாதை என்றும் தெரியாது ,ஏறுபவர்களை முகங்குப்புற கவுத்துக்கொண்டே கிடக்குதுகள், நன்றாக விழுந்து நங் என்று அடிவாங்கியவைகளும் இவை குருட்டு,திருட்டு குதிரைகள் ஒரு பைசாவுக்கு பிரயோசமற்றவை என்பதை கண்டுபிடித்தவர்களும் திருந்திவிட்டார்கள்
  17. அதற்காக நாளைக்கு செத்து விழுந்துவிடும் நிலையிலுள்ள குதிரையில் அடுத்த தீபாவளியையும் பொங்கலையும் நம்பி பயணிக்க முடியாது கண்டீங்களே
  18. அதாவது உண்மையான எண்ணிக்கையை தயவு செய்து வெளியிடாமல் , யாரவது செத்து விழுந்தால் இனம்தெரியாத நோயினால் மர்கயா என்று அறிவியுங்கள் என்று சொல்லவருகிறார் போல
  19. முகத்தை மூடிக்கொண்டு அப்பாச்சி 200 இல் MP5 வை தூக்கிக்கொண்டு சீன் போட்டால் பயந்து ஓட இது என்னா உள்ளூர் வாள்வெட்டு கேங்கா ...? இது தி கிரேட் கொரோனா உங்களை விட அதி விசேட ஆயுதங்களுடன் இராணுவத்தை வைத்திருக்கும் சிங்கப்பூர் ஒரு தடவை கூட இராணுவத்தை இறக்கி சீன் காட்டவில்லை, பாதுகாப்பான இடைவெளி பேணலை அவதானிக்கும் , வலியுறுத்தும் அதிகாரிகளாக கூட சாதாரண சிங்கப்பூரார்களை தான் தகுந்த பயிற்சிக்கு பின் நியமித்தது. முட்டாள் பீசுகளா ... இப்போ விளங்குதா எந்த சர்வதேச நிறுவனமும் உங்களை கோரானவை முற்று முழுதாக வெற்றி கொண்ட நாடாக ஏன் அறிவிக்கவில்லை என்று
  20. புலிகளையே அழித்த எங்களுக்கு கொரானா எம்மாத்திரம் ... இப்போ என்ன பேதி புடுங்குது போல ...? திடீரென செத்து விழுந்தவர்கள் எல்லாம் எதனால் செத்தார்கள் என்றே தெரியவில்லை என்று சொல்லிவிட்டு பாடியை எரிக்கும் போதே எங்களுக்கு தெரியும் , தேர்தல் முடியும்வரை கொரோனவை கட்டுப்படுத்தியதாக இலங்கை மந்தைகளை மேய்ந்துவிட்டு மெதுவாக Brendix இலிருந்து ஆரம்பித்திருக்கிறார் ங்கோத்தா (அதுவும் முஸ்லிம்களின் நிறுவனமாமே ) நாளைக்கே இலங்கை பெரும்பாண்மை சிங்கள இனவெறியர்கள் கொரோனாவில் கடுப்பாகி Brendix நிறுவனத்தை போய் எரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
  21. அப்பவே சொன்னோம்ல .... பரிசோதனை செய்யாமல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை பூச்சியமாகவே வைத்திருக்கலாம், இதனால் தான் கொரோனாவை வெற்றிகரமாக தடை செய்த நாடுகளின் பட்டியலிலேயே மாதன முத்தா இல்லை
  22. என்ன கொடுமைடா சரவணா .... எல்லா நாட்டிலும் உயர் நிலை மருத்துவ வல்லுனர்களும் ,சுகாதார அமைச்சர்களும் தான் இந்த கருத்தை தெரிவிப்பார்கள் இந்த தரித்திரம் புடிச்ச நாட்டில் .....?
  23. தன்னிகரில்லா தலைவன் ......தரணிக்கே தலைவனுக்கு வரைவிலக்கணம் ......கொண்ட பற்றுறுதி மாறா தன்னிகரில்லா தலைவன்
  24. என்ன செய்வது சிறி அண்ணை யாழில் சேர்ந்த காலத்தில் வைத்துக்கொண்ட பெயர் அதுதான் கொஞ்சம் மாத்திப்பார்ப்போமே என்று மாத்திப்போட்டன் வாயில் நுழையாத பெயர் வைத்தால் தான் முதலில நம்மளை சாத்தமாட்டார்கள் .....இல்லை துலஞ்சுது ...அதுவும் யாழில வேண்டாம் விட்டுடுங்கோ வலிக்குது என்று கத்தினாலும் விடமாட்டினம் சகோதரி துளசி நீங்கள் அப்படியே அழையுங்கள் Atonk உம் நானே அக்னியஷ்த்ராவும் நானே ... நிழலி அண்ணை பெயரை மாற்றித்தந்ததற்க்கு நன்றிகள் பல நன்றி கறுப்பி அக்கா /அண்ணை அதுசரி நீங்க அக்காவா அண்ணாவா நாயகன் கமல் போல தெரியலயே....மா என்று மட்டும் சொல்லிப்போடாதேயுங்கோ
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.